Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணும்,பெண்ணும் திருமணம் செய்யும் போது வயதை கவனத்தில் எடுக்க வேண்டுமா?

Featured Replies

இது தான் பிரச்சினை

வயது வந்தவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக்கூட கேட்க அல்லது கிரகிக்க முடியாத இந்த நீங்கள் கூறும் அடுத்த கட்ட சந்ததியால் எதனையும் போட்டு உடைக்கமுடியுமே தவிர முன்னேற அல்லது உதாரணமாக இருக்க முடியாது. முதலில் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் தன்னை புடம்போடவே எத்தனிக்கவில்லை. தனது சுயமான வெறும் சுயநலத்துக்கே முக்கியம் கொடுக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த பழையவைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அவற்றை கேலி செய்துடன் அவற்றை ஒதுக்கியும் வருகிறது.

இது தான் உலகம் என்றும் இவையே நாளைய சந்ததி என்றும் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதம். அதிலும் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கக்கூடியவர்கள் எத்தனைபேர்.

உலக சுற்றத்தொடங்கி இது வரை சில வரைமுறைகளுக்குள்ளேயே அது நகர்கிறது. தேவையான மாற்றங்கள் ஏற்றுக்கெகாள்ளப்பட்டுள்ளன. தேவையற்றவை ஒதுக்கப்பட்டுடுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் காத்திருக்கின்றன. அவை சமூக நன்மைகளுக்கு பங்கம் விளைவிக்காதபோது நடைமுறைக்கு வரும். அதை ஒரு சந்ததி மட்டும் மாற்றிவிடும் என்பது நகைப்புக்குரியது.

குறிப்பு :: இதே சந்ததி தனது இந்த வயதெல்லையைக்கடந்து திருமணம், பிள்ளைகள் .....என்று வந்ததும் நடைமுறையிலுள்ள சமூகவளையத்துக்குள் தானாகவே வந்து அந்த வட்டத்துக்குள் நின்றுவிடும். இதுதான் இதுவரையும் நடந்தது. நடக்கும்

இவைதான் பழமைவாதத்தின் அதிமூர்கமான தாக்குதல்கள் . எமது தேசியப்போராட்டத்தை முன்னெடுக்க இளையவர்கள் வேணும் . அவர்கள் தன்னிச்சைப்படி முடிவுகளை எடுத்து நடந்தால் மட்டும் , முதியோர்சொல் கேட்கின்றார்கள் இல்லை , எள்ளி நகையாடுகின்றார்கள் . நல்லா இருக்கு விசுகர் உங்கடை ஞாயம் !! மேலும் , பல்லின கலச்சாரக் கட்டமைப்புகள் உள்ள நாடுகளில் இருந்து கொண்டு , எப்படி உங்களால் இப்படி சிந்திக்கமுடிகின்றது ????????? உங்கள் தேவைகளுக்கு இளையவர்களது வளம் வேணும் . தேவையில்லாதபொழுது அவர்கள் கவ்வைக்கு உதவாதவர்கள் . இளையவர்கள் நாளைய சமுதாயத்தின் சிற்பிகள் என்று சொல்பவர்களும் உங்களைபோன்றோர்கள் தான் . அதே இளையவர்களை பிற்போக்குதனமான நம்பிக்கைகளை ( < அனுபவம் > ) என்ற முகமூடியில் ஊட்டுபவர்களும் உங்களைப் போன்ற முதியவர்களே !!!!!!!!! :) :) :) .

பி . கு :

நட்புணர்வையும் கருத்துக்களத்தையும் பிரித்துப் பார்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு .

Edited by komagan

  • Replies 56
  • Views 29k
  • Created
  • Last Reply

நாமிருக்கும் சமூகத்தோடு தான் எம்மையும் சேர்த்துப் பார்க்க வேணும், அவர்களிடமிருந்து நல்லதை எடுத்துக் கொண்டு என்வாழ்வில் செயல் படுத்துவது பிழையாகத் தெரியவில்லை.

இரு மனங்கள் ஒருவரை ஒருவர் விளங்கி அனுசரித்து, ஒளிவு மறைவு இல்லாத, நேர்மையாகவும் தைரியமாகவும் இருக்கும் பட்சத்தில் சேர்ந்து வாழ்வதற்கு வயது தடையாக இருப்பது நியாயமானது இல்லை!

60 வயது ரஜனிக்காந்த் 25 வயசு நயனோட மேக்கப்போட்டு காதலனா நடிக்க முடியுமாம்.. அதை விசிலடிச்சு ரசிப்பினமாம்.. ஆனால் 54 வயதான ஒருவர் 25 வயது பெண்ணோட வெளில போறதை எங்கட மக்கள் ஊனக்கண்ணோட பாப்பினமாம். அது கள்ளக் காதலை ஊக்குவிக்குமாம். ஏதோ கள்ளக் காதல்.. 20.. 25 வயசில கலியாண முடிக்கிறவையிட்ட இல்லாத மாதிரி எல்லோ இருக்குது.16 - 20 வயசில நாளுக்கு ஒருத்தனோட திரியுற பல பெட்டையள எங்கும் காண முடிகிறது. அதை எந்தக் கோணத்தில பார்க்கிறீங்க..!

ஊர் ஊனக்கண்ணோட பார்க்கிறது ஊரோட தப்பே தவிர.. அந்த ஆணினதும் பெண்ணினதும் தனிமனித சுதந்திரத்தில் தலையிட சமூகத்திற்கு ஒரு அருகதையும் கிடையாது. அவரவர் தனிப்பட்ட முறையில் தம்மால் வாழ முடியும் என்று எண்ணும் நிலையில் இவ்வாறு திருமணம் செய்தவை தடுக்க ஊருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏன் சட்டத்திற்கு கூட அந்த அதிகாரம் இல்லை..! இதில ஊர் ஒரு கேடு. ஏதோ ஊரில உள்ளவை புனிதர்களாக்கும். அவை பார்த்து சான்றிதழ் கொடுத்தாத்தான் தனி மனிதர்கள் வாழ முடியுமோ. இது ஒரு முட்டாள் தனமான சிந்தனை. தனிமனிதன் தன் வாழ்வை தான் தான் தீர்மானிக்கனும் தவிர ஊர் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. :):icon_idea:

MONEY! MONEY!

CASH MONEY!

NOTHING LOOSING!

ENJOY THE LIFE!

WITH

DIFERENT MAN AND WOMEN!

FREE TRIPS!

AND

MUCH MORE!

DONT PAY FOR HOUSE!

CAR TOO!

STUPID NEW PARTNER

PAY FOR EVERY THING!

IF YOU MISS ONE

GET IT OTHERONE!

DONT WASTE YOUR TIME!

JOINT WITH US!

WHY YOU NEED TO MARRIED?

THAT IS A LUXURY JAIL.

PLEASE JOINT WITH US

ENJOY YOUR LIFE !

  • கருத்துக்கள உறவுகள்

MONEY! MONEY!

CASH MONEY!

NOTHING LOOSING!

ENJOY THE LIFE!

WITH

DIFERENT MAN AND WOMEN!

FREE TRIPS!

AND

MUCH MORE!

DONT PAY FOR HOUSE!

CAR TOO!

STUPID NEW PARTNER

PAY FOR EVERY THING!

IF YOU MISS ONE

GET IT OTHERONE!

DONT WASTE YOUR TIME!

JOINT WITH US!

WHY YOU NEED TO MARRIED?

THAT IS A LUXURY JAIL.

PLEASE JOINT WITH US

ENJOY YOUR LIFE !

அடுத்தவனை/ளை ஏமாற்றாது... இப்படின்னு வாழுறவனையும்/ளையும் நாங்க எதுவுமே கேட்க முடியாது. அது அவங்க வாழ்க்கை. அவங்க தீர்மானிக்கிறாங்க. ஆனால் அடுத்தவனை நம்ப வைத்து.. ஏமாற்றும் போது.. அது பாதிக்கப்படுபவனின் வாழ்க்கை சார்ந்ததும் என்பதால் அவன்/அவள் கேள்வி கேட்பான்/ள்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனை/ளை ஏமாற்றாது... இப்படின்னு வாழுறவனையும்/ளையும் நாங்க எதுவுமே கேட்க முடியாது. அது அவங்க வாழ்க்கை. அவங்க தீர்மானிக்கிறாங்க. ஆனால் அடுத்தவனை நம்ப வைத்து.. ஏமாற்றும் போது.. அது பாதிக்கப்படுபவனின் வாழ்க்கை சார்ந்ததும் என்பதால் அவன்/அவள் கேள்வி கேட்பான்/ள்..! :):icon_idea:

இந்த உலகத்தில் இருபாலாரும் ஏமாற்றம் என்ற ஒன்றைக் கொடுக்காமல் வாழ நினைப்பதே,வாழ்வதே பெரிய புண்ணியம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...முடிந்த முடிவாக என்ன முடிவிற்கு வந்துள்ளீர்கள்?

திருமணத்திற்கு வயது தடையா? அல்லது தடையில்லையா? தடையில்லை என்டால் ஜம்பது வயதுப் பெண் இருபத்தி ஜந்து வயது வாலிபரை திருமணம் செய்யலாமா?

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...முடிந்த முடிவாக என்ன முடிவிற்கு வந்துள்ளீர்கள்?

திருமணத்திற்கு வயது தடையா? அல்லது தடையில்லையா? தடையில்லை என்டால் ஜம்பது வயதுப் பெண் இருபத்தி ஜந்து வயது வாலிபரை திருமணம் செய்யலாமா?

இரட்டைச் சம்மதமே செய்யலாம் :):):) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.