Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹாய் மதன்!

Featured Replies

//

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி

//

இந்த சமஸ்கிருதம் புகழ் இன்னும் எத்தனை நாளைக்கு பாடுவாங்களோ தெரியல?

எல்லா மொழிகளிலும் இருந்து திருடி ஒரு பெயர் வைத்துவிட்டு அப்புறம் எல்லாம் இங்கிருந்து போனது.. இங்கிருந்து போனது.. அப்படின்னு சொல்லிக்கிறது......... நம்மளும் அதை நம்ப வேண்டியதுதான்.... என்ன கொடுமை இது !! ஒரு செயற்கை மொழிக்கு எவ்வளவு விளம்பரம் !!??

அரிசி என்ற சொல்லின் வரலாறு பற்றி இங்கே காணலாம்

http://tamilpaddycivilization.blogspot.com/2012/01/evolution-of-rice-in-tamil-nadu-ancient.html

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?

ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.

உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !

ஒரு தத்துவ ஞானி மறதியாளனாக மாறுவது எப்போது ? ஒரு மறதியாளன் தத்துவ ஞானியாவது எப்போது ?

யாராக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை மறக்கவே மாட்டார்கள். ஒரே விஷயத்தில் மறக்காமல் ஈடுபடுபவர் மற்ற விஷயங்களை மறக்கத்தான் செய்வர். இது தத்துவ ஞானிக்கும் பொருந்தும். சிலர், தாங்கள் ஒரே சமயத்தில் நாலைந்து காரியங்களைச் செய்பவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மூளைக்கு அதற்கான அமைப்பு கிடையாது. உதாரணமாக, நீங்கள் யாருக்காவது எஸ்.எம்.எஸ். பண்ணிக்கொண்டே உங்கள் நண்பர் பேசுவதையும் கேட்டுப் பாருங்கள்.

ஏதாவது ஒன்றில்தான் முழு ஈடுபாடு இருக்கும். மூளையின் ""வொயரிங்'' அப்படி ! ஆகவே, அநேகமாக எல்லா விஷயங்களிலும் மறதியாளனாக இருப்பவன் தத்துவத்தின் மீது மட்டும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். ஆனால், தத்துவம் என்பது ""ஒரு விஷயம்'' இல்லையே என்பதுதான் உதைக்கிறது

பொதுவாக, எந்தத் துறையில் இணைந்தால் சொந்தச் சோகங்களை மறக்க முடியும்?

சொந்தச் சோகங்களை எதற்கு மறக்க வேண்டும் ? அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, நிலைகுலையாமல் இருக்கக் கற்றுக்கொண்டால் போதும்! இருப்பினும், நீங்கள் கேட்டுவிட்டதால் ஒரு டிப்ஸ்... எப்போதுமே உணர்வுபூர்வமான துறைகளில் ஈடுபடுவது சோகத்தைக் குறைக்கும். இசை, ஓவியம், இலக்கியம் போன்றவை ! நல்ல நண்பர்களுடன் பழகுவதும் இவற்றுக்கு இணையானதே

விதி என்பது நிஜமாகவே இருக்கிறதா ?

நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். ஆனால், முடியும். ஆனால், நிரூபிக்க முடியாது. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, அஸிரியா ஒரு பெரும் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. (அதில் ஒரு சிறு பகுதிதான் இப்போது சிரியா !). வல்லமை பொருந்திய மன்னர்கள் ஆட்சிபுரிந்த அஸிரியாவைக் கண்டு மற்ற நாடுகள் நடுங்கின. அதன் தலைவர் நினேவா. அதன் கோட்டைச் சுவர் புகழ் பெற்றது. 60 அடி தடிமன், 100 அடி உயரம் ! எந்தப் படையினாலும் அதை மீறி உள்ளே நுழைய முடிந்தது இல்லை. கி.மு.612-ல் ஸார்டானபாலஸ் என்கிற அரசர் அஸிரியாவை ஆண்டபோது, பாபிலோனியா உள்பட பல நாடுகள் கூட்டணி அமைத்து அஸிரியா மீது போர் தொடுத்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நினேவாவை முற்றுகையிட்டும், கோட்டைச் சுவரை உடைக்க முடியவில்லை.

எதிரிப் படை நம்பிக்கை இழந்த சமயம்... அருகில் ஓடிய டைக்ரிஸ் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் சுனாமியைப் போன்ற சக்தியுடன் கோட்டைச் சுவரில் மோத, சுவரின் ஒரு பகுதி உடைந்தது. திகைப்போடும், மகிழ்ச்சியோடும் எதிரிப்படை அந்த வழியாக உள்ளே நுழைந்தது. இரண்டு வருடக் காத்திருத்தல் ஏற்படுத்திய கடுப்பு, ஆவேசம் ! அந்தத் தலைநகர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. நினேவா வீழ்ந்தது கண்டு, அஸிரிய மன்னர் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதை என்னவென்று சொல்வீர்கள் ? விதியா... நதியின் சதியா ?!

நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துபவர்கள் பற்றி உங்கள் கருத்து ?

முதலில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக.... பிறகு வற்புறுத்தல் இல்லாமலேயே... அதற்குப் பிறகு நண்பர்கள் இல்லாமலேயே... என்பதுதான் இதில் இருக்கிற ஆபத்தான பிரச்னை

நன்றி - சிவா - www.eegarai.net

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிக்கும் உடையருக்கும் நன்றிகள்,

விகடன் கைலே கிடைத்தவுடன் புரட்டும் பக்கம் மதனின் கேள்வி பதில் தான், அவரின் பதில்களில் பெரும்பாலும் வரலாறு, குறிப்பாக ரோம வரலாறு தூக்கலாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேலிச்சித்திரம், கேள்வி பதில் என்று...

மதன் பல்முக திறமை கொண்டவர்.

முன்பொரு முறை மதன், விகடன் நிர்வாகத்துடன்... முறுகல் வந்து, விலத்தப் போகின்றேன்... என்று சொன்னதும், பல வாசகர்கள் கவலைப்பட்டதும், பின்பு மதன் விகடன் நிர்வாகத்தின் மனதை மாற்றியவர் மதன்.

சுஜாதாவுக்குப் பிறகு, பல துறைகளிலும் அறிவுபூர்வமான விடயங்களை விவாதிப்பதில் கெட்டிக்காரன் இந்த மதன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ?

அவனும்

அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !

சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ?

நா-நயம்

என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!

* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின்

அர்த்தமும் ஒன்றா ?

உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது.

அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !

* ஆபத்து நேரத்தில் ""அம்மா !'' என்று அழைக்கும்

நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது ""அப்பா'' என்று சொல்வது, ஏன் ?

பயப்படும்போது

பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! (

உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)

* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப்

பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால்

ஏற்பட்டது ?

சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம்

பொங்கல்,சுண்டல் மீதே இல்லாமல் இருக்கத்தான் !

நன்றி - சிவா - www.eegarai.net

  • 3 weeks later...

ஆன்ந்த விகடனில் முபபது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்

via fb

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.