Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் அணு விஞ்ஞானி கேஸ் குண்டு வீசி படுகொலை: இஸ்ரேல் உளவுப் பிரிவு கைவரிசை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11-iran-blast.jpeg

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.

தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக் காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.

http://tamil.oneindi...iran-blast.jpeg

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுகவும் ஈரான் மீது சினம் ஏற்படுத்தும் செயல்களை, இஸ்ரேல் ஏற்படுத்தினால்....

ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவும் தயங்காது.

இந்த ஆண்டு அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல். எனவே நீண்ட சண்டைக்கான சாத்தியங்கள் குறைவு.

ஆனால், இப்படியான 'பயங்கரவாத' செயல்கள் தொடர்ந்தும் நடக்கும்.

அடுத்த வருடம் நிச்சயம் ஈரானை அழிப்பார்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இங்கு பலர் ஈரானுக்கு அனுதாபம் தேட முனைகிறார்கள் என்று புரியவில்லை??ஈரான் எங்களுக்கு மாமனா அல்லது மச்சானா?? இஸ்லாமியப் பயங்கரவாத ஆட்சியாளர்களான கொமேனி போன்றவர்களால் வழிநடத்தப்படும் ஒரு நாடு தமிழனுக்கு எதுவுமே தரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களத்துக்கு போர்த்தளபாடங்கள் வாங்கவென அன்பளிப்பாக பெருந்தொகைப்பணத்தை இந்த ஈரானிய அரசு வழங்கியிருந்தது பலருக்கும் மறந்து போயிருக்கலாம்.

இதை விஅடவும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவும் பண உதவியும், ஆயுதங்களும் கொடுத்து வரும் ஈரானிய அரசு உலகெங்கும் பெருமளவு அப்பாவிகள் பலியாகக் காரணமாக இருந்திருக்கிறது, இதில் ஈழத்தில் கொல்லப்பட்ட 40,000 தமிழர்களும் அடக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியக் குண்டு ஒன்றைத் தயாரிப்பதன் மூலம் முழு உலகையுமே அச்சத்தில் வைத்திருக்க விரும்உகிறது.

என்னைப் பொறுத்தவரையில் ஈரானிய அரசு அழிக்கப்பட வேண்டும், அதன் ஆயுத பலமும் அணுவாயுத முயற்சியும் நசுக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுக்கும் எந்த நடவடிக்கையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

1.jpg

http://slembassyusa.org/embassy_press_releases/iran-sri-lanka-re-affirmation-of-strong-bonds/

mr_112907_02.jpg

http://www.colombopage.com/archive_07/November29141947CH.html

xin_31204052916402651976727.jpg

Both projects are funded by Iran to the tune of over 1.9 billion dollars, which was pledged during Rajapaksa's state visit to Iran in November last year.

http://news.xinhuanet.com/english/2008-04/28/content_8069543.htm

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல். எனவே நீண்ட சண்டைக்கான சாத்தியங்கள் குறைவு.

ஆனால், இப்படியான 'பயங்கரவாத' செயல்கள் தொடர்ந்தும் நடக்கும்.

அடுத்த வருடம் நிச்சயம் ஈரானை அழிப்பார்கள்.

இல்லை அகூதா இப்போதைக்கு ஜனநாயக பயங்கரவாதம் தொடரும் பின்பு ................?

ஒரு ஜனநாயகத்தை வைத்து என்னெல்லாம் செய்கின்றாங்கள் :o

எதற்காக இங்கு பலர் ஈரானுக்கு அனுதாபம் தேட முனைகிறார்கள் என்று புரியவில்லை??ஈரான் எங்களுக்கு மாமனா அல்லது மச்சானா??

இதற்க்கு மாமனாக அல்லது மச்சானா இருக்க வேண்டும் என்பதில்லை.

இஸ்லாமியப் பயங்கரவாத ஆட்சியாளர்களான கொமேனி போன்றவர்களால் வழிநடத்தப்படும் ஒரு நாடு தமிழனுக்கு எதுவுமே தரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களத்துக்கு போர்த்தளபாடங்கள் வாங்கவென அன்பளிப்பாக பெருந்தொகைப்பணத்தை இந்த ஈரானிய அரசு வழங்கியிருந்தது பலருக்கும் மறந்து போயிருக்கலாம்.

அப்படி பார்க்கப்போனால் எமக்கு இந்த உலகமே எதிரி தான். ஆயுதங்கள் வாங்காத விற்காத நாடு என்று எதுவே இல்லை. நான் வாழுகின்ற நாடும் எமது அழிவில் பங்குகொண்டது தான்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்றுக்கொள்ளடமுடியாது. அவர்களை பற்றி மேற்குலகம் சொல்லும் கருத்தை வைத்து அப்படி ஒட்டுமொத்தமாக கருதமுடியாது. எமது போராட்டம் பற்றி தெரியாமல் எத்தை நாடுகள் எம்மை பயங்கரவாதி என்று முத்திரைகுத்தும் போழுது எமக்கும் கோவம் வந்தது தானே. மேற்குலக நாடுகள் செய்வதும் ஒரு வகை பயங்கரவாதமே.

இதில் ஈழத்தில் கொல்லப்பட்ட 40,000 தமிழர்களும் அடக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியக் குண்டு ஒன்றைத் தயாரிப்பதன் மூலம் முழு உலகையுமே அச்சத்தில் வைத்திருக்க விரும்உகிறது.

இதை அமெரிக்கா செய்தால் சரி. இவர்கள் செய்தால் தவறு? நம்மில் பலருக்கு தெரியாத ஒரு விடயம் என்னவெனில் ஈரான் சர்வதேச விதிமுறைகளிற்க்கு உட்பட்டே அணு ஆயுதத்தை தயாரிக்கின்றது. இதில் என்ன தவறு? நீங்கள் வைத்திருக்கும் பொருளை நானும் நேர்மையாக வைத்திருப்பதில் தவறு என்று எனக்கு தோன்றவில்லை.

மேற்குலகத்தின் பார்வையில் பயங்கரவாதமாக சித்தரிக்கப்படும் இந்த நாடுகள் இதுவரையில் எந்த ஒரு அணுகுண்டையும் தாக்குதலுக்காக பயன்படுத்தியதில்லை. மாறாக அமெரிக்கா அணு குண்டு வீசி எவ்வளவோ நாசகாரியங்கள் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்பும் தடைசெய்யப்பட வேண்டியதே.

என்னைப் பொறுத்தவரையில் ஈரானிய அரசு அழிக்கப்பட வேண்டும், அதன் ஆயுத பலமும் அணுவாயுத முயற்சியும் நசுக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுக்கும் எந்த நடவடிக்கையும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

பேரழிவின் இனத்திலிருந்து வந்த நாம் இப்படி எதிர்பார்ப்பது சரியா தோன்றவில்லை நண்பரே. அதன் விழைவுகள் எவ்வளவு கொடியவை என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

Both USA and Iran helped Srilanka to kill Tamils. But the only difference is, USA wanted a war crime investigation after the war and Iran helped Srilanka to defeat UN Human rights resolution against it on War crimes.

Iranian rulers are Islamic fundamentalists. Ayotholla Kamehini has put death warrants on human rights activists for a long time just because they critisised the way Islam treat women. It is easy for you guys to say that western media propaganda is portraying Iran as a fundamental state, but think about a simillar regime in pre 2001 Afghanistan, the Talibans. How did they treat their own people under Islamic sharia law ??? Do you welcome the way of living under Talibans?? I don't think there is much difference between Iran and Talibans.

The nuclear weapons at USA are much safer than that of Iran. Because, the Islamic fundamentalists around the world are desperate to have their hand on this weapon of mass destruction. For them, destroying the western culture and civilisation is much more important than thier own lives. They want the whole world to be ruled under Islamic sharia law. Iran is the perfect country for Islamic fundamentalists to get a nuclear weapon. Pakistan helped Iran since they both were muslims.

Remember, Iran is not making a nuclear weapon for fun. The whole reason behind its project is to keep the western world in check and destroy Israel if possible.

Finally, not a single Islamic country going to support your struggle for freedom. Take the palestenians, they went through the same fate as us, but what did they do?? They too supported Srilankan war criminals.

Stop pretending to be naive, be realistic.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிலும் இலங்கையைப் போலவே ஜனநாயகம் என்ற போர்வையில்

ராணுவ ஆட்சியே நடக்கின்றது.

பாகிஸ்தானிய அணு உலைகள் தலிபான்களின் கைகளில் சிக்கும்

அபாயம் ஈரானிலும் உண்டு.

அது உலகத்திற்கு மிகவும் ஆபத்தானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.