Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலைவரிசை 4 இல் அறிமுகமான மாவீரன்!

Featured Replies

மிகச் சிறப்பான கவிதை. ஒவ்வொரு வரிகளும் நெஞ்சில் புதைந்து இருக்கும் ஆழமான சோகத்தினை வெளிக்கொண்டுவருகின்றது

மாவீரர்களையே கூறு போடும் மிலேச்சவாதிகளை அதிகமாக கொண்ட ஈழத் தமிழ் இனத்தின் இன்றைய நிலையை எண்ணி கவலைப் படுவதை தவிர வேறு வழியில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபதாவது பச்சை என்னுடையது.

இந்த வரிகளுக்காக

""இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!! "

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

இந்தக் கவிதையை எழுதும் போது...... நான் அழுதுகொண்டுதான் எழுதினேன்! நான் மேலே இணைத்த ... நாங்கள் அனைவரும் ஏற்கனவே பார்த்திருந்த ... இந்த காணொளி எங்களுக்கு வெறும் செய்தியாக மட்டுமே இருந்தது என வெட்கப்பட்டு கூனிக் குறுகி... அந்த குற்றவுணர்வில் மனம்வெதும்பி எழுதியது!

இதைப் படித்து உங்களுக்குள் ஏற்பட்ட மனவுணர்வுகளைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆறுதலடைகின்றேன் நானும் ஒரு தமிழனாக.... இன்னும் தமிழுணர்வு முற்றிலுமாக அழிந்து விடவில்லையென்று! ...................

  • தொடங்கியவர்

எங்களுக்காக இவன் ஏன் இப்பிடிச் சாகோணும்... அவனுக்கும் எங்கையாவது ஒரு தேசத்தில போய் எங்களை மாதிரி அப்பப்ப கொடிபிடிச்சிட்டு தானுண்டு தன் வேலையுண்டு என இருந்திருந்திருக்கலாம்! ஆனால்.............

கடைசி வரைக்கும் அங்கேயே கிடந்தானே.... அந்த வீடியோவை பாருங்கள்! ஒரு நாட்டை பல பத்தாண்டுகள் ஆண்ட லிபிய நாட்டின் கடாபி கூட கெஞ்சினார்! ஆனால் இவன்........... பிற மண்டையில் புண் வாங்கினாலும் புறநானூற்றின் வீரத்தை கடைசி வரை காத்தவன்!

ஏன்.......... செய்தான்????

எல்லாமே ......... எம் இனத்துக்காக மட்டும்தான்!!!

ஆனால் நாமோ .... இன்று கார்த்திகைப் பூக்களை கூவிக் கூவி விற்கின்றோம்!!!!!

கேவலமாக இருக்கின்றது....!!!!! எம் இனத்திலா இந்த வியாபாரிகளும் பிறந்தார்கள் என்று!?

எட்டப்பன், காக்கைவன்னியன் முதல் கருணா வரை துரோகிகள் இருந்தார்கள்! அது எம் சாபக்கேடாய் தொடர்வதாய் நினைத்திருந்தோம்! இப்போது.........வியாபாரிகள் வேறு!!! எம் இனத்தின் வீர முத்துக்களை ...எம் மாவீரர்களையும் அல்லவா கூறுபோட்டுக் கூவி விற்கின்றார்கள்!

என்ன செய்யப் போகின்றோம் நாம்???????????????????????

எம் இனத்திலா இந்த வியாபாரிகளும் பிறந்தார்கள் என்று!?

கேள்வியை மாறிக் கேட்க வேண்டும் என நினைக்கின்றேன்: எம் கேவலமான இனத்திலா இப்படியான மாவீரர்களும் பிறந்தார்கள் என.

தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல; அனைத்து மாவீரர்களுமே எம் இனத்தில் விபத்தாக பிறந்த வித்துகள் தான்.

Edited by நிழலி

கவிதை அண்ணை கவிதை நல்லாயிருக்கு.

இவ்வளவு காலமும் கனவிலேயா இருந்தீர்கள்.

போராட்டத்தை வைத்துத்தானே இங்கு நமது வாழ்க்கை.

இருபத்தி மூன்றாவது பச்சை என்னுடையது. இரத்தச் சேறுடன் இழுபட்ட கச்சை அந்தக் கடைசிப் போராளியினது.

  • தொடங்கியவர்

உங்களுக்கு உள்ள கவி பாடும் வலிமை என்னிடம் இல்லை . வாழ்துக்கள் . இரண்டாவது எனது பச்சை :) :) :) .

அப்படி இல்லை... கோ! கவி என்பது எல்லோருக்குள்ளும் உள்ள உணர்வு. நீங்கள் முயன்றால் அது உங்களிடம் இருந்தும் வெளிப்படும்!

நன்றி கோ! :)

மூன்றாவது எனது.

பின்மண்டையில் சூடுபடுவதைப் பார்த்தபோது நாம் இயலாதவர்கள் என்று உச்சியில் உறைத்தது..

இயலாமையின் உச்சத்தில் எம்மால் நான்கு சுவருக்குள் கண்ணீர் விட்டு அழ மட்டுந்தான் முடிந்தது.

ஆனால், நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே அந்த ஆன்மாக்களின் ஆசையாக இருக்கும்.

அதையாவது நிறைவேற்ற வேண்டும்!

நன்றி கிரு!

இன்று 5வது பச்சைப்புள்ளியைத் தான் குத்த நேரம் வந்தது. ஆறுதலாக வருகிறேன் கருத்தெழுத.

நன்றி அக்கா!

உங்கள் கவிதைக்கு என்ன என்ன கருத்து எழுதுவது என்று தெரியவில்லை...முதலாவது பச்சை என்னோடது

நாம் இன்றைய நிலைமையில் செய்ய வேண்டியதை உண்மையான உணர்வுகளுடன் வெளிப்படுத்தினாலே போதும்!

நன்றி ரதி அக்கா!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???"

கவிதை, கவிதையின் வரிகள், எங்கோ! யாரோ ஒரு போராளியைக் கேட்டதுமாதிரி ஒரு பிரமை. ஆன்மாக்களுடன் பேசுவதற்கு எனக்கும் ஆசை விரைவில் பேசுகிறேன்.

உன்னதமான மாவீரர்களின் நிலைகளிலிருந்து நாம் யோசித்தால்.... எம் மக்களுக்கு அப்படியொரு கேள்வி எழாது! ஆனால்... நாம் வாழ்ந்தால் மட்டும் போதும் என்றல்லவா சிந்திக்கின்றோம்!

நன்றி செம்பகன்!

  • தொடங்கியவர்

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்கா.......

....... எப்படி முடிகிறது இப்படி எழுத ?

அவர்களின் நிலையில் நான் இருந்திருந்தால்........

அந்த எண்ணமும் வலிகளுமே .... வலிகளைச் சுமந்த எழுத்துக்களாக!

அவர்களின் வலிகளையும், இலட்சியங்களையும் நாம் இறுதிவரை சுமக்க வேண்டும்!

அவர்களின் கனவுகள் ஈடேறும் வரை............!

நன்றி நிலா அக்கா!

கவிதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமா இருக்கிறதை, கவிதையில் படைத்துள்ளீர்கள், என்ன செய்ய, எம்மால் செய்யக் கூடியது மாவீரர் தினத்தை வியபாரமாக்கிவிட்டேம்

அந்த பயங்கரங்களையும் வலிகளையும் உணர்ந்தேனும் நாங்கள் திருந்தவேணும் உடையார்!

நன்றி உடையார்!

வீழ்ந்து போன வீரர்களின் நினைவுகளை,

விலை பேசும், ஈனப் பிறவிகளின் நடுவில்,

வலி தெரியாமல்,

வாழ்விழந்த மாவீரன்,

வாழ்ந்திருப்பான்!

எங்கள் நினைவுகளில்,

வரலாறு உள்ள வரை!

உங்கள் கவிதை மூலம்!!!

நன்றிகள், கவிதை!!!

"வலி தெரியாமல்,

வாழ்விழந்த மாவீரன்,

வாழ்ந்திருப்பான்!

எங்கள் நினைவுகளில்,

வரலாறு உள்ள வரை!"

நன்றி புங்கையூரன்!

கண் மூடி நின்மதியாக தூங்குகிறீர்கள்.உங்கள் மாவீரர் தினத்தை கொண்டாட நடக்கும் வெட்டுக்குத்துக்கள் ... சொல்ல வார்த்தையில்லை.

உண்மைதான் நுணா! என்றைக்கு நாம் எல்லோரும் அந்த மாவீரர்களைப்போல் சுயநலமற்ற மனநிலைக்கு மாறுகின்றோமோ... அன்றுதான் எங்களுக்கு விடிவு பிறக்கும்!

நன்றி நுணா!

  • தொடங்கியவர்

கவிதை

இனத்தின் மீதான முழு நம்பிக்கையில் அவனுக்கு மரணத்தின் வலி தெரியவில்லை...கண்கள் பார்க்காத, காதுகளுக்கு எட்டாத செய்திகளாக எத்தனையோ மாவீரர்களின் ஆன்மாக்கள் இனவிடுதலையின் நேசிப்பால் காலவெளிகளில் கரைந்து போயிருக்கின்றன..... இப்படிச் செத்ததைக் காட்டிலும் அவன் குப்பி கடித்திருக்கலாம்தானே..... என்று நாக்கு வளைத்து நாலு விதமாகவும் பேசலாம்.. ஆனால் கொண்ட இலக்கை அடைவதற்காக இந்த வலிகளைக்காட்டிலும் எத்தனையோ வலிகளைத் தாங்கி இருக்கிறார்கள் போராளிகள். கடைசித்துளி கண்ணீரில் இருந்த நம்பிக்கைகளைச் சிதறடித்துக்கொண்டிருக்கிறார்கள் தேசியத்தின் பேரால் பிரிவுகளாகி குழுமங்கட்டியவர்கள்...

கடைசித்துளி கண்ணீர்..

கடைசி நிமிட ஆன்மதாகம்

கடைசிநேர உயிரின் துடிப்பு

அனைத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு பாகுபடுகிறது குறுகிய உள்ளங்கள்.

மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே...

இப்போது விடுதலைக்காய் எழும் சக்தியை தின்று கொண்டிருக்கிறது குழுமவாதங்கள்... இவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டிய காலத்தில் இப்போது உங்களையெல்லாம் நேசிக்கும் நாங்கள்... :(

கவிதை உங்கள் கவிதைக்கு கருத்து எழுதத்தான் முயன்றேன் முடியவில்லை....

சஹாரா அக்கா!

மாவீரர்களை மதிப்பவர்கள்தான் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்! ஆனால்... அவர்களின் தியாகங்களை விற்பவர்கள் தொடர்ந்து அந்த அநியாயத்தினைப் பண்ணிக்கொண்டே இருக்கின்றார்கள்!

தங்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா!

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

நன்றி வல்வை கவிதை. கவிஞர்கள் ஊடாக ஈழ விடுதலைக்காக வீழ்ந்த சகல தரப்பையும் சேர்ந்த மாவீரர்களின் ஆன்மா மேலும் மேலும் ஒலிக்கவேண்டிய தருணமிது தோழா.

மிக்க நன்றி பொயட் அண்ணா!

எமது இனத்தவர்களின் கேடு கெட்ட, எண்ணங்களை நாலுவரியில் சொல்லி விட்டீர்கள் கவிதை.

என்றைக்கு இந்த கேடுகெட்ட எண்ணங்களையெல்லாம் விட்டுவிட்டு....ஒன்றுசேருகின்றோமோ, அன்றுதான் தமிழனுக்கு விடியல்!

நன்றி தமிழ்சிறி!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்".. :(

ஆனால், நாம் அன்றைக்குக்த் தொடங்கி......... இன்றுவரையும் அப்படி இருக்கவில்லை!!! :(

நன்றி பிரசன்!

கவிதைதானே என அநாசயமாக படித்துவிட்டுச் செல்ல முடியாத வலி சுமந்த வரிகள்..இன்றும் எம் கன்னங்களில் கண்ணீர் ரேகைகள்..

இன்றும் ஒவ்வொரு உண்மையான தமிழனின் கண்களிலும் நீர்வரப் பண்ணும் நினைவு வலிகள் அவை. இந்த வலிகள் எப்பவுமே அணையாத நெருப்பாக இருந்து எரியவேண்டும்!

நன்றி இராஜவன்னியன்!

கவிதைக்கு நன்றிகள் கவிதை..! :(

நன்றி இசை அண்ணா!

வார்த்தைகள் வரவில்லை கவிதை(அண்ணா). :(

வலிகளைச் சுமந்தவர்களாய் நாம். :(

வலிகளைச் சுமப்பதே தொடர்ந்த வாடிக்கையாய்ப் போய்விட்டது எங்களுக்கு! :(

எல்லாமே தமிழரின் ஒன்றிணைவில்தான் தங்கியிருக்கின்றது!

நன்றி ஜீவா!

நன்றி கவிதை

போரின் வடுக்களை கவிதையில் விகாரமாக்கியிருக்கின்றீர்கள்.

நன்றி வாத்தியார்!

  • தொடங்கியவர்

கவிதை உங்கள் கவியில் இருக்கும் கருத்தின் ஆழத்தை வருணிக்க எனக்கு வார்த்தையுமில்லை அருகதையுமில்லை. நாம் இருக்கின்றோம் என்று எமக்காக உயிர்துறந்த அந்த மாவீரர்கள் எங்கே - விட்டால் போதும் என்று ஓடி வந்து ஒழிந்திருக்கும் நாம் எங்கே. மாவீரர் வணக்கம் செய்ய அடிபடும் நாமும் தமிழ் இனத்தில் தான் பிறந்தோமா????? உங்கள் கவிதை நிட்சயம் ஒவ்வொரு தமிழனையும் சிந்திக்கவைக்கும். கவிக்கு நன்றிகள் கவிதை.

அந்த மாவீரர்களின் தியாகங்களுக்கு முன்னால்.... நாம் என்ன செய்தாலும் ஈடிணையாகாது.

எங்களுக்காக தம் வாழ்வின் வசந்தங்களை, தம் இளமைப் பருவங்களின் சந்தோசங்களை... இறுதியில் தம் இன்னுயிரினையும் அர்ப்பணித்தவர்கள். அவர்களையே கேவலப்படுத்துபவர்களாக நாம் இருக்கின்றோமே... என்ற குற்ற உணர்வில் மனம் வெதும்புகின்றது!

நன்றி தமிழினி!

கவிதையின் கவிதைக்கு என்னுடைய பதின் எட்டாம் புள்ளி.உங்கள் கவிக்கு என்ன கருத்தை எழுதுவது என்றே புரிய இல்லை.

உண்மையை உணரும்போது எழுத்துக்களை எம் உணர்வுகள் தடுக்கும் என்பதை அறிவேன்!

நன்றி யாயினி!

கவிதைக்கு நன்றி கவிதை

இதை தமிழர் மீதான கோபமாக பார்க்காமல் செய்தவன் செய்வித்தவன் மீதான கோபமாக மாற்றுவதே சிறந்தது. அல்லது தமிழர்கள் அதிலும் மாவீரர்கள் செய்த அனைத்தையும் தடுத்து இந்தநிலைக்கு ஆளாக்கியோரிடம் போகவேண்டிய செய்தி இது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை அனுமதித்திருந்தாலோ அல்லது இவர்கள் இதற்குள் தலையிடாக்கொள்கையை கடைப்பிடித்திருந்தாலோ நாம் வென்றிருப்போம். எமக்கான ஆதரவு அதிகரித்தபடியேதான் இருந்திருக்கும். யாரிடமும் நாம் பிச்சையேந்தவில்லை. எமது மக்களையும் மாவீரர்களையும் போராளிகளையும் தளபதிகளையும் காக்கும் சக்தி எம்மிடமிருந்தது. அதை அழித்து இந்தநிலைக்கு எம்மை விட்டவர் யார்??????????????????

தாங்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்குது விசுகண்ணை!

குறிப்பாக அதைக் காட்டுவதற்கான புறச்சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது

அதை செய்யத் தவறக்கூடாது. ஆனால் அதையெல்லாம் செய்வதற்கு முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டுமே!?

மாவீரர்களின் நினைவுகளும் வலிகளுமாவது எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கட்டும்!

நன்றி விசுகண்ணா!

கவிதைக்கு நன்றி ,

அதை சொன்ன விதமும் சொன்ன நேரமும் அதைவிட பக்குவம் .

மிக்க நன்றி அர்ஜூன்!

இருபதாவது பச்சை என்னுடையது.

இந்த வரிகளுக்காக

""இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!! "

நன்றி சகோதரா!

  • தொடங்கியவர்

மிகச் சிறப்பான கவிதை. ஒவ்வொரு வரிகளும் நெஞ்சில் புதைந்து இருக்கும் ஆழமான சோகத்தினை வெளிக்கொண்டுவருகின்றது

மாவீரர்களையே கூறு போடும் மிலேச்சவாதிகளை அதிகமாக கொண்ட ஈழத் தமிழ் இனத்தின் இன்றைய நிலையை எண்ணி கவலைப் படுவதை தவிர வேறு வழியில்லை

நிழலி அண்ணா! அங்கை கைவச்சு... இங்க கைவச்சு.... கடைசியில மாவீரர் விசயத்திலயும் கை வைக்கிற அளவில வந்து நிக்குது.

இதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. ஒன்றிணையப் போகும் தமிழர்கள் அவர்கள் செய்த தியாகங்களை மதிப்பவர்களாக நடந்து கொள்ளட்டும்!

அதுவும் நடக்காட்டில்.... நீங்கள் சொன்னமாதிரி கவலைப் படுகிறதைத் தவிர வேறு வழியில்லை! தொடரும் வலிகள்...........!

நன்றி நிழலி அண்ணா!

21 vathu pachai enathu

நன்றி சஜீவன்!

கேள்வியை மாறிக் கேட்க வேண்டும் என நினைக்கின்றேன்: எம் கேவலமான இனத்திலா இப்படியான மாவீரர்களும் பிறந்தார்கள் என.

தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல; அனைத்து மாவீரர்களுமே எம் இனத்தில் விபத்தாக பிறந்த வித்துகள் தான்.

அதுவும் ஒரு வகையில் உண்மைதான் நிழலி அண்ணா! :)

கவிதை அண்ணை கவிதை நல்லாயிருக்கு.

இவ்வளவு காலமும் கனவிலேயா இருந்தீர்கள்.

போராட்டத்தை வைத்துத்தானே இங்கு நமது வாழ்க்கை.

இருபத்தி மூன்றாவது பச்சை என்னுடையது. இரத்தச் சேறுடன் இழுபட்ட கச்சை அந்தக் கடைசிப் போராளியினது.

நன்றி தப்பிலி!

  • தொடங்கியவர்

எங்களுக்காக தம் முழுவாழ்வினையும் அர்ப்பணித்த எம் மாவீரச் செல்வங்களின் வார்த்தைகளாக அமைந்த இந்தக் கவிதையையும் அதன் பின்னரான தங்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களையும்

அவர்களுக்காக அர்ப்பணிப்போம்!!! - வீரவணக்கங்கள்!!!

மாவீரர்களே...!!!

உங்களின் கல்லறைகள் சொல்லும்

ஒவ்வொரு கதையும் போதும்!!!

எம் பரம்பரை உம்மைத் தொடரும்,

இறுதிவரை.........!

  • கருத்துக்கள உறவுகள்

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

வலிகளை வரிகளாக்கிய கவிதையைப் படைத்த கவிதையை எப்படிப் பாராட்டுவது. தொடரட்டும் உங்கள்பணி.

இழந்தவற்றின்

சோகத்தைவிட

அவற்றைத் தினமும்

நினைக்கும் துயரமே

மிகக் கொடியது!

என்றுவரையென்று புரியாது

விடுதலை வியாபாரிகளின்

கரங்களில் சிக்கிய விடுதலையே

சிதைக்கப்பட்ட துயிலகங்களே

வதைக்கப்படும் வீரர்களே

கூறுபோடப்படும் மாவீர் நாளே

சீ ! இந்த ஈனத்தனமா

எங்களையேன் நம்பினீர்கள்?

Edited by nochchi

  • தொடங்கியவர்

இழந்தவற்றின்

சோகத்தைவிட

அவற்றைத் தினமும்

நினைக்கும் துயரமே

மிகக் கொடியது!

என்றுவரையென்று புரியாது

விடுதலை வியாபாரிகளின்

கரங்களில் சிக்கிய விடுதலையே

சிதைக்கப்பட்ட துயிலகங்களே

வதைக்கப்படும் வீரர்களே

கூறுபோடப்படும் மாவீர் நாளே

சீ ! இந்த ஈனத்தனமா

எங்களையேன் நம்பினீர்கள்?

தங்களின் வரிகளிலுள்ள ஏக்கங்களுடன்தான் பெரும்பாலான தமிழ் மனங்கள் அங்கலாய்க்கிறது.

காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

மிக்க நன்றி நொச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை உங்கள் கனதியான கவிதைக்கு...எம்மண்ணுக்காக ஏதோ ஒருவகையில் வீழ்ந்த எல்லோரும் மாவீரர்தான்...

கவிதை நீங்கள் படைத்திருப்பது கவிதையாக தெரியவில்லை ஒரு காவியம் படைத்த உண்ணத போராளியின் வாக்குமூலம்...அலைவரிசை 4ல் இந்த காட்சியை பார்த்த போது ஏற்பட்ட வலியை உங்கள் கவிதை பலமடங்கு வலியை ஏற்படுத்தியுள்ளது.25வது பச்சை எனது.

Edited by thanga

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.