Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் காத்திருந்த பயங்கரம்!

* பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள்

* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள `றோ' புலனாய்வு அதிகாரிகள்...

* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'

தாயகன்

இலங்கைத் தமிழரென்றால் அவன் புலி, பாகிஸ்தான் முஸ்லிமென்றால் அவன் அல் - ஹைடா தீவிரவாதி என்னும் இந்திய புலனாய்வுத்துறையின் அணுகுமுறையினால் பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கும், சிறை வாழ்க்கைக்கும் உட்பட வேண்டிய அபாயமானநிலை இந்தியாவிலுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் காத்திருக்கும் புலனாய்வுத்துறையினர் தமது பயணத் தேவைகளுக்காக அங்கு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களை குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழ் இளைஞர்களை இலக்கு வைக்கின்றனர். ஏதோவொரு பொய்க் காரணம் கூறி கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களுக்கு உடனடியாகவே புலிச்சாயம் பூசும் புலனாய்வுத்துறையினர் அந்த இளைஞர்களிடமிருந்து பல விடயங்களை அறிந்து கொள்ளத் துடிக்கின்றனர்.

இதேவேளை, இவ்வாறு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வடக்கு, கிழக்கு பகுதிகள் குறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர்களாகவும் அங்குள்ள சிறு இடங்கள், வீடுகள், குச்சொழுங்கைகள், வர்த்தக நிலையங்களைக் கூட துல்லியமாகக் குறிப்பிட்டு கூறுமளவுக்கு அப்பகுதிகளை அறிந்து வைத்துள்ளனர்.

இப்பகுதிகளில் குறிப்பிட்ட காலத்துக்கு நடமாடித் திரியாமல் இவ்வாறான இடங்களை அடையாளப்படுத்தி கூறுவதென்பது இலகுவான காரியமல்ல. கைதான இளைஞர்களிடம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைகளை நோக்கினால் அந்த அதிகாரிகள் குறிப்பிட்ட காலம் வரையாவது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தங்கியிருந்திருப்பார்கள் என்பது தெளிவாகும்.

தம்மால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் கூட அவர்கள், `கடந்த மாதம் கூட நாம் உங்கள் பகுதிக்கு சென்று வந்தோம்' எனக் குறிப்பிடுமளவுக்கு இப்பகுதிகளில் இந்திய புலனாய்வுத்துறையினரின் நடமாட்டங்கள், அவதானிப்புகள் இருந்திருக்கின்றன.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி மும்பை விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

டிசம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவ்விளைஞன் 23 நாட்கள் மும்பை விமான நிலையச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு புலனாய்வுத்துறையினரின் கொடூர சித்திரவதைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மும்பை சிறையில் 23 நாட்களை நரக வேதனையுடன் கழித்த அவ்விளைஞர் தனது திகில் அனுபவங்களையும், வியப்பூட்டும் விசாரணைகளையும் தான் அனுபவித்த சித்திரவதை அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இனி அவர் கூறுவார்.......

நான் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவன். சில பாதுகாப்புக் காரணங்களால் எனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கு வயது 25. யாழ் நகரிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தேன்.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பொன்று எனக்குக் கிட்டியதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தேன். கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தேன். நான் செல்ல வேண்டிய நாடான பிரான்ஸுக்கு இந்தியா சென்றே செல்ல வேண்டியிருந்ததால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு மாத விசாவைப் பெற்றுக் கொண்டேன்.

சென்னை பயணம்

விசா கிடைத்ததையடுத்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மாலை கட்டுநாயக்க விமான நிலையமூடாக சென்னைக்கு பயணமானேன். கட்டுநாயக்க விமான நிலையத்திலோ அல்லது சென்னை விமான நிலையத்திலோ எனக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. சென்னையை சென்றடைந்த நான் அங்குள்ள ஹோட்டலொன்றில் தங்கினேன். அங்கு தங்கியிருந்த சில நாட்களில் நான் பிரான்ஸ் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகின.

சென்னை எனக்குப் புதிய இடமென்பதால் நான் எங்குமே வெளியே செல்லவில்லை. பெருமளவான நாட்களை ஹோட்டல் அறையிலேயே கழித்தேன்.

மும்பை பயணம்

வெளிநாடு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் சென்னையிலிருந்து டிசம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் விமானம் மூலம் மும்பையை நோக்கிப் புறப்பட்டேன். ஏனெனில், எனக்கு பிரான்ஸ் செல்வதற்கு டிசம்பர் 29 ஆம் திகதி காலை 6 மணிக்கு விமான டிக்கட் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மும்பையை வந்தடைந்த நான் அங்கிருந்த ஹோட்டலொன்றில் தங்கினேன். காலை 6 மணிக்கு பிரான்ஸுக்கு விமானம் என்பதால் அவசரஅவசரமாக தயாரானேன். அதிகாலை 3 மணியளவில் மும்பை விமான நிலையத்துக்கு சென்று விட்டேன். இந்த விமான நிலையத்தினுள் எனக்கு பயங்கர அனுபவமொன்று காத்திருப்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனது எண்ணம் முழுக்க பிரான்ஸுக்கு எப்போது போய்ச் சேருவேன், அங்கே என்னை வரவேற்க யார் யார் வந்திருப்பார்கள் என்பதிலேயே லயித்திருந்தது.

சோதனை நடவடிக்கை

விமான நிலையத்தினுள் வழமையான சோதனை

நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டேன். ஆவணங்களைச் சோதித்த அதிகாரிகள் அவற்றை சரியெனக் கண்ட பின்னர் என்னை பயணத்தைத் தொடர அனுமதித்தனர். நான் பயணிக்கவிருந்த விமானம் கட்டார் ஊடாக பிரான்ஸுக்கு செல்வது. அந்த விமானத்திற்கான பயணிகளுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருந்தனர். எனது சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட நான் "போர்டிங் கார்ட்" எடுப்பதற்காக ஒரு கருமபீடத்திற்கருகே சென்றேன். அங்கே தான் எனது சோதனைக்காலம் ஆரம்பித்தது.

யாழ்ப்பாணப் புலியா எனக் கேட்ட அதிகாரி

`போர்டிங் கார்ட்' எடுப்பதற்காக இந்த கரும பீடத்திற்கு சென்ற நான் எனது கடவுச் சீட்டையும் விமான ரிக்கட்டையும் அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்தேன். கடவுச் சீட்டையும் ரிக்கட்டையும் வாங்கிப் பார்த்த அந்த அதிகாரி `நீ ஷ்ரீலங்காவா' எனக் கேட்டார். ஆமென்றேன். `அப்போ நீ யாழ்ப்பாணப் புலி தான்' என்று கூறிவிட்டு என்னை தன்னுடன் அழைத்துச் சென்று ஒரு தனியறையில் தடுத்து வைத்தார். அதன் பின் அவர் யார் யாருடனோவெல்லாம் ஹிந்தி மொழியில் ஏதோ கதைத்தார். ஆனால், எனக்கு ஷ்ரீலங்கா, யாழ்ப்பாணம், புலி என்ற சொற்கள் மட்டுமே விளங்கின.

300 யூரோக்களைப் பறித்த பொலிஸார்

இதே நேரம் என்னை பிடித்த அந்த அதிகாரி என்னைப் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்து கொண்டார். அப்போது என்னிடமிருந்த 900 யூரோ நாணயங்களை எடுத்துக் கொண்ட அதிகாரி பதிவில் என்னிடம் 600 யூரோக்களே இருப்பதாக பதிவு செய்தார். நான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.

அப்போது அவர் நீ பெரிய சிக்கலில் மாட்டியுள்ளாய் மிகுதி யூரோக்களையும் தந்தால் உன்னை பத்திரமாக வெளியே அனுப்பி வைப்பேன் என்றார். அதற்கு நான் என்னை வெளியே கொண்டு போய் விட்டால் தருகிறேன் என்றேன். அதற்கு மறுத்த அவர் உன்னை அவர்களிடம் கொடுப்பது தான் சரி என்று கூறினார்.

தனியறையில் வைத்து விசாரணை ஆரம்பம்

அதிகாலை 3.45 மணியளவில் என்னை அந்த அறைக்குள் தடுத்து வைத்த அந்த அதிகாரி பின்னர் 4.20 மணியளவில் வேறு ஒரு அறைக்கு கூட்டிச் சென்றார். அந்த அறையைப்பார்த்தவுடனேயே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்டேன். அது ஒரு சித்திரவதைக் கூடமென்பதும் அங்கிருந்த கருவிகள், பொல்லுகள், ஆங்காங்கே சிதறிக் காய்ந்து போயிருந்த இரத்தக் கறைகள் மூலம் துல்லியமாகத் தெரிந்தது. அந்த அறைக்குள் என்னை அமர வைத்த பின்னர் அங்கு மேலும் சில அதிகாரிகள் வந்தனர்.என்னை முதலில் பிடித்தவர்கள் விமான நிலையப் பொலிஸார் எனவும் இப்போ வந்திருப்பவர்கள் புலனாய்வுத் துறையினர் என்பதும் அவர்கள் உரையாடியதிலிருந்து என்னால் அறிய முடிந்தது.

அந்தப் பயங்கரமான அறைக்குள் வைத்து அதிகாலை 4.30 மணியளவில் என்னை விசாரணை செய்யத் தொடங்கினர். விசாரணையின் போது அவர்கள் கேட்ட கேள்விகள் குறிப்பிட்ட இடங்கள் பற்றிய விளக்கங்கள், அடையாளங்களைக் கேட்டு நான் நிலை குலைந்து போனேன்.

தமிழ் தெரிந்த விசாரணை அதிகாரி

முதலில் என்னிடம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக விசாரித்தார்கள். நான் இந்த மொழிகளில் கேட்டால் என்னால் சரியாக பதிலளிக்க முடியாதெனக் கூறினேன். அப்போது திடீரென அங்கே ஒருவர் வந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதையைப் பார்த்த போது அவர் ஓர் உயரதிகாரி என்பதைப் புரிந்து கொண்டேன்.

அவர் என்னிடம் நீ யாழ்ப்பாணத் தமிழனா என சுத்தத் தமிழில் கேட்டார். நான் ஆமென்றேன். `அப்போ நீ புலி தான். உன்னிடம் நிறைய விடயங்கள் பெற வேண்டியுள்ளது எனக் கூறிவிட்டு பல கேள்விகளைக் கேட்டார். நான் கூறிய பதிலை அவர் ஹிந்தியில் சொல்ல அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் அவற்றை ஹிந்தியில் எழுதிக் கொண்டனர்.

ஹிந்தியில் எழுத வேண்டாமெனக் கூறிய நான் எனது பதில்களை தமிழில் எழுதினால் தான் நான் சொல்வதைத் தான் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை என்னால் அறிய முடியுமெனக் கூறினேன். அப்போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிய அந்த தமிழ் தெரிந்த அதிகாரி வாக்கு மூலங்களை ஆங்கிலத்தில் பதியுமாறு மற்றவர்களிடம் கூறினார்.

இடுப்புப் பட்டியால் கடுமையான தாக்குதல்

என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தவரின் பெயர் முருகன் என அங்கிருந்தவர்கள் அழைத்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். என்னிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் என்னை திடீரென இடுப்புப் பட்டியால் கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார். உடம்பு முழுவதும் எனக்கு இரத்தம் கசிந்தது. அவ்வளவு பயங்கரமான அடி. சில நிமிடங்களில் தனது தாக்குதலை நிறுத்திய அவர் இனித் தான் உன்னிடம் முக்கியமான கேள்விகளைக் கேட்கப் போகின்றேன். பொய் கூறினால் உனது ஊருக்கு `பொடி' கூடப் போகாது என மிரட்டிவிட்டு கேள்விகளைக் கேட்டார்.

அவர் யாழ்ப்பாணத்தை அங்குள்ள வீதிகள், கட்டிடங்கள், வீடுகள், பேக்கரிகள், எதற்கு பக்கத்தில் என்ன இருக்கிறது. எந்தப் பக்கத்தால் போனால் எந்தப் பக்கத்தால் வரலாம் என விலாவாரியாக எனக்கு விளக்கிய போது அந்த தமிழ் பேசும் அதிகாரியிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டுமென்ற நிலை எனக்கு ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தை அக்குவேறு ஆணிவேறாக குறிப்பிட்ட அதிகாரி

மீண்டும் என்னிடம் சொந்த இடம் யாழ்ப்பாணமா என்றார். ஆம் என்றேன். யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்றார். எனது ஊரைக் குறிப்பிட்டேன். அப்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிய அவர். அந்த ஊர் தென்மராட்சியில் புலிகளின் பகுதியில் இருக்கிறது. நீ யாழ்ப்பாணமென பொய்யா கூறுகிறாய் எனக் கேட்டு கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்.

அடுத்ததாக அவர் கேட்ட கேள்வி நீ புலிதானே என்பது தான். இல்லை. நான் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன் எனக் கூறினேன். எங்கே எனக் கேட்டார். யாழ் நகரில் என்றேன். யாழ் நகரில் என்றால் எந்த வீதி எனக் கேட்டார். வீதியைக் குறிப்பிட்டேன். உடனே அவர் அந்த வீதியில் உள்ள பேக்கரி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு பக்கத்திலா எனக் கேட்டார். பின்னர் அவ்வீதியிலுள்ள எனக்கு கூட தெரிந்திராத பல அடையாளங்களை குறிப்பிட்டு எனது அலுவலகம் அமைந்துள்ள இடத்தை சரியாக தெரிவித்தார்.

அந்த அதிகாரி கூறிய அடையாளங்கள், விளக்கங்கள் கேள்விகளைப் பார்த்த போது அவர் யாழ்ப்பாணத்துக்கு நன்கு அறிமுகமானவர் என்பது தெட்டத் தெளிவாக விளங்கியது.

யாழ்நகருக்கு அடிக்கடி செல்வதாக கூறிய அதிகாரி

எனது ஆச்சரியம் அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். ஏனெனில், அவர் என்னிடம் உன்னிலும் விட யாழ்ப்பாணத்தை எனக்கு நன்றாகத் தெரியும். யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, அங்கிருக்கும் புல் பூண்டுகளைக் கூட எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நீ ஒரு புலி. ஏனென்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அனைவரும் புலிகள் தான்.

நான் சென்ற மாதம் கூட யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்கேயிருக்கும் நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும். தமிழர்கள் முழுப்பேரும் புலிகள் தான். புலிகள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுக்கிறார்கள். எம்மை முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள். எமக்கு அனைத்து விடயங்களும் நன்றாகத் தெரியும் என்று கூறிவிட்டு என்னை மறுபடியும் தாக்கத் தொடங்கினர்.

விமான நிலையத்திலுள்ள சிறையில் தடுத்து வைப்பு

என் மீதான விசாரணைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து காலை 10.30 மணியளவிலே தான் முடிந்தது. அதுவரைக்கும் யாழ்ப்பாணத்தைப் பற்றியும் அங்குள்ள ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள தொடர்புகள் ஆதரவாளர்கள் பற்றியும் தான் கேள்விகள் கேட்டனர். தெரியாது எனக் கூறிய போதெல்லாம் மிருகத் தனமாகத் தாக்கினார்கள்.

விசாரணை முடியும் வரை தண்ணியோ உணவோ எதுவும் கிடைக்கவில்லை. என்னை அந்த அறைக்குள் வந்து பல உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.ஹிந்தியில் ஏதேதோ உரத்துப் பேசினர். சிலர் தாக்கவும் முயன்றனர். பின்னர் என்னை அங்கிருந்து இழுத்து வந்து விமான நிலையத்திலுள்ள சிறைச்சாலைக் கூண்டுக்குள் போட்டனர். அப்போது எனக்கு பசியாலும் அடிபட்ட வேதனையாலும் மயக்கம் வருவது போலிருந்தது.

சிறுநீர் போத்தலில்தான் எடுக்க வேண்டும்

அரைமயக்கத்திலிருந்த என்னை அந்த சிறைக் கூண்டுக்குள் தள்ளி பூட்டி விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். அந்த சிறைக் கூண்டு 7 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்டது. கொஞ்சம் கூட காற்றோட்டமில்லை. இரு ரியூப்லைட்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. ஒரே துர்நாற்றமாகவிருந்தது.

மலம், சலம் கழிப்பதுதான் அங்கு பெரும் பிரச்சினை. இயற்கை உபாதை ஏற்பட்டால் கதவைத் தட்ட வேண்டும். அப்படியானால்தான் திறப்பார்கள். ஆனால், அநேக நேரங்களில் எவ்வளவு தூரம் கெஞ்சினாலும் திறக்கமாட்டார்கள்.

பல தடவைகள் நான் சிறுநீரைப் போத்தலிலே எடுத்து வைத்து விட்டு பின்னர் தான் வெளியே கொண்டு செல்வது. என்னுடன் அந்த சிறைக் கூண்டுக்குள் இரு நேபாளிகளும் ஒரு நைஜீரியக்காரரும் இருந்தனர். அவர்களும் என்னை விரோதியைப் பார்ப்பது போலவே பார்த்தனர். சிலவேளைகளில் தாக்கவும் செய்தனர்.

உணவுக்காகச் சண்டை

சிறையில் உணவு தரமாட்டார்கள். வெளியே `ஓடர்' கொடுத்தே உணவு எடுக்க வேண்டும். அதற்காக ஒரு சாப்பாட்டுக் கடைக்காரரை சிறைக்கு உணவு கொடுப்பதற்காக நியமித்திருந்தனர். அவரிடமே எமக்கு என்ன உணவு வேண்டுமெனக் கூறி பணமும் நாமே கொடுக்க வேண்டும். நாம் நல்ல உணவுக்கு ஓடர் கொடுத்தோமென்றால், அதனை வாசலில் வைத்து சோதனையிடும் பொலிஸார் எடுத்துவிட்டு வெள்ளைச் சோறும் `டால்' என்று கூறும் பருப்பும் வைத்து அனுப்புவார்கள். எமது உணவை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

வெள்ளைச் சோறும் பருப்பும் வந்தால் கூட அதனை நிம்மதியாக சாப்பிட முடியாது. என்னுடன் இருந்த சக கைதிகள் பறித்து விடுவார்கள். பல தடவைகள் உணவுக்காக அவர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டேன். சோறு போட்டு சாப்பிட `கடதாசித் தட்டு' ஒன்றே தருவார்கள். அதில் வைத்து சாப்பிடும்போது தான் மற்றவர்கள் தட்டிப்பறிப்பார்கள். அதனால் நான் பொலித்தீன் பை ஒன்று எடுத்து அதனுள் சோற்றையும் பருப்பையும் போட்டு விட்டு சாப்பிடுவேன். இவ்வாறு செய்தால்தான் மற்றவர்களால் பறிக்க முடியாது.

அடிக்கடி சக கைதிகள் என்னைத் தாக்குவார்கள். நான் அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்களும் சேர்ந்து என்னைத் தாக்குவார்கள். தினமும் எனது கூண்டுக்குள் புதுப் புது கைதிகள் வந்து கொண்டே இருப்பார்கள். என்னை சிறையிலடைத்து ஒருவாறு மூன்று தினங்கள் கழிந்தன.

றோ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

தை மாதம் 3 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் தமிழ் தெரிந்த அதிகாரியொருவர் வந்து என்னை அந்த சிறைக் கூண்டுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் சென்று வேறு ஒரு அறையில் வைத்து விசாரிக்கத் தொடங்கினார். அவருடன் வேறு இரு அதிகாரிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் உரையாடியதன் மூலம் அவர்கள் `றோ' அதிகாரிகள் எனப் புரிந்து கொண்டேன்.

அந்த அதிகாரிகளும் முன்னர் கேட்ட அதிகாரியைப் போலவே சகல கேள்விகளையும் கேட்டனர். யாழ்ப்பாணத்தின் குச்சொழுங்கையைக் கூட அவர்கள் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர்.

குடாநாட்டின் குச்சொழுங்கையைக் கூட தெரிந்த அதிகாரிகள்

எனது ஊரைக் கேட்டனர் கூறினேன். தொழில் புரியும் இடத்தைக் கேட்டனர் அதனையும் கூறினேன். யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியா நாவலர் வீதியா, யாழ். நகர் கே.கே.எஸ். வீதியா எனக் கேட்டனர். வீதியைக் குறிப்பிட்டேன். அந்த வீதியிலுள்ள பேக்கரியைக் குறிப்பிட்டு அதற்குப் பின்னாலா எனக் கேட்டனர். ஆமென்றேன். அங்கே தற்போது புதிய வீடொன்று கட்டப்பட்டுள்ளது. அந்த இடமா அல்லது பழைய வீடா எனக் கேட்டனர். நான் பழையது என்றேன். அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

புலிகளின் தளபதிகள் குறித்து விசாரணை

என்னைப் பற்றிய விசாரணைகள் முடிந்தவுடன் புலிகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியைத் தெரியுமா? எனக் கேட்டனர். தெரியும் ஆனால் கதைத்ததில்லையென்றேன். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கும் கேணல் தீபன் என்பவருக்குமிடையேயுள்ள வித்தியாசம் என்ன? இவர்களில் யார் பெரியவர்? எனக் கேட்டனர். நான் தெரியாதென்றேன்.

அடுத்ததாகக் கேட்ட கேள்வி என்னை தூக்கி வாரிப் போட்டது.

புலிகளுக்கு ஆதரவு வழங்கும் முக்கியமானவர்கள் யார்?

வன்னிக்குப் போய் வருவதா எனக் கேட்டனர். நான் இடையிடையே தொழில் நிமித்தம் சென்று வருவதாகக் கூறினேன். அடுத்த கேள்வி மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. அதாவது மக்களுக்குள் இருந்தவாறு புலிகளுக்கு ஆதரவு வழங்கும் முக்கியமானவர்கள் யார்? அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியுமா? எனக் கேட்டனர். தெரியாதென்றேன். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி என்னைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். அவரின் தாக்குதலை தாங்க முடியாது நான் நிலத்தில் வீழ்ந்து விட்டேன்.

வாய்க்குள் பேப்பரை திணித்துவிட்டு தாக்குதல்

என்னை மிக மோசமாக தாக்கிய அந்த அதிகாரி நான் நிலத்தில் வீழ்ந்தவுடன் வெளியே சென்று மேலும் இருவரை அழைத்து வந்து என்னை தூக்கி நிறுத்தி விட்டு மூவருமாக தாக்கினார்கள். சிறிது நேரத்தின் பின் எனது ஆடையை கழற்றி விட்டு மேசை மீது குப்புற படுக்க வைத்து விட்டு கால்களை மடக்கி வைத்து உள்ளங் காலில் பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கினார்கள்.

வேதனை தாங்க முடியாமல் நான் கதறினேன். பெரிதாகக் கத்தினேன். அப்போது அவர்கள் பேப்பரை எனது வாய்க்குள் திணித்துவிட்டு மேலும் மேலும் மோசமாகத் தாக்கினார்கள். கைகளையும் கட்டிவிட்டனர். எனக்கு அடி தாங்க முடியாமல் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் கண் விழித்தபோது அந்த அதிகாரிகள் அங்கேயே காத்திருந்தார்கள்.

சென்னைக்கு எத்தனை புலிகள் வந்துள்ளனர்

நான் மயக்கம் தெளிந்தவுடன் என்னிடம் மீண்டும் விசாரணைகளை தொடங்கினர். அவர்களின் பிரமாதமான கேள்வி சென்னைக்கு எத்தனை புலிகள் வந்துள்ளனர்? அவர்கள் எங்கெங்கே தங்கியுள்ளனர்? என்பதாகவே இருந்தது. நான் தெரியாதென்று சொன்னபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கினார்கள்.

இவ்வாறு இரண்டரை மணிநேரம் விசாரணையும், சித்திரவதைகளும் தொடர்ந்தன. பின்னர் என்னை இழுத்துச் சென்று அதே கூண்டுக்குள் போட்டுப் பூட்டினர். அந்தக் கூண்டுக்குள் இருள்வதும் தெரியாது விடிவதும் தெரியாது. இவ்வாறு இன்னும் சில நாட்கள் நகர்ந்தன.

கொல்லப் போவதாக மிரட்டினர்

ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அதே அதிகாரி வந்து விசாரணைகளை மேற்கொண்டார். அதே கேள்விகள், அதே பதில்கள். இதனால் சினமடைந்த அந்த அதிகாரி என்னைக் கொல்லப் போவதாக மிரட்டினார். அடித்து சித்திரவதை செய்வதிலும் விட என்னை ஒரேயடியாகக் கொன்று விடுமாறு அவரிடம் கூறினேன். உண்மையைக் கூறாவிட்டால் எத்தனை வருடம் சென்றாலும் இந்த சிறையை விட்டு வெளியே செல்ல முடியாதெனக் கூறிய அந்த அதிகாரி உண்மையைச் சொன்னால் பல உதவிகள் புரிவதாகவும் கூறினார்.

இவ்வாறு அரைமணிநேரம் விசாரணை இடம்பெற்றது. எனது நண்பர்கள் யாராவது சென்னையில் இருந்தால் அவர்களின் முகவரியை தருமாறும் அந்த அதிகாரி கேட்டார். எனக்கு சென்னையில் ஒருவரையும் தெரியாதென்றேன். இதனால் கடுப்படைந்தவர் என்னை மீண்டும் கூண்டுக்குள் போட்டுப் பூட்டினார்.

என்னால் அவர்களின் சித்திரவதைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தோடு அந்த நரக சிறை வாழ்க்கையையும் ஜீரணிக்க முடியவில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள என்னை எவரும் பார்க்கக் கூட முடியாது. அவ்வாறு வசதியிருந்தால் கூட என்னைப் பார்ப்பதற்காக அங்கு வர எனக்கு தெரிந்தவர்கள் எவரும் இந்தியாவில் இருக்கவும் இல்லை.

நாளுக்கு நாள் சித்திரவதைகளும், விசாரணைகளும் அதிகமாகிக் கொண்டே சென்றன. இதனால் மன ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளானேன். அவ்வேளையில் தான் தற்கொலை எண்ணம் தலை தூக்கியது.

தற்கொலை செய்வதற்கான வழிவகைகள் கூட அந்த சிறைக் கூடத்துக்குள் இருக்கவில்லை. என்ன செய்யலாம் என யோசித்த நான், சிறைக்கு வெளியேயிருந்து உணவு கொண்டு வருபவரை பயன்படுத்த முடிவு செய்தேன். அவரிடம் எனக்கு இரவில் நித்திரை வருவதில்லையெனவும், அடி காயங்களால் உடம்பு வலிப்பதால் நித்திரை கொள்ள முடியவில்லையெனவும் கூறி வெளியே மருந்துக் கடையில் நித்திரைக் குளிகைகள் வேண்டித் தருமாறு கேட்டேன்.

அவரும் எனது பரிதாப நிலையைப் பார்த்து முதலில் கொஞ்ச குளிகை வாங்கித் தந்தார். அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த நான், சில தினங்களின் பின்னர் மீண்டும் நித்திரை குளிகை கேட்டேன். அவரும் வாங்கித் தந்தார். அவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒருநாள் விழுங்கி விட்டேன்.

ஆனால், எனது நல்ல காலமோ, கஷ்டகாலமோ தெரியவில்லை நான் மருந்துக் குளிகைகளை ஒன்றாகப் போட்டதைக் கண்டு விட்ட என்னுடன் சிறையிலிருந்த நேபாளிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டி கொடுத்து விட்டனர். இதனால் எனது தற்கொலை முயற்சி கைகூடவில்லை. தற்கொலை முயற்சி செய்ததற்குக் கூட பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.

வேலைக்காரப் பெண்ணின் அடாவடித்தனம்

அந்த சிறைக் கூண்டுக்குள் எப்படிப் புரண்டு படுத்தாலும் நித்திரையே வராது. எம்மை அறியாமலே சிலவேளைகளில் அதிகாலையில் தூங்கிவிடுவோம். ஆனால், அதற்குக் கூட துப்புரவுப் பணிக்காக வரும் வேலைக்காரப் பெண்ணினால் இடையூறுகள் ஏற்படும்.

நாம் காலையில் சிலவேளைகளில் 8 மணிக்கு கூட எழுந்திராமல் தூங்குவோம். பசிக்களையும், அடி வேதனைகளும் எம்மை எழும்பவிடாது. அவ்வேளையில் காலையில் துப்புரவுப் பணிக்கு வரும் பெண் எம்முடன் தகராறு பண்ணுவார். சிலவேளைகளில் நாம் எழும்ப மறுத்தால் தண்ணீர் ஊற்றுவார். அதிகாரிகளிடம் சொல்லி எம்மைத் தாக்குவார். அந்தப் பெண்ணிற்கு 30 வயதுக்குள் தான் இருக்கும். மிகவும் அழகானவர். அவரைக் கண்டுவிட்டால் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் காட்டிக் கொண்டு திரிவார்கள்.

சிலவேளைகளில் அந்தப் பெண் ,அதிகாரியின் ஆசனத்தில் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து யாருடனோ தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவார். அந்தப் பெண்ணுக்கு சிறைச்சாலை அதிகாரிகளிடையே தனியான மதிப்புண்டென்பதை அவரின் அதிகார தோரணை நன்கு புலப்படுத்தியது.

சிறைக் கூண்டுக்குள் தமிழ் வாசகங்கள்

அந்த சிறைச்சாலையில் பல நாட்டவர்களும் இருந்தனர். இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலரும் இருந்தனர். என்னை அடைத்து வைத்திருந்த கூண்டுக்குள் நான் மட்டுமே தமிழன். ஆனால், அந்த சிறைக் கூண்டு சுவர்களில் முன்னர் இருந்த தமிழர்களால் பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் என் மனதில் பதிந்த சிலவற்றைக் கூறுகின்றேன்.

`அன்பான இலங்கைத் தமிழர்களே, நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். என் பெயர் ஜோசப். உண்மையே பேசுங்கள். இங்கே உண்மையைப் பேசாவிட்டால் உங்களால் ஒருபோதும் வெளியே வர முடியாது.

இன்னொரு வாசகம், `அன்புக்கும் பாசத்திற்குமுரிய இலங்கை நண்பர்களே, வேலை தேடி வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கு வணக்கம். எமது நாட்டில் என்ன வளம் இல்லை. எமது அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளை விட்டு அந்நிய தேசம் சென்று கைகட்டி வேலை செய்ய வேண்டுமா? இலங்கையில் ஓர் இனம் அடக்க முற்படுகின்றது. தமிழராகிய எம்மை சிங்கள தேசம் அடிபணிய வைக்கின்றது. அதனை உடைத் தெறிவதற்கான போராட்டத்திற்கு கைகொடாமல் ஏன் ஓடுகிறீர்கள். இதுதான் எனது கடைசிப் பயணம். நான் விடுதலையானவுடன் சொந்த ஊர் போகிறேன். நீங்களும் இதைப் பின்பற்றுவீர்கள் என நினைக்கிறேன். இவ்வாறு பல புரட்சிக் கவிதைகள், இந்தியர்களைத் திட்டும் தூஷண வாசகங்கள் போன்றனவும் சுவர்களை அலங்கரித்திருந்தன.

இவ்வாறு நரகலோகமாக நாட்கள் நகர்ந்து சென்ற நிலையில் 23 ஆம் நாள் நான் கொடுத்த வாக்கு மூலங்கள் சரியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனவரி 20 ஆம் திகதி என்னை மும்பை விமான நிலையத்தில் வைத்து இலங்கை விமானக் கப்டனிடம் என்னை கட்டுநாயக்கா விமான நிலைய புலனாய்வுத் துறையினரிடம் கையளிக்குமாறு கூறி மும்பை புலனாய்வுத்துறையினர் ஒப்படைத்தனர்.

கட்டுநாயக்காவில் தீவிர விசாரணை

அன்று மும்பை விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்து வந்த இலங்கை விமான கப்டன் கட்டுநாயக்க குற்றப்புலனாய்வுத்துறையினர

  • Replies 86
  • Views 11.4k
  • Created
  • Last Reply

அட இதை நாங்கள் சொன்னா தவறு எண்று சொல்ல ஆக்கள் வருவினம்....! "Q"பிறாஞ், புலனாய்வுத்துறை எண்று நான் பெற்ற அனுபவம் இன்னும் மோசமானது....!

(15 நாள் நரகத்தில் வாழ்ந்தவாழ்க்கை )

உண்மையில் தமிழ் பேசிய அந்த அதிகாரி இலங்கையின் கூட்டிக்குடுக்கிற ஒட்டுண்ணியை சேர்ந்தவராகக் கூட இருக்கலாம் சாதாரண தமிழனையும் புலியையும் வித்தியாசம் தெரியாத இந்திய புலனாய்வெல்லாம் ஓரு புலனாய்வெண்டு.........banghead.gif

தல அதையும் எழுதங்களேன் இந்தியாவின் உண்மை சொரூபமும் அதன் காந்திய முகமூடியும் இங்க வெளிக்கும்?

டன் அங்க வெட்ட முதல் இங்க இருந்து ஆலவட்டம் பிடிப்பவர்களை என்ன செய்வது?அத்தோடு ரோவீல் இருக்கும் அதிகாரிகள் உண்மையில் தமிழர்களா?அல்லது தமிழ் தெரிந்த தமிழர் விரோதிகளா?ரோவின் இந்திய அதிகார வர்க்கத்தின் பின் புலம் என்ன?அவர்கள் ஏன் ஈழத் தமிழருக்கு எதிராக இவ்வாவு மோசமான முறையில் இயங்குகின்றனர்?ரோவின் உயர் அதிகாரிகள் தமிழ் நாட்டுப்பார்ப்பனராக இருபது ஏன்?ரோவை நன்கு அறிந்தவர்கள் மேலும் எழுதுங்களேன்.

தல அதையும் எழுதங்களேன் இந்தியாவின் உண்மை சொரூபமும் அதன் காந்திய முகமூடியும் இங்க வெளிக்கும்?

டன் அங்க வெட்ட முதல் இங்க இருந்து ஆலவட்டம் பிடிப்பவர்களை என்ன செய்வது?அத்தோடு ரோவீல் இருக்கும் அதிகாரிகள் உண்மையில் தமிழர்களா?அல்லது தமிழ் தெரிந்த தமிழர் விரோதிகளா?ரோவின் இந்திய அதிகார வர்க்கத்தின் பின் புலம் என்ன?அவர்கள் ஏன் ஈழத் தமிழருக்கு எதிராக இவ்வாவு மோசமான முறையில் இயங்குகின்றனர்?ரோவின் உயர் அதிகாரிகள் தமிழ் நாட்டுப்பார்ப்பனராக இருபது ஏன்?ரோவை நன்கு அறிந்தவர்கள் மேலும் எழுதுங்களேன்.

எழுத வெளிக்கிட்டா ஆவேசம் எல்லாம் வந்து கண்டமானத்துக்கு எழுதிவைச்சிடுவன்...... அவங்களை மன்னிக்கக் கூடாது அவ்வளவுதான்... !

இந்திய உயர் அதிகாரிகள் ராஜீவ் காந்திவிடயத்தில் கோட்டைவிட்டதன்பின் இலங்கையர்கள் அனைவர் மேலும் வெறியுடன் இருக்கிறார்கள். சென்னையில் காசியாண்ணாவீடு மற்றும் புலியாதரவு தமிழர்கள் வீடுமுன்பு எல்லாம் எப்போதும் கடமையில் இருப்பார்கள். ஒருதடவை ஒரு பெரியவரைப்பார்க்கச்சென்ற போது அவர்இனி அங்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். கேட்டபோது சிலதினங்களுக்கு முன் வந்த ஈழத்து இளைஞரை விசாரித்து தொந்தரவு செய்ததாககூறினார். பழநேடுமாறன் அவர்கள் கூட இவர்களால் சூழப்பட்டுத்தான் உள்ளார்.

இலங்கைக்கு வரும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோவினால் பாதிக்கப்பட்ட எல்லோரும் தமது அனுபவங்களை எழுதினால் மட்டுமே றோவிற்கு பாடம் புகட்ட முடியும்.

இத்தனைக்குள்ளும் எமது ஏஜன்டுகள்; மும்பைவழியாகவும் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.. எப்படியென்று புரியவில்லை. காசு கொடுத்து இவர்களை வாங்குகிறார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்குள்ளும் எமது ஏஜன்டுகள்; மும்பைவழியாகவும் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.. எப்படியென்று புரியவில்லை. காசு கொடுத்து இவர்களை வாங்குகிறார்களா?

பணம் & மாது இருந்தால் போதும் இந்திய பொலிஸ், அதிரடிப்படையில இருக்கிறவங்க எதுவும் செய்வாங்கள்... :evil: :evil: இதை நான் சொல்லல அவங்கட சினிமாவும், ஜெயலட்சுமியும் சொன்னாங்க... :oops:

பணம் & மாது இருந்தால் போதும் இந்திய பொலிஸ், அதிரடிப்படையில இருக்கிறவங்க எதுவும் செய்வாங்கள்... :evil: :evil: இதை நான் சொல்லல அவங்கட சினிமாவும், ஜெயலட்சுமியும் சொன்னாங்க... :oops:

உவங்களையும் உவங்களின் பழக்கவழக்கத்தையும் எங்கட நாட்டுக்கு அண்டாமல் விட்டால் போதும் நாங்கள் வேகமாக வளர்ந்திவிடுவம்...!

அரக்கத்தங்களால் அவதியுற்று அழும் அந்த இளைஞ்ஞனின் குரல் அவனின் குரல் அல்ல. ஒட்டுமொத்த ஈழத்தமிழனின் அவலக்குரல் ஆழமாய் ரணங்களாய் இளையோடி ஒலிக்கிறது. மனிதநேய சக்தீகள் எனச் சொல்பவர்கள் எட்டிநின்று வேடிக்கை பார்ப்பதோடு, அழுது துடிப்போரின் கைகளை கட்டிபார்ப்பாரே அன்றி நடக்கின்ற அவலங்களை கேட்கமாட்டார்கள். எனவே எங்களின் வாழ்வும் சாவும் எங்களின் இறமையில்த்தான் என்பதை தமிழ் இளையோர் நாம் புரிந்துகொண்டோம்.

அவலத்திற்குள்ளாகிய அந்த எங்கள் உறவின் அவலம் எங்களின் அவலம்.

இந்திய புலநாய்களின் காட்டுமிராண்டி தனத்தால் பாதிக்கபட்ட அந்த ஈழத்தமிழனுக்கு யாழ் களம் சார்ந்த எமது அனுதாபங்கள். அது தானையா மானமுள்ள தமிழகத்தமிழன் ஒருவன் சிங்களவனை நோக்கிப் பாடினான் நீங்கள் வேறு நாடையா.... நாங்கள் வேறு நாடு.... நிறைய வேறுபாடையா .... நிறைய வேறு பாடு. அதையே நாம் திருப்பி தமிழீழ, புலியெதிர்ப்பு இந்தியர்களை பார்த்து கூறுகின்றோம். தயவு செய்து தமிழீழ தமிழர்களாம் புலிகளுடன் முட்டிப்பார்காதீர்கள் உங்கள் முன்னிலையிலும் பின்னிலை மிக பரிதாபமாகிவிடும். சிங்கள கூலிகளின் தமிழீழ ஆக்கிரமிப்பு பகுதியில் நீங்கள் தாராளமாகவே உலாவுவதும், வரலாறுகள் பலகொண்ட வன்னி நிலத்தினுள் நீங்கள் தமிழ்த்துரோகிகளுடன் சேர்ந்து பொறியியலாளராய் கட்டுமான பணியாளர்களாய், இன்னும் உங்கட பாசையில சொன்னா பிளாட்பார வியாபாரிகளாய் நுளைந்தது நுளைவது நுளைய எத்தனிப்பது என்பன புலிகள் அறிந்திராமல் இல்லை. இப்படி எல்லாம் சென்று நீங்கள் என்னத்தை சாதித்தீர்கள். ஆனால் இலங்கை புலித்தமிழன் நினைத்தால் சாதித்தே தீருவான். அதனை நீங்கள் நன்கு பட்டு உணர்ந்திருப்பீர்கள் அதன் வெளிப்பாடே இன்றும் நீங்கள் இரத்த கொதிப்புடன் அலைந்து திரிகிறீர்கள்.

இந்திய புலநாயே... நீ.... ஒன்றை உன் மனதில் வைத்துக்கொள். புலிகளின் தாயகம் தமிழீழம். அதனை நீயும் ஒத்துக்கொள்கிறாய். தமிழீழத்தவன் அனைவரும் புலி என்கிறாய் சந்தோசம் சிங்களவனின் மரமண்டைக்கு புரியாத செய்தியொன்று உனக்கு புரிந்துள்ளது. ஆதலால் புலிகளை அழிப்போம் பிரபாகரனை பிடிப்போம் என மனப்பால் குடியாதே... அது உன்னால் முடியாது. நீ 1987 இல் அரிசிப்பொட்டலதினுள் மறைந்து வந்து முயற்சித்து முடியவில்லை. பின்னர் புலிகளையே பாவித்து முயன்றாய் அதுவும் முடியவில்லை. இப்பொழுதோ இது எட்டாத பழம் சீ...சீ.. இது புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டாய். ஆனால் ஒன்று உன் காலத்திலேயே அதுவும் இப்பொழுதே தமிழீழம் உதயமாகின்றது. இது உனக்கு உவப்பாகத் தான் இருக்கும் ஆனாலும் நீ இதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்திய புலநாயே..... போரியலில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு அதை நீ அறித்திருப்பாய். முன்னர் சிங்கள தேசத்தில் தமிழர்கள் தான் பயங்கரவாதம் செய்கின்றனர் என கலைத்து கலைத்து தமிழனை கைது செய்தனர் இன்றோ சிங்கள தேசத்தில் தமிழனுக்காக்கா நட்புத்தன்மை கொண்ட சிங்களவனே அதனை நிறைவேற்றுகிறான். இதை தான் "அவலத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடுக்கும் முறை" என்பது. இது ஒரு இனிமையான பழிவாங்கல்..... இதனை நீயும் ருசித்து பார்க்க விரும்பி நடுத்தெருவிலே அல்லோலகல்லோலபட்டதுண்டு...... வேண்டாம் விட்டுவிடு. எங்களுக்காக செய்து முடிக்க தமிழகத்தில் மானமுள்ள தமிழர் குழாமே இருக்கிறது பட்டு உணர்ந்திருப்பாய். அதனால் நாம் வந்து உனக்கு சிரமங்கள் தரமாட்டோம் அதனை நீ...... மனதில் வைப்பாயாக. அதனால் நாம் உன்னிடம் கேட்பது என்னவென்றால் அப்பாவியாகிய தமிழீழத்து பொதுமகனை நீ....... புலியென துன்புறுத்தாதே...

தமிழீழத்து தலைக்கல்லாக தலைவன் பிரபாகரனும். எல்லைக்கற்களாக மாவீரரும் போராளிகளும் மக்களும் தங்கள் உயிரை திரியாக்கி இரத்தத்தையே நெய்யாக்கி ஒளியூட்டி காவல் காக்க தமிழீழம் மலர்ந்து வருகிறது. அதனால் இந்த கற்களுடன் மோதுண்பவன் சிதறடிக்கப்படுவான். "எச்சரிக்கை" இதை உனக்கும் உனக்கு தூபமிடும் உலக நாடுகளுக்கும் சொல்கிறோம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில் நிமித்தமாக வந்திருக்கும் சில இந்தியர்களையும் இந்தியர்களினால் "றோ" எனும் மனநோயாளர்பிரிவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் புலத்து ஈழத்து துரோகிகளையும் வைத்தே புலிகளின் புலத்து செயற்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக அண்மையில் தமிழீழத்தில் நான் இருந்த போது மிகவும் நம்மபத்தகுந்த (போராளி) ஒருவர் தகவல் தெரிவித்தார்.

அன்பார்ந்தவர்களே.............. இரகசியங்களை இரகசியாக காத்துக்கொள்ளுங்கள்.

நறிக்கடனின் உதாரனம் **** தான் இழுக்கு :lol::lol::lol::lol: :P :P :P

**** தணிக்கை - மதன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் யாழ்பாணத்தில் தொழில் செய்பவர்கள் போல வந்து நிற்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஈபிடிபி முகாம் தான் இவர்களுக்கு வதிவிடமாம்.

இந்த **** பிடிச்சு நாலு சாத்தி போட வேண்டும். இவங்களுக்கு யாழ்பாணத்தில் என்ன வேலை???

**** தணிக்கை - மதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாய்களை பிடிச்சு நாலு சாத்தி போட வேண்டும். இவங்களுக்கு யாழ்பாணத்தில் என்ன வேலை???

சிறிய திருத்தம்:

இந்த **** பிடிச்சு சந்திக்குச் சந்தி ஒரே போடு போட வேண்டும். இவங்களுக்கு யாழ்பாணத்தில் என்ன வேலை??? பிணந்தின்னிகள் :evil: :evil: :evil:

**** தணிக்கை - மதன்

இந்த கோணல் இப்ப போட்ட கூத்துக்கு சில வருடங்களுக்கு முன்னம் இன்னொருவரும் உந்த இந்திய உதவியுடன் **தையா போட்டதும், அது ஒட்ட நறுக்கப்பட்டதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்தக் கூத்துக்கு பாரத மாதாவின் றோக்கடவுள் அரங்கேற்றிய கிளைமக்ஸ்ஸுக்கள் ஒன்று இரண்டல்ல ஆயிரங்கள்!!!!

"**தையா" போட்டதுகள் முடிபுக்கு வந்தவுடன், யாழ்நகரில் பல இந்திய உளவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் இந்தியர்களே!! ஆச்சரியம் என்னவெனில் இவ்வுளவாளிகள் இந்திய அமைதிப்படை எம் தாயகம் வருவதற்கு முன்னமே, அங்கு வந்து தேனீர்/சாப்பாடு போன்ற சிறு வியாபார கடைகள் போட்டிருந்தார்களாம். பலர் யாழ்நகரிலேயே திருமணம் கூட செய்து பிள்ளை குட்டிகளுடன் இருந்தார்களாம். வடமராட்சி தம்பசெட்டிப் பகுதியில் இவ்விந்தியமைந்தவர்களில் ஒருவர் மூன்று திருமணம் கூட தெய்திருந்தாராம். அப்ப்டி நிலையூன்றிவிட்ட இந்தியமாதாவின் மைந்தர்கள் மடக்கி ஒட்டு மொத்தமாக பிடிக்கப்பட்ட பின் தானாம் தெரிந்தது இவ்விந்திய மைந்தர்களில் பெரும்பாலானோர் "மேஜர், கப்ரன்" தரத்தைச் சேர்த்தவர்களென்று!!!!!!!!!

இது என்னத்தைக் காட்டுகிறதென்றால் எம் போராட்டத்திற்காக நாற்பதற்கு மேற்பட்ட இயக்கங்களை ஆரம்பித்து வைத்த பாரதமாதாவின் மைந்தர்கள், அன்றே எமது போராட்டத்திற்கான புதைகுழிகளையும் தோண்ட முற்பட்டார்கள். எமக்காக போராடப் புறப்பட்ட பலர் இப்புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டார்கள், சிலர் கூலிகளாக மாறி தாங்களும் சேர்ந்து இப்புதைகுழிகளை தோன்டுகிறார்கள்.

மேலுள்ள ஒரு அப்பாவி ஈழத்து இளையனுக்கு ஏற்பட்ட சம்பவம் கூட. இந்த பாரதமாதவின் மைந்தர்கள் எம்மீது வைத்துள்ள நிலைப்பாடுகளின் ஒரு வெளிப்பாடே!!!!

இவற்றிற்கான விடை எம் தேசியத்தை நாம் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசியத்தின் பலமே அவர்களின் பலவீனமாகும்.

இவற்றிற்கான விடை எம் தேசியத்தை நாம் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசியத்தின் பலமே அவர்களின் பலவீனமாகும்.
:idea: :idea: :idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ó¾ þ¨Ç»ý ¦¸¡ØõÀ¢ø ¿¢üÀ¾¡¸ ÜȢ¢Õó¾¡÷. «Å÷ þôÀÊ ¾ÉìÌ ¿¼ó¾Åü¨È ¦ÅǢ¢ø ¦º¡øÖ¸¢È¡÷, ¾ÁÐ Á¡Éõ §À¡¸ô §À¡¸¢È¨¾ «È¢óÐ º¢í¸Ç ¸¡ÅøÐ¨ÈìÌ þô§À¡Ð ¾¸Åø «ÛôÀ ÀðÊÕì¸Ä¡õ. «ó¾ ¿Àâý ¯Â¢ÕìÌ ¬ÀòÐ þÕ츢ÈÐ. «Å÷ ÅýÉ¢ìÌ ¦ºý§È¡ «øÄÐ §ÅÚÅ¢¾Á¡¸§Å¡ ¾ý¨É À¡Ð¸¡òÐì ¦¸¡ûǧÅñÊÂÐ «Åº¢Âõ. «Å¨Ã º¢í¸Ç ¸¡ÅøÐ¨È§Â¡, º¢³Ê ¢ɧá Á£ñÎõ ¨¸Ð¦ºö¾¡ø «Å÷ ¿¢îºÂÁ¡¸ ¦¸¡øÄôÀÎÅ¡÷.

þó¾ Å¢¨¼Âõ ºÃ¢Â¡É Å¢¾ò¾¢ø ¾Á¢Æ¸ °¼¸í¸ÙìÌõ þÄí¨¸ ¾Á¢ú °¼¸í¸ÙìÌõ ¦¾Ã¢Å¢ì¸ôÀðÎ "§È¡"Å¢ý «¼¡òÐì¸û ¦ÅǢ즸¡ñ¼ÃôÀ¼ §ÅñÎõ. «Å÷ ¦¾Ç¢Å¡¸ ±ó¾ º¢¨È, «¾¢¸¡Ã¢Â¢ý ¦ÀÂ÷ 'ÓÕ¸ý' ±ýÚ ÀÄ ¬¾¡Ãí¸Ù¼ý ÜÚž¡ø þó¾¢Â ¯Âþ¢¸¡Ã¢ ¿¢ÕÀÁ¡ ¦ºý Á¡Éõ ¸ôÀø ²È¡Áø þÕì¸ «íÌ ºõÀó¾ôÀð¼ÙìÌ ºð¼ ¿¼ÅÊ쨸 ±Îì¸×õ, À¡¾¢ì¸Àð¼ þ¨ÇÂÛìÌ ¿Š¼ ®Îõ ¦¸¡Îì¸ ÓýÅà §ÅñÎõ.

¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸ ¾¡õ ®ÆÅ¢¼Âò¾¢ø þÉ¢ ¾¨Ä¨ÅôÀ¾¢ø¨Ä ±ýÈ¢ÕóÐ ¦¸¡ñÎ þó¾¢Â¡ '§È¡'Å¢üÌ ¿¢¾¢¨Â «ûǢ¢¨ÈòÐ ±Á즸¾¢Ã¡É ¦ºÂø¸¨Ç ¦ºöÐ ¦¸¡ñ§¼ þÕ츢ÈÐ. þýÈ¢øÄ¡Å¢ð¼¡Öõ ±ý§È¡ ´Õ ¿¡û þ¾üÌ À¾¢ÄÇ¢ì¸ §ÅñÊÅÕõ.

ÒÄ¢¸û §À¡÷¿¢Úò¾ ´ôÀó¾õ ÀüÈ¢ §ÀÍõ §À¡Ð þó¾ "§È¡"Å¢ý Å¢¼Âò¨¾Ôõ ¬¾¡Ãòмõ º÷ŧ¾ºòÐìÌ «¾ý §¸¡ÃÓ¸ò¨¾ ¸¢Ç¢òÐ ¸¡ð¼§ÅñÎõ.

*****

À¡Åõ «ôÐø ¸Ä¡õ, þó¾¢Â¡¨Å ÅÇôÀÎò¾ ±ò¾¨É§Â¡ ¾¢ð¼í¸¨Ç ÅÌ츢ȡ÷. þó¾ ÒÄ¿¡ö×òÐ¨È¨Â ÅÆ¢¿¼ò¾¡Áø §À¡É¡ø þÕìÌõ ÅÇÓõ ÀÈ¢§À¡Ìõ «À¡Âõ þÕôÀ¨¾ «È¢Â¡Áø ¸É× ¸¡ñ¸¢È¡Ã¡...

«ñ½¡Á¡÷....¸¼×§Ç¡¦ÂñÎ Ôò¾õ ÅÃܼ¡Ð, Å󾡸 þ¨ÅìÌõ ¦¸¡ïºõ À¡¼õ Ò¸ðÊÉ¡ ¿øÄõ. ÝÎ ¸ñ¼ â¨É «ÎôÀÊÄ ÀÎòи¢¼ìÌ.

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் றோ உளவாளிகள் பற்றி முன்பு ஒருக்கா பரபரப்பிலும், ஒரு பேப்பரிலும் வந்தது. அதனை இங்கே பார்க்கவும்.

http://www.orupaper.com/issue20/pages_K__22.pdf

http://www.orupaper.com/issue20/pages_K__23.pdf

http://www.orupaper.com/issue20/pages_K__26.pdf

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பிறகு வந்த பரபரப்பு இதழில் றோ உளவாளிகள் யாழ் நகரினை விட்டு ஓட்டம் என்ற செய்தி வெளியானது. ஒஸ்ரேலியாவில் இந்தச்செய்தி வந்த பரபரப்பு விற்கப்படவில்லை. தம்பியவை யாராவது வாசித்தால் இந்தச் செய்தியை எனக்குச் சொல்லுங்கோ

ஹ்ம்ம்.. புத்தம் புதிரவன்... உங்கள் உணர்ச்சிகள் ஓகே.

ஆனால் கொஞ்சம் அடக்கி வாசியுங்க!

வரிகளில் கவனம் செலுத்துங்கள் 8) முடிந்தால் நீங்களே நீக்கி கொள்ளுங்கள் 8)

இதற்குப் பிறகு வந்த பரபரப்பு இதழில் றோ உளவாளிகள் யாழ் நகரினை விட்டு ஓட்டம் என்ற செய்தி வெளியானது.

ம்ம்ம்.... அவர்கள் ஓடியது ஈ.பி.டி.பி/புளொட் கூலிகளின் முகாம்களுக்குள்தான் :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....

ஆண்டவனே இந்த பாவிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்....

மதன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தணிக்கை செய்திருப்பதால், இதில் சில கருத்துக்களை நானே தணிக்கை செய்கிறேன்..... நன்றி மதன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....

ஆண்டவனே இந்த பாவிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்....

அடேய், நாய் என்று கூறிய சொறிநாயே.... திருடனைப் பிடிப்பது தானடா போலிசின் வேலை.... அதைப் புரிந்துகொள் முதலில்....

எப்படிப்பட்ட திருடனை என்று சொல்லவில்லையே? அதெப்படி லக்கி, அமெரிக்காவில அல்லது லண்டனில் பல முறை சீக்கியர் மீது அந்த நாட்டவர் தாக்குதல் நடத்தின போது பொங்கி எழுந்து அறிக்கை எல்லாம் விட்டாங்களே இந்திய அரசியல் வாதிகள்?

இந்தியனுடைய றோவுக்கு பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ தான் சரி,, ஏன் தெரியுமா? இந்தியாவின் றோ உறுப்பினர்கள் அதிகளவானோர் புலனாய்வில் நடவடிக்கையில் ஈடுபடும் இடம் பாகிஸ்த்தான், அங்கே பல முறை பல றோ உறுப்பினர்கள் பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ மூலம் கைதுசெய்யபட்டு இருக்கிறார்கள், அப்படி கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்த்தான் கன நாட்களுக்கு கஸ்ரடியில் வைத்திருக்கிறதில்லையாம்,, உடனடியாக றிலிஸ் பன்னிவிடுவார்கள்,, ஆனால் பாருங்க றிலிஸ் பன்னுறது இந்தியாவுக்கு திரும்பி போகச்சொல்லி இல்லை, மேலோகோத்துக்கு போகச்சொல்லி றிலிஸ் பன்னுறதாம்,, இதுதான் சரியான தண்டனை.... :idea: :idea: :P

திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சிஐஏ என்பதை ஐ,எஸ்.ஐ என்று.

பாகிஸ்தானுடையது ஐஎஸ் ஐ... சி.ஐ.ஏ அமெரிக்காவின் உளவு அமைப்பு... இது கூட தெரியாத ******** எல்லாம் பேச வந்துட்டது....

மதனின் பெருந்தன்மைக்கு கட்டுப்பட்டு அந்த வார்த்தையை நான் தணிக்கை செய்து விட்டேன்......

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.