Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

40% க்கு மேலான புற்றுநோய் தோன்ற காரணம் எமது உணவு வழக்கங்களே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இருந்து ஆண் பெண் இருபாலாரிடமும்.. அதிக புற்றுநோய் தோன்றக் காரணம் உணவு வழக்கங்களே என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களில் அநேகருக்கு.. புகை.. மதுபானம்.. சமைக்காத காய்கறிகளை.. பழங்களை உண்ணாமை இப்படியானவை இதற்கு முக்கியமான காரணியாக.. அமைய..

பெண்களிலோ.. உடற் பருமன்.. புகை.. மதுபானம்.. இதர நுண்கிருமித் தொற்றுக்கள் என்பவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

எமது அன்றாட உணவு வழக்கத்தை சீர்செய்வதன் மூலமும்.. இவ்வாய்வு பரிந்துரைக்கும் வழியிலும்.. நாம் வாழப் பழகிக் கொண்டால்.. புற்றுநோய்க்கான வாய்ப்பை நாம் வெகுவாகக் குறைக்க முடியும்..!

மேலும் இங்குள்ள காணொளியை பாருங்கள்.. விடயங்களை அறிந்து உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் சொல்லுங்கள்.

புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோயாகும்..! வருமுன் காப்பதன் மூலம்.. இந்த நோயில் இருந்தும் தப்பி வாழ முடியும்.

http://www.bbc.co.uk...health-16064885

Edited by nedukkalapoovan

ஏன் சார் இதற்கு புற்றுநோய் என்று பெயர்? எல்லா இடமும் பாம்பு நெளிவதுபோல் உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டு சாப்பிட்டால் நக்கல்...

இடியப்பம் சாப்பிட்டால் நக்கல்....

சோறுசாப்பிட்டால் நக்கல்...

ஒடியல்புட்டு சாப்பிட்டால் நக்கல்..

கூழ்குடிச்சால் நக்கல்....

பினாட்டு சாப்பிட்டால் நக்கல்....

பனங்கொட்டை சூப்பினால் நக்கல்...

ரொட்டியும் சம்பலும் சாப்பிட்டால் நக்கல்...

பழஞ்சோறு சாப்பிட்டால் நக்கல்...

காலைச்சாப்பாடு மரவள்ளிக்கிழங்கு எண்டால் நக்கல்....

பனங்கிழங்கு துவையல் எண்டால் நக்கல்....

பீற்றூற் நாகரீகம்..

கரட் நாகரீகம்....

கம்பேர்க்கர் நாகரீகம்...

சீஸ்பேர்க்கர் நாகரீகம்..

டொனர் நாகரீகம்..

பிட்சா நாகரீகம்...

பொலிடோல் அடிச்ச காய்கறிகள் நாகரீகம்..

கலர் அடிச்ச பழவைகள் நாகரீகம்...

புற்றுநோய்....இப்ப தையக்க...தையக்க.... :huh:

பீற்றூற் நாகரீகம்..

கரட் நாகரீகம்....

அண்ணை எல்லாம் சரி, ஏன் இந்த இரண்டையும் இந்த பட்டியலில் சேர்த்தீர்கள்? முதல் பட்டியலில் அல்லவா சேர்த்திருக்கவேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டு சாப்பிட்டால் நக்கல்...

இடியப்பம் சாப்பிட்டால் நக்கல்....

சோறுசாப்பிட்டால் நக்கல்...

ஒடியல்புட்டு சாப்பிட்டால் நக்கல்..

கூழ்குடிச்சால் நக்கல்....

பினாட்டு சாப்பிட்டால் நக்கல்....

பனங்கொட்டை சூப்பினால் நக்கல்...

ரொட்டியும் சம்பலும் சாப்பிட்டால் நக்கல்...

பழஞ்சோறு சாப்பிட்டால் நக்கல்...

காலைச்சாப்பாடு மரவள்ளிக்கிழங்கு எண்டால் நக்கல்....

பனங்கிழங்கு துவையல் எண்டால் நக்கல்....

புற்றுநோய்....இப்ப தையக்க...தையக்க.... :huh:

இந்த உணவுகளில் அதிக மாப்பொருள் இருப்பதும்.. தெற்காசியர்கள் மத்தியில் நீரிழிவு நோய்க்கான பரம்பரைத் தன்மை ஆதிக்கம் செய்து கொண்டிருப்பதும்.. எம்மவர்கள் அதிகம் உடற்பருமனை கொள்ளவும்.. நீரிழிவு நோய்க்கு இலகுவாக ஆட்படவும் செய்கிறது..!

எனவே எம்மவர்கள் மாப்பொருள் அடங்கிய உணவுகளை மொத்த உணவில் 1/3 பங்காக்கி பச்சைக் காய்கறிகள்.. நார்ப்பொருள் உள்ள பழங்கள்.. புரதம்.. மற்றும் நிரம்பாத கொழுப்புள்ள உணவுகளை தேவைக்கு ஏற்ப உண்டு வருதல் தாயகத்திலும் நலமான வாழ்க்கைக்கு உதவும்.

முன்னைய காலங்களில்.. மாப்பொருளை அதிகம் உண்டாலும்.. வயல் வேலை அது இதென்று.. கடின உழைப்பில் சக்தியை செலவு செய்ததால்.. அதிக நோய்த்தாக்கங்கள் இருக்கவில்லை.

இன்றைய காலங்களில் அதே புட்டையும்.. இடியப்பத்தையும்.. சோறையும் அமுக்கிவிட்டு.. காரில் வேலைக்குப் போயிட்டு.. வேலை இடத்தில் குறைந்த உடற் சக்திச் செலவில் வேலை செய்துவிட்டு.. வீட்டுக்கு வருவதால்.. உள்ளெடுக்கப்பட்ட உணவின் மூலம் பெறப்பட்ட சக்தி செலவழிக்கப்படாத நிலையில் அது கொழுப்பாக மாற்றி சேமிக்கப்படும். இது உடற்பருமன் அதிகரிப்பை உண்டு பண்ணி அது புற்றுநோய் .. நீரிழிவு.. உள்ளிட்ட நோய் தாக்கங்களுக்கு கூடிய வசதி செய்து கொடுக்கும்..!

இதை உணராமல்.. சிலர் தவறாக புட்டை உண்பது பழிப்பு என்பது போலவும்.. பச்சைக் காய்கறிகள்.. பழங்களை உண்பதை.. நாகரிகம் என்றும் காட்ட விளைகின்றனர். இது அறியாமையின் பால்பட்டது..! உண்மையில் பச்சைக்காய்கறிகளை.. பழங்களை உண்ணச் சொல்வதன் பின்னால் சுகாதார உடல் நலன் நோக்கிய தேவையே அதிகம் உள்ளது.

அதேவேளை.. புட்டு இடியப்பம் எப்படியோ.. அப்படித்தான் பிட்சா.. பேர்கர்.. மற்றும் டொனர் ரொட்டிகளும்.. அதிகம் மாப்பொருளை... கொழுப்பை கொண்டுள்ளன. அவற்றை உண்பதில் மிகுந்த கட்டுப்பாடு இருப்பது அவசியம்..! அவை நாகரிகம் அல்ல. மேற்கு நாடுகளின் உணவு வழக்கத்தில் அவை இடம்பெற்றிருப்பதால்.. சிலர் அதை நாகரிகமாக கருதுகின்றனரே தவிர.. உண்மையில் அவையே மேற்குநாடுகளில் அதிகம் உடற்பருமன் பிரச்சனைக்கு வித்திடுகின்றன..! இதனை பல்வேறு ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. :):icon_idea:

post-2989-0-18580700-1324029697_thumb.jp

தினமும் உண்ணும் உணவில் பெரும் பகுதி.. இப்படி இருந்திட்டா.. உடலுக்குத்தான் நலன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய்கறிகளும் பழங்களும் மூண்டு நேரமும் சாப்பிடலாம்தான்....அதெல்லாம் சுழல்கதிரையிலையிருந்து சுழட்டல் கதைகதைக்கிறவைக்குத்தான் சரி.......என்னை மாதிரி ஓடியாடி கஸ்ரமான வேலைசெய்யிறவங்களுக்கு ஒடியல்புட்டுமாதிரி நல்ல ஸ்ரோங்கான சாப்பாடு கட்டாயம் வேணும் கண்டியளோ.......சோபாவிலை இருந்துகொண்டு வாய்க்குருசியாய் கடிக்கவும்வேணும்......வருத்தங்களும் வரக்கூடாது எண்டால்??சாப்பிட்ட சாப்பாடு செமிக்க வேலை செய்தால் சீனிவருத்தமும் வராது உப்புவருத்தமும்வராது(கந்தோரிலை வேலைசெய்யிறவை கவனிக்கவும்) :lol::icon_idea:

எனது நண்பரின் தந்தைக்கு அண்மையில் குடல் புற்றுநோய் வந்திருந்தது:

- எம்மவர்களுக்கு குடலின் முற்பகுதியில் புற்றுநோய் கூடுதலாக வருகின்றது

- வெள்ளை இனத்தவர்களுக்கு குடலின் இறுதிப்பகுதியில் வருகின்றது

- ஆரம்பத்தில் கண்டறிந்தால் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றலாம்

- பரம்பரையில் இவ்வாறான பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும்

- உறப்பை அளவோடு பாவிப்பது உகந்தது

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரின் தந்தைக்கு அண்மையில் குடல் புற்றுநோய் வந்திருந்தது:

- எம்மவர்களுக்கு குடலின் முற்பகுதியில் புற்றுநோய் கூடுதலாக வருகின்றது

- வெள்ளை இனத்தவர்களுக்கு குடலின் இறுதிப்பகுதியில் வருகின்றது

- ஆரம்பத்தில் கண்டறிந்தால் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றலாம்

- பரம்பரையில் இவ்வாறான பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும்

- உறப்பை அளவோடு பாவிப்பது உகந்தது

வெள்ளைக்காரனுக்கு ஏன் குடலின் பின்பகுதியில் புற்றுநோய் வருது? :unsure::rolleyes:

வெள்ளைக்காரனுக்கு ஏன் குடலின் பின்பகுதியில் புற்றுநோய் வருது? :unsure::rolleyes:

அவர்கள் நார்ச்சத்து உணவுகள் (fiber) குறைவாக சாப்பிடுவது வழமை. அதனால் ஏற்படும் மலச்சிக்கல் நாளடைவில் புற்றுநோயுக்கு காரணமாகிவிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனுக்கு ஏன் குடலின் பின்பகுதியில் புற்றுநோய் வருது? :unsure::rolleyes:

இசையின் கேள்வியிலேயே பதிலும் இருப்பதுபோல் தெரிகிறது?

அதீத அளவில் களை கொல்லிகள் / இரசாயன உரம் பாவிப்பது, உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயணப் பொருட்கள் ஆகியனவும் பல வருத்தங்களுக்குக் காரணம்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகவும் மனம் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

Edited by தப்பிலி

- உறப்பை அளவோடு பாவிப்பது உகந்தது

செத்தல் மிளகாய்தான் அதிகம் உணவில் சேர்க்கக் கூடாதென்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். உறைப்பு அதிகம் உட்கொள்வதும் புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்றென மருத்துவம் கூறுகிறதா?

செத்தல் மிளகாய்தான் அதிகம் உணவில் சேர்க்கக் கூடாதென்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். உறைப்பு அதிகம் உட்கொள்வதும் புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்றென மருத்துவம் கூறுகிறதா?

பொதுவாக நேரத்திற்கு சாப்பிடாமல் விடும்பொழுது இரப்பையில் சுரக்கும் அமிலம் குடலை பாதிக்கின்றது. இதுவே 'அல்சருக்கு' வழி சமைக்கின்றது. பின்னர் கடும் உறைப்பை உண்பதும் சேர்ந்து குடலில் புற்றுநோய் உருவாக வழிசமைக்கின்றது.

ஆனால் இவை சம்பந்தமாக எமது மக்கள் மத்தியில் எந்த அமைப்புக்களும் புள்ளி விபரங்களையோ இல்லை ஆராய்வையோ மேற்கொள்ளாத நிலையில் இது ஒரு ஆதரமில்லாத கூற்றாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கேள்வியிலேயே பதிலும் இருப்பதுபோல் தெரிகிறது?

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

ஆரோக்கியமான உணவில் பொதுவாக வானவில்லின் நிறத்தை ஒட்டியதாக இருக்கவேண்டும் என்பார்கள் :D.நீங்கள் அருந்தும் உணவில் பலவேறு நிறங்கள் காணப்பட்டால், அது ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிய பழங்களையும்,காய்கறிகளையும் சாப்பிட்டு என்னத்தைக் கண்டது எவனொருவன் புட்டையும்,இடியப்பத்தையும் சாப்பிட்டும் உடம்பை கவனமாக வைத்திருக்கிறானோ அவனே வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.