Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் காலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இப்போது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர்

முல்லைத்தீவில் அரச அதிபராகத் தான் இருந்த காலப் பகுதியில் அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தன்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்கள், கிராம அலுவலர்கள், பெண்கள் விடுதி எனப் பல இடங்களிலிருந்து யாழ். மாவட்டச் செயலருக்கு முறப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தூண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பெண்கள் ஒரு பாலியல் பொம்மைகள் போன்று பார்க்கப்படுவது மிகவும் கொடூரமான செயல். அவ்வாறு பெண்களைப் பார்ப்பவர்கள் கொடூரமமானவர்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் முதற்கொண்டு சாதாரண அலுவலர்கள் வரை பெண்களுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையில் -

"நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து கூறிவருகிறீர்கள். ஆனால் அவ்வாறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே? " என்று எமதுசெய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரச மருத்துவமனை, பிரபல பெண்கள் விடுதி, கிராம அலுவலர் என பல நிறுவனங்களிலிருந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

http://184.107.230.1...130599212619861

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் இப்போது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர்

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்கள், கிராம அலுவலர்கள், பெண்கள் விடுதி எனப் பல இடங்களிலிருந்து யாழ். மாவட்டச் செயலருக்கு முறப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

பலாலி ஆசிரியர் கலாசாலை குறித்த யாழ் அரச அதிபரின் கருத்து வேதனையளிக்கிறது - பீடாபதி

பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார்.

பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே பீடாதிபதி எம். இக்னேஷியஸ் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க அதிபர் தான் ஒரு அரச அதிபர் என்ற சிந்தனை அற்ற தன்மையில் பொறுப்புணர்ச்சி வகையில் இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டினை தெரிவித்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொருவருக்கு எந்தளவிற்கு கேவலப்படுத்த முடியுமோ? எந்தளவிற்கு மரணதண்டனைக்கு நிகரான அவமானத்தினை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு அரச அதிபர் நடந்து கொண்டிருக்கின்றார். யாரோ தனக்கு பிடித்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

அவரால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா?, பொய்யா? என்பது குறித்து எங்களிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் பின்னரே அது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயம் கல்வியுடன் தொடர்புபட்டிருப்பதால் இந்த விடயத்தினை இரகசியமாகக் கையாண்டிருக்க வேண்டும். அறிவற்ற ரீதியில் யாழ். அரச அதிபர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது, கவலைக்குரியது கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பில் அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அரச அதிபரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்களாகும். எமது கல்விச்சாலையில் இருக்கக் கூடிய அனைவரும் நல்லவர்கள். எமது கலாசாலையினை நாங்கள் ஒரு ஆலயமாகவே பார்க்கின்றோம். உலகிலேயே ஆசிரியர்கள் கடவுளர்களுக்கு சமமானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். அரச அதிபரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையால் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது கலாசாலையில் கல்வி பயில்கின்ற ஆசிரிய மாணவிகள் கண்ணீர்விட்டு அழுகின்றனர். குடும்பமான பெண் ஆசிரியர்கள் தமக்கு இதனால் குடும்பங்களில் நெருக்கடி நிலை ஏற்படுவதாகவும், திருமணமாகாத பெண் ஆசிரிய மாணவிகள் எதிர்காலத்தில் தமது திருமண வாழ்வு பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்படும் என்றும் எந்த முகத்துடன் பாடசாலைகளுக்குச் செல்வது? என்றெல்லாம் கேள்வி கேட்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அரச அதிபர் பதில் சொல்லும்வரையில் தாம் போராடவுள்ளோம் என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/29287-2011-10-11-11-53-47.html

இமெல்டா ஹத்துருசிங்கே யாரை ஏமாற்ற இந்தக் கூத்து ஆடுகிறார்?

யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் இப்போது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை

இது 100% அல்ல 1000% உண்மையான செய்தி இதை உண்மையில் தாங்கள் கூறியிரிந்தால் வாழ்த்துக்கள் மாண்புமிகு இமெல்டா..................

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ நல்லவவா?

அப்ப இவ நல்லவவா?

வணக்கம் ரதிஅக்கா............ ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதற்கப்பால் புலம்பெயர் நாட்டிலன்றிதாயகத்திலிருந்துகொண்டு ஓர் மாபெரும் உண்மையைக்கூறியிருக்கிறார் என்றால் இவர் யார் என்பதை அடுத்து வரும் காலங்களில் நாம் இனம் காண முடியும் என்பதே எனது நம்பிக்கை. ..........இதே நபரை சில மாதங்களிற்கு முன் நானும் கேவலமாய் விமர்சனம் செய்தேன் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/LKLS8OZ1ogU

புலிகளின் காலத்திலும் , ஏறக்குறைய இதே அளவு பாலியல் , வன்முறைகள் நடந்தே இருந்தன,,, !

ஆனா அதை செய்தவங்க, விரும்பி செய்திருந்தா சேர்த்து வைக்கபட்டாங்க..!

விரும்பாமலே எகிறி குதிச்சு இருந்தா,,,தண்டனைக்கு உட்படுத்தபட்டாங்க!

உங்க ஆட்சில ,, இந்த இரண்டுமே எங்கயுமே இருக்கலியே ..மாமி!!

யாழ்ப்பாண நிறுவனங்களீல , பொண்ணுகள , பாலியல் பொம்மையா பாக்குறாங்கன்னு ,

ரொம்பகேவலமா எல்லாம் பேசாதீங்க மாமி!

குடும்ப பொருளாதார கஸ்டம் கருதி , வேலைக்குபோகும் , அந்த பாவபட்டவங்கள , ஒரு சில இடங்களில நடக்குறத அசம்பாவிதங்கள வைச்சி ,,உங்க வரிசைல சேர்க்காதீங்க!

நீங்க மட்டும் என்ன ஒழுங்காவா இருக்கீங்க? தமிழர் பண்புன்னா , கைகூப்பிதானே பழக்கம்,,,

Imelda_Sukumar_Mahinda_Hathurusinghe_CI.jpg

நீங்க ஆமி கையுக்குள்ளையே கை விடுறீங்களே!!

சுத்தம்!!

  • தொடங்கியவர்

புலிகளின் காலத்திலும் , ஏறக்குறைய இதே அளவு பாலியல் , வன்முறைகள் நடந்தே இருந்தன,,, !

இதற்கு எந்தபுள்ளிவிபரமானஆதாரமும் இருப்பதாக எண்ணவில்லை. ஒரு ஊகம் என்றே எண்ணுகிறேன்.

அங்கே அன்று போர்ச்சூழல் இருந்தது. இன்று இராணுவ அடக்குமுறையும் திட்டமிட்ட மனச்சிதைவுகளையும் சிங்களம் விதைத்துவருகின்றது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.