Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைத்தது ஒன்று. ..நடந்தது ஒன்று, கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 13.11.11 ஹாட் டாபிக் தரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.

அப்போது கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான் வென்று விட்டதாக பெருமை கொண்டது.

இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.

‘ ‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில் கொடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம் நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய அதிகாரிகள் ஏற்கவில்லை.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும் இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில் கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.

சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால் அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய நண்பனான இலங்கை கணித்திருந்தது.

விடுதலைப் புலிகளில் இன்னும் யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில் ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை ஒரு உபாயம் செய்தது.

அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல் முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக் கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கினர்.

சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள் அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

இந்நிலையில், இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது. ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக் குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.

ஆனால், அப்படி எந்த பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து கொண்டது இலங்கை அரசு.

இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.

இப்படி வரும் சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில் தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை அரசு.

அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.

ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு விட்டது.

தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

வடக்கில் அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப் பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின் ராஜதந்திரிகள்.

‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.

ஷானு

-குமுதம் ரிப்போட்டர்

கண் கெட்டு விட்டதோ இல்லையோ, பளிச்சென்ற வெள்ளைத்தோலை மட்டும் நன்றாக அடியாளம் கண்டு கொள்கிறார்கள். அகிலம் எங்கும் காணாத மடமை, சுதந்திரம் பெற்ற பின்னும் மாறாத அடிமை மோகம். கேவலம் கெட்ட காங்கிரஸ்சுக் கட்சி தலைவர்கள் வெட்கம் கெட்டு 150 கோடி இந்தியரையும் கழித்து விட்டு, தாம் 150, 200 பேர் பதிவிலிருப்பதற்க்காக தம்மிடம் இருந்த தலைவர்களை எல்லாம் முதுகில் குத்தி விழுத்தி விட்டு, 6 கோடி இத்தாலியில் போய் தலைவர் கடன் வாங்கி வந்தால் எப்படியிருக்கும்.

Edited by மல்லையூரான்

கிந்திய கொள்கை வகுப்பாளர்களின் தூரதர்சன அரசியல்நோக்கை இன்றும் நன்றாக புரிந்து தெளிவாக நிதானமாக காய்களை நகர்த்திவருகிறது சிங்களம்.

இந்த 'தொட்டலும் பிரச்சனை விட்டாலும் தொல்லை' என்ற கிந்திய - சிங்கள வட்டத்துக்குள் தனது கால்களை அகலமாயும் ஆழமாயும் பதிக்கின்றது சீனா.

ஆனால் மாற்றங்கள் நிகழும் அந்த தருணத்தை நாம் நழுவ விடக்கூடாது.

"தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்."

:rolleyes::icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Throughly deserve it

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப் பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின் ராஜதந்திரிகள்.

சீனா க்காரன் கேட்டதை கொடுத்துவிட்டால் சிக்கல் இருக்காது பாருங்கோ..

ஆதாவது சிக்கலுக்குரிய பகுதி என்று அறிவித்து போடுதல் முதல் படி... பிறகு புத்தர் இங்கிட்டு ஒண்ணுக்கடித்தார் அங்கிட்டு அதை போனார் என்று கவர் செய்து விடலாம்... ஏற்கனவே திருத்தணியில் போதிமரம் என்று நட்டு சிங்களவன் பியூஸ் புடுங்கிறான் ..

டிஸ்கி :

கேரளாக்காரனுக்கு பாதிப்பு என்றால் தாய்லாந்தில் இருந்து வெள்ளை 0 13 அரிசி இறக்குமதி செய்வான் பாருங்கோ .. இருக்கிறது வெள்ளை தோலு... 2 இட்லி... ஓரு பொத்த வடை .. என்னா ஆட்டம்டா சாமி... :icon_idea: :icon_idea:

தமிழன் எவனும் IFS படிப்பது கிடையாது.. இஞ்சினிய்ரைங்கும் ..ரோக்டரும்... படிப்பு என்றால் இப்படித்தான் ஆகும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிற்கு சிங்களவன் எப்பவும் ஆப்படித்துத்தான் பழக்கம். இந்தியாவின் பலவீனத்தை நன்றாகப்புரிந்து ஆப்பை புலிகள் விடயத்தில் இறுக்கஸ்ரீ nடித்துவிட்டான். சிங்களவன் மோடயன் அல்ல. இந்தியனே மோடயன். சிங்களவனின் காலைப்பிடிப்போம் என்று பிடித்தாhர்கள் அவன் இவர்கள் மேல்ஏறி நிற்கின்றான். அவர்கள்என்னத்திறகோ காலைப்பிடிக்க சிங்களவனும் அவன் தன்மேல் தொத்திநிற்கச்சொல்கின்றான் என்று தொத்திநிற்கிறான். இவர்களுக்கு ஏன் காலைப்பிடித்தேன்என்று கொல்ல முடியாமல் சிங்களவனின் காலடியில் படுத்துக்கிடக்கின்றான். பாவம் பரிதாபம் இந்த இந்திய அரசு. நம்பிக்கைத்துரோகம் கூடாது. சிஙகளவனுக்குத்தெரியாதா தமிழனை நம்பவைத்து எப்படி கழுத்தறுத்தவர்கள் என்று. அவனை நம்பக்கூடாது என்று சிங்களவன் இறங்குகிறான் இல்லை. உண்மையும் தான் இறங்கினால் சிலநேரம் தாட்டுக்குத்தியும்விடுவான் இந்த இந்தியன். அவர்களும் புலிவாலைப்பிடித்தமாதிரி இறங்காமல் நிற்கின்றார்கள்.

நல்லது நல்லது நடக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு கந்தப்பு,

அப்பாடா,

இந்த விடயம்பற்றி இந்தியா கவலைப்படுகிறதோ இல்லையோ, இது மென் மேலும் வளர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர்களுக்கு, உலக அறிவியல் போதாது. அவர்களுக்கு தனிநபர் துதி பாட மட்டுமே தெரியும்.

இப்படியானவர்களை கட்சி சார்பாக முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுத்தால்.... இன்னும் பல அவமானங்களை இந்தியா சந்திக்க வேண்டியது தவிக்க முடியாதது.

இந்த விடயத்தில் சுண்டைக்காய் நாடான ஸ்ரீலங்கா உலக அரசியலில் இந்தியாவை விட போதிய அறிவு பெற்றுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.