Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் வாழ்வில் என்றும் நிவேதா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் உள் மனது இன்றைக்கும் உச்சரிக்கும் ஓர் பெயர் நிவேதா....

எத்தனை புயல்கள், எத்தனை பூகம்பங்கள், எத்தனை ஆழிப்பேரலைகள் வாழ்வில் வந்து தாக்கிவிட்டுச் சென்ற போதும் எல்லாக் காயங்களையும் கொஞ்ச நேரமாவது ஆற்றிக்கொள்ளும் மருந்தாய் என் வாழ்வில் தென்றலாய் வந்து வருடிச்செல்லும் ஓர் பெயதான் நிவேதா....

ஆம் பாடசாலை செல்லும் வயதில் ஏற்பட்ட பருவக்காதல் தான். பலரும் சொல்வார்கள் பாடசாலை செல்லும் வயதில் ஏற்படுவது உண்மையான காதலல்ல அது ஓர் இனக் கவர்ச்சியென்று. அது இனக் கவர்ச்சியானால் ஏன் அது இன்றைக்கும் நீடிக்கிறது, அவள் பெயரின் நினைவு இன்றைக்கும் ஏன் என் நினைவை வருடிச் செல்கிறது, ஏன் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது....

சரி.. சரி... வாருங்கள் என் வீட்டு அடுப்படியில் இருந்து அவள் சென்ற வீதியெல்லாம் உங்களையும் என்னுடன் சேர்த்து சிறிது வரச் சொல்கிறேன்.....

நான் உங்களை கி.மு, கி.பி காலத்துக்கல்ல இ.மு, இ.பி காலத்தில் ஆம் இசையெனும் சகாப்ததில் இளையராஜாவுக்குப் பின்னான, காதலில் சிக்காத மனதையும் தன் பாடலால் காதலிக்கத் தூண்டிய அந்த இசை ராட்ஷசனின் காலத்துக்குத்தான் சிறிது வரச் சொல்கிறேன்.... போவோமா....!

........

ஏன் இன்றைக்கு இந்தத் துள்ளுத் துள்ளுறானோ தெரியேல்லை, அடுப்பும் எரியுதில்லை கொஞ்சமெண்டாலும் புட்டும் சம்பலும் சாப்பிட்டிட்டு போவான் என்று பார்த்தால் இந்தத்துடி துடிக்கிறார் இவர் ஏதோ பெரிய படிப்புக்காரன் மாதிரி....

நில்லு சம்பல் அரைச்சிட்டன், புட்டும் கொஞ்சம் அவிஞ்சால் சரி... !

அம்மாவின் கத்தல் என் காதில் விழாத மாதிரி அவசரமாய் வெளிக்கிட்டுக்கொண்டிருந்தேன்...

பூங்காக்களில் எத்தனையோ மலர்கள் எந்தநாளும் பூத்திருந்தாலும் அதை நாம் என் நாளும் பார்த்து ரசித்தாலும் என்றோ ஓர் நாள் ஒரு மலர் எம் கண்ணைப் பறிக்கும்..... அது போலத்தான் நிவேதாவும் என் கண்ணைப் பறித்து சில நாட்கள் தான்.

அவளைப் பார்க்கத்தான் இந்த அவசரம் என்று என் அம்மாவுக்குத் தெரியாதுதான், பிள்ளை ஏதோ படிக்க அவசரப்படுகிற மாதிரியும் சாப்பிடாமல் போனால் படிப்பும் ஏறாது, அத்துடன் வீட்டிலேயே கனக்கச் சாப்பிடுகிறவன் ஒன்றுமே சாப்பிடாமல் போனால் எப்படியிருக்கும் என்பது அம்மாவுக்குத் தெரியும்.

ஏதோ அம்மாவும் ஒருமாதிரியாய் புட்டு இறக்கிக் கொடுக்க அவசரமாய் அரையும் குறையுமாய் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட... பிள்ளை இண்டைக்கு வடிவாய் சாப்பிடேல்ல என்ற கவலையில் அம்மாவும் ஆற அமர இருந்து சாப்பிடுவன் ஏன் இண்டைக்கு இப்படித் துடிக்கிறனோ தெரியாது என்று பேசிக்கொண்டே வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பிப் பார்த்துவிட்டு போக... அந்த வீதியே தாங்காத வேகத்தில் என் சயிக்கில் சும்மா காற்றாய்ப் பறந்தது.

காதலுக்காக அவனவன் உயிரையே விட நானோ சாப்பாட்டுக்காகக் காதலையே விடத் துணிந்திட்டனே எனும் குற்ற உணர்வுடன் என் சயிக்கில் இன்னும் வேகத்தைக் கூட்டி ஒருமாதிரியாக வரவேண்டிய சந்திக்கு வந்து சேர்ந்தது என் சயிக்கில்....

வந்து சேர்ந்து மணிக்கூட்டைப் பார்த்தபோது அவள் அந்த கடையடிக்கு வரும் நேரம்.....

மீண்டும் தொடரும்..

Edited by இளங்கவி

என்ரை சரக்கை நீர் பார்க்கவில்லை தானே ?

தொடருங்கள் பார்ப்பம் .

குளிரும் தொடங்க பழைய காதலிகளும் ஒவ்வொன்றாக வருகினம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் இளங்கவி! மீண்டும் கண்டத்தில் மிகவும் மகிழ்ச்சி!

காதலுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியங்களும் உள்ள போது வருவது தானே, கல்லூரிக் காதல்!

இயற்கை உருவாக்கும் ஏக்கங்களை, இறுக்கமாக மனங்களில் மூடி வைத்து விடுகின்றோம்!

மூடிப் போன மனங்களைச் சிலர் திரும்பத் திறந்து பார்ப்பதுண்டு! பலர் திறக்க விரும்புவதில்லை!

காத்திருக்கிறோம், உங்கள் தொடருக்கு!!!

குளிரும் தொடங்க பழைய காதலிகளும் ஒவ்வொன்றாக வருகினம் :)

:D :D :D :D :D

அடக்கடவுளே மொத்ததில் யாழ் களத்தில் இருக்கும் முக்கால்வாசிபேருக்கு உள்ளேயும் ஒவ்வொரு கதை மறைந்திருக்கும்போல.... ம்ம்ம் தொடருங்கள் படிப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே மொத்ததில் யாழ் களத்தில் இருக்கும் முக்கால்வாசிபேருக்கு உள்ளேயும் ஒவ்வொரு கதை மறைந்திருக்கும்போல.... ம்ம்ம் தொடருங்கள் படிப்போம்

டீசென்டா ஒன்று என்று சொல்லி தப்ப பார்க்கிறானுங்க. உள்ளை ஒரு கூட்டமே குத்துக் கல்லாட்டம் இருக்கும். :rolleyes::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

குளிரும் தொடங்க பழைய காதலிகளும் ஒவ்வொன்றாக வருகினம் :)

அலைமகள் ஊரில் மழைவரப்போகிறது என்றால் ஒருவகை பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறப்பினம் தெரியுமா....?அது மாதரித் தான் இப்போ யாழிலும் பழைய நினைவு பகிர்வுக் காலம்..நடக்கட்டும்,நடக்கட்டும்...வாசிப்பதற்கு காத்திருக்கிறோம்..இளங்கவியை ஆடியில் ஒன்று ஆவணியில் ஒன்று என்று பதிவுகளை இடாமல் விரைவாக எழுதும்படி அன்போடு கேட்டுக் கொண்டு செல்கிறேன்.

இளங்கவி கவிதை தான் தருவார் என்று பார்த்தல் கதையும் தருகிறார்...

'நீ சொன்னால் நீ சொன்னால் நிவேதா... சரி தான் சரி தான் நிவேதா...'

இந்தப் பாட்டை அடிக்கடி கேட்டிருபீங்களே... ^_^

http://download1075.mediafire.com/cw5xj6bwrrig/o1zkmrijjmm/Lovely+-+Silver+Nilave+Azhakiya.mp3

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சீக்கிரம் தொடர்க .............வாசிக்க காத்திருக்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை சரக்கை நீர் பார்க்கவில்லை தானே ?

தொடருங்கள் பார்ப்பம் .

arjun

எனக்கு எப்படித் தெரியும் அது உங்கடை ஆளோ இல்லையா எண்டு.

உங்கடை ஆளோட பெயர் நிவேதா என்றால் நீங்கள் நிம்மத்திப் பெருமூச்சு விடலாம் காரணம் எனது கதாநாயகிக்கு உண்மையான பெயர் நிவேதா இல்லை..... :)

கருத்துக்கு மிக்க நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளிரும் தொடங்க பழைய காதலிகளும் ஒவ்வொன்றாக வருகினம் :)

அலைமகள்

என்ன அலைமகள் இப்படிச் சொல்லுறியள்....

நீங்களே காதலை இப்படி குளிருக்கான சமாச்சாரமா சொன்னால் பிறகு பெடியள் எப்படி காதலை சீரியசா எடுக்கப் போறாங்கள்..... :rolleyes:

கருத்துக்கு மிக்க நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் இளங்கவி! மீண்டும் கண்டத்தில் மிகவும் மகிழ்ச்சி!

காதலுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியங்களும் உள்ள போது வருவது தானே, கல்லூரிக் காதல்!

இயற்கை உருவாக்கும் ஏக்கங்களை, இறுக்கமாக மனங்களில் மூடி வைத்து விடுகின்றோம்!

மூடிப் போன மனங்களைச் சிலர் திரும்பத் திறந்து பார்ப்பதுண்டு! பலர் திறக்க விரும்புவதில்லை!

காத்திருக்கிறோம், உங்கள் தொடருக்கு!!!

:D :D :D :D :D

புங்கையூரன்

கல்லூரிக் காதல்... வாழ்க்கையெனும் புத்தகத்தில் படிக்கப் படிக்க சலிக்காத பக்கம்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே மொத்ததில் யாழ் களத்தில் இருக்கும் முக்கால்வாசிபேருக்கு உள்ளேயும் ஒவ்வொரு கதை மறைந்திருக்கும்போல.... ம்ம்ம் தொடருங்கள் படிப்போம்

சுஜி

தவறு.... நீங்கள் முக்கால்வாசிப்பேருக்கு என்று எழுதியது தவறு..... முழுப்பேருக்கும் என்றே எழுதியிருக்க வேண்டும்.... ஒன்று இரண்டு விதிவிலக்கைத் தவிர......

சிலபேர் சொல்ல விரும்புவது இல்லை.... சிலபேர் மீட்டிப் பார்ப்பதுண்டு.....

உங்கள் கருத்துக்கு மிக்க நனறிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டீசென்டா ஒன்று என்று சொல்லி தப்ப பார்க்கிறானுங்க. உள்ளை ஒரு கூட்டமே குத்துக் கல்லாட்டம் இருக்கும். :rolleyes::icon_mrgreen:

ஜீவா

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்... சரி.. சரி விடுங்கோ.... :)

வாழ்க்கையில் கன விபத்துக்களில் சிக்கியிருப்போம்...சில விபத்துக்கள் என்றுமே மறக்கப்படமுடியாமல் காயத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும்... அதுபோலத்தான்....

கருத்துக்கு மிக்க நன்றிகள் ஜீவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலைமகள் ஊரில் மழைவரப்போகிறது என்றால் ஒருவகை பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறப்பினம் தெரியுமா....?அது மாதரித் தான் இப்போ யாழிலும் பழைய நினைவு பகிர்வுக் காலம்..நடக்கட்டும்,நடக்கட்டும்...வாசிப்பதற்கு காத்திருக்கிறோம்..இளங்கவியை ஆடியில் ஒன்று ஆவணியில் ஒன்று என்று பதிவுகளை இடாமல் விரைவாக எழுதும்படி அன்போடு கேட்டுக் கொண்டு செல்கிறேன்.

யாயினி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

சனி அல்லது ஞாயிறு தான் அடுத்த பகுதி எழுதுவேன்.. அதுவரை சற்றுப் பொறுத்திருங்கள்.....

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி கவிதை தான் தருவார் என்று பார்த்தல் கதையும் தருகிறார்...

'நீ சொன்னால் நீ சொன்னால் நிவேதா... சரி தான் சரி தான் நிவேதா...'

இந்தப் பாட்டை அடிக்கடி கேட்டிருபீங்களே... ^_^

http://download1075.mediafire.com/cw5xj6bwrrig/o1zkmrijjmm/Lovely+-+Silver+Nilave+Azhakiya.mp3

குட்டி

நான் ஏற்கனவே சில கதைகள் யாழில் எழுதியிருக்கிறேன்....

இந்தப்பாட்டை நான் அதிகம் கேட்கவில்லை, ஆனாலும் இந்தப் பெயர் பிடித்திருந்ததால் எனது கதைக்கு உபயோகித்தேன்...

நன்றி

மேலும் சீக்கிரம் தொடர்க .............வாசிக்க காத்திருக்கிறோம்

நிலா அக்கா

நன்றிகள்...

வாரம் ஒருமுறைதான் எழுதமுடியுமென நினைத்தேன் ஆனாலும் இந்தவாரம் சுணங்கி விட்டதது...

நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரம் - 2

Edited by இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரம் -2

எந்த இடத்தில் முதன்முதலாக அவளைக் கண்டேனோ அவளைக் கண்ட நேரமும் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது...

ஆம்..... அது ஒரு காலை நேரம்...... பாடசாலைக்கு நாங்களெல்லோரும் செல்லும் நேரம்...... நான் முன்பு அவளைக் கண்டிருக்கக்கூடும், பத்தோடு பதினொன்றாக ரசித்திருகக் கூடும்.....ஆனாலும் அந்த ரோஜா எதோ ஒரு நொடிப்பொழுதில் என் கண்ணைப் பறித்ததிலிருந்து இன்று வரை என்னால் அந்தப் பார்வையிலிருந்து மீள முடியவில்லை..... என் வளமையான சிநேகிதக்கூட்டங்களில் இருந்து என்னைத் தனிமைப்படுதியிருந்தான் நிவேதா....!

நான் வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தது என் சயிக்கிலை என் நண்பனின் ரக்கோடிங்பாரடியில் சாத்திவிட்டு நேரத்தைப் பார்த்தபோது சில நிமிடங்கள் தாமதமாக் விட்டிருந்தது.....

இந்த அம்மாவாலதான் இப்படியாகிப்போச்சு என்று மனதில் அம்மாவை கோவித்துக்கொண்டுவிட்டு என் ரக்கோடிங்பார் சினேகிதப்பெடியனிடம் மச்சான்... என்ர ஆள் போனதை கண்டனியா எனக்கேட்க அவனோ நான் உள்ளே இருந்தபடியால் கவனிக்கவில்லை மச்சான் என்றான்.... சரி... சரி.... கொஞ்ச நேரம் நின்றுபார் என்று அவன் சொன்னதும்... சரி எதற்கும் நீ பாட்டை ரெடியாய் வச்சிரு என்று சொல்லிவிட்டு அவள் வரும் திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தேன்....

அந்த ரோட்டால் போன வாகனங்களோ ஆட்களோ எவரும் என் கண்ணில் படாவிட்டாலும் தூரத்தில் சந்தியில் அந்த முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேர்கோட்டில் இல்லாமல் சொத்தியாய் வாறமாதிரி வரும் பஸ் மாத்திரம் என் கண்ணை உறுத்தியது, சாதாரணமாய் சொத்தியாயும் நேராயும் மாறிமாறித் தோன்றிய வண்ணம் வரும் அந்த பஸ் கொஞ்சம் நேராக வந்தபோது அதன்பின்னே சிட்டுக்கள் கூட்டமொன்று சிறகடித்து வருவதுபோல பாடசாலைச் சீருடைகளுடன் ஒரு கூட்டம் வருவதைக் கண்டதும் என் மனது பந்தையக் குதிரைபோல துடிதுடிக்க ஆரம்பித்தது.....

மச்சான் ரெடி ஒரு குறூப் வருகுது ..ஆள் வருகுதோ தெரியவில்லை எதற்கும் ரெடி என்றதும் ரெக்கோடிங்பார் பெடியனும் காதல் எனும் சொல்லில் ஆரம்பிக்கும் சில வருடங்களுக்கு முன் வந்து சக்கைபோடுபோட்ட இளசுகளைக் கவர்ந்த அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் ரெடியாகியது...

அந்தக் குறூப்புக்களுக்கு முன் வந்த பஸ் என்னத் தாண்டிப்போகவும் சயிக்கில் கூட்டமும் கிட்டக்கிட்ட வர வெள்ளைச் சீருடையும் பச்சை ரையிலும் வந்த எனது பச்சைப் பசுங்கிளியை நான் கண்டுவிட்டு போடுமச்சான் பாட்டை என்று சொல்லவும் அவனும் பாட்டை நல்ல பேஸும் ரிபிளும் நல்லா உச்சத்தில் வைத்து அந்தப் பாட்டைப் போட்டான்.....' டிங்க்...டிங்க்..டிங்க்....டிங்க்... காதல் ஓவியம் காணும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்யம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்.... ஓ.ஓ..ஓ...' என்ற ஜென்சியின் குரலில் அந்தப் பாடல் ஒலிக்க.. அந்தத் தேனிசை என் உயிரையே பிழிந்தது.... அப்படியே ஒரு ரொமான்ஸ் பார்வையொன்றை எனது பட்டாம்பூச்சியை நோக்கி எறிந்தாலும் என் பட்டாம் பூச்சியத்தவிர மீதம் அத்தனை சிட்டுக்களின் பார்வையும் என்னத்தடவிச் சென்றது.....

முதன் முதல் என்னைப் பார்க்க வைத்த அந்தப் பார்வையை மீண்டுமொருதடவை பார்ப்பதற்கு நாயாக சில நாட்கள் அலைந்துகொண்டிருந்தும் இன்றுவரை எனக்கு ஏமாற்றம் தான்..... என்னை மட்டுமல்ல எத்தனை பெடியள் முன்னே வந்தாலும் அல்லது சயிக்கிலில் பக்கத்தால் சென்றாலும் அவள் பார்வை நிலத்தை நோக்கியே இருந்ததை நான் அவதானித்திருந்தேன்......காரணம் புரியவில்லை.

அவர்கள் கூட்டம் ரக்கோடிங்பாரைக் கடந்ததும்... சரி மச்சான் வாறன் போட்டு எனக்கும் பள்ளிக்கு நேரமாச்சு என்றதும் நண்பனும் என்னை சிரித்து வழியனுப்பிவிட்டான்.....

சிநேகிதர் கூட்டமில்லாமல் ஒரு பெண்தொடரைப் பின்தொடர்வது இதுவே முதலென்பதாலும் ஆரும் தெரிஞ்சாக்கள் பார்த்தால் தொலைஞ்சுது என்பதாலும் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும் அவளின் நினைவு என்னைக் கொன்றுகொண்டு இருந்தபடியால் இதுவொன்றும் பெரிதாகப் படவில்லை....

வேம்படி, சுண்டுக்குளி, இந்துமகளீர் எல்லாமாக ஒன்றாய் வந்துகொண்டிருக்கும் தெருவில் இந்துமகளீர் குறூப் பிரியும் சந்தி வந்ததை கண்டதும் மனது சற்று சுறுசுறுப்பானது..... இன்றைக்கு எப்படியாவது நிவேதாவுடன் கதைக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்....

வரவேண்டிய சந்தி வந்து நிவேதா தன் பாடசாலைப் பக்கமாக செல்லவும் பலதாய் வந்த சிட்டுக்கள் கூட்டம் கலைந்து சிலதுமட்டுமே என் வண்ணக்கிளியுடன் சென்றது, அதுவும் நிவேதாவின் வகுப்புக்கள் இல்லாமல் வேறு வகுப்புக்கள் என்றபடியால் ஒரளவு தனியாகவே சென்றார்கள். அட இன்னும் சில நிமிடங்களில் பள்ளிக்கூடம் வந்திடுமே சரி கிட்டப்போவோம் என்று என் சயிக்கில் அவள் சயிக்கிலுக்குக் கிட்டச் சென்று ....ஹாய் என்றதும்....... அட இங்கபாரடா அடுத்த பைத்தியக்காரன் வந்திட்டாண்டா..... என்று சிலபெடியள் கூட்டம் என்னைப் பார்த்து கேலிசெய்துகொண்டு என் அருகால் சென்றதைக் கண்டதும் ஒரே அதிர்ச்சியும் அவமானமுமாய்ப் போய்விட்டது....

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் தன்னுடன் நான் கதைக்க முயற்சிப்பதையுணர்ந்த நிவேதா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு சயிக்கிலை வேகமாக மிதிக்க நானும் அவளைத் தவறவிட்டுவிட்டேன்....

ஆனால் ஒன்றுமட்டும் என்னால் உணரமுடிந்தது...அந்தப் பெடியங்கள் சொல்லிச்சென்றதில் ஏதோ ஓர் அர்த்தம் இருந்ததாகவே உணர்ந்தேன்.... அந்தக் குழப்பத்துடன் நிவேதாவையும் தவறவிட்டுவிட்டபின் எனது பாடசாலைக்கும் நேரமாகிவிட அவசரம் அவசரமாய் நானும் எனது பாடசாலையை அடைந்தேன்....

வளமையான பாடசாலை, வளமையான சினேகிதர் கூட்டம், வளமையான பாடங்கள் எல்லாம் வளமையானவையாகவே இருக்க நிவேதாவின் எண்ணங்கள் மட்டும் வளமைக்கு மாறாக என்னச் சித்திரவதை பண்ணிக்கொண்டிருந்தது.... எப்படியோ ஒருவாறு அன்றைய பாடசாலை முடிந்துவிடவும் எவ்வளவு மனக்கஸ்ரங்கள் இருந்தாலும் ஆறும் மடி தேடி என் சயிக்க்ல் வீடு நோக்கி விரைந்தது.... அம்மாவின் கையால் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் வானொலியில் பாடல்கள் கேட்டு ஆறிக்கொண்டிருக்கவும் பின்னேரம் கிறிக்கற் விளையாடும் என் அடுத்த நண்பர் கூட்டம் வரவும் நானும் புறப்பட்டுச் சென்றேன்.....

எங்கள் கூட்டத்தில் நிவேதாவின் சொந்தக்காரப் பெடியன் ஒருதனும் கிறிக்கெற் விளையாட வளமையாக வருவது வளக்கம், ஆனாலும் நான் நிவேதாவைக் கலைப்பது அவனுக்குத்தெரியாது, இன்று அவனிடம் அவளைப் பற்றி அறியவேண்டுமென்று எண்ணி அவனிடம் கொஞ்சம் பயத்துடன் நிவேதாவைப் பற்றிக்கேட்கத் தொடங்கவும்....

அவனும் என்னடா அவளைக் கலைக்கிறியா எனவும் நானும் இல்லை மச்சான் சும்மாதான் கேட்டேன் என்றேன். சும்மாஎன்றால் சரி... ஆனால் அவளை விழுத்த ஜோசிச்சாய் என்றால் அந்த எண்ணத்தை அடியோடு மற மச்சான் என்றான்.... நானும் பதிலுக்கு ஏன்...ஏன் ஏன்.... முடியாது எனவும், அவளைவிட எத்தனையோ நல்லபெட்டையள் இருக்கடா அவர்களைப் பாக்கிறதை விட்டுட்டு முடியாததை ஏண்டா ட் ரை பண்ணுறாய் என்றான்... ஏன் மச்சான் முடியாது என்று நானும் வற்புறுத்திக்கேட்கவும் அவனும் சிரித்துக்கொண்டே சரி ஏனெண்டா மச்சான் என்று அவளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்......

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....நிவேதாவின் சொந்தக்காரரிடம் நல்லா மாட்டியாச்சா.....சரி பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..கார்த்திகை 27 முன்னிட்டு கவிதைப் பக்கமும் தலையைக் காட்டினால் நன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.