Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ நீதிமன்றம் அமைப்பு! சிறிலங்கா அவசரம்!!

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு! சிறிலங்கா அவசரம்!!

இலங்கைப் போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையிட்டு விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போரின் இறுதிப்பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், பிரித்தானிய சனல் -4 தொலைக்காட்சி வெளியிட்ட ’கொலைக் களங்கள்’ என்ற ஆவணப்படத்தின் உள்ளடக்கம் தொடர்பாகவும் இந்த நீதிமன்றம் விசாரிக்கும் எனவும் கொழும்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலுள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷ்னானந்த டி சில்வா தலைமையிலேயே இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சட்டத்தின்படியே இந்த இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த விசாரணைகளுக்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை.

போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையுள்ள சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் மேற்கு நாடுகள் அதனை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் அடுத்த மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டுவருவதற்குத் தீர்மானித்திருக்கும் நிலையிலேயே இந்த இராணுவ நீதிமன்றம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=70599a5c-61f3-47b9-b338-44aaadd2b3fc

இது எதற்கு? நீதிபதியும் நீங்கள்தான் குற்றவாளியும் நீங்கள்தான் நடத்துங்கோ நடத்துங்கோ.

  • தொடங்கியவர்

பொன்சேகாவை விசாரித்த அதே இராணுவ நீதிபதிகள் விசாரிக்கலாம் ஆனால், தீர்ப்பு மாறுதலாக இருக்கலாம்.

சர்வதேசம், குறிப்பாக மேற்குலகம் இந்த புதிய அல்வாவை ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா? ஐ.நா. மற்றும் மேற்குலகம் இதை நிராகரிக்க நாம் பரப்புரை செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்

'சனல் 4 வீடியோ'

இந்த விசாரணையின் போது, இராணுவ வீரர் ஒருவர் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டால், அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் இராணுவச் சட்டக்கோவையின் படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி மற்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இராணுவ விசாரணை மன்றம் ஆராயும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

போரின் இறுதி நாட்களில் காயப்பட்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது, அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதேவேளை, போர் வலயத்தில் சிக்குப்பட்டிருந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களை அனுப்ப படையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டதே என்று கேள்வி எழுப்பியபோதும் அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் மறுத்தார்.

போர்க்காலத்தில் மருந்துப்பொருட்களை அனுப்பிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநா தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120215_amrycourt.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes

Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse.

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் இந்த 'இராணுவ நீதிமன்றம்' என்ற நாடகத்தை எவ்வாறு தமிழர் தரப்பு எதிர்கொள்ளவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நீதிமன்றமா? மகிந்த தனக்கு தானே வைக்கும் ஆப்பாகவும் முடியலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பயப்பீதிதான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் சாதாரண நீதிமன்றத்திலேயே கிடைக்காத நீதி, இராணுவ நீதிமன்றத்தில் மட்டும் எவ்வாறு கிடைத்துவிடப் போகின்றது!!!

வெறும் கண்துடைப்பு!!!

  • தொடங்கியவர்

சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் இது தாமதப்படுத்தும் நடவடிக்கை எனக்கூறியுள்ளது

Sri Lanka: Army Inquiry a Delaying Tactic

The Sri Lankan army’s announcement that it had appointed a five-member court of inquiry to investigate allegations that its forces committed serious violations of the laws of war appears to be another government delaying tactic in the face of mounting international pressure, Human Rights Watch said today.

http://www.hrw.org/news/2012/02/15/sri-lanka-army-inquiry-delaying-tactic

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் இது தாமதப்படுத்தும் நடவடிக்கை எனக்கூறியுள்ளது

நேரத்தை தாமத்தப்படுத்துவதில் சிங்களவருக்கு நிகர் சிங்களவர்களே.எத்தனை தீர்வுப்பொதிகளை தமிழ்ர்கள் தமது வாழ் நாளில் கண்டிருப்பார்கள்??

ஒபாமா அரசாங்கத்தின் ஆமை வேக ஐ.நா. நகர்வுகளால், தமிழர் மீது தனக்கு மிஞ்சியிருக்கும் பழிவாங்கல்களையும் நடத்தி முடிக்க அரசுக்கு எற்படுத்திக் கொடுக்க பட்டிருக்கும் இன்னொரு சந்தர்ப்பம் தான் இந்த இராணுவ நீதிமன்ற போர்க்குற்ற விசாரணை.

புலம் பெயர் தமிழர் போர்க்குற்ற விசாராணையை வேண்டுமென்றது அவர்களின் வாழுமிடங்களான ஜனநாய மேலைநாடுகள் அதை முன்னெடுக்கும் என்று நம்பியதால்த்தான். அவர்களின் விடுதலைப் போரின் 65 வருட அனுபவத்தில் இலங்கையிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என்று நம்பியதனாலேயே நாட்டை விட்டு வெளியேறினார்கள். மேலும் உள்நாட்டு விசாரணையைப் புலம்பெயர் மக்கள் ஆதாரிக்காததின் காரணம் அவர்களுக்கு அரசு மீதிருந்த அவநம்பிக்கை மட்டுமல்ல, தப்பியோடி வெளியேறிய தங்கள் அனுபவத்திலிருந்து இதில் சாட்சியம் அளிக்க முன்வருவோர் எத்தகைய பயங்கரவாதத்தை எதிர் நோக்குகிறார்கள் என்பதை முதல்த் தரமாக அறிந்திருந்தமையினாலுமேயே.

மாறாக கூட்டமைப்பு போர்குற்ற விசாரணை முதலில் வேண்டாமென்றதும் தீர்வுப் பொதிதான் வேண்டுமென்றதும், வெளிநாடுகள், இலங்கையை, உள்நாட்டிலேயே இந்த குற்றங்களை விசாரிக்க கேட்டதாலேயே. இப்படி ஒரு விசாரணை உள்நாட்டில் வருமிடத்து பொலிஸ்,காணி அதிகாரங்கள் இல்லாத கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராகச் சாட்சி சொல்வோரை அரசாங்கத்திடமிருந்து தங்களால் பாதுகாக்க முடியாது என்று நினத்ததனாலேயேயாகும். உள்நாட்டு குளப்ப நிலையை வைத்து ஆதாயம் தேட முயன்ற சீனா, இந்தியா, புஸ்கால அமெரிக்கா அதிகாரிகள் போன்றவர்கள் இது உள்நாட்டிலேயெ விசாரிக்கப் படவேண்டுமென்றார்கள். கூட்டமைப்பு இறந்தவர்கள் போக இருப்பவர்களையாவது காப்பாற்றியெடுக்க வேண்டுமென்றதினாலேயே உள்நாட்டு விசாரணையை எதிர்த்தது.

இந்த இக்காடான வேதனையில் மாட்டிக்கொண்ட இருபக்கம் இரண்டு பாதைகளை தப்பித்துக்கொள்ள எடுத்த போது பிளேக் போன்றவர்கள் புலிகள் இறந்ததற்கு தமிழர்கள் கவலைப்படவில்லை, அவர்கள் விசாரணைக்குக் கோரவில்லை, ஆனால் புலத்தில் இருப்பவர்கள் தமது தோழர்களின் இறப்புக்கு பழிவாங்கத்தான் போர்குற்ற விசாரணையை தேடுகிறார்கள் என்றார்கள். பிளெக் தனது தடுப்பு முயற்சிகள் எல்லாவற்றையும் மீறி ஒரு விசாரணை வருவதைக் கண்டவுடன் அதை உள்நாட்டு விசாரணையாக மாற்றி மீண்டும் ஒருதடவை தமிழர்களைப் பழிவாங்கி விட்டார்.

இப்போது தன் மீது சாட்டப்பட்டபோர்குற்ற விசாணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஐரோப்பாவிலிருந்து தப்பி ஓடிய ஜெகத் ஜயசூரிய தனது உதவியாளர்களை விசாணை நீதிபதிகளாக நியமித்திருக்கிறார். அதாவது முதல் குற்றவாளியான ஜெகத்தை விசாரிக்க ஒரு வழியும் இல்லை. மேலும் உண்மையான குற்றவாளிகள் யாருமே இதில் நிறுத்தப்பட மாட்டார்கள். நிறுத்தப் படப்போபவர்கள் புலிகளாக பொய் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே சாத்தியமான சாட்சிகளாக இருக்க கூடிய பலருடைய உயிர்கள் அந்தரத்தில் ஊசலாடப்போகுது. அது தப்பி சாட்சியம் அளித்தோர் மறுவாழ்வு மேல் உகத்தில்தான். அதன் பினனர், இந்த கொலைகளை செய்ய பாவிக்கப்பட்ட கருவிகள் பலரை துப்பரவு செய்ய வேண்டியிருக்கும். இவ்வளவு உயிர்களையும் காணிக்கையாக இந்த விசாரணைக்காகக் கொடுத்து கொலைக் குற்றங்களை விசாரிக்கத் தமிழர் முயன்றால் வரப்போவது இன்னொரு "Lies Agreed Upon" சினிமா மூவி மட்டுமே.

அமெரிக்க ராஜாங்க அமைச்சின் காரியதரிசிக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளைப் பற்றி வாக்குறுதிகளை அளித்த வெளியுறவு மந்திரி இப்போது தன் நிலமை தெரியாது கலங்குகிறார். இந்த பீரிசு மட்டுமல்ல இப்படி வெளிநாடுகளுக்குடன் தொடர்பு வைத்து கஸ்டப்பட்டுபோய்விட்ட வெளியுறவு மந்திரி. தமிழருக்கெதிராக வேண்டியபடியெல்லாம் பொய்சொல்லாததால்த்தான் மங்கள சமரவீர் பதவி பறிக்க பட்டார். அவரின் உயிருக்கு பலமுறை இலக்கு வைக்கப் பட்டு விட்டது. அவர் எதோ தப்பிவிட்டாலும் அவரின் நண்பர்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருக்க வில்லை. தமிழனாக இருந்து கொண்டு இவர்களுக்காக தமிழரை அழித்த கதிர்காமருக்கும் அதிர்ஸ்டம் அவ்வளவு வேலை செய்யவில்லை. "பிளக் விடோவிடம்" உறவுக்கு போன ஆண்சிலந்தியின் கதையாக இலங்கையின் முதலாவது வலிமையுள்ள வெளியுறவுத்துறை மந்திரித்தொழில் இருக்க எப்படி இந்த வெளிநாடுகள் எற்கனவே தேடி இலங்கை அரசாங்கத்தால் தாக்கபட்டவர்களப் போய் அரசாங்கத்திற்கெதிராக வாக்கு மூலம் கொடுக்கட்டும் என்று ஒரு கோடு தயார் செய்திருக்கிறார்கள்..

இலங்கை வந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் திணைக்கள உதவிக் காரியதரிசி மரியா ஒட்டரே இலங்கை ஆட்கடத்தல் தடுப்பில் முன்னேற்றம் கண்டு இருப்பதாக கூறியிருக்கிறார். அதே நேரம் அந்த அம்மையார் இலங்கையில் இருக்க வைத்தே பொய் பயங்கரவாத குற்றசாட்டுடன் கைது செய்யபட்ட ஒருவர் தன்னை கைது செய்ததற்காக வழக்கு தொடர்கிறார் என்பதற்காக ஆள் கடத்தப்பட்டிருக்கிறார். அதாவது இலங்கையில் அவர் கூறியிருப்பது போல் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அந்த முன்னேற்றத்தை பாவித்து தமிழர் சுதந்திர வாழ்க்கைக்கு உத்தரவாதம் இன்னமும் கிடைக்கவில்லை

இது தமிழர்களுக்கு வரும் ஒரு தீர்வாக இல்லாமல் போர்குற்றங்களைச்செய்த ராஜபக்ஷ "மாநில அதிகாரங்களைக் கொடுத்தால் அவர்கள் என்குற்றங்களுக்கு என்னைக் கைது செய்துவிடுவார்கள்" என்று பட்ட கவலையை நீக்க வந்த தீர்வாகத்தான் தென்படுகிறது. தமிழர்களுக்கு எதாவது ஒரு பயன் இந்த விசாரணையால் வரவேண்டுமாயிருந்தால் அது புலம் பெயர் தமிழர்கள் தங்கள் பிரதிநிதிகனினூடகக் கேட்டபடி சர்வதேச விசாரணை நடந்து அதன் மூலம் அவர்களுக்கு ஒரு தீர்வு வரவேண்டும். இல்லையேல் தாயகத்தமிழர்கள் கூட்டமைப்பினூடாகக் கேட்ட படி தீர்வொன்றைக்கொடுத்து தமிழர்களைப் பாதுகாத்தபின் ஒரு விசாரணையை கொண்டு வரவேண்டும். அதாவது இந்த விசாரணையானது தொடர்ந்து நடத்தி தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாச்சாமல் இராணுவ நீதிமன்றத்தை திறக்கக் காரணமாயிருந்த அரசுகள் உடனேயே செயலில் இறங்கி இதை நிறுத்திவைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

சிறிலங்காவின் இந்த 'இராணுவ நீதிமன்றம்' என்ற நாடகத்தை எவ்வாறு தமிழர் தரப்பு எதிர்கொள்ளவேண்டும்?

(1) தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களப் பயங்கரவாதிகளே தம்மைத் தாமே விசாரிப்பதை குறைந்த பட்சம் நீதி, நியாயத்தை மதிக்கும் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும்.

(2) தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளையோ, சிங்கள நீதித்துறையையோ எக்காலத்திலும் நம்ப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

(3) இதுவரை காலம் கடத்தி இறுதிக்கணத்தில், அவசர கோலத்தில், சிங்கள அரச பயங்கரவாதிகள் மேலும் காலத்தை கடத்தி ஜெனீவா மகாநாட்டில் தம்மைப் பாதுகாக்கும் உத்தியே இது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

(4) தமிழினப் படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட சிங்கள - இந்திய சார்பான எவரும் அடங்காத சர்வதேச விசாரணைப் பொறிமுறையும், நீதி - நட்டஈடு வழங்கும் பொறிமுறை ஒன்றையே தமிழ் மக்கள் குறைந்த பட்ச பொறிமுறையாக ஏற்றுக்கொள்வர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

மல்லையூரான் மற்றும் ஆராவமுதன்,

உங்கள் இருவரின் கருத்துக்களும் பயனுள்ளவை.

தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சுயாதீன பொறிமுறை ஒன்றை அமைப்பதன் மூலமே எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வழிசமைக்கும் என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளீர்கள்.

வரும் ஐ.நா. தொடரில் இதைப்பெற நாம் அனைவரும் எம்மால் முடிந்த பங்கை உதவியை வழங்குவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.