Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மகளே செங்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் மகளே செங்கொடி....!

333549_2141293644418_1008501177_32488619_3093186_o.jpg

*செங்கொடி*

நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து

மானிட விடுதலையை

வென்றிருக்க வேண்டிய வித்து நீ.

ஏனடி பெண்ணே…?

எரிந்தாய் நெருப்பில்….?

அவசரப்பட்டு விட்டாய் மகளே..…!

அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ

அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற

வலியல்லவா உனது தீ….!

நீ வாழ்ந்திருக்க வேண்டியவள்

வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ.

ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….?

உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள்

இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..!

மாற்றங்கள் நிகழ உன்போன்ற

மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….!

அரசியல் புலிகளும் நரிகளும்

உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி

வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்னை மறந்திடுவர்……

நாளை அல்லது இன்னொரு நாளில்

குருத்தொன்றை மூட்டத்

தீப்பெட்டியும் பெற்றோலும் விநியோகம் செய்யும்

முகவர்களின் நண்பர்களாவார்கள்…..

மொழிக்கு மொழி முத்துக்குமாரனையும்

செங்கொடியையும் சொற்களால் உயர்த்திச்

சுயநலச்சாக்கடை வியாபாரம் செய்வார்கள்.

சிந்திக்கத் தெரிந்த உம்போன்ற செடிகளைத்

தீயெரிக்கத் தீயெரிக்க உணர்ச்சித் தீயெடுத்து

உங்கள் சிதைகளுக்கு வீரத் தீமூட்டுவார்கள்…

அத்தோடு அவர்கள் கதை முடிந்துவிடும்....

முத்துக்குமாரன் முடிந்தான் தமிழகத்தில் என்ன

பாலும் தேனுமா பாய்கிறது…?

செங்கொடி நீ முடிந்தாய் என்ன தமிழகத்தை

செல்வச்செளிப்பாயா மாற்றப்போகிறார்கள்…?

இல்லையடி மகளே உங்கள் உயிர்களை

விதைத்து அரசியல் வியாபாரிகள் பைகள் தான் நிரம்புகிறது.

போதும் பிள்ளைகளே!

உங்கள் பெறுதற்கரிய உயிர்களை

வெறும் தீக்கிரையாக்கி

வீணடிக்காதீர் விழுதுகளே..!

உயிர்களை ஆயிரமாயிரமாய் இழந்த வலியின்னும்

ஆறாமல் துடிக்கிற எங்களால் உங்கள்

இழப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீங்கள் வாழ வேண்டும்

இவ்வுலகம் வாழ உங்கள் விலையற்ற உயிர்களை

வீணாயெரிக்காமல் வரலாறு படைக்க வேண்டும்.

அதுவே எங்களுக்குக் கிடைக்கின்ற பெருவெற்றி.

போய்வா மகளேயென்று வீரவணக்கம் சொல்லியுன்னைப்

பொய்யுரைத்து வணங்கமாட்டேன்.

மீள வராத உனக்காய்

கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன்.

ஒற்றைக் கவிதையால் அஞ்சலித்து

இனியொரு தீக்குளிப்பை எதிர்க்கிறேன்…..

என் மகளே செங்கொடி

எனது கண்ணீர் வணக்கங்களோடு விடைபெறுகிறேன்……

31.08.2011 (ஓகஸ்ட் 28.2011 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றோரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி தன்னைத் தீமூட்டியெரித்த 27வயதான செங்கொடி என்ற இளம் பெண்ணின் நினைவாய் எழுதிய வரிகள் இவை)

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

" நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து, மானிட விடுதலையை , வென்றிருக்க வேண்டிய வித்து நீ"

ஆமாம் சாந்தி அக்கா, சின்ன வயதில் எவ்வளவு போரட்ட வெறி மற்றவர்களின் விடுதலைக்கா, வாழ்ந்து போரடியிருக்க வேண்டும், எங்கள் சமுதாயம் இருக்கும் போது திறமைகளை கண்டு அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில்லை, இழந்தபின் தான் அந்த கொடி எல்லா மீடியாக்களிலும் படருகின்றாள். இப்படி இனி ஒரு இழவு வேண்டாம்.

செங்கொடியே......!

நீ எம் தொப்புள்கொடி உறவடி!

உன்னை இழந்து துடிக்கிறோம்!

கண்ணகியாய் எம் கண்களுக்குத் தெரிகின்றாய்!

கண்மணியாய் எம் குலமகளாய் நினைந்து...

எம் தமிழ் கருவறைகள் காத்திருக்கும்...

உன்னை மீண்டும் கருத்தரிக்க!

மீண்டும் பிறந்து வராயோ!???

ஆனாலும்...... இப்பொழுது சொல்கின்றேன்;

நீ அவசரப்படவில்லை......

ஆத்திரப்பட்டுவிட்டாய்!

எனக்கும் அதுவேதான்!

உன்னைப்போல என்னைப்போல

நெஞ்சில் நெருப்பேந்தி

இன்னும் இருக்கிறார் பலபேர்!!!

ஆனாலும்... இப்பொழுது சொல்கின்றேன்;

நீ அவசரப்பட்டுவிட்டாய்!

எதிரிகளின்,துரோகிகளின் உடலில்

வைக்கவேண்டிய தீயை

உன்னுடலில் வைத்துவிட்டாய் தாயே!

அவசரப்பட்டு விட்டாயே எம் குலக்கொடியே!!!!!

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி - வித்யாசாகர்!

1

துண்டு துண்டாய்

கசிந்து

எரிந்து

வெடித்த ஒற்றுமை நெருப்பு

உன் உடல் தீயில் வெந்து

ஒரு இன வரலாற்றை

திருப்பி வாசிக்கிறது!

----------------------------------------------------------------

2

தற்கொலை

கொலை

விபத்து

எதுவாயினும்'

போன உயிர் வாராதென்பதை

உரக்கச் சொல்லவும்

உன் உயிர் எரியும் தீக்கொழுந்து

மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின்

தேவையானது!

----------------------------------------------------------------

3

காற்று

வானம்

மனற்பரப்பின் மீதெல்லாம்

உன் கரிய நாற்றத்திலும்

மணக்கிறது - உன்

மூன்று உயிர்களுக்கான

உயிர் தியாகம்!

----------------------------------------------------------------

4

தைரியம்

வீரம்

பலம்

பணம்

படை

ஒன்றும் செய்யாததை

அன்று அவன் செய்தான்;

அண்ணன் முத்துக் குமரன்.

இன்று நீ செய்தாய்.

தங்கை செங்கொடி.

ஆக,

எங்களுக்கு விடுதலையின்

முழுக்கண் திறக்க

இரண்டு உயிரின் எரிவெளிச்சம்

ஒற்றுமையில்லாமையின்

குற்ற சாட்சியே!

----------------------------------------------------------------

5

தெருவெல்லாம் நீ

கனவு சுமப்பவள்

விடுதலை உணர்வை சுமந்தாய்,

போராட்ட நெருப்பை

மிதித்து வளர்ந்தாய்;

நாங்கள் கனவை கூட

கடன்கேட்டு

உணர்வை

உறக்கத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள் - உன்

சவம் தூக்கி அலைகிறோம்;

நீ கல்நெஞ்சைச் சுடும்

நெருப்பாகியும்,

நாங்கள் அதன்

வெளிச்சத்தை ஏந்திக் கொண்ட

இருட்டாகவே இருந்தோம்'

இதோ,

நீ கரிந்துப் புரண்ட இடம்

எங்களையும் வெகுவாய்

புரட்டிப் போட்டுள்ளது,

நீ சாகுவரை

சொன்ன வார்த்தை

எங்களின் வாழும் வரைக்கான

கனவானது,

நீ செய்யாது செய்யத் துணிந்த

செயல் எம் ஒவ்வொரு தமிழனின்

ரத்தத்திலும்

தீப் பெருக்கென மூண்டது,

அணு அணுவாய் நீ துடித்த

துடிப்பு இனி

ஒரு உயிரையும் இழக்கா வேகத்தின்

முதற்புள்ளியானது,

விடுதலைக்கு வித்து

கொலையல்ல,

தற்கொலையுமல்லவென்று

சிந்திக்கச் சொல்லிச்

செவிட்டில் அறைந்தது,

இதோ,

புறப்பட்டுவிட்டோம்,

எதற்குமே தயங்கவில்லை - ஒன்றுக் கூடி

போராடத் துணிந்துவிட்டோம்,

நீ மறைந்த இடத்திலெல்லாம்

இனி யாம் பதித்துவைக்கும் - இன விடுதலையின்

ஓர் பெருத்த உணர்வை'

உயிர்வரை சுமந்து நடப்போம்,

நடந்து நடந்து உன் சுவாசத்தின்

மிச்சக் காற்றுத்

தீர்ந்துப் போகும் முன்னந்த

அண்டவெளியில்

உன் உயிர் வெளிச்சத்தில்

வென்றெடுப்போம் இருட்டில் பெற்ற

நமது பழைய சுதந்தரத்தை!

----------------------------------------------------------------

வித்யாசாகர்

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.