Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

Featured Replies

  • தொடங்கியவர்

கவிதையே ,, ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! :)

சகோதரம்... மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்படவேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா (வரிகளா)பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,, உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா? :)

நான் எழுதுவது எல்லாம் கவிதையா என்று எனக்குத் தெரியாது! பெயரை கவிதை என்று வச்சுக்கொண்டு நான் படுற பாடு இருக்கே! :lol:

மூன்று மூன்று வரியாத்தான் போடோணும் அல்லது நான்கு, ஐந்து என்றில்லை!

கவிதை நடை கொஞ்சம் இருந்தால் போதும்தானே!

என்னைப் பொறுத்த வரையில் இலகுவான வார்த்தைகளைக் கோர்க்கவே விரும்புபவன்!

இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கும்!

இப்பொழுது உள்ள நடைமுறைக் கவிதைகளுக்கு விதிமுறைகள் குறைவு என்பது..... என்னைப் போன்ற சிறு முயற்சி உடையோருக்கு வாய்ப்பாக போய்விட்டது. எதையாவது கிறுக்கலாம்! :lol::rolleyes:

நன்றி சகோதரம்! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கவிதை இங்கு ஒபரேசன் லிபரேசன்காலத்தை மனதில் வைத்து எழுதிய சில "வேங்கையன் பூங்கொடி"யில் உள்ளது அவற்றில் சில

அந்தரவான் கந்தக முட்டை

சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்

யாழ் குடாவின் வடகரையோரம்.

மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு

செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,

முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்

உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,

வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது

வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.

கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி

மிடுக்காக வாழும் இம்மக்கள்

விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.

ஆதலால்;

வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்

வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.

இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி

ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.

ஓரிரு வாரங்களில்..

இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்

கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.

பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு

பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.

ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை

ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்

ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.

இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்

அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.

குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,

உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்

கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,

எங்கே எதுவென்று குறிக்க முடியாது

நாற்புறமும் கந்தகப் புகையோடு

கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.

தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை

மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.

போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.

பின் வாங்கல் என்பது

அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.

மக்களை மனதிடை சுமந்த மறவர்

அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.

தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்

உலைக்கள நிலையைத் துறந்தனர்.

பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு

தங்களை மாற்றிக் கொண்டனர்.

எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து

இராணுவம் ஊருக்குள் நுழைய

இராட்சதப் பறவைகள் அந்தர வானில்

கந்தக முட்டைகள் இட்டன.

அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்

வாரணமிருந்து ஏகின.

மனவலு இழந்த மோடையக் கிலியரால்

பல்குழல் சுழல்கள் சிவந்தன.

அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்

உயரிய கலிபரை முடுக்கின.

இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,

இரும்புத் துகளொடும்

அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.

குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது

குவலயப் பரப்பை மட்டுமா?

அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து

அந்திமகால சருகுகள் வரைக்கும்

தேடித்தின்று செங்களப் பேயானது.

பதுங்கு குழிகள்

மிஞ்சிய மக்களைக் காத்தன.

http://venkaiyan.blo...2009/10/20.html

எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.

அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.

பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.

கந்தகம் சுமந்து காற்று நொந்தது.

பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்

வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.

ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்

குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.

தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.

மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.

மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.

முன்னே வீழும் எறிகணைகள்

பின்னே விரட்டும் வேட்டொலிகள்

இதற்குள்

காயம் பட்டும், கதறித் துடித்தும்

உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்

கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி

அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.

இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.

அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.

உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்

தங்களை மறைத்தர்.

எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்

எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.

http://venkaiyan.blogspot.com/2009/10/21.html

சஹாரா அக்கா! தங்களின் வலைப்பதிவுகளை நான் வாசித்திருக்கின்றேன்!

தங்களின் எழுத்துக்களிலிருந்தும் நிறைய பயிலவேண்டி இருக்கின்றது.

அவை அத்தனையும் அருமையான கவி வடிப்புக்கள்! வாசிக்க வாசிக்கத் திகட்டாத வரிகள்!

நானும் முயற்சிக்கின்றேன் அக்கா.... என்னால் இயன்றவரை!

நன்றி அக்கா! :)

இது அறிவிலியின் கவிதை..! ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்துவைப் போல் படிக்கவும்..! :wub:

கவிதையே ஒரு கவிதை எழுதுமா..

கவிதையே ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! சகோதரம்...

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்பட

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,,

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா?

கோவம் வேணாம் ஓகே-வா?

:lol:

டிஸ்கி: கவிதை நீங்கள் ரென்சன் ஆகவேண்டாம்.. சும்மா பகிடிக்குத்தான்..! :icon_mrgreen:

டங்கண்ணை! ஏனண்ணை!? நான் என்ன செய்தனான் அண்ணை உங்களுக்கு???? :o:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரத்தில் களத்தில் நின்ற போராளிகளுக்கு கொப்பேகடுவ பற்றி நிறைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன! அப்ப நீங்கள் எங்கே சாத்ஸ் அண்ணை? அங்கைதானே...??? :D எதிரியின் பலத்தினை எப்போதும் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்த்திருந்தார்கள்! ஆனால்... அந்த மண்ணில் இறங்கிய சிறிலங்காப் படைத்தளபதிகளின் துரதிஷ்டமோ என்னவோ தெரியாது.... ஆயுள் குறைவாகவே இருந்தது அவர்களுக்கு! :) கொப்பேகடுவ, லலித் அத்துலத் முதலி... வரிசையில் இறுதியாக பிரிகேடியர்.விஜயரட்ண! (வடமராட்சி மக்களின் மனங்கவர்ந்த :unsure: :D இராணுவத் தளபதியாக 1996.97,98 காலப் பகுதிகளில் இருந்தவர் )

என்னுடைய பதிவுகளுக்கு அத்தி பூத்தாற்போல் கிடைத்திருக்கும் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சாத்ஸ் அண்ணை! (தங்களுக்கு கதை பிடிக்கிற அளவுக்கு கவிதைகள் அவ்வளவாகப் பிடிக்காது என்று தெரியும்.... Its ok! ) :D :D :D

உண்மைதான் கவிதை கதை அளவிற்கு கவிதைப் பகுதியில் நான் மினக்கெடுவது குறைவு . ஆனால் ஒரு காலத்தில் கவிதைகளாகவே எழுதிகுவித்திருக்கிறேன். (பெரும்பாலும் நான் மட்டுமே அதை படிச்சிட்டு கிழிச்செறிஞ்சிருக்கிறன்) சிலது வெளியாகியது . ஆனால் ஒப்பறெசன் லிபறேசன் காலம் எனக்குள் பல நினைவுகளை மீள கொண்டுவந்ததால் இங்கு எழுதியிருந்தேன்.

  • தொடங்கியவர்

உண்மைதான் கவிதை கதை அளவிற்கு கவிதைப் பகுதியில் நான் மினக்கெடுவது குறைவு . ஆனால் ஒரு காலத்தில் கவிதைகளாகவே எழுதிகுவித்திருக்கிறேன். (பெரும்பாலும் நான் மட்டுமே அதை படிச்சிட்டு கிழிச்செறிஞ்சிருக்கிறன்) சிலது வெளியாகியது . ஆனால் ஒப்பறெசன் லிபறேசன் காலம் எனக்குள் பல நினைவுகளை மீள கொண்டுவந்ததால் இங்கு எழுதியிருந்தேன்.

தங்களைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டவன்...... எனும் வகையில், எனக்கு தங்களின் கருத்துக்களின்மேல் அபிமானம் உண்டு! ஆனாலும், தங்களின் சில கருத்துக்களில் வரும் விடயங்களில் என் எதிர்ப்புணர்வுகளை தவிர்த்து விடுகின்றேன் வேண்டுமென்றே!

கருத்துக்களுடன் சந்திக்கும் நண்பர்களாக நாமிருப்போம்!

நன்றி அண்ணா! :)

தங்களின் "கிழிக்கப்பட்ட நாட்கள்" போல... கிழித்தெறியப்பட்ட (காதல்?) :wub: கவிதைகளையும் பதிவிட்டால் நாங்களும் இரசிப்போம்தானே!!??? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே கவிதை எழுதுவதுதான்

கவிதையின் அழகு

உங்கள் ஒவ்வொரு கவிதையிலும்

எப்போதுமே ஒரு செய்தி

வாசகர்களுக்கு உண்டு.

விமர்சனத்திற்கு அப்பாலும் உங்கள்

கவிதைகள் ரசனைக்குரியவை

  • தொடங்கியவர்

கவிதையே கவிதை எழுதுவதுதான்

கவிதையின் அழகு

உங்கள் ஒவ்வொரு கவிதையிலும்

எப்போதுமே ஒரு செய்தி

வாசகர்களுக்கு உண்டு.

விமர்சனத்திற்கு அப்பாலும் உங்கள்

கவிதைகள் ரசனைக்குரியவை

நன்றி வாத்தியார்!

இருந்தாலும், பாராட்டுக்களைவிட விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அண்ணா!

அவைதான் என் எழுத்துக்களை மேன்மேலும் வளர்க்கும்! அதனால்தான்........... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.