Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவான நிலையில் புலிகள்

Featured Replies

வலுவான நிலையில் புலிகள்; கோத்தபாய அறிவிப்பு!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-05 09:19:36| யாழ்ப்பாணம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதாகவும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் எனப் பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ­ தெரிவித்தார். தொழில்சார் நிபுணர்கள் ஒன்றிய ஒன்றுகூடல் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிடம் பாரியளவில் நிதி காணப்படுகிறது. வெளிநாடுகளின் வலுவான சக்திகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உள்ளது. சில சர்வதேச ஊடகங்கள் புலிகளின் பிரசார நிறுவனங்களாக மாற்றமடைந்துள்ளன. குறிப்பாக சனல் 4 மற்றும் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடக நிறுவனங்கள் ஒருபக்க சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரசாரங்களில் இறங்கியுள்ளன.

இலங்கை சமாதானத்தின் அனு கூலங்களை அனுபவித்துவரும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியாவின் முதனிலை நாடுகளில் ஒன் றாக இலங்கையை மாற்றும் பணியில் தொழில்சார் நிபுணர்களுக்கு விசேட பொறுப்பு காணப்படுகின்றது. நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்தவும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கவும் தொடர்ந்தும் சில சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றனர் என்பதனை தொழில் சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் சவால்களை எதிர் நோக்க சகலரினதும் ஒத்துழைப்பு அவசியமானது.

சவால்களுக்கு மத்தியில் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை சீர் குலைப்பதற்கு சில தரப்பினர் பல் வேறு வழிகளில் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். உள்ளக அரசியல் நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்ளும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்ப் புலம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் நாடுகளில் இவ்வாறான அரசியல் இடம்பெற்று வருகின்றமை வழமையானதே. குறிப்பாக கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உள்ளக அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவருகின்றன.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக சில தரப்பினர் தொடர்ச்சியான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பல்வேறு தியாகங்களைச் செய்து ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமானது. உலகின் புவியியல் ரீதியான அரசியல்கள் நிலைவரங்களை தொழில்சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாகவும் சில நாடுகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றன.

உலகின் பல நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளைப் போன்றே சீனா இலங்கையுடனும் உறவுகளைப் பேணி வருவதாகவும் சில தரப்பினர் இதனைப் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளனர். பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26413

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடங்களுக்கு முன்னர் வந்த செய்தி என்று நினைத்தேன்!

  • தொடங்கியவர்

உலகின் பல நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளைப் போன்றே சீனா இலங்கையுடனும் உறவுகளைப் பேணி வருவதாகவும் சில தரப்பினர் இதனைப் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளனர். பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒபாமா இன்று சீனாவை இலக்கு வைத்து அமெரிக்காவின் இராணுவ செலவுகள் அமையும் என்ற கருத்து சார முக்கிய அறிவிப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

Pentagon’s new defence strategy eyes China

“We’ll be strengthening our presence in the Asia Pacific, and budget reductions will not come at the expense of this critical region,” Mr. Obama said in the Pentagon’s briefing room on Thursday.

http://www.theglobeandmail.com/news/world/pentagons-new-defence-strategy-eyes-china/article2292485/

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... உண்மைதான் முன்பு ஒரு தலைவன்தான் புலிகளை வழி நடத்திவந்தார் இப்போது இங்கு பல தான்தோன்றித்தலைவர்கள் உருவாகியுள்ளார்கள் அதைத்தான் கோத்தா பார்த்து பயப்படுகின்றார்.

இந்த (தான்தோன்றித்தலைவர்கள்) அதாவது தன்னை தானே தலைவன் நினைப்பவர்களை சும்மா விட்டாலே தங்களுக்குள் அடிபட்டு செத்து போடுவார்கள் என்று மோட்டு கோத்தாவுக்கு தெரியாது.

தற்போது இதை எண்ணி தமிழ்மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது கோத்தாவின் அறிக்கை பார்த்தால் ......? :rolleyes:

  • தொடங்கியவர்

கோத்தா உட்பட்ட சிங்களக்கூட்டம் எதையிட்டு பயப்படுகின்றது?

எவ்வளவு தான் படை பலத்தை கொண்டிருந்தாலும், சீனா - இந்திய ஆதரவுகள் இருந்தாலும் எதைப்பார்த்து அது பயப்படுகின்றது?

தான் செய்த போர்குற்றங்களை எத்தனை தடைவை மறைக்கப்பார்த்தலும் அதை அணையாது காக்கும் புலம்பெயர் மக்களையே புலிகள் என்கிறார்கள்.

போர்குற்ற விடயத்தில் இம்மாதம் வர இருக்கும் சனல் நாலின் அடுத்த ஆவணப்படம்,

தோல்வியை சந்தித்துள்ள நல்லிணக்க நாடகம், தொடரும் சர்வதேச அழுத்தங்கள் எல்லாமே ஐ.நா. ஒரு சுயாதீன விசாரணையை தொடக்கி அது தமிழீழம் என்ற தீர்வில் முடிந்துவிடலாம் என்பதே சிங்களத்தின் பயமும் தமிழரின் குறிக்கோளும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா உட்பட்ட சிங்களக்கூட்டம் எதையிட்டு பயப்படுகின்றது?

எவ்வளவு தான் படை பலத்தை கொண்டிருந்தாலும், சீனா - இந்திய ஆதரவுகள் இருந்தாலும் எதைப்பார்த்து அது பயப்படுகின்றது?

தான் செய்த போர்குற்றங்களை எத்தனை தடைவை மறைக்கப்பார்த்தலும் அதை அணையாது காக்கும் புலம்பெயர் மக்களையே புலிகள் என்கிறார்கள்.

போர்குற்ற விடயத்தில் இம்மாதம் வர இருக்கும் சனல் நாலின் அடுத்த ஆவணப்படம்,

தோல்வியை சந்தித்துள்ள நல்லிணக்க நாடகம், தொடரும் சர்வதேச அழுத்தங்கள் எல்லாமே ஐ.நா. ஒரு சுயாதீன விசாரணையை தொடக்கி அது தமிழீழம் என்ற தீர்வில் முடிந்துவிடலாம் என்பதே சிங்களத்தின் பயமும் தமிழரின் குறிக்கோளும்.

இப்போதாவது ஒப்பு கொள்கின்றார்களா தமிழர்கள்தான் புலிகள், புலிகள்தான் தமிழர்கள் என்று.

உண்மையை நீண்டநாட்கள் மறைக்க முடியாது என்றோ ஒருநாள் எமக்கான நல்ல தீர்ப்பு கிட்டு அது தமிழீழமாக அமையும்.

அதிலென்ன சந்தேகம், இப்போது நிலை தேன்கூட்டுக்கு கல் எறிந்தவன் நிலைதான் சிங்களவனுக்கு ஒன்றாக இருந்தவர்களை ஒருநாட்டில் வாழ்ந்தவர்களை உலகம் பூராவும் அனுப்பிய பெருமையும் சிங்களவனையே சேரும்.

கொத்தபாய உலகத்தை மீண்டும் ஏமாற்றி, பயங்கரவாதச் சட்டத்தைத் திரும்பவும் கொண்டுவந்து மிச்ச சொச்ச தமிழரையும் கொல்வதற்கான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று...

10 வருடங்களுக்கு முன்னர் வந்த செய்தி என்று நினைத்தேன்!

வலுவான நிலையில் புலிகள்

இதை நாம் கூறவில்லை சிறிலங்கா அரசின் பாதுகாப்புச்செயலர்தான் கூறுகின்றார்.

ஆனாலும் உண்மைதான் பேசியுள்ளார். ஏனெனில் உண்மை 1000 வருடங்கள் சென்றாலும் மாறாது. அது போல் தமிழன்[புலிகள்] வலுவானவர்கள்தான் என்பதை சிங்களவன் ஒத்துக்கொண்டாலும் எம்மினத்தில் உள்ள சிலர் ஏற்கவே ஏற்க மாட்டார்கள் . இதுதான் எமது சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் சிறிய அளவிலான முயற்சிகள் கூட

கோத்தாவின் நித்தாவைக் குழப்புகின்றது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

எலும்பை உறையவைக்கிற குளிரிலையும், நெருப்பு வெய்யிலிலும் பிச்சைக்காரன் ஒவ்வொரு வீட்டு முன்னுக்கும் இருக்கும் Garbage bags அவிட்டு , ஒவ்வொரு போத்தலாக, பேனியாகசச் சேர்த்து வித்து பணம் பணுவான். மக்கள் தொகையில் பெரிய மேலைநாட்டு அரசியல் வாதிகளுக்கு அகதிகளாக வரும் ஒவ்வொரு தமிழனையும் கணக்கு பார்க்க வேண்டியிருக்கிறது அவர்கள் வாழும் வாழ்க்கை.

ஆனால் புளிச்சல் ஏவறைக்கார டி.எஸ் இந்திய பாகிஸ்த்தானிய குடியுரிமைச்சட்டம் கொண்டுவந்து மில்லியன் கணக்கில் ஐ.தே.க வாக்களித்த தமிழ் வாக்குக்களை வீணடித்தார். ஐ.தே.க அதன் பலங்களை இப்போ நாளும் பொழுதும் கண்டு நல்லாய் அனுபவிக்குது.

பசிக்கு வந்து சாப்பாட்டில் ஏறிய எறும்புகளை இரக்கமில்லாமல் அடுப்பில் கனலும் தணலில் தட்டிக்கொட்டுபவர்கள்போல், குண்டடியிலும் பசி வேதனையிலும் தவிச்ச உயிர்களை புல்டோசரினால் மண்போட்டு முடி கதையை முடிச்சவர்கள் நீயும் உன் சகோதரமும். அதிலே தப்பியொட்டி ஓடிய வாக்குகளைத்தான் இந்த மேலைநாட்டு அரசியல் வாதிகள் ஒவ்வொன்றாக எண்ணுகிறார்கள். அமெரிக்காவில் நீ நல்ல பிரசையாக இருந்த மாதிரி இருந்திருந்தால் உனது வாக்கும் அவர்கள் கணிப்புக்குள் போயிருக்கும். அந்த லக் உனக்கு கிடைக்கவில்லை. நீ உனது செய்கைக்கான பலனை அனுபவிக்க தொடங்கும் வரை புலம் பேயர் தமிழ்மக்கள் மேலைநாட்டு அரசியல் வாதிகளை தொடர்ந்தும் சிறுபான்மை வாகுக்களை கணக்கு பண்ண வைக்கத்தான் போகிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வலுவான நிலையில் புலிகள்

இதை நாம் கூறவில்லை சிறிலங்கா அரசின் பாதுகாப்புச்செயலர்தான் கூறுகின்றார்.

ஆனாலும் உண்மைதான் பேசியுள்ளார். ஏனெனில் உண்மை 1000 வருடங்கள் சென்றாலும் மாறாது. அது போல் தமிழன்[புலிகள்] வலுவானவர்கள்தான் என்பதை சிங்களவன் ஒத்துக்கொண்டாலும் எம்மினத்தில் உள்ள சிலர் ஏற்கவே ஏற்க மாட்டார்கள் . இதுதான் எமது சாபக்கேடு.

நாம் கேட்க விரும்புவதை யார் சொன்னாலும் நாம் மனங்குளிர்ந்து கேட்போம். ஆனால் யதார்த்தம் என்று இருக்கின்றதல்லவா!

  • தொடங்கியவர்

இன்றைய நிலைமை / யாதர்த்தம் என்ன ?

1. தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதரீதியாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள அரசு மீதாக வலுவான போர்குற்ற (War Crimes)/இனவழிப்பு (Genocide) ஆதாரங்களும் உள்ளன.

2. தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் ஒரு அடக்குமுறை ஆட்சியை நடாத்தி எந்தவித அதிகாரபரவலுக்கும் சம்மதிக்காமல் உள்ளது.

3. இந்தியா தொடர்ந்தும் எல்லாவிதமான ஆதரவுகளை சிங்களத்திற்கு வழங்கி வந்தாலும், அது சீனாவின் பக்கமே சாய்ந்து வருகின்றது. அதேவேளை அமெரிக்கா தமையிலான மேற்குலகம் சீனாவை மையமாக கொண்டே தமது அரசியல்/இராணுவ/பொருளாதார நகர்வுகளை மேற்கொள்ளுகின்றன.

எனவே உலகில் மாறிக்கொண்டு இருக்கும் நிலைமைகளுக்கும் யதார்த்தங்களுக்கும் தமிழர் தரப்பு முகம்கொடுத்து எமது நகர்வுகளை மேற்கொண்டால் இலக்கை அடையலாம்.

Edited by akootha

நாம் கேட்க விரும்புவதை யார் சொன்னாலும் நாம் மனங்குளிர்ந்து கேட்போம். ஆனால் யதார்த்தம் என்று இருக்கின்றதல்லவா!

நாம் போர்துக்கேசர், ஒல்லாந்தர்.ஆங்கிலேயர்கள், அதாவது வெளிநாட்டுச்சக்திகளாலும்,சிங்களவர்களாலும் அன்று அடக்கப்படடோம்,வலுவிழந்தோம்.இதுதான் ஆரம்பகால யதார்த்தம்.

அந்த அடக்குமுறைக்கு எதிராக நாம் காந்தியவழியில் போராடினோம்.அதனால் பயனேதுமின்றி ஆயுத வழியில் போராடினோம்,வலுவாக இருந்தோம் என்பது அடுத்தகட்ட யதார்த்தம்.எமது ஆயுதப்போராட்டமும் வலுவானவர்களால் அதாவது வெளிநாட்டுச்சக்திகளாலும்,சிங்களவர்களாலும் கோழைத்தனமாய் அழிக்கப்பட்டது தான் மிகவும் கொடூரமான யதார்த்தம்.அதைதொடர்ந்து இன்று நாமும்,எம் வருங்கால சந்ததியினரும் வலுவிழந்து வாழக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் அரசியல் ரீதியான போராட்டத்தை ,காலத்தின் நிலையறிந்து,நேரமறிந்து, கட்டாயமறிந்து கையில் எடுத்துள்ளோம்.காலமும் அரசியல் சுழல்களும் அமைந்ததற்கு அமையவே போராட்ட வடிவங்களை மாற்றியுள்ளோம்.இது தான் யதார்த்தம்.அதாவது நாம் அன்று தொட்டு இன்றுவரை போராடாமல் வாழ முடியாது என்பதைத்தான் காலம் சொன்ன உண்மையான யதார்த்தம். நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் போர்துக்கேசர், ஒல்லாந்தர்.ஆங்கிலேயர்கள், அதாவது வெளிநாட்டுச்சக்திகளாலும்,சிங்களவர்களாலும் அன்று அடக்கப்படடோம்,வலுவிழந்தோம்.இதுதான் ஆரம்பகால யதார்த்தம்.

அந்த அடக்குமுறைக்கு எதிராக நாம் காந்தியவழியில் போராடினோம்.அதனால் பயனேதுமின்றி ஆயுத வழியில் போராடினோம்,வலுவாக இருந்தோம் என்பது அடுத்தகட்ட யதார்த்தம்.எமது ஆயுதப்போராட்டமும் வலுவானவர்களால் அதாவது வெளிநாட்டுச்சக்திகளாலும்,சிங்களவர்களாலும் கோழைத்தனமாய் அழிக்கப்பட்டது தான் மிகவும் கொடூரமான யதார்த்தம்.அதைதொடர்ந்து இன்று நாமும்,எம் வருங்கால சந்ததியினரும் வலுவிழந்து வாழக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் அரசியல் ரீதியான போராட்டத்தை ,காலத்தின் நிலையறிந்து,நேரமறிந்து, கட்டாயமறிந்து கையில் எடுத்துள்ளோம்.காலமும் அரசியல் சுழல்களும் அமைந்ததற்கு அமையவே போராட்ட வடிவங்களை மாற்றியுள்ளோம்.இது தான் யதார்த்தம்.அதாவது நாம் அன்று தொட்டு இன்றுவரை போராடாமல் வாழ முடியாது என்பதைத்தான் காலம் சொன்ன உண்மையான யதார்த்தம். நன்றி, வணக்கம்.

சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்றோர் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதாக வரலாறு சொன்னாலும், இலங்கையில் வசித்த தமிழர்கள் அனைவரதும் எதிர்ப்பாக இதனைப் பார்க்கமுடியாது. மாறாக தமது இராச்சியங்களைத் தக்க வைக்கவே போராடியதாகக் கருதமுடியும்.

சங்கிலியன், பண்டாரவன்னியன் ஆகியோரின் மரணத்தின் பின்னர், தமிழர்கள் பெரும்பாலும் காலனியாதிக்கத்திற்குச் சேவகம் செய்தே தமது நிலையை உயர்த்தினர். இதனால்தான் நடுச் சிங்களப் பகுதிக்குள்ளும் அரச சேவையாளராக தமிழர்களால் கடமையாற்ற முடிந்தது.

பிரித்தானியா சுதந்திரம் வழங்கியபோது, கொழும்பிலிருந்த தமிழர்களின் அரசியல் தலைமை (யாழ் பூர்வீகம்) சிங்கள உயர்குழாமுக்குத் துணைபோய் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க வழி செய்தது.

தமிழர்களை அரச் உத்தியோகங்களில் இருந்து குறைக்கவே சிங்களம் மட்டும் என்ற சட்டம் வந்தது, இனக்கலவரங்களைத் தூண்டி சிங்கள அரசியல் தலைமைகள் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது காந்தீய வழியில் போராட்டத்தை முன்னெடுத்த தமிழர்களின் தலைவர்கள் உண்மையில் ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் செயற்படவில்லை. மாறாக தமிழர்களின் சுதந்திர உணர்வைக் கிளறிவிட்டு தமது சுயநல அரசியலையே செய்தனர். தனித் தமிழீழம் என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் இயற்றியதும் அவர்களது சுயநல அரசியலுக்குத்தான்.

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் பிரபாகரனினது விடுதலைப் புலிகள் போராட்டத்தை துரிதப்படுத்தி உச்சக் கட்டத்தை அடைந்தும் துரோகங்களாலும், சர்வதேச சூழ்நிலைகளாலும் தோல்வியைத்தான் தழுவமுடிந்தது.

அதன் பின்னர் குத்துவெட்டுக்கள், குழிபறிப்புக்கள், சரணாகதி அரசியல் என்று செயற்படுவோர்கள் எல்லாம் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளில் இருந்தவர்கள் அல்லது தீவிர ஆதரவாளர்கள். எஞ்சிய விடுதலைப் புலிகளாலும் ஆதரவாளர்களாலும் ஒற்றுமையான காத்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு தலைமையைக் கட்டியெழுப்பமுடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இவர்களின் குடுமிப் பிடிச் சண்டைகளால், போர்க்குற்றம் என்ற ஆயுத்த்தைக் கூட சரியான முறையில் முன்னெடுக்கமுடியவில்லை. இடையிடையே சிறு சிறு சலசலப்புக்களைவிட கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழர்களால் ஒன்றுமே உருப்படியாகச் சாதிக்கமுடியவில்லை. அதேவேளை சிங்கள அரசோ தமிழர்களின் தாயகப் பகுதியை திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்ய தமது வேலைத் திட்டத்தைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்துகின்றது.

இப்படி தமிழர்களை ஒட்டுமொத்தமாக இலங்கையில் இருந்து அகற்ற, அல்லது மிகச் சிறுபான்மையினராக்க விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிக்கைவிடுவார்கள்தான். இப்படியான அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் தமிழர்கள் பலமாக இருக்கின்றார்கள் என்று நம்புவது நம்மை நாமே முட்டாளாக்குவதற்குச் சமன்!

  • கருத்துக்கள உறவுகள்

இடையிடையே சிறு சிறு சலசலப்புக்களைவிட கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழர்களால் ஒன்றுமே உருப்படியாகச் சாதிக்கமுடியவில்லை.

அதேவேளை சிங்கள அரசோ தமிழர்களின் தாயகப் பகுதியை திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்ய தமது வேலைத் திட்டத்தைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்துகின்றது.

ஆயுதப்போராட்டம் சிறி லங்கா அரசுக்கு சாதகமான ஒன்றாக அமைந்திருந்தது.

  1. ஆயுதங்கள் வாங்குவதற்கு தமிழர் தரப்புக்கு பெரும் தடைகள் சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் இருந்தன.
    சிறி லங்கா அரசுக்கு இவை எவற்றிலும் குறிப்பிடத்தக்க தடைகள் எவையுமே இருக்கவில்லை.
  2. தமிழர் தரப்பு சிங்கவருடன் ஒப்பிடும் போது 10 வீதமான சனத்தொகையை மட்டுமே கொண்டிருந்ததாலும் அந்த சனத்தொகையும் வெளிநாட்டு பண ஆதரவுடன் இருந்த காரணத்தாலும், வறிய 10 மடங்கு சிங்கள மக்கள் பணத்துக்காக படையில் சேர்ந்த அளவுக்கு தமிழர் சேரவில்லை. ஆகவே 1 க்கு 10 என்ற அளவில் தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத்தில் பலவீனமாக இருந்தது.
  3. தமிழருக்கு அங்கு உணவும் மருந்தும் சிங்கள பகுதியில் இருந்து வர வேண்டிய தேவை இருந்தது. ஆகவே ஆயுதப்போர் நீண்டு மக்களது உணவும் மருந்தும் குடிநீரும் குறைந்து போக, சிறி லங்கா மக்களை பட்டினி போட்டு கொல்ல முடிந்தது.

இன்றைய இராஜதந்திர போரில் தமிழர்கள்

  1. இன்றைய இராஜதந்திர போரில் சட்டரீதியாக தமிழர்களுக்கு தடைகள் எவையும் இல்லை; காரணம் போராட்டம் சர்வதேச நாடுகளில் இடம் பெறுகிறது. சர்வதேச மட்டத்தில் இதற்கு பணம் சேகரிக்கவோ செலவளிக்கவோ எந்த தடையும் இல்லை.
  2. இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ள தமிழர்கள் சர்வதேச மொழிகள் பேசக்கூடியவர்களாக, சிங்களவர்களிலும் பார்க்க 10 மடங்கு அல்லது அதனிலும் மேலான தொகையில் இருக்கிறார்கள். சர்வதேச அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு செயற்படும் ஆற்றல் இந்த தமிழர்களுக்கு இருக்கிறது.
  3. புலம்பெயர்ந்த தமிழர்கள் சிறி லங்காவில் உணவுக்கும் மருந்துக்கும் தங்கியிருக்காமல் போராட முடிகிறது, ஆகவே இந்த போராட்டத்துக்கு சிறி லங்கா கால எல்லை நிர்ணயிக்க முடியாது. எதிர்மாறாக சிறி லங்கா தனது வருமானத்துக்கும் கடனுக்கும் பிச்சைக்கும் சர்வதேச நாடுகளை நம்பி இருக்கிறது. சிறி லங்கா பொருட்களை புறக்கணிப்பது முதல் போர்க்குற்ற பிரச்சாரம் வரை சிறி லங்காவின் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது.

    சிறி லங்கா காட்டும் பொருளாதார அபிவிருத்தியும் பண வருவாயும் பொய்யான கணக்குகள் என்று அறியப்பட்டு வருகிறது. உதாரணமாக கடந்த ஆண்டு சீனாவில் இருந்து வந்த உல்லாச பயணிகள் என்று பதியப்பட்ட 90,000 பேரில் குறைந்தது 60,000 பேர் சீன முதலீட்டு திட்டங்களில் வேலை செய்யவென அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்கள் என்று சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய இராஜபக்ச அமெரிக்க குடிமகனாக இருந்தும் தன்னால் அமெரிக்காவில் கால் பதிக்க முடியவில்லை என்று பகிரங்கமாக சொல்லும் அளவுக்கு போர்க்குற்ற விசாரணைகள் பலம் பெற்றுள்ளன.
  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர ரீதியில் தமிழர்களால் பல அழுத்தங்களைச் சிறிலங்கா அரசுக்குக் கொடுக்கக் கூடிய நிலைமைகள் இருந்தும், முன்னேற்றம் நத்தை வேகத்தில் இருப்பதற்கு ஒருங்கிணைந்த, தூர நோக்குள்ள அரசியல் தலைமை இல்லை என்பதே மிக முக்கிய காரணம். உதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசுடனான பேச்சுவார்த்தைகள் (?), புலம் பெயர் தமிழரின் இலங்கையரசிற்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் ஒரே புள்ளியில் சந்திக்காமல் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கமுடியாது.

  • தொடங்கியவர்

இராஜதந்திர ரீதியில் தமிழர்களால் பல அழுத்தங்களைச் சிறிலங்கா அரசுக்குக் கொடுக்கக் கூடிய நிலைமைகள் இருந்தும், முன்னேற்றம் நத்தை வேகத்தில் இருப்பதற்கு ஒருங்கிணைந்த, தூர நோக்குள்ள அரசியல் தலைமை இல்லை என்பதே மிக முக்கிய காரணம். உதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசுடனான பேச்சுவார்த்தைகள் (?), புலம் பெயர் தமிழரின் இலங்கையரசிற்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் ஒரே புள்ளியில் சந்திக்காமல் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கமுடியாது.

- எமக்குள் இருக்கும் ஒற்றுமை காணாமல் இருக்கலாம், ஆனால் முழுக்க முழுக்க வேறுபட்டு நிற்கவில்லை.

- போர்குற்ற முன்னெடுப்புக்களில் ஒரே புள்ளியில் எல்லோரும் நிற்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அப்படி நின்றுதான் முன்னெடுக்க வேண்டும் என்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர ரீதியில் தமிழர்களால் பல அழுத்தங்களைச் சிறிலங்கா அரசுக்குக் கொடுக்கக் கூடிய நிலைமைகள் இருந்தும், முன்னேற்றம் நத்தை வேகத்தில் இருப்பதற்கு ஒருங்கிணைந்த, தூர நோக்குள்ள அரசியல் தலைமை இல்லை என்பதே மிக முக்கிய காரணம்.

இன்று ஈழத்தமிழரின் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் முக்கிய அமைப்புகளாக பின்வரும் அமைப்புகளை குறிப்பிடலாம்:

  1. உலகத்தமிழர் பேரவை - தலைவர் அருட்திரு இம்மானுவல்
  2. நாடுகடந்த தமிழீழ அரசு - பிரதமர் ருத்திரகுமாரன்
  3. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் - சம்பந்தன்

நாடு கடந்த அரசு தமது நட்பு அமைப்பான உலகத்தமிழர் பேரவையுடன் நெருங்கி இயங்குவதாக ருத்திரகுமாரன் வெளிப்படையாகவே செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். சிறி லங்காவின் சட்டங்கள் நாடு கடந்த அரசை சட்டரீதியற்ற அமைப்பாக கொண்டிருப்பதால், சம்பந்தன் அமெரிக்கா வந்த போது ருத்திரகுமாரனை அவர் சந்தித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் சம்பந்தனும் அவரது தலைமையும் உலகத்தமிழர் பேரவையின் உபஅமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்வாறாக அடிப்படை கொள்கைகளில் உடன்பாடு கொண்டுள்ள போதும் நடைமுறைச் சிக்கல்களாலும், வெவ்வேறு கோணங்களில் அணுக வேண்டிய தேவை காரணமாகவும், ஒருங்கிணைந்த தமைமையில் இன்று ஈழத்தமிழ் மக்கள் செயற்பட முடியவில்லை.

உதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசுடனான பேச்சுவார்த்தைகள் (?), புலம் பெயர் தமிழரின் இலங்கையரசிற்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் ஒரே புள்ளியில் சந்திக்காமல் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கமுடியாது.

சுயநிர்ணய உரிமை பற்றி பல விடயங்களில் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் தலைவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்து போன மக்களிற்கு சுயநிர்ணய உரிமை பற்றி விளக்கம் அளிப்பதனால் ஏற்படும் உணர்ச்சிவசப்பட்ட குழப்பங்களை தவிர்ப்பதற்காக, இந்த தலைவர்கள் அதனை பெருமளவில் தவிர்த்து வருகிறார்கள்.

சம்பந்தன் மட்டுமே அவர் இருக்கும் இடம் காரணமாகவும், எடுத்துக் கொண்ட பொறுப்பு காரணமாகவும், சுயநிர்ணய உரிமை பற்றி - அதனை பெயர் கொண்டு அவ்வாறு அழைக்காவிட்டாலும் - சில வெளிப்படையான கருத்துகளை கூறி வருகிறார். ருத்திரகுமாரன் இனப்படுகொலை விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். உலகத்தமிழர் பேரவை அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்கும் போர்க்குற்ற விசாரணைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சுயநிர்ணய உரிமை

சுயநிர்ணய உரிமை என்பது சர்வதேச சட்டத்தின் படி (International Covenant of Civl and Political Rights (ICCPR)), ஒரு மக்கள் குழு தமது அரசியல் முறையை தாமே நிர்ணயித்து கொள்வதற்கான உரிமையாகும். இரண்டாம் உலக போரின் பின் ஐரோப்பிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஐரோப்பிய ஆட்சியில் இருந்து விடுபட்டு வந்த காலத்தில், இந்த சுயநிர்ணய உரிமை அந்த மக்கள் தமக்கான மக்கள் ஆட்சியை அமைத்து கொள்வதற்காக கொண்டுவரப்பட்டது.

ஒரு நாட்டில் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தும் சக்தி பொதுவாக இன்னுமொரு நாட்டுக்கு கிடையாது. ஆனால் ஒரு நாடு இவ்வாறாக சுயநிர்ணய உரிமையை இன்னுமொரு நாட்டில் அமுல் படுத்த விரும்பினால், இராணுவ பலம் கொண்டு அதை செய்ய முடியும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த நாடுகள் விரும்பினாலும் இவ்வாறு செய்ய முடியும்.

நடைமுறையில், சிங்கப்பபூர் முதல் தென் சூடான் வரை, போராட்டங்களின் பின் சுயநிர்ணய உரிமை உள்ளக சுயநிர்ணய உரிமையாகவே நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த 'உள்ளக' என்பது, குறிப்பிட்ட நாடு ஒன்றில் மக்கள் குழு ஒன்று சுயநிர்ணய உரிமையை கோரி போராடி வரும் நிலையில், அந்த நாட்டு அரசு ஒரு கட்டத்தில் மக்களின் உரிமையை ஏற்றுக் கொண்டு, அவர்கள் விரும்பிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக அமைகிறது. இந்த மக்கள் விரும்பும் ஆட்சி அமைப்பு மாகாண சபையாகவும் இருக்கலாம், தனி நாடாகவும் அமையலாம். சிங்கப்பபூர், எரித்திரியா, பாகிஸ்தான் மற்றும் தென் சூடான் நாடுகளில் இந்த ஆட்சி அமைப்பு தனி நாடாக அமைந்திருந்தது.

வெளிநாட்டு இராணுவங்களால் அமுல் படுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை இஸ்ரேல், பங்களாதேஷ் மற்றும் போஸ்னியா ஆகிய நாடுகளில் இடம் பெற்றது.

இவ்வாறாக, சுயநிர்ணய உரிமை அமுல் படுத்துவதற்கு மிகவும் சிக்கலான ஒரு விடயம். சிறந்த பலமுனை இராஜதந்திர உறவுகளும், நகர்வுகளும் தேவையான ஒன்றாக, சுயநிர்ணய உரிமையின் அமுலாக்கம் இருக்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமை அமுலாக்கம் பல நாடுகளில் மக்களுக்கு விடுதலை அளித்திருக்கிறது. வெளிநாட்டு அமுலாக்கம் பேரழிவுகளுக்கு மத்தியில் பெரும் இராணுவ செலவில் வல்லரசு போட்டிகளால் இடம் பெற்றிருக்கிறது.

சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொள்ளவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு உலக நாடுகளில் உந்துதலின் படி பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது. உள்ளக சுயநிர்ணய உரிமை அமுலாக்கத்திற்கு அடக்குமுறை அரசுடனான பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத ஒரு தேவையாகும்.

சுயநிர்ணய உரிமையில் தனது பங்கை சிறப்பாக அமைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நாடுகடந்த அரசு Eelam Institute of Strategic Studies என்ற அமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்கு நீங்கள் பங்களிப்பதன் மூலம் இந்த முயற்சியின் வேகத்தை அதிகரிக்க உதவலாம். பின்வரும் மின்னஞ்சலில் அமைச்சர் சுபா சுந்தரலிங்கத்தை தொடர்பு கொள்ளுஙகள்: s.suba@tgte.org

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

Jude இன் விளக்கங்களுக்கு நன்றிகள். நான் நம்பிக்கையீனத்தை விதைக்கவில்லை. எனினும் தெளிவுகள் பெறவேண்டிய கேள்விகள் பலவுண்டு.

  • தொடங்கியவர்

இன்று ஈழத்தமிழரின் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் முக்கிய அமைப்புகளாக பின்வரும் அமைப்புகளை குறிப்பிடலாம்:
  • உலகத்தமிழர் பேரவை - தலைவர் அருட்திரு இம்மானுவல்
  • நாடுகடந்த தமிழீழ அரசு - பிரதமர் ருத்திரகுமாரன்
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் - சம்பந்தன்

கனடாவில் இயங்கும் இன்னொரு அமைப்பான கனேடிய தமிழர் பேரவை கடந்த ஆண்டில் என்னத்தை செய்தது (செய்யவில்லை) என இந்த ஒளிப்பதிவு காட்டுகின்றது :

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முக்கிய காலகட்டத்தில்வாழும் நாம் கட்டாயம் செய்யவேண்டியது

இதிலிருந்து மீள எம்மாலான செயல்களில் ஈடுபடுவது

அதுவும் இல்லையென்றால் ஆகக்குறைந்தது மக்களை விலகச்செய்யும் அல்லது மக்களை ஒதுங்கச்செய்யும் செயல்கள் கருத்துக்களையாவது விதைக்காமலிருப்பது.

Edited by விசுகு

வணக்கம் கிருபன்,அகூதா,ஜூட்

ஆம் கடந்தகால நிகழ் கால யதார்த்தங்களை நாம் அராய்ந்துள்ள்ளோம். கடினமான துயரமான அனுபவங்கள் உண்மை.,...... எதிர்கால யதார்த்தம் என்ன என்பது எமக்கு நிச்சயம் தெரியும். உங்களது தெளிவான கருத்துக்களில் நான் தெரிந்து கொண்டேன்.

நாம் மீண்டும் யதார்த்தம் என்ன என்பதை ஆராயாமல் எம் விடிவு நோக்கிய பாதையில் உறுதியாய் பல நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிப்போம் .இதுவே எனக்கும் உங்களுக்கும் [களம்] காலம் சொல்லும் கட்டளையாகும் என நான் நினைக்கிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.