Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகையிரதத்தைப் புணர்ந்தவன்

Featured Replies

ரெயில் நிலையம்

தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த தருணத்தில் இருந்து மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்களாகவே அவனிற்குப் பட்டனர். பிரேதப் பெட்டிகளில் இருந்து மக்கள் வெளிக்கிளம்பி நடந்து திரிவதாக அவனிற்குத் தோன்றியது. தன்னைப் பற்றிய சிந்தனைகள் அறவே அவன் மனதில் இறந்துபோயிருந்தன. எவரது அங்கீகாரமும் எந்த விதத்திலும் அவனிற்குத் தேவைப்படவில்லை. கடிகாரம் நேரம் முதலிய கோட்பாடுகள் அவனுள் மறக்கப்பட்டிருந்தன. அவனது மனம் திட்டமிடுவதை அறவே கை விட்டிருந்தது. வேலை, வருமானம், செலவுகள் போன்ற சின்ன விடயங்கள் மிகச் சின்ன விடயங்களாகிப் பின் அறவே தொலைந்து போயிருந்தன. புகையிர நிலையத்திற்குள் பேய்களாகத் தெரிந்தவர்களோடு முட்டிமோதி விலகி தண்டவாளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான்.

பிளாற்பாரத்தின் மஞ்சள் கோட்டினைத் தன் சப்பாத்து முட்டும்படி நின்று கொண்டு பாயத் தயாராக நின்றிருந்தான். தொலைவில் ரெயில் வருவதற்கான அறிகுறி தெரிந்தது. இப்போது ரெயிலின் தலையில் இருந்த விளக்குத் தெரிய ஆரம்பித்தது. ரெயில் வேகமாகத் தான் வருகிறது. ரெயில் மீது திடீரென ஒரு காதல்; பிறப்பதாய் உணந்தான். எத்தனை பெண்களின் சகவாசம் இருப்பினும் புதியவள் ஒருத்தியுடன் முதற்தடவை புணர்வதற்குத் தயாராகி அவளது சட்டையின் முதல் பொத்தானை அவிழ்க்கையில் அவளில் ஏற்படும் காமம் சிரசிற்கடித்த உணர்வினை இப்போது ரெயிலின் மீது அவன் உணர்ந்தான். ரெயிலை அம்மணமாக்கிப் புணர்ந்து விடப் பொறுமையற்றவன் போல் அண்மிக்கும் ரெயில் விளக்கை வெறிகொண்டு பார்;த்துக் கொண்டிருந்தான். இவனது பார்வை ரெயியிலின் வேகத்தை அதிகரித்ததைப் போல இப்போது ரெயில் முன்னரை விடத் துரிதமாக இவனை நோக்கி வந்துகொண்டிருப்பதாகப்பட்டது. அடுத்த சில நொடிகளில் ரெயிலின் சத்தம் கூட மௌனித்து தலைவிளக்கின் ஒளி மட்டும் எங்கும் வியாபித்துப் போதி மரத்தின் கீழ் புத்தன் கண்டிருக்கக்கக் கூடிய ஒளிப்பிரவாகம் தோன்றி முளுங்கிக் கடந்து போனது.

தொடர்மாடிக்குடியிருப்பு

புதிதாய் ஒரு சிவப்புக் கடதாசி கதவில் ஒட்டப்பட்டிருந்தது. கிளித்துக் கசக்கி உருட்டிக்கொண்டு கதவைத் திறந்து உட்சென்றான். இருக்கை அருகில் இருந்த மின் விளக்கை எரியவிட்டு இருக்கையில் அமர்ந்து கொள்கிறான். கதவு சாத்தப்படாது திறந்தே கிடந்தது. கஞ்சா அடித்தவனிற்குள் ஆரோ இரண்டு ரெட்புள் பானத்தை ஊத்தி விட்டதைப்போல என்னவென்று வகைபிரிக்க முடியாத ஒரு தோற்றம் அவன் முகத்தில் படர்ந்திருந்தது. கூட்டிக் கழித்து பிரிச்சு உள்ளுக்குள் புகுந்து பார்த்தால் அவன் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றியது. இல்லை மகிழ்ச்சி இல்லை அவன் பரமானந்தப் பக்கிரியாக வெளிப்பட்டான். திடீரெனச் சற்று சத்தம் போட்டுச் சிரித்தவன் எழுந்து தன் இருக்கையில் இரண்டு தடவை துள்ளி விட்டுப் பின் அமர்ந்தான். பின் எழுந்து தன் ஆடைகளைக் கழைந்து வி;ட்டு அம்மணமாகத் தன் இரு;கையில் நீட்டி நிமிர்ந்து படுத்துறங்கத் தொடங்கினான். அவனது முகத்தில் புத்தன் இன்னமும் தெரிந்தான். அவனது குடியிருப்பின் கதவு சாத்தப்படாதே கிடந்தது.

வேலைத்தளம்

மதியத்தின் முன்னர் ஒரு வேலை முடித்தாகவேண்டும் என அவனது மேலாளர் கூறிச் செல்கிறார். புத்தனின் முகம் இ;ன்னமும் அவனில் ஒட்டியிருக்கிறது. வேலை செய்கிறானா விளையாடுகிறானா எனக் கூற முடியாதபடி பயல் முறவலித்துக் கொண்டு எதையோ தட்டிக்கொண்டிருக்கிறான். நேரம் விரைகிறது. மேலாளர் மீண்டும் வருகிறார். முடிக்கவேண்டியது முடிந்ததா என்கிறார். இல்லை என்று விட்டு சிரித்தபடி எழுந்து உணவருந்தச்; செல்லுகின்றான்.

உணவுச் சாலை

மக்கள் மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழ்வு நிரம்பி வழிய மிதந்து திரிவதாக அவனிற்குப் பட்டது. தன் உணவைப் பெற்றுக் கொண்டு தட்டத்தைக் கையில் பிடித்தபடி உணவு கூடத்தை கண்களால் ஒரு சுற்றுச் சுற்றிவருகிறான். பின் தனியாக உணவருந்திக்கொண்டிருந்த முன்னறிமுகமற்ற ஒரு அழகிய இளையவளின் மேசையில் சென்றமர்ந்துகொள்கிறான். சிலநொடிக்குள் அழகியில் நளினம் தொற்றிக் கொள்கிறது. புத்தன் புருசோத்தமானாகையிலும் அவன் முகத்தில் புத்தன் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறான்.

பத்தாண்டுகளின் பின்னர்

ஏதோ ஒரு விழா மண்டபம். கொடுக்கப்பட்ட விருது மிக அரிதான கனதிமிக்க விருது என்பதும் அவ்விருதிற்கான சாதனை அசாத்தியமானது என்பது ஒலிவாங்கிக்குள் துப்பியவர்களின் பேச்சில் இருந்து ஊகிக்க முடிகிறது. பின் ஆரோ இவனது பெயரைக் கூற, சபையே எழுந்து நிற்க ரக்சீடோத் தலைகளின் மத்தியில் நீலக் காற்சட்டை பனியனில் சென்று விருதினைப் பெற்றுக் கொள்கின்றான். அவனின் பேச்சிற்காக ஒலிவாங்கி அவன் முன் காத்துக் கிடக்கிறது. அவன் வாய்வரும் ஒவ்வொரு வார்த்தையினையும் விளுங்கி விடுவதற்காகக் காதுகள் காத்துக் கிடக்கின்றன. புத்தன் அவன் முகத்தில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றான். ஒலிவாங்கிக்குள் குனிந்து ஒரு வரி பேசிவிட்டு கஞ்சா அடிச்ச ரெட்புள் மண்டபத்தில் இருந்து வெளியேறுகிறது. அவன் பேசிய ஒருவரி:

'பத்து ஆண்டுகளின் முன்னர் நான் தற்கொலை செய்துகொண்டேன்.'

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

If you live each day as if it was your last, someday you'll most certainly be right."

"If today were the last day of my life, would I want to do what I am about to do today?"

  • தொடங்கியவர்

ஆம் கிருபன், நீங்கள் போட்டுள்ள மேற்கோள்கள் போன்றும், மேலும் 'நான் என்றால் இதுதான்' என்று ஒரு விம்பத்தைக் கட்டியெழுப்பி அந்த விம்பத்தைத் தக்கவைப்பதற்காகச் சிறகு விரிக்க முடியாது சிறைப்பட்டு வாழும் தன்மை பற்றியும், வாழ்வில் உயர்வதற்குக் கற்பது மட்டுமன்றி கற்று வைத்திருக்கும் பலவற்றை மறப்பதும் அவசியமாகின்றது என்பன போன்ற பலதும் பத்தும் சார்ந்து ஒரு பரீட்சார்த்தமாக எழுதிப்பார்த்தது தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவைப் பார்த்தபோது அப்பிள் Steve Jobs ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரைதான் நினைவுக்கு வந்தது. அதுதான் அதில் இருந்து இரண்டு மேற்கோள்களை எடுத்து இணைத்திருந்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவின் ஒரு கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது நான் படிக்கிற காலங்களில் படித்தது . அது போல இருந்தது இதுவும். ஆனால் இன்னுமொருவன் நீங்கள் ஆங்கில இலக்கியங்களை அதிகம் படிப்பவர் என நினைக்கிறேன். அதன் தாக்கம் போல இருக்கிறது. அது எம்மவர்களிற்கான இலகு கதைகள் படிப்பவர்களிற்கு புரிவது சிரமம். மாற்ற முயற்சியுங்கள்;

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவின் கதை தலைப்பு ஞாபகத்தில் இல்லை ஆனால் கதை ஒரு பஸ் நிலையத்தில் ஒருத்தன் ஒருத்தி காலிக்கிறார்கள் பெற்றொரை எதிர்த்து கலியாணம் நடக்கிறது விவாகரத்தாகிறது. விபத்தில் மனைவி இறக்கிறாள் கணவன் தற்கொலை செய்கிறான். சில வருடங்களின் பின் அதே பஸ் நிலையம் அதே ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்கிறார்கள காதலிக்கிறார்கள். அவர்களுடைய அடுத்தபிறப்பு இததை முதலில் படித்தபொழுது எனக்கு புரியவில்லை

  • தொடங்கியவர்

கிருபன் மற்றும் சாத்திரி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. சாத்திரி நீங்கள் குறிப்பிட்ட சுஜாதாவின் கதை வாசிக்கவில்லை. அண்மையில், எதேச்சையாக, இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத, ஹேமன் ஹெசி என்பவரது சித்தார்த்தா என்ற குட்டிப்புத்தகத்தைப் படித்தேன். ஒருவேளை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனக்கு கொஞ்சம் புரிகின்றது மாதிரியும் இருக்கின்றது, பின் புரியாமல் போனமாதிரியும் இருக்கின்றது. இறந்த காலம் ஒன்றில் வாழும் நிகழ்கால மனிதன் ஒருவனின் குறிப்புகள் போன்றும், நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு கடந்து போன ஒரு காலத்தில் இறந்து போன ஒருவனின் குறிப்புகள் போன்றும் அமைகின்றன.

  • தொடங்கியவர்

இறந்த காலம் ஒன்றில் வாழும் நிகழ்கால மனிதன் ஒருவனின் குறிப்புகள் போன்றும், நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு கடந்து போன ஒரு காலத்தில் இறந்து போன ஒருவனின் குறிப்புகள் போன்றும் அமைகின்றன.

கருத்திற்கு நன்றி நிழலி.

கடந்து போன காலத்தில் இறந்து போன ஒரு மனிதன் பற்றிய நிகழ்காலக் குறிப்பு என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த குறிப்பு ஒரு ஆவி பற்றியது அல்ல. மாறாக கடந்து போன ஒரு காலத்தில் இறந்து போனதால் இன்று வாழுகின்ற ஒருவன் பற்றியது.

முன்னர் எப்போதோ கேழ்விப்பட்ட ஒரு சம்பவம்: யாரோ ஒருவன் வாழ்வைத் தாங்கமுடியாது இனி சாவு தான் வழி என்று தற்கொலைசெய்ய முடிவெடுத்தானாம். ஆனால் தற்கொலைக்கான தருணத்தில் தன் முடிவை இவ்வாறு மாற்றிக்கொண்டானாம். அதாவது தான் தற்கொலை செய்யப்போவதில்லை, ஆனால் தற்கொலைசெய்துவிட்டேன் என நினைத்து இந்தக் கணம் முதல் வாழப்போகின்றேன் என்பதே அவனது மாற்றப்பட் முடிவாம். இதன் படி வாழ்ந்தவன் ஏததோ சாதித்து வாழ்வை நிறைவாக வாழ்ந்தானாம்.

கிருபன் குறிப்பிட்ட Steve Jobs பேச்சாகட்டும், ஆன்மீகமமாகட்டும, உளவியல் அல்லது தத்துவமாகட்டும் சாவு வாழ்வு என்ற விடயங்கள் ஒரு கவிதை போல சாவு வாழ்வையும் வாழ்வு சாவையும் வெளிப்படுத்துவதைக் குறித்து வைத்துள்ளன. வாழ்வைப் பற்றிச் சாவின் விளிம்பில் நினைப்பவர்களே அதிகம். பல மனிதர்களின் வாழ்வு ஒரு அப்ஸ்ற்றாக்ற் (இதற்கு என்ன தழிழ் சொல் என்று யாருக்காவது தெரிந்தால் அறியத்தாருங்கள்) தோரணையில் நகர்கிறது. முடிந்த முடிபாக விடயங்கள் கருதப்பட்டு உள்ள வாழ்வின் எதிர்பார்ப்புக்களைத் திருப்த்திப் படுத்தும் நோக்கில் மட்டும் பிரச்சினைகள் அணுகப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால், சமயத்தில், பிரச்சினை தீர்க்கப்படும் போதும் கூட பிரச்சினை தீர்ந்ததான மகிழ்ச்சியை மனிதர் அனுபவிக்க முடியாதவர்களாக உழல்கிறார்கள். காரணம் அவர்கள் தீர்த்த பிரச்சினை பிரச்சினையாக அவர்களிற்குள் தானாகத் தோன்றவில்லை . தற்கொலை என்பது மேற்படி கற்பிதங்களின் இறப்பாகவே முன்வைக்கப்படுகின்றது.

தான் என்பதே யாரோ கட்டியமைத்ததாக இருக்கும் ஒருவன், 'நான் என்றால் இது தான்' என்று அவன் முன் தெரிகின்ற கட்டுமானத்தை கொலை (தற்கொலை)செய்து கொள்கையில் ஒரு புதுப்பிறப்புச் சாத்தியப்படுகிறது. தான் என்பது அப்ஸ்ற்றாக்ற் நிலையில் இருந்து மாறி, ஒவ்வொரு விபரமாக தனக்கு என்ன உண்மையில் பிடிக்கும் என்று தானாகத் துளாவி தன்னை மீளக் கட்டியெழுப்புவது அம்மீள்பிறப்பில் சாத்தியப்படுகிறது. தான் என்பது உண்மையிலேயே தானா இருக்கையில் வாழ்வும் தன்னுடையதாகத் தனக்குப்பொருத்தமானதாக மகிழ்வானதாக உருவாகும் சாத்தியம் அதிகம். ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டென்ற வகையில், தமக்குப் பிடித்த முனைகளில் தமது திறமைகள் சார்ந்து முனைபவர்கள் சாதிப்பது ஒன்றும் அதிசயமல்ல என்றே தோன்றுகின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து கருத்து எழுத இலக்கிய முதிர்ச்சி இல்லை எனக்கு...இருந்தும் விளங்கியதை வைத்து எழுதுகிறேன்..

புத்தனால்(ஒறிஜினல்) மட்டுமே புத்தனாக வாழமுடிந்தது.மற்றவர்களால் முடியாது அப்படி வாழ்ந்தாலும் நூறுவீதம் புத்தனின் முகத்துடன்(புத்தன் கண்டிருக்கக்கக் கூடிய ஒளிப்பிரவாகம் தோன்றி முளுங்கிக் கடந்து போனது.

, அவனது முகத்தில் புத்தன் இன்னமும் தெரிந்தான்,புத்தன் புருசோத்தமானாகையிலும் அவன் முகத்தில் புத்தன் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறான் ) வாழமுடியாது.அப்படியிருந்தும் உங்கள் கதாபாத்திரம் புத்தனை கீரோவாக்குவது போல எனக்கு விளங்குகிறது... நான் என்ற விம்பத்தை விட்டுவிடுவதற்கு புத்தன் என்ற கீரோ வின் வாழ்வு சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது

  • தொடங்கியவர்

... உங்கள் கதாபாத்திரம் புத்தனை கீரோவாக்குவது போல எனக்கு விளங்குகிறது... நான் என்ற விம்பத்தை விட்டுவிடுவதற்கு புத்தன் என்ற கீரோ வின் வாழ்வு சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது

உங்கள் கருத்துக்கு நன்றி புத்தன். குறிப்பாக 'புத்தன் என்ற ஹீரோவின் முகத்திற்கு ஆசைப்பட்டு என்னுடையதாய் இருக்கிற 'நான்' என்ற விம்பத்தை விட்டுவிடுவதா' என்ற கேள்விக்கு மிக்க நன்றி.

துறவறம் இல்லறம் என்ற இரண்டும் பொதுவாக எதிர்ச்சொற்களாகவே விளங்கி வருகின்றன. இல்லறத்தைத் துறந்தால் தான் துறவறம் சாத்தியம், துறவறம் துறந்தால் தான் இல்லறம் சாத்தியம் என இருக்கிறது. இல்லறத்தைத் துறத்தல் என்றால் என்ன என்று பார்த்தால், மனைவி பிள்ளைகளையும் வீடு வாசலையும் வேலையையுமு; உழைப்பையும் உயர்வையும் போட்டிகளையும் சம்பிரதாயங்களையும் வழமைகளயும் மற்றும் இதுபோன்ற வாழ்வின் அம்சங்ககளாக எமக்குத் தெரிகின்ற இன்னும் பலவற்றையும் விட்டுவிலகுதல் என்பதாகவே வெளிப்படைக்குத் தெரிகிறது. அதுபோல துறவறத்தைத் துறத்தல் என்று பார்த்தால் மேற்சொன்ன இல்லறத்தின் கூறுகளை ஏற்றுக்கொள்ளல் என்ற வாறு அமைகிறது.

ஆனால், ஏன் ஒருவன் இல்லறத்தைத் துறந்து துறவறத்தைத் தேர்கிறான் என்ற கேள்வியினைக் கேட்டால், ஆன்மீக ரீதியான சில விளக்கங்களையும், இறப்பின் பி;ன்னான எதிர்பார்ப்புக்கள் சார்ந்து சில விளக்கங்ககளையும், உடலையும் மனத்தையும் வெல்லல் என்ற அடிப்படையில் சில விளக்கங்களையும் பொதுவாகக் கேட்க்கூடியதாக இருக்கின்றது. இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் இல்லறத்தில் கிடைக்க முடியாத ஒரு உயர்வு நோக்கிய தேடலிற்காகவே துறவறம் தேர்வுசெய்யப்படுகிறது என்பதாகப் படுகின்றது. ஆனால், அந்தப் பதிலைக் கேட்டமாத்திரத்தில் இன்னுமொரு கேள்வியும் எங்களில் பலரிற்குக் கேட்கத் தோன்றும். அதாவது, துறவறத்தில் சாத்தியப்படுகின்ற அந்த ஏதோ ஒரு உயர்வு நோக்கிய முனைதல் ஏன் இல்லறத்தில் சாததியப்படாது என்பது. இதற்குச் சுற்றி வளைத்துப் பல பிரசங்கங்கள் பதில் போல வந்து விளக்கூடும் என்ற போதும், அடிப்படையில் இல்லறம் என்பதன் கட்டுப்பாடுகள் சார்ந்தே மேற்படி பதில் அமைய முடியும். அதுவும் இல்லறத்தின் எதிர்பார்ப்புக்கள், ஒழுங்குகள், வழமைகள் முதலியன எனப் பெரும்பான்மையில் ஒருவனின் வாழ்வு அவனிற்காகப் பிறரால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற அடிப்டையிலேயே மேற்படி பதில்கள் அமைய முடியும். சுயமாகத் தேடமுடியாதபடி வாழ்வு நிர்ணயித்தாகிவிட்டது என்ற கோணத்தில் மேற்படி பதில்கள் பார்க்கப்படக்கூடியன

ஆனால், அந்த மகிழ்ச்சிக் குளிசைக்கான தேடலாகச் சித்தரிக்கப்படும் துறவறம் மிகச் சிரமமானதாகவும், அனைவரிற்கும் ஏற்புடையது அல்ல என்பதாகவும் சித்தரிக்கப்படுகின்றது. மேலும், இல்லறத்தின் வழமைகள் கட்டுப்பாடுகள் என்பனவற்றிற்கு மாற்றாக எழுகின்ற துறவறத்தை மேற்கொள்ளுவது எப்படி என்று புத்தகம் அடிக்காத குறையாகத் துறவறம் என்பதும் பலரது மனங்களில் பிறரால் நிர்ணயிக்கப்பட்டு நிற்கின்றது. மகிழ்ச்சியாய் வாழ்வது தான் தேடல் என்றால், அத்தேடலிற்கான வழி வாழ்வை ஸ்தம்பித்துச் சிரமப்பட்டுத் தேடுவது என்பது அத்தனை ஏற்புடையதாகப் படவில்லை. மேலும் துறவறம் கைவரக்கூடிய சிலரிற்குத் தான் அந்த மகிழ்ச்சி சாத்தியப்படும் என்பதும் ஏற்புடையதாகப் படவில்லை. அந்தவகையில் தான், இல்லறத்தில் அப்பிடி என்ன பிரச்சினைகள் தேடமுடியாத படிக்கு கிடக்கின்றன என்ற கேள்வியும் இல்லறத்தில் மகிழ்வாய் வாழ்வதற்குத் தடைகள் எவை என்ற சிந்தனையும் பிறக்கிறது. ஒவ்வொருவனும் தான் தானாக வாழ்வதற்கும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல உருளாது தான் என்னத்தை எதனால் செய்ய விழைகிறேன் என்ற விழிப்புணர்வுடன் செய்வதற்கும் ஆன தேடல் பிறக்கிறது. அங்கு தான் 'நான்' என்ற விம்பத்தின் மீள பரிசீலனை அவசியப்படுகிறது.

இனி நீங்கள் கேட்ட புத்தனின் முகத்தைக் ஹீரோ ஆக்குவது என்ற விடயத்திற்கு வரலாம். இன்று சந்தையில் முகம் துடைக்கும் ரிஷP பேப்பரினைக் கிளீனெக்ஸ் என்று கேட்டுவாங்கக் கூடியபடியும், குழந்தைகளிற்கு அணியும் டயப்பேர்ஸ்சை பம்பேர்ஸ் என்று கேட்டு வாங்கும் அளவிற்கும் கிளீனெக்ஸ் மற்றும் பம்பேர்ஸ் என்ற பெயர்கள் என்னத்தைக் குறிக்கின்றன என்பது எல்லோரிற்கும் தெரிந்ததாக இலகுவாகக் குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றது. அதற்காக ரிசியூ என்றால் கிளீனெக்ஸ் தான் டயப்பர் என்றால் பம்பேர்ஸ் தான் என்று ஆகிவிடாது. அதுபோல புத்தனின் முகம் என்பது இலகுவாகக் குறிப்பிடக்கூடிய அனைவரிற்கும் எடுத்த எடுப்பில் என்னவிதமான முகம் சித்தரிக்கப்படுகின்றது என்பது விளங்கும் விடயமாக இருக்கின்றது. அதற்காக அந்தச் சாந்தம் புத்தனிற்கு மட்டும் தான் சொந்தமானது என்றாகி விடாது. என்னைக் கேட்டால் அது புத்தனிற்குச் சொந்தமான முகமே அல்ல, மாறாக ஒரு மனநிலையைக் குறிப்பிடும் குறியீடு. இந்தக் கதையின் கதாநாயகனும் குறிப்பிட்ட மனவமைப்பை அடைந்தமையால் அவனது முகமும் மேற்படி மனநிலைக்கான முகத்தைக் காட்டியது. அவ்வளவு தான்.

பிளாற்பாரத்தின் மஞ்சள் கோட்டினைத் தன் சப்பாத்து முட்டும்படி நின்று கொண்டு பாயத் தயாராக நின்றிருந்தான். தொலைவில் ரெயில் வருவதற்கான அறிகுறி தெரிந்தது. இப்போது ரெயிலின் தலையில் இருந்த விளக்குத் தெரிய ஆரம்பித்தது. ரெயில் வேகமாகத் தான் வருகிறது. ரெயில் மீது திடீரென ஒரு காதல்; பிறப்பதாய் உணந்தான். எத்தனை பெண்களின் சகவாசம் இருப்பினும் புதியவள் ஒருத்தியுடன் முதற்தடவை புணர்வதற்குத் தயாராகி அவளது சட்டையின் முதல் பொத்தானை அவிழ்க்கையில் அவளில் ஏற்படும் காமம் சிரசிற்கடித்த உணர்வினை இப்போது ரெயிலின் மீது அவன் உணர்ந்தான். ரெயிலை அம்மணமாக்கிப் புணர்ந்து விடப் பொறுமையற்றவன் போல் அண்மிக்கும் ரெயில் விளக்கை வெறிகொண்டு பார்;த்துக் கொண்டிருந்தான். இவனது பார்வை ரெயியிலின் வேகத்தை அதிகரித்ததைப் போல இப்போது ரெயில் முன்னரை விடத் துரிதமாக இவனை நோக்கி வந்துகொண்டிருப்பதாகப்பட்டது. அடுத்த சில நொடிகளில் ரெயிலின் சத்தம் கூட மௌனித்து தலைவிளக்கின் ஒளி மட்டும் எங்கும் வியாபித்துப் போதி மரத்தின் கீழ் புத்தன் கண்டிருக்கக்கக் கூடிய ஒளிப்பிரவாகம் தோன்றி முளுங்கிக் கடந்து போனது.

இந்தக்கதையை முதலில் படித்தபோது இது குறித்து நான் யோசித்தது மரணம் ஜனனத்துடன் இணைவது போன்றதொரு கோணத்தில். வந்தவழியே மீழவும் மரணம் ஊடாக திரும்பி பயணிக்கும் ஒரு உளவியல் சார்ந்த நிகழ்வாக நபர் மரணித்து விட்டதாகவும் பின்னர் மேலும் வாழ்வு மரணத்தின் பின் தொடர்வதாகவும்.

கடந்து போன காலத்தில் இறந்து போன ஒரு மனிதன் பற்றிய நிகழ்காலக் குறிப்பு என்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த குறிப்பு ஒரு ஆவி பற்றியது அல்ல. மாறாக கடந்து போன ஒரு காலத்தில் இறந்து போனதால் இன்று வாழுகின்ற ஒருவன் பற்றியது.

முன்னர் எப்போதோ கேழ்விப்பட்ட ஒரு சம்பவம்: யாரோ ஒருவன் வாழ்வைத் தாங்கமுடியாது இனி சாவு தான் வழி என்று தற்கொலைசெய்ய முடிவெடுத்தானாம். ஆனால் தற்கொலைக்கான தருணத்தில் தன் முடிவை இவ்வாறு மாற்றிக்கொண்டானாம். அதாவது தான் தற்கொலை செய்யப்போவதில்லை, ஆனால் தற்கொலைசெய்துவிட்டேன் என நினைத்து இந்தக் கணம் முதல் வாழப்போகின்றேன் என்பதே அவனது மாற்றப்பட் முடிவாம். இதன் படி வாழ்ந்தவன் ஏததோ சாதித்து வாழ்வை நிறைவாக வாழ்ந்தானாம்.

உங்கள் விளக்கத்தின் பின்னரான புரிதல் சுவார்சியமானது. மேலும் மரணத்தின் வாசல் கதவு வரை சென்று அதீத துன்பங்களில் இருந்து விடுபட்டு தொடர்ந்து வாழ்வதற்கான சக்தியை பெற்று வருதல் போன்றதொரு புரிதல் எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களுடன் சம்மந்தப்படுத்தியது.

ஒரு தாவரத்தை குறுக்காக வெட்டி வேறொரு தாவரத்தை ஒட்டுதலும் பின்னர் அது வளர்தலும். இரண்டும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுகன்

மேலும் மரணத்தின் வாசல் கதவு வரை சென்று அதீத துன்பங்களில் இருந்து விடுபட்டு தொடர்ந்து வாழ்வதற்கான சக்தியை பெற்று வருதல் போன்றதொரு புரிதல் எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களுடன் சம்மந்தப்படுத்தியது.

உங்கள் எழுத்துக்கள் எப்போதும் நிதானத்தோடும் பக்குவத்தோடும் விழிப்புணர்வோடும் வருவதை யாழ்களத்தில் அனைவரும் அறிவர். இ;ன்று உங்களது மேற்படி பின்னூட்டத்தைப் பார்த்தபோது உங்கள் புரிதலை அறிந்துவிடும் ஆர்வம் பிறக்கிறது. எப்போதாவது உங்கள் அனுபவங்களைப் புனைபெயரிலாவது எங்காவது எழுத முடிவெடுத்தால் அறியத் தாருங்கள்.

ஒரு தாவரத்தை குறுக்காக வெட்டி வேறொரு தாவரத்தை ஒட்டுதலும் பின்னர் அது வளர்தலும். இரண்டும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

கவித்துவமான உண்மை

என்ன கண்ணராவித் தலைப்பு

ஒரு தாவரத்தை குறுக்காக வெட்டி வேறொரு தாவரத்தை ஒட்டுதலும் பின்னர் அது வளர்தலும். இரண்டும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் சில முரண்பாடுகள் இருப்பினும் இன்னுமொருவனின் கதையின் வடிந்தெடுக்கப்பட்ட சாராம்சம் இதுதான் என்று............................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.