Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறாத ரணமாக ஈழப் பிரச்னை இன்னும் - பாதியில் முடிந்த பரிகார பூஜை: விரட்டி அடிக்கப்பட்ட ராஜபக்ச மைத்துனர் நடேசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thirukumaran-Nadesan170112_150.jpg

இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், இலங்கை அதிபர் இராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம் என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகையான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர்.

கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து அவர்களைப் பத்திரமாக இங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

http://youtu.be/jE4rdO4nOhA

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு, நடேசன் தனது உறவினர் ஒருவருடன் இராமேஸ்வரம் வந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கியிருக்கிறார். அன்று இரவு இராமநாதசுவாமி கோயிலுக்கு வழக்கமாக வரும் யாத்திரைவாசிகள் போலவே பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

Thirukumaran-Nadesan170112_371_002.jpg

கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடிய பின், சுவாமி தரிசனமும் செய்துவிட்டு நடேசன் தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார். பரிகார பூஜை செய்வதற்காக ஆனந்த் தீட்ஷித் என்ற புரோகிதரை நாடியுள்ளார். அடுத்த நாள் காலை, இராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள ஆனந்த் தீட்ஷித்தின் வீட்டிலேயே பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்குள் நடேசனின் வருகை எப்படியோ வெளியே பரவி விட்டது. இதையடுத்து, ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடேசனுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்காக, அதிகாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.

Thirukumaran-Nadesan170112_001.jpg

இதை எதிர்பார்க்காத பொலிஸார், நடேசனை சுற்றுச்சாலை வழியாக அக்கினி தீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றனர். கடலில் தீர்த்தமாடியதும் பூஜை நடக்க இருந்த ஆனந்த் தீட்ஷித்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் பொலிஸார்.

இந்தத் தகவல் போராட்டக்காரர்களுக்கும் எட்டியது. உடனே, அந்த வீட்டுக்கு முன் குவிந்த ம.தி.மு.க-வினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் ராஜபக்சவுக்கு எதிராகவும், நடேசனை நாட்டை விட்டு வெளியேறுமாறும் கோஷமிட்டனர்.

இதனைக் கண்டு அதிர்ந்த நடேசன், "நான் ராஜபக்சவின் தம்பியல்ல... ராஜபக்சவின் தம்பியல்ல..." எனத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த ஒருவர் நடேசனின் கையைப் பிடித்து இழுக்க, ஒருவர் அவர் மீது செருப்பைத் தூக்கி அடிக்க அந்த இடமே ரணகளமானது.

Thirukumaran-Nadesan170112_371_003.jpg

பூஜை நடத்திய ஆனந்த் தீட்ஷித்துக்கும் அடி விழுந்ததாகச் சொல்கிறார்கள். வீட்டின் மீது கல் எறிந்து கலவரம் செய்திருக்கிறார்கள்.

உடனே, பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைத்து, அங்கிருந்து நடேசனை பத்திரமாக அழைத்துச் சென்று திருச்சிக்கு காரில் ஏற்றி அனுப்பினார்கள்.

காரில் ஏறிய நடேசனிடம் பேசினோம். "பிரச்சினை ஒன்றும் நடக்கல்லை. நான் 20 ஆண்டுகளாக சாமி கும்பிட இங்க வந்துட்டுருக்கேன். என்ட குடும்பத்துக்காகத்தான் கோயிலுக்கு வந்தன். எனக்கும் ராஜபக்சவுக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்ல. அது தெரியாமப் போராட்டம் செய்த ஆட்கள் அரசியல் செய்யிறாங்க" என்றபடி கிளம்பினார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய ம.தி.மு.க. இளைஞர் அணி மாநிலத் துணை அமைப்பாளர் கராத்தே பழனிச்சாமி, "முதிய வயதில் சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய மத்திய அரசு, ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களுக்கு உச்சபட்சப் பாதுகாப்பு கொடுத்து ஊர் ஊராக அழைத்துச் செல்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்" என்றார்.

நடந்த தாக்குதல் குறித்து, புரோகிதர் ஆனந்த் தீட்ஷித்திடம் கேட்டோம். "போராட்டம் செஞ்சவங்க முதல்லயே எங்கிட்ட சொல்லியிருந்தா... நான் இந்த பூஜைக்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக கராத்தே பழனிச்சாமி, சின்னதம்பி, கண்.இளங்கோ உள்ளிட்ட ஏழு பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆறாத ரணமாக ஈழப் பிரச்னை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம்!

-ஜூனியர் விகடன்-

http://www.seithy.co...&language=tamil

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் ,

எனக்கும் ராஜபக்சவுக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்ல.

அப்ப நீங்க கல்யாணம் பண்ணி இருக்கிறது யாரை? இவனுக்கும் ராஜபக்சவுக்கும் சம்மந்தம் இல்லை என்டா என்னத்துக்கு இந்த பொலிஸார் பாதுகாப்பு??

நடந்த தாக்குதல் குறித்து, புரோகிதர் ஆனந்த் தீட்ஷித்திடம் கேட்டோம். "போராட்டம் செஞ்சவங்க முதல்லயே எங்கிட்ட சொல்லியிருந்தா... நான் இந்த பூஜைக்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்" என்றார்.

ஏன்டா அம்பி நோக்கு ராஜபக்ச என்ட பேர் இது வரைக்கும் தெரியாதோன்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கிராஸ் விடுவதற்கு முன்னரே அதெல்லாம் யோசித்து இருக்கணும்.. இப்ப குத்துதே குடையுதே என்றால் ஏதும் செய்ய இயலாது ..

அய்யரை லாக்கபுக்குல்ல விட்டு நாலு தட்டு தட்டி கேட்டால் உணமை எல்லாம் கக்கிடுவார்.. பூஜை யாருக்காக என்று? ராஜபக்சேக்கா அல்லது இவருக்கா என?

புத்தம் கரணம் தச்சாமி ....என்று அங்கிட்டு உள்ள சிங்கள கோயில்களில் தியானம் செய்ய பழகணும்

:mellow: :mellow:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

புரோகிதர் ஆனந்த் தீட்ஷித்திடம் கேட்டோம். "போராட்டம் செஞ்சவங்க முதல்லயே எங்கிட்ட சொல்லியிருந்தா... நான் இந்த பூஜைக்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்" என்றார்.

அட இந்த ஒன்றுமே அறியாத பச்சை குழந்தையை போட்டு அடிச்சுட்டாங்களே. இந்தாங்க இனிமேல் அரிசியும் காய்கறியும் அவருக்கு தானம் வேண்டாம். தினமும் ஒரு நியூஸ் பேப்பரை அவர் படலலைக்கு மேலாலை வீசி விட்டுடுங்க. எதுக்கும் தி.மு.கா வை பார்த்து அவருக்கு கிடைக்க வேண்டிய இனாம் டி.வியை யும் கொடுத்திடச்சொல்லுங்க.

சிங்களப் பயங்கரவாதிகளின் உறவுகளை அடித்துத் துரத்திய தமிழக வீரத் தமிழருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

19.01.12 மற்றவை

ராமேஸ்வரத்தில் தனது தந்தைக்கு ‘திதி’ கொடுப்பதற்காக வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனரை ம.தி.மு.க.வினரும், ‘நாம் தமிழர்’ இயக்கத்தினரும் ஓட ஓட விரட்டி நையப்புடைத்திருக்கிறார்கள். ‘நான் தமிழன்... நான் தமிழன்’ என்று இலங்கை மச்சான் அலறியதையும் பொருட்படுத்தாமல், பதம் பார்த்து ஆக்ரோஷத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்!

மகிந்த ராஜபக்ஷேவின் தங்கையான நிருபமா ராஜபக்ஷேவின் கணவர் திருக்குமரன் நடேசன். இவர் கடந்த 9-ம் தேதி மதியம் ராமேஸ்வரத்திற்கு வந்தார். அங்குள்ள ராயல் பார்க் ஓட்டலில் தங்கினார். அன்று மாலை அக்னி தீர்த்தத்துக்கு போலீஸ் வாகனத்தில் வி.ஐ.பி.யாக வந்து இறங்கி ஆனந்த நீராடினார். இதனை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

திருக்குமரனின் அடுத்தகட்ட பணிகளை ரகசியமாக உணர்வாளர்கள் கண்காணித்தனர். மறுநாள் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீராம் தீட்சித் என்ற அர்ச்சகரின் வீட்டில் நடேசன் பரிகார பூஜை நடத்தும் தகவலைக் கேள்விப்பட்டதுமே, காலை ஆறு மணிக்கெல்லாம் ம.தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி, ம.தி.மு.க. நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, சின்னத்தம்பி, ‘நாம் தமிழர்’ இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்.இளங்கோ ஆகியோர் தலைமையில் சுமார் 50 பேர் திரண்டனர்.

பெரும் புயலே வீசப்போகிறது என்பதை அறியாமல் அர்ச்சகர் ஸ்ரீராம் தீட்சித் இல்லத்தில் பூஜை சாமான்களோடு ஐக்கியமானார் திருக்குமரன் நடேசன். பின்னர் நிருபர்கள் வந்திருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு அர்ச்சகரின் வீட்டில் இருந்து வெளியே வந்து சிரித்தபடியே அரசியல்வாதிபோல் கையை அசைத்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய நடேசன், “நான் ஐந்தாவது முறையாக இங்கு வருகிறேன். நீங்கள் நினைப்பதுபோல் ராஜபக்ஷே எனக்கு மச்சானும் கிடையாது. நான் அவருக்கு மாமாவும் கிடையாது. அவர் தங்கையை நான் திருமணம் செய்யவில்லை. நான் தமிழன்தான்’’ என சிரித்தபடியே சொல்லிக்கொண்டிருக்க, எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு நடேசனைப் பதம் பார்த்தது. அதிர்ந்துபோனவர், அர்ச்சகர் வீட்டுக்குள் நுழைய... சீறிப் பாய்ந்த தமிழ் உணர்வாளர்கள் நடேசனை வெளியே இழுத்து செருப்பால் மாறி மாறி அடித்தனர். அடி தாங்க முடியாமல் அர்ச்சகரின் வீட்டுக்குள் ஓடினார் நடேசன். அப்படியும் விடாத உணர்வாளர்கள் வீட்டுக்குள்ளும் புகுந்து விரட்டி விரட்டி அடித்தனர்.

இந்தக் களேபரத்தைக் கேள்விப்பட்டு சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ராமேஸ்வரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சண்முகம், நடேசனை ‘எஸ்கார்டு’ வண்டிக்குள் திணித்துக்கொண்டு கூட்டத்தைக் கிழித்தபடி பறந்தார்.

இந்தச் சம்பவத்தால் ராமேஸ்வரம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்டிருந்த ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமியை சந்தித்துப் பேசினோம்.

“ஈழத்து மண்ணில் நமது ஈழத் தமிழ் மக்களுக்குச் செய்த போர்க்குற்றச் செயல்களுக்குப் பரிகாரம் தேடத்தான் அவர்கள் இங்கே பூஜை செய்ய வந்திருக்கிறார்கள். நமது மதிப்புக்குரிய தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்காத மத்திய அரசு, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது. இனியொரு முறை சிங்களவனோ அல்லது ராஜபக்ஷேவின் சொந்தங்களோ இங்கு கால் வைத்தால் எங்கள் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும்’’ என சீறிப் பாயும் தோட்டாக்களைப்போல் வார்த்தைகளைக் கொட்டினார்.

‘நாம் தமிழர்’ இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்.இளங்கோ நம்மிடம், ‘‘எருமைத் தோலைப்போல் மரத்துப்போய் கிடக்கிறது மத்திய அரசு. சவுக்கை பளார் பளார் என அடித்தும் அது பொருட்படுத்தவே இல்லை. அதனால்தான் இலங்கை மச்சானுக்கு இந்த அபிஷேகம் நடத்தினோம்’’ என்றார்.

இந்நிலையில், அர்ச்சகர் ஸ்ரீராம் தீட்சித் கொடுத்த புகாரின்பேரில் தமிழ் உணர்வாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ‘ரிமாண்ட்’ செய்திருக்கிறார்கள் போலீஸார். இதுகுறித்து, நம்மிடம் பேசிய எஸ்.ஐ. செந்தூர்பாண்டி, “அர்ச்சகர் கொடுத்த புகாரால் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடக்கிறது’’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னார்.

படங்கள் : சீனிவாசன்

13.jpg 19.01.12 மற்றவை

-குமுதம் ரிப்போட்டர்

அந்தாள் கன புஸ்டியாக போஸ்கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் அடித்தோம் விரட்டினோம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது பாவங்களைக் கழுவும் வலிமை, இராமேஸ்வரத்தில் உள்ள தெய்வத்திற்கு இல்லை!

வழக்கம் போல ஐயப்பனிடம், இவர்கள் கேட்டுப் பார்க்கலாம்! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.