Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவலங்களை வியாபாரம் செய்யாமல் விடவும் (பதிவு , சங்கதி இணைய நடத்துனர்களுக்கு))

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள நிர்வாகம் இச்செய்தியை நீக்காதென்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன்.

நேற்று ஊர்ப்புதினம் பகுதியில்

"செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்"

என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன்.

அதன் இணைப்பு வருமாறு :-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94340

சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள்.

ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக பூர்வமாக தங்களைத் தேடி வந்த கடிதம் போன்று போட்டுள்ளார்கள்.

பதிவு போட்ட செய்தி இணைப்பு :-http://www.pathivu.com/news/19172/57/5/d,article_full.aspx

சங்கதி போட்ட செய்தி இணைப்பு:- http://www.sangathie.com/news/16228/58/5/d,fullart.aspx

ஊடகத்திற்குரிய அடிப்படை பண்பு எதுவுமற்ற இம்முறையை பதிவு சங்கதி ஆகிய இரு தளங்களும் தொடர்ந்து வருகின்றன. இதனை வாசகர்களுக்கு தெரிவிக்கவே இத்தகவலை இங்கு இணைக்கிறேன்.

உதவி வேண்டுகிற ஒரு செய்தியை நீங்கள் வியாபார விளம்பரம் அல்லது ஊடகத்தகவலாக வெளியிடுதல் ஏன் ? 960கைதிகள் உதவிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கான உதவிகளைச் செய்ய விரும்புகிறவர்களை இணைக்கும் பாலமாக இத்தகைய செய்திகளை வெளியிடுவதே இத்தகைய செய்திகளுக்கான பலன் கிடைக்க வழிவகுக்கும்.

ஏற்கனவே தமிழ்த்தேசியத்தை தாத்தா வீட்டுச்சொத்தாக சொந்தம் கொண்டாடி எல்லாம் எல்லாரும் பதிவுக்குளிக்காலும் சங்கதி வெளிக்காலும் வரவேண்டுமென்ற விதியால் என்னத்தைக் கண்டீர்கள் ?

செய்திகள் எடுக்கப்படுகிற அல்லது கிடைக்கிற வழி மூலத்தை இணைப்பதில் கெளரவத்தை இழந்துவிடுவீர்களாயின் உங்களுக்கு எதற்கு ஊடகம் ? இதுவே வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் செய்தியை இத்தகைய வெட்டு கத்தரிப்பு வேலைகள் செய்தால் அவர்கள் எடுக்கிற நடவடிக்கை என்னவாக இருக்கும் ?

இது தமிழர்கள் செய்கிற பணிதானே ஆக தாத்தாவீட்டுச் சொத்தை தாதாக்கள் எப்படியும் ஆழலாம் என்பதா உங்கள் விதி ?

மேற்படி பிள்ளைகள் பற்றிய தனித்த விபரங்கள் தகவல்களை தமக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் மேலும் செஞ்சோலைப் பிள்ளைகள் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களின் விபரங்களையெல்லாம் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுப்போம் என்றும் சில அறிவுறுத்தல்களை விட்டுள்ளார்கள் சில தேசியப்பூச்சாண்டிகள்.

இதுவரை காலம் இரண்டரை வருடம் தாண்டிய நிலமையில் இந்தப்பிள்ளைகள் பற்றி ஏன் உங்களுக்கு அக்கறை இல்லாமல் போனது ?

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் தான்தோன்றிகளே சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களோடு சண்டைபிடிக்க மல்யுத்தம் செய்ய என்னிடம் பலமுமில்லை பணமுமில்லை. முடிந்தால் கைதாருங்கள் அல்லது விட்டுவிடுங்கள்.

பி.கு:-

ஏற்கனவே இந்த இரு தளங்களைச் சேர்ந்த கும்பல் பல விபரங்களை பெற்றுவிட்டு புதினத்தைக் கேட்டு உச்சுக்கொட்டிவிட்டு ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

அரசியல் வேண்டாம் முரண்பாடு வேண்டாமென ஒதுங்கினாலும் துரத்துகிற இந்த அட்டமத்தான்களின் தொல்லைகளைச் சிலவேளைகளில் சொல்ல வேண்டி வந்துவிடுகிறது. கள உறவுகள் மன்னியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

pathivumedia@gmail.com

sangathie@gmail.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pathivumedia@gmail.com

sangathie@gmail.com

நன்றி நுணா.

இருவருக்கும் மெயில் போட்டேன். ஆனால்....?????????????

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப் பட்ட செய்தி இணையத் தளங்கள் தங்கள் செய்திகளை நீக்காவிட்டால் அவ்விணையத்தளங்கள் மீது சைபர் கிரைம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த செய்தியை பதிவில் பார்த்து விட்டு சாந்தி அக்கா தான் செய்தியை பதிவுக்கு கொடுத்திருக்கார் என நினைத்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த செய்தியை பதிவில் பார்த்து விட்டு சாந்தி அக்கா தான் செய்தியை பதிவுக்கு கொடுத்திருக்கார் என நினைத்தேன்

பிரத்தியேகமாக பதிவு சங்கதிக்கு அனுப்பவில்லை ரதி.

பலருக்கு இச்செய்தியை மின்னஞ்சல் செய்தேன். சிலர் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்திகளை அனுப்புகிறேன். யாராவது ஒரு உறவு உதவ முன்வருவார் என்ற நம்பிக்கையில்.

ஆனால் இந்த இரு இணையங்களையும் நடத்தும் நபர் பலமுறை இத்தகைய வெட்டு ஒட்டு செய்துள்ளார். அவர்கள் போட்ட கடிதத்தை பாருங்கள்:-

velikadai-penkal%2015.jpg

நான் இணைத்த கடிதம் இது :-

velikadaipenkal.jpg

சம்பந்தப் பட்ட செய்தி இணையத் தளங்கள் தங்கள் செய்திகளை நீக்காவிட்டால் அவ்விணையத்தளங்கள் மீது சைபர் கிரைம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

தமிழ் ஊடகவியலாளர்களை பொறுப்புடன் நடக்கவைப்பதும் முக்கியமானது.

இந்த அடிப்படையில், அவர்கள் இச்செய்தியை உரிய முறையில் பிரசுரிக்க மறுத்தால், அல்லது நீக்க மறுத்தால் சர்வதேச ஊடக மையத்திடம் முறையிடுவது நல்லது. அத்துடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். தொடர்ந்து முரண்டு பிடித்தால் தளத்தை மூடவும் முடியும் என சிலர் கூறுகின்றனர். இத்தகைய இழி தொழில் செய்யும் தளங்கள் இல்லாமல் இருப்பது தமிழினத்துக்கே நல்லது.

உங்கள் காத்திரமான நடவடிக்கைகள் தரமான, பொறுப்புள்ள தமிழ் ஊடக சேவைகளை தாபிக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

அவசரபடதேங்கோ. அந்தரப்பட்டுபோனதுகளில் விடையம். இவ்வளவும் போதும். நாணயம் இருந்தால் அவர்களாக தவறுக்கு ஒரு பிரசுரம் போட்டு விடலாம். மற்றைய பத்திரிகைகள் நேர்மையான தவறுகள் நடக்கலாம் என்று பயந்தால் பின்னடிக்க பார்க்கலாம்.

போலிச்சாமிமாரை ஊரில் கண்டேன். ஏதாவது ஒரு கோயிலைச் சாட்டிக்கொண்டு காசு சேர்க்க வருவார்கள். வயிறு வளர்ப்பதற்காக… இங்கே விடுதலை என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிக் காசு சேர்த்து வீடு, கடை, கார், எனப் படு ஆடம்பரம். இவர்கள் போடுவதெல்லாம் வேடம். அந்த வேடத்தில் ஒன்றுதான் இந்த ஒட்டு வேலை. இந்தக் கழுதைப் புலிகள், வேங்கைப் புலித்தோல் போர்த்துக்கொண்டு திரியுதுகள். சனங்கள் பார்த்து ஏமாறுதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் சாத்திரி அண்ணா இணைத்த இணைப்பு சங்கதியில் நேசக்கரத்தின் முகவரியோடு இருக்கிறது.

0 மாவீரர் நாள் கயிறுழுத்தல் போட்டியில் இவர்களையும் ஒருகணம்....

நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதன் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தமிழ் மக்களைப் படாதபாடுபடுத்தி வருகிறது.

இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில்,

திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் மேற்படி சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரின் நிலைமை மோசமடைந்து செல்கின்றபோதும் இவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணமாக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர் போரின்போது படுகாயமடைந்ததால் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவசரமாகச் செய்ய வேண்டியுள்ளபோதும், இவரின் நோய் குணமாகாததால் அதனைச் செய்ய முடியாது என வைத்தியர்கள் கைவிரித்து விட்டனர்.

இதனால் மீண்டும் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் இவரின் உடல் நிலை பெரிதும் பாதிப்படைய மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவருடைய சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகள் அனைத்தும் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற நிலையில் குறித்த சிகிச்சையை வேண்டிய காலப் பகுதியில் செய்வதற்கு இவரின் விடுதலையை எதிர்பார்த்து நிற்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.

ஆனால் இவ்வாறு வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஜெகதீஸ்வரனை வைத்தியசாலையிலும் சங்கிலியால் கட்டி சிகிச்சையளிக்கப்படுவது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலுக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

மிருகத்தனமான முறையில் மனித உயிரில் விளையாடும் மகிந்த அரசு, இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவருக்குக் காலில் சங்கிலி போட்டுக் கட்டி வைக்கும் அளவுக்குக் கொடூரமான அரசு என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

எனவே, இவரின் நிலைமை ஜீரணிக்க முடியாதது. சங்கிலியால் கட்டப்பட்டு வைத்தியசாலையில் அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவரின் நிலை நோய்த் தாக்கத்தைவிட வேதனையானதே.

jegatheeswar_03.jpg

இவருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் கீழுள்ள வழிகளில் தொடர்பு கொள்ள முடியும்

Nesakkaram E.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723

Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு மாவீரர் தினக் கொண்டாட்டங்களை யார் செய்வது? அக் கொண்டாட்டங்கள் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிப்பது என நாளுக்கு நாள் திட்டம் இடும் நீங்கள், ஒரு தடவையேனும் தாயகத்தில் உள்ள மாவீரர்களின் உறவுகளை நினைத்துப் பார்த்ததுண்டா?

http://www.sankathi.com/news/index.php?option=com_k2&view=item&id=1270:0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&Itemid=54

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கோ எழுதிய கடிதத்தை முழுதாக வெளியிடாமல் வெட்டி எடுத்து வெளியிட்டது ஒரு குற்றச்செயல்.

முழுமையான கடிதத்தை வெளியிட்டு இருக்கவேண்டும். அல்லது

இந்தக் கடிதம் செஞ்சோலைப்பிள்ளைகளால் நேசக்கரம் உதவிஅமைப்புக்கு எழுதப்பட்டது என்பதை தன்னும்

கீழே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

இது ஊடகதர்மம் அல்ல.

மற்றவர்களின் அவலங்களை தமக்குள்ளாக வெளிப்படுத்துவதும்.

அவலங்களுக்கு செய்த உதவிகளை ஒருவிதமான அரசியல் வன்மங்களை தீர்ப்பதற்கு பயன்படுத்துவதும்

அவலத்துக்குள் இருப்பவர்களின் இயலாமையும் வறுமையையும் பாவித்து தமது அரசியல்கருத்துகளை அவர்களுக்குள்

புகுத்துவதும் கேவலமான செயல்கள்தான்.

அதனை இப்போது அநேகமாக எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். பொதுவான ஒரு செய்தியை எப்படியும் ஒவ்வொரு ஊடகமும் தங்களது நடைமுறைக்கு உட்பட்டு எழுதலாம் போடலாம். ஆனால் இங்கு என்னால் இணைக்கப்பட்ட கடிதத்துக்கு உரிய பிள்ளைகள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அத்தோடு மேலும் பல பிள்ளைகள் இவர்கள் போல இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே 5பிள்ளைகளின் வேண்டுதலை இதுவரை 1400மின்னஞ்சல்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இதன் நோக்கம் அவர்களுக்கான உதவியை ஒழுங்குபடுத்தி அவர்களைச் சென்றடைய வைப்பதே. இதில் என்ன கெளரவக் குறைவு இருக்கோ தெரியவில்லை. இந்த நிமிடம் வரை பதிவு சங்கதி மேற்படி செய்தியில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

மேலும் 960கைதிகளின் விபரங்கள் என்னிடம் இருக்கிறது. இவற்றை ஒவ்வொரு ஊடகமும் பங்கெடுத்து உதவினால் எங்களை நம்பியிருக்கிற அந்தக் கைதிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இதுவரைகாலமும் இருந்த ஊடகத்தனியாட்சியை இனிமேல் நிறுத்தி அவலப்பட்டவர்களுக்கான தார்மீகப்பணிகளை எல்லோரும் இணைந்து செய்வோம். இப்பணியில் இணைகிற அனைவருடனும் என்னால் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க முடியும்.

பதிவு இணையம் வாகீசன் யேர்மனியின் பொறுப்பேற்று வந்த சிலகாலங்களில் ஆரம்பிக்கப்பட்ட நேரம் பதிவின் ஆரம்ப வேரில் எனது பங்கும் கணிசமான அளவு இருந்தது. அந்த நாட்களில் பதிவு இணையத்தை ஒரு பொதுவான தரமான ஊடகமாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பதிவு வித்திடப்பட்டது.

கடைசியில் கஸ்ரோ அவர்களின் தனிச்சொத்தாக பதிவு ஆழுமையானது. நந்தவனம் நந்து பகுதியாக சங்கதி ஆரம்பித்தது. பதிவு சங்கதி வரமுன்னம் (2000ம்ஆண்டு மாவீரர் நாளில் ஆரம்மாகியிருந்த தாயகம் சார்ந்த ஒலி ஒளி செய்தித்தளத்தை தயாவாத்தியின் ஆழுமை 2004 மூடவைத்தது.

புதினம் தயாவாத்தி அன்கோ தவபாலன் ஆட்சியாகியது புதினம். ஆளாளுக்கு நடந்த உட்கட்சி மோதல் கடைசியில் 2009 தவபாலனின் குரல் கடைசியாக ஒலித்து முடிந்ததோடு எழுத்தில் அடி தடி தாக்குதல் எல்லாம் சேர்ந்து ஊடகமென்ற நம்பிக்கையே போய்விட்டது.

நமக்கான தரமான பொதுவான ஊடகக்கனவு தாயகக்கனவு போல சிதைக்கப்பட்டு இன்று நடக்கிற எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்கிறோம். எங்களை இன்னும் நம்புகிற சிறைக்கம்பிகளின் பின்னால் வாடுகிற ஆயிரம் பேரின் வாழ்க்கைக்காக ஒரு உதவியைக் கேட்க எழுதுகிற கடிதங்களைக் கூட அரசியல் வன்மம் தீர்க்க பயன்படுத்துதல் அதிகாரத்தக்கவைப்புக்கு பயன்படுத்தல் என்ன பயனைத் தருமென்று இந்த ஊடகங்கள் நம்புகின்றனவோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.