Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஷ்.. பேஷ்.. பேஸ் புக்.. நட்பு.. கழுத்தை நெரித்த கதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி இப்படியான பெட்டைகளிடம் நீங்கள் ஏமாறுவீர்களா? இல்லை என்டால் என்ன காரணம் என சொல்லுங்கள்.

பசுவை கண்டு பால்கறக்க போகும்போது...........

அது புலியாகி பாய்ந்தால்? எமாறுவீர்களா என்று கேட்டல்?? சீ சீ அந்த அளவுக்கு முட்டாள் இல்லை என்று பொய் சொல்லவே தெரியவில்லை.

(மற்றைய படி எனது மேலே உள்ள கருத்துக்கள் பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியேற எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதுக்கானது. ஆண்ணதிக்கத்தால் பெண்கள் நெரிபடுவதை நேரிலேயே பார்த்தவர்கள் நாங்கள் அதை இல்லை என்று எழுதினால் ஒன்றில் எமக்கு கண் அல்லது மூளை இல்லாது இருக்கவேண்டும். அது சகார அக்காவிற்கு தெரிந்துதான் எனக்கு எந்த பதிலையும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் குற்றம் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் உண்மை என்னவென்றால் இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள்...

அதிகார போட்டி என்பது மிருகங்களிடேமே தெளிவாக உள்ளது.

மனிதன் அதற்கு விதிவிலக்கல்லாமல் இருந்துகொண்டு .............. மனிதநேயம் என்ற பெயரில் பூச்சடிப்பதுதான் புரியாமல் உள்ளது.

சிலது என்பதற்கும் பலது என்பதற்கும் உள்ள இடைவெளியை அந்த புரியாமைதான் மறைக்கின்றது.

தவிர அதிகாரத்தை கொடுத்து விட்டல் இதில் ஆண் பெண் வேறுபாடு எங்கும் இல்லை.

இந்திரா காந்தி............... சிறிமா ................ மார்கரெட் தச்சர். என்று நாம் பார்த்தவர்களும் பெண்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

kalima.jpg

இந்தப் படம் மதம் சார்ந்த ஒன்று. அதில் உள்ள காளி ஆண்களை மட்டும் தெரிவு செய்து வன்முறைக்கு இலக்காக்கி இருக்கிறார். இதனை நாங்கள் பெண்ணாதிக்கத்தின் வடிவம் என்று இனங்காட்டினால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..??!

அக்கா.. உங்கட கேள்விகளும் குற்றச்சாட்டுக்களும்.. பள்ளியில் மாணவன் விடும் தவறுக்கு ஆசிரியரை குற்றம் சாட்டும் பெற்றோர்கள் போன்றுள்ளது.

பிள்ளை தவறு விடும் போது.. ஆசிரியர் சரியா இருந்தா பிள்ளை ஒழுக்கா இருக்கும் தானே என்கிற நீங்கள்.. அப்புறம் பிள்ளையோடு கண்டிப்பாக இருந்தால்.. ஆசிரியர் சரியான கண்டிப்பு.. அடக்குமுறை பண்ணுறார் என்றும்.. பிளேட்ட மாத்திப் போடுவீங்க..! இதெல்லாம்.. வாதத்திற்கு சரி வரலாமே தவிர நடைமுறையில்.. பிள்ளைகள் ஆசிரியர்கள் எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் தவறு செய்யவே செய்கின்றனர்.

பெண்களுக்கு.. சுயமான மூளை.. உடற் செயற்பாடுகள் உண்டு. அவர்களாலும்.. திட்டமிட்ட குறுநோக்குள்ள.. நெடுநோக்குள்ள.. ஏமாற்று வேலைகளை.. வன்முறைகளை.. சமூக விரோதச் செயற்பாடுகளை.. ஆண்களின் எந்த வித பங்களிப்பும் இன்றி செய்ய முடியும். செய்கிறார்கள். இதனை.. ஆணாதிக்கத்தின் பெயர் கொண்டு மூடி மறைத்து.. பெண்களை அப்பாவிகளாக சமூகத்தில் இனங்காட்டி உலவவிட்டு.. அப்பாவி ஆண்களை அவர்களுக்கு பலிக்கடா ஆக்காதீர்கள். இதனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகங்களுமே ஆகும்..! :):icon_idea:

கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் இப்படி சடைய வேண்டாம் முதலில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தாருங்கள் :icon_mrgreen:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

மாதவியும் உண்டு............

கண்ணகியும் உண்டு...............

கோகுலனும் உண்டு.............

நம்மள போல ராமரும் உண்டு.............

உடலை காட்டி உள் உறுப்புகளை காட்டி................ ஆணுக்குக்கு ஆசையை வளர்க்கும் மோசடியை யார் செய்கிறார்?

உள்மனதில் வஞ்சம் இல்லை என்றால்? ஏன் முகத்து பெயிண்ட் அடிக்கோணும் உதட்டுக்கு சாயம் அடிக்கவேணும். சீலை என்ற பெயரில் இடுப்பை காட்டவேணும்? பாவாடை என்ற பெயரில் காலை காட்டவேணும்?

எங்களைபோல குடும்ப நிலையையும் நாட்டு நிலையையும் உலக நிலையையும் கருத்தில் எடுத்து உள்ள முகதினுடனேயே வெளியிலே வரலாமே?

நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பதை எப்படி நியாஜ படுத்த முடியும்?

(அதுக்காக நீங்கள் எல்லா உண்மையையும் அவக்கென்று பேசகூடாது........)

சூர்ப்பனகையைக் கண்டு ராமன்கள் மயங்கவில்லை :lol:

இதென்ன கொடுமையாக இருக்கிறது ஒரு பெண் தன்னை அழகுபடுத்தவது தவறா? பெண்கள் உதட்டுக்குச் சாயம் அடிப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? சீலை என்ற பெயரில் இடுப்பை காட்டுவது என்ன கொலைக்குற்றமா? பாவாடை அணிவது என்னப்பா சொல்கிறீர்கள்?

உங்களுடைய ஆதிக்கம் பெண்களை இப்படித்தான் இருக்கவேண்டும் சொல்கிறதோ?stock-photo-islamic-girl-wearing-hijab-25301044.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சூர்ப்பனகையைக் கண்டு ராமன்கள் மயங்கவில்லை :lol:

இதென்ன கொடுமையாக இருக்கிறது ஒரு பெண் தன்னை அழகுபடுத்தவது தவறா? பெண்கள் உதட்டுக்குச் சாயம் அடிப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? சீலை என்ற பெயரில் இடுப்பை காட்டுவது என்ன கொலைக்குற்றமா? பாவாடை அணிவது என்னப்பா சொல்கிறீர்கள்?

உங்களுடைய ஆதிக்கம் பெண்களை இப்படித்தான் இருக்கவேண்டும் சொல்கிறதோ?stock-photo-islamic-girl-wearing-hijab-25301044.jpg

இல்லை அக்கா தூண்டில் போடும் வேலை சிறப்பாக நடக்கிறது.............

இதில் போய் மாட்டும் மீனை நோவதுதான் புரியாமல் இருக்கிறது.

தவிர எமக்கு பிடிச்சதே இந்த மினி ச்கேர்ட்தான்............... (தப்பாய் எடுக்காதீர்கள்)

இதுதான் உள்ளது என்று உண்மை சொல்லிவிட்டால் ஏமாற்றத்திற்கு இடம் இருக்காது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அக்கா தூண்டில் போடும் வேலை சிறப்பாக நடக்கிறது.............

இதில் போய் மாட்டும் மீனை நோவதுதான் புரியாமல் இருக்கிறது.

தவிர எமக்கு பிடிச்சதே இந்த மினி ச்கேர்ட்தான்............... (தப்பாய் எடுக்காதீர்கள்)

இதுதான் உள்ளது என்று உண்மை சொல்லிவிட்டால் ஏமாற்றத்திற்கு இடம் இருக்காது அல்லவா?

மருது இததான் உள்ளது என்று மனுசராக பிறந்த எல்லோருக்குமே தெரியும் .... இதில் என்ன உண்மை சொல்ல வேண்டிக்கிடக்கிறது? :icon_mrgreen:

எனக்கு இந்தப் புதினம் பார்க்கிற விடயம்தான் புரியாமல் கிடக்கிறது... :lol: :lol:

நெடுக்கர் இந்தியாவில் பிறந்திருந்தால் அந்த மாதிரி பொழுதை போக்கியிருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது எல்லாம் ஆண்களால் தவிர்க்கப்படக்கூடியவை...கணவன்.. காதலன்.. தந்தை..மகன்.. சகோதரன் என்கிற எல்லா நிலைகளையும் பிடிக்காவிட்டால் தூக்கிவீசி விட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம்...ஆனால் ஆசியாவில் பெண்களுக்கு அப்படியான சுதந்திரம் இருக்கிறதா..?அப்படித்தூக்கி எறிந்து விட்டு அவர்களால் சமூகத்தில் சுயமாக வாழமுடியுமா..?அதற்க்கு அவளைச் சுற்றியிருக்கும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம் இடம்தருமா...?ஆண்கள் மீதான சுரண்டல் ஆண்கள் விரும்பியே இடம்பெறுகிறது..அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் விலகிவிடலாம்..சுதந்திரமாக தனியே வாழலாம்..யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்..ஆனால் இந்தியாவின் ஒரு பஞ்சாயத்துக் கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா..அவள் விரும்பாவிட்டாலும் அவள் மீது இடம்பெறும் அடிமைச் சுறண்டலை அவளால் தடுத்து நிறுத்த முடியுமா..? இல்லைத் தட்டிக்கேட்க முடியுமா...?வாதத்திற்க்கு கரணங்களை அடுக்கலாம்..ஆனால் ஆணாதிக்கத்திற்க்கும் நீங்கள் சொல்லும் பெண்ணாதிக்கத்திற்க்கும் எந்தவிதத்திலுமே சமரசம் செய்யமுடியாது...இரண்டுமே அடிப்படையில் வேறு வேறானவை..இவை வெளிநாடுகளில் வேணுமானால் சமப்படலாம்...ஆனால் தென்னாசியாவில் இரண்டிற்க்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது...ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பலரின் பார்வை அபிவிருத்தியடைந்த வெளிநாடுகளை ஒட்டியதாக அவற்ரை மதிப்பிட்டுப் பார்ப்பவையாக இருக்கிறது...ஆனால் எனது பார்வை ஆசியாவை ஒட்டியதாக அங்குள்ள நடைமுறைகளை ஒட்டியதாக இருக்கிறது...அதுதான் வித்தியாசம்...

பெண்களின் சுரண்டல்களில் இருந்து.. பெண்ணாதிக்கத்தில் இருந்து ஆண்கள் விலகி இருக்க முடியும் என்றால் நீங்கள் வர்ணிக்கும் ஆணாதிக்கத்தில் இருந்தும் பெண்கள் விலகி இருக்க முடியும் என்பதுதான் எங்களின் வாதமும் கூட. பெண்கள் ஒன்றும் ஆண்கள் இயக்கும் இயந்திரங்களாக இந்தப் பூவுலகில் படைக்கபடவில்லையே. அவர்களுக்கு என்று சுய மூளை.. உடல்.. உடலியக்கம்.. கல்விக்கான வாய்ப்பு என்று எல்லாம் சமனாகத் தானே இருக்கிறது. அது தெற்காசியா என்றால் என்ன.. எந்த மூலை என்றால் என்ன அது சாத்தியப்படுகிறது தானே.

மேலும்.. இந்தியா இலங்கையில்.. இப்போ எல்லாம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்று புனர்வாழ்வு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கணிசமான ஆண்கள் இணைந்து கொண்டுள்ளனர். மேற்கு நாடுகளிலும் இந்த நிலை விரைவாக வளர்ந்து நிற்கிறது. இது பெண்ணாதிக்கத்தின் வெளிப்படைத் தன்மையை மனித இனம் வெளி உலகிற்கு காட்டுவதால் தெரிய வருகிறதே அன்றி.. இது பன்னெடுங்காலமாக நாலு சுவற்றுக்குள் நடந்து கொண்டிருந்த விடயமாகவே தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரை.. பெண்ணாதிக்கம் என்பது.. ஆணாதிக்கம் என்று நீங்கள் வரையறுப்பதை விட மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே தெரிகிறது. ஒரு ஆண் கெட்டுப் போவதால்.. அவன் சார்ந்த குடும்பம் கெட்டுப் போவது குறைவு. ஆனால் ஒரு பெண் கெட்டுப் போவதால்.. அவள் சார்ந்த குடும்பம்.. குழந்தைகள் சீரழிவது அதிகரிக்கும். காரணம்.. தாய்க்கும் பிள்ளைக்குமான இணைப்பு.. தந்தையினதை விட அதிகம். அது இயற்கையானதும் கூட. அந்த வகையில் பெண்ணாதிக்கத்தின் விசத்தன்மை தெரியாமல்.. நீங்கள் சிலர் அதனை ஆணாதிக்க வரவிலக்கணத்தால் மறைக்க முயல்வதன் மூலம்.. பலமான சமூக சீர்கேட்டை நோக்கி சமூகங்களை தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் மிகச் சுலபமாக இனங்காண முடிகிறது.

எமது ஈழவிடுதலைப் போராட்டத்தை எடுத்துப் பார்த்தீர்களானால்.. ஆணாதிக்கம் என்று பேசிய.. பல பெண்மணிகள் இன்று எதிரிகளோடு சேர்ந்து நின்று கொண்டு.. அவர்களின் ஆதிக்கத்தை அங்கீகரித்து கூக்குரல் இடும் வெறியர்களாக.. ஒரு தேசிய இனத்தின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பவர்களாக இருக்கின்றனர். இதுதான் பெண்ணாதிக்க வெறியர்களாக உள்ள பெண்களால்.. இந்த மனித சமூகம் பெற்ற உச்ச பலனாக இருக்க முடியும்..! அந்த வகையில் பெண்ணாதிக்கத்திற்கு பாலூட்டி வளர்ப்பதும்.. நஞ்சுள்ள நாகத்திற்கு பாலூட்டி வளர்ப்பதும் ஒன்றே..! இரண்டும் தின்று கொழுத்து.. தீண்டினால் விளைவு விபரீதமானதாகவே இருக்கும்..! :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் இப்படி சடைய வேண்டாம் முதலில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தாருங்கள் :icon_mrgreen:

உங்களுக்கான கேள்வியின் விடையை நீங்கள் உணரவில்லைப் போலும்.

உங்கள் கேள்விக்கான விடை இப்படி எழுதப்பட்டுள்ளது.. கவனிக்கவும்.

பெண்களுக்கு.. சுயமான மூளை.. உடற் செயற்பாடுகள் உண்டு. அவர்களாலும்.. திட்டமிட்ட குறுநோக்குள்ள.. நெடுநோக்குள்ள.. ஏமாற்று வேலைகளை.. வன்முறைகளை.. சமூக விரோதச் செயற்பாடுகளை.. ஆண்களின் எந்த வித பங்களிப்பும் இன்றி செய்ய முடியும். செய்கிறார்கள். இதனை.. ஆணாதிக்கத்தின் பெயர் கொண்டு மூடி மறைத்து.. பெண்களை அப்பாவிகளாக சமூகத்தில் இனங்காட்டி உலவவிட்டு.. அப்பாவி ஆண்களை அவர்களுக்கு பலிக்கடா ஆக்காதீர்கள். இதனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகங்களுமே ஆகும்..!

இன்னும் விளக்கமாகச் சொன்னால்.. உங்கள் கேள்விக்குப் பதில் ஆம்.

பெண்களால்.. ஒரு ஆண் தவறான பாதையில் இட்டுச் செல்வதை உணர முடியவில்லை என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் இயற்கையாகவே ஆண்களின் நடவடிக்கைகளை நேரிடையாக நம்பக் கூடியவர்கள் அல்ல. தங்களுக்கு சாதகமான ஒரு தளம் இருந்தால் அன்றி பெண்கள் ஆண்களை அவ்வளவு இலகுவில் நம்பமாட்டார்கள். அந்த வகையில்.. பெண்களை சும்மா.. வெறும் வேக்கைகள்.. என்ற கணக்கான நீங்கள் காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல பெண்கள்.. ஆண்களை விஞ்சும் அளவிற்கு.. சமூகத்தையே தவறாக நடத்துகின்ற போது.. அவர்களை ஆண்கள் தவறாக நடத்துவதை அவர்கள் உணரவில்லை என்பது.. வெறும் சாக்குப் போக்கே அன்றி.. உண்மை அதுவல்ல. தங்களை ஆண்களுக்கு பலிக்கடாவாக்கி.. அதில் இலாபம் பெறத் துடிக்கும் பெண்கள் நிறைந்த உலகில்.. இப்படியான ஆணாதிக்கம்.. ஆண்களால் பெண்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.. போன்ற குற்றச்சாட்டுக்களை ஆண்கள் மீது சுமத்திவிட்டு அதில் குளிர்காய பெண்களுக்கு அதிக நேரம் எடுக்காது.. என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டால்.. உங்களின் கேள்விக்கான என் பதிலை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மருது இததான் உள்ளது என்று மனுசராக பிறந்த எல்லோருக்குமே தெரியும் .... இதில் என்ன உண்மை சொல்ல வேண்டிக்கிடக்கிறது? :icon_mrgreen:

எனக்கு இந்தப் புதினம் பார்க்கிற விடயம்தான் புரியாமல் கிடக்கிறது... :lol: :lol:

பெயிண்ட் அடிச்சு உண்மை முகத்தை மறைத்து வைந்திருந்துவிட்டு...............???

இதுதான் உண்மை என உள்ள முகத்தையே காட்டினால்? ஏமாற்றத்திற்கு இடமில்லைதானே.

முகம்தான் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் சுரண்டல்களில் இருந்து.. பெண்ணாதிக்கத்தில் இருந்து ஆண்கள் விலகி இருக்க முடியும் என்றால் நீங்கள் வர்ணிக்கும் ஆணாதிக்கத்தில் இருந்தும் பெண்கள் விலகி இருக்க முடியும் என்பதுதான் எங்களின் வாதமும் கூட.

பெண்கள் விலகி இருக்கமுடியும்..ஆனால் எங்கு..? அமெரிக்காவில்,கனடாவில்,அவுஸ்ரேலியாவில்,ஜரோப்பாவில் இவை சாத்தியமே..ஆனால் இந்தியாவின் ஒரு அக்கிரகாரத்திலோ இல்லை தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்திலோ இது சாத்தியமா...? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எண்டு அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் பொறுத்துப்போகும்படி முட்டாள்தனங்களை ஊட்டிவளர்த்து பெண்களைப் பேசவே விடாமல் வைத்திருக்கும் இந்தத்தேசங்களில் இது சாத்தியமா...?சட்ட ரீதியாககக் கூட அவர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை...கொஞ்சம் துணிச்சல் மிக்க பெண்கள் பொலிஸை நாடினால் அங்கிருக்கும் ஆண்களால் ஏளனமும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுமே பரிசாகக் கிடைக்கிறது...வேலை செய்யும் இடங்களில் ஆண்களே அடிமை போல் நடத்தப்படும் இந்தியாவில் பெண்களின் நிலை வார்த்தைகளால் சொல்லமுடியாது..முதலாளிமார்களால் ஒவ்வொரு நாளும் பாலியல் ரீதியாக நரக வேதனை அனுபவிக்கும் பெண்களின் கண்ணீர்க்கதைகள் இன்னமும் தொடர்கதையாகவே இருக்கிறது அங்கு...இவை எல்லாம் வலிமிகுந்த யதார்த்தங்கள் அங்கு..நடைமுறையும் உங்களுடைய விவாதங்களுக்கும் ஒருகோட்டில் இணைபவையாகக் காணப்படவில்லை...நீங்கள் வீம்புக்கு விவாதத்திற்க்கு இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்..உங்கள் வாதத்திறமையை பாராட்டுகிறேன்..ஆனால் நான் நடைமுறைகளுடன் ஒட்டியே எல்லாவற்றையும் பார்ப்பவன் பேசுபவன்...யதார்த்தம் இந்தியப் பெண்களுக்கு வலிமிகுந்ததாக இருக்கிறது..நீங்கள் பேசுவதுபோல் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் போகும் நிலைமை அவர்களுக்கு இன்னும் உருவாகவில்லை..அது உருவாக வேண்டும்..அதுவரை அதற்க்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தட்டிக்கொடுங்கள் உங்கள் வாதங்களால் வெட்டிவீழ்த்தாதீர்கள்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு என்று சுய மூளை.. உடல்.. உடலியக்கம்.. கல்விக்கான வாய்ப்பு என்று எல்லாம் சமனாகத் தானே இருக்கிறது. அது தெற்காசியா என்றால் என்ன.. எந்த மூலை என்றால் என்ன அது சாத்தியப்படுகிறது தானே.

கல்விக்கான வாய்ப்பு பெண்களுக்கு சட்டத்தில் எழுத்தில் சமனாக இருக்கலாம்..ஆனால் யதார்த்தத்தில் சமூகத்தில் அது அவர்களுக்கு கிடைக்கிறதா...? எத்தனை ஆயிரம் பெண்கள் இந்தியாவில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்தி விட்டு அவர்கள் விருப்பத்திற்க்கு மாறாக இளவயது திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. இந்தியா இலங்கையில்.. இப்போ எல்லாம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்று புனர்வாழ்வு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கணிசமான ஆண்கள் இணைந்து கொண்டுள்ளனர். மேற்கு நாடுகளிலும் இந்த நிலை விரைவாக வளர்ந்து நிற்கிறது. இது பெண்ணாதிக்கத்தின் வெளிப்படைத் தன்மையை மனித இனம் வெளி உலகிற்கு காட்டுவதால் தெரிய வருகிறதே அன்றி.. இது பன்னெடுங்காலமாக நாலு சுவற்றுக்குள் நடந்து கொண்டிருந்த விடயமாகவே தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரை.. பெண்ணாதிக்கம் என்பது.. ஆணாதிக்கம் என்று நீங்கள் வரையறுப்பதை விட மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே தெரிகிறது. ஒரு ஆண் கெட்டுப் போவதால்.. அவன் சார்ந்த குடும்பம் கெட்டுப் போவது குறைவு. ஆனால் ஒரு பெண் கெட்டுப் போவதால்.. அவள் சார்ந்த குடும்பம்.. குழந்தைகள் சீரழிவது அதிகரிக்கும். காரணம்.. தாய்க்கும் பிள்ளைக்குமான இணைப்பு.. தந்தையினதை விட அதிகம். அது இயற்கையானதும் கூட. அந்த வகையில் பெண்ணாதிக்கத்தின் விசத்தன்மை தெரியாமல்.. நீங்கள் சிலர் அதனை ஆணாதிக்க வரவிலக்கணத்தால் மறைக்க முயல்வதன் மூலம்.. பலமான சமூக சீர்கேட்டை நோக்கி சமூகங்களை தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் மிகச் சுலபமாக இனங்காண முடிகிறது.

எமது ஈழவிடுதலைப் போராட்டத்தை எடுத்துப் பார்த்தீர்களானால்.. ஆணாதிக்கம் என்று பேசிய.. பல பெண்மணிகள் இன்று எதிரிகளோடு சேர்ந்து நின்று கொண்டு.. அவர்களின் ஆதிக்கத்தை அங்கீகரித்து கூக்குரல் இடும் வெறியர்களாக.. ஒரு தேசிய இனத்தின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பவர்களாக இருக்கின்றனர். இதுதான் பெண்ணாதிக்க வெறியர்களாக உள்ள பெண்களால்.. இந்த மனித சமூகம் பெற்ற உச்ச பலனாக இருக்க முடியும்..! அந்த வகையில் பெண்ணாதிக்கத்திற்கு பாலூட்டி வளர்ப்பதும்.. நஞ்சுள்ள நாகத்திற்கு பாலூட்டி வளர்ப்பதும் ஒன்றே..! இரண்டும் தின்று கொழுத்து.. தீண்டினால் விளைவு விபரீதமானதாகவே இருக்கும்..!

:D இது உண்மையா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..

Edited by சுபேஸ்

தேசியம் தேசியம் என்று ஆதி தீவிர தேசியம் பேசுபவர்கள் அடிக்கும் முழு குத்துக்கரணம் போல்,

இங்கு ஆண்களுக்காக பொங்கி எழுபவர் HANDBAG ஐ பாரமா? தூக்கிக்கொண்டு வரவோ என கேட்டு பின்னால் போவதை நாங்களும் பார்கத்தானே போறம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் தேசியம் என்று ஆதி தீவிர தேசியம் பேசுபவர்கள் அடிக்கும் முழு குத்துக்கரணம் போல்,

இங்கு ஆண்களுக்காக பொங்கி எழுபவர் HANDBAG ஐ பாரமா? தூக்கிக்கொண்டு வரவோ என கேட்டு பின்னால் போவதை நாங்களும் பார்கத்தானே போறம் .

அப்ப ஆண் பெயரில வாற நீங்கள் என்ன அலியோ..??! வந்திட்டார்யா.. தத்துவம் பேசிக்கிட்டு.. சோத்துப் பாசலுக்கு தமிழீழம் கேட்கிற..... களவா கனடா போய் செற்றிலாக.. காட்டிக்கொடுக்கிற.. ஆசாமி..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.