Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவின் முடிவில் மாற்றம் இல்லை

Featured Replies

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவின் முடிவில் மாற்றம் இல்லை; கூட்டமைப்புடனான நேற்றைய சந்திப்பில் பிளேக் குழு அதிரடியாக அறிவித்தது

இலங்கை அரசு என்ன உறுதி மொழிகளை வழங்கினாலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா நேற்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமெரிக்கத் தூதுவ ரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் கலந்து கொண்டார்.தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது அரசியல் தீர்வு, அரசு கூட்டமைப்புக்கும் இடை யிலான பேச்சின் தற்போதைய நிலைமைதமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நடைமுறைப்பிரச்சினைகள், போர்க்குற்ற விசாரணை விவகாரம் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

தமிழ்க் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசுவதாக இதன்போது உறுதியளித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து அரசு விலகி விடமுடியாது என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் என்பன பற்றி இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசு அக்கறை இல்லாமல் இருப்பதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்தும் தீர்மானமொன்றை எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்ற அமெரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், இப்போது அரசு வழங்கும் உறுதிமொழிகளை ஏற்று அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர் என அறிய முடிந்தது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=35333826113746965

  • தொடங்கியவர்

தமிழர் தரப்புக்கு நம்பிக்கை தரக்கூடிய செய்தி. தொடர்ந்தும் பரப்புரைகளில் ஈடுபடுவது மூலம் தாயக மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கலாம்.

தொடர்ந்தும் முயற்சிப்போம்.

US to support resolution on Sri Lanka at UNHRC

The US government is to support a resolution against Sri Lanka at the UN Human Rights Council (UNHRC) when it convenes later this month. US Under-Secretary of State for Civilian Security, Democracy, and Human Rights Maria Otero told reporters that the US position was communicated to President Mahinda Rajapaksa when she met the latter in Colombo today.

She said that the resolution will give the Sri Lankan government an opportunity to address some human rights concerns, including those raised over the final stages of the war between the Sri Lankan military and the LTTE.

http://www.thesundayleader.lk/2012/02/13/us-to-support-resolution-on-sri-lanka-at-unhrc/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்புக்கு அதிலும் கூட்டமைப்புக்கு உற்சாகம் தரும் செய்தி.

கையைக்கோர்த்து தாயக மக்களுக்கொரு தீர்வை பெற முயலவேண்டும்.

  • தொடங்கியவர்

அண்மையில் அமேரிக்கா ஹிலரி கிளிண்டன் மூலம் தம்மிடம் வெள்ளைக்கொடி மூலம் சரணடைந்த பொழுது அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் மற்றும் கோத்தா கொடுத்த உத்தரவுகள் பற்றிய பதிவுகள் உள்ளாதாக கூறி இருந்தார்.

இவ்வாறு கூறியது மூலம் அமெரிக்கா வரும்காலங்களில் இந்த உண்மையை மறுக்க முடியாது.

எனவே, அமெரிக்காவை நாமும் அந்த ஆவணத்தை ஐ.நா.விடம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அனுப்பிவைக்கும்படி கோரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு குத்துக்கரணம் அடிக்காமல் கொள்கையில்

விடாப்பிடியாக நின்றால் நிச்சயமாக மக்களுக்கு ஒரு

தீர்வு கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/2012/02/120213_blake_otero.shtml

Maria Otero, the most senior US official to visit Sri Lanka since 2005, said she discussed the recomendations made by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) with President Mahinda Rajapaksa.

“I urged the Sri Lankan Government to share the details of their plans and begin fulfilling the recommendations called for in the report, and to credibly address outstanding issues of accountability,” she told journalists in Colombo.

  • தொடங்கியவர்

எமக்கு சாதகமாக எதுவே அமெரிக்காவால் நடக்காமல் போகலாம். ஆனால் மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை அமெரிக்கா அவரை முழுமையாக நம்பாது,

எனவே அந்தக்காலகட்டத்திற்குள் நாம் எம்மால் முடிந்த அது உச்ச தீர்வை பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The U.S. announced the “successful” completion of talks between the government of Sri Lanka and the Tamil National Alliance, an umbrella organisation of Tamil parties that represents Tamils of the Northern Province. “

The U.S. supports the successful conclusion of the current dialogue between the government of Sri Lanka, and the Tamil National Alliance. And, from talking to both sides, we understand that they are not really far apart. So we hope that the dialogue can resume and can reach a successful conclusion, and then, whatever is agreed, can be discussed… in the Parliamentary Select Committee (PSC),” he said when asked if the continuation of the government- TNA talks meant that the PSC was redundant.

http://www.thehindu.com/news/international/article2889920.ece

  • தொடங்கியவர்

So we hope that the dialogue can resume and can reach a successful conclusion, and then, whatever is agreed, can be discussed… in the Parliamentary Select Committee (PSC),” he said when asked if the continuation of the government- TNA talks meant that the PSC was redundant.

http://www.thehindu....icle2889920.ece

இது ஊடகத்திற்காக சொல்லப்பட்டது. இது உண்மையானதாக இருக்கவேண்டும் என்று இல்லை.

அமெரிக்கா சிங்களத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தரும் என்ற நிலையில் சிங்களத்திற்கு போதுமான கால அவகாசம் தரப்பட்டு விட்டது என்பதே சரியாக தெரிகின்றது. வரப்போகும் தீர்மானம் எதை கூறும் இல்லை எதை கேட்கும் என தெரியவில்லை. சுயாதீன ஐ.நா. விசாரணைக்கு வழி விட்டால் எமக்கு வெற்றியே. அது நடக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கும் சிங்கப்பூருக்கும் விரையும் மகிந்தர் இந்தியாவுக்கு இன்னும் செல்லவில்லை. இந்தியா சிங்களம் சார்பாக இருக்கும் என நம்புகிறார்கள். எனவே இந்தியாவின் கைகளில் சில வாக்குகள் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.puthinapp...?20120214105578

சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தும் விடயத்திலும், தெரிவுக்குழு விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுட்ன் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைத்து ஆராயலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகிறது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ தெரிவுக்குழு மூலமே எந்தவொரு தீர்வுத்திட்டம் குறித்தும் பேசமுடியும் என்று கூறியுள்ளதுடன், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காதவரை அவர்களுடன் பேசப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.

இந்தநிலையில், முதலில் சிறிலங்கா அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை தெரிவுக்குழு முன்வைத்து ஆராய்வதே பொருத்தமானது என்று அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்,

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும்.“ என்று கூறியுள்ளார்.

அத்துடன் “சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள் நல்லமுறையில் நிறைவுபெற அமெரிக்கா உதவும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும்.“ என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆதரவு, சிறிலங்கா அரசுக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை நம்பி கூட்டமைப்பு செயலில் இறங்குவது "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு" சமமானது.இந்தியாவின் ஊது குழலாக தான் அமெரிக்கா தற்போது செயற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லுளிமங்கன் இந்தியாவின் மௌனம் எல்லாவற்றையும் குழப்பியடிக்கத்தயாராவது போல் இருக்கிறது.அமெரிக்காவைக் கெட்டியாகப் பிடித்தக் கொள்வதே இப்போதைய நிலையில் சிறந்தது.அமெரிக்காவுடன் இரகசியப் பேரங்களிலும் ஈடுபட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

import-300.jpg

இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு. _

ஆதரவு வழங்கும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் மாரி ஒட்டேரோ மற்றும் மத்திய, தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் மற்றும் பொறுப்புக்கூறல், மனித உரிமை மற்றும் ஜனநாயம் போன்ற விடயங்களில் இலங்கைக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும் வகையிலேயே மனித உரிமை பேரவைக்கு கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி வீரகேசரி.

மிக நீண்ட காலத்தின் பின், தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை ஒளி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வரும் இந்தியா வரும் என்றது மாதிரி அமெரிக்கா அமெரிக்கா என்று கொக்கரிக்காதீர்கள். இவர்களும் ராஸபக்ஷவிடம் ஏதும் கிடைக்குமாயின் தலைகீழாகிவிடும். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியுடன் ஒதுங்கி பாருங்கள். அல்லது ராஜபக்ஷவை அவரது எண்ணத்தை விட்டுக்கொடுக்காத நிலையில் இருக்கச்செய்யுங்கள். அமெரிக்கா முடிவெடுத்தால் தன்னிலையில் இருந்து இறங்காது என்பது தெரியாதா? அமெரிக்கா தனக்காக சூழ்நிலைகள் கனிந்து வரும்போதே முடிவுகளை எடுக்கும். அல்லது தனக்குச் சூழ்நிலைகளை உருவாக்கிய பின்னரே முடிவுகளைக்காத்திரமாக எடுக்கும். இங்கும் ஒரு இரட்டைநிலை இருக்கின்றது. இது எந்தப்பக்கமும் சாயலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

போர் முடிந்து 3 வருடங்களாகியும் பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படா நிலையிலும், அமெரிக்கா இமைதியா இருந்து ராஜபக்ஷவின் ஆட்டங்களுக்கு போதுமான நேரம் கொடு;க்கப்பட்டது. இவருடைய ஆட்டங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு ஆவணங்கள் ஆக்கப்பட்டுள்ளன. .இதுவும் ஒரு ராஜதந்திர நடவடிக்கை தான். தமிழர்களுககு உரிமையளிப்பது என்பது சிங்களம் செய்யாது என்பது சர்வதேச மட்டத்தில் தெட்டத்தெளிவாகிவிட்டது.

தமிழர்கள் தங்களிடம் ஏதும் இனிமேல் எதிர்பார்க்கமாட்டார்கள். நாங்கள் ப+ச்சாண்டி காட்டமுடியாது என்hதும் இந்தியாவிற்கு தெளிவாகிவிட்டது. சமாளிப்புக்காகவும், மக்களின் மனநிலை அறியவும் அப்துல் காலாம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார். புலம்பெயர் தமிழர்கள் மேற்;குலகத்தை கட்டிப்பிடித்து உரிமம் கோருகின்றார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெளிவாகியிருக்கின்றது, மேற்குலகம் தமிழர்களுக்கெதிராக சி;ங்களத்திற்கு உதவி இருந்தாலும் தமிழர்கள் வகைதொகையாக் கொல்லப்பட்டதில் மனதளவில் மனிதநேயமான வருத்தம் இருக்கின்றபடியால் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற விருப்பமும் இருக்கின்றது. இதுவும் இணைந்த இலங்கைக்குள் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

The U.S. announced the “successful” completion of talks between the government of Sri Lanka and the Tamil National Alliance, an umbrella organisation of Tamil parties that represents Tamils of the Northern Province. “

http://www.thehindu....icle2889920.ece

இந்து நாதரி அதுக்கை எப்பிடி சிந்திக்குது பார்.. தமிழ்க்கூட்டமைப்பு வடக்குத் தமிழரை பிரதிரிதிப் படுத்துதாம்..! பிள்ளையான் இவைட ஆள்தானே..!

  • தொடங்கியவர்

அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது – ஜே.வி.பி.

அப்பட்டமான மனித உரிமை மீறல், அடிப்படை உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை மீறல் ஆகியவற்றுக்கு காரணமான அரசாங்கம், சர்வதேசத்தின் முன்னால் இரட்டை வேடத்தை காண்பிப்பதாலேயே பாரதூரமான அழுத்தங்களும் ஜெனீவா மாநாட்டின் போதான இறுக்கமும் அதிகரித்திருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அந்நிய சக்திகள் இலங்கைக்குள் மூக்கை நுழைப்பதற்கு பாதையமைத்துக் கொடுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமெரிக்காவிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றது.

உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை மண்ணில் வைத்தே இலங்கைக்கு எதிராக பேசுவாரென்றால் அதற்கான அதிகாரத்தையும் தைரியத்தையும் அரசாங்கமே வழங்கியிருக்கின்றது என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=96953

  • தொடங்கியவர்

The litmus test in Sri Lanka- Ahilan Kadirgamar

If President Rajapaksa is serious about a political solution to the Tamil question, he should outline his vision and a timetable for constitutional change.

Soon after meeting with President Mahinda Rajapaksa last month, Indian External Affairs Minister S.M. Krishna disclosed to the media, “The President assured me that he stands by his commitment to pursuing the 13th Amendment plus approach.” He also claimed that the “government of Sri Lanka has, on many occasions, conveyed to us its commitment to move towards a political settlement based on the full implementation of the 13th Amendment to the Sri Lankan Constitution, and building on it, so as to achieve meaningful devolution of powers.”

In the days that followed, media reports in Sri Lanka and eventually the President himself contradicted this claim. If such contradictions are characteristic of what Sri Lanka claims is its most important bilateral relationship, it should reflect the challenges of any minority party seeking a commitment towards a political solution from the Rajapaksa government.

The depressing political trajectory in Colombo signals losing this great post-war opportunity for a political solution. Nevertheless, the devolution debate should be kept alive with the government and the country reminded of the historic problems of the state and minorities' grievances. That is also important for inter-ethnic relations and democracy, given the continued militarisation, worrying ethnic polarisation and increasing authoritarianism. We owe that much to the people who have suffered through Sri Lanka's political tragedy.

(The writer is an activist with the Sri Lanka Democracy Forum and the South Asia Solidarity Initiative.)

http://www.thehindu.com/opinion/lead/article2893826.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.