Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி? புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் போன்றவர்களின் கருத்து உலக தரிசனத்தை கவனத்தில் கொண்டதாக இல்லை. விடுதலைப் போராட்ட வரலாறுகள் எங்கனும்.. துரோகமும்.. காட்டிக் கொடுப்பும்.. விலை போதலும்.. இருந்தே வந்துள்ளன. அது எமது இனத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. அதேபோல் வர்க்க.. பால் வேறுபாடுகள் எமக்குரிய ஒன்று மட்டுமல்ல. உலகெங்கும் அவை போராட்டங்களில்.. அரசியலில் இன்றும் செல்வாக்குச் செய்து கொண்டு தான் உள்ளன. ஆக.. தவறுகளுக்கான முழுக் காரணங்களையும் சமூகத்தின் மீது போடுவது முட்டாள் தனமான ஒன்று. அதுமட்டுமன்றி 100% சமூகம் போராடி வென்ற போராட்டங்கள் என்று ஒன்றில்லை இவ்வுலகில்..! கூடிய தொகை மக்களின் ஆதரவோடு வெல்லப்பட்ட போராட்டங்களே இருந்துள்ளன.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை.. அவர்களின் தலைமை நல்ல தியாக உணர்வுள்ள போராளிகளை வளர்த்தெடுத்துக் கொண்டது. சரியான இலட்சியங்களை வகுத்துக் கொண்டது. விடுதலைப்புலிகள்.. எந்த ஒரு ஆட்கள் மீதும்.. குழுக்கள் மீதும் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை.. மாறாக.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சூழலை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்ததை அவர்கள் உணரச் செய்தும்.. தவறுகள் தொடர்ந்ததன் பட்சத்தில் போராட்ட இலட்சிய உறுதிப் பாடு வேண்டி எடுத்த நடவடிக்கைகளே அதிகம்.

சிலர் இன்றும் குழம்பிக் கொள்கின்றனர்.. விடுதலைப்புலிகள் தோற்றது... ஈபிடிபியாலும்.. கருணாவாலும்.. புளொட்டாலும்... என்று. அது தவறு. இந்த குழுக்களால் விடுதலைப்புலிகள் தோற்றது என்பது சரியான காரணமல்ல. காரணம் இந்தக் குழுக்கள் எவையும் சுய இயங்கு நிலைக்குரியவை அல்ல. இவை பிரதான எஜமானர்களின் கருவிகள் மட்டுமே. பிரதான எஜமானர்களின் ஒரு கருவியாக இவர்கள் பாவிக்கப்பட்டார்களே அன்றி.. அதில் அவர்கள் தங்கள் வாழ்வியல் ஆதாயத்தை தக்க வைத்துக் கொண்டார்களே அன்றி.. அவர்களின் நோக்கம் மக்களின் விடுதலை என்பது தொடக்கம் முதல் இன்று வரை இல்லை..! இதுதான் யதார்த்தமும் கூட.

அப்போ எங்கே தவறு நிகழ்ந்தது என்று பார்த்தால்...

விடுதலைப்புலிகள் மக்கள் விருப்புள்ள போராட்டத்தை இதய சுத்தியோடு தம் தலைமையில்.. முன்னெடுக்க முன் வந்த போது.. இதர தமிழ் தலைமைகள்.. அதனை ஏற்றுக் கொள்ள முன் வராமையே.

அமிர்தலிங்கத்திற்கு விடுதலைப்புலிகள் பொடியளா இருந்து போராடியதில் நக்கல்.. பிரச்சனை. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் போராட அமிர்தலிங்கம் அந்த இளைஞர்களோடு கலந்து பேசி தானும் பிறரும்.. அரசியற் தளத்தில் அந்த இளைஞர்களின் மக்களின் எதிர்பார்ப்பை வேண்டி போராட முயன்றிருக்கலாம். அது வட்டுக்கோட்டை தீர்மானத்தோடு தேர்தல் வெற்றியோடு தொலைந்து போனது தான் போச்சு.. அப்புறம் மீளவே இல்லை.

அதேபோல் தான்.. பின்னரும்.. வந்த தலைமைகள்.. ஒத்துப் போகக் கூடிய சூழல்களை தாமாகவும் உருவாக்கவில்லை.. வந்த சூழல்களை பயன்படுத்தவும் இல்லை. மாறாக.. எதிரிகளுக்கு உதவி என்றாலும்.. மற்றவனை விழுத்தனும்.. சொந்த இனம் அழிந்தாலும் பறுவாயில்லை.. புலிகள் தோற்கனும் என்ற ஒரு எண்ணப்பாட்டை வளர்த்தெடுத்தன் விளைவு.. எமது போராட்டம் உறுதியான பயங்கரவாத முத்திரையை காவிக் கொண்டது.

1989 இல் புலிகள்.. பிரேமதாசவோடு இணைந்தது.. தமிழ் குழுக்களை வஞ்சகம் தீர்க்க அல்ல. போராட்டத்தை அழிக்க முயன்று கொண்டிருந்த உலகில் 4வது பெரிய வல்லரசான இந்தியாவை தாம் தனித்து வெல்ல முடியாது என்ற பட்சத்தில்.. இதர தமிழ் குழுக்கள்.. இந்தியச் சதிவலையை உணராமல்.. அல்லது உணர்ந்தும்.. போராட்டத்தை நசுக்க துணைபோவதனை எண்ணி.. அவர்களோடு ஒன்றிணைய முடியாத நிலையில் தான்.

ஈராக்கில் இப்போதும் தற்கொலை தாக்குதல் நடக்கிறது.. ஆப்கானிஸ்தானில் நடக்கிறது.. அமெரிக்காவால் எதுவுமே புடுங்க முடியவில்லை. காரணம்.. அங்கு மத ரீதியில் அமெரிக்கர்களுக்கு எதிரான எண்ணப்பாடு மக்களிடையே ஒரு ஒற்றுமையான செயற்பாட்டை தோற்றுவித்துள்ளமையே. அந்த ஒற்றுமையை கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனால் எமது போராட்டத்தில் அப்படி ஒரு நிலை இருக்கவில்லை. இருந்திருந்தால்.. சீனா என்ன.. இந்தியா கூட எம்மை கண்டு அஞ்சி இருக்கும்.

எம்மிடம் இருந்ததோ ஒன்றே ஒன்று தான்.. புலிகள் தமிழீழம் வெல்லக் கூடாது.. அதற்கு விலையாக. சிங்களவன்.. எம்மை ஆளலாம்.. இந்தியா எம்மை அடிமைப்படுத்தலாம்.. அமெரிக்கன் பயங்கரவாதி என்று சொல்லி அடிக்கலாம். இந்த எண்ணப்பாடு என்று எமக்குள் முளைத்துதோ அன்றே நாம் எமது போராட்டத்தில் தோற்றுவிட்டோம். இதுதான் எமது இனத்தின் போராட்டம் பலவீனம் அடையவும்.. இதர இனங்கள் வெற்றி பெறவும் இருந்த முக்கிய காரணம்.

புலிகள் வலுவான வெற்றி பெறக் கூடிய நிலைக்கு எமது போராட்ட மையக் கருத்தை செயலுருப் படுத்திய போதும் கூட.. மாற்றுக் குழுக்களும் சரி.. மாற்று அரசியல் தலைமைகளும் சரி.. குறுக்கால இழுத்ததை தவிர வேறு உருப்படியாகச் செய்தது என்ன..??! புலிகளை அழிக்க கூடி நின்றதை தவிர.. தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் சிந்ததித்தது எதனை..??!

அடிப்படையில் எமது போராட்ட ஆரம்பம் தொடங்கி அமிர்தலிங்கம் கூட்டம் ஆரம்பித்து வைத்த குறுக்கால இழுத்தல்களே.. முள்ளிவாய்க்கால் வரை எதிரிக்கு எம்மை அழிக்க உதவி நின்ன்றது. இன்னும் பின்னோக்கிப் போனால் சோல்பெரிய யாப்பில்.. சேர் பொன் கள் செய்த குறுக்கால இழுப்புக்களே.. கடைசியில் எம்மை இந்த நிர்க்கதிக்கு ஆக்கியுள்ளது.

இது எதனால்.. எம்மிடையே கருத்தொற்றுமைக்கான சரியான புரிந்துணர்வுள்ள தலைமைகளும்.. சமூக வழிகாட்டல்களும் இல்லாமையே அன்றி வேறல்ல. இதற்கு ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பாக முடியாது. காரணம்.. ஒரு தலைமையின் கீழ் உலகமே வியக்கத்தக்க விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் என்ற ஒரு இளைஞன் இதே சமூகத்தில் இருந்து வந்து தான் கொண்டு நடத்தினான். அவரால் முடிந்தது.. ஏன் மற்றவர்களால் முடியாது..???!

இன்னொரு முக்கிய பலவீனம்.. எம்மவர்களிடையே இடைவெளிகளை நிரப்பி.. இலட்சியத்தை அடைவதில் சரியான விவேகமான.. வேகமான செயற்பாடில்லாமை.

அல்குவைடாவை எடுத்துப் பாருங்கள்.. அதன் தலைமை அழிக்கப்பட்ட நிலையிலும்.. அடுத்த தலைமையை ஏற்றுக் கொண்டு.. இலக்கு நோக்கி அவர்கள் போகிறார்கள். அல்ஜீரிய.. பிரஞ்சு காலணித்துவத்துக்கான போராட்டம் வெற்றி பெறவும் இதே தன்மை கையாளப்பட்டது. பிரஞ்சு அரசு தலைமையை அழிக்க நினைக்க.. போராளிகளோ.. தலைமையை ஒரு குடிசையில் வாழ்ந்த குடும்பத்திடம் ஒப்படைத்து போராட கிளர்ந்தனர். ஆனால்.. எம்மில்.. இன்று எத்தனை பேர்.. எத்தனை தலைமைகள் இதய சுத்தியோடு விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர். எவருமே இல்லை. கூட்டமைப்புக் கூட தமிழீழத்தை கைவிட்டு விட்டதாகச் சொல்லித்தான் பேச்சில் ஈடுபடுகிறது. இப்படியான பலவீனமான சந்தர்ப்பவாத தலைமைகள் உள்ள ஒரு சமூகம் உலகப் பலத்தின் முன் போராடி வெல்லுதல் என்பது நடக்க முடியாத காரியம்.

எமது இனம் விடுதலை பெற வேண்டின்.. சரியான தலைமைத்துவப் பண்புகளையும்.. இலட்சிய உறுதியையும்.. இனம் சார்ந்த ஒருமைப்பாட்டை எப்போதும் கட்டிக்காக்கும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிங்களவர்கள் ஆயிரம் தான் அரசியல் பிளவுகளைக் கொண்டிருந்தாலும்.. தமிழர்களை எதிர்ப்பதில்.. சரியான திசையிலேயே செல்கின்றனர்.ஒரு சிங்களத் தலைமை செய்ய தவறியதை... அல்லது செய்வதில் தோற்றதை அடுத்த தலைமை பிரதியீடு செய்து நிரப்பி விடும். சிங்களவர்கள் 35 வருடம் நாம் போராட அவர்கள் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்க்கவில்லை. அவர்களும் பதிலுக்கு உயிர் விலை கொடுத்து எமக்கு எதிராகப் போராடினார்கள் என்பதை எம்மில் பலர் உணர்வதில்லை. எந்த சிங்களவனாவது தனது இனம் அழிகிறது என்று ஒப்பாரி வைச்சிருக்கிறானா.. இல்லை. மாறாக.. தன் இனம் எப்படியாவது வெல்ல வேண்டும்.. இந்த தேசத்தை சிங்கள பெளத்த தேசமாக நிறுவ வேண்டும் என்பதில் அவர்கள் பிரிவினை காட்டவில்லை.

ஜே ஆரில் இருந்து மகிந்த வரை.. எத்தனையோ சிங்களத் தலைமைகள்.. அத்தனையும் தமிழர்களுக்கு அடித்திருக்கின்றன. சிங்களவர்கள் ஓரிரவில்.. தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவில்லை. பல கட்டங்களாகவே அவர்களின் வெற்றிகளை தோல்விகள் மத்தியிலும் பெற்று உறுதிப்படுத்தி வந்துள்ளனர்.

அவர்கள் எல்லோருக்குள்ளும் இருந்த ஒரே ஒற்றுமை.. தமிழர்களை வென்று இந்த தேசத்தை சிங்கள பெளத்த தேசமாக தம் இன இருப்புக்கான அடையாளமாக இந்த உலகில் நிறுவ வேண்டும் என்பதே. அந்த ஒற்றுமை எம்மிடம் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் சிங்களவர்களிடம் இருந்த அதனையே எம்மிடம் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாமோ.. சிங்களவனுக்கு எம்மையே காட்டிக் கொடுத்து.. உலகிற்கும் எம் பலவீனங்களைக் காட்டிக் கொடுத்து.. எம்மை நாமே அழித்துக் கொண்டோம். காரணம்... வகுத்த இலட்சியத்தோடு நாம் எல்லோரும் ஒற்றுமையாக நிற்கக் கூட விரும்பாமையே. இதுதான் எமது இனத்தின் அழிவிற்கும்.. அடிமை வாழ்விற்கும் முக்கிய காரணி. இதனைக் களையாமல்.. மாற்றுக் கருத்தென்று.. ஜனநாயகம் என்று பேசி எம்மை நாமே ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்க முடியுமே அன்றி.. விடுதலை பெற்ற மக்கள் இனமாக நாம் இந்த உலகில் வாழ முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 124
  • Views 10.2k
  • Created
  • Last Reply

முதலாவதாக இந்த கேள்விக்கு பதில் எழுதுவதற்கு புலத்தில் இருக்கும் எமக்கு தகுதி இல்லை என்பது எனது கருத்து...

இந்த கேள்வி புலிகளையும் துணை இராணுவக்குழுவையும் சம தட்டில் வையுங்கோ என்ற மாதிரி இருக்கு....அரச துணைஇராணுவக்குழுவிடம் அப்படி என்ன போராட்ட வடிவம் இருந்தது இருக்கு என நீங்கள் நினைக்கிறீங்கள்

அப்போ புலத்தில் இருந்தவர் எப்படி இப்படி ஒரு தலைப்பை தொடங்கலாம்? :D

சிங்களவனுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் இந்தியன் எதிரியானதும் சிங்களவனோடு சேர்ந்து அவனிடம் ஆயுதம் வாங்கி இந்தியனை வெளியேற்றியது சரி எனில் ???????? சிங்களவனுக்கு எதிராக போராட போன மாற்று இயக்கங்களும் தங்களை( இலங்கை அரசு கூட தடைசெய்ய முன்) புலிகளால் தடைசெய்து படுகொலைகள் செய்த போது சொங்களவனோடு சேர்ந்து புலிகளை அழிக்க நினைத்தது தவறாக அவர்களுக்கும் தெரிந்து இருக்காது தானே??????

அமிதர்லிங்கம் துரோகி

உமாமாகேஸ்வரன் துரோகி

சபாரத்தினம் துரோகி

நீலன் திருச் செல்வம் துரோகி

அவன் துரோகி இவன் துரோகி

ராஜீவு துரோகி

ஜெயலலிதா துரோகி

ஜோர்ஜ் புஸ் துரோகி

டொனி ப்ளையர் துரோகி

ஹஸ்பர் துரோகி

எரிக் சொல்கையும் துரோகி

மாத்தையாவும், கருனாவும் ,பிள்ளையானும் ,கேபியும் துரோகி எனில் இந்த துரோகிகளை வளர்த்து விட்டவர்கள் தான் அவர்களிடம் இருந்து தமிழ்மக்களை கப்பாற்ற வேண்டும்.

ஏன் எனில் மேலே சொன்னவர்கள் யாரும் தனித் தமிழீழம் வாங்கி தருவோம் என்று சொன்னதும் இல்லை சொல்ல போவதும் இல்லை சொல்லுவதுக்கு சிலர் உயிரோடும் இல்லை ஆனால் ???????????????? காசுக்கு கொடுத்த மரியாதையை மக்களின் என்னங்களுக்கு கொடுத்து இருக்கலாம்.

மக்களுக்காக தொடங்கிய போராட்டம் இருதியில் மக்களில் விருப்பம் என்ன என்றே தெரியாது முடிந்து விட்டது.

sukan..! realy great..!

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் யாரை விமர்சனம் செய்ய..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

எப்படியப்பா போராட்டத்தில் சாதி அழியும்? அடக்கி வைக்க பட்டது.

மதிவதனி வேளான்மை இனத்தை சேர்ந்ததால் காதல் வந்தது அதுவே சீவல் செய்யும் ஒருவனின் மகளாக இருந்து இருந்தால்? மண்டையிலோ? இல்லை 5வருடத்துக்கு மேல் அமைப்பில் இருந்தவர்கள் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் வந்து இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் இந்தியன் எதிரியானதும் சிங்களவனோடு சேர்ந்து அவனிடம் ஆயுதம் வாங்கி இந்தியனை வெளியேற்றியது சரி எனில் ???????? சிங்களவனுக்கு எதிராக போராட போன மாற்று இயக்கங்களும் தங்களை( இலங்கை அரசு கூட தடைசெய்ய முன்) புலிகளால் தடைசெய்து படுகொலைகள் செய்த போது சொங்களவனோடு சேர்ந்து புலிகளை அழிக்க நினைத்தது தவறாக அவர்களுக்கும் தெரிந்து இருக்காது தானே??????

அமிதர்லிங்கம் துரோகி

உமாமாகேஸ்வரன் துரோகி

சபாரத்தினம் துரோகி

நீலன் திருச் செல்வம் துரோகி

அவன் துரோகி இவன் துரோகி

ராஜீவு துரோகி

ஜெயலலிதா துரோகி

ஜோர்ஜ் புஸ் துரோகி

டொனி ப்ளையர் துரோகி

ஹஸ்பர் துரோகி

எரிக் சொல்கையும் துரோகி

மாத்தையாவும், கருனாவும் ,பிள்ளையானும் ,கேபியும் துரோகி எனில் இந்த துரோகிகளை வளர்த்து விட்டவர்கள் தான் அவர்களிடம் இருந்து தமிழ்மக்களை கப்பாற்ற வேண்டும்.

ஏன் எனில் மேலே சொன்னவர்கள் யாரும் தனித் தமிழீழம் வாங்கி தருவோம் என்று சொன்னதும் இல்லை சொல்ல போவதும் இல்லை சொல்லுவதுக்கு சிலர் உயிரோடும் இல்லை ஆனால் ???????????????? காசுக்கு கொடுத்த மரியாதையை மக்களின் என்னங்களுக்கு கொடுத்து இருக்கலாம்.

மக்களுக்காக தொடங்கிய போராட்டம் இருதியில் மக்களில் விருப்பம் என்ன என்றே தெரியாது முடிந்து விட்டது.

சரி.. நீங்கள் பட்டியல் இட்ட எவருமே துரோகிகள் அல்ல... என்று வைத்துக் கொண்டு.. நீங்கள் அதே பட்டியலில்.. எமக்குச் சொல்லுங்கள்.. 1978 இலும் அதற்கு முன்னும் மக்கள் அரசியல் தலைமைகளுக்கு ஆணையாக வழங்கிய தமிழீழத் தனியரசை அடைய இவர்கள் என்ன செய்தார்கள்... எப்போது.. எந்த வடிவில் அது தமிழீழத்தை அடைய மக்களுக்கு உதவி இருக்கும் என்று..??!

அதன் பின் தீர்மானிப்போம்.. மக்கள் இவர்களை துரோகிகள் என்பது சரியா பிழையா என்று.

மேலும்.. புலிகள் 1986 இல் அந்த அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைந்த காரணங்கள் என்ன.. அந்த நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டும் அவர்கள் விடுதலைப் புலிகளோடு இணங்கி.. போராடி தமிழீழம் பெற்றுத் தந்திருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

புலிகளும் தமிழ் மக்களின் பிள்ளைகள் தான். அவர்களை கடத்திக் கொண்டு போய் சுடவும்.. மறைச்சு வைக்கவும் நீங்கள் அனுமதிக்க முடியும் என்றால் ஏன்.. புலிகள் தங்களை மக்கள் பாதுகாக்க மக்களின் இலட்சியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியாது..???! அதில் என்ன தவறு.

நீங்கள் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்லி ஆயுதம் தூக்கினீர்கள். ஆளையாள் அடிபட்டு சாகப் போறம் என்று சொல்லியா. அல்லது சிங்களவனோடும்.. இந்தியனோடும் சேர்ந்து நின்று தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து மக்களை அழிக்கப் போறம் என்றா..! இல்லையே தமிழீழம் அமைக்கப் போறம் என்று தானே சொல்லி காசும்.. ஆயுதமும் மக்களிடம் வாங்கினனீங்கள்..!

சும்மா வந்து அவர் துரோகி இல்ல.. இவர் நல்லவர் என்று நம் சிற்றறிவுகளுக்கு ஏற்ப.. பட்டமளிப்பதால் எமக்கு எமது இனத்திற்கு எதுவுமே ஆகப் போவதில்லை. அது தவறு செய்தவர்கள்.. செய்பவர்கள் தங்கள் பிழைப்பை பார்த்துக் கொண்டு போகவே வழி சமைக்கும். மக்களை ஏமாற்றி சீவனம் செய்த தலைமைகளுக்கு நீங்கள் சிலையும் வையுங்கள். வைக்க முதல் ஏன் எதற்கு என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.

யாழ்ப்பாணம் சிங்கள ஆளுகைக்குள் வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. அங்கு எவரும் உமாமகேஸ்வரனுக்கோ.. சிறிசபாரட்னத்திறோ.. அமிர்தலிங்கத்திற்கோ கோவில் கட்டிக் கும்பிடவில்லை. மாறாக மக்கள் திலீபனுக்கு அமைத்துக் கும்பிட்டார்கள்.. ஏன்..??????! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சரி.. நீங்கள் பட்டியல் இட்ட எவருமே துரோகிகள் அல்ல... என்று வைத்துக் கொண்டு.. நீங்கள் அதே பட்டியலில்.. எமக்குச் சொல்லுங்கள்.. 1978 இலும் அதற்கு முன்னும் மக்கள் அரசியல் தலைமைகளுக்கு ஆணையாக வழங்கிய தமிழீழத் தனியரசை அடைய இவர்கள் என்ன செய்தார்கள்... எப்போது.. எந்த வடிவில் அது தமிழீழத்தை அடைய மக்களுக்கு உதவி இருக்கும் என்று..??!

அதன் பின் தீர்மானிப்போம்.. மக்கள் இவர்களை துரோகிகள் என்பது சரியா பிழையா என்று.

சும்மா வந்து அவர் துரோகி இல்ல.. இவர் நல்லவர் என்று நம் சிற்றறிவுகளுக்கு ஏற்ப.. பட்டமளிப்பதால் எமக்கு எமது இனத்திற்கு எதுவுமே ஆகப் போவதில்லை. அது தவறு செய்தவர்கள்.. செய்பவர்கள் தங்கள் பிழைப்பை பார்த்துக் கொண்டு போகவே வழி சமைக்கும். மக்களை ஏமாற்றி சீவனம் செய்த தலைமைகளுக்கு நீங்கள் சிலையும் வையுங்கள். வைக்க முதல் ஏன் எதற்கு என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள். :):icon_idea:

ஜயோ அண்ணை துரோகிகளை விடுங்கோ.

நிலன் திருச்செல்வத்தின் கொலைக்கும் இறுதி நேரம் அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கினதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு அதை கண்டு பிடிச்சியல் என்றால் உந்த துரோகிகளுக்கு மேலான துரோகத்தை கண்டுபிடிசுபோடுவியல்.

யாழ்ப்பாணம் சிங்கள ஆளுகைக்குள் வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. அங்கு எவரும் உமாமகேஸ்வரனுக்கோ.. சிறிசபாரட்னத்திறோ.. அமிர்தலிங்கத்திற்கோ கோவில் கட்டிக் கும்பிடவில்லை. மாறாக மக்கள் திலீபனுக்கு அமைத்துக் கும்பிட்டார்கள்.. ஏன்..??????

அது அண்ணை கோவில் கட்டும் போது சிங்கள இராணுவம் நலவனாக இருந்தான், கட்டிய கோவிலை உடைக்கும் போது மக்கள் மவுனமாக இருந்தான் ஆனால்

கோவனத்துக்கு வழியை பார்த்து போட்டு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டால் தப்பில்லை ஆனால் கோவணமும் இல்லாமல் கொட்டை தெரியா இருந்து கொண்டு கோவில் கட்டினால் இப்படி தான் மூக்கு உடைபடனும்( திலிபன் கேட்டாரா கோவில் கட்ட சொல்லி இல்லை கோவிலை கட்டி போட்டு அதை உடைத்து அவமானபட்டுதச் சொல்லி?

மேலும்.. புலிகள் 1986 இல் அந்த அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைந்த காரணங்கள் என்ன.. அந்த நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டும் அவர்கள் விடுதலைப் புலிகளோடு இணங்கி.. போராடி தமிழீழம் பெற்றுத் தந்திருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

ஊரில் சில விசர் நாய் சும்மா போறவனை கடிக்குமாம் ஏன் என்றால் அதுக்கு பயம் போறவன் தன்னை கடிச்சு போடுவான் என்று.

புலிகளும் தமிழ் மக்களின் பிள்ளைகள் தான். அவர்களை கடத்திக் கொண்டு போய் சுடவும்.. மறைச்சு வைக்கவும் நீங்கள் அனுமதிக்க முடியும் என்றால் ஏன்.. புலிகள் தங்களை மக்கள் பாதுகாக்க மக்களின் இலட்சியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியாது..???! அதில் என்ன தவறு.

சிங்களவனோடு சண்டை பேசுவார்த்தை மீண்டும் சண்டை மீண்டும் பேச்சுவார்த்தை மீண்டும் சண்டை மீண்டும் பேசுவார்த்தை ஆனால் போராட போன அடிமட்ட உறுப்பினர்களின் சுடுபாடுகள் கொலைகளை தலைவர்கள் பேசி தீர்க்காது அதை அடக்கி ஆள நினைத்ததன் விளைவே இந்த சுட்ட பின் துரோகி பட்டமளிப்பு விழா...

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ அண்ணை துரோகிகளை விடுங்கோ.

நிலன் திருச்செல்வத்தின் கொலைக்கும் இறுதி நேரம் அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கினதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு அதை கண்டு பிடிச்சியல் என்றால் உந்த துரோகிகளுக்கு மேலான துரோகத்தை கண்டுபிடிசுபோடுவியல்.

உங்கள் கற்பனைக்கு எல்லாம் வைக்கிற குற்றச்சாட்டுக்களுக்கு தலைவரும்.. அன்ரன் பாலசிங்கமும்.. வந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நீலன் திருச்செல்வன்.. கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார்..! அச்சம்பவத்தை இன்னும் விசாரிக்கும்.. சிங்கள அரசு தான்.. அந்தக் கொலைக்கான பின்னணிகளை ஆராயனும். மக்களுக்குச் சொல்லனும். அவனே கோப்புகளை மூடிவிட்டு குறட்ட விடுறான்.

ஒன்று தெரியுமா.. சந்திரிக்காவின்.. தீர்வுப் பொதியில் பங்கேற்ற.. அஸ்ரப்பும் இல்லை. நீலனும் இல்லை. அஸ்ரப்பை கொன்றதும்.. அன்ரன் என்று நீங்கள் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் உண்மை.. அது அல்ல. அதேபோல்.. நீலனை.. யார் கொன்றார்களோ..???! அது அல்ல எம் கேள்வி.

நீலனின் செயற்பாடுகள்.. எப்படி.. எமது மக்களின் விடுதலையை சாத்தியப்படுத்தி இருக்கும் என்பதுதான் கேள்வி..??! அதற்குப் பதில் அளிக்க முடிந்தால் முன் வையுங்கள். இல்லை சும்மா பலவீனமான உங்கள் கற்பனை அலட்டல்களால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை..!

நீங்கள் கத்திவிடுவதால் மக்கள் விருப்புக்கு எதிராக செயற்பட்டவர்களாக மக்கள் கருதுபவர்களை.. புனிதர்கள் ஆக முடியாது. அவர்கள் மக்களைப் பொறுத்தவரை துரோகிகள் தான். அவர்கள் மக்கள் விருப்புக்கு எதிராக செயற்படவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால்.. அதனை மக்கள் ஏற்கும் வகையில் சொல்லுங்கள்..! அதன் பின் மக்கள் தம் முடிவை மாற்றுவதா விடுவதா என்று தீர்மானிப்பார்கள். அதைவிடுத்து உங்கள் கற்பனை கட்டுக்கதைகளை எல்லாம் மக்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதன் அடிப்படைகளை துரோகிகளை தியாகிகளாக்க வேண்டிய தேவையும் மக்களுக்கு இல்லை.

நீங்கள் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்லி ஆயுதம் தூக்கினீர்கள். ஆளையாள் அடிபட்டு சாகப் போறம் என்று சொல்லியா. அல்லது சிங்களவனோடும்.. இந்தியனோடும் சேர்ந்து நின்று தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து மக்களை அழிக்கப் போறம் என்றா..! இல்லையே தமிழீழம் அமைக்கப் போறம் என்று தானே சொல்லி காசும்.. ஆயுதமும் மக்களிடம் வாங்கினனீங்கள்..!

சரி அண்ணை அந்த மெண்டல் கூட்டத்தை விட்ங்கோ.. 90 ஆண்டில் இருந்து எந்த ஒரு கட்டாகாலி நாய்களின் இம்சையும் இல்லாது போனது போராட்டம் எங்கை சறுக்கினது? அதுக்கும் இப்ப அழிந்ததுக்கும் என்ன தொடர்பு? ஏன் 20 வருடம் இடவெளியில் நண்பர்களை உருவாக்க முடியவில்லை மாறாக எதிரிகளின் என்னிக்கை கூடியது தான் மிச்சம்....

  • கருத்துக்கள உறவுகள்

அது அண்ணை கோவில் கட்டும் போது சிங்கள இராணுவம் நலவனாக இருந்தான், கட்டிய கோவிலை உடைக்கும் போது மக்கள் மவுனமாக இருந்தான் ஆனால்

கோவனத்துக்கு வழியை பார்த்து போட்டு பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டால் தப்பில்லை ஆனால் கோவணமும் இல்லாமல் கொட்டை தெரியா இருந்து கொண்டு கோவில் கட்டினால் இப்படி தான் மூக்கு உடைபடனும்( திலிபன் கேட்டாரா கோவில் கட்ட சொல்லி இல்லை கோவிலை கட்டி போட்டு அதை உடைத்து அவமானபட்டுதச் சொல்லி?

ஊரில் சில விசர் நாய் சும்மா போறவனை கடிக்குமாம் ஏன் என்றால் அதுக்கு பயம் போறவன் தன்னை கடிச்சு போடுவான் என்று.

சிங்களவனோடு சண்டை பேசுவார்த்தை மீண்டும் சண்டை மீண்டும் பேச்சுவார்த்தை மீண்டும் சண்டை மீண்டும் பேசுவார்த்தை ஆனால் போராட போன அடிமட்ட உறுப்பினர்களின் சுடுபாடுகள் கொலைகளை தலைவர்கள் பேசி தீர்க்காது அதை அடக்கி ஆள நினைத்ததன் விளைவே இந்த சுட்ட பின் துரோகி பட்டமளிப்பு விழா...

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உங்களின் சொந்தக் கற்பனை... அல்லது மனப் பிராந்தியின் விளைவு. இது அல்ல களத்தின் உண்மை. களத்தின் உண்மையை மக்கள் நன்கறித்த படியால் தான் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. யார் துரோகிகள்.. யார் தியாகிகள் என்பதில்.

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். உங்கள் கற்பனையை இங்கு காட்டச் சொல்லவில்லை. நானும் என் கற்பனைக்கு பதில் எழுதுவிட்டுப் போகலாம்.

மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.. நீங்கள் மேலே பட்டியலிட்டவர்கள் எவ்வாறு எந்த வடிவில் செயற்பட்டு மக்கள் பொது விருப்பான தமிழீழத்தை அடைய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தனர். எப்படி அவர்கள் மக்களின் விருப்பை சாத்தியப்படுத்தி இருப்பர்..??! இதற்கு பதில் இருந்தால் அளியுங்கள். இல்ல நடையைக் கட்டுங்கள்..!

நீலன் திருச்செல்வன்.. கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார்..! அச்சம்பவத்தை இன்னும் விசாரிக்கும்.. சிங்கள அரசு தான்.. அந்தக் கொலைக்கான பின்னணிகளை ஆராயனும். மக்களுக்குச் சொல்லனும். அவனே கோப்புகளை மூடிவிட்டு குறட்ட விடுறான்.

ஒன்று தெரியுமா.. சந்திரிக்காவின்.. தீர்வுப் பொதியில் பங்கேற்ற.. அஸ்ரப்பும் இல்லை. நீலனும் இல்லை. அஸ்ரப்பை கொன்றதும்.. அன்ரன் என்று நீங்கள் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் உண்மை.. அது அல்ல. அதேபோல்.. நீலனை.. யார் கொன்றார்களோ..???! அது அல்ல எம் கேள்வி.

நீலனின் செயற்பாடுகள்.. எப்படி.. எமது மக்களின் விடுதலையை சாத்தியப்படுத்தி இருக்கும் என்பதுதான் கேள்வி..??! அதற்குப் பதில் அளிக்க முடிந்தால் முன் வையுங்கள். இல்லை சும்மா பலவீனமான உங்கள் கற்பனை அலட்டல்களால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை..!

நிலன் திருச்செல்வம் கொலைசெய்யபடுவதுக்கு முக்கிய காரனம் அவர் சந்திரிக்கவுடன் சேர்ந்து ஒரு தீர்வு திட்டம் ஒன்றை கொண்டுவர இருந்தார் அது தமிழ் மன்னன் சங்கிலியனின் வாருசுக்கு பிடிக்கவில்லை அதனால் பலியெடுக்க படுகிறார் .

அன்ரன் பாலசிங்கம் ஒதுக்க படுகிறார் என் எனில்

அதே போல ஒரு திர்வை அவர் ஏற்றுக் கொண்டார் அதன் படி போய் மேற்க் கொண்டு போராட்டத்தை கொண்டு செல்லலாம் என்றார் அதனால் அவரின் முக்கியத்துவம் பேச்சுவார்த்தையில் குறைக்கபடுகிறது.

அதற்க்கு பின் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் புலம்பெயர் நாடுகளில் தாங்கள் இருக்கும் பொறுப்புகளில் தங்களுக்கு ஏற்றவர்களை உள் புகுத்தும் வேலையும் தொழில் நுற்பங்களும் ஆயுத கொள்வனவுபற்றிய சிந்தனையில் மட்டும் வந்து போனார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணை அந்த மெண்டல் கூட்டத்தை விட்ங்கோ.. 90 ஆண்டில் இருந்து எந்த ஒரு கட்டாகாலி நாய்களின் இம்சையும் இல்லாது போனது போராட்டம் எங்கை சறுக்கினது? அதுக்கும் இப்ப அழிந்ததுக்கும் என்ன தொடர்பு? ஏன் 20 வருடம் இடவெளியில் நண்பர்களை உருவாக்க முடியவில்லை மாறாக எதிரிகளின் என்னிக்கை கூடியது தான் மிச்சம்....

எதிரிகளின் எண்ணிக்கை கூடியது என்பது உங்களின் அடுத்த கற்பனை.

எமது போராட்டம் வெறும் வடலியை மையப்படுத்தி இருக்கவில்லை. உமாமகேஸ்வரன் மனிசிக்கு சண்டை பிடிச்சது போன்ற விடயங்களுக்கு அல்ல போராட்டம்.

சர்வதேச.. பிராந்திய சூழல்கள் மாறுபட்டதை அவதானிக்காத உங்களைப் போன்றவர்களோடு கருத்தாடி என்ன பயன். அடிப்படையில் எதுவுமே புரியாமல் வந்து உங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்டித் திரிகிறீர்கள் என்று காட்ட இது போதும். இருந்தாலும் கேட்கிறேன்...

1989 இல் இருந்து.. 2001 முடிவு வரை.. உலகில்.. தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ்ந்த.. பிரதான இராணுவ.. பொருண்மிய.. அரசியல் மாற்றங்கள் குறித்து ஒரு பட்டியலை இங்கு சுருக்கமாக முன் வையுங்கள். அதன் பின் நான் உங்களுக்கு விளக்குகிறேன்..ஏன் சறுக்கினது என்று.

புதிய நண்பர்களை உருவாக்கவில்லை என்பது தவறு. வட்டுக்கோட்டைக்குள் கிடந்த தமிழ் மக்களை.. புலிகள் வட அயர்லாந்து வரை வந்து ஒரு இடைக்கால தீர்வை சர்வதேச ஆலோசனையோடு தீர்மானிக்கவும்.. கொண்டு வந்தது.. இந்தக் காலத்தில் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணை அந்த மெண்டல் கூட்டத்தை விட்ங்கோ.. 90 ஆண்டில் இருந்து எந்த ஒரு கட்டாகாலி நாய்களின் இம்சையும் இல்லாது போனது போராட்டம் எங்கை சறுக்கினது? அதுக்கும் இப்ப அழிந்ததுக்கும் என்ன தொடர்பு? ஏன் 20 வருடம் இடவெளியில் நண்பர்களை உருவாக்க முடியவில்லை மாறாக எதிரிகளின் என்னிக்கை கூடியது தான் மிச்சம்....

தூசி கூடப் படாமல் கவனமா பார்த்துக்கொண்ட ரொக்கற் பூஸ்ரர்கள் கீழ விழுகிது..! நாசாவில என்ன விஞ்ஞானிமாரோ??!! :D

மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.. நீங்கள் மேலே பட்டியலிட்டவர்கள் எவ்வாறு எந்த வடிவில் செயற்பட்டு மக்கள் பொது விருப்பான தமிழீழத்தை அடைய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தனர். எப்படி அவர்கள் மக்களின் விருப்பை சாத்தியப்படுத்தி இருப்பர்..??! இதற்கு பதில் இருந்தால் அளியுங்கள். இல்ல நடையைக் கட்டுங்கள்..!

மேலே சொன்னவர்களின் போராட்ட ஆயுற்காலம் கொஞ்சம் ஏன் உலகத்தில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் அழிக்கனும் என்று சொன்ன புஸ் கூட 10 வருட ஜனாதிபதி ஆட்சியோடு வீட்ட போய்விட்டார் ஆனால் ********** இந்த ஆனாலோடு எனது விமர்சனத்தை நிறுத்த விரும்புகிறேன் ஏன் எனில் ,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

நிலன் திருச்செல்வம் கொலைசெய்யபடுவதுக்கு முக்கிய காரனம் அவர் சந்திரிக்கவுடன் சேர்ந்து ஒரு தீர்வு திட்டம் ஒன்றை கொண்டுவர இருந்தார் அது தமிழ் மன்னன் சங்கிலியனின் வாருசுக்கு பிடிக்கவில்லை அதனால் பலியெடுக்க படுகிறார் .

அன்ரன் பாலசிங்கம் ஒதுக்க படுகிறார் என் எனில்

அதே போல ஒரு திர்வை அவர் ஏற்றுக் கொண்டார் அதன் படி போய் மேற்க் கொண்டு போராட்டத்தை கொண்டு செல்லலாம் என்றார் அதனால் அவரின் முக்கியத்துவம் பேச்சுவார்த்தையில் குறைக்கபடுகிறது.

அதற்க்கு பின் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் புலம்பெயர் நாடுகளில் தாங்கள் இருக்கும் பொறுப்புகளில் தங்களுக்கு ஏற்றவர்களை உள் புகுத்தும் வேலையும் தொழில் நுற்பங்களும் ஆயுத கொள்வனவுபற்றிய சிந்தனையில் மட்டும் வந்து போனார்கள்.....

நான் நீலன் படுகொலை தொடர்பில் உங்கள் கற்பனைப் புலன் விசாரணையை முடிவைக் கேட்கவில்லை. உங்களின் கற்பனை புலன் விசாரணையை விட சிங்களவனின் புலன் விசாரணையை கொஞ்சம் என்றாலும் நம்பலாம் போல..! :lol::D

நான் மீண்டும் மீண்டும் கேட்டது.. நீலனின் செயற்பாடுகள்.. எப்படி தமிழ் மக்களின் பொது விருப்பான தமிழீழத்தை அடையும் வகையில் அமைந்திருந்தது என்பது தான்..??! அதற்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள். தெரியா விட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுங்கள்..!

செந்தில் - கவுண்டா வாழைப்பழ காமடி மாதிரிப் போச்சு இந்தத் தலைப்பு..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

புதிய நண்பர்களை உருவாக்கவில்லை என்பது தவறு. வட்டுக்கோட்டைக்குள் கிடந்த தமிழ் மக்களை.. புலிகள் வட அயர்லாந்து வரை வந்து ஒரு இடைக்கால தீர்வை சர்வதேச ஆலோசனையோடு தீர்மானிக்கவும்.. கொண்டு வந்தது.. இந்தக் காலத்தில் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்

பெடியன் O/L லையும் நல்லா படிச்சவன் A/L லையும் நல்ல படிச்சவன் ஆனால் இந்த யூனுவர்சிட்டிக்கு மட்டும் போக என்று இருக்கும் போது வெட்டு புள்ளி என்ற அடிப்படையில் பாதிக்க பட்டு போனான்.

..!

நான் மீண்டும் மீண்டும் கேட்டது.. நீலனின் செயற்பாடுகள்.. எப்படி தமிழ் மக்களின் பொது விருப்பான தமிழீழத்தை அடையும் வகையில் அமைந்திருந்தது என்பது தான்..??! அதற்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள். தெரியா விட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுங்கள்..!

உங்ககளுக்கு புரிய கூடிய முறையில் சொல்லாவிட்டாலும் எனக்கு புரிந்த பாசையில் சொல்கிறேன்,,,,,,,

கோவணத்துக்கு வழியில்லை பட்டுவேட்டிக்கு ஆசை என்பது போல தான்////. முதலில் துண்டை வாங்கி கொட்டைய மறைப்போம் அப்புறம் பட்டுவேட்டி வாங்குற வழியை பார்த்து இருகலாம்,,,,,,,..... கோவனம் இருந்து இருந்தால் இன்ரு கொட்டைக்கு சேதாரம் வந்து இருக்காது..............

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன் O/L லையும் நல்லா படிச்சவன் A/L லையும் நல்ல படிச்சவன் ஆனால் இந்த யூனுவர்சிட்டிக்கு மட்டும் போக என்று இருக்கும் போது வெட்டு புள்ளி என்ற அடிப்படையில் பாதிக்க பட்டு போனான்.

..!

உங்ககளுக்கு புரிய கூடிய முறையில் சொல்லாவிட்டாலும் எனக்கு புரிந்த பாசையில் சொல்கிறேன்,,,,,,,

கோவணத்துக்கு வழியில்லை பட்டுவேட்டிக்கு ஆசை என்பது போல தான்////. முதலில் துண்டை வாங்கி கொட்டைய மறைப்போம் அப்புறம் பட்டுவேட்டி வாங்குற வழியை பார்த்து இருகலாம்,,,,,,,..... கோவனம் இருந்து இருந்தால் இன்ரு கொட்டைக்கு சேதாரம் வந்து இருக்காது..............

பிரச்சனை.. நீங்கள்.. கோவணத்தோட நிற்கிறீங்களோ.. ரவுசரோட நிற்கிறீங்களோ என்பதல்ல. தமிழீழம் நோக்கிய மக்களின் விருப்போடு.. நீங்கள் மேற்சொன்னவர்கள்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி.. எப்படி தமிழீழம் அமைக்கப் பயணித்தார்கள்..??! அதனை எப்படி சாத்தியப்படுத்த பாடுப்பட்டனர்..???! இன்னும் நீங்கள் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. பிறகு எப்படி அவர்களை துரோகிகள் அல்ல என்பீர்கள்..??!

விடுதலைப்புலிகள் சாவு வரை.. மக்களின் பொது விருப்பை விட்டு போகவில்லை..! அதனால் தான் அவர்கள் மக்களின் தியாகப் புதல்வர்களாக.. எவர் எல்லாம் மக்களின் பொது விருப்பை பெற்றுத் தருவதாகச் சொல்லி ஏமாற்றினார்களோ.. அவர்கள் எல்லாம் துரோகிகள் ஆனார்கள். இதுதான் யதார்த்தம். இதை முதலில் உணரவும்... ஏற்றுக் கொள்ளவும் பழகிட்டு வந்து கருத்தெழுதனும்..!

போராட்டம்.. அமிர்தலிங்கம்.. அரசியல் நடத்தவும்.. உமாமகேஸ்வரன்.. குடும்பம் நடத்தவும். டக்கிளஸ் வியாபாரம் நடத்தவும்... கருணா சிங்கள விபச்சாரிகள்.. பிடிக்கவும் அல்ல..! போராட்டம் தமிழ் மக்களின் பொது விருப்பான.. தமிழீழத்தை அடைவதையே இலக்காகக் கொண்டது. அதில் என்றும் புலிகள் மக்களின் குழந்தைகளாக மக்களோடே இருந்தனர். மற்றவர்களால் மக்களோடும் ஒட்ட முடியவில்லை.. புலிகளோடும் ஒட்ட முடியவில்லை. இதுதான் மக்கள் தமிழீழத்தை புலிகளைத் தொலைக்க காரணம்..!

புலிகளை தொலைத்துவிட்டு மக்கள் தான் வருந்துகிறார்களே தவிர துரோகிகள் அல்ல. டக்கிளசிற்கும்.. சங்கரிக்கும்.. சித்தார்தனுக்கும்.. வரதராஜப் பெருமாளுக்கும்.. எந்தப் பிரச்சனையும் இல்லை. அவை எல்லாம் எந்த கஸ்டமும் இன்றி பூலோகப் பிறவிப் பயனை அனுபவிக்கினம். அதுவும் டக்கிளஸ் நெடுந்தீவில் 25 மனைவிகளோடு.. வெளியில் பிரம்மச்சாரியப் பட்டதோடு வாழ்கிறான். ஆனால் துன்பப்படுவது.. தமிழீழத்தை விரும்பின மக்களே..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்களவன் அடிக்கிறான், கொல்லுறான், ...... களை செய்கின்றான்.

இன்றும் தொடர்கிறான்.....

நாமோ இடையில் வந்துபோன புலி, புலிப்பாசிச ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம், பல காலமாக. வேலிச்சண்டையில் இருக்கும் மானப்பிரச்சனையும் ரோசமும் எதிரிக்கு எதிராக வரவே வராது. கேவலம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சசி அண்ணா எப்பிடி மீண்டுவந்தநீங்கள்? நாங்கள் உங்கள காணமல் போனபட்டியல்ல சேர்த்து றொம்ப நாள் ஆச்சு ப்ளீஸ் மீண்டும் எப்ப கானாமல் போவீங்கள்....?

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் யாரை விமர்சனம் செய்ய..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

சுபேஸ் எனது கருத்தை மேற்கோள் காட்டி நீங்கள் முன்வைத்த இந்தக் கருத்து நான் முன்வைக்க முயன்ற கருத்தை விட நேர்த்தியானது. மேலதிகமாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.

மேலும் சிங்களப் பேரினவாதத்திற்கு அடிமையாகி விடுதலைக்கான போர் படு தோல்வியடைந்த நிலையில் தமிழர்கள் தமக்குள்ளான குத்துப்பாட்டுக் குணங்களில் இருந்து திருந்திவிட்டார்கள் என்பதற்கில்லை. முன்னர் எமக்குள் குத்துப்பட்டோம் இப்போது அது பற்றி சரி பிழை பேசிக்கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. ஏன் குத்துப்பட்டோம் என்பதது குறித்து அதிகம் கதைக்கவேண்டும். இவ்வாறு கதைப்பது விமர்சனமோ அல்து யாரையாவது உயர்த்தி தாழ்த்தி கதைப்பதோ கிடையாது மாறாக இப்படி ஒரு குத்துப்பாட்டுக் குணம் அடுத்த சந்ததிக்கு வரக்கூடாது என்ற ஒரு நோக்கே ஏன் குத்துப்பட்டோம் என்று வினாவுவதற்கு அடிப்படையாக இருக்கின்றது.

ஜயோ சசி அண்ணா எப்பிடி மீண்டுவந்தநீங்கள்? நாங்கள் உங்கள காணமல் போனபட்டியல்ல சேர்த்து றொம்ப நாள் ஆச்சு ப்ளீஸ் மீண்டும் எப்ப கானாமல் போவீங்கள்....?

சுண்டல் அண்ணாச்சி நலமோ? கொண்ட கொள்கைகளே காணாமல் போய்விட்டது அதை விட யாழில நான் காணாமல் போவதா முக்கியம்?

வீரமரணம் அடைந்த ஒரு தலைவருக்கோ இல்லை தளபதிக்கோ அதற்க்குரிய மரியாதை செலுத்த வக்கில்லாத கூட்டம் தானே தமிழர்..

1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்களவன் அடிக்கிறான், கொல்லுறான், ...... களை செய்கின்றான்.

இன்றும் தொடர்கிறான்.....

நாமோ இடையில் வந்துபோன புலி, புலிப்பாசிச ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம், பல காலமாக. வேலிச்சண்டையில் இருக்கும் மானப்பிரச்சனையும் ரோசமும் எதிரிக்கு எதிராக வரவே வராது. கேவலம்!

அப்போ அப்போ சுயவிமர்சனம் செய்து வளர்த்து இருந்தால் இன்று புலிகளும் அழிந்து இருக்க மாட்டார்கள் தமிழ்மக்களும் யாரும் அற்ற அனாதைகள் என்ற தோற்றப்பாட்டில் வாழவேண்டி வந்து இருக்காது.......

முக்கியமாக.......

செயப்பட்ட கொலைகள் தவறாக இருந்து இருக்காது அந்த கொலையினால் நல்லது நடந்தால்.

ராஜீவை கொன்றார்கள் சரி எனில் கொன்ற பின் அதைச் எதிர்த்து நின்று வெற்றி பெற்று இருக்கவேண்டும் அல்லது ராஜீவை கொலைசெய்யாது அவரின் எதிர்ப்பை தமிழ்மக்களின் ஆதரவோடு சேர்ந்து எதிர்த்து இருக்க வேண்டும்......

அதே போல தான் மற்ற கொலைகளும், செய்ய பட்ட படுகொலையால் நல்லது நடக்கும் என்றால் நல்லது மாறாக அவர்களை விட்டால் புலிகள் என்ற அமைப்பை அழித்து போடுவார்கள் என்று எதிர் கொள்கைகளை கொண்டவர்களை எல்லாம் கண்ட இடங்களில் சுட்டுக் கொலை செய்வதை விசர் நாய் தெருவில் போறவனை கடிப்பது போன்றது............

கடசி நேரங்களில் காசுக்கு கொடுக்கப் பட்டமுக்கியத்துவம் மனிதனின் மனதுக்கு கொடுக்கபடவில்லை...

வரி வரி வரி என்று பனை ஏறுபவனில் இருந்து விறகு வெட்டி விக்கிறவன் வரை வரி வரி நல்ல காலம் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் கடைகளிலும் வரி வசுல் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இதோடா சவுண்டு சுந்தரி வந்திட்டா..........எங்கள் எல்லாரையும் விட போராட்டத்தை பத்தி கதைக்கிற உரிமை அவருக்க தான் இருக்கு.........

ஓ உங்கள மாதிரி ஊரில் பிரச்சனை நடக்கும் போது பங்களிப்பு செய்யாமல் ஓடி வந்த ஆட்களுக்கு சாஸ்திரி மாதிரி ஆட்கள் பெரிதாகத் தான் தெரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

சுகன், சுபேஸ் மற்றும் சசி

புலிகளின் போராட்டம் தோற்றது எதனால்???

சாதியால்

ஊர்ச்சண்டையால்

தமிழரிடையே உள்ள பிரிவுகளால்???

பதில்தரவும்.

சசி

தலைவர் எப்போ எங்கு எப்படி இறந்தார்

தகவல்களுடன் ஆதாரமும் தரவும்

உண்மையில் எனக்கு தெரியவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் போராட்டம் தோற்றது புலிகளினால்.தமிழ் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படுத்திய புலிகளின் பல செயல்களினால்.போராட வலுவுள்ள தலைமுறை போராட்ட காலத்தில் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தது ஏன்?புலிகளின் பாஸ் நடைமுறை இல்லாவிடின் எவ்வளவு மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்திருப்பார்கள்?இவ்விரண்டு கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிப்பீர்களானால் உண்மை அதுவென உணர்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன், சுபேஸ் மற்றும் சசி

புலிகளின் போராட்டம் தோற்றது எதனால்???

சாதியால்

ஊர்ச்சண்டையால்

தமிழரிடையே உள்ள பிரிவுகளால்???

பதில்தரவும்.

சசி

தலைவர் எப்போ எங்கு எப்படி இறந்தார்

தகவல்களுடன் ஆதாரமும் தரவும்

உண்மையில் எனக்கு தெரியவில்லை.

வரி வரி வரி என்று பனை ஏறுபவனில் இருந்து விறகு வெட்டி விக்கிறவன் வரை வரி வரி நல்ல காலம் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் கடைகளிலும் வரி வசுல் செய்யவில்லை.

உவர் சசி எண்டவர் தான் நினைக்கிறதெல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டு திரியுற முன்னாள் புலிப் போர்வை போர்த்து யாழில் நடமாடிய ஒருவர்.

இவர் புலிகள் வரி வரி என்று வாங்கினவை என்று உளறுறார்.. விடுதலைப்புலிகள் ஒரு நிலத்தை நிர்வகிக்க ஆகும் செலவை விட குறைவாகவே வரி செலுத்தக் கேட்டிருந்தனர்.

பிரிட்டனில் ஆண்டுக்கு 40,000 உழைத்தால் 40% வரி. 150, 000 மேல உழைச்சால் 50% வரி..! மற்றவர்களுக்கு 20% வரி..! ஒரு தேசத்தை பரிபாலனம் செய்ய ஆகும் செலவை புலிகள் பெற்றனர். காரணம் சிங்கள அரசு அதற்கு உதவவில்லை.

ஆனால் சிங்கள அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலத்தில் நின்று கொண்டு புளொட் வவுனியாவில் கள்ளுக்கடையில் இருந்து சைக்கிள் நிறுத்திற இடம் வரை வாங்கின கப்பம் எதுக்கு..??! எனக்குத் தெரிய வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆசிரியர் புளொட்டுக்கு கப்பம் கொடுக்க முடியாது.. ஊரைவிட்டு ஓடி வந்தது.

அதேபோல் கிழக்கில்.. கருணா.. பிள்ளையான்.. மற்றும் ராசிக் குழுக்களின் கப்பம். யாழ்ப்பாணத்தில்.. சந்தை ரிக்கெட்டில் இருந்து.. தள்ளு வண்டி வைச்சிருக்கிறவர் வரை ஈபிடிபிக்கு கப்பம்.

இவர்கள் யாரை பரிபாலனம் செய்யக் கப்பம் பெறுகினம். ஒரு பக்கம் சிங்கள அரசின் வரிகள். இன்னொரு பக்கம் இந்த ஒட்டுக்குழுக்களின் கப்பம்.. வரிகள். அதுவும் ஒரு குழு அல்ல. ஆயிரத்தெட்டுக் குழுக்கள். எல்லாத்திற்கும் கப்பம் செலுத்தவும்.. அரசுக்கு வரி செலுத்தவுமே மக்கள் உழைக்கிற நிலை.

இதனை எல்லாம் யாரும்.. சுய விமர்சனம் செய்யச் சொல்லி.. புளொட்டையோ.. ஈபிடிபியையோ.. கருணாவையோ.. பிள்ளையானையோ.. வரதராஜப்பெருமாளையோ கேட்க மாட்டினம். எல்லாம்.. புலிகள் தான்.. செய்யனும்.

வெளிநாடுகளில்.. டக்கிளசின் முதலீடு பல மில்லியன் டாலர்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பணம். நெடுந்தீவை குத்தகைக்கு எடுத்து.. விபச்சார மையங்கள்.. யார் தந்தது இந்த அனுமதிகள். மற்றவர் கருணா எண்டவர்.. அவர் சிங்களத்திகளிடம் தமிழ் பெண்களை சப்பிளை செய்து விபச்சாரம் செய்விக்கிறார். மில்லியன் கணக்கில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார்.. யாருக்காக.. மக்களுக்காக போராடவா..??!

இதனை எல்லாம் எவனும் கேட்கமாட்டான். ஒருவேளை கஞ்சிக்கு வழி இன்றி வாரக்கணக்கில் பசியோடு நின்று களமாடி வீழ்ந்த வீரர்களுக்கு ஒரு பிடி கஞ்சிக்கு சேர்ந்த பணத்தைப் பற்றி அதுவும் வரி வாங்கிறம் என்று சொல்லி பற்றுச்சீட்டு வழங்கி நேர்மையாக வாங்கினதை இங்கு சில மனிதாபிமானமற்ற வானரங்கள் சுயவிமர்சனம் என்ற போர்வையில்.. எழுத்தில் செய்வது.. வேதனை அளிக்கிறது.

இவர் சசி என்றவருக்குத் தெரியுமா.. எங்கள போராளிகள் எத்தனையோ நாட்கள் உணவு வழங்கல் இன்றி ஏன் குடிக்கத் தண்ணி இன்றி போராடி.. ஈரல்.. சிறுநீரகக் கோளாறுகளால் இறந்தும்.. நீடித்த பாதிப்புக்களை அடைந்ததும். வரிக்கு வரி வரி பற்றி எழுதுபவர்கள்.. இது குறித்தும் தங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி தங்கள் எழுத்துக்களுக்கு முதலில் சுயவிமர்சனம் செய்து கொண்டு வந்து எழுத வேண்டும்.

அநியாயமா கப்பம் வாங்கிறவனட்ட ஒன்றும் கேட்கமாட்டீர்கள். ஒரு நிலத்தை சொந்தமா பரிபாலனம் செய்தவனிடம்.. அதுவும் உயிர்க் கூலிகொடுத்து நாட்டுக்காகப் போராடியவனிடம் 5% 10% வரிக்கு அழுவதுதான் வேடிக்கை.

டக்கிளஸ் கள்ளுக் கொட்டிலில் ஒரு பிளா கள்ளுக்கும் வரி வாங்கிறான்.. அதைப் போய் கேளுங்கள். கருணா.. ஒரு கிளாஸ் சாராயத்துக்கும் மட்டக்களப்பில் வரி வசூலிக்கிறான் அதைப் போய் ஏன் என்று கேளுங்கள். அதுகளை கேட்கமாட்டீர்கள். அரசாங்கத்திடம் இருந்து காட்டிக் கொடுப்புக்கு ரொக்கமாகவும் பெறுகிறீர்கள்.. அமைச்சுக்களில் இருந்து கொள்ளையும் அடிக்கிறீர்கள்.. மேலதிகமாக ஆட்களை கடத்தி கப்பமும் வாங்குகிறீர்கள்.. அதற்கு மேலதிகமாக வரி. இத்தனைக்கும் இதில் எவை மக்களுக்கு அல்லது மக்களை பரிபாலனம் செய்ய அல்லது மக்களுக்காகப் போராட பயன்படுகுது..??!

சோத்துப் பாசல் காலத்தில இருந்து இவங்கள் இதைச் செய்யுறாங்கள். அதெல்லாம் சசி போன்றவர்களின் கண்ணுக்குத் தெரியமாட்டாது. ஏனெனில் அது அவரின் ஆட்கள். புலிகள் வாங்கின 5% வரி தான் கண்ணுக்குத் தெரியும். போராட்ட மண்மீட்பு நிதிக்காக.. 2 பவுண் கேட்ட போதும் மக்கள் வரிசையில் நின்று கொடுத்த இடங்களும் உண்டு. வெளிநாட்டுக்கு போவதற்காக வலியப் போய் கொடுத்து பற்றுச்சீட்டைப் பெற்றவர்களும் உண்டு..! போராட்ட பொறுப்புணர்ந்த மக்கள் வரி.. பவுண் கட்ட பின்நிற்கேல்ல. போராட்ட பொறுப்பற்ற சசி போன்றவர்களே புலிகளின் நேர்மையை விமர்ச்சிக்கிறார்கள். ஆனால் அதேவேளை மற்றவர்கள் செய்யும் கொடுமைகளை திட்டமிட்டு மறைக்கிறார்கள்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.