Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாதானாம் உலகின் நம்பர் -01 சக்தியுள்ள நாடு ஆதாரங்களை முன்வைக்கிறார் விக்டர் ஐவன்...

Featured Replies

பிரச்சினைகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் இருந்து வருகின்ற போதும் உலகப் பிரச்சினைகள் குறித்த எந்தவிதமான கருத்துப் பரிமாறல்களும் இல்லையென்றே கூற வேண்டும்.

அமெரிக்க வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரி செய்வதற்காக இன்னமும் அமெரிக்காவுக்கு சாத்தியப்படவில்லை. அமெரிக்கா உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடொன்றாக இருப்பதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய நாடுகளும் இதனால் பாதிப்புற்றன.

இப்போது ஐரோப்பாவும் பொருளாதார சரிவிற்குட்பட்ட ஒரு வலயமாகக் கருதப்படுகின்றது. இந்நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நலன்புரிச் சேவைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந் நிலை, ஏற்கனவே துன்பப்பட்டிருந்த மக்களை வீதியில் இறங்கச் செய்துள்ளது.

அரபுலகில் ஏற்பட்ட பிரச்சினையை அமெரிக்கா ரொம்ப ரசனையுடனேயே பார்த்து. எனினும் அதன் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார மத்தியஸ்தானமாகக் கருதப்படும் மதில் வீதியை (Wall Street) கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட மக்கள் எழுச்சியினால் ஏற்பட்ட இயக்கம் இன்றைக்கு நாடு பூராகவும் வியாபித்து ஐரோப்பாவையும் ஆக்கிரமித்து பெரும் வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது.

மதில் வீதியைக் கைப்பற்றுவதற்கு இயக்கத்தில் கலந்து கொண்ட மக்கள், அமெரிக்கா நிதி நிறுவனங்களின் பேராசைக்கும் அவர்களின் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனினும் இது முதலாளித்துவத்திற்கு எதிரான சோஷலிஸ கட்டுமானத்திற்கான ஒரு பொது மக்களின் இயக்கம் எனவும் கருத முடியாது.

அரபு நாடுகளிலே எழுந்துள்ள மக்கள் இயக்கத்தைப் போலவே இவ் வியக்கத்திற்கும் இதனை நடத்திச் செல்லும் தலைமைகள் இல்லாதிருந்ததுடன் எதிர்ப்புக் காட்டுவதற்கப்பால் ஏதேனும் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை.

அவர்களின் செயற்பாடுகள் சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாமென்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை மேலும் அதிகரிக்கவும் கூடும். வளர்சியடைந்த நாடுகளில் ஏழை, பணக்காரர் ஏற்றத் தாழ்வு உக்கிரமாயிருப்பது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமேயாகும். சர்வதேச நாணய சபையின் கணிப்பின் படி இங்கிலாந்தின் முழு வருவாயில் 30 வீதம் மக்கள் தொகையின் மிகச் செல்வந்தர்களான ஐந்து வீதமானவர்களிடையேயாகும். அதேநேரம் அமெரிக்காவின் மிகச் செல்வந்தர்களான ஐந்து வீதமானோரிடையே 33 வீதம் பகிரப்படுகின்றது.

இலங்கையின் மிகச் செல்வந்தர்களான ஜனத்தொகையில் 10 வீதமானோர் முழு வருவாயில் 50 வீதத்திற்குக் கிட்டியதைப் பெறுகின்றார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் வருவாய் நியாயமாகப் பகிரப்படுகின்ற நாடுகளாக முறையே டென்மார்க், நோர்வே, பின்லாந்து, கனடா, சுவீடன், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளாகும்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப 2020 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவின் முதன்மை ஸ்தான இழக்கப்பட்டு அவ்விடத்தை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்ற பொதுவான கருத்தொன்று நிலவி வந்தது. எனினும் இப்போது உலகப் பொருளாதார நிலைமைகளின் காரணமாக இந்த கருத்தும் பலவீனமடைந்துள்ளது.

சீனா பிரதானமாக அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலேயே முதலீடுகளைச் செய்துள்ளது. மறுபுறத்தில் சீனாவின் உற்பத்திகளும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இலக்குகளை நோக்காகக் கொண்டே நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ள சரிவுகள் சீனாவின் பாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துமென்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

சுனாமி மற்றும் கதிர்வீச்சினால் ஜப்பானில் ஏற்பட்ட குழப்ப நிலை ஜப்பானிய பொருளாதாரத்தைப் பாதித்தது. அதனால் தேசிய வருவாயின் பெறுமதியின்படி அந்நாடு பெற்றிருந்த இடத்தை இந்தியா கைப்பற்றிக் கொண்டது. இந்தியாவும் மிகச்சக்தி மிகு நாடாக விரைவாக வளர்ந்து வருகின்றது. சீனா தனது கைத் தொழில்நுட்பத்தில் பொருட்களின் அதிகளவானவைகளை உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் அதே நேரம் இந்தியா உள் நாட்டுச் சந்தைக்காகவே உற்பத்தி செய்கின்றது. இந்த விசேட தன்மையினால் உலக பொருளாதார பிரச்சினைகளில் இந்தியாவுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மக்கள் தொகையில் ஏற்படவுள்ள வேறுபாடுகளின் அடிப்படையிலும் சீனாவுக்கு இல்லாத விசேட வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதென தெரியவருகின்றது. 2025இல் இந்தியா சீனாவை விஞ்சி உலகத்திலேயே அதிகளவான ஜனத் தொகையுடைய நாடாக மாறும். அடுத்த முக்கிய விடயம் எதிர்வரும் இரு தசாப்தங்கள் முடிவில் சீனா வயோதிபர்கள் நிறைந்த நாடாக ஆகுகையில் இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடாக ஆகும்.

இந்தியாவிற்குள்ள அடுத்த சாதகமான விஷயம், எத்தகைய பிரச்சினைக்கும் முகம் கொடுக்கத்தக்க நல்ல, இணக்கடைய உறுதியான ஜனநாயக ஆட்சி முறையொன்று இந்தியாவில் நிலை பெற்றிருப்பதே. சீனாவில் சர்வாதிகார ஆட்சி முறையே நிலவுகின்றது. சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி பரந்த ஒரு மத்திய தரவர்க்கத்தினரை உருவாக்கியுள்ளது.

அவர்கள் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளாதிருப்பதற்கும் அதற்கெதிராக கிளந்தெழுவதற்குமான வாய்ப்பு உள்ளது. அவ்வாறொரு நிலை ஏற்படின் சீனப் பொருளாதாரத்திலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதுடன், அதனை மீண்டும் கட்டி எழுப்ப நீண்ட காலம் ஆகலாம். இந்த நிலையும் இந்தியாவுக்கு அனுகூலமானதாகும்.

அமெரிக்கா இன்று பெற்றிருக்கும் மிகச்சக்தி வாய்ந்த நாடு என்ற நிலை பெரும்பாலும் மிக விரைவில் இழக்கப்பட்டு விடும். உலக மயமாக்கலும் அந்நிலைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப் பிரதானமான வர்த்தக நிறுவனங்களாகக் கருதப்படும்.

IBM, கொக்கா கோலா, பெப்சி கோலா, கூகுல், மைக்ரோசொப்ட், அப்பிள், இன்டெல் போன்ற நிறுவனங்கள் உலகம் தழுவிய அளவில் செயற்பட்டு வரும் நிறுவனங்கள் என்பதுடன் தற்போது அந் நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களாக அல்லாது உழைப்பிற்கு குறைந்த விலையுள்ள நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களாக ஆகியுள்ளன.

அமெரிக்க அளவு கோலின் படி அந் நிறுவனங்கள் வேறு நாடுகளிலே உழைப்பைப் பெறுவதற்கு வழங்கும் விலை குறைவேயாயினும் அந்நாடுகளின் அளவு கோலின்படி அந்நாடுகளில் சாதாரணமாக வழங்கப்படும் விலையை விட அதிகமாகும். இதனால் அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ளதுடன் ஏனைய நாடுகளில் குறைந்துள்ளது.

இந்நிலைமையை அமெரிக்காவைப் போலவே ஐரோப்பாவிலும் வேலையில்லாத திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலே வேலையில்லாதோரின் தொகை 9.1 வீதம் ஐரோப்பாவிலே 9.4 வீதம் ஆகும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் வீழச்சி அடைந்தாலும் அது ஓரளவான வீழ்ச்சியாயிருக்குமே தவிர முழுமையான வீழ்சியாயிருக்க மாட்டாது.

சூரியன் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியம், எனக் கருதப்பட்ட இங்கிலாந்து அதன் கொலனி நாடுகளின் ஆட்சியதிகாரத்தைதக் கைவிட்ட போதும் ஒரேயடியாக வீழ்ந்து விடவில்லை. பெரும் பிரச்சினைகள் இருந்தபோகும் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளினால் உருவாக்கப்பட்ட சக்தி மிகு குழுவொன்று இன்னம் குறிப்பிட்டதொரு நீண்ட காலத்திற்கு இன்னமும் குறிப்பிட்டதொரு பெரும் அதிகாரத்தைக்

கொண்டியங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் அவர்களிலொருவர் உலகின் சக்திமிக்கவராக இல்லாவிடில் உலகின் சக்தி மிக்கவரைத் தீர்மானிக்கும் செயற்பாட்டில் அவர்கள் செல்வாக்கு செலுத்துவார்கள். அந்த இடத்திலே அவர்களுக்குத் தெரிவு செய்ய இருப்பது இந்தியா மற்றும் சீனா ஆயின் அவர்களின் தெரிவு பெரும்பாலும் இந்தியாவாக இருக்கவே வாய்ப்பு உண்டு. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியா ஏற்றுக் கொள்ளும் பெறுமானங்கள், சீனா ஏற்றுக் கொள்ளும் பெறுமானங்களை விட அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருப்பதே.

இந்த நிலைமைகளினால் எதிர்காலத்தில் உலகின் சக்தி மிகு நாடாக விளங்கும் வாய்ப்பு சீனாவை விட இந்தியாவுக்கே இருப்பது புலனாகின்றது.

உலகின் அதிகார மாற்றம் சம்பந்தப்பட்டமட்டில் வித்தியாசங்கள் ஏற்படக்கூடுமாயினும் சூழலைப் பொறுத்தமட்டில் உலகம் இன்று நல்ல நிலைமையில் இல்லை. மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளது. மனித இனத்தின் பேராசை, இயற்கையின் இருப்புக்கு தாக்குப் பிடிக்காத அளவுக்கு சுமையாகியிருப்பது புலனாகின்றது. அதனால் எந்தக் கணத்திலும் ஏற்படவிருக்கும் பேரழிவின் விளிம்பிற்கே மனிதகுலம் வந்துள்ளது. இயற்கையை வெற்றி கொள்வதற்கு மனித வர்க்கத்திற்கு இருக்கும் திறன் குறித்து மார்க்ஸும் எங்கல்கஸும் எழுதியது மனித வர்க்கத்தின் மீது ஏற்படுத்திக் கொண்ட பெரும் விசுவாசத்திலும் அபிமானத்தினாலேயாகும்.

எனினும் மனித வர்க்கத்தின் வளர்ச்சி தடுக்கப்பட முடியாதது என்னும் கூற்று இன்று பொருளற்றதாகிவிட்டது. டெட்பலன் கூற்றுக்கமைய மனித குல வரலாற்றை வரிசையாக வைத்துப் பார்த்தோமானால் இன்றைய மனிதன் இருப்பது அந்த வசையில் 680 ஆவது இடத்திலோ அல்லது அதற்குகிட்டிய இடத்திலோ ஆகும்.

முழு மனித குலத்திற்கும் ஏற்பட்ட மாற்றங் களைவிட 680 பேருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் மிக பாரிய அளவினதாகும்; ஆச்சரியம் நிறைந்ததாகும். அவ்வாறான பாரிய மாற்றங்களுக்குட்பட்ட காலத்தில் உயிர் வாழ்வது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியுமெனினும் மறுபக்கத்தில் பொதுவாகப் பார்க்குமிடத்து நாம் இருப்பது பேரழிவின் மிக அருகிலேயோகும். அந்த அழிவு முழு மனித வர்க்கத்தை அல்லது அதில் பெரும் பகுதியைக் காவு கொள்ளலாம். விஞ்ஞானத்திற்கோ தொழில்நுட்பத்திற்கோ இதனை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இருப்பதாகத் தெரியவில்லை.

http://akkinikkunchu.com/new/

இந்தியா ஒரு நாடாக இன்னரும் 25 ஆண்டுகள் இருப்பதே ஒரு பாரிய சவால்.

இந்தியா தனது உள்நாட்டு சந்தையையும் சீனா வெளிநாட்டு சந்தைகளையும் பெரிதும் நம்பி வளர்கின்றன என்பது ஓரளவு உண்மையே. ஆனால் ஒரு பொருளாதார சறுக்கல் வரும்பொழுது சீனாவை விட பல்லின பலவேறு வேறுபாடுகளையும் சமனற்ற வளர்ச்சியையும் கொண்ட இந்தியாவே அதிகம் பாதிப்படையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு உள்ளும்,நாட்டைச்சுற்றியும் எதிரிகளை வைத்துக்கொண்டு பொருளாதாரத்தில் முன்னுக்கு வருவது எப்படி??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வல்லரசாக வரும், என்று உசுப்பேத்தியே... இந்தியாவுக்கு, அடி வாங்கிக்கொடுக்க பிளான் பண்ணுறாங்கள் போலை கிடக்குது.

நாட்டுக்கு உள்ளும்,நாட்டைச்சுற்றியும் எதிரிகளை வைத்துக்கொண்டு பொருளாதாரத்தில் முன்னுக்கு வருவது எப்படி??

ஒரு நாட்டின் எக்கனாமிக் லெவல் ,,, ஸ்டெடியா இருந்தா,,,

எதிரிகள்கூட அவர்கள்முன்னால் கம்முன்னுதானே இருந்து ஆகணும்!!

பாதுகாப்புகூட கைமாறிபோகும்........!

http://www.huffingtonpost.com/2011/08/06/china-blasts-us-over-cred_n_920094.html

உலகுக்கு எல்லாம் கடன் கொடுக்கும் அமெரிக்கா , சீனாவிடம்தானே அதிக கடன் வாங்கி இருக்கு!!

இது ஒண்ணும் நம்ம நுணாவுக்கு தெரியாது ,, என்னு நெனைச்சு நான் சொல்ல வரல,,, நுணா கோவத்த தணிக்க ,, அவர் பின்னால ஒரு,, சென்ஸ் உள்ள ஜால்ரா பார்டி ஆகிட்டேன் !! <_<

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: :rolleyes: :rolleyes:

இது ஒன்றும் புதிதல்ல நாம் யாழில் நாளும் பொழுதும் பார்க்கும் இந்த அன்னத்தை காகம் என்றும் காகத்தை அன்னமென்றும் நிறுவும் வாதங்கள். இவர் பொருளாதார விஞ்ஞானத்தில் ஆரம்பித்து, சமூகவியலுக்குளால் போய், உயிரின ஆராட்சி செய்து அதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து, பொது தத்துவங்கள், பெரிய வேதாந்தங்கள் எல்லாம் பேசி கடைசியில் சமய நம்பிக்கையாய் (மூடநம்பிக்கை) முடித்திருக்கிறார்.

இவரின் ஒவ்வொரு கருத்தை பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். ஆனால் எதற்கு அது? எது எப்படி வந்தாலும் இந்தியா சீனாவின் காலடியில் தானே. கணிதத்தில் சமனிலிகளின் தொடர்பில்(Transitive relation) ஒரு விதி இருக்கிறது. அதன் படி A>B ஆகவும், B>C ஆகவும் இருந்தால் A>C என்பது வாதம். இது விதியென்பதால் அதை மறுப்பதால் எந்த பலனும் வராது. இந்த விதியை வைத்து இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் சீனாவின் காலடியில் என்பதை ஒரு கணத்தில் காட்டலாம்.

1. சீனா கொடுக்கும் லஞ்ச பணத்திற்கு சுதந்திர இலங்கை அடிமை. அதாவது ராசபக்சாக்கள் சீனாவின் காலடியில்.

2. ராசபக்சாவின் காலடியில் கறுப்பு பணம் தேடி அலையும் மலையாளிகள் அடிமைகள்.

3. மலையாளிகளின் கால்களில் சோனியா தஞ்சம்.

4. சோனியாவுக்கு பாதபூஜை செய்யும் வக்கில்லாத குடும்பிதான் மன மோகம்.

5. இந்த அடிமை மோகம் தான் இந்திய ஜனநாயகத்தின் பிரதிநிதி.

எனவே எது எப்படி வந்தாலும் இந்தியா சீனாவின் காலடியில் தானே .

வெளிநாடுகளுக்கு பொருள்களை எற்றுகிறாரர்களோ இல்லையோ, ஆனால் அவர்களுடையதுதான் உலகிலேயே பெரிய கார் சந்தை, உலகிலேயே பெரிய கட்டிட பொருள் சந்தை. உலகிலேயே பெரிய கனரக யந்திர சந்தை, உலகிலேயே மிகப்பெரிய மின்னணு பொருள் சந்தை....... இப்படி பலவற்றை ஏற்கனவே கைப்பற்றி கொண்டுதான் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக வந்துள்ளது சீனா. அவர்கள் உள்ளே நுகரும் அளவை இந்தியா கிட்டவும் எட்டவில்லை. அவர்களின் ஒரு குறை இதுவரை யப்பன் செய்த அதே தவறான காசுப்பெறுமதியை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதற்கு அவர்கள் மாற்று வழி தேடுகிறார்கள் எங்கிறது விக்கிபீடியா. By 2010 it was evident to outside observers such as The New York Times that China was poised to move from export dependency to development of an internal market. Wages were rapidly rising in all areas of the country and Chinese leaders were calling for an increased standard of living –விக்கிபீடியா

பூச்சிசியத்தை, முடிவிலியாக மயங்கவைத்து ஒரு பிரபல்ய ஓட்ட போட்டியின் முடிவை தலை கீழ்ழாக்கி காட்டுவது கணித வினோதிகளின் பொழுத்து போக்கு. ஒரு மைல் முந்திநின்று ஒருமைல் வேகத்திலோடும் ஒரு ஆமையை பத்துமைல் வேகத்திலோடினாலும் ஒரு முயலுக்கு முந்த முடியாது என்று அவர்கள் காட்டுவார்கள். அதாவது முயல் ஓடி வந்து ஆமை ஆரம்பித்த இடத்திற்கு வர ஆமை .1 மைல்கள் ஓடி இருக்கும் என்பார்கள். முயல் இப்போது அந்த .1 மைல் தூரத்தை ஓடவேண்டும் ஆமையை பிடிக்க. அதே நேரம் ஆமை திரும்பவும் .01 மைல் ஓடிவிடும். இப்படியே குறுகி குறுகி பூச்சியத்தை அணுகும் நேரத்தை கதையால் எப்பொதுமே அடையமுடியாத முடிவிலியாக மாற்றி விடுவார்கள். அதை கண்டு குளம்பிய பின்னர் இன்றுதான் அதன் மறுதலையையும்(inverse) நிரூபிப்பார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். ஆசிரியர் என்ன சொல்லுகிறார் என்பதை விளங்கி கொள்ள விக்கிபீடியாவிலிருந்த்துதான் திரும்பவும் சில தரவுகள் எடுக்க வேண்டும்.

அதன் முன் ஒரு வார்த்தை - அமெரிக்கா தொடங்கி மேற்கு நாடுகள் எல்லவற்றையும் கட்டி ஆள ஆசைப்படும் இந்த ஆசிரியரின் இந்தியாவை கைபற்றியது உலகப்பெயர் பெற்றிருந்த பிருத்தானிய நேவி அல்ல என்பது சிலருக்கு தெரியாது. அது ஒரு வர்த்தக கம்பனியின் காவலாளிகளே இந்த கிந்திய சாம்பிராச்சியதை அடக்கி பிடித்தது. அப்போது கிந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இந்தியாவை வந்து பிடித்து ஆண்ட கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் நாடான பிருத்தானியா 1700களில், பொருளாதாரத்தில் இந்தியாவின் ஒன்பதில் ஒரு பங்கு.

GDP (PPP) in millions of 1990 International Dollars

Country 1700 1870 1913 1950 2003

UK 10,709 100,180 224,618 347,850 1,280,625

Japan 15,390 25,393 71,653 160,966 2,699,261

China 82,800 189,740 241,431 244,985 6,187,984

India 90,750 134,882 204,242 222,222 2,267,136

1950 களில் சீனா இந்தியாவை விட சிறிது மேலேதான் இருந்திருக்கிறது. இன்று இந்தியாவை விட 3 பங்கு. சீனாவின் சராசரி வளர்ச்சி இந்தியா வளர்வதை விட கிட்ட தட்ட 2.5 மடங்கு பெரிய வளர்ச்சி . கணித விநோதிகள் முயல் ஓடி ஆமையை முந்தாத கதையைத்தான் சொல்வார்கள். அதன் மறுதலையான ஆமை ஓடி முயலை முந்திய கதையை இந்த ஆசிரியர் சொல்கிறார்.

http://en.wikipedia....(1950-1995).png

Edited by மல்லையூரான்

ஒருவேளை இந்தியாவுக்கு ஐ. நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கிடைத்துவிட்டால் அங்கேயும் குடிமி பிடிச்ச்சனடையாய்தான் இருக்கும்.

அதுக்குப்பிறகு இந்த உலகத்தை காப்பாத்த நல்ல நாடுகள் எல்லாம் விலகிப்போய் உலக மனிதர் சபை ஒன்றை உருவாக்க வேண்டும். மனிதத் தகமை அடிப்படையில் உறுப்புரிமையும் வழங்கப்படவேண்டும். இந்தியா இதில் சீரமுடியாமல் போகும்.

என்னைப்பொருத்தமட்டில், ஆசியாவை பிரதிநிதிப்படுத்த சீனா உள்ளது ஆனால் ஆபிரிக்காவைப் பிரதிநிதிப்படுத்த தென்னாபிரிகாவுக்கு ஐ. நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் தரப்படவேண்டும்.

மனிதவுரிமையை மதிக்கும் இன்னொரு நாட்டுக்குமே இடம் தரப்படவேண்டும். சாதியமும் மதவெறியும், இனவெறியும், உழலும், மனிதவுரிமையும் இல்லாத இந்தியாவுக்கு வழங்கப்படக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

------

என்னைப்பொருத்தமட்டில், ஆசியாவை பிரதிநிதிப்படுத்த சீனா உள்ளது ஆனால் ஆபிரிக்காவைப் பிரதிநிதிப்படுத்த தென்னாபிரிகாவுக்கு ஐ. நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் தரப்படவேண்டும்.

மனிதவுரிமையை மதிக்கும் இன்னொரு நாட்டுக்குமே இடம் தரப்படவேண்டும். சாதியமும் மதவெறியும், இனவெறியும், உழலும், மனிதவுரிமையும் இல்லாத இந்தியாவுக்கு வழங்கப்படக் கூடாது.

சரியாகச் சொன்னீர்கள் சூறாவளி.

உலக அரசியலுக்கு தலைமை தாங்க. இந்தியாவின் குள்ள நரிக்குணம் தான்... முதல் கெட்ட சகுனம்.

இந்தியா, ஈழத்தமிழனுக்கு செய்த.... செய்து கொண்டிருக்கும் பாவத்துக்கு இந்த ஜென்மத்திலை உய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வரக் கூடாத ஆசையெல்லாம் மனுஷாளுக்கு வருது!

கலி முத்திப் போச்சு!!!

அருணாச்சலப் பிரதேசத்தில, சீனன் ஓடி விளையாடுறான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வரக் கூடாத ஆசையெல்லாம் மனுஷாளுக்கு வருது!

கலி முத்திப் போச்சு!!!

அருணாச்சலப் பிரதேசத்தில, சீனன் ஓடி விளையாடுறான்!!!

ச்சூ... அபச்சாரம், அபச்சாரம்.

கச்சதீவிலை சீனன், தமிழனின் மண்டையை பிழந்து வொலி போல் ஆடுறான்.

இந்தியா, குசு விட்டுக் கொண்டிக்குது.

இந்தியா: 2010 இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை

இந்தியாவில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் (2010) மட்டும் சுமார் ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் பேர் (1,34,599) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு 14,424 பேரும் 2010 ஆம் ஆண்டு 16,561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

http://www.bbc.co.uk...cideindia.shtml

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.