Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சினிமாப்பாடல்கள் எழுதுங்கள்.

Featured Replies

kaadalme5kr.gif
  • Replies 50
  • Views 7.5k
  • Created
  • Last Reply
kaadalsi8na.gif
kaathal6re.gif
kaathalenbathakaamamenbatha5fg.gif
kaathalkavithaigalpadithidum7d.gif
kaathalraajiyamenathu4mg.gif
kaathalsadukudu6tt.gif
kaathalvalarthaen4us.gif
kaathalvanthathum1va.gif
kaathalvennila5vl.gif
kaathalvirusunnai1ol.gif
kaathalwebsite5lp.gif
kaathalaax2kaathalinsaaralaa5n.gif
kaathalaagikaathalaagi9pi.gif
kaathalaeklaayo1dl.gif
kaathalithaalaananthamf1yg.gif
kaathalennapattaam2jn.jpg

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்

இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒன்ன பூப்பூவா கோர்த்திருந்தேன்

அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்

சூரியனை சூரியனை சுருக்குப்பையில்

நான் அள்ளிவர அள்ளிவர ஆசைப்பட்டேன்

சீறிவரும் சிங்கத்தையே சில நாளா

என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிக்குள்ள தான் ஒத்த தாமரைக் கொடி

தெப்பக் குளத்தையே குடிச்சிருச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்

அந்தப்பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கிருந்தேன்

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாதத் தடங்கள் ஆயிரம் இருக்கும்

நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்

இதயத்தை தட்டித் தட்டி பார்த்துப்புட்ட

அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட

நீ கிடைக்கவேண்டுமென்று துண்டுச்சீட்டு எழுதிப்போட்டேன்

பேச்சியம்மன் கோயில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன?

கண்ணுக்குள்ள ஓடிய ஒன்ன துரத்த

மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச

மனசுக்குள் ஒளிஞ்சிடும் ஒன்ன விரட்ட

உசிருக்குள் நீ வந்து நுழைஞ்ச

நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா.

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்

அந்தப் பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கிருந்தேன்

அடுத்தவீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும்போது

நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்துப் பார்த்தேன்

இது வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு

அது இன்றுமுதல் ஆனது இலவம் பஞ்சு

கட்டபொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்

தேசபற்று ஓவியன் என்று வீட்டுச் சுவற்றில் அப்பா மாட்ட

அணைக்கட்டு போல இருந்த மனசு

நீ தொட்டு ஒடைஞ்சது என்ன

புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் மனசு

பூப்பட்டு சரிஞ்சது என்ன

வேப்பமரம் சுத்திவந்தேன்

அரச மரமும் பூத்ததய்யா..

போல்ட் - ஆண் குரல்

மற்றையது - பெண் குரல்

பாடல்- சண்முகி அக்காவின் பதிவில் பிரதி எடுத்தது..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகை பாடல்களுக்கு நன்றி.

ஒவ்வொருவரையும் மாறி மாறி பாடல்களாகத் தரும்படி கேட்டிருந்தேன். ஒரே தடவையில் 22 பாடல்களைத் தந்திருக்கிறீர்களே!

என்ன நடந்தது?

இரசிகை பாடல்களுக்கு நன்றி.

ஒவ்வொருவரையும் மாறி மாறி பாடல்களாகத் தரும்படி கேட்டிருந்தேன். ஒரே தடவையில் 22 பாடல்களைத் தந்திருக்கிறீர்களே!

என்ன நடந்தது?

ஓஓ நான் எனக்கு தெரிந்த பாட்டெல்லாம் தேடி போட்டுட்டன். மன்னிக்கவும் :oops:

:shock: :shock: ரசி அக்கா..எனக்கு அப்போ ஒரு பாட்டும் இல்லை..எல்லாம் போட்டிருக்கிறீர்களே.. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன. ஓர் இனிய பாடலை தருகிறேன்.

படம்: நாளை நமதே

பாடல் வரிகள்: வாலி

பாடியவர்கள்: ஜேசுதாஸ் - சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

காதல் என்பது காவியமானால்

காதாநாயகன் வேண்டும் - அந்தக்

காதாநாயகன் உன்னருகே - இந்தக்

காதாநாயகி வேண்டும்

சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகனின்றி தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் பார்த்தது நினைவில்லையோ

நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இன்ப நு}லகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனக்கந்தப் பொருள் கூறத் துடித்தேனம்மா

வள்ளல் தரும் நல்ல நன்கொடைபோல்

என்னை வாங்கிய மணிக்கரமே

இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

காதல் பார்வைகள் எல்லாமே அழகு.

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை.

காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம்.

இது கன காலத்துக்கு முதல் ஏதோ ஒரு பாட்டில இருந்து சுட்டது.

என்ன பாட்டு எண்டு மறந்து போச்சு.

மேலதிக விபரம் தர முடியாமைக்கு மன்னிக்கவும்.

  • 3 months later...

காதல் பார்வைகள் எல்லாமே அழகு.

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை.

காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம்

காதல் என்பதைக் கண்டு பிடித்தவர் காலம் முழுவதும் நன்றிக்குரியவர்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்

தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்.

ம் இது காதலர் தினப் படப்பாடல் :- டாண்டியாராட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாச்சு சினேகிதி... அது காதல்தினத்துக்காக எழுதிய காதல் பாடல்களாச்சே..... இப்ப என்ன காதல் பாட்டை கொண்டு வந்து எழுதுறிங்க....

ஓ... சிலருக்கு எல்லா நாளுமே காதலர் தினம் தானோ??? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.