Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழாம் அறிவு: முருகாஸ் வெறும் வியாபாரியா?

Featured Replies

நான் இன்னும் ஏழாம் அறிவின் தெலுங்குப் பதிப்பையோ அல்லது ஹிந்தி பதிப்பையோ பார்க்கவில்லை; ஆனால் facebook இல் மற்றும் விகடனின் பின்னூட்டங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதனை எழுதுகின்றேன்

:நிழலி

-------------------------------------------------------------------------------------

ஏழாம் அறிவின் தமிழ் (Original) பதிப்பில் போதி தர்மனை தமிழ் மன்னன் ; பல்லவ மன்னனின் வாரிசாக 5 ஆம் நூற்றாண்டினை சார்ந்தவர் என்றும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்றும் காட்டிய முருகதாஸ்

தெலுங்குப் பதிப்பில்: அவர் குண்டூர்ல (கவனிக்க: கேரளாவின் குன்னூர் அல்ல) பிறந்தவர் என்றும்

ஹிந்திப் பதிப்பில் அவர் தாராவில் பகுதியில் பிறந்தவர் என்றும் காட்டியுள்ளாராம்

..தமிழர் பெருமையை ஒரு படி உயர்த்த சினிமா எடுத்த முருகதாஸ் மற்ற மொழி பதிப்புகளில் ஏன் அவரை பல்லவ மன்னனின்; தமிழ் மன்னனின் வாரிசாக; காஞ்சிபுர மைந்தனாக காட்ட மறுத்தார்?

----------------------------------------------------

Edited by நிழலி

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது.

தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.

தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.

ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.

குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.

e0aeaae0af81e0aea4e0af8de0aea4e0aeb0e0af8d.jpg?w=150&h=75போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன்.

போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான்.

புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.

போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.

ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.

தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.

“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,

இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.

“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.

பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.

நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.

(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)

நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.

கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.

ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.

அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.

‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.

போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?

ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.

இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.

‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.

தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.

(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)

“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.

சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?

‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?

இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ…. லேயே சுடுவான்.

ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.

இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!

***

பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.

களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.

அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.

அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.

பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான்.

எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.

அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.

அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.

கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.

7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம்.

அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.

அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.

ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.

சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.

இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.

***

இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு.

எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.

தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.

ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?

இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது

மூலம்

http://mathimaran.wordpress.com/

..தமிழர் பெருமையை ஒரு படி உயர்த்த சினிமா எடுத்த முருகதாஸ் மற்ற மொழி பதிப்புகளில் ஏன் அவரை பல்லவ மன்னனின்; தமிழ் மன்னனின் வாரிசாக; காஞ்சிபுர மைந்தனாக காட்ட மறுத்தார்?

----------------------------------------------------

மொழிமாற்று படங்களில் நடக்கும் வழமையான குளறுபடிதான். சிலபடங்களில் சென்னையில் ரௌடிகளை அழிப்பதாக காட்சி ஓடும்போது பின்னணியில் தெலுங்கில் அல்லது ஹிந்தியில் சுவரொட்டிகள் இருக்கும், அதற்காக யாரும் குறைபட்டதில்லை.

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

எதுக்கு , உங்கள அடிக்கடி எழுத கேக்குறானுவ?

ஆமா யாரு உங்க தோழருங்க?

ஒரே கன்பியூசன்!

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு , உங்கள அடிக்கடி எழுத கேக்குறானுவ?

ஆமா யாரு உங்க தோழருங்க?

ஒரே கன்பியூசன்!

அறிவிலி சில நேரம் உங்கடை பெயருக்கேற்றமாதிரியே ஒழுதிறீங்கள். சுகன் ஒருவர் எழுதிய பதிவை வெட்டி ஒட்டியிருக்கிறார் அடியிலை பாருங்க..அதுக்காக உங்க அடியிலை பாக்காதீங்க :lol:

அறிவிலி சில நேரம் உங்கடை பெயருக்கேற்றமாதிரியே ஒழுதிறீங்கள். சுகன் ஒருவர் எழுதிய பதிவை வெட்டி ஒட்டியிருக்கிறார் அடியிலை பாருங்க..அதுக்காக உங்க அடியிலை பாக்காதீங்க :lol:

நானும் , அந்த ஆர்ட்டிக்கிளுக்குத்தானே , பதில் போட்டேன்...

சுகனை பத்தி ஏத்தாச்சும் சொன்னேனா?

ஒரே கன்பியூசன்.... ஒன்ஸ் அகைய்ன்! :rolleyes:

நானு திருந்த ,,ஏதாய்ச்சும் வாய்ப்பு இருக்கா ,, சாத்ஸ்? :(

நன்னாதானிருக்கு 8ம் அறிவு கிரிடிக்.

“பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

இவரைவிட மகனுக்கு கொஞ்சம் கூடவாக விளக்கமிருக்கு. அது எந்த மொழியிலை வாற பேரு “கவின்”

சிவனின் உருவம்தான் முதன் முதலில் இந்தியாவெங்குமே தோன்றிய மரத்தின் கீழிருந்து தவம் செய்யும் துறவியின் கழிமன் உருவம். இதை திருடித்தான் ஆரியர் புத்தரின் சிலை செய்தவர்கள். வடக்கிலிருந்து வந்த ஆரியப்படையெடுப்புகள் உருவங்களை மட்டுமல்ல தமிழரின் கழி மண் கலைத்திறனையுமே அழித்தது. முருகன் சிவன் கிருஸ்ணன் ஆகியோர் புத்த பெருமானுக்கு எவ்வளவோ காலத்திற்கு முன் தோன்றிய அரசர்கள். புத்தர் ஆரியரால் திருடப்பட்டு அழிக்கபட்ட பழைய இந்து(சிவனின் சைவ)

சமயத்தை திரும்ப வளர்க்க பாடு பட்டவர். இவர் இந்து எதிரியல்ல. இவரை தமத்தாக திருடிக்கொண்ட வட ஆரிய மத வெறியர் திரும்ப புத்த சமயத்தையும் திருடி தமது வெறிகளை அந்த மதத்திலும் புகுத்தி அதையும் அழித்தார்கள். இதே கேடுதான் புத்தர் திசையில் வெளிக்கிட்ட மகாவீரருக்கும் நடந்தது. இந்த புதிய ஆரிய அடக்குமுறைச் சமயங்கள் ஆரியரால் தெற்குக்கும் படையெடுப்புகளின் போது கொண்டு வந்து அடக்குமுறை சின்னகளாக பரப்ப பட்டன. இந்த அடக்குமுறை சமயங்களுக்கும் பார்பண இந்து மதத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. குருமார் கையில் ஆட்சி இருக்கவேண்டும்-அவ்வளவுதான். சிவன், முருகன், கிருஸ்ணன், (புத்தரும் கூட) மாதிரி அரசர்கள் சமூகத்தொண்டர்களாக இறங்கி வந்தது போல் இந்த துறவி குருமார் இறங்கி வர மாட்டர்கள். சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறி திரும்ப சைவத்திற்கு வந்த மூவர் இந்த ஆரியரால் திருடப்பட்ட சமணசமய கோட்பாடுகளை தாக்கித் தான் எழுதியுள்ளார்கள். இவர்களை (கிறிஸ்த்தவ-பார்பண இந்து மதங்களை எதிர்த்த) ஜித்து கிரூஸ்ண மூர்த்தியுடன் ஒப்பிட முடியும்.

  1. இளங்கோ தொடக்கத்திலும்
  2. வள்ளுவன் இடைக்காலத்திலும்
  3. திருநாவுக்கரசர் முடிவிலும் பலவந்தமாக சமணத்திற்கு மதம் மாற்றம் செய்ய பட்டு திரும்பி தாமாகவே சைவத்திற்கு வந்தவர்கள்.

இவர்கள் தங்கள் காலத்து ஆரிய எதிர்ப்பை செய்துள்ளார்கள். வள்ளுவன் அந்தணரை வரையறுப்பதில், பழைய சிந்துவெளி நாகரீகத்திதில் காணப்பட்ட சிவனின் பாணி சமூகசேவையளர்களை நினைவு படுத்துகிறார். சம்பந்தர், போர்வீரர் குடும்ப திருநாவுக்கரசர் தொடக்கிவைத்த பக்திமார்க்கம் தனது பார்பாணிய குல வேத பாணி “ரிச்சுகல்களை” விட முக்கியமென்கிறார். (பக்தி மார்கத்தின் படி)காதலாகி தமிழ் மந்திரமான நாமசிவாயவை சொல்வது வேள்வி தீ வளர்த்து வேத மந்திரகளை உருப்போடுவதை விட முக்கியம் எங்கிறார். இதனால்த்தான் இவர்களைத் தொடர்ந்து வந்த அறுபத்து மூவரும் பார்பணியர்கள் அல்ல.

மதங்கள் வந்து-போனபோதும், பார்பண ஆதரவு வந்து அதன் பின் எதிர்ப்பு வந்த போதும், வேதனைப்பட்டவர்கள் தமிழர்கள். ஆதாயப்பட்டவர்கள் ஆரியர்கள். எனவேதான் எந்த கூச்சலும் எனது காதுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

அம்பதேகர் மதம் மாறுவது அவரின் தனி மனித சுத்தந்திரம். இலங்கைக்கு வராதவர் என்பதால்.

1. வறியோரின் பிள்ளைகளைத் திருடி குமாருக்கு தீண்டாமை வேலை செய்விப்பது.

2. ஜீவகாருணியம் இல்லாமல் எல்லாவறையும் புசிப்பது உடம்பை வளர்ப்பது.

3. ஆட்சி அதிகார அர்சியல் நடத்துவது,

4. தன்னின சேர்க்கை.

5.அப்பாவி பெண்கள் மிது பாலியல் வாக்கிரம்.

6. முற்று முழு சாதி சணடைகளை சிங்களவர்களிடம் வளர்ப்பது.

7.போதை வஸ்த்து யாபாரம், திருட்டு

போன்ற எல்லாவற்றை எல்லாம் செய்வது தான் புத்த சநியாசம் (ஆசையின் திருவுருவங்கள்) என்பதை அரியதவர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

uthayan_index_top_left.jpgமுகப்பு எம்மைப்பற்றி விளம்பரங்கள் அறிவித்தல்கள் தொடர்புகளுக்கு logonbanner-1.jpg Lsl8VEA0.gif exVA3mol.jpg

hotnews.jpgஇலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி ஐ.நா. - கூட்டமைப்பு சந்திப்பு: நியூயோர்க்கில் நாளை pic.jpg vide.jpg சிறப்பு கட்டுரைகள் >> 7ஆம் அறிவு எமக்காகவா.. ? 7ஆம் அறிவு எமக்காகவா.. ? ae105c1b81a30306e237c7018ce40283.jpgஇன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இப்போது எங்களின் காதுகளுக்குள் புகும் பாடல் வரிகள் இவை. இதனை விட அதே பாடலில் "நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? கழுத்தோடும் ஒரு ஆயுதத் தைத் தினம் களங்களில் சுமக்கின்றோம். பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்தப் பகை மூட் டம் வந்து பணியாமல் எங்கள் இருவிழி உறங்குமா? '' இந்தப் பாடல் வரிகள் உறங்கிய எமது தமிழினத்தை மெல்லத் தட்டியெழுப்பியிருக்கிறது.

ஈழத் தமிழன் வன்னியில் பட்ட அவலத்தை, இலங்கை மண்ணில் ரத்தம் தோய்ந்த நிலையில் வாழ்ந்த தமிழினத் தின் வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றது. உலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரம் உயர்வாகப் பயன்படுத்திய "சயனைட் '' குப்பியின் மகத்துவத்தை இரண்டே வரிகளில் பாடலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீபாவளிக்கு வெளி வந்து ஆறறிவு படைத்த உலகத் தமிழர் களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 7 ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளே அவை. உணர்வுள்ள தமிழர் களின் உள்ளங்களைக் களவாடியிருக் கின்றது இந்தத் திரைப்படம். இந்தப் பாடல் வரிகளுக்கு நக்கீரன் இணையத் தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் காணொளிகளை இணைத்து வெளியிட்டுள்ளது. பாடல் வரிகளும் தமிழீழ மண்ணில் நடந்ததை சுட்டிக் காட்டுவதாவே அமைந்திருக்கின்றது. உலகத் தமிழர்களின் உணர்ச்சிகள் மீண்டும் ஒரு முறை தூண்டப்பட்டிருக்கி ன்றது. இதனை விட படத்தின் கதை வசனங்களிலும் கூட இலங்கை தமிழர்கள் விடயத்தை விட்டு வைக்கவில்லை.

" நம் மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான். நம்மளால அவன்கிட்ட இருந்து ஓட மாத்திரம்தான் முடியுதில்லே ? , இப்ப ஒவ்வொரு நாட்டிலேம் அடி வாங்கிறம் பார்த்தியா ? திருப்ப அடிக்கணும் '' என்ற சூர்யாவின் பேச்சுக்கு " வீரம் வீரம் என்று சொல்லித்தானே பக்கத்து நாட்டில சண்டை போட்டாங்க. ஜெயிக்க முடிஞ்சுதா ? செத்துத்தானே போனோம்'' என்று ஸ்ருதி பதிலளிக்கின்றார்.

அதற்கு சூர்யா, "வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ. ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரமில்ல... துரோகம் ''

இலங்கையின் இறுதிப் போரில் நடந்த கொடூரத்தை அச்சொட்டாய் சொல்லுகின்றது கதை வசனம். உலகெங்கிலும் உள்ள குறிப்பாக ஈழத்தமிழர்களிடையே உணர்ச்சிகளை மீண்டும் முறுக்கேற்றியிருக்கிறது 7 ஆம் அறிவு. அடுத்த தலைமுறைக்காய் எமது வரலாறுகளை எழுதாத எம்மை இந்த இறுதி யுத்த அழிவுகளையாவது எழுதிவைக்க முயன்றிருக்கின்றது ஏழாம் அறிவு.

அதையும் 7 ஆம் அறிவில் சொல்லி வைக்க தவறவில்லை இயக்குநர் முருகதாஸ். படத்தின் இறுதிக் கட்டத்தில் சூர்யா, "நம்ம வரலாற்றை நாம தெரிஞ்சு வைச்சுக்கிறது முக்கியம். நம்ம வீரமும் பெருமையும் நம்மளுக்கு தெரியக் கூடாதெண்டு நம்ம ஆண்ட ஒவ்வொருவனும் திட்டம் போட்டு மறைச்சிருக்கிறாங்க. மதமாற்றம், மொழி மாற்றம், என்று நமக்கான அடையாளத்தை மறைச்சிட்டாங்க. போகிப் பண்டிகையில பழசை எரிக்கணும் என்று சொல்லி ஓலைச் _வடியை எரிக்க வைச்சாங்க. அதைவிடக் கொடுமை தமிழர்களின் வரலாறு, கண்டுபிடிப்புக்கள், ஆயிரக்கணக்கான அபூர்வமான புத்தகங்கள் இருந்த இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்தை முழுசா எரிச்சு சாம்பலாக்கிட்டாங்க. எல்லாத்தையும் இழந்திட்டு சின்ன சின்ன நாட்டையெல்லாம் அண்ணாந்து பார்த்து அவங்க பின்னாடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்''

வரலாறு என்பது எழுதப்படும்போது ஆளும் வர்கத்தார் தமக்கு ஏற்றதாய் எழுதுவதே வழமை. இங்கேயும் 7 ஆம் அறிவிலும் அவ்வாறே ஒரு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தமக்குச் சாதகமாய் தம்மை உத்தமர்களாய் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறான் ஒரு வன். அவன் யார்? அதை விட எப்போதும் போல இந்திய தே\ம் ஈழத் தமிழர்களை இங்கேயும் கை கழுவி விட்டிருக்கின் றது. கை கழுவியது என்று சொல்வதை விடத் தமது துரோகத்தை மெல்ல மறைக்க முயன்றிருக்கின்றது.

"கைகட்டி வாய்பொத்தி கைக்கூலி யாய் நின்று கண்ணகிக்குச் சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு, தம்பி தம்பி என்று தமிழனை நம்ப வைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி, இத் தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணி '' இது ஒரு கவிஞன் அவனை விமர்சித்த வரிகள். இந்த விமர்சனங்கள் போதும் அவன் யாரென உங்கள் மனக்கண்ணில் தோன்ற.

வேறு யாருமல்ல தமிழை வைத்தே தமிழர்களை அழித்த கருணாநிதிதான். தன்னை உத்தமனாய் உருவகிக்க அவன் எழுதும் புது வரலாறே இந்த 7 ஆம் அறிவு. 7 ஆம் அறிவுக்கும் கருணாநிதிக் கும் என்ன சம்பந்தம். நேரடியாய் களமிறங் கினால் தன்னை எட்டி உதைப்பார்கள் தமிழ் மக்கள் என்பதால் பேரனைக் கொண்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடித்திருக்கின்றார்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின். கடந்த ஆட்சிக் காலத்தில் துணை முதல் வராக இருந்தவர். அவரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஊடகவே இந்தக் காரியத்தை தொடங்கியிருக்கிறார் கரு ணாநிதி. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸே 7 ஆம் அறிவு திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆக மொத்தத்தில் கருணாநிதியின் எண்ணங்களை பேரன் செயல்படுத்தி படமாக்கியிருக்கின்றார்.

கருணாநிதி நேரடியாகக் களத்தில் இறங்காதது ஏன் ? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி தன்னை ஏற்றுக் கொள்ள மாட் டார்கள் என்பது வெளிச்சம். கருணா நிதியைத் தமிழினத் துரோகியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். எனவே நேரடியாக நுழைந்தால் இந்தத் திரைப்படம் வெற்றி பெறாது என்பதுடன் தமிழ் மக்களும் இந்த வரலாற்றை ஏற்கமாட்டார்கள். எனவே தனது பேரனின் ஊடாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முயன்றிருக்கின்றார் கருணாநிதி.

இந்தத் திரைப்படத்துக்காய் தனது முழு வளங்களையும் உயர்ந்தபட்சம் கருணாநிதி பயன்படுத்தியிருக்கின்றார். இதுவரையில் உதயநிதி ஸ்டாலினின் "ரெட்ஜெயன்ட் மூவிஸ்" தயாரிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விளம்பரங்கள் தொடக்கம் பாடல் வெளியீடு உட்பட அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். இந்த முறை 7 ஆம் அறிவு திரைப்படத்தின் விளம்பரங்கள் சன் தொலைக்காட்சியின் ஏனைய அலை வரிசைகளிலும் ஒளிபரப்பாகின்றன. இதனைவிட படக் குழுவினருடனான சந்திப்புக் கூட படம் வெளியாகிய தினம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவ்வாறு உலகத் தமிழர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்துவதற்காக கருணா நிதி எடுத்த முயற்சி கலப்படமில்லாமல் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் கருணாநிதி ஏன் ஈழத்தமிழருக்காய் 7 ஆம் அறிவில் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கியிருக்கின்றார். தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழரின் விடயங்களே மிக மலிவாகப் பேசப்படுகின்றன. மறுபுறம் அம்மா கூட ஈழத்தமிழர்களின் இழப்பை வைத்தே தனது ஆட்சிக் கதிரைக்கு வலு சேர்த்தார். வெற்றிக்காக மட்டும்தான் அவ்வாறு என்றால் அந்த அம்மாவின் செயற்பாடுகள் ஈழத்தமிழரை மையப்படுத்தி சென்றுகொண்டிருக்கின்றது. அது சென்று கொண்டிருக்கின்றது என்பதை விட தமிழகமக்களிடம் அது வென்று கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம்.

இந்த நிலை தொடருமானால் தள்ளாடும் வயதில் தன்னால் மீண்டும் ஆட்சிக் கதிரைக்கு வரமுடியாமல் போய்விடுமோ என்று அச்சப்பட்டு அவசர அவசரமாய் களத்தில் குதித்திருக்கிறார் கருணாநிதி. அம்மாவின் ஆசீர்வாதத்தோடு களமிறங்கிய விஜயின் வேலாயுதம் பரிதாபமாக நிற்கின்றது. இங்கு தமிழனைக் குழி பறிக்க தமிழினிடமே புகுந்த 7 ஆம் அறிவு வெற்றிக் கொடி கட்டுகின்றது.

ஈழத்தமிழ் மக்களையும் உலகத்து தமிழ் மக்களையும் பொறுத்த வரையில் இலங்கையின் இறுதிக் கட்டங்களில் நடந்த போரின் கொடூரத்தை வைத்து உல கில் தமிழினத்துக்கு அங்கீகாரம் வாங்கி விடத் துடிக்கின்றனர். அதனை வைத்து தான் செய்த பித்தலாட்டங்களை மறைத்து மீண்டும் தனது இருப்பை நிலை நிறுத்த முயற்சிக்கின்றார் கருணாநிதி.

இறுதி யுத்தத்தின் கணங்களையும் இலங்கையில் நடந்த அநீதிகளையும் சுட்டிக்காட்டிய 7 ஆம் அறிவின் இயக்குநர் முருகதாஸால் ஏன் கருணாநிதி ஆடிய பத்தலாட்டங்களைத் தொட்டுவிட்டுக் கூடச் செல்ல முடியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மொத்த தமிழினமும் ஏங்கித் தவித்தபோது தமிழகத்தில் இடம்பெற்ற தேர்தலுக்காய் முதலமைச்சர் நாற்காலியில் இருந்து கொண்டு நான்கு மணி நேரம் நடத்திய உண்ணா விரத நாடகத்தை மறந்து விட்டார்களா? தமிழனுக்காய் நீதி கேட்பதாய் டெல்லி பறந்து தனது உறவுகளுக்காய் அதிகாரம் கேட்டதை மறந்து விட்டார்களா ? தமிழ்ச் செல்வனுக்காய் கவிபடித்து பாராட்டு பெற முயன்றதை மறந்து விட்டாயா ? தந்தியடித்து தந்தியடித்து ஏமாற்றிய காலங்கள் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா ? மனித சங்கிலி என்று மக்களை நடு வீதியில் நிற்க வைத்துவிட்டு காரில் உல்லாசமாய் சுற்றிப்பார்த்து ஏமாற்றியது இவர்களுக்கு தெரியவில்லையா ? இவ்வாறு கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு செய்தவையெல்லாம் முருகதாஸால் படத்தில் ஓர் இடத்தில் கூட முனங்க முடியவில்லையே ?

இதனை விட தெளிவாக " நாங்கள் முதலில் இந்தியர்கள். அதன் பின்னர் தான் தமிழர்கள்'' என்பதையும் படத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அதாவது 7 ஆம் அறிவின் திரைக்கதைபடி இந்திய தேசத்தை அழிக்க வரும் சீன நாட்டவனை சூர்யா எதிர்க்கின்றார். அப்போதுதான் "நம்மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான்'' என்று சொல்கின்றார். மொத்தத்தில் இலங்கையில் தமிழனை அழித்ததையும் சீனாவின் மீது பழி போட்டு, இந்தியா செய்த துரோகத்தையும் கருணாநிதி செய்த துரோகத்தையும் போக்க முயன்றிருக்கின்றார்.

இப்போது புரிகின்றதா ? 7 ஆம் அறிவை பின்னின்று இயக்குபவன் யாரென்று. தனக்காய் தான் எழுதிய வரலாற்றை எங்களுக்குள் எப்படித் திணிக்கின்றான் என்று. இதை அறியாமல் நாம் 7 ஆம் அறிவு ஈழத்தமிழரின் திரைப்படம் என்று கத்தித் திரிகின்றோம். இதனை விட சமூக வலைத்தளமான "பேஸ்புக்கில்" 7 ஆம் அறிவுக்காய் எத்தனை போராட்டங்கள்.

எங்களை அறியாமல் எங்களின் துரோகிக்கு நாங்கள் மீண்டும் இடம் கொடுக்கின்றோம். மீண்டும் கருணா நிதியை பலப்படுத்துகின்றோம். மீண்டும் இந்திய தேசத்தின் காலடிகளை கழுவுகின்றோம். எமது வரலாற்றை நாமே எழுதும் வரை இவ்வாறு கருணாநிதி போன்ற புல்லுருவிகள் தங்களுக்காய் எங்களின் வரலாற்றை மாற்றியமைத்து எங்களிடமே பிழைப்பு நடத்துவார்கள்.*

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியப்பட்டர் தமிழனா என்ற கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதில், அவர் பிறந்தது தென்நாட்டில் என்பதே ஆராட்சியாளர்களின் ஊகம். அவர் தமிழனாக இல்லாவிடினும் கன்னடாகவோ, அல்லது தெலுங்கனாகவே இருந்திருக்கக்கூடும். ஆரியர், திராவிடர் என்ற பதம் பாவனையில் வந்தது பிற்பட்ட காலத்திலே இன்றி, அக்காலப்பதியில் குறித்த பிரிவினைரை அடையாளம் செய்வதற்காக அiது பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் கொள்க..

ஆரிய என்று வந்ததால் ஆரியப்பட்டர் ஆரியன் எனக் கொள்வது தவறானதாகும்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

பத்தி வச்சிட்டாங்கப்பா.. கள்ள குறிச்சி காரன்ட அசிசண்டா ஒர்க் பண்ண பல பேர் களத்துல நிக்கிறாகவுக.. அடுத்தவனுக்கு புல் போத்தல் வாங்கி குடுத்து கதைய சுடும் கவுதம் காசு மேனன்.. சர்வதேச திரைபட விழாவில் மெனக்கெட்டு உக்காந்து கதைய சுடும் கஸ்கின் போன்றவர்களை விட ஏதோ வரலாற்றுபடம் எடுப்பவர்களை நிம்மதியா விடுங்கப்பா.. பொன்னியின் செல்வன் டிராப் ஆகி போச்சி இந்த மாதிரி அக்கப்போர் வரும் என்றுதான்.. தானை தலைவர் மகேஸ்பாபு தமிழில் என்ட்ரி குடுக்க வேண்டியது தள்ளி போச்சி...

டிஸ்கி:

ஏண்டா பணம் புரடியூசர் குடுக்கிறான் .. போட்ட பணத்தை எடுக்க வேணாமா.. காசு நீங்க குடுபீங்களா? உலகதமிழர்களின் வெற்றி என்று வேலாயுதம் ஆட் குடுக்கிறான் .. தியேட்டருக்குள் போய் பார்த்தால் 9 பேர் உக்காந்திருக்கான்.. அவனவன் வரலாறு அவனவனுக்கு தெரியும். படம் பார்த்தமா போனமா என்று இல்லாம...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.