Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

வாடகையை வருமானவரிக்கு தெரியப்படுத்தாமல் விடுவது ஒரு தண்டனைக்குரிய குற்றம்.

 நீங்கள் வீடுகளின் அடித்தளத்தில் வாழ்கிறீர்களா? நீங்கள் வழங்கும் வாடகைக்கு பற்றுச்சீட்டு பெறுகிறீர்களா? அல்லது வீட்டு உரிமையாளரின் அறிவுறுத்தலுக்குக்கமைய வருமான வரிப்பத்திரத்தில் வீட்டு வாடகையை மறைக்கிறீர்களா?இது வீட்டுக்காரருடன் இணைந்து நீங்களும் குற்றவாளியாகிறீர்கள்.ஒரு அடித்தளத்தில் குடியிருக்கும் நீங்கள் மாதம் 700.00 டொலர் வாடகை செலுத்துவீர்களானால் வருடத்திற்கு 8400.00 டொலர்களை உங்கள் வரிவிலக்கு செலவீனத்தை அரசுக்கு மறைக்கின்றீர்கள்.அதற்காக அரசு வழங்கும் மீளளிப்பை பெறவும் தவறுகிறீர்கள். அண்மையில் கிப்ளிங் பகுதியில் உள்ள வீடொன்றில்தீப்பிடித்து கொண்டதால் ஏற்படுத்தப்பட்ட விசாரணையில் வருடத்துக்கு15,000.00 டொலர் வரி ஏய்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு மேல் தளத்தில் குடியிருந்த உரிமையாளர் நடுத்தளம் மற்றும் அடித்தளத்தில் குடியிருந்த குடியிருப்பாளர்களும்.தண்டம் செலுத்தியுள்ளனர்.இவர்கள் தொடர்ந்து ஐந்து வருடங்களாக இந்த வரி ஏய்பினை செய்துள்ளார்கள்.

அன்புடன்
 நீலக்குருவி
Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

வருமான வரி 2012:

 

சில முற்றிலும் இலவச மென்பொருட்கள் இங்கே உள்ளன:

 

http://netfile.gc.ca/sftwr-eng.html

Link to comment
Share on other sites

Target நிறுவனம், ஒன்றாரியோவில் மூன்று வணிக நிலையங்களை இன்று திறக்கிறது.

 

Target நிறுவனம், கனடாவில் அதன் முதல் மூன்று வணிக நிலையங்களை இன்று திறந்து வைக்கிறது.

ஒன்றாரியொவின் ஃபேர்கஸ் (Fergus), குவெல்ஃப் (Guelph), மற்றும் மில்டன் ஆகிய பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்கள் இன்று திறக்கப்படும்.

 

நுகர்வோர் அதனையிட்டு ஆர்வம் கொண்டுள்ள அதேவேளை, ஏனைய கனேடிய விற்பனை நிறுவனங்கள் நிலைமையை அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Zellers விற்பனை நிலையங்கள் மூடப்பட்ட இடங்களில் Target விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்தில் மேலும் பல விற்பனை நிலையங்களை அந்த நிறுவனம் திறக்கவுள்ளது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13758

Link to comment
Share on other sites

ஸ்காபுறோவில் குப்பை வண்டி மோதி 5 வயதுச் சிறுமி பலி

 

நேற்று ஸ்காபுறோவில் சாலையைக் கடந்து கொண்டிருந்த சிறுவர் , சிறுமியர் மீது நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வண்டியொன்று மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 வயதுச் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


நேற்று மாலை 4 மணியளவில் க்ளிப்சைடு டிரைவ் அருகேயுள்ள கிங்க்ஸ்டன் சாலையை 4 சிறுவர்கள் கடக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு வந்த குப்பை வண்டி சிறுவர்களின் மீது பலமாக மோதியுள்ளது. பலத்த அடி பட்டதால்  5 வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானாள்.  விடயமறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் தாய் கதறியழுத காட்சி அனைவரின் நெஞ்சினையும் உருக்குவதாய் அமைந்திருந்தது.

 

மேலும் இந்த விபத்தில் ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கும் , 13 வயதுச் சிறுமி ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக சிக் கிட்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

நகராட்சித் குப்பை வாகனம் ஒன்று மூன்று குழந்தைகள் மீது மோதிய இச்சம்பவம் தனக்கு அதிர்ச்சியினையும் கவலையினையும் உண்டுபண்ணியுள்ளதாக மாநகர முதல்வர் போர்ட்  விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுனர் உடனடியாக வண்டியிலிருந்து இறங்கி தரையில் வந்து படுத்துக் கொண்டதாகவும் விபத்தினை நேரில் பார்த்த சிலர் சாட்சியமளித்துள்ளனர். மருத்துவர்களின் கண்காணிப்புடன் வாகன ஓட்டுனரிடம் தீவிர விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

 

http://ekuruvi.com/garbage%20truck%20in%20scarborough

Link to comment
Share on other sites

சிகாகோவை முந்தியது ரொறொன்ரோ!!

 

மக்கள் தொகையில் சிகாகோவை முந்தி வட அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமாக தேர்வாகியுள்ளது ரொறொன்ரோ.  முன்னர் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால்  மெக்சிகோ சிட்டி, நியூயோர்க், லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிகாகோ ஆகியவற்றின் பின்னரே ரொறொன்ரோ இருந்து வந்தது.


கடந்த யூலை மாதம் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புக்களில் சிகாகோவை விட அதிகப்படியாக  84,000 பேர் ரொறொன்ரோவில்  வசித்து வருவது தெரியவந்துள்ளதால் பெரிய நகரங்கள் வரிசையில் நான்காவதாக இடம்பெற்றது ரொறொன்ரோ.

10 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் வசிப்பதை பலர் விரும்பவில்லை. தற்போது உள்ள உயரமான் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் பல ரொறொன்ரோவில் பெருகி வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் அதிகப்படியாக ரொறொன்ரோ மாநகருக்குள் படையெடுக்கத் தொடங்கி விட்டதே சனத்தொகை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

 

http://ekuruvi.com/Toronto%20now%20fourth%20largest%20city%20in%20North%20America

Link to comment
Share on other sites

ஒரு மணி நித்திரை இழக்கப்படும்  :(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
20/03/2013
  இன்று 3.00 மணியளவில் டொரொன்டோவில் யூனிவேர்சிற்றிஅவெனியூவில் (avu university) அமைந்திருக்கும் அமெரிக்கத்தூதரகத்திற்கு முன்பு நடக்கவிருக்கும் கவனயீர்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாணவர் சமூகத்தினர் கேட்டுள்ளனர். நிலக்கீழ் தொடரூந்து நிலையம் சென்ற் பற்றிக்(subway station St Patrick). அனைவரையும் கலந்துகொள்ளுமாறு மாணவர் சமூகம் அழைப்பு விடுக்கிறார்கள்.இது ஒரு உலகளாவிய நிகழ்வு .
 
 
 
 
இதே வேளை மாணவர்களின் தொடர் முழக்கப்போராட்டங்கள் பின்வரும் அட்டவனை மூலம் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.
March 20th – York University Tamil Students’ Association
March 21st – Press conference by Tamil Students across Canada
March 22nd- Carton University Tamil Students’ Association
March 23rd – Tamil Community Solidarity Gathering and discussion
March 25th- University of Ontario Institute and Technology Tamil Students’ Association
March 26th- University of Toronto Tamil Students’ Association- Scarborough Campus
March 27th- University of Toronto Tamil Student’s Association- Mississauga Campus
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொரண்டோ பேருந்தில் வசூலான பணத்தை கையாடல் செய்த தமிழர் உள்பட இருவர் கைது. TTC யின் அதிரடி நடவடிக்கை.

resize_20130321205643.jpg

 

டொரண்டோ போக்குவரத்து கழகமான TTCயில் பணிபுரியும் கண்டக்டர்கள் இருவர் வசூலான பணத்தை கையாடல் செய்ததாக அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர். அதில் ஒருவர் தமிழர் என்பது திடுக்கிடும் செய்தியாகும்.
 
டொரண்டோ போக்குவரத்து கழகத்த்தில் பணிபுரியும் கண்டக்டர்கள் இருவர், தங்கள் பேருந்தில் வசூலான பணத்தில் $5000 வரை கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த TTC அதிகாரிகள் இருவரையும் அதிரடியாக கைது செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட இருவர் கிருஷ்ண ராஜ்குமார் என்ற 47 வயது தமிழர் ஒருவர். இவர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 வயது பால் வாண்டி என்ற கனடியர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரையும் மே 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

 

 

http://thedipaar.com/new/news/news.php?id=58969&cat=canada

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொரண்டோவிற்கு வரும் பாண்டா (Panda) , மிருகத்தை வரவேற்க தயாராகும் கனடிய பிரதமர்.

 

சீனாவில் இருந்து டொரண்டோவிற்கு வரவிருக்கும் பாண்டா என்னும் விலங்கை வரவேற்க கனடா பிரதமர் தயாராகி வருகிறார். இன்று மாலை டொரண்டோ பியர்சன் விமானநிலையத்தில் வந்து இறங்கவிருக்கும் ஒரு ஜோடி பாண்டாவை வரவேற்க தனது மனைவியுடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் திட்டமிட்டுள்ளார். அவருடன் கனடாவின் சீனத்தூதரும் வருகிறார்.

 

இந்த பாண்டா மிருகம் டொரண்டோ மிருகக்காட்சி சாலையில் பத்து வருடங்களுக்கு இருக்கும். சீனாவின் ஊhநபெனர விமான நிலையத்தில் இருந்து கனடாவின் டொரண்டோ விமான நிலையம் வரை மிக நீண்ட தூரம் அதாவது 12இ875 கி.மீ பயணம் செய்து வரும் பாண்டாவிற்கு தேவையான உணவுகள் மற்றும் பழங்கள் ஆகியவையும்இ அதே விமானத்தில் வருகிறது.

 

டொரண்டோ மிருகக்காட்சி சாலையில் பத்து வருடங்களுக்கு இருக்கும் பாண்டாவை பார்க்க இப்போதே கனடிய மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் வரவால் மிருகக்காட்சி சாலைக்கு பார்வையாளர்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

http://thedipaar.com/new/news/news.php?id=59065&cat=canada

Link to comment
Share on other sites

கனடாவிற்கு வருகை தந்துள்ள பண்டாக்கள்

 

pandas2-600x337.jpg

இந்தப்படம் இரண்டு பண்டாக்களில் ஒன்றான Da Mao விமானத்தில் கனடாவிற்கான தனது பயணத்தை மகிழ்ச்சியுடன் செய்துகொண்டிருப்பதைக் காட்டுகின்றது. இரு ராட்சச பண்டாக்களில் இரண்டும் கனடாவின் மிகப்பிரபல்யமான நகரங்களில் மொத்தமாக 10 வருடங்கள் தங்குவதற்காக இன்று கனடா பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 10.30. மணிக்கு வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

கனேடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் கடந்த வருடம் சீனாவில் அறிவித்தபடி Er Shun  என்ற 5 வயத பெண் பண்டாவும் Da Mao என்ற 4வயது ஆணும் இங்கு தங்கும் 10 வருடங்களில் 5 வருடங்களை ரொறொன்ரொ மிருகக்காட்சிச்சாலையிலும் மிகுதி 5 வருடங்களை கல்கரியிலும் கழிப்பார்கள்.

பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் அவரது மனைவி மற்றும் கனடாவுக்கான சீனாத்தூதுவர்  Zhang Junsai ஆகியோர் விமானநிலையத்தில் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

இவர்களை விமானமூலம் கனடா கொண்டுவரும் பணியை பெடெக்ஸ் நிறுவனம் கையேற்றுள்ளது.

விமானத்தில் அவர்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

pandas-600x337.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முதல் பாவணைக்கு வந்துள்ள புதிய நிலப்பகுதிக் குறி எண்கள் 437, 365.

 

resize_20130325193805.jpg

 

புதிய நிலப்பகுதிக் குறி எண்கள் 437, 365, ஆகிய இரண்டும் நேற்று திங்கட்கிழமையிலிருந்து பாவனைக்கு வந்துள்ளது.

 

வளர்ச்சியடைந்து வரும் பிரதேசங்களின் தொலைபேசி இலக்கங்களின் தேவையைக்கருத்திற் கொண்டு திங்கட்கிழமை முதல் இரு புதிய நிலப்பகுதிக் குறியீட்டு இலக்கங்கள் உபயோகத்திற்கு வருகின்றன.

 

தற்போது ரொறொன்ரோ தொலைபேசி இலக்கங்கள் 416 அல்லது 647, 905, 289 ஆகிய குறியீட்டு எண்களுடன் பாவனைக்கு உள்ளன.

 

இன்று தொடக்கம் தொலைபேசி கம்பனிகள் ரொறொன்ரோ வில் 437 எனும் புதிய தொடக்கக்குறியீட்டையும் தற்பொழுது 905, 289 ஆகிய குறியீட்டைக் கொண்டியங்கும் பகுதிகளில் மூன்றாவதாக 365 அறிமுகப்படுத்தப்படும்.

 

அவசரத்தொடர்புச் சேவையிலும் தொலைத்தொடர்பிலும் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் கூறப்படுகின்றது.

 

http://www.canadamirror.com/canada/8054.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்க்கடலை, சீனி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களினால் சால்மோனெல்லா அபாயம்!

 

கனடா உணவுப்பரிசோதனை நிறுவனத்தினர் பருப்பு வகை சீனி வகைப் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாமென கியுபெக்கிலும் ஒன்ராறியோவிலும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

 

சில வகையான வேர்க்கடலை, பாதாம், முந்திரி,எள் வெண்ணைகள் ஆகியவைகளும் எள்ளிலிருந்து செய்யப்படும் tahini என்பதனையும் சில சீனிப்பொருட்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Tout Naturel, Yum Nature and Soeurs en Vrac ஆகிய பெயர்களுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களே எச்சர்க்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

 

Vicrossano Inc கு சொந்தமான சில திரளாக விற்கப்படும் பொருட்களும் அடங்குகின்றன.

 

இதுவரை எதுவித பாதிப்பும் அறியப்படவில்லையெனினும் மேற்படி பொருட்களின் ஆபத்தினாலேற்படும் அறிகுறிகள் பல தரப்பட்டவையாக இருக்குமென கூறப்படுகின்றது.

 

 

http://www.canadamirror.com/canada/8108.html

Link to comment
Share on other sites

தமிழ்நாடு மாணவர் போராட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் சேரன் உணர்வுமிக்க உரை !!
Mar 26 2013 09:10:57


கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு தன வாழ்த்தினை தெரிவிக்கும் வகையிலும் , நன்றி தெரிவிக்கும் முகமாகவும் பிரபல ஈழக் கவிஞரும், பேராசிரியருமான சேரன் அவர்கள் உணர்வு மிக்க உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது ,


அறிவின் சுடரும் உணர்வின் தோழமையும் எழுக!!

 

ஈழப்போராட்டம் ஆற்றாமையும் கொந்தளிப்பும் சஞ்சலமும் நிறைவின்மையும் மேலோங்கிய காலகட்டத்தில் திருப்புமுனைகளுக்காகத் தவித்துக் கொண்டிருந்தபோது தமிழக மாணவர்களின் அறிவுத் தேடல் மிகுந்த உணர்வு பூர்வமான எழுச்சி ஈழத் தமிழர்களுக்கும் உவகையையும் ஊட்டத்தையும் வழங்கி உள்ளது. ஈழத்தமிழர்களது பல்வேறு தோழமைச் சக்திகளுக்கும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எங்களை ஆதரித்து வருகிற பல்வேறு தரப்பினருக்கும் உங்களுடைய எழுச்சி ஒத்தடமாகவும் உயிரூக்கியாகவும் அமைகிறது.


அதற்காக எஙகளுடைய மனங்கனிந்த பணிவான நன்றியையும் இதயபூர்வமான வாழ்த்துகளையும் உங்களுக்குத் தருவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

 

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அல்ல; நூறு நூறாயிரம் மக்களின் ஆத்மக் குரல் அது என்பதை நீங்கள் மிகத் தெளிவாக உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.


தமிழகத்தினதும் இந்தியாவினதும் கட்சி அரசியல் எனும் நச்சுப் பொறிக்குள்ளும் மாய வலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாது எல்லா அரசியல் கட்சிகளையும் கடந்து சிவில் சமூகத்தின் அறக் குரலாகவும் அறிவின் எழுச்சியாகவும் உங்களுடைய போராட்டம் எங்களுக்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டுமென உணர்வுத் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

ஈழமும் தமிழகமும் வெறுமனே புவியியல் சார்ந்த தமிழ்ப் பரப்புகள் அல்ல; அவை இரண்டும் உயர்ந்த, தனித்துவமான தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மானுட நாகரிகப் பெருநிலங்களும் நிலக்காட்சிகளும் ஆகும். (They are Civilizational Lands and Landscapes) எங்களுடைய செழுமையும் தமிழ் வழிப்பட்ட நாகரிகங்களின் அறம் சார்ந்த ஆழமான தனித்துவங்களும் எழுச்சி பெறுவது நாங்கள் சமாந்தரமாக, உணர்வுத் தோழமையுடன் பணிபுரிவதில்தான் தங்கி உள்ளது.


அந்த வகையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவும் நாங்கள் தொழிற்பட வேண்டியிருக்கிறது என்பதையும வலியுறுத்த விரும்புகிறேன்.

 

தமிழகத்துக்கு அப்பால் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எமது போராட்டத்தின் அற வலுவை அறிவுசார்ந்து மற்றைய மொழிகளிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்க உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறோம்.


எமது போராட்டம் வெறுமனே நாட்டுக்கான போராட்டம் அன்று. இது எமது இருப்புக்கான போராட்டம்; தமிழ் நாகரிகங்களின் தனித்துவத்தைப் பேணுவதற்கான போராட்டம்;உலகெங்கும் ஒடுக்கப்படுகிற மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவுக் குரல் தருகிற போராட்டம்; எல்லைகள் கடந்த போராட்டம்; நாடு கடந்த போராட்டம்.

 

 

உங்கள் அனைவருக்கும் மறுபடியும் எமது நன்றியும் வாழ்த்துக்களும்.

 

http://ekuruvi.com/Cheran%20Rudhramoorthy%20WITH%20TAMIL%20NADU%20STUDENTS

Link to comment
Share on other sites

பெரிய வெள்ளி தினத்தன்று மூடப்படுபவை:

 

 

அரசாங்க அலுவலகங்கள், நூலகம், வங்கி, LCBO, BEER விற்பனை நிலையங்கள்,
பெரும்பாலான mall மற்றும் விற்பனை நிலையங்கள்


தபால் சேவை இல்லை.

 

பெரிய வெள்ளி தினத்தன்று திறந்திருப்பவை:

Eaton Centre, Pacific Mall, and Tanger Outlet Mall (Cookstown), திரையரங்குகள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் (Toronto Zoo, the Art Gallery of Ontario, the Royal Ontario Museum, Ontario Science Centre)

Link to comment
Share on other sites

ஸ்காபரோ பகுதியில் தந்தை மற்றும் தாயை கொலை செய்தது தொடர்பில் அவர்களது 26 வயது மகனை போலிஸ் கைது செய்துள்ளது.

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

 

http://www.thestar.com/news/gta/2013/03/31/toronto_police_investigating_double_homicide_in_scarborough.html

Link to comment
Share on other sites

செய்தி/அஞ்சலி: டொரோண்டோ பெருநகரத்தில் Prince of Soup என்று அறியப்பட்ட ரவி கனகராஜா காலமானார். இவர் downtown பகுதில் "ரவி சூப்ஸ்" ( RaviSoups ) என்ற சூப் உணவகத்தை நடத்தி வந்தார். 42 வயதான இவர் 2007ம் ஆண்டில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தார்.

 

குறுகிய காலத்திலேயே புகழ்பெற்ற இவரது நிறுவனம் தற்போது 3 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. டொரொன்ரோ நகரில் உள்ள பல புகழ்பெற்ற ஊடகங்கள் இவரின் உணவகத்தை பற்றி புகழ்ந்து எழுதியுள்ளன. ஒரு சாதாரண பணியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தனது திறமையால் உணவகத்துறையில் புகழ் பெற்ற ஈழ தமிழரான இவரின் இழப்பு ஈடில்லாதது.

 

 

கிளிநெச்சியை பிறப்பிடமாக கொண்ட இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 

 

529119_352371044875103_560019569_n.jpg



Affectionately known as “the Prince of soup,” Ravi Kanagarajah has passed away after suffering a stroke on Friday. The owner of the popular Ravisoups restaurants was 42 years old. He leaves behind wife Tharmini Kandasamy and their four children.


Kanagarajah first made a name for himself at the now-defunct Mildred Pierce where he obtained his soupy sobriquet. The talented chef then launched Ravisoups (322 Adelaide W, at Peter, 647-435-8365, ravisoup.com) back in 2007 in what used to be the club district. Rave reviews weren’t far behind. A second on Queen West (1128 Queen W, at Beaconsfield, 416-538-7284,) and another further out on Dundas (2535 Dundas W, at Jerome, 416-769-7284) soon followed. The family-run business has every intention of continuing.
 

“Ravi spent the last few years teaching me everything he knew about the restaurant,” says his brother Suresh Kanagarajah. “All the recipes, the little secrets. Nothing will change.”
 

The family will receive visitors from 5 to 9 pm on both Saturday April 6 and Sunday April 7 at the Ogden Funeral Home at 4164 Sheppard East.

 

http://www.nowtoronto.com/news/story.cfm?content=191857



2010821-ravisoups-ext.jpg



2010821-ravisoups-ravi.jpg

Link to comment
Share on other sites

Gefilte மீன் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் - மக்களுக்கு உணவுப்பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை!!

 

image-(1)gergtwertf.jpg

 

உண்பதற்கு தயார் நிலையில் பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்பட்டு வரும் Central-Epicure  நிறுவன Gefilte வகை மீன் உணவுகளில் நச்சுத்தன்மையை உண்டாக்கும் பாக்ட்டீரியாக்கள் கலந்துள்ளதால் இவ்வகை உணவினை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கனடிய உணவுப்பாதுகாப்பு அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது


உணவுப் பாதுகாப்புத் துறையினரின் திடீர் சோதனையில் கெட்டுப்போன உணவுகளில் வளரக்கூடிய பொட்டுலிசம் எனப்படும் உயிர்க்கொல்லி நோயைத் தோற்றுவிக்கும்  பாக்டீரியாக்கள் இந்த வகை உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

ஒன்ரோறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் 600 கிராம்களைக் கொண்ட பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்பட்டு வரும் இந்த உணவுகலில் ஏப்ரல் 13, 2013 (UPC code 061279 00440 3 & 061279 00440 7) என்ற திகதி குறிக்கப்பட்டிருக்கும் என்ற மேலதிகத் தகவல்களும் வெளியாகியுள்ளது.

 

http://ekuruvi.com/Botulism%20alert%20for%20gefilte%20fish%20product

Link to comment
Share on other sites

செய்தி/அஞ்சலி: டொரோண்டோ பெருநகரத்தில் Prince of Soup என்று அறியப்பட்ட ரவி கனகராஜா காலமானார். இவர் downtown பகுதில் "ரவி சூப்ஸ்" ( RaviSoups ) என்ற சூப் உணவகத்தை நடத்தி வந்தார். 42 வயதான இவர் 2007ம் ஆண்டில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தார்.

 

குறுகிய காலத்திலேயே புகழ்பெற்ற இவரது நிறுவனம் தற்போது 3 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. டொரொன்ரோ நகரில் உள்ள பல புகழ்பெற்ற ஊடகங்கள் இவரின் உணவகத்தை பற்றி புகழ்ந்து எழுதியுள்ளன. ஒரு சாதாரண பணியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தனது திறமையால் உணவகத்துறையில் புகழ் பெற்ற ஈழ தமிழரான இவரின் இழப்பு ஈடில்லாதது.

 

 

கிளிநெச்சியை பிறப்பிடமாக கொண்ட இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

Ravi Kanagarajah, owned three thriving RaviSoup restaurants in Toronto. He died suddenly on Friday.

Ravi Kanagarajah, owned three thriving RaviSoup restaurants in Toronto. He died suddenly on Friday.

By: Marco Chown Oved Staff Reporter, Published on Mon Apr 01 2013

The soup was in his blood.

Ravi Kanagarajah survived by making soup through civil war and refugee flight across two continents before becoming an acclaimed chef and restaurateur here in Toronto.

He started out as a boy making soup in his mother’s restaurant in Kilinochchi, Sri Lanka, before fleeing to Germany after the family business was bombed in 1987. He later came to Toronto, where he worked his way up from sous chef at Mildred Pierce to owning his own restaurants, called RaviSoups, at three locations around the city.

But after living through all that, and earning a reputation as Toronto’s “soup master” and “soup king,” Kanagarajah died suddenly of a stroke last Friday. He was only 42.

“He was an extremely hard worker and very open minded. His passion is everyone who is working at the restaurant. Everyone must be well treated,” said his brother and co-worker Suresh Kanagarajah.

Unlike some well-known chefs, Ravi didn’t jealously guard his recipes. Instead he shared them with anyone who asked, even publishing a few in the Star.

His soups ranged from the traditional lentil curry soups of his homeland to newer fusion dishes like his red curry and corn chowder.

And he offered up his soup for good causes, taking part in last year’s Soupstock to protest against the mega-quarry in Melancthon, north of Toronto.

Ravi’s restaurant grew from a single small location in the club district (322 Adelaide St. W.) to three establishments (1128 Queen St. W. and 2535 Dundas St. W.), and he would eventually train and employ 16 cousins to cook and serve. All of them adopted his strict work ethic.

“We came from a very low background, in Sri Lanka. We ran our family restaurant there. “The food industry is in our blood,” said Suresh, tearing up.

The restaurants were closed, as per usual, over the long weekend, but opened for business Monday.

“Right now, it’s really hard, but Ravi desired this,” Suresh said. “That’s why we opened today. It’s really hard for me today, but we opened anyway.”

Kanagarajah is survived by his mother, wife, five brothers, 25 cousins and four children.

http://www.thestar.com/life/food_wine/2013/04/01/toronto_soup_master_dies_suddenly.html

Link to comment
Share on other sites

Ravi Kanagarajah, owned three thriving RaviSoup restaurants in Toronto. He died suddenly on Friday.

Ravi Kanagarajah, owned three thriving RaviSoup restaurants in Toronto. He died suddenly on Friday.

By: Marco Chown Oved Staff Reporter, Published on Mon Apr 01 2013

The soup was in his blood.

Ravi Kanagarajah survived by making soup through civil war and refugee flight across two continents before becoming an acclaimed chef and restaurateur here in Toronto.

He started out as a boy making soup in his mother’s restaurant in Kilinochchi, Sri Lanka, before fleeing to Germany after the family business was bombed in 1987. He later came to Toronto, where he worked his way up from sous chef at Mildred Pierce to owning his own restaurants, called RaviSoups, at three locations around the city.

But after living through all that, and earning a reputation as Toronto’s “soup master” and “soup king,” Kanagarajah died suddenly of a stroke last Friday. He was only 42.

“He was an extremely hard worker and very open minded. His passion is everyone who is working at the restaurant. Everyone must be well treated,” said his brother and co-worker Suresh Kanagarajah.

Unlike some well-known chefs, Ravi didn’t jealously guard his recipes. Instead he shared them with anyone who asked, even publishing a few in the Star.

His soups ranged from the traditional lentil curry soups of his homeland to newer fusion dishes like his red curry and corn chowder.

And he offered up his soup for good causes, taking part in last year’s Soupstock to protest against the mega-quarry in Melancthon, north of Toronto.

Ravi’s restaurant grew from a single small location in the club district (322 Adelaide St. W.) to three establishments (1128 Queen St. W. and 2535 Dundas St. W.), and he would eventually train and employ 16 cousins to cook and serve. All of them adopted his strict work ethic.

“We came from a very low background, in Sri Lanka. We ran our family restaurant there. “The food industry is in our blood,” said Suresh, tearing up.

The restaurants were closed, as per usual, over the long weekend, but opened for business Monday.

“Right now, it’s really hard, but Ravi desired this,” Suresh said. “That’s why we opened today. It’s really hard for me today, but we opened anyway.”

Kanagarajah is survived by his mother, wife, five brothers, 25 cousins and four children.

http://www.thestar.com/life/food_wine/2013/04/01/toronto_soup_master_dies_suddenly.html

 

இவரது உணவகம் பற்றிய செய்திகளை பல்வேறு ஊடகங்களில் படித்துள்ளேன். தனது தொழிலில் மிக குறுகிய காலத்தில் வெற்றியை பெற்று, 3 கிளைகளை கொண்ட நிறுவனமாக வளர்த்திருக்கிறார். மிக இளம் வயதில் மரணமடைந்துள்ளார்.  அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.

 

Link to comment
Share on other sites

பல முக்கிய செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளன.

 

திறமைமிக்கவரை எமது சமூகம் இழந்துவிட்டது.

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

சிறிலங்க காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க லிபரல் கட்சி அதிகாரபூர்வ அழைப்பு !!

 

கொழும்புவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டினை கனடா மட்டுமல்லாது அனைத்து தேசங்களும் புறக்கணிக்க வேண்டும் என லிபரல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றினை அக்கட்சியின் இடைகாலத் தலைவர் பொப் ரே இன்று வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,

போருக்குப் பின்னர் சிறிலங்காவின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ராஜபக்சேவின் ஆட்சியில் தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதும் மனித உரிமைகளுக்கெதிரான போக்கும் அதிகரித்து வருகிறது. சிறிலங்கா சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான எந்த முயற்சியையும் இதுவரையிலும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை.

உண்மையில் சொல்லப் போனால் போருக்குப் பின்னதான கால கட்டங்களில் தமிழர்கள் தொடர்ந்து சித்திரவதைப்படுத்தப்பட்டும், இன ரீதியாக தாழ்த்தப்பட்டும் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஊடகவியலாளர்கள் மீதான் தாக்குதலும் , பிற கட்சியினரை தாக்கும் செயல்களும் அதிகரிப்பதைப் பார்க்கும் போது சிறிலங்காவில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே எழுகிறது.

அதிகாரத்தினை பயன்படுத்திக்கொண்டு தவறான பெருங்குற்றச்சாட்டு ஒன்றினை அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி மீது சுமத்துமளவிற்கு மோசமான திசையிலேயே அரசியல் நடைபெறுகிறது. இந்நிலையில் சிறிலங்காவில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கனடா பங்கேற்பது நல்லதல்ல. சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கான நாடு என்ற தகுதியையும் சிறிலங்கா இழந்து விட்டது, எனவே கனடா மட்டுமல்லாது காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் இந்த மாநாட்டினை புறக்கணிப்பதுடன் , வேறொரு நாட்டில் இதனை நடத்துமாரும் நிர்பந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காமன்வெல்த் மிக முக்கியமானது என்பதால் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இது போன்ற அரசுகளுடன் பொருளாதாரத தடையினை ஏற்படுத்த அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். சிறிலங்காவில் சட்டம் பேணப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் கனடா இறங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://ekuruvi.com/liberal%20apr%204%202013

Link to comment
Share on other sites

உங்களுடன் கலந்துரையாட நாளை ஸ்காபுறோ வருகிறார் ஜஸ்டின் - குடும்பத்துடன் வாருங்கள் !!

 

தமிழ் மக்களுடன் கலந்துரையாடுவதற்காக லிபரல் கட்சியின் தலைவர் வேட்பாளர்களில் பிரதான இடம் பிடித்துள்ளவரான  ஜஸ்டின் நாளை ஸ்காபுறோ வருகிறார். தேர்தலின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் ஆதரவினை நாடி நம்மைக் காண ஜஸ்டின் ஸ்காபுறோ வருவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதோடு மட்டுமல்லாமல் கனடிய அரசியலில் தமிழ் மக்களின் வலிமையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்வு என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை.


20 Torham Place, Scarborough, Ontario, M1X 0B3 என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்காபுறோ கன்வென்சன் சென்ரரில் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் ஜஸ்டின் உங்களுடன் கலந்துரையாட உள்ளார். தமிழ் மக்கள் அனைவரும் அவர்தம் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளையும் அழைத்து வர அனுமதி உண்டு.

நீங்கள் லிபரல் கட்சித் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்தவராக இருப்பின் உங்கள் பதிவு எண்ணையும்  மறக்காமல் எடுத்து வாருங்கள். அங்கேயே உங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜஸ்டினின் ஸ்காபுறோ வருகை குறித்து இகுருவி செய்திகளுக்காக  கரி ஆனந்தசங்கரியிடம் பேசிய போது,  லிபரல் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திறமையான வேட்பாளர் ஜஸ்டின் என்றும், தமிழ் மக்களை பெரிதும் நேசிக்கக் கூடிய அவருக்கு மக்கள் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

 

http://ekuruvi.com/Justin%20Trudeau%20meet%20on%20greet%20to%20be%20held%20on%20Tuesday

Link to comment
Share on other sites

இலங்கை ஆடைகளை  புறக்கணிப்புப் போராட்டம்.

 

இலங்கையில் உற்பத்தியாகிக் கனடிய அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் ஆடைகள் புறக்கணிப்புப் போராட்டம். எதிர்வரும் ஞாயிற்றக்கிழமை ஏப்பிரல் 14. 2013 மதியம் 2:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணிவரை கனடியத் தமிழர் தேசிய அவையால் டண்டாஸ் சதுர்க்கத்தில் (Dundas Square) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதுடன் இன்னல் இழைக்கப்படும் ஓர் இனத்தைக் காத்ததாகவும் மனிதவுரிமை மீறல்களிற்குத் துணைபோகாமலும் மனித நேயமுள்ளவர்களாகவும் வாழமுடியும். இலங்கையில் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுகள் கைதுகள் காணாமற் போதல் நில அபகரிப்பு என்பன தொடர்ந்து கொண்டேபோகும் இந்நிலையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி எம்முறவுகளைக் காத்திடுவோம் வாரீர்.

 

 

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

 

தொலைபேசி :416.830.703
மின்னஞ்சல் : info@ncctcanada.ca
இணையத்தளம் : www.ncctcanada.ca

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடன்.  ஏன் பெற்றீர்கள். ???.    அந்த பணத்தை என்ன செய்தீரகள்.??    வருமானம் வாராதா. துறைகளில்.  பணத்தை முதலீடக்கூடாது     போர் ஒரு வருமானம் தாராதா துறை  அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன்   போரிடுவது   கடன் பெற்று போரிடுவது    மூட்டாள்தனமாகும்    போர் வெற்றியா  ?? இல்லை தோல்வியா??    தோல்வி தான்   அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள்   இந்த போர்  நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது     ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது    இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது    ஆனால்  போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும்    புலிகள் இல்லை அவர்களின் போர்  தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும்    உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
    • வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..?  ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
    • இருக்கிறது. முஸ்லீம் நாடுகளில்  அடக்குமுறை இருக்கிறது.   மேற்குலகம்  தங்களால் முடிந்த அளவில் ஏதோ செய்கிறார்கள். சில அமைப்புகள் கூட குரல் கொடுக்கின்றன.  மதங்களை வைத்து சட்டங்களை உருவாக்கி பெண்களை அடிமைப் படுத்தும்   நாடுகளுக்குள் போய் நின்று கொண்டு குரல் எழுப்ப முடியாது. குரல்வளையை அறுத்துப் போட்டுவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா…  போன்ற நாடுகளில் யேர்மனிய  பெண் நிருபர்கள் கூட தலையில் துணி கொண்டு மூடிக் கொண்டே செய்திகளை பகிர்ந்து கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன்.  சில காலங்களுக்கு முன்னர் துருக்கியில் நடந்த சந்திப்பொன்றில் ஐரோப்பிய பாராளுமன்ற ஜனாதிபதி ஊர்சுலா பொன் டெயார் லேயரை (Ursula von der Leyer) தனக்கு சரிசமமாக இருக்க அனுமதிக்காமல் தூரமாக ஷோபா ஒன்றில் அமர வைத்த துருக்கி அதிபர் ஏர்டோகான்(Erdogan) சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர், ‘ஆப்ஹானிஸ்தானில் பெண்களின் திருமண வயது 9” என தமிழ்சிறிகூட செய்தி ஒன்றை இணைத்திருந்தார். ஆக பெண்களுக்கான அடக்குமுறை வீட்டுக்குள் நடந்தாலும், நாடுகளில் நடந்தாலும் அவைகளை அறியும் பட்சத்தில் மேற்குலகம் மட்டுமல்ல  நாங்களும் பேசுகின்றோம்.  
    • இதுக்கிள்ளை  தேனும் பாலும்  ஓடுமாமே..5 வருசத்திலை வீட்டுக்கு ஒரு கார்...ஒன்று மட்டும் உண்மை..முழு மூஞ்சையில் அடிவாங்கப்போவது நம் இனமே...உள்ள கோவணத்தையும் இழந்து நாடோடிகளய் திரிய வேண்டியதுதான்...அகதி அந்த்தஸ்தும் கிடைக்காது..
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.