Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகதமிழர் பேரவைத்தலைவர் சென்னையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டமைக்கு கண்டனம்

Featured Replies

ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.

.

இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும்

இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சுற்றுலா பயணிகளைப் போல உல்லாசமாக சுற்றி திரிய அனுமதிக்கும் அரசு தமிழர் உரிமை குரல்வளையை நெரிப்பது எந்த வகையில் நியாயம்?

.

இமானுவெல் அடிகளார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழர்களம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அவரை திரும்ப

அழைக்காவிட்டால் தமிழர்களம் போராட்டத்தில் குதிக்கும் என எச்சரிக்கின்றேன் ! என்று தமிழர்களத்தின் பொதுசெயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்

தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இலண்டனில் வைத்து சோனியாவை சந்தித்தும் இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு இவ்வாறு செய்தமை உலகத்தமிழர் பேரவை ' விதித்த சில வரம்புகளை மீறி விட்டதா?' என கேட்கத்தோன்றுகிறது.

எதுவாக இருந்தாலும் உலகத்தமிழர் பேரவை சில முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கும் என்ற நமபிக்கையும் தொடர்ந்தும் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆச்சரியம் ....

.... உலகத்தமிழர் அமைப்பின் தலைவர் இமானுவல் அடிகளார் ... சில மாதங்களுக்கு முன் அவர் சார்ந்த அமைப்பு லண்டனின் சோனியா காந்தியை சந்தித்தும் .. இத்தனைக்கும் இவரோ, இவர் சார்ந்த அமைப்பில் உள்ளோர் விடுதலைப்புலிகளின் ஆயுத பயிற்சி பெற்றவர்களுமல்ல, அவர்களின் ஓர் அமைப்பல்ல ... அப்படியிருந்தும் இந்தியாவினுள் அனுமதிக்கப்படவில்லை!!!

.... ஆனால்

.... லண்டனில் எக்ஸெல் மண்டபத்தில் மாவீரர் நாள் செய்வதற்கு மண்டபத்தை இவ்வளவு காலமும் பதிவு செய்தவரும் / இம்முறையும் மண்டபத்தை முன்பதிவு செய்து விட்டு, விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல தலைமையுடன் இறுதிவரை இருந்து விட்டு வந்துள்ள மர்ம மனிதர்களிடம் ஒப்படைத்தவரும் / அவர்களோடு தன்னை இணைந்து புதுயுகம் படைக்க வெளிப்பட்டவருமான .. புதிய பி.ரி.எவ்வின் தலைவரோ ... அவர் மட்டும் அடிக்கடி இந்தியா போய் வருகிறாராம்???????????? ... சிலவேளை புதிய பலத்து விடுதலைப்புலிகளை இந்தியா அங்கீகரித்து விட்டதோ???? .. :icon_mrgreen:

அண்மையில் நா.க.த.அவின் பெருமதிப்பிற்குரிய ஓர் அமைச்சார் வாழ் கூட இந்தியா போய் பல சந்திப்புகளை நடத்தி வந்து .. படங்களும் போட்டு ... விலாசம் அடித்தார்கள்!!!

... உலக தமிழர் அமைப்பு, லண்டனில் சோனியாவை சந்தித்தவுடன் ... அவர்களை இந்தியத் துரோகிகள்!!! இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள்!!! ... என்றெல்லாம் வானொலி/இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் உந்த பி.ரி.எப்போ, நா.க.த.அவோ கூக்குரலிட்டும் தள்ளினார்கள்!!!!!!!!!! ^_^

Edited by Nellaiyan

முடிந்தால், தீர விசாரித்து உதவுங்கள் பேரவைக்கு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90890

. இமானுவேல் அடிகளாரின் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக, தமிழக ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து விட்டனவா???

இமானுவேல் அடிகளார் இன்று c.t.r இற்கு இன்டர்வியு கொடுத்தார் .மேலிடத்து உத்தரவு என்று ஒரு மணித்தியாலதிலேயே திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.காரணம் சொல்லவில்லையாம்.

Dr.Ellyn Shanders என்ற பெண்மணி புலி இயகத்துடன் ஒத்து போகாதவ. ஆழி பேரலையில் தமிழர் பகுதிகளில் கடமையாற்றியவ. இவ தமிழர் போராட்டங்களில் பங்குபற்றுபவ. இந்தியாவில் சில தமிழருக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கு பற்ற போவதற்கு இந்தியா பயண அனுமதி மறுத்து விட்டது. காங்கிரசின் சர்வாதிகாரம் ஒழியாவிட்டால், நாம் தமிழக உறவுகளிடமிருந்து பிரிக்க படுவதை கட்டுப்படுத்த முடியாது.

Edited by மல்லையூரான்

இம்மானுவல் அடிகளாரை திருப்பி அனுப்பியது அக்கிரமம்: நாம் தமிழர் கட்சி கண்டனம்

துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர், விமானத்தில் இருந்து இறங்க விடாமல், அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

இப்பிரச்சனை தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான அக்கிரமச் செயலாகும். 77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

img1111013043_1_2.jpg

இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை (Multiple Entry Visa) இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது இந்தியக் குடியேற்றத் துறை. எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, எவ்வித காரணமும் கூறாமல், விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமால், மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதோ, அதேபோல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ் மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்குடன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியக் குடியேற்றத் துறை தொடர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கிவிட்டார் என்றும், அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக் கூடிய விசா வழங்கியது ஏன்? எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும்.

ஈழத் தமிழர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக நாடுகள் தூற்றுகின்றன. நமது நாட்டு மீனவர்கள் 540 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர், இன்றளவும் நடுக்கடலி்ல் வைத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இந்திய மத்திய அரசோ, ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்து, சிகப்புக் கம்பளம் விரித்து, அரசு விருந்தினராக வைத்துக் கொண்டாடி புளங்காகிதம் அடைகிறது. அதே நேரத்தில், கடும் துயரத்தில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழினத்திற்கு பெருமனது கொண்டு தொண்டு செய்துவரும் மதிப்புமிக்கப் பெருமகனார் இம்மானுவல் அடிகளார் போன்றவர்களை அவமதித்து திருப்பி அனுப்பி வைக்கிறது. தன்னை ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவிற்கு சற்றும் பொருந்ததாத, நாகரீகமற்ற நடவடிக்கைகளாகும் இது.

ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை, தமிழினத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்ததுபோல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது”.

http://tamil.webduni...111013043_1.htm

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் இந்தியாவை நம்புவோர்களே இதற்க்கு உங்களின் பதில் என்ன ?

என்னைபொறுத்தவரையில் இந்தியா தமிழர்களுக்கு எந்த நலனும் செய்யாது இந்தியாவை நம்புவது சுத்த முட்டாள்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் இந்தியாவை நம்புவோர்களே இதற்க்கு உங்களின் பதில் என்ன ?

என்னைபொறுத்தவரையில் இந்தியா தமிழர்களுக்கு எந்த நலனும் செய்யாது இந்தியாவை நம்புவது சுத்த முட்டாள்தனம்.

பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது கிந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்

யாராவது கிந்திய விசுவாசிகள் கோர்ட்டுல கேசு போட்டுவிட்டு விட போகிறார்கள் தோழரே உசாரு

laughing-smiley.giflaughing-smiley.gif

என்னும் இந்தியாவை நம்புவோர்களே இதற்க்கு உங்களின் பதில் என்ன ?

என்னைபொறுத்தவரையில் இந்தியா தமிழர்களுக்கு எந்த நலனும் செய்யாது இந்தியாவை நம்புவது சுத்த முட்டாள்தனம்.

உங்களில் கோபப்படபோறார்கள் கவனம் பதிலளிக்க தயாரா அண்ணா, சில சமயம் உண்மை கசக்கும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.