Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோவில் இன்று

Featured Replies

  • தொடங்கியவர்

[size=4]ரொறன்றோ பெரும்பாகத்தில் சிறுவர்கள் உணவின்றிய நிலையை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள்![/size]

[size=4]ரொறன்றோ பெரும்பாகத்தில் உள்ள சிறுவர்களில் சுமார் அரைப்பங்கினர் பசிக்கு உணவைப் பெற முடியாத நிலை உள்ளதாக Daily Bread Food Bank வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ரொறன்றோ பெரும்பாகத்தில் உள்ள சிறுவர்களில் 45 சதவீதமானவர்கள், வாரத்தில் குறைந்தது ஒருநாள் பசிக்கு உணவு பெற முடியாது இருப்பதாகவும், 39 சதவீதமானவர்கள் ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாத நிலை உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

பொருளாதார தேக்க நிலைக்கு முன்பு உணவு வங்கிகளை பயன்படுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது, தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பயனாளிகளின் எண்ணிக்கையில் 32 சதவீதமானவர்கள் சிறுவர்களெனவும் அந்த அமைப்புத் தெரிவித்தது.

உணவு வங்கிகளை நாடுவோரில் அனேகமானோர், அடிப்படைச் சம்பளத்தில் பணி புரிவதாகவும், வதிவிடத்திற்குப் பணத்தைச் செலவிட்ட பின்னர், உணவு அவர்களுக்கு ஆடம்பர பொருளைப் போன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த இலையுதிர் காலத்தில் நான்கு லட்சம் இறாத்தல் உணவு, மற்றும் நான்கு லட்சம் டொலர் பணத்தை திரட்டுவதற்கு Daily Bread Food Bank இலக்கு நிர்ணயித்துள்ளது.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12841[/size]

  • Replies 427
  • Views 47.9k
  • Created
  • Last Reply

நகைகொள்ளையுடன் சம்பந்தப்பட்ட யுவதி நான்கு நாட்களாக பொலிசாரின் பிடியில்

அண்மையில் 21 வயது யுவதியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தாய் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலால் பொலிசாருக்கு துப்பு துலக்கும் வாய்ப்பு எட்டியுள்ளது.இந்த யுவதியின் கடந்த கால நடத்தைகள்:-

மாலையில் வீட்டுக்கு வரும் போது சிறு பொதிகளை கொண்டு வந்துள்ளார்,தாய் வினவிய போது உடுப்பு வாங்கியதாக கூறியுள்ளார்.ஒவ்வொரு நாளும் உடுப்பு வாங்குவதா? தாய்க்கு வந்தது சந்தேகம்,இதைவிட அதிகமாக இவரிடம் பணம் புரளத்தொடங்கியுள்ளது.தாய்க்கு சந்தேகம் வலுக்கவே இவரது அறையை திறந்து பார்க்க எண்ணி கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.கதவு தாளிடப்பட்டு இருந்தது.ஒரு கணமும் தாமதிக்காத அம்மா எனது பிள்ளை எங்கோ வழி தவறுகிறது என்பதை புரிந்து கொண்டு காவல் துறைக்கு தகவல் கொடுக்க,வீட்டு உரிமையாளரின் (தாயின் உத்தரவுக்கு அமைய)உடனடியாக கதவு உடைக்கப்பட்டு அறை சோதனையிடப்பட்டது.அங்கு ரொக்க பணம் மற்றும் நகைகள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.இந்தப்பெண் நேரடியாகத்திருடா விட்டாலும் அந்த கும்பலுடன் தொடர்பு உண்டு. பொலிசார் இந்த வலையமைப்பை கண்டு பிடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார்கள்.அதைவிட எங்கு யாரால் இந்த நகைகள் விற்கப்படுகிறது?யார் வேண்டுகிறார்கள்?என்று தலை குழப்பி கொண்டிருந்தார்கள்.இப்போ கிடைத்துள்ளது.

இதைவிட இரு வாரங்களுக்கு முன்பு இணைத்திருந்தேன்.பிரபல நகைக்கடையொன்றில் ஒரு தொகையான நகைகளை கறுப்பு இனத்தவர் ஒருவர் கொடுத்துவிட்டு 1600.00டொலர்களை பெற்று சென்றார்.இச்சம்பவம் தற்போது பொலிசாருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது.

இதை இங்கு பிரசுரித்ததன் நோக்கம் உங்கள் பிள்ளைகளையும் அவதானியுங்கள்,அவர்கள் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாது பாதுகாத்து கொள்ளுங்கள்.

நன்றி:- வணக்கம் தமிழ்

http://biz.vanakkamcanada.ca/vanakkam-fm-vanakkam-radio-3316.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாயைப் போல் அனைத்து பெற்றோரும் பிள்ளைகளின் விடையத்தில் விளிப்பாக இருந்தால் அவர்கள் தவறான வளிக்கு செல்வதை இயன்றவரைக்கு தடுக்கலாம்...பெண் பிள்ளைகள் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்னும் போதும் மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது...தொழிளாளர் தினத்தை ஒட்டி வந்து போன நீண்ட வார விடுமுறையின் போது நான்கு தமிழ் பெண் பிள்ளைகள் நடு இரவு ஒரு பேருந்துலும், மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மது போதையில் இருந்து செய்த அட்டகாசத்தை இருவர் சொல்லும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது....இப்படியான பிள்ளைகள் தான் முதலில் மது,புகைத்தல் என்று ஆரம்பித்து பின்னர் அதையும் தாண்டிய செயல் பாடுகளில் இறங்குவது..பிள்ளைகள் தப்பு செய்யிறார்கள் என்று தெரிந்து கொண்டாலும் வேறு வீடுகளில் நடப்பதை சுட்டிக் காட்டி அதை விட என் பிள்னை திறம் என்று சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள்....இயன்றவரைக்கு பிள்ளைகள் வெளியில் செல்லும் போது எங்கு போகிறார்கள்....எதற்காக போகிறார்கள்.....யாரோடு போகிறார்கள்.... என்ற விடையங்களை கண்டிப்பாக பெற்றோர் அறிந்திருக்க வேணும்...வெளியில் போனால் இத்தனை மணிக்குள் வீட்டை வந்து விட வேணும் என்ற கட்டுப் பாட்டை பிள்ளைகளுக்கு போட்டு வைத்திருக்க வேணும்..நள்ளிரவு தாண்டிய தருணத்தில் பெண் பிள்ளைகள் மது போதையில் பஸ்சை மறிச்சு ஏறிட்டு இன்னும் ஒரு தரிப்பிடம் வருவதற்கு இடையில் பெல் அடித்து நிற்பாட்டி விட்டு, போதையில் பஸ்சை சுற்றி ஓடி பிடிச்சு விளையாடும் அளவுக்கோ இல்லை ஆடை பிய்து அங்கங்கள் வெளியில் தெரிவது கூட உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கோ பிள்ளைகளின் பழக்க வளக்கங்கள் இருக்க கூடாது.....இந்தப் பிள்ளைகளின் செயலைக் கேட்ட பின் பெண் பிள்ளைகளே இப்படி நடக்கும் போது ஆண்கள் செய்தால் கேட்க முடியாது என்றே எண்ணத்தோன்றுகிறது...நாட்டு நிலமை இப்படி எல்லாம் போய் கொண்டு இருக்கிறது..வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பிள்ளைகள் விடையத்தில் பொறுப்புணர்வோடு இருப்பது விரும்பத்தக்கது...

Edited by யாயினி

  • தொடங்கியவர்

[size=5]Please forward this job posting for Tamil speaking settlement worker to people who may be interested.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

Job Posting

CICS is a not-for-profit organization with a vision to empower immigrants in settling and integrating as contributing members of Canadian society through diverse, professional and innovative services. Our mission is to enable immigrants to fully integrate, participate and contribute to all spheres of Canadian Society. Our success stems from our core values of Cultural diversity, Integrity, Compassion and Solidarity. Our workforce culture is bounded by five key elements, they are: Client Focus / Respect for Diversity; Accountability / Performance Excellence; Initiative; Efficiency / Commitment; and Teamwork.

Ref.: 24-12/ Worker

Job Title: Settlement Worker (Tamil-speaking)

Position: Relief for maternity leave

Salary: $38,317 – $48,974 per annum, pro-rata

Status: Unionized

Hours: 24.5 hours per week; required to work irregular hours, evenings,

weekends and holidays

[/size]

[size=5]Responsibilities:

· To provide assessment, information and orientation services to newcomers to facilitate adjustment in the community and the settlement process;

· To provide and support newcomers the information about resources and services in the community;

· To facilitate access to needed referrals and appropriate services in libraries and community where there are barriers due to language, culture and race;

· To establish and maintain contact with newcomers to determine their needs and issues;

· To promote culturally sensitive links between newcomers and community;

· To plan, organize and implement group sessions on topics related to settlement;

· To organize, plan and implement group sessions in coordination with library staff;

· To keep the team updated on all new information and be cooperative in maintenance of information by tracking government and community resources in order to effectively inform and refer clients:

· To establish and maintain excellent service quality for clients:

· To keep and maintain clients records in a timely and professional manner;

· To prepare and submit accurate and timely statistical and progress reports as required;

· To establish and maintain excellent working relationship and communication with internal and external groups.

· To participate actively in program’s community development activities including advocacy, outreach and community engagement activities;

Qualification and Requirements:

· Canadian University degree or equivalent, in Social Sciences or related discipline, and at least one year of related work experience;

· Good understanding of cultural and social background of immigrants and refugees;

· Good understanding of settlement and integration issues of newcomers and immigrant families in general;

· Excellent knowledge of government and community resources, resources for newcomer in libraries;

· Skilled in program organization and community outreach;

· Excellent communication, inter-personal and problem-solving skills;

· Excellent oral and written skills in English and Tamil

· Ability to work in a multicultural environment;

· Ability to work with MS Word, Excel and PowerPoint applications;

· Certified Information and Referral Specialist (CIRS) an asset;

· Flexible; willing to work some evenings and/or weekends, and in different locations;

· Willing to travel between libraries and community locations within Toronto;

· Valid driver license and use of car preferred;

· Must be legally entitled to work in Canada;

· Proof of a “Vulnerable Sector Screening”.

All applications should reach CICS by 5:00 p.m. on October 5, 2012. Applicants should quote Job #24-12 Settlement Worker (Tamil-speaking) and address the covering letter to:

Hiring Committee

Centre for Information and Community Services

2330 Midland Avenue

Toronto ON M1S 5G5

E-mail: hr@cicscanada.com

(Faxed resumes will not be accepted.)[/size]

பாரதி கலைக்கோவிலின் பவதாரணியின் நினைவு நிகழ்வாக நடைபெறும் வருடாந்த நிகழ்வு:-

கனடாவின் மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் உன்னத பணிக்காக பவதாரணியின் பாரதி கலைக்கோயில் மாணவர்கள் வழங்கிய 48 மணிநேர தொடர்ச்சியான இசைமழை நிகழ்ச்சி கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது.

கனடாவில் புகழ்பெற்றதும் பொதுச் சேவையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வரும் பவதாரணியின் பாரதி கலைக்கோவில் இளையோர் இசைக்குழுவினர் கனடாவில் மட்டுமல்ல ஜேர்மனி, இங்கிலாந்து, வன்னி, சென்னை போன்ற இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி உலகத் தமிழர்களின் அபிமானம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறப்புக்கள் கொண்ட மேற்படி பவதாரணியின் பாரதி கலைக்கோவில் இளையோர்கள் தங்கள் குருவான பவதாரணியை கொடிய புற்றுநோய்க்கு இரைகொடுத்தார்கள். அந்த துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் பவதாரணியின் கணவர் திரு. மதிவாசன் வழிகாட்டலில் தொடர்ச்சியாக பல இசை நிகழ்ச்சிகளை வழங்கி தங்கள் குருவின் ஞாபகார்த்தமாக இங்குள்ள வைத்த்pயசாலைகளுக்கு நிதி உதவி வழங்கிவருகின்றார்கள்.

அந்த வகையில் கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் தொடக்கம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலும் இடைவிடாக இசை மழை பொழிந்து அந்த நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்பட்ட 56350 டொலர்களை (7381850 ரூபா )கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வைத்திய சேவைகளைப் பெற்று வரும் “ஸ்ரோவில் பொது வைத்தியசாலைக்கு” வழங்கியுள்ளாரகள்.

இந்த முயற்சியானது கனடாவில் தமிழர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்று விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்.. மார்க்கம் மாநகரசபை வளாகத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மேற்படி தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிக்கு ரொரென்ரோ வாழ் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.

மேற்படி நிகழ்ச்சி ஒரு அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சியாக நடைபெறுவதற்கு மார்க்கம் மாநகர சபையின் மேயர் திரு பிராங்க் ஸ்கெப்பட்டி மற்றும் மார்க்கம் மாநகர சபையின் 7ம் வட்டார உறுப்பினர் திரு லோகன் கணபதி ஆகியோர் தங்கள் ஆதரவினை முழுயாக வழங்கியிருந்தார்கள்.

இறுதி நாளான 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 12.45க்கு நிறைவு பெற்ற மேற்படி இளையோரின் இசைநிகழ்ச்சியில் கனடாவிலிருந்து சென்று விஜே தொலைக்காட்சி “சுப்பர் சிங்கர்ஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடு திரும்பிய செல்விகள் சரிகா, மகிசா, நிர்ஜானி, எலிசெபத் மாலினி |ஆகியோரும் தங்கள் இனிய பாடல்களால் சபையோரை மகிழ்வித்தனர்.

மேற்படி நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்பட்ட தொகை 51350 கனடிய டாலர்கள் (6,726850 ரூபா) என்று முதல் அறிவிக்கப்பட்டு அதற்கான காசோலை ஸ்ரோவில் வைத்தியசாலைக்கு வழங்கப்பட இருந்த வேளையில் மார்க்கம் நகரசபை மேயர் திரு பிராங்க் ஸ்கெப்பட்டி தனது கொல்ப் விளையாட்டுக் குழுவினர்கள் மத்தியில் சேகரிக்கப்பட்ட 5000 கனடிய டாலர்களை உடனடியாக மேற்படி தொகையோடு சேர்த்து 56350 (7381850 ரூபா ) டாலர்கள் ஆக உயர்த்தி அதை வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்கள்.

மேற்படி இசை நிகழ்ச்சி சிறப்புற நடைபெற பாரதி கலைக்கோவில் இளையோரின் பெற்றோர்கள் தங்கள் ஆதரவை சிறப்புற வழங்கியமைக்காக மார்க்கம் நகரசபையின் மேயரும் நகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதியும் அவர்களைப் பாராட்டினார்கள்.

இந் நிகழ்வில் ராதிகா சிற்சபைசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), லோசன் கணபதி (கவுன்சிலர்), அகிலன், கேட் (தமிழ் சி.என்.என்)ரூபன் செல்வராஜா (tamil iptv ), லோறன் ராசையா (canwest ), ஆறுமுகம் தயாபரன், ஆர். என். லோகேந்திரலிங்கம் (கனடா உதயன்) ஆகிய முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

securedownload6-399x600.jpg

securedownload-52-600x401.jpg

securedownload-19-600x401.jpg

cc3-600x401.jpg

securedownload-71-587x600.jpg

  • தொடங்கியவர்

[size=5]பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் அனைத்துலக விருதொன்றை இன்று பெற்றுக் கொள்வார்[/size]

[size=4]பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றாதமையை, ஐக்கிய நாடுகள் அமைப்பை அவர் அவமதிப்பதாக கருதலாமென விமர்சகர்கள் தெரிவித்தார்கள். [/size]

[size=4]இன்று நியுயோர்க் செல்லும் பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர், அங்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்திற்கான விருதொன்றைப் பெறவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், கனடாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் உரையாற்றுவார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதம மந்திரி ஹாப்பர், கனேடிய பிரதம மந்திரிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கவில்லையென சுட்டிக் காட்டினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளாவிட்டலும், இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்யமின் நெதன்யாஹ, பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ், மற்றும் ஹெய்ற்றியின் பிரதம மந்திரி ஆகியோரை பிரதம மந்திரி ஹாப்பர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12877

  • தொடங்கியவர்

[size=6]Omar Khadr in Canadian prison after return from Guantanamo Bay[/size]

[size=5]Canadian convicted terrorist Omar Khadr is back in Canada after a decade in Guantanamo Bay, Cuba, and a year after he was eligible for repatriation.[/size]

[size=3]

[size=5]A Pentagon source told The Globe and Mail that Mr. Khadr departed from the U.S. naval base before 4:30 a.m. Saturday aboard a U.S. military plane.[/size][/size][size=3]

http://www.theglobeandmail.com/news/national/omar-khadr-in-canadian-prison-after-return-from-guantanamo-bay/article4576945/[/size]

  • தொடங்கியவர்

[size=4]ஜஸ்ரின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கவுள்ளார்[/size]

[size=4]லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் ஈடுபடவுள்ளமை குறித்து அக்கட்சியின் மொன்றியல் பபினோ (Papineau) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவிப்பார்.

பபினோ (Papineau) தொகுதியில் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் அவர் தமது முடிவை உறுதி செய்வார்.

ஒன்றாரியோவின் மிசிசாகாவிலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் றிச்மண்ட் (Richmond) நகரிலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதம மந்திரியும், லிபரல் கட்சியின் முன்னாள் தலைவருமான பியேர் ட்ரூடோவின் மகனான, 40 வயதான ஜஸ்ரின் ட்ரூடோ, கனேடிய மத்திய தர வகுப்பினரின் குரலாக லிபரல் கட்சியை மீண்டும் உருவாக்கவேண்டுமென்ற இலக்குடன் தலைமைப் பதவியை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12898[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் டொரண்டோ நகரில் நடக்கவிருக்கும் "எங்கேயும் எப்போதும் ராஜா" என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிகாக இசைஞானி இளையராஜா அக்டோபர் 3அம் தேதி டொரண்டோ விமானநிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கனடிய தமிழ் ஊடகங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ரோஜாவின் வரவேற்பில் ராஜா

இசைஞானி இளையராஜா அக்டோபர் 3ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த தமிழ் ஊடகங்கள், இளையராஜாவின் டொரண்டோ வருகை மிகவும் சிறப்பானது என்றும் கருத்து தெரிவித்தனர். நவம்பர் 3ஆம் தேதி டொரண்டோவின் Rogers Centreல் நடக்கவிருக்கும் மாபெரும் நேரடி இசை நிகழ்ச்சி நடக்கவிருப்பதால், அதுகுறித்த ஏற்பாடுகளை கவனிக்கவும், செய்தியாளர்களை சந்திக்கவும் இளையாராஜா தற்போது டொரண்டோ வந்துள்ளார். அவருடன் அவருடைய மகன கார்த்திக ராஜாவும் உடன் வந்திருந்தார்.

இசைஞானியை வரவேற்க காத்திருக்கும் Trinity Events Inc.ஊழியர்கள்

மேலும் இன்று (அக்டோபர் 4) Scarborough convention centreல் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் இசைஞானி இளையராஜா, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அக்டோபர் 6ஆம் தேதி மாலை மீண்டும் சென்னை திரும்ப இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்கள் கூறினர்.

http://www.thedipaar.com/news/news.php?id=52892

பேஸ் புக்கில் சுட்டது:

இப்பூமிப் பந்தில் தமிழன் என்றொரு இனம் இருப்பதற்கு அடையாளமாக இருப்பவர்கள் யாரென்றால் ஈழத்திலே புறநானூற்றைப் புரட்டிப்போட்ட 40,000 மேற்பட்ட அந்த மாவீரர்கள்தான்.இவர்களின் அளப்பரிய தியாகங்களை ஆண்டுதோறும் நினைவுகூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.

தமிழின விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும்; தங்களின் இளம...

ைக்கனவுகளையும், உற்றார்பெற்றாரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீரகாவியமானவர்கள் எங்களின் மாவீரர்கள்.

வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிக் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள்.இப்ப்படி ஆணும் பெண்ணும் சரிசமனாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர்மாதம்.இந்த நவம்பர்மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திர மன்றி உலகத்தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை புனிதமாமாதமாகவும், வணக்கத்திற்குரியமாதமாகவும் போர்றிவருகின்றார்கள்.

இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசைவிழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து, புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றப்படுகின்றது.நவம்பர் என்பது வீரத்தை, தியாகத்தை, மண்மீதுகொண்ட பற்றுதியை மற்றும் புறநானூற்றில் நாம் பார்த்த வீரத்தை ஈழத்தில் நடத்திக் காட்டிய அந்த மாவீரர்களையும் நினைவிலே நிறுத்துகின்ற மாதமாகும்.இம் மாதத்திலே மண்ணிற்காக மரணித்த மாவீரர்களையும், அந்நியப் படைகளாலும் இனத்துரோகிகளாலும் அநியாமாகப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களையும் மனதிலே நினைத்து தியாகச் சுடரேற்றி வணங்கவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமையாகும்.

வருகின்ற 2012 நவம்பர்மாதம் 3ந் திகதியன்று கனடாவிலே இசைஞானி இளையராசாவினால் ஓர் இசைக்களியாட்ட விழா நடைபெறவிருப்பதை அறிந்தபோது எங்களின் நெஞ்சிலே வேலைப் பாச்சியதைப் போன்று இருக்கின்றது.

இசைஞானி அவர்களே! தமிழர் மனங்களிலே மண்வாசனைமாறா இசைமூலம் எங்களைக் கட்டிப்போட்டவர் நீங்கள்.ஆனால் ஈழத்தமிழன் கொத்துக் கொத்தாக‌

துடிக்கத் துடிக்க கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதும்,முள்ளிவாய்க்காலிலே எம்மினம் இரத்த வெள்ளத்திலே மிதக்கின்றபொழுதும் நீங்கள் மவுனமாக இருந்தீர்கள்.அந்தத் தமிழனுக்காக நீங்கள் ஒருதுளி கண்ணீர்கூடவடிக்கவில்லை.ஒரு குரல்கூடக் கொடுக்கவில்லை. நீங்கள் அவர்களை சக மனிதர்களாகக்கூடப் பார்த்தாவது குரல் கொடுத்திருக்கலாம்.அதைக்கூடச் செய்யவில்லை.அவர்களுக்காக ஒரு இசைகூட நீங்கள் இசைக்கவில்லை. எங்கே ஐயா போனது உங்களின் மனித நேயம்?

இயக்குணர் திலகம் பாரதிராசா அவர்களே! நீங்களுமா இவ்விழாவில் பங்குபற்றிச் சிற‌ப்பிக்கப் போகின்றீர்கள்? இந்த இசைவிழா மாவீரர் மாதத்தில் நடப்பது உங்களுக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது.எம் உறவுகள் சாகடிக்கப்படும்போதெல்லாம் ஓங்கிக் குரல் கொடுப்பவர் நீங்கள்.அதுமாத்திரமல்ல எம் தமிழீழத்திற்குச் சென்று எம்தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.எத்தனையோ மாவீரர்களுக்குக் கிடைக்காத இந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.அன்று உங்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச்சென்ற‌வர்கள் கந்தகப் புகையோடு கலந்துபோனார்கள்.அந்தமண்ணிலே இன்றும்கூட அவர்களின் இரத்தவாடை வீசிக்கொண்டிருக்கின்றது. அந்தமாவீரர்களைகூட போற்றுகின்ற மாதந்தான் இந்த நவம்பர்மாதம்.

அன்பான கலைஞர்களே! உங்கள் எல்லோரிடமும் சகதமிழர்களாக, உங்களின் தொப்பூழ்கொடி உறவுகளாகக் கூறிக்கொள்வது என்னவென்றால்; உலகத்திலே எந்த ஒரு மனித இனமும் சந்திக்காத அத்தனை கொடுமைகளையும் ஈழத்தமிழினம் சந்தித்திருக்கின்றது.மனித குலத்திற்கெதிரான குற்றம் அங்கே இழைக்கப்பட்டிருக்கின்றது. ஈழத்தமிழன் இன்னும் அந்தக் கொடுமையில் இருந்து இன்றுவரை மீழவில்லை.நாங்கள் எங்களை ஆறுதல் படுத்துவது இந்த நவம்பர் மாதத்தில்தான்.இழந்துபோன எங்களின் மாவீரர்களையும், சொந்தங்களையும் நினைந்து நினைந்து அழுது புரண்டு அடங்குவதும் இப்புண்ணிய மாதத்தில்தான்.நவம்பர் என்றாலே எங்கள் சிந்தனை முழுவதும் நிறைந்திருப்பவர்கள் மண்ணிற்காக மரணித்த அந்த மாவீரர்களும், மண்ணோடு மண்ணாகிப்போன எம்மக்களுந்தான்.

மண்ணையும் மக்களையும் மனதார நேசிக்கும் அன்புசால் கலைஞர்களே நவம்பர் மாதத்தைத் தவிர்த்து வேறு எந்தவோரு மாதத்திலாவது உங்களின் இசைக்கொண்டாட்டத்தை நடத்துமாறு மண்ணிற்காக மரணித்துப்போன 40,000 மேற்பட்ட மாவீரர் பேரிலும், மரணித்துப்போன 160,000 மேற்பட்ட மக்களின் பேரிலும் உங்களீன் பாதம் பணிந்து வேண்டுகின்றோம்.ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர் அனைவ‌ரும் போற்றுத‌ற்குரிய‌ புனித‌ர்க‌ளின் மாத‌மாக‌ வ‌ண‌ங்குவோம்.

ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் மாவீரர்விழாவை மறந்து த‌மிழ‌ர்களால் கொண்டாட‌ப்ப‌டும் எந்த‌ ஒரு விழாவும் அந்த‌ 40,000 மேற்பட்ட மாவீரர்களினதும், மரணித்துப்போன 160,000 மேற்பட்ட மக்களின‌து சாம்ப‌ர் மேட்டிமேல் நின்று கொண்டாட‌ப்ப‌டும் ஊழித் தாண்ட‌வ‌மாக‌த்தான் கருத‌‌முடியும்.இந்த‌ அக்கிர‌ம‌த்தை மான‌முள்ள‌ எந்த‌மிழ‌னும் அனும‌திக்க‌மாட்டான்.

ந‌ன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் கானங்கள் ஒலிக்க வேண்டிய மாதத்தில் மாசறுபெண்ணே வருக ஒலிக்க வேண்டியதன் அவசரம் என்னமோ?

[size=5]

மாவீரர் கானங்கள் ஒலிக்க வேண்டிய மாதத்தில் மாசறுபெண்ணே வருக ஒலிக்க வேண்டியதன் அவசரம் என்னமோ?

[/size]

[size=5]குமாரசாமி அண்ணர் வைத்த தீ கொளுந்து விட்டெரிய தொடங்கியிருக்கிறது.இளையராஜாவின் நிகழ்வுக்கு மக்கள் வருகை தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது[/size]

[size=2]

[size=5]மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை[/size][/size][size=2]

[size=5][ வெள்ளிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2012, 04:16.26 PM GMT ][/size][/size][size=2]

[size=5]r_k_selvamani_001.jpg[/size]

[size=5]கனடாவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் களியாட்டங்களை தவிர்க்குமாறு இந்திய திரைப்பட இயக்குனர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.[/size][/size][size=2]

[size=5]இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,[/size]

[size=5]இப்பூமிப் பந்தில் தமிழன் என்றொரு இனம் இருப்பதற்கு அடையாளமாக இருப்பவர்கள் யாரென்றொல் ஈழத்திலே புறநானூற்றைப் புரட்டிப்போட்ட 40,000இற்கும் மேற்பட்ட அந்த மாவீரர்கள்தான்.[/size]

[size=5]ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தமிழ்ப் பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த அந்த வீரர்களின் அளப்பரிய தியாகங்களை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.[/size]

[size=5]பல்வேறு இயக்கங்களை சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருடங்களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக் கனவுகளையும், உற்றார்- பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீரகாவியமானவர்கள் ஆவார்கள்.[/size]

[size=5]வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமனாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர்மாதம்.[/size]

[size=5]இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திர மன்றி உலகத்தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றிவருகின்றனர்.[/size]

[size=5]இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசைவிழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை. இம்மாத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது ஆனால், இலங்கை அரசா§கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது.[/size]

[size=5]துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞசகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறது.[/size]

[size=5]இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்,[/size]

[size=5]விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.[/size]

[size=5]ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ்திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவித்துள்ளார்.[/size]

http://news.lankasri.com/show-RUmqzATZObes2.html[/size]

[size=5](2ம் இணைப்பு)

கனடாவில் தீபாவளி கொண்டாட்டமாய் இளையராஜாவின் நிகழ்ச்சி.

நவம்பர் மாதத்தில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்ற எதிர்ப்பின் பின், தீபாவளிக் கொண்டாட்டமாக மாறியிருக்கின்றது இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி.

இது பற்றி மேலும் தெரியவருவது என்னவெனில்,

தீபாவளியை முன்னிட்டு, கனடாவில் வரும் நவம்பர் மூன்றாம் திகதி, ட்ரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பாக "எங்கேயும் எப்போதும் ராஜா" என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

கனடாவில் முதன்முறையாக இளையராஜா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை விஜய் TV வாங்கியுள்ளது. முதன்முறையாக நீயா நானா கோபிநாத் கனடாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கர்களுடன் இளையராஜா மேடையில் தோன்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினேஹா, பிரசன்னா, விவேக், கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தமிழகத்தின் முன்னணி பாடகர்கள் திரு. யேசுதாஸ், ஹரிஹரன், விஜய் யேசுதாஸ், மனோ, கார்த்திக், ஹரிசரண், சித்ரா, சாதனா சர்கம், மஞ்சரி, ரம்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இளையராஜா அவர்களின் வாரிசுகளான யுவன், கார்த்திக், பவதாரணி ஆகியோரும் தந்தையுடன் மேடையில் தோன்றுகின்றனர்.

தீபாவளிக்கு டொரோண்டோ நகரம் இளையராஜா இசையுடன் மிக பிரமாண்டமாய் தயாராகிறது.[/size]

[size=5]தீபாவளியை முன்னிட்டு, கனடாவில் வரும் நவம்பர் மூன்றாம் திகதி, ட்ரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பாக "எங்கேயும் எப்போதும் ராஜா" என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது.[/size]

யோவ் பார்த்து எழுதையா... இது என்ன மாவீரர் மாதத்தில் இல்லையா?

  • தொடங்கியவர்

[size=5]லிபரல் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருந்த இரண்டு பேர் விலகுகிறார்கள்.[/size]

[size=4]லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு ஜஸ்ரின் டரூடோ போட்டியிட முன்வந்த நிலையில், அந்தப் பதவிக்குப் போட்டியிடவிருந்த இரண்டு பேர், போட்டியில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளார்கள். [/size]

[size=4]நாளைய தினம், நிய+ பிறண்ஸ்விக்கில், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொமினிக் லெப்லாங் உடன் நிகழ்வொன்றில் ட்ரூடோ கலந்து கொள்வார். ட்ரூடோவின் நண்பரான லெப்லாங், போட்டியிடுவாரென பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோதிலும், ட்ரூடோவுக்கு அவர் ஆதரவை வெளியிடுவாரென தெரியவருகிறது.

மனிரோபாவைச் சேர்ந்த உதவி மருத்துவ பணியாளர் ஷேன் கெஸ்சியெர் என்பவரும் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். ட்ரூடோ இளம் சந்ததியைப் பிரதிபலிப்பதாகவும், அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இதேவேளை, நேற்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ட்ரூடோ தமது முடிவை விளக்கினார்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12919

  • தொடங்கியவர்

[size=5]நேரம் இருந்தால் இந்த பேட்டியை கேளுங்கள் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

டொரண்டோ சுற்றுலா பேருந்து ஒன்று அமெரிக்காவின் நியுஜெர்ஸியில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பயணிகள் பலர் காயம் அடைந்தனர்.

டொரண்டோவில் ரிஜிஸ்டர் செய்து, அமெரிக்காவின் நியூஜெர்ஸிக்கு சுற்றுலா ஒன்றிற்காக பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் 57 பயணிகள் பயணம் செய்தார்கள். பேருந்து, வடக்கு நியுஜெர்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையை விட்டு விலகி, அருகிலுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகளில் மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மூவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகளுக்கும் சிறிதும், பெரிதுமான காயங்கள் ஏற்பட்டதால், அனைவருக்கும் முதலுதவி மருத்துவம் செய்யப்பட்டது. ஆனால் யாருக்கும் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

இந்த விபத்து குறித்து நியுஜெர்ஸி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

http://www.thedipaar.com/news/news.php?id=52998

தமிழர்கள் நடாத்தும் பஸ் சேவையா ? மக் டூர்ஸ் ?

  • தொடங்கியவர்

[size=5]கனடாவில் ஒரு கோடி கையெழுத்து கேட்டு ....[/size]

http://www.araichchi.com/Eelam/Oru+Kodi.pdf

  • தொடங்கியவர்

[size=4]தற்போது ஆதிபகவன் திரைப்பட இசை வெளியீட்டிற்கான கனடா வந்துள்ள இயக்குனரும், தமிழ்ப் பற்றாளரும், ஈழத் தமிழர்களிற்காக சிறை சென்றவருமான அமீர் சுல்தான் அவர்கள், கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினர், தமிழார்வ அமைப்புக்கள் மற்றும் தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்களைத் சந்தித்துப் பேசும் நிகழ்வு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1 மணிக்கு ரொறன்ரோவில் ஏற்பாடு செய்துள்ளார்.[/size]

[size=4]குறுகிய கால ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இச் சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே ஒற்றுமைக்கான தேவை குறித்த கருத்துப் பகிர்வுகளை இயக்குனர் அமீர் மேற்கொள்ளவுள்ளார்.[/size]

[size=4]ஸ்காபரோ நகரில் இலக்கம் 3840 பிஞ்ச் வீதி கிழக்கில் அமைந்துள்ள மெற்றோபொலிரன் சந்திப்பில் இன்று மாலை 1 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு ஏற்பாடகியுள்ளது.[/size]

[size=4]இந்தச் சந்திப்புப் பற்றிய மேலதிக விபரங்கள் வேண்டியவர்கள் 905 903 7227 அல்லது 416 500 4545 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.[/size]

தமிழர்கள் நடாத்தும் பஸ் சேவையா ? மக் டூர்ஸ் ?

NJBK103-Overturned+Bus+TOP.jpg

[size=2]

NEW JERSEY[/size]

New Jersey bus crash raises questions for Toronto company

[size=2]

ANNA MEHLER PAPERNY

The Globe and Mail

Published Sunday, Oct. 07 2012, 10:23 PM EDT

Last updated Sunday, Oct. 07 2012, 10:38 PM EDT [/size] [size=3]

[size=3]

A company with the same address and ID number as the Toronto-based owner of a chartered bus that crashed on a New Jersey highway wasn’t authorized to operate in the United States, documents indicate.[/size][size=3]

The bus flipped, slid and crashed into a boggy embankment on an interstate exit ramp in Wayne, N.J., on Saturday morning. Twenty-three people were injured and at least three, pinned beneath windows, had to be extracted by emergency crews. None of the injuries were critical, police say. Most were out of hospital Sunday evening.[/size]

MORE RELATED TO THIS STORY

web-video-bus-06nw1.jpg

NJBK103-Overturned+Bus+TOP.jpg

[size=3]

New Jersey state police have been interviewing witnesses and inspecting the crash scene to determine the cause. They can’t say how long the investigation will take.[/size][size=3]

The bus left Toronto carrying 57 people, many of them Seventh Day Adventists heading to a convention in Brooklyn, N.Y. Police said the bus was rented by Cynthia’s Bus Tours in Toronto and belonged to AVM Max 2000 Chartered Bus Services, Inc. Phone calls to the business listing of Cynthia’s Bus Tours were not answered Sunday.[/size][size=3]

Documents from the U.S. Federal Motor Carrier Safety Administration indicate a company listed as AYM Max 2000 Chartered Services, Inc. was not authorized to operate in the U.S. The two companies share a phone number and Scarborough address, as well as a U.S. Department of Transportation identification number.[/size][size=3]

Transportation department records also cite AYM Max 2000 for multiple violations of fatigued driving rules over more than a year and a half.[/size][size=3]

Earlier this year, the documents indicate, a driver for the company was cited for working longer than the 11 hours permitted.[/size][size=3]

A company profile on Industry Canada’s website, last updated in July, lists Scarborough resident Vimalan Kailasapillai as AVM Max 2000’s CEO. AVM Max 2000 has “a proud 20 year rich heritage providing a comfortable charter bus rental experience,” the profile reads. It adds that the company provides trucks, utility trailers and RVs as well as chartered school and employee bus transportation.”[/size][size=3]

Mr. Kailasapillai did not return e-mails or phone calls to his business, home or cellphone numbers Sunday.[/size][size=3]

A spokesman for the Motor Carrier Safety Administration didn’t respond to questions by deadline Sunday evening. State police wouldn’t comment on the bus owner’s authorization status.[/size][size=3]

“Our responsibility is to investigate the bus accident,” said Sergeant Adam Grossman. “I’m not going to have that information about any type of federal laws or procedures.”[/size][size=3]

The bus’s 51-year-old driver, Brampton native Neville Larmond, told police he was cut off by another driver just before the crash.[/size][size=3]

“We’re going to investigate the driver’s statements. We’re going to investigate everything that happened that day,” Sgt. Grossman said. “I don’t think anything has been ruled out yet. … There has been no determination whether alcohol or drugs are part of this investigation.”[/size][size=3]

http://www.theglobeandmail.com/news/national/new-jersey-bus-crash-raises-questions-for-toronto-company/article4595812/[/size]

[/size]

  • தொடங்கியவர்

[size=5]ஒரு கோடி கையெழுத்து வேட்டை[/size]

[size=4]இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டியும், தங்கள் தாயக உரிமையைத் தீர்மானிக்க ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஒரு கோடி கையெழுத்து வேட்டை.[/size]

[size=4]தமிழகத்தில் தொடக்கப்பட்ட இப்புனித பயணத்தில் கனடியர்கள் வரும் ஒக்டோபர் 12ல் இணைகிறார்கள்.[/size]

[size=4]தமிழகத்தில் இருந்து தமிழின உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.[/size]

[size=4]Phone: 416-830-7703

Email: media@ncctcanada.ca[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்டோ உணவுத்திருவிழாவில் தமிழ் சமையல் கலைஞரின் சூப் வகைகள்.சென்ற வருடம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற உணவுத்திருவிழாவின் தொடர்ச்சியாக இவ்வருடமும் டொரண்டோவில் மிகச்சிறப்பாக உணவுத்திருவிழாவை கொண்டாட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.

இவ்வருடத்தின் உணவுத்திருவிழா, இம்மாதம் 21ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை Toronto’s Woodbine Park என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடக்கவிருக்கின்றது. இந்த உணவுத்திருவிழாவில் 120 நாடுகளைச் சேர்ந்த கைதேர்ந்த சமையல்கலை வல்லுனர்கள் தங்களின் ருசியான சமையலின் மூலம் பார்வையாளர்களை அசத்த இருக்கின்றார்கள். இந்த உணவுத்திருவிழாவிற்கு இலவச அனுமதி அளித்த போதிலும் $10 கொடுத்து மூன்று கிண்னங்கள் சூப் ஒன்றை பார்வையாளர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும்.

'இந்த உணவுத்திருவிழா நடக்கும் இடமான oronto’s Woodbine Park என்பது Lakeshore Blvd. E. and Coxwell Avenue அருகில் உள்ளது. இந்த விழா குறித்து மேல் விபரங்கள் தெரிந்து கொள்ள http://www.soupstock.ca/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Adelaide St. W., Queen St. W. and Dundas St. W. At his restaurants, ஆகிய மூன்று இடங்களில் Ravi Soups என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் Ravi Kanagarajah என்ற சமையல் வல்லுனரின் சூப் வகைகள் இந்த திருவிழாவில் இடம்பெற இருக்கின்றது. கனடிய தமிழர்கள் மத்தியில் சமையல் ருசிக்கு பெயர் பெற்ற இவரின் சூப் வகைகளை சுவைப்பதற்காகவே இந்த திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் சேரும் என்று திருவிழா ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையாகும்.http://www.thedipaar.com/news/news.php?id=53362

Edited by யாயினி

  • தொடங்கியவர்

[size=5]ஆப்கானிஸ்தானில் கனேடியப் படையினர் பணிபுரிய அனுமதி![/size]

[size=4]உறுப்பினர் பரிமாற்ற அடிப்படையில் நேச நாட்டுப் படைகளில் பணியாற்றும் கனேடியப் படையினர் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கனேடிய அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியதென்று தெரியவந்துள்ளது.

ஆறுக்கும் குறைவான கனேடியப் படையினர் அந்தப் பிராந்தியத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களில் அதிகமானவர்கள் வான்படையினர்.

கனேடியப் படையினர் கந்தகார் பிராந்தியத்தில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் வெளியேறியபோது, கனேடியப் படையினர் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

நேச நாடுகளின் படைகளில், உறுப்பினர் பரிமாற்றத்தின் அடிப்படையில் பணிபுரியும் கனேடியப் படையினர் அங்கு பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டுமென கனேடியப் படைகள் விடுத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மக்கேயும் ஆதரித்தாரென ஆவணங்கள் காட்டுகின்றன.

அரசின் நடவடிக்கையை என்டீபீ குறை கூறியது.[/size]

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12991

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொறன்டோ உணவுத்திருவிழாவில் தமிழ் சமையல் கலைஞரின் சூப் வகைகள்.சென்ற வருடம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற உணவுத்திருவிழாவின் தொடர்ச்சியாக இவ்வருடமும் டொரண்டோவில் மிகச்சிறப்பாக உணவுத்திருவிழாவை கொண்டாட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.

இவ்வருடத்தின் உணவுத்திருவிழா, இம்மாதம் 21ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை Toronto’s Woodbine Park என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடக்கவிருக்கின்றது. இந்த உணவுத்திருவிழாவில் 120 நாடுகளைச் சேர்ந்த கைதேர்ந்த சமையல்கலை வல்லுனர்கள் தங்களின் ருசியான சமையலின் மூலம் பார்வையாளர்களை அசத்த இருக்கின்றார்கள். இந்த உணவுத்திருவிழாவிற்கு இலவச அனுமதி அளித்த போதிலும் $10 கொடுத்து மூன்று கிண்னங்கள் சூப் ஒன்றை பார்வையாளர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும்.

'இந்த உணவுத்திருவிழா நடக்கும் இடமான oronto’s Woodbine Park என்பது Lakeshore Blvd. E. and Coxwell Avenue அருகில் உள்ளது. இந்த விழா குறித்து மேல் விபரங்கள் தெரிந்து கொள்ள http://www.soupstock.ca/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Adelaide St. W., Queen St. W. and Dundas St. W. At his restaurants, ஆகிய மூன்று இடங்களில் Ravi Soups என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் Ravi Kanagarajah என்ற சமையல் வல்லுனரின் சூப் வகைகள் இந்த திருவிழாவில் இடம்பெற இருக்கின்றது. கனடிய தமிழர்கள் மத்தியில் சமையல் ருசிக்கு பெயர் பெற்ற இவரின் சூப் வகைகளை சுவைப்பதற்காகவே இந்த திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் சேரும் என்று திருவிழா ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையாகும்.http://www.thedipaar.com/news/news.php?id=53362

அங்கை ஊரிலையெல்லாம் ....கடையிலை சமையல் வேலையெண்டால் மரியாதைகெட்டவேலை.......வெளிநாடுகளிலை சுப்பர் ஸ்ராருக்கு சமன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.