Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவேந்திர சில்வாவை முக்கிய பணிக்காக தெரிவு செய்தார் ஐ.நா. செயலர்!

Featured Replies

புலமெங்கும் ... மாவீரர்நாளை செய்ய ... மர்ம மனிதர்களின் வலையில் வீழ்ந்து/சேர்ந்து .... போட்ட போட்டியில் ஒரு வீதத்தையாவது செலவழித்து, ஒரு வழக்கையாவது போட்டார்களா????

... இவனது இந்த நியமனம், எம்மவர்களின் அரசியல் தோல்வியே!

Acts of Shavendra Silva's battalion in 2009 are described in the UN's own Panel of Experts report on Sri Lanka, and lawsuits have been filed against Silva for war crimes.

http://www.innercitypress.com/ban1silva012712.html

இங்கு பலர் அர்ஜீன் மீது பாய்ந்து கடித்து கருத்து எழுதி நேரத்தை போக்கடிக்காமல். நீங்கள் அல்லது உங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக சர்வேந்திராவின் நியமனத்தை நிறுத்த முயற்சியுங்கள்.

ஏன் அவரை எங்களிடம் இருந்து பிரிக்கின்றீர்கள்? அவரும் எமது மக்கள் விடிவுக்காக அயராது உழைப்பவர்தானே :D

நா.க.அரசு . உலகத்தமிழர் பேரவை. அனைத்துலகம். தலைமை செயலகம். தமிழர் பேரவை இப்படி எதையாவது செய்யச் சொல்லுங்கள். சும்மா கருத்து எழுதிக்கொண்டிருந்தால் இப்படித்தான் கோவணமும் காணாமல் போகும். பிறகும் இங்கு சர்வதேச ரீதியியிலான நடவடிக்கைகள் போய்கொண்டிருக்கும் போது நாங்கள் யாழில் ஒபாமாவையும்.பான்கிமுனையும். மன்மோகனையும் திட்டுவதால் நடைமுறை சாத்தியம் எதுவும் கிடையாது. பான்கிமூன். ஒபாமா. சோனியா. மன்மோகன். மற்றும் ஜரோப்பிய ஒன்றியம் யாழ்கள உறுப்பினர்கள் கிடையாது. அவர்களிற்கு தமிழும் தெரியாது.

இந்த விடயத்தை கொஞ்சம் ஆழமாக ஆயரவேண்டிய விடயம். சோரம்போகாத குணம், ஆளுமை, முயற்சி என இப்படியான பல குணாதிசயங்கள் உள்ளவர்கள் புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கவேண்டும். அவர்களில் சிலர் முழு நேரமாக இவற்றை செய்யவேண்டும். அதற்கு அவர்கள்:

- தமது செயற்பாடுகளை மக்களிடம் எடுத்துகூறி பண உதவி உட்பட பல உதவிகளை கேட்கவேண்டும்.

- அவர்கள் செய்யும் செயற்பாட்டுகளை வைத்து கேள்விகளையும் ஆதரவுகளையும் வழங்கவேண்டும்.

- வருடாந்த கணக்கு வழக்குகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஊடாக சமர்பிக்க கேட்கவேண்டும்.

நான் நான் என்ன செய்தேன் என ஒவ்வொருவரும் தன்னைத்தாமே கேட்கவேண்டும். அப்பொழுது மன்மோகனும் ஒபாமாவும் தமிழ் கதைப்பார்கள்.

இவருக்கு தான் நேற்று சிங்கள ஊடக தகவல்களை தெரிவித்திருந்தேன். ( இவருக்கு முடிந்தால் இவரின் இணையத்தளம் ஊடாக பங்களிப்பும் செய்யலாம் ). மேற்கொண்டு மூனை கலைத்து கலைத்து கேள்வி கேட்பார்.

சரியான முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சிங்கள நாட்டு பத்திகைகளில் மட்டுமே, த ஐலன்ட் ; டெய்லி மிரர், இது பற்றிய செய்தி, வந்துள்ளது . ஐ..நா. வின் அதிகார செய்தி பீடத்திலோ இல்லை வேறு எந்த ஊடகத்திலுமோ வரவில்லை.

1. http://www.island.lk...ode_title=44008

2. http://www.dailymirr...ping-group.html

இந்த இரண்டு குறிப்பையும் ஐ.நா. பத்திரிகை ஊடகவியலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அமைதி காக்கும் படையின் சிறப்புக் குழுவில் சவேந்திர சில்வாவை நியமிக்கவில்லை!- மார்ட்டின் நெர்ஸ்க்கி.

resize_20120127192658.jpg

ஐ.நா அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இணைத்துக் கொள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமனம் வழங்கவில்லை என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கான குழுவில் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறித்த அனைத்துலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே இந்த நியமனம் தொடர்பாக ஐ.நாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thedipaar.com/news/news.php?id=40459

நன்றி நுணா !

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த நாடுகள் தம்மை தாமே தலைக்குனிவாக்கியுள்ளன!

இந்த நாடுகளை அறிந்து அவற்றின் ஐ.நா. பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு இந்த வெட்கக்கேடான விடயத்தை கூறுவோம்.

நன்றி நுணா !

இதன்மூலம் இந்த நாடுகள் தம்மை தாமே தலைக்குனிவாக்கியுள்ளன!

இந்த நாடுகளை அறிந்து அவற்றின் ஐ.நா. பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு இந்த வெட்கக்கேடான விடயத்தை கூறுவோம்.

சீனா, இந்தியா, பாகிஸ்த்தான், மாலைதீவு, வங்காளம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ இந்தா உள்ளுக்குள்ள போடப்போறம் எண்டாங்கள் இப்ப செய்தி இப்படி வருகுது .

நடைமுறை யதார்த்தத்திற்கு வாங்கோ எல்லோருமாக சேர்ந்து அவரை உள்ளுக்க போடலாம் .

ஒரு காலைத் தொலைத்தவன், வாழ்வில் தோற்றுவிட்டேன் என்று மூலையிலா போய்ப் படுப்பான்? அவன் அந்த ஒரு காலுடன் நடக்க முயற்சிப்பது அவன் வாழ்கையின் ஒரு தேவை, எனவே அதை அவன் நிட்சயம் செய்வான்!

முள்ளிவாய்கால் தோல்வியும், எமக்கு அப்படித்தான் ஒரு காலைத் தொலைத்த தோல்விதான். அடுத்த கட்டத் தேவைக்கு எம்மை நாம் தயார்படுதுவது, வாழ்வியலின் பொது விதி. அதையே நாம் செய்கின்றோம்!

உங்களுடைய நடைமுறை யதார்த்தம் என்பது என்ன? இலங்கை வானொலியின் செய்திகளே உங்களுடைய செய்திகளும் அல்லவா? எனவே இந்த நடைமுறையதார்த்தம், எங்கடை நடைமுறையதார்த்தத்துக்கு கிட்ட வரமுடியுமா?

Acts of Shavendra Silva's battalion in 2009 are described in the UN's own Panel of Experts report on Sri Lanka, and lawsuits have been filed against Silva for war crimes.

http://www.innercity...ilva012712.html

... இவ்வழக்கை பதிவு செய்ததே அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிலரின் முயற்சியே! அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் உருத்திரகுமாரர் கோஷ்டியோ, வேறெந்த அமைப்புகளும் அதற்கு உதவவும் இல்லை/ஆதரவு வழங்கவும் இல்லை! அதற்கு மேல் அவசர அவசரமாக இவ்வழக்குகளை குழப்பும் விதமாக மகிந்தருக்கு எதிராக ஓர் வழக்கை பதிவு செய்வதாக ஓர் நாடகம் ஆடியதுதான் மிச்சம்!!!!

இந்த நியமனத்துக்கு எதிராகவேனும் ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்து இருக்கிறார்களா?????

... இங்கு புலத்தில் எம்மை தொடர்ச்சியாக ஏமாற்றுவதில் இருக்கும் குறியை, இவைகளுக்கு மேல் நாடு கடந்த தமிழீழ அரசு திருப்புமா????????????

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இந்தா உள்ளுக்குள்ள போடப்போறம் எண்டாங்கள் இப்ப செய்தி இப்படி வருகுது .

நடைமுறை யதார்த்தத்திற்கு வாங்கோ எல்லோருமாக சேர்ந்து அவரை உள்ளுக்க போடலாம் .

எந்த நாட்டில இருக்கு என்று எழுதினால் நாங்கள் டிக்கெட் பார்க்கலாம்.

எங்களை விட கெகெலியவிற்கு இன்னும் அதிர்ச்சியாகவிருக்குக்ம்

இவன் தன் மகளை கெடுத்து போட்டான் என்று புலம்பி திரிவதாக தகவல்.சில காலம் பொறுத்தால் உண்மை வெளியே தானா வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.