Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் 2011 கனடா

Featured Replies

392070_113946415386160_100003124068599_78969_2013688857_n.jpg
  • Replies 53
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை என்பது எல்லா விடயங்களிலும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் அவாவுமாகும்....

canada-heros-day-2011.jpg

தமிழீழ தேச விடுதலைக்காக தம்மை முழுமையாக ஈகம் செய்த மாவீர தெய்வங்களை நினைவு கூரும் நாளான ‘தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளை’ கனடாவில், நவம்பர் 27ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஒரே நாளில், ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக நடத்துவதென அனைத்துத் தமிழர் அமைப்புகளும் ஏகமனதாக தீர்மாணம் எடுத்துள்ளோம்.

எமக்காக, எமது தேசத்துக்காக, எமது வாழ்வுக்காக, தம்முயிர் ஈந்து விதையாகி நிற்கும் எமது மாணிக்கங்களான மாவீரருக்குரிய நாளில் நாமெல்லாம் முன்னைய வருடங்களைப்போல இந்தவருடமும் இனி வருகின்ற வருடங்களிலும் ஒரே நாளில் ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒன்றாகக்கூடி நினைவுச்சுடர் ஏற்றுவோம்.

காலம்: நவம்பர் 27, 2011 ஞாயிற்றுக்கிழமை

ரொறன்ரோ

நான்கு நிகழ்வுகள்

1ஆம் நிகழ்வு: காலை 6.30 மணி

2ஆம் நிகழ்வு:; மதியம் 12.00 மணி

3ஆம் நிகழ்வு: மாலை 03.00 மணி

4ஆம் நிகழ்வு: மாலை 06.00 மணி

இடம்:

Markham Fair grounds

10801 McCowan Road

Markham, ON L3P 3J3

(McCowan Road & Elgin Mills Road East)

(விசேடமாக அமைக்கப்பட்ட சூடேற்றிய உள்ளரங்கம்)

நாளை மதியம் 12 மணிக்கு நான் செல்கின்றேன். எல்லா கனடா வாழ் தமிழ் உறவுகளும் இந் நிகழ்வுக்கு சென்று எம் மாவீரர் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

  • கருத்துக்கள உறவுகள்

இரு குழுக்களாக நடத்துகிறார்கள் என்றால் இரண்டுக்குமே சென்று வருவதுதான் நல்லது..! :unsure: ஒருவேளை ஒரு குழு சிங்கள அரசின் வழிகாட்டலில் குழப்பம் விளைவிக்க இறக்கப்பட்டிருக்குமானால் எமது புறக்கணிப்பு அவர்களுக்கு வெற்றியாகவே முடியும்..! :blink:

ஊரில ஆயிரத்தெட்டு கோயில்கள் இருக்கு.. எல்லாத்துக்கும் போறம்தானே..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வணக்க நிகழ்வு

1 ஆம் நிகழ்வுக்கு காலை 6.30 இற்கு நான் செல்வதாக இருக்கின்றேன்

- இங்கே இரு தரப்பையும் ஒற்றுமையாக்கிய அனைவருக்கும் நன்றிகள்

- ஒவ்வொரு சதத்திற்கும் கணக்கு காட்டப்படும் என அறியத்தரப்பட்டுள்ளது, இரு தரப்பாலும்

- ஒரு நீண்ட கால அடிப்படையில், நிரந்தர மாவீரர் இல்லமும் அமைக்க வழி அமைக்கப்படலாம்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக கனடாவில் இதுவரைகாலமும் நடாத்தப்பட்ட மாவீரர் நாட்களில் முதல் நிகழ்விற்கு அது அதிகாலையில் ஆரம்பமாவதால் மக்கள் குறைவாகவே கலந்து கொள்வார்கள் அடுத்தடுத்த நிகழ்விலேயே அதிகமாக மக்கள் கலந்து கொள்வார்கள் இம்முறை ஆரம்ப நிகழ்விலேயே அதிகளவான மக்கள் கலந்து கொண்டும் அதிகாலையிலேயே வணக்கத்தை அம்மண்டபத்தில் செலுத்தி வெளியேறியவண்ணம் உள்ளார்கள்...

நேரடி அவதானிப்புடன் இவள் வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilthai.com/newsite/?p=11

கனடாவிலி நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு

Edited by valvaizagara

பலநூறு சக உறவுகளுடன் டொராண்டோ மாவீரர் தினத்தின் முதல் அமர்வுக்கு சென்று சமூகமளித்தேன்.

பலநூறு உணர்வலைகள் கண்களை மூடி நின்ற என்னுள் முட்டி மோதின. கவலை, கோபம் இந்த இரண்டு உணர்வுகளுக்கும் இடையில் மாவீரர்களின் வீரம், அடிபணியாத தலைமை எனக்குள் ஒரு அமைதியை தந்தது. இருந்தாலும் அங்கு ஒலிபரப்பான பாடல்கள், ஒளிப்பதிவு காட்சிகள்

கண்களை ஈரமாக்கின. பல நூறு மாவீரர்களின் பெயர்கள் அவர்கள் விம்பங்கள் நெஞ்சுக்குள் ஓடிய வண்ணம் இருந்தது.

அவர்களின் கனவான தாயக மக்களின் சுதந்திர வாழ்க்கையை உறுதிசெய்வதே உண்மையான அஞ்சலி என மனச்சாட்சி எனக்குள்ளே சொல்லிக்கொண்டது.

அந்த உறுதியுடன் என்னாலான பங்களிப்புக்களை செய்வேன் என்ற உறுதிமொழியுடன் மாவீரர் சந்நிதியில் இருந்து விடைபெற்றேன்.

பொதுவாக 'பணம்' சம்பந்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் பொழுது அது சாதாரண மக்களை, அவர்கள் தரும் ஆதரவை ஆழமாக பாதிக்கும். அதேவேளை ஒரு மாவீரர் நிகழ்வை நடாத்துவது என்பது பலரின் பலமணி நேரங்களை, சில வேளைகளில் தமது சொந்த பணத்தை செலவழித்தே நடக்கின்றது.

செலவான விடயங்கள்:

- ஒரு பெரிய உள்ளகஅரங்கு நிர்மாணிக்கப்பட்டு இருந்தது

- ஒலி- ஒளி வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தது, அதில் வெள்ளை இனத்தவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது

- வாசலில் கார்த்திகை பூக்கள் இலவசமாக வழங்கப்பட்டது

- பல நூறு கதிரைகள் போடப்பட்டு இருந்ததன

சுயநேர அர்ப்பணிப்புக்கள்:

- பல மணி நேரங்கள் பல தொண்டர்கள் மழைக்குள் நின்று வாகன வசதிகளை கவனித்தனர்

- உள்ளக அரங்குள் பல நூறு தொண்டர்கள், பல இளையவர்கள் ஒழுங்கை பேண உதவினர்

- தாயக பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் என பலரும் உணர்வு பூர்வமாக பங்கேற்றனர்

பணச்சேர்ப்பு:

- உணவு விற்றல். பொதி ஒன்று மூன்று டாலருக்கும் மற்றும் கோப்பி போன்ற பானங்களும் விற்கப்பட்டன

- அமைப்பாளர்கள் வாசலில் ஒரு மேசை போட்டு, யாரையும் வற்புறுத்தாமல் நன்கொடை கேட்டு இருந்தனர். நானும் நானாகவே அவர்களை தேடிச்சென்று நூறு டாலர்களை அன்பளிப்பு செய்து, நன்றியும் கூறி பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டேன்.

..அத்துடன், 2008 இல் புலிகளின் கலைஞர்களால் கடும் அவலத்திற்கு மத்தியிலும் இயற்றிப் பாடப்பட்ட பாடல்களை தொகுத்து 'தணல்' என்ற இறுவட்டையும் 10 டொலருக்கு விற்பனை செய்து இருந்தனர். அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நெஞ்சை உருக்கும் பாடல்கள்.

நான் 12 மணிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். குறைந்தது 4000 பேராவது மண்டபத்தில் நிறைந்திருந்தனர். இன்னும் மக்கள் சாரி சாரியாக வந்தவண்ணமும் இருந்தனர். வெளியில் பெய்த மழை எவரையும் தடுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை இச் சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். சரியாகத் தெரியவில்லை. இப்படி ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்ய 1.5 இலட்சம் கனேடிய டொலர்கள் செலவாகுவதாக. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் சொந்தமாகவே ஒரு மண்டபத்தையும், அதன் அருகில் மாவீரர் நினைவகத்தையும் கட்டலாம். வங்கி தரும் நில அடமானத் தொகை கூட அந்தளவு வராது. மேலும், கட்டுவதற்கான மனித வலுவினை எம் மக்களே கொடுப்பார்கள்.

தேவை ஏற்படின், அந்த மண்பத்தினைப் பிற்காலத்தில் வாடகைக்கு விட்டு, ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவும் முடியும். இது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தினூடாகவே நடைபெற வேண்டுமே அன்றி, தனிநபரின் ஊடாக நடப்பின், திரும்பவும் பிரச்சனைகள், ஏற்படும்.

இது போன்ற எண்ணங்கள் உள்ளதாக அறிந்தேன்.

ஒரு விடயத்தை இச் சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். சரியாகத் தெரியவில்லை. இப்படி ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்ய 1.5 இலட்சம் கனேடிய டொலர்கள் செலவாகுவதாக. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் சொந்தமாகவே ஒரு மண்டபத்தையும், அதன் அருகில் மாவீரர் நினைவகத்தையும் கட்டலாம். வங்கி தரும் நில அடமானத் தொகை கூட அந்தளவு வராது. மேலும், கட்டுவதற்கான மனித வலுவினை எம் மக்களே கொடுப்பார்கள்.

சிலரிடம் கதைத்து பார்த்ததில், நிகழ்வுக்கு முன்னராக செலவை திட்டமிட்டதாகவும், நீங்கள் குறிப்பிட்ட தொகையில் அண்ணளவாக பத்தில் ஒன்று எனவும் தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

15 ஆயிரம் என்கின்றீர்களா? 2வது பிரிவினர் தாங்கள் பதிவு செய்த இடத்தை இரத்து செய்தபோது 8 ஆயிரம் டொலர்கள் செலவானதாகச் சொன்னார்கள். அப்படிப் பார்க்கின்றபோது, இந்த தற்காலிக கூடாரத்தை அமைத்த செலவு அதை விட அதிகமாக இருக்கலாம்.

எதுவோ, ஒவ்வொருமுறையும், பின்கதவால் எதிரியும், சட்டங்களும் மண்டபப்பதிவை குழப்பும் என்று அஞ்சி மறைக்கப்பட்ட நிலையில் இருந்து விலத்தி, இப்படியான இடங்களில் குளிரில் வைத்துக் வருத்தப்படுவதிலும் பார்க்க, சொந்தமாக கட்டிவிடலாம். வெறும் 10 ஆயிரம் கூடத் தேறாத வியாட்னாமியர் கூடத் தங்களுக்கு எனக் கலாச்சார மண்டபம் வைத்திருக்கின்றான். ஆனால் எங்களுக்கு என்று ஒன்றில்லை.

இங்கே இருக்கின்ற தமிழ்க்குடி இங்கே தான் வசிக்கப் போகின்றது. எமக்கு அதற்கான தயார்படுத்தல்களைச் செய்தாக வேண்டும்.

எண்ணங்கள் பல இருக்கின்றன. ஆனால் செயற்படுத்துவதில்லை. வன்னித் துயருக்கான நினைவகம் ஒன்று அமைப்பதற்குச் சிலர் முயற்சி செய்தார்கள். நாங்கள் செய்கின்றோம் என்று அதை உரிமை எடுத்தவர்கள், அதைப் பற்றி இப்போது ஒன்றையும் பேசுவதில்லை...

மன்னிக்கவேண்டும் தவறுக்கு. 1.5 மில்லியன் என நினைத்து அதில் பத்தில் ஒன்று என எழுதிவிட்டேன்.

உங்கள் கணக்கு சரி.

Edited by akootha

ஒரு நிரந்தர இடத்தை பெறுவதகு, காணியின் விலை அதிகம்.

மார்க்கம் நகரில் ஒரு ஏக்கர் For Sale: $895,000/acres

காணியின் விலை 900,000$

Business Park Development Land For Sale. The Subject Property Is Located Between Elgin Mills Rd And Major Mackenzie With Prime Exposure And Frontage On Hwy 404. The Subject Property Is Designated Business Park Area Permitting: Industrial, Office, Medical, Hotel, Trade & Convention Centres, Banquet Halls, Restaurants / Retail Stores. Buttonville Airport And Hwy 407 Located Within Minutes South Of The Property. **** EXTRAS **** The Subject Land May Be Severed Into 5, 10 Or 15 Acre Parcels.

http://www.realtor.ca/propertyDetails.aspx?propertyId=10835125&PidKey=-1739084906

இதற்கான சோலைவரி, இந்த நிலம் ஒரு இலாபகரமற்ற நிறுவனமாக பதியப்படின் குறைவாகவும், ஒரு வியாபார நோக்கத்துடன் பதியப்படின் அதிகமாகவும் இருக்கும்.

ஓரளவுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நிலத்தை மலிவாக பெறுவது நல்லது. ஆனால், அதிலும் சிக்கல்கள் உள்ளன.

387918_10150501666460752_216728625751_10793200_1060950403_n.jpg

384952_10150501667760752_216728625751_10793223_1180624149_n.jpg

384299_10150501606920752_216728625751_10793041_1730235098_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

- 70,000 க்கும் பேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

- இது வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

- சுதந்திர தமிழீழமே தீர்வாக அமையும் என உறுதிமொழி எடுத்தனர்

More than 70,000 Canadian Tamils paid homage to heroes at the Toronto Heroe’s Day event organized by the Canadian Tamil Remembrance Organization (CTRO) Sunday. Conducted in four sessions in a make-shift venue, emotions were high and messages were clear.

Despite threats of manufactured divisions towards the event, organizers came under the banner of CTRO for the importance of a strong display of unity. The event was marked with heart-touching cultural programmes reflecting on national unity amongst Eezham Tamils, highlighting successes and rejecting strategies of division in moving forward.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34657

tnlogo.gif

Kalanithy_Kulamohan_2011.jpg

Chairperson- Canadian Tamil Remembrance Organization

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் 2008 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் தாயகத்தில் உருவாக்கி முதன் முதலாக கனடாவில் 2011 ஆம் ஆண்டு வெளியிட்டு வைக்கபட்டது .

ஒலிப்பேழை - தணல்

வெளியீடு - தமிழர் நினைவெழுச்சி அகவம் - கனடா

ஒளித்தொகுப்பு - ஊடக பிரிவு - தமிழ் இளையோர் அமைப்பு கனடா

கொடுக்கப்பட்ட தகவலின்படி ஈழத்தில் இருந்து உருவாகப்பட்ட இறுதிஒலிப்பேழையின் பாடல் இது!

- 70,000 க்கும் பேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

- இது வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

- சுதந்திர தமிழீழமே தீர்வாக அமையும் என உறுதிமொழி எடுத்தனர்

More than 70,000 Canadian Tamils paid homage to heroes at the Toronto Heroe’s Day event organized by the Canadian Tamil Remembrance Organization (CTRO) Sunday. Conducted in four sessions in a make-shift venue, emotions were high and messages were clear.

Despite threats of manufactured divisions towards the event, organizers came under the banner of CTRO for the importance of a strong display of unity. The event was marked with heart-touching cultural programmes reflecting on national unity amongst Eezham Tamils, highlighting successes and rejecting strategies of division in moving forward.

http://www.tamilnet....=13&artid=34657

tnlogo.gif

Kalanithy_Kulamohan_2011.jpg

Chairperson- Canadian Tamil Remembrance Organization

சிங்களவனின் TARGET இதைப்போல இரண்டு மடங்கு .இன்னமும் 5 வருடங்களில் அதை அவன் அடைந்து விடுவான் ஏன் நினைக்கின்றேன் .

இந்த வெற்றிகரமான நிகழ்வுக்கு பல ஊடகங்கள், வியாபார நிறுவனங்கள் ( தமது கடைகளை மூடியும், நிதி உதவுயும் ) வழங்கி இருந்தனர். அவர்களை அடையாளம் கண்டு, எம்மால் முடிந்த ஆதரவை தரவேண்டும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.