Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயமோகனின் மூன்று நாவல்கள்

Featured Replies

அண்மையில் இந்தியா சென்று வந்த ஒரு உறவு சில ஜெயமோகன் புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். கடந்த வாரம் ரப்பர், உலோகம் மற்றும் இரவு ஆகிய மூன்று ஜெயமோகன் நாவல்களையும் வாசித்து முடித்தேன். மூன்றாண்டுகள் முன்னர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தபோது ஜெயமோகன் என்ற எழுத்தாழனை அறிந்திருக்கவில்லை. அந்த நாவல் ஏற்படுத்திய பிரமிப்பில் (இதை ஜெயமோகனே திரைக்கதை எழுத படமாக்கிய பாலா சொதப்பியது வேறு கதை. இது பாலாவிற்கு மட்டுமான பிரச்சினை அல்ல. பல ஆங்கில நாவல்களிற்கும் நடந்துள்ளது. எந்த நாவலையையும் படத்தால் வெல்ல முடியாது—விஞ்ஞானப் புனைவுகள் புராண அல்ல பூதக் கதைகள் தவிர) ஜெயமோகனின் அனைத்து நாவல்களையும் வாசித்துவிடவேண்டும் என்று ஒரு வெறித்தனமான ஆசை எழுந்தது. கனடாவில் சிறுகதைகள் தான் கிடைத்தன. நாவல்கள் கிடைக்கவில்லை. இணையத்தளத்தில் வாங்க நான் முயலவில்லை. ஜெயமோகனின் சிறுகதைககளில் டார்த்தனியம் என்ற வியத்தகு பிரமிப்பைத் தவிர மற்றவை அத்தனை தூரம் என்னை ஈர்;க்கவில்லை. பின்னர் கடந்தவாரம் தான் ஜெயமோகன் நாவல்கள் வாசித்தேன்.

இந்த மூன்றாண்டுகளில் எனக்கு மூன்று வயதுகளும் அவற்றுடனான அனுபவமும் அதிகரித்திருந்ததாலும், இதர வாசிப்புக்கள் நிறைந்திருந்ததாலும், ஜெயமோகன் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்ததாலும் மேற்படி மூன்று நாவல்களையும் நான் வாசித்தது ஏழாம் உலகத்தை வாசித்ததைக் காட்டிலும் வித்தியாசமானதாக அமைந்தது. ரப்;பர் ஜெயமோகனின் முதலாவது நாவல். 120 பக்கங்களிற்குப் பின்னர் தான் நான் எதிர்பார்த்த ஜெயமோகன் எழுத்தை ரப்பரில் ஓரளவிற்கேனும் அனுபவிக்க முடிந்தது. பிரமிக்கவைக்கவில்லை. உலோகம் ஜெயமோகனின் இதுவரை வெளிவந்தவற்றுள் இறுதியாக வெளிவந்த நாவல். 216 பக்க நாவலான உலோகத்தில் ஜெயமோகன் ரச்சின் உச்சியாக அதன் இறுதி ஒற்றை அமைகிறது. என்னைப் பொறுத்தவரை எங்கள் முப்பது வருட கால ஆயுதப்போரட்டத்தைப் பின்தளமாக வைத்து எழுதப்பட்ட கதைகளில் உலோகம் உச்சியில் அமரக் கூடியது என்று சொல்லலாம். தனக்குப் பரிட்சயமற்ற தளம் என்றபோதும், இக்கதைக்காக கதாசிரியர் மிகச் சிறப்பான ஆராய்ச்சியினை வீட்டு வேலையாகச் செய்துள்ளார் என்று நன்றாகத் தெரிகிறது. இருப்பினும் இந்த நாவலைப் புகழ்வதில சில சிக்கல்கள் இருக்கின்றன.

எங்களின் முப்பது வருட ஆயுதபோராட்டத்தில் இயக்கத்தோடும் போராளிகளுடனுமான பரிட்சயம் ஒவ்வொருவருவரிற்கு ஒவ்வொரு விதத்தில் இருந்திருக்கும். போராளிகளாய் இருந்தவர்கள், ஏதேனும் ஒரு மட்டத்தில் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள், போராளி குடும்பத்தினர், இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் மேடைப்பேச்சுக்களிலும் வாயிலாக மட்டும் இயக்கத்தை அறிந்தவர்கள், இயக்கம் என்றால் இப்படியானது தான் என்று ஒரு மனவமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த மனவமைப்பிற்கு மாறான எதையும் விளையாட்டிற்கும் கேட்க மறுப்பவர்கள் இப்படி யானையினை விபரித்த குருடர்கள் போல எங்கள் இயக்கத்தை நாங்கள் அனைவரும் ஒருவாறாகக் காணவில்லை. ஆனால் மொழியியலின் ஜாம்பவான் நோம் ச்சாம்ஸ்க்கி உலக மொழிகள் தொடர்பில் விபரித்த 'சர்வதேக இலக்கணம்' என்ற விடயத்தைப் போல, மனிதனிற்கு என்று பொதுத் தன்மைகள் உண்டு. இவற்றிற்கு எந்த மனிதனும் விதிவிலக்கில்லை. அந்தவகையில் எங்கள் இயக்தின் போராளிகளை வெளிநாட்டவர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்று நாங்கள் அடித்துக் கூறிவிடமுடியாது.

எங்கள் இயக்கத்தின் ஒவ்வொரு பிரிவுகளிற்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருந்தன. புலனாய்வுப் பிரிவில் காணப்பட்ட ஒரு உதிரிச் சிறப்பாக எழுத்து, எழுத்து மூலமான விசாரணை, ஆவணம் அமைந்திருந்தமை பலரிற்குத் தெரிந்திருக்கும். பிரசுரிக்கப்படாத பல எழுத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்குள் எழுதப்பட்டன. பரப்புரை தாண்டிய தங்கு தடையற்ற விசாரணைகளை மேற்கொண்ட எழுத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் எழுதப்பட்டன. இணையத்தளங்களும் மேடைகளும் வெற்றிப்பிரவாகமாகச் சித்தரித்துக் கொண்டிருந்த தாக்குதல்களைத் தோல்வியாக விபரித்த அல்லது கடுமையாக விமர்சித்த எழுத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்குள் எழுதப்பட்டிருந்தன. துரதிஸ்ரவசமாக இந்த எழுத்துக்கள் இனி எங்கள் கைகளில் எப்போதும் கிடைக்கப்போவதில்லை. அந்தப் பிரிவில் இருந்த அந்த அனுபவங்களைக் கண்ட விவாதித்த போராளிகள் மற்றும் இதர போராளிகள் தங்கள் அனுபவங்களைப் பேச அவற்றை ஜெயமோகன் போன்ற ஆழமை உள்ள எழுத்தாளர்கள் எழுதவேண்டியது எங்கள் கதை பூரணப்படுவதற்கு அவசியம். அந்தவகையில் உலோகம் எனது பார்வையில் மிகவும் வரவேற்கப்படவேண்டியது.

'மூடிகள்' போன்ற சொற்பதத்தைக்கூட கேள்விப்படாத ஈழத்தமிழ் இயக்க ஆதரவாளர்கள் உள்ளார்கள். அந்தவகையில் ஜெயமோகன் உலோகத்தை எழுதியது பலரிற்குக் கடுப்பேற்படுத்தலாம். ஆனால் உலோகம் இயக்கத்தைக் கொச்சைப் படுத்தியதாகத் துளியும் நான் கருதவில்லை. பெண்ணைத் தெய்வமாக்கித் தமிழ்நாட்டில் பெண்ணடக்குமுறை தொடர்வதைப் போல, போராளிகளையும் மனிதத்திற்கு மேற்பட்ட புனிதர்களாகச் சித்தரிப்பதன் வாயிலாகத் தாங்கள் போராடப்போகாத குற்ற உணர்வை மறைக்கின்ற உத்தி சிலரிடம் உண்டு. யாழ்களத்தில் உலோகம் பற்றிய தமிழ்நதியின் விமர்சனத்தை இப்போது படித்தேன். சிரிப்பு மட்டும் வந்தது. கர்ணனின் கதைகளில் பரிமாணங்கள் போதவில்லை என்று கூறும் போதெல்லாம் பரிமாணங்களை உள்ளடக்கியது என்று ஒற்றை வரியில் ஒரு உதாரணத்தைக் காட்டவேண்டும் என்று தோன்றுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை உலோகம் அத்தகைய ஒரு உதாரணம். போராளிகளை எங்களில் இருந்து புனிதக்கட்டமைப்பு வாயிலாகத் தூரப்படுத்தி அதன் மூலம் நாங்கள் போராடத்தேவையற்று நின்ற எங்களது நரித்தனம் பற்றிய விமர்சனம் எங்கள் மீது எனக்குண்டு. அந்தவகையில் உலோகத்தை நான் வரவேற்கின்றேன். உலோகம் ஒரு நாவல் மட்டும். போராளிகளை எங்கள் பிள்ளைகளாக நாங்களாக நாங்கள் உண்மையில் உணர்கையில் இன்னமும் எழுதப்படாத ஆனால் எழுதப்படவேண்டிய எத்தனையோ நாவல்கள் எங்கள் 30 ஆண்டுகால போராட்டத்திற்குள் செறிந்து கிடக்கின்றன. எழுதப்படாத இந்த நாவல்கள் எழுதப்படுவதற்கு போராளிகள் பட்டதைப் பட்டபடி தங்கள் அனுபவங்களைத் தாங்கள் நம்பும் எழுத்தாழர்களைத் தெரிவு செய்து பேச வேண்டும்.

ஏழாம் உலகத்தைக் கதைப் புத்தகமாக வாசிக்க முடியவில்லை, அது பல படி உட்சென்ற வாசிப்பைக் கோரியது. ரப்பர் பெரிதாகப் பிடிக்கவில்லை. உலோகம் பற்றிக் கூறியாகிவிட்டது. இனி இரவு. ஒரு வாக்கியத்தில் சொல்வதானால் மிகமிகமிகத் திழைத்து ரசித்தேன். வாசிப்பு இலகுவானதாய் இருந்தது. ஆனால் இரவுலாவிகளின் மத்தியில் ஒரு இரவுலாவியாக மனம் சிதறாது கட்டுப்பட்டுக் கிடந்து வாசித்தது. அனுபவித்துத் திழைத்தேன்.

நீங்களும் மேற்படி நூல்களை வாசித்திருப்பின் உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகனின் அவதானிப்பும் அதை இலாகவமாக சொற்களில் கொண்டு வருவதும் பிரமிக்க வைப்பது.

இரப்பர் வாசித்து 10 வருடங்களுக்கு மேலாக இருக்கும். மனவோட்டங்களை இலகுவாகக் எழுதிய உத்தி பிடித்திருந்தது.

உலோகம் "எங்கள்" கதை என்ற வகையிலும், புனிதர்களாகக் காட்டாமலும் இருந்ததாலும் பிடித்திருந்தது.

இரவு படிக்க ஆரம்பித்தபோதே முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

எனக்குப் பிடித்த ஜெயமோகனின் நாவல்களில் முதலில் "காடு" வரும். அடுத்ததாக "ஏழாம் உலகம்" என்று சொல்வேன். தமிழின் தலைசிறந்த நாவல் "விஷ்ணு புரம்" என்று ஜெயமோகனே சொல்லியிருந்தாலும் அதை அலுப்பின்றிப் படிக்க முடியவில்லை..

எனக்கு சிறுகதையோ,நாவலோ,சினிமாவோ அல்லது தொடர் நாடகங்களோ எதுவென்றாலும் துவங்கியவுடன் ஒரு ஈர்ப்பு வரவேண்டும் சிலரது எழுத்துக்களில் எனக்கு அந்த ஈர்ப்பு வருவதில்லை,அது எனது பிடிப்பு மாத்திரமே ,அதை வைத்து நல்லது கெட்டது எடை போட நான் தயாரில்லை.

அந்த வரிசையில் நான் விரும்பி வாசிக்கும் முக்கிய எழுத்தாளர்களில் ஜெயமோகனும் ஒருவர் .உலோகம் ஒரு நாளிலேயே வாசித்துமுடித்தேன்.கதைகளின் கரு எதுவாக இருந்தாலும் அதை இவர்கள் எழுதும் விதம் தான் எம்மை விடாமல் வாசிக்க தூண்டுகின்றது.அதற்காக அவர்கள் செய்யும் ஹோம் வேக் அளப்பரியது ,அதை விட மிக துல்லியமாக விடயங்களை அவதானித்து தங்கள் சொற்கோர்வை களால் எம்மை கிறங்கடித்து விடுகின்றார்கள் ,

இன்று ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த ராமகிருஸ்ணனின் "கோகிலவாணி -------" என்ற கதை வாசித்து மனம் சே என்னடா உலகமிது என்று போய்விட்டது.உலோகம் ஒரு வரதராஜபெருமாளின் பயோகிராபி மாதிரித்தான் ,அதை அழகாக ஆராய்ந்து எழுதிய விதம தான் ஜெயமோகன் .

என் விருப்பத்துக்குரிய முதல் தர எழுத்தாளர் ஜெயமோகன். மனசை கட்டி இழுத்து தன் வழிக்கு கொண்டு வருவதில் அவரது எழுத்துக்கு இருக்கும் திறமை மற்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இருக்கும். கட்டி இழுத்து தன்னுடன் பயணிக்க வைக்கும் சிறந்த எழுத்து நடையும், ஒரு விடயத்தை உள்ளாரச் சென்று மனசின் எட்ட முடியாத இடங்களில் இருக்கும் உணர்வுகளையும் உணரச் செய்யும் அனுபவ எழுத்தாளர்

ரப்பர்: அவரது நாவல்களை தொடர்ந்து வாசிக்க தூண்டிய நாவல். இலங்கையின் ரப்பர், தேயிலை விளையும் பிரதேசங்களுடன் பரிச்சயம் எனக்கிருப்பதால் இந்த நாவல் மிகப் பிடித்த நாவலாக மனசுக்குள் இறங்கியது என்றும் நினைக்கின்றேன். ரப்பர் பயிரின் வருகை, அது ஏற்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்கள், ஒரு குடும்பத்துக்குள் அது ஏற்படுத்திய மாறுதல்கள், ரப்பர் மரம் ஈற்றில் ஒன்றுமில்லாதாகி பட்டுப் போவது போன்று அந்த குடும்பத்தின் சொத்துகளெல்லாம் ஒன்றுமில்லாகிவிடுவது, பெருவட்டர் கிழவனின் கொடுமையான முதலாளித்துவ அணுகுமுறை, அதற்கு முரணாக அவருக்கும் வேலைக்காரனுக்கும் இடையில் இருக்கும் உறவு முறை போன்றன எனக்குள் மிகுந்த அனுபவத் தொற்றலை உண்டு பண்ணின.

உலோகம்: தமிழ் தேசிய நலங்களுக்கு எதிரான ஜெயமோகனின் பார்ப்பனிய அரசியலை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒரு நாவல் என்றளவில்தான் எனக்குள் பதிந்து இருக்கின்றது. போராளிகளை அவர்களின் இயல்புக்கு மாற்றாக புனிதர்களாக காட்ட வேண்டியதில்லை என்பதுக்காக அவர்களை ஒழுக்கம் அறவே கெட்ட போகிரிகளாகவும் காட்ட வேண்டியதில்லை. ஜெயமோகன் வசதியாக போராளிகளின் தனிமனித இயல்புகளினூடு கதையை நகர்த்திக் கொண்டு போகின்றேன் என்று காட்டிக் கொண்டு போராட்டம் தொடர்பான அரசியலை கேவலமாக காட்டிக் கொண்டு போகின்றார். இந்த நாவலை வாசிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தமிழ் போராளி மீது ஏற்படும் பிம்பம் ஒரு இலக்கற்ற ஆயுதத்தின் மீது எல்லையற்ற மோகத்தில், மனித உறவுகளின் மீது எந்த ஒரு மதிப்பும் அற்ற ஜடம் என்று என்றே அமையும். ஜெயமோகன் இந்த நாவலுக்காக எந்த உழைப்பினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக விடுதலை போராளிகளை கொச்சை படுத்தி விடல் வேண்டும் என்ற முன் முடிவுடன் எழுதிய நாவலாக தெரிகின்றது எனக்கு, அத்துடன் இந்த நாவலில் இருக்கும் பெண்களின் பாத்திரப் படைப்பு காசுக்காக எந்த ஆணுடனும், அவன் தன் கணவனை கொன்றவனாகினும் கூட படுத்து எழும்பும் பாத்திரங்களாகவே படைக்கப்பட்டு இருக்கு.

சார்லஸ் என்ற பாத்திரம் சொல்கின்றது: "எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை"

அதாவது,

அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இவை இல்லை என்றே சொல்ல முனைகின்றார்

இரவு நாவல்: இன்னும் வாசிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உலோகம்: தமிழ் தேசிய நலங்களுக்கு எதிரான ஜெயமோகனின் பார்ப்பனிய அரசியலை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒரு நாவல் என்றளவில்தான் எனக்குள் பதிந்து இருக்கின்றது. போராளிகளை அவர்களின் இயல்புக்கு மாற்றாக புனிதர்களாக காட்ட வேண்டியதில்லை என்பதுக்காக அவர்களை ஒழுக்கம் அறவே கெட்ட போகிரிகளாகவும் காட்ட வேண்டியதில்லை. ஜெயமோகன் வசதியாக போராளிகளின் தனிமனித இயல்புகளினூடு கதையை நகர்த்திக் கொண்டு போகின்றேன் என்று காட்டிக் கொண்டு போராட்டம் தொடர்பான அரசியலை கேவலமாக காட்டிக் கொண்டு போகின்றார். இந்த நாவலை வாசிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தமிழ் போராளி மீது ஏற்படும் பிம்பம் ஒரு இலக்கற்ற ஆயுதத்தின் மீது எல்லையற்ற மோகத்தில், மனித உறவுகளின் மீது எந்த ஒரு மதிப்பும் அற்ற ஜடம் என்று என்றே அமையும். ஜெயமோகன் இந்த நாவலுக்காக எந்த உழைப்பினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக விடுதலை போராளிகளை கொச்சை படுத்தி விடல் வேண்டும் என்ற முன் முடிவுடன் எழுதிய நாவலாக தெரிகின்றது எனக்கு, அத்துடன் இந்த நாவலில் இருக்கும் பெண்களின் பாத்திரப் படைப்பு காசுக்காக எந்த ஆணுடனும், அவன் தன் கணவனை கொன்றவனாகினும் கூட படுத்து எழும்பும் பாத்திரங்களாகவே படைக்கப்பட்டு இருக்கு.

சார்லஸ் என்ற பாத்திரம் சொல்கின்றது: "எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை"

அதாவது,

அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இவை இல்லை என்றே சொல்ல முனைகின்றார்

இரவு நாவல்: இன்னும் வாசிக்கவில்லை

  • தொடங்கியவர்

என் விருப்பத்துக்குரிய முதல் தர எழுத்தாளர் ஜெயமோகன். மனசை கட்டி இழுத்து தன் வழிக்கு கொண்டு வருவதில் அவரது எழுத்துக்கு இருக்கும் திறமை மற்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இருக்கும். கட்டி இழுத்து தன்னுடன் பயணிக்க வைக்கும் சிறந்த எழுத்து நடையும், ஒரு விடயத்தை உள்ளாரச் சென்று மனசின் எட்ட முடியாத இடங்களில் இருக்கும் உணர்வுகளையும் உணரச் செய்யும் அனுபவ எழுத்தாளர்

ரப்பர்: அவரது நாவல்களை தொடர்ந்து வாசிக்க தூண்டிய நாவல். இலங்கையின் ரப்பர், தேயிலை விளையும் பிரதேசங்களுடன் பரிச்சயம் எனக்கிருப்பதால் இந்த நாவல் மிகப் பிடித்த நாவலாக மனசுக்குள் இறங்கியது என்றும் நினைக்கின்றேன். ரப்பர் பயிரின் வருகை, அது ஏற்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்கள், ஒரு குடும்பத்துக்குள் அது ஏற்படுத்திய மாறுதல்கள், ரப்பர் மரம் ஈற்றில் ஒன்றுமில்லாதாகி பட்டுப் போவது போன்று அந்த குடும்பத்தின் சொத்துகளெல்லாம் ஒன்றுமில்லாகிவிடுவது, பெருவட்டர் கிழவனின் கொடுமையான முதலாளித்துவ அணுகுமுறை, அதற்கு முரணாக அவருக்கும் வேலைக்காரனுக்கும் இடையில் இருக்கும் உறவு முறை போன்றன எனக்குள் மிகுந்த அனுபவத் தொற்றலை உண்டு பண்ணின.

உலோகம்: தமிழ் தேசிய நலங்களுக்கு எதிரான ஜெயமோகனின் பார்ப்பனிய அரசியலை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒரு நாவல் என்றளவில்தான் எனக்குள் பதிந்து இருக்கின்றது. போராளிகளை அவர்களின் இயல்புக்கு மாற்றாக புனிதர்களாக காட்ட வேண்டியதில்லை என்பதுக்காக அவர்களை ஒழுக்கம் அறவே கெட்ட போகிரிகளாகவும் காட்ட வேண்டியதில்லை. ஜெயமோகன் வசதியாக போராளிகளின் தனிமனித இயல்புகளினூடு கதையை நகர்த்திக் கொண்டு போகின்றேன் என்று காட்டிக் கொண்டு போராட்டம் தொடர்பான அரசியலை கேவலமாக காட்டிக் கொண்டு போகின்றார். இந்த நாவலை வாசிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தமிழ் போராளி மீது ஏற்படும் பிம்பம் ஒரு இலக்கற்ற ஆயுதத்தின் மீது எல்லையற்ற மோகத்தில், மனித உறவுகளின் மீது எந்த ஒரு மதிப்பும் அற்ற ஜடம் என்று என்றே அமையும். ஜெயமோகன் இந்த நாவலுக்காக எந்த உழைப்பினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக விடுதலை போராளிகளை கொச்சை படுத்தி விடல் வேண்டும் என்ற முன் முடிவுடன் எழுதிய நாவலாக தெரிகின்றது எனக்கு, அத்துடன் இந்த நாவலில் இருக்கும் பெண்களின் பாத்திரப் படைப்பு காசுக்காக எந்த ஆணுடனும், அவன் தன் கணவனை கொன்றவனாகினும் கூட படுத்து எழும்பும் பாத்திரங்களாகவே படைக்கப்பட்டு இருக்கு.

சார்லஸ் என்ற பாத்திரம் சொல்கின்றது: "எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை"

அதாவது,

அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இவை இல்லை என்றே சொல்ல முனைகின்றார்

இரவு நாவல்: இன்னும் வாசிக்கவில்லை

நிழலி,

ரப்பர் தொடர்பில் நீங்கள் முன்வைத்தவற்றை மறுக்கவில்லை. 'றப்பர் மரத்தில் எந்தக் குருவியும் கூடு கட்டுவதில்லை', மற்றும் 'வாழைத்தோட்டம் அழிந்து றப்பர் காடாகியபோது சந்தையாக இருந்த இடம் இராணுவ முகாமாகியது' என்பது போன்ற வசனங்கள் மிகவும் ஆழமானவை தான். றப்பர் காட்டைச் சார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பு இருக்கவே செய்கின்றது. ஓவ்வொருவர் ரசனை மற்றும் அனுபவம் சார்ந்து தான் வாசிப்பு நிகழும் என்பது மறுப்பதற்கில்லை. இந்தக்கதை கூடாது என்று நான் கூறவரவில்லை, ஒரு ஜெயமோகன் கதை என்ற பிரமிப்பை நான் உணரவில்லை. அவ்வளவு தான். பிழை என்னதாகவும் இருக்கலாம்.

உலோகம் தொடர்பில் நான் நினைக்கிறேன் எங்கள் பார்வைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. பார்வைகள் என்று வருகையில் ஒரு பார்வை தான் சரி என்று இருப்பதில்லை. உங்கள் பார்வை வழியாக, நான் புரிந்துகொள்ளத் தவறியதைப் புரிந்துகொள்ள முனைவதற்காக இப்பின்னூட்டம்.

'போராளிகளை ஒழுக்கம் அறவே கெட்ட போக்கிரிகாளாகவும் காட்டவேண்டியதில்லை' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் நினைக்கிறேன் சார்ள்ஸிற்கும் ஜோர்ஜின் மனைவிக்குமிடையேயான பரிமாற்றங்கள், மற்றும் வைஜயந்திக்கும் சார்ல்ஸ்சிற்குமிடையேயான பரிமாற்றங்கள் ஆகிய இரண்டினதும் அடிப்படையில் தான் சார்ல்ஸ் ஓழுக்கம் கெட்ட போக்கிரி என்கிறீர்கள் என நினைக்கிறேன். கொலை பஞ்சமாபாதகத்தில் ஒன்று என்ற அடிப்படையில் ஒழுக்கம் ஆராயப்பட்டிருக்காது என்று நம்புகின்றேன். அத்தோடு சார்ல்ஸ் தண்ணியும் அடிப்பதில்லை. தண்ணியடிக்காமையும் ஒருவேளை ஒழுக்கமாகச் சில புள்ளிகள் பெறக்கூடும். சார்ள்ஸிின் சித்தரிப்புப் பற்றி ஏன் எனக்கு ஜெயமோகனில் ஆத்திரம் எழவில்லை என்பதை எனக்குத் தெரிந்தவரை இனிப் பகிர்ந்து கொள்கிறேன்.

சார்ல்ஸ் யார்? ஒரு ஆபத்து நிறைந்த, எத்தனை நாட்களில் முடியும் என்று சொல்லத் தெரியாத, மாறிக்கொண்டே இருக்கின்ற புரியாத தளத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய, எத்தனையோ அருவருப்பானவர்களின் நம்பிக்கையினைத் தனது திட்டம் சார்ந்து வெல்ல வேண்டிய, அருவருப்பானவர்களிடம் மாட்டிக்கொள்ளக் கூடாத, ஒரு வெளிநாட்டு மண்ணில் குறிபார்த்துக் காத்திருக்கும் ஒரு போராளி.

ஒழுக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து எவ்வாறு மனித வாழ்வியலிற்குள் அறிமுகப்பட்டது? நாளாந்தம் அரிவாளோடும் ஈட்டி பொல்லுகளோடும் அலையாது, மனிதன் சமூகமாக, அருகருகே வளங்களைப் பங்கிட்டு எவ்வாறு சேர்;ந்து வாழ்வது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட உளவியல் காவல் துறையே ஒழுக்கம். (ஒழுக்கசீலர்கள் போற்றப்படுவதில் ஒரு சுயநலமும் இல்லாமல் இல்லை—ஒழுக்கம் போற்றப்படும் வரை நாம் நமது உடமைகளை நம்முடையதாகவும், நமது உயிர் பற்றிய சிறிதளவு உத்தரவாதத்துடனும் வாழலாம்). ஒரு இலக்கு என்று ஒன்றை வரித்துக் கொண்டு அந்த இலக்கில் இருந்து தவறாது, எத்தனையோ அக புறக் காரணிகளை வென்று வாழ்ந்து இலக்கை அடைவது ஒழுக்கம் இன்றிச் சாத்தியப்படுமா? சார்ல்சின்; இலக்கு அடையப்பட்டதா இல்லையா? முடிந்தமுடிபான அனைத்துச் சந்தர்ப்பத்திற்குமான ஒழுக்கப் பட்டியல் என்று எதுவும் சாத்தியமில்லை. யாருடைய ஒழுக்கம் யாருக்கான ஒழுக்கம்; என்பன சந்தர்ப்பங்களால் நிர்ணயிக்கப்படுவன.

இந்நாவலில் வெளி உலகிற்கு சார்ல்ஸ் காட்டிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு போராளியின் வாழ்க்கை அல்ல. மாறாக, இயக்கத்தால் துரத்தப்பட்ட, துரோகி என்று தேடப்பட்டுக்கொண்டிருக்கும், 24 மணிநேரமும் ஏதோ ஒரு வடிவில் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர்களின் மனங்களில் சார்ல்ஸ் ஒரு போராளி என்ற சந்தேகம் துளியளவும் முழைவிட்டுவிடக்கூடாத ஒரு வாழ்க்கை. சார்ல்சைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள் என்னையும் உங்களையும் போன்ற சாமானியர்கள் அல்ல. புலனாய்வின் கில்லாடிகள், பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் மத்தியில் சார்ல்ஸ் ஒரு போராளியின் ஒழுக்கமாக நாங்கள் போற்றும் குணவியல்புகளுடனா உலாவ முடியும்?

மேலும் அப்படியான அதீத பயிற்சி பெற்ற கில்லாடிப் புலனாய்வாளர்கள், அதுவும் அவர்களது நாட்டில் அவர்களது வளங்கள் அனைத்துடனும் சார்ல்சை ஆராய்ந்தும், சார்ல்ஸ் இயக்கத்தவன் என்றுகூறி அவனது கோப்பை மூடிவிடாதபடி காத்திருக்க்கச் செய்தான் என்ற செய்தியில் ஒரு செய்தி தொக்குநிற்கின்றது, பொதிந்துகிடக்கின்றது. அதாவது, சார்ல்ஸ் நடந்து கொள்ளும் விதம் விடுதலைப்புலிப்போராளிகளிற்கானது அல்ல என்பதே அச்செய்தி. விடுதலைப்புலிப் போராளிகளின் தன்மை இங்கு சொல்லாமல் புகழப்படுகின்றது. அதுவும் நானும் நீங்களும் புகழவில்லை, புலிகளை ஆராய்வதையே தொழிலாக வைத்திருக்கும், பயிற்சி பெற்ற, புலிகளை எதிரிகளாகக் கருதும் புலிகள் மீது அவதூறு பரப்பும் இந்திய புலனாய்வுக்கில்லாடிகள் சார்ல்சை புலி என்று நிறுவமுடியாது இருப்பதானது புலிகளின் ஒழுக்கத்திற்கு அவர்களே வழங்கிய அத்தாட்சிப்பத்திரம்.

சார்ல்சின் ஒழுக்கசீலத்தனத்தை நிர்ணயிப்பது எது? அவன் தனது இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறானா? தன்னை நம்பிக் காத்திருப்போரிற்கு விசுவாசமாக இருக்கிறானா? தன் மீது செலவழிக்கப்பட்ட செலவழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வளங்களிற்கு விசுவாசமாகச் செயற்படுகிறானா? தனது இலக்கு நோக்கி உண்மையாக முனைகிறானா என்பவையே. இதில் சார்ல்ஸ் ஒழுக்கம் கெட்டிருப்பின் அவனது இலக்கு அடையப்பட்டிருக்க முடியாது.

நாம் எமது புலம்பெயர் சமூகத்தில் கண்டு அலுத்துப்போன வினைத்திறன் இழந்துபோன பரப்புரைத்தன்மையில் உலோகம் வெளிவந்துள்ளதா என்று கேட்கப்படின் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக அமையும். ஆனால் ஒரு நாவலசாரியர் பரப்புரை செய்யவேண்டும் என்பது உண்மையிலேயே எமது எதிர்பார்ப்பாக இருக்கிறதா? எத்தனை பரப்புரை எழுத்தாழர்களை எங்கள் மத்தியில் நாங்கள் வியந்து கொண்டிருக்கிறோம் என்று எங்களை யாரேனும் கேட்டால் ஒரு பெயர் தன்னும் சட்டென்று எங்கள் நினைவிற்கு வருகிறதா? ஆனால் உலோகம் எங்களிற்கு எதிரான பரப்புரைக்காகப் பாவிக்கப்படக்கூடியதா? நிச்சயமாக ஆம் என்பதே பதில். ஆனால் அத்தகைய பரப்புரை சார்ல்சின் ஒழுக்கக்கேட்டில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டியதில்லை. புலிகளிற்கு எதிரான பரப்புரை செய்ய விரும்பும் காத்திரமான சக்திகளிற்கும் அச்சக்திகளின் இலக்கு வாசர்களிற்கும் ஒழுக்கம் ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதே இல்லை. மாறாக, இந்திய இறையாண்மையினை மீறி இந்திய மண்ணயில் இந்திய பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிப் புலிகள் செயற்படுகிறார்கள் என்ற செய்தி தான் அத்தகைய பரப்புரை தேடுபவர்களின் கண்ணை உறுத்தும். அதிலும் சிறி மாஸ்ற்றரை கொலைசெய்கையில் அந்த வீட்டைச் சுற்றிச் சனம் நின்று பார்ப்பதும் குண்டுகள் எத்திசையிலும் பறக்கலாம் என்று கூறப்படுவதும் அத்தகைய பரப்புரைக்கு அவர்களிற்கு உதவும். ஆனால் பரப்புரை செய்ய விரும்புபவர்கள், அதற்கான வளமும் நேரமு; உள்ளவர்கள்,எதையும் பரப்புரையாக்கலாம். அவர்களிற்குப் பயந்து எங்களின் ஒரு அத்தியாயயம் ஆராயப்படக்கூடாது என்று எனக்குத் தோன்றவில்லை.

மற்றையவனிற்குப் பிரச்சினையோ இல்லையோ எங்களிற்கு ஒழுக்கம் ஒரு பெரிய பிரச்சினை, எங்கள் போராளிகள் எப்போதும் எங்கள் மனங்களில் புனிதர்களாக உலாவவேண்டும் என்ற ரீதியில் ஒரு கணம் பார்த்தால், இந்த நாவலில் இரு ஈழப்பெண்களின் பாத்திரப்படைப்பு மற்றும் சார்ஸின் இவர்களுடனான பரிமாற்றங்கள் பார்க்கப்படவேண்டும்.

முதலில் ஜோர்யஜின் மனைவி. அவளை சார்ல்லஸ் கட்டாயப்படுத்தினான் என்பது பலரிற்குப் பிரச்சினையாகலாம். வன்புணர்வு என்ற செயலை புலிகளுடனும் இக்காட்சி இணைக்க முயலுகிறது என்ற எதிர்ப்புக் கிளம்பலாம். சார்ல்ஸ் ஜோர்;ஜின் மனைவியுடன் நடந்து கொண்டமை பலரின் மனங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் குறித்த காட்சி குறித்த சந்தர்பத்திற்குச் சாத்தியமற்றது என்றோ வலுக்கட்டாயமாக புலிகள் மீதான இகழ்ச்சிக்காகச் சேர்க்கப்பட்டது என்றோ எனக்குத் தோன்றவில்லை. முதலில் இந்நாவல் சம்பவங்களின் கோர்வைகளாக மட்டுமன்றி சம்பவங்களைத் தாங்கி நிற்கும் உளவெளி ஆழங்களையும் ஏதோ ஒரு கோணத்தில் ஆராய முனைவது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். ஜோர்ஜின் மனைவியின் ராகவனுடனான தொடர்பும், ராகவன் மட்டும் அல்ல என்பது குறியீடாக நாசூக்காகப் பன்மைச் சொல் மூலம் 'மதுரைப் பக்கம் போ இவங்கள்; கெட்டவன்கள'; என்ற தொனிப்பட சார்ல்சால் அவளிற்குக் கூறப்படும் வசனத்தின் வாயிலாகவும் காட்டப்படுகிறது. சார்ல்சை அவள் மறுத்தமைக்குள்ளும் உளவியல் பேசப்படுகின்றது. சாhல்ஸ் அவளைக் கட்டாயப்படுத்தியதிலும் உளவியல் நிறையவே பேசப்படுகின்றது. இந்தப் பரிமாற்றம் வெறும் வன்புணர்வாக வாசிக்கப்படக்கூடாது. இது பற்றிய நிறைய எழுதவேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் இன்னமும் உலோகம் வாசிக்காவதவர்கள் இருப்பார்கள் என்பதால் இப்போதைக்கு அதைத் தவிர்க்கிறேன். இப்போதைக்கு இப்படிக் கூறலாம், அவளுடன் சார்ல்ஸ் நடந்துகொண்டமை நிச்சமயமாக அவதானிக்கப்பட்டிருக்கும் (குழியலறைகுள் ராகவன் இருந்திருந்தால் என்று சார்ல்ஸ் வன்புணர்வின் பின் முகம்கழுவும் போது நினைக்கும் வாக்கியம் உற்றுநோக்கப்படவேண்டும்). அந்தவைகயில் அவன் ஒரு போராளியே அல்ல துரோகி களிசடை என்பது இன்னுமொரு படி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். சிறி மாஸ்ற்றரின் கொலையில் அவன் கமக்கட்டில் வைத்திருந்த தோட்டாவை ஏன் அவர்கள் சரியாகச் சோதனை செய்யவில்லை என்ற அடிப்படையில் அவர்களிற்கு எழுந்திருந்த சந்தேகத்தில் மேற்படி சம்பவம் நிச்சயம் கொஞ்சமாவது நீரை வார்த்திருக்கும். அத்தோடு அப்பெண் உண்மையிலேயே அதனை வன்புணர்வாகத் தான் பார்;க்கிறாளா என்பதும் அவதானிக்கப்படவேண்டும். அவளைத் தவிர அதனை வன்புணர்வு என்று திட்டவட்டமாக முத்திரை குத்தும் லாயக்கு யாரிற்கும் இல்லை. நிச்சயமாக அவள் அதனை வன்புணர்வு என்ற கோணத்தில் நோக்கவில்லை என்று அங்கு வேறு உளவியல் ஆட்சி பெறுகிறது என்று திடமாக நிறுவுதற்கு நாவலில் இடமளிக்கப்பட்டுள்ளது: ஒரு மிகச் சிறு உதாரணம்: அச்சம்பவத்தின் பின்னர் முகம் கழுவி வந்த சார்ல்சிடம், அவள் தன் கூந்தலை முடிந்தபடி பேசிய முதல் வசனம் தேனீர் போடட்டுமா என்பதே என்பது இங்கு கவனிககப்படவேண்டும்.

இனி இன்னுமொரு கேள்வி. விபச்சாரிகள் கொலைசெய்யப்பட்டது சரி என்று ஏற்றுக்கொண்ட கலாச்சாரக்காவலர்கள் எங்களுக்குள் அதிகம். ஆனால், ஒரு நீண்டகாலவேலைத்திட்டத்திற்குத் தடையாக எதிரியிடம் எழுந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு ஒரு விபச்சாரியுடன் ஒரு போராளி செய்துகொண்ட உத்தி (உளவியலை விட்டு உத்தி என்று மட்டும் இப்போதைக்குப் பேசிக்கொள்வோம்) ஜீரணிக்கப்படமுடியவில்லை. அதாவது, சிறி மாஸ்ற்றரின் பாதுகாவலர்கள் சார்ல்சை சிரத்தையின்றிச் சோதனை போட்டமையால் தான் அவன் மறைத்து வைத்திருந்த தோட்டாவை அவர்கள் காணாது போனார்கள். சிரத்தையின்றி அவர்கள் சார்ல்சைச் சோதனை இட்டமைக்கான காரணம் சார்ல்ஸ் அவர்கள் அறிந்தவனாக அவர்களது ஆளாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் றோவிற்கு ஏற்பட்டிருந்தது. அச்சந்தேகத்தைத் திசை திருப்ப போராளிகள் வெறுக்கும் ஒரு செயலை குறிப்பிட்ட பெண்ணுடன் சார்ல்ஸ் செய்தது--அதுவும் தான் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் எனத் தெரிந்து செய்தது--ஏன் எங்களிற் பலரைக் கொதிக்கச் செய்கிறது? நண்பனின் மனைவியை போட்டுட்டானே என்று புலம்பும் தமிழ்நதி போன்ற விமர்சகவர்கள் நண்பனின் மனைவியின் நடைமுறை பற்றிப் பேசவில்லை. ஒருவேளை விபச்சாரி என்று அவளை சார்ஸ் சுட்டிருந்தால விமர்சகர்களால் அதை இலகுவில் சீரணிக்கமுடிந்திருக்குமோ என்னமோ. எல்லாம் சுத்திச்சுத்திப் புனிதக்கட்டமைப்பிற்குத் தான் வருகின்றன என்றே தோன்றுகின்றது.

இனி வைஜயந்தி விடயம். ஜோர்ஜின் மனைவி அளவிற்கு வைஜயந்தி விவகாரம் விளக்ப்படத்தேவையற்றது. சார்ஸ்சிற்கு அது திணிக்கப்பட்ட கட்டாயமும் காதலும் சேர்ந்த கலவை. காதலிப்பதும் காதலித்தவழுடன் சேர்வதும் ஒழுக்கக்கேடென்றாகாது. ஆனால் ஏன் எங்கள் பெண்கள் இருவர் இந்த விதத்தில் பாத்திரமாக்கப்படவேண்டும் என்று கேட்கலாம். இதனால் இந்திய இராணுவத்தின் வன்புணர்வுகள் நியாயப்படுத்தப்பட்ட இந்தியத்திற்கு வக்காலத்து வாங்கப்படுகின்றதா என்று கூட ஒரு வடக்கயிற்றை முழங்காலில் இருந்து மொட்டந்தலைக்கு வீசலாம். என்னைப் பொறுத்தவரை, எந்தத் தளத்தில் இந்தப் பெண்கள் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பங்களில் பாத்திரமாக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் மேற்படி வடக்கயிறு பற்றிய சந்தேகம் அத்தனை வலுவாக எழவில்லை. அதற்காக ஜெயமோகனி;ற்கு வக்காலத்து வாங்கும் சட்டத்தரணியாக ஆஜர் பண்ணவும் நான் தயாரில்லை. ஒருவேளை எங்கள் போராளிகளைக் காக்கும் எங்கள் மனவீச்சுப்போல தங்கள் இராணுவத்தைக் காக்கும் உள்மனதின் உந்துதலில் ஜெயமோகன் எங்கள் பெண்களை இவ்வாறு சித்தரித்தார் என்று கூட இருக்கலாம். ஆனால் எங்கள் வரலாற்றில் எங்கள் இனத்தின் தொன்மையில் அத்தகைய பெண்களைக் காணவே முடியாது என்று என்னால் சொல்லமுடியவில்லை.

அடுத்து சார்ல்ஸ் தனக்கு வஞ்சமுமில்லை பகையுமில்லை இலக்குமில்லை என்று கூறி தனது இயக்கத்திற்கும் இலக்கில்லை என்று கூறுகிறார் என்பது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் போராளி செயற்பட்டுவிடமுடியாது. திட்டம் தீட்டல், காலவரையறையற்ற மன உறுதி என்பனவெல்லாம் உணர்சிவசப்பட்ட நிலையில் கட்டியெழுப்பப்படமுடியாது. மொத்தத்தில் சார்ல்ஸ் இங்கு தன்னை இயக்கம் துரோகி என்று கருதும் ஒருவனாகவே தன்னைப் பார்ப்பவர் மனங்களில் எல்லாம் கட்டியெழுப்ப முகைகிறான் என்பது மறக்கப்படக்கூடாது. சில புகழ்பெற்ற நடிகர்கள் சொல்வார்க்ள் படப்பிடிப்பிற்கு வெளியேயும், படம் முடியும் வரை தாங்கள் பாத்திரமாகவே வாழ்வோம் என்று. சார்ல்ஸ் இங்கு எப்பேர்பட்ட கில்லாடிகளின் கண்களில் மண்ணைத் தூவி நடித்துக் கொண்டிருந்தார் என்பதைக் கவனத்தில் எடுக்கவேண்டும். அவர் பார்திரமாகவே சில சமயங்களில் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது.

என்னைப் பொறுத்தவரை இந்நாவலின் இறுதி ஒற்றை எழுத்தாளர் சார்ந்து பேசுகிறது. எங்கள் போராளிகளின் வியத்தகு தன்மை சார்ந்து நாங்கள் எவரும் மலைப்படையாது இருந்ததில்லை. ஆனால் எங்கள் போராளிகளைக் கதிரையில் குந்தியிருந்தபடி உளவியல் ஆராய்ச்சி செய்ய எங்கள் மனங்கள் ஒப்புவதில்லை. அதற்காக அது செய்யப்படக்கூடாதென்பதல்ல. ஜெயமோகனிற்கு எங்கள் போராளிளோடு ஆத்தமார்த்தமான பிணைப்போ அன்போ இருக்கப்போவதில்லை. அவரிற்கு அவர்களின் செயற்பாடுகள் ஏற்படுத்தும் மலைப்பு அம்மலைப்பை ஆழமாகப் பார்க்கும் ஆர்வமும் மட்டுமே தோன்றும். சார்ல்லை ஒரு பல்பரிமாணம் கொண்ட ஆழமையாகக் காட்டி, அத்தகைய ஒருவன் எவ்வாறு ஆயுதமாகிறான் எனத் தனக்குத் தெரிந்தவரை ஜெயமோகன் ஆராய விழைவது அபத்தமாக எனக்குத் தோன்றவில்லை. சார்ல்சை ஆயுதம் என்று அழைப்பது மரியாதைக்குறைவு என்று நான் கருதவில்லை. மனிதனே ஒரு சிக்கலான மனவோட்டம் உடையவன், சார்;ல்ஸ் சாதாரண மனிதனைக் காட்டிலும் புத்திக்கூர்;மையும் பல்பரிமாணங்களும் கொண்ட ஒருவன், அவன் எவ்வாறு குப்பி கட்டி ஆயதமானான் என்று எங்கள் நாட்டைச் சாராத ஒரு வெளிநாட்டவன் வியந்து நிற்பது குற்றம் என்று என்னால் கொதிக்க முடியவில்லை.

இன்னும் எழுதத் தோன்றுகின்றது ஏற்கனே நீண்டுவி;;ட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன. இது எனது பார்வை மட்டுமே. நிச்சயமாக பல கோணங்களை நான் தவற விட்டிருப்பேன். எனது பார்வை பிழையாகவும் இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள் திருந்திக் கொள்கிறேன்.

சந்தர்ப்பத்திற்கு நன்றி நிழலி

Edited by Innumoruvan

உலோகம் எங்கு (இணையத்தில்) வாங்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

உலோகம் எங்கு (இணையத்தில்) வாங்கலாம்?

http://www.udumalai.com/

Paypal மூலம் பணம் செலுத்தி வாங்கினேன். இருப்பில் உள்ள புத்தகங்கள் விரைவில் கிடைத்தன. சில காலம் தாழ்த்திக் கிடைத்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் விளக்கங்களுக்கு நன்றி. பல கோணங்களில் பார்க்க வைத்தாலும் இலக்கை நோக்கிய நிழல் போராளிகள் வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கிய இலட்சியத்தில் தெளிவாகப் பயணித்திருக்கின்றார்கள்.

இன்னுமொருவனின் மிக நுணுக்கமான அவதானம் பிரதி ஒன்றின் மறுவாசிப்புகள் பற்றிய பிரக்ஞையை உருவாக்குகின்றன. உங்களின் சில கருத்துகளுக்கு இந்த வார இறுதியில் பதிலளிக்க முயல்கின்றேன்.

நேர பற்றாக் குறையில் Light Reading தான் செய்ய முடிகின்றது அநேகமான நேரங்களில்...

http://www.udumalai.com/

Paypal மூலம் பணம் செலுத்தி வாங்கினேன். இருப்பில் உள்ள புத்தகங்கள் விரைவில் கிடைத்தன. சில காலம் தாழ்த்திக் கிடைத்தன.

இவர்களிடம் தேவையான புத்தகங்கள் உள்ளது. கடந்த இரு நாட்களாக Paypal மூலம் பணம் செலுத்த முயன்ற பொழுது 'உரியவர் தொடர்பில் இல்லை' எனும் செய்தி வந்தது.

இன்று Paypal முறையில் பணம் செலுத்தும் முறையை நீக்கி விட்டார்கள்.

'ஏழாம் உலகம்' லண்டன் வாசிகசாலைகளில் உள்ளது. இணையத்தில் பதிவு செய்து அருகிலுள்ள வாசிகசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலோகம் கிழக்கிலும் வாங்கலாம். nhm.in

தப்பிலி அவர்களது பேபாலில் என்னவோ சிக்கல் என்றார்கள். ஆனால் தேவையான புத்தக விபரத்தை அனுப்பினால் அதற்கான பெறுமதியையும் பேபாலில் பணம் அனுப்புவதற்குரிய முகவரியொன்றையும் தருகிறார்கள்.

உலோகம் கிழக்கிலும் வாங்கலாம். nhm.in

தப்பிலி அவர்களது பேபாலில் என்னவோ சிக்கல் என்றார்கள். ஆனால் தேவையான புத்தக விபரத்தை அனுப்பினால் அதற்கான பெறுமதியையும் பேபாலில் பணம் அனுப்புவதற்குரிய முகவரியொன்றையும் தருகிறார்கள்.

தகவலுக்கு நன்றி சயந்தன்.

  • 4 months later...

423347_10150702234760376_620340375_11346880_1185937006_n.jpg

கனடாவில் ஜெயமோகன் .பழைய படம் ஒன்று கிடைத்தது.

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.