Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி

22-vaiko39-300.jpg

சென்னை: டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்த விவரங்கள் வெளியானதால் தமிழக தலைவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். கட்சி மற்றும் கொள்கைகளுக்கு அப்பால் தமிழர் நலன் என்ற விஷயம் அவர்களை ஒருங்கிணைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழர் உரிமைக்கு ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் முக்கியத் தலைவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இந்தப் படம் குறித்த முழு விவரங்களையும் திரட்டிய பிறகு, அப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே திரையிடக்கூடாது என்ற உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளார் வைகோ.

இதுகுறித்து 'தட்ஸ்தமிழ்' நிருபர் எஸ் ஷங்கருக்கு அவர் இன்று அளித்த சிறப்புப் பேட்டி:

டேம் 999 என்பது முழுக்க முழுக்க கேரள அரசின் விஷமத்தனம். இந்த விஷமத்தனத்தை இன்று நேற்றல்ல, பல காலமாக அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது சினிமா என்ற ஊடகத்தின் மூலம் இன்னும் வலுவாகச் செய்கிறார்கள்.

தமிழகத்தின் 5 பெரிய மாவட்டங்களின் வாழ்வாதாரமே இந்த முல்லைப் பெரியாறுதான். முழுக்க முழுக்க தமிழனுக்கு உரிமையான அணை அது.

இந்த அணையை உருவாக்கியதும் காப்பாற்றி வருவதும் தமிழன்தான். இந்த அணை உள்ள மண் கூட தமிழனுக்கு சொந்தமானதே. அன்றைய நிர்வாக தவறுகளால் அதனை கேரளத்தினர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இந்த அணை உடைந்து விடும் என்று கிராபிக்ஸ் மூலம் பொய்யாய் காட்சிகளை உருவாக்கி, மக்களை பயமுறுத்தும் பூச்சாண்டி வேலைதான் இந்தப் படம்.

ஏற்கெனவே அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போதே, முல்லைப் பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸில் படம் தயாரித்து 5 லட்சம் டிவிடிக்களை புழக்கத்தில் விட்டு மக்களை பயமுறுத்தப் பார்த்தனர். இப்போது அதை பெரிய திரையில் செய்யப் பார்க்கிறார்கள்.

இப்போது கேரள அரசும், ஜக்கிய அரபு அமீரகமும் இணைந்து பணம் போட்டு "டேம் 999' படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தை இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் மட்டும் வார்னர் பிரதர்ஸ் திரைப்பட நிறுவனம் வெளியிட உள்ளது. இதிலிருந்தே அரசின் சதிச்செயல் இதில் இடம் பெற்றுள்ளது தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல் காண்பிப்பது அக்கிரமமானது.

100 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கினார்கள். இந்த அணை இன்றல்ல... இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம்.

படத்துக்கு வெளியிடவிடாமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

மதிமுக இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் டேம் 999 படத்தைத் தடுக்க வேண்டும். இப்படியொரு படத்தை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.

உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழகத்தை சார்ந்துதான் கேரளா உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தப் படம் வெளியாகி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் முதல் பாதிப்பு கேரளாவுக்குதான். அத்யாவசிய பொருள் சப்ளையே அவர்களுக்கு பாதித்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.

கேரள அரசே, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான சக்திகளே, நெருப்போடு விளையாடுகிறீர்கள், அதன் பாதிப்பு உங்களுக்குத்தான் என்பதை மறந்து!" என்றார்.

http://tamil.oneindia.in/news/2011/11/22/tamilnadu-vaiko-s-special-interview-on-dam-99-aid0136.html

மதிமுக, இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்... டேம் 999 பிரஸ் மீட் ரத்து... எஸ்கேப் ஆன மலையாள இயக்குநர்!

22-dam-999-1300.jpg

சென்னை: தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும், அதனால் பல லட்சம் தமிழர்கள் மடிவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி மலையாள இயக்குநர் எடுத்த 'டேம் 999' என்ற படத்தின் பிரஸ்மீட், மதிமுக மற்றும் திரைப்பட இயக்குநர்களின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தால் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

டேம்999 என்ற படம் தமிழருக்கு எதிரான கேரளாவின் விஷமப் பிரச்சாரம் என்றும் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் வெளியிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்

மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.

அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.

போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.

இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே... இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தது சிவசங்கர மேனன், எம்கே நாராயணன் என்ற இரு மலையாளிகள்தான். இப்போது, இங்கே தமிழ்நாட்டிலும் ஒன்றரை லட்சம் பேரை கொல்ல சினி்மா மூலம் திட்டம் போட்டுக் கொடுக்கிறார் இன்னொரு மலையாளி... இதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா...

இந்தப் படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.

இயக்குநர் ஐந்துகோவிலான் உள்பட சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மதிமுகவினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

பாமக ஆர்ப்பாட்டம்

இதைத் தொடர்ந்து பிரஸ் மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பாமகவினர் வந்து டேம் 999 படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரசாத் லேபுக்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் எஸ்கேப்

இந்தப் போராட்டம் குறித்த தகவல் எட்டியதும் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய குழு, பிரசாத் லேபுக்கு வராமலேயே எஸ்கேப் ஆனது. இதனால் அவர்கள் தங்கியுள்ள விடுதியைத் தேடி புறப்பட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

http://tamil.oneindia.in/movies/news/2011/11/22-dam-999-press-meet-cancelled-due-mdmk-protest-aid0136.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு செயற்படுவது போல் இந்தியாவில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயற்படுகிறது.

பென்னி குக்கை கேவலப்படுத்தும் “டேம் 999”

ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

dam999.jpg

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சோஹன் ராய். கடற்படை மாலுமியாக இருந்து பின் திரைப்பட இயக்குநராக மாறிய இவர் இயக்கியுள்ள படம் தான் டேம் 999. ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் காரணங்களுக்கான வலுவற்ற அணை ஒன்றை கட்டுகிறார். இந்த அணை ஒன்று உடைவதால் ஏராளமானோர் பலியாகிறார்கள். பழமையான அணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்படத்தில் விரிவாக தெரிவித்துள்ளதாக கூறுகிறார் சோஹன் ராய்.

இதுகுறித்து சோஹன் ராய் கூறுகையில், கடந்த 1975ம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியோ டேம் உடைந்ததால் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதே போன்ற ஒரு அபாயம் பெரியாறு அணையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாறு அணை உடையும் பட்சத்தில், இதில் சிக்கி இறக்கப்போவது தமிழக மக்களும் தான் என்கிறார் சோஹன். படத்தைப் பார்த்த பின், பெரியாறு அணை விவகாரத்தில் தனது நிலையை தமிழக அரசு மாற்றிக்கொள்ளும் என்றும் நம்பிக்கை(?) தெரிவித்துள்ளார் சோஹன்.

படத்தில் காட்சிப்படி, ஊழல் மேயர் ஒருவர் கட்டிய அணை உடைவதாக படக்காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் சோஹன் ராய். ஆனால், இங்கிலாந்து நாட்டவராயினும், அணை கட்டுமான பணியின் போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், தனது சொத்துக்களை விற்று அணையை வலுவாக கட்டியவர் பென்னிகுக். படத்தின் மேயரையும், பென்னிகுக்கையும் ஒப்பிடும் வகையில், படத்தின் இயக்குநர் பேசியிருப்பது பென்னி குக்கை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் இந்தியாவில் வரும் 25ம் தேதி வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

வைகோ எதிர்ப்பு: இப்படத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=88662

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு செயற்படுவது போல் இந்தியாவில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயற்படுகிறது.

Kallanai.jpg

பேருதான் கிந்தியா ஆனால் இங்கிட்டு ஒவ்வொன்னும் தனித் தனி நாடுதான் தோழர்

இந்த டுபாக்கூர்கள் கஞ்சிக்கி சிங்கியடிக்க வேணும் .. குறுகிய காலபயிர் (IRTU) நெல் வகை... கார் அரிசி...இங்கிட்டு பயிர் வைப்பதே இந்த கழிசாடைகளுக்குதான் ..

தின்னுபோட்டு என்னா பேச்சு???

மலையாளத்தான் ஒரு டுப்பாகூர் பேர் வழி தோழர் .. கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்னும் ஸ்ட்ராங்காத்தானே இருக்கு... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மிக மோசமான பாதிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடுதான் மத்திய அரசில் இருந்து மாநில அரசுகளும் பிறக்கனிப்பது தமிழ்நாட்டையே ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் நாமெல்லாம் ஒருதாயின் பிள்ளைகள் வந்தே மாதரம் என உளறுகின்றார்கள் இவர்கள் மற்ற மாநிலத்துக்கு போனால் இவர்களை மதுராசி சாம்பார் என்பார்கள் அதையும் கேட்டிட்டு வரும் பெருந்தன்மை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குத்தான் உண்டு என்றால் மிகையாகாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தான் என்றைக்குத் தான் இந்தியன் இல்லை என்கிற தெளிவைப் பெறுகிறானோ அன்றைக்குத்தான் எமக்கெல்லாம் விடுதலை நாள். அவனுக்குள்ளிருக்கும் சக்தி அவனுக்கே தெரியாது. அதைத் தெரிய விடாமல் போலித் தேசியவாதம் அவனது கண்களைக் கட்டியிருக்கிறது. இந்தக் கட்டுக்களை அவிழ்த்தெறிந்துகொண்டு அவன் வெளியே வரவேண்டும், அன்றைக்குத்தான் உலகெல்லாம் வாழும் எல்லாத் தமிழனுக்கு விடி நாள், செய்வானா அவன் !!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் டேம் 999 படத்தை வெளியிடத் தடை

Pஒச்டெட் Dஅடெ : 11:11 (24/11/2011)ளச்ட் உப்டடெட் : 11:11 (24/11/2011)

சென்னை: சர்ச்சைக்குரிய 'டேம் 999' படத்தை வெளியிட தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிடையே மட்டுமல்லாது தேசிய அளவில் கடந்த சில நாட்களாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களின் குற்றம்சாட்டினர்.

மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அண‌ையை இடிப்பதன் மூலம் தமிழர்கள் பாதி்க்கப்படுவதாக இந்த படத்தில் காட்டப்படுவதாகவும், இதன்காரணமாக, இப்படத்தை தடை செய்ய வேணடும் என்று பல அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளி வர இருக்கும் இப்படத்துக்கு தடை விதித்து இருப்பதாக தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

- விகடன் http://news.vikatan.com/?nid=5145

  • கருத்துக்கள உறவுகள்

10.jpg 01.12.11 மற்றவை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து ‘ஃபிலிம்’ காட்டிக் கொண்டிருந்த கேரள அரசு, உண்மையிலேயே தமிழக மக்களுக்காக ’ஃபிலிம்’ காட்டத் திட்டமிட் டதை முறியடித்திருக்கிறார்கள் ம.தி.மு.க.வினர்.

தமிழர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸாரும் கேரளாவில் கைகோத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் உச்சகட்டமாக, தமிழர்களைக் குழப்புவதற்காக ‘டேம் 999’ என்ற படத்தை எடுத்து அதன் ‘பிரிவ்யூ’ காட்சியை சென்னையிலேயே நடத்த முயற்சித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு வைகோ,ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கெனவே கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை செ10a.jpgன்னை பிரசாத் லேப்பில் உள்ள பிரிவ்யூ தியேட்டரில் திரையிடவும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் படத்தை 25-ம் தேதி முதல் திரையிடவும் முடிவு செய்திருந்தனர்.

இந்தத் தகவலை அறிந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த மல்லை சத்யா, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பிரசாத் லேப்பிற்குப் படையெடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைத் தடுத்தனர். அதையும் மீறி உள்ளே சென்ற ம.தி.மு.க.வினர், அங்கிருந்த தெலுங்குப் படத்தின் ஃப்லிம் ரோல்களை வெளியே உ ருவி எடுத்தனர்.

அதன்பிறகு வெளியே வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்கள் அனைவரையும் வேனுக்குள் வாரிப் போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர் போலீஸார். சினிமா இயக்குநர்கள் கவுதமன், ஜெகன், துரைராஜ் உட்பட சிலர் ஓடிவந்தனர். அவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீ ஸாருக்கும், இயக்குநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இயக்குநர் ஒருவர் கை நீட்டிப் பேசியதும், போலீஸ் அதிகாரி ஒருவர் ஆவேசமடைந்தார். ‘யாரைப் பார்த்து கை நீட்டிப் பேசுகிறாய்?’ என்று எகிறிக் குதித்தார்.

‘உங்களை கைது செய்ய நேரிடும்’ என்று அவர் எச்சரிக்க, ‘காரணத்தைச் சொல்லிவிட்டு கைது செய்யுங்கள்’ என்று இயக்குநர்கள் கூறியதும் போலீஸார் அமைதியானார்கள். அதன்பிறகு, இயக்குநர்களும் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றார்கள்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

நிலவரம் மோசமடைந்ததால், பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தனர் ‘டேம் 999’ பட நிறுவனத்தினர். அவர்களை உடனே வெளியேறுமாறு பிரசாத் லேப் நிர்வாகம் உ த்தரவிட்டது. படக்குழுவினர் அனைவரும் வெளியேறிய பின்னரே இயக்குநர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

இதன்பின்னர், ‘டேம் 999’ படத்தின் இயக்குநர் சோகன்ராய் பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில், ‘‘1975-ம் ஆண்டு சீனாவில் அணை ஒன்று உடைந்ததை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம்தான் இது. இந்தப் படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, மற்றொரு கருத்தையும் அந்தச் செய்திக்குறிப்பில் இயக்குநர் சோகன்ராய் பதிவு செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிதாக ஒரு அணை

கட்டப்பட வேண்டும் என்ற தனது கருத்தையும் இறுதியில் பதிவு செய்திருக்கிறார்.

10b.jpgயக்குநரின் இந்த விளக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுவதற்கு எதிராக இந்தக் கருத்து இருக்கிறது என்கிறார்கள் ம.தி.மு.க.வினர்.

இதுகுறித்து ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த போது முதல்வர் அச்சுதானந்தன் முல்லைப் பெரியாறு அணை உடைவ துபோல் 5 லட்சம் சி.டிக்களை வெளியிட்டார். இப்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் உம்மன் சாண்டி, மலையாளிகளின் உதவியோடு ‘டேம் 999’ படத்தைத் தயாரிக்க உதவி செய்கிறார்.

கேரள அரசும், ஐக்கிய அரபு எமிரேடும் இணைந்து ‘வார்னர் பிரதர்ஸ்’ என்ற ஹாலிவுட் நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துவிட்டு புதிதாக அணையைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இயக்குநர் சோகன்ராய் இந்தப் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட்டு நம் மக்களை குழப்பி பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என் றார் உறுதியாக. இதேபோல் ‘டேம் 999’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்களும் டெல்லியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேவிமணி

- குமுதம் ரிப்போட்டர்

11.jpg 01.12.11 மற்றவை முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதாக புது பிரச்னையைக் கிளப்பி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது கேரளா.

இதையடுத்து, கேரள அதிகாரிகள் சனிக்கிழமை அணைப் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினர். அதன்பிறகு, கேரள வருவாய்த்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிரு ஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், கேரள அணைகள் பாதுகாப்புக் குழுத் தலைவர் பரமேஸ்வரன் நாயர் மற்றும் அதிகாரிகள் அணைப் பகு தியைப் பார்வையிட்டனர்.

நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பெரியாறு அணையில் 34 ஆண்டுகள் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்..

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

‘‘தற்போது நில அதிர்வு ஏற்பட்டது பெரியாறு அணைப் பகுதியில் இல்லை. பெரியாறு அணையை ஆய்வு செய்கிறவர்கள் நில அதிர்வு ஏற்பட்ட இடுக்கி பகுதியை ஆய்வு செய்யாதது ஏன்? நில அதிர்வால் நீர்க்கசிவு என்கிறார்கள். அணையில் நீர்மட்டம் அதிகரித்தால் நீர்க்கசிவு இருக்கத்தான் செய்யும். சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கு கிறார்கள்.

இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள வலுவான அணைகளுக்கு இணையாக முல்லைப் பெரியாறு அணையும் பலமாகவே உள்ளது. 1979-ம் ஆண்டிலும், அதன் பிறகு 1999-ம் ஆண்டிலும், பிறகு 2004-ம் ஆண்டிலும் மத்திய அரசின் நீர் வளத்துறையின் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அணை பலமாக உள்ளது என அறிக்கை தரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், அணையின் நீர் தேக்கும் அளவை முதற்கட்டமாக 142 அடிக்கு உயர்த்தலாம் என்றும், போகப் போக 152 அடிக்கு உயர்த் தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘அணை பலவீனமாக இருப்பதால் 136 அடி வரைதான் தண்ணீர் தேக்கவேண்டும். அதற்கு மேல் தேக்கினால் அணைக்கு ஆபத்து’ என கேரளா தரப்பில் கூறிவந்தனர். இந்நிலையில், கடந்த 1989 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, சுமார் 142 அடி தண்ணீர் தேக்கினோம். பதினான்கு நாட்கள் தண்ணீர் தேங்கி யிருந்தது.

அந்த நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைப்பதற்காக 52 நாட்கள் தண்ணீரைத் திறந்துவிட்டோம். நான் என்னுடைய பதவிக்காலத்தில் அணைப் பகுதியில் 14 வெள்ளப் பெருக்குகளைப் பார்த்தவன். அதனால் நிச்சயமாகச் சொல்கிறேன். பெரியாறு அணை உறுதியாகத்தான் இருக்கிறது. பலவீனமாக இருக்கிறது எனத் தொடர்ந்து கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது’’ என்றார் சுந்தர்ராஜன்.

முல்லைப் பெரியாறு அணை வலுவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, கேரள அரசு கூறிவரும் காரணங்கள் வலுவிழந்து கொண்டே போகிறது என்பதே உண்மை!

ப.திருமலை

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

04.jpg 04.12.11 ஹாட் டாபிக்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது. தமிழக முதல்வர் ஷெய லலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி இருவரும் இவ்விவகாரம் குறித்து சந்தித்துப் பேச வேண்டும் என்று கேரள எம்.பி.க்கள் பிரதமரி டம் கடிதம் கொடுத்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி அரசியல் ரீதியான ‘மூவ்’கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இரு மாநிலத்தைச் சேர்ந்த திரையுலகப் பிரமுகர்களும் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘டேம் 999’ படம் வந்த பிறகு, இவ்விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.

நயன்தாரா இப்படத்துக்கு ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் எழுதியிருக்கிறார் என்ற செய்தி வெளியாகவும், அலறி அடித்துக்கொண்டு தனக்கு ஃபேஸ்புக்கிலோ அல்லது டுவிட்டரிலோ அக்கவுன்ட் கிடையாது என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, அணைப் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார், தமிழில் ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்த நடிகையான ரீமா கல்லிங்கல். கருத்துச் சொன்னதுடன் நிற்காமல், மும்பை மரைன் டிரைவ் கடற்கரைப் பகு தியில் 200 பேருடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறார்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

ரீமா கல்லிங்கல் கருத்து குறித்து குஷ்புவிடம் கேட்டபோது, ‘‘முல்லைப் பெரியாறு அணை என்பது மேலோட்டமாகப் பார்க்கக் கூடிய பிரச்னை அல்ல. ரீமா கல்லிங்கல் சொல்லியிருக்கிற கருத்துகளை நானும் படித்தேன். அவர் புத்திசாலியான பெண். ஆனால், பிரச்னையின் அடித்தளம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் கருத்துச் சொல்லியிருக்கிறார். நானும் சினிமாவில் இருக்கிறேன். அவரும் இருக்கிறார். அணையைப் பற்றி தீர்மானிப்பதற்கு ரீமா கல்லிங்கல் இன்ஜினீயர் இல்லை! இரண்04a.jpgடு மாநிலங்களின் முதல்வர்கள், நிபுணர்கள் கூடி கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம் இது. இதில் ரீமா அவசரப்பட்டு கருத்துச் சொல்வானேன்?

எதைப்பற்றி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால் உணர்வுகளைத் தூண்டும் விதமாக எடுக்கப்படும் படங்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாமா? ஏற்கெனவே அச்சப்பட்டுக் கொண்டு இருப்பவர்களை மேலும் கலவரப்படுத்துவதற்குத்தான் வழி செய்திருக்கிறது ‘டேம் 999’. இரு மாநில எல்லைப் பகுதிகளில் வாழ்கிற மக்களை நிம்மதி இழக்கச் செய்கிற முயற்சியாகவே அது எனக்குத் தெரிகிறது. திருவனந்தபுரத்தில் இருந்துகொண்டு எடு த்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துகளைச் சொல்வது தவறு என்றே சொல்வேன். இந்த அடிப்படை எதுவும் தெரியாமல்தான் ரீமா கல்லிங்கல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்’’ என்றார் குஷ்பு.

‘டேம் 999’ படத்தைத் திரையிடக் கூடாது என்று பிரசாத் லேப்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர்களுக்குத் தலைமை ஏற்ற இயக்குநர் கவுதமனிடம் கேட்டபோது, ‘‘மலையாளக் கலைஞர்களுக்கும் படைப்பாளி களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தமிழகம் என்றுமே மரியாதை கொடுத்து வருகிறது. திறமைகளுக்கு மதிப்பளித்து, நம்முடன் வைத்துக் கொள்வதில் நம்மைப் போல் வேறு எவருமில்லை! இதனாலேயே நம்மை ஏமாளிகள் என நினைத்து விடக் கூடாது! ஆனால் ஷோகன்ராய் அப்படி த்தான் நினைத்து படம் எடுத்துவிட்டார். இதற்கு ரீமா கல்லிங்கல் முழுவீச்சில் இறங்கி தமிழகம் தவிர்த்த இதர மாநிலங்களில் ஆதரவு திரட்டத் தொடங்கி இருக்கிறார். புதிய அணைதான் தீர்வாக இருக்க முடியும் என முடிவு செய்து எடுக்கப்பட்ட படத்தை தமிழக அரசு தடை செய்தது வரவேற்கக்கூடியதாகும்!’’ என்றார்.

‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறும்போது, ‘‘அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக முதல் கட்டத்தில் உயர்த்தலாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 152 அடிக்கு கொண்டு போகலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பது வல்லுநர்களின் கருத்தைக் கேட்டபிறகுதான். அணை வலு வாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறபோது, புதிய அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லையே! முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான கருத்துகளை திரைப்படம் மூலம் மக்களிடம் பரப்ப நினைப்பதை அனுமதிக்க முடியாது’’ என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் கூறுகையில், ‘‘கேரளத்தைச் சேர்ந்த ஒரு நடிகை மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவைத் தெரிவிக்கிற உணர்வு நமக்கு இல்லாமல் போனது வருத்தத் திற்குரியதுதான். இப் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக இருப்பதைப் போல் காவிரிப் பிரச்னையிலும் ஒன்றுசேர வேண்டும்!’’ என்றார்.

ஆக மொத்தத்தில் சும்மா கிடந்த கோடம்பாக்க சங்கை எடுத்து ஊத வைத்திருக்கிறார் ரீமா கல்லிங்கல்.

கேரளத்தில் ‘ஆக்ரோஷம்’ தமிழகத்தில் ‘குறட்டை!’

‘டேம் 999’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து முதல்வர் ஷெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தைத் தீவிரப்படு த்தியிருக்கிறார்கள் கேரள அரசியல் கட்சியினர். அதே சமயம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகளிடம் இருந்து தொடர்ந்து குறட்டைச் சத்தமே கேட்டுக் கொண்டிருக்கிறது.

திருவனந்தபுரத்தில் சில தினங்களுக்கு முன்னர் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘‘புதிய அணை கட்டும் முடிவில் இருந்து எந்த வகையிலும் பின்வாங்கக் கூடாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வண்டிப்பெரியாறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் ஷெயலலிதா உருவபொம்மை எரிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளும் இணைந்து கடந்த திங்கள்கிழமை ‘பந்த்’ நடத்தின.

இப்படி கேரளத்தில் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், தமிழகத்தில் இந்த அணையால் பயனடையும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் எம்.பி.க்களோ, அரசியல் தலைவர்களோ தமிழக மக்களுக்கு ஆதரவாக அறிக்கை கூட வெளியிடாதது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

- பதி

தடைகளின் வரலாறு

‘டேம் 999’ படத்தைத் திரையிடக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதைப் போல, இதற்கு முன்பு வேறு ஏதாவது படத்துக்கு அரசு தடை விதித்திருக்கிறதா?

‘பராசக்தி’ படம் 1952-ல் திரைக்கு வந்தபோது பலத்த எதிர்ப்புகள் வந்தன. இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள், கடவுள் நிந்தனைகள் இருப்பதாகச் சொல்லி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் அரசும் கடுமையாக எதிர்த்தது. இந்தப் படத்திற்கான சான்றிதழை வழங்கியது பற்றி மத் திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டுமென ராஷாஜி கேட்டுக் கொண்டார். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ‘பராசக்தி’ வெற்றிகரமாக ஓடியது. ஆனால் ஓடி முடிந்த பிறகு, 1967 வரை மறு ரிலீஸ் ஆகாமல் காங்கிரஸ் அரசால் முடக்கி வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சில காட்சிகளை சேர்த்து மீண்டும் திரையிட்டார்கள்.

1971-ல் சோ ராமசாமியின் ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படம் வெளியான போது முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. மத உணர்வுகளைப் புண்படுத்து வதாகச் சொல்லி அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

1973-ல் ‘அரங்கேற்றம்’, 1980-ல் ‘சாவித்திரி’ ஆகிய படங்களும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன. ‘சாவித்திரி’ படத்தைத் திரையிடக் கூடாது என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம் வெளியானது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக மோதிக் கொண் டார்கள். இது 1981-ல் நடந்தது. நக்சல் ஆதரவு படங்கள் எனச் சொல்லி ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘சிவப்பு மல்லி’ ஆகிய படங்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பியது. 1979-ம் ஆண்டில் ‘மா பூமி’ என்கிற தெலுங்குப் படத்தின் படச் சுருள்களை தஞ்சை மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்தார்கள். தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் தொடர்பான படம் அது.

2006-ல் கிறிஸ்துவ மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகச் சொல்லி ‘தி டாவின்சி கோட்’ படத்திற்கு அன்றைய தி.மு.க. அரசு திரையிட அனுமதி மறுத்தது. செல்வமணியின் ‘குற்றப்பத்திரிகை’ படமும் அரசினால் தடை செய்யப்பட்டு முட்டி மோதி பல வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வந்து சில நாட்களே ஓடி அடங்கியது.

திரைப்படங்களை வெளியிடாமல் தடுப்பதற்கான உரிமையை 1987-ல் அ.தி.மு.க. அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து பெற்றது. சில திரைப்படங்களால் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக சட்டரீதியாக சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய தணிக்கைக் குழுவினர் ஒரு படத்தைத் திரையிட அனுமதிப்பது அல்லது மறுப்பதற்கு சான்றிதழ் வழங்க முடியும். சம்பந்தப்பட்டவர்கள் மறுபரிசீலனை என மும்பை, டெல்லி வரை செல்லலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஒரு திரைப்படத்தைத் திரையிடாமல் தடுக்கிற உரிமை மாநில அரசுக்கு உண்டு. இந்த திருத்தத்தைக் கொண்டுவந்தது அ.தி.மு.க. அரசு. அதை 2006-ல் கருணாநிதி பயன் படுத்தி ‘தி டாவின்சி கோட்’ படத்துக்கு தடைவிதித்தார். இப்போது 2011-ல் ‘டேம் 999’ படத்திற்கு முதல்வர் ஷெயலலிதா தடை விதித்திருக்கிறார்.

தேவிமணி

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.