Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்கொள்ளையர் என்று இந்திய மீனவர்கள் மீது சூடு - இருவர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

boat-160212-150.jpg

கேரளா அருகே நடுக்கடலில் கடற்கொள்ளையர் என நினைத்து தவறாக இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்றதாக இத்தாலி சரக்கு கப்பலில் வந்த பாதுகாப்புப் படையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.கேரள மாநிலத்தின் நீண்டகரை மீன்பிடிதுறை முகத்திலிருந்து கடந்த 8-ம் தேதி மீன்பிடி படகு மூலம் இரு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடித்து விட்டு வீடு திரும்புவதற்காக நேற்று மாலை ஆலப்புழா கடற்கரையின் 14 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இத்தாலி நாட்டிற்கு சொந்தமான இன்ரிக்காலெக்ஸி என்ற சரக்கு கப்பல் எதிரே வந்து கொண்டிருந்தது.

இதில் கப்பலில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீன்பிடி படகில் வருபவர்களை கடற்கொள்ளையர்கள் என நினைத்து அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மீனவர் ஒருவரும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவரும் பலியானதாக இந்திய கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் அறித்த, இந்திய கடலோர காவல்படையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்த இத்தாலி சரக்கு கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு ‌செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து சரக்கு கப்பலில் வந்த பாதுகாப்புப்படையினரிடம் விசாரித்து வருகின்றனர்.

http://www.seithy.co...&language=tamil

கேரளக்கரையோரம் இரண்டு பேர் கொல்லப்படதற்கே விசாரணை செய்கிறார்கள். தமிழக மீனவர்கள் எத்தனை பேர் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டிருப்பார்கள்? தமிழக அரசு என்ன செய்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரளக்கரையோரம் இரண்டு பேர் கொல்லப்படதற்கே விசாரணை செய்கிறார்கள். தமிழக மீனவர்கள் எத்தனை பேர் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டிருப்பார்கள்? தமிழக அரசு என்ன செய்தது?

உலக வரமுறைகளுக்குள் தமிழருக்கான போமில வேறு,

தமிழர்கள் மேல் கிந்தியாவும் சரி உலகமும் சரி நியாயமாக நடந்து கொள்வது கிடையாது

எமது நியாயமான போராட்டத்தையும் நேர்மையான தலைமையையும் நிராகரித்தது இவர்கள்தானே

என்றோ ஒரு நாள் எமது வலிமையின் மூலம் எமக்கென ஒரு நாடொன்றை அமைக்கும் போது இவர்கள் அப்போது எமக்கு பின் நிற்பார்கள் அதுவரை வலிமையை திரட்டுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையர்கள் என நினைத்து 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள்

16-tenksai-fishermen-300.jpg

கொச்சி: கடற் கொள்ளையர்கள் என நினைத்து இரண்டு இந்திய மீனவர்களை இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆலப்புழையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது கடலில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இத்தாலி கப்பல்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2012/02/16/india-two-fishermen-from-tn-kerala-mistaken-aid0091.html

கப்பல் இத்தாலி நாட்டைச்சேர்ந்தது என்பதால் சோனியா அம்மாவின் உண்மை பற்று அதைக்காப்பாற்றி விடும் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் இத்தாலி நாட்டைச்சேர்ந்தது என்பதால் சோனியா அம்மாவின் உண்மை பற்று அதைக்காப்பாற்றி விடும் :wub:

இதுவரைக்கும் சோனியாவின் நண்பர்களான சிங்களவன் கொன்று குவித்தான் இப்போது சோனியாவின் நாட்டுக்காரர்களும் கொல்கின்றார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2 மீனவர்களை சுட்டுக் கொன்ற விவகாரம்: இத்தாலி தூதருக்கு மத்திய அரசு சம்மன்

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2012, 14:53 [iST] A A A

NewsletterIts Free!

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்

Ads by Google

£423 Flights to Colombo www.dealchecker.co.uk/Colombo

Return Flights Fr £423 For Colombo Compare All Leading Airlines Now!

Ads by Google

Free Millionaire Dating

Why Date Losers With No Future? Meet Rich Single Men In Your Area!

MillionaireForMe.com

டெல்லி: நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த விவகாரம் தொடர்பாக இத்தாலி தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இத்தாலி தூதரிடம் இந்திய அரசு தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் எனத் தெரிகிறது.

சம்பவம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கொல்லம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி அவ்வழியாக சென்ற இத்தாலிய சரக்குக் கப்பலில் சென்றோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

"கடற்கொள்ளயர்கள் என நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக" இத்தாலிய கப்பல் மாலுமிகள் விசாரணையின் போது தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து இத்தாலிய தூதரை நேரில் வருமாறு வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கண்டனத்தை வெளியுறவுத் துறை தெரிவிக்கக் கூடும்.

தவறுதலாகச் சுட்ட இத்தாலிக்குச் சம்மன் வேண்டுமென்றே சுடுகின்ற சிறிலங்காவுக்கு ஆயுதங்கள்!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி என்ன சிறிலங்கா போல ஒரு பிராந்திய வல்லரசா ?? இல்லையே, அது வெறும் ஐரோப்பிய நாடு மட்டுந்தான். இலங்கை அப்படியா?? இந்தியா, சீனா, அமெரிக்கா, பாக்கிஸ்த்தான் என்று எல்லாப் பெரிய வல்லரசுகளையும் தனது பாக்கெட்டுக்குள் போட்டு வைத்திருக்கும் குட்டி வல்லரசல்லவா?? அதனுடன் யாராவது வாலாட்ட முடியுமா???

இந்திய கரையோரத்திற்கு வந்து கடல் கொள்ளையர் என்று இத்தாலிய மாலுமிகள் துப்பாகி பிரயோகம் செய்தனர்? இந்த கப்டின் அந்த கப்பலில் ஏறமுன்னர் செய்த வேலை என்ன? தென்னை மரத்திலை ஏறி புல் பிடுங்கிற தொழில் செய்தவரோ? விசாரணை அதிகாரிகள். எற்கனவே பணம் வாங்கி விட்டார்கள் போலுள்ளது. உண்மை வெளியில் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா கடற்பரப்பில் இத்தாலிய கப்பல் படையால் கொல்லப்பட்ட இரண்டு தமிழக மீனவர்கள். இதில் அலச வேண்டிய விடயங்கள் என்னவென்றால்.

1. இந்த நிகழ்விற்கு உடனே இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

2. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி உடனே தலையிட்டு இத்தாலிய தூதரகத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

3. கேரளா காவல் துறை உடனே விரைந்து இத்தாலிய கப்பல் வாசிகளை விசாரித்தது.

4. கேரளா காவல் துறை இத்தாலிய கப்பலை தங்கள் பாதுகாப்பில் கொண்டு வந்தது .

5. கேரளா அரசும் தமிழ்நாட்டு அரசும் உடனே தலா 5 லட்சம் இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு அறிவித்தது.

6. இந்திய அரசு இத்தாலிய அரசிடம் தங்கள் ராஜதந்திர உறவை முறிக்க நேரிடும் என பயமுறுத்தியது.

7. கேரளா அரசு தன்னுடைய அரசு உயர்மட்ட குழுவை இத்தாலிய உயர்மட்ட குழுவுடன் இழப்பீடு குறித்து ஆலோசனை நடத்தியது..

மேலே குறிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு நாட்களில் நிறைவேறியது மிகப்பெரிய ஆச்சர்யத்தை தமிழக மீனவர்களுக்கு கொடுக்கிறது. இப்படிப்பட்ட எந்த நிகழ்வும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது நடக்கவில்லை என்பதை எதை குறிக்கிறது. கேரளா அரசின் சாமர்த்தியமும் தமிழக அரசின் கையாலாகாத்தனமும் வெட்ட வெளிச்சமாகிறது. கேரளா அரசிடம் தமிழக அரசு கற்றுக் கொள்ளவேண்டிய பாடமும் தெளிவாகிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கேரள மீனவர், மற்றொருவர் கேரளத்தில் தங்கி கேரளத்தவர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர். துப்பாக்கிச்சூடு நடந்தது கொல்லம் அருகில். இது முற்றிலும் கேரள மீனவர்களை பாதிக்க கூடிய செயல். அதனால் தான் இத்தனை துரிதமான நடவடிக்கைகள்...மத்தியில் இருந்து.

thanks-facebook

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 600ற்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப் பட்ட பின்பும்.... மத்திய அரசுக்கு கடிதமும், தந்தியும் அடித்த தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் இனிமேலாவாது கேரளாவை பார்த்து திருந்துங்கப்பா. இனி ஒரு தமிழனின் உயிரை மற்றவன், எடுக்க அனுமதியாதீர்கள்.

இந்திய சட்டப்படி எங்களை தண்டிக்க முடியாது : இத்தாலி

சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பரப்பாகும். இதனால் இந்திய சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர் இத்தாலிய கப்பல் குழுவினர்.இந்திய மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலியர்கள், இந்திய சட்டப்படி எங்களைத் தண்டிக்க முடியாது என்றுகூறி கொலையாளிகளை ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.

மேலும் கேரள காவல்துறையினர் கொடுத்துள்ள நோட்டீஸை இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாக இத்தாலி கப்பல் குழுவினருக்கு உதவி வரும் வழக்கறிஞர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணிகளாக இருந்த மீனவர்களை படுகொலை செய்த விவகாரம் ஏற்கெனவே இந்திய-இத்தாலி உறவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொலையாளிகளை ஒப்படைக்க மறுக்கும் விவகாரம் நிலைமையை சீர்குலைத்து வருகிறது.

சர்வதேச கடற்பரப்பா?

இதனிடையே மீனவர்கள் மீன்பிடித்த கடற்பரப்பு இந்திய கடற்பரப்புதான் என்றும் எப்போதும் கொள்ளையர் நடமாட்டம் இருந்தது இல்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதே போல் மேற்கு கடலோர காவல்படை கமாண்டர் பசாராவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடம் இந்திய கடற்பரப்புதான் என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் படுகொலை தொடர்பாக ஏற்கெனவே இத்தாலிய தூதரை நேரில் அழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதேபோல் மீனவர்களைப் படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.,கே. அந்தோணி தெரிவித்திருந்தார்.

http://www.alaikal.com/news/?p=97420

இந்தியர் என்றால் கொள்ளையர்கள் என்று தானே அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

When they went after the Eelam Tamils,

I remained silent;

I was not an Eelam Tamil.

When they Killed and locked up fishermen,

I remained silent;

I was not a fisherman.

When they banned the freedom movement,

I did not speak out;

I was not a freedom fighter.

When they came for the Local activists,

I remained silent;

I wasn't an activist.

When they came for me,

there was no one left to speak out.

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சட்டப்படி எங்களை தண்டிக்க முடியாது : இத்தாலி

சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பரப்பாகும். இதனால் இந்திய சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர் இத்தாலிய கப்பல் குழுவினர்.இந்திய மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலியர்கள், இந்திய சட்டப்படி எங்களைத் தண்டிக்க முடியாது என்றுகூறி கொலையாளிகளை ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.

மேலும் கேரள காவல்துறையினர் கொடுத்துள்ள நோட்டீஸை இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாக இத்தாலி கப்பல் குழுவினருக்கு உதவி வரும் வழக்கறிஞர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணிகளாக இருந்த மீனவர்களை படுகொலை செய்த விவகாரம் ஏற்கெனவே இந்திய-இத்தாலி உறவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொலையாளிகளை ஒப்படைக்க மறுக்கும் விவகாரம் நிலைமையை சீர்குலைத்து வருகிறது.

சர்வதேச கடற்பரப்பா?

இதனிடையே மீனவர்கள் மீன்பிடித்த கடற்பரப்பு இந்திய கடற்பரப்புதான் என்றும் எப்போதும் கொள்ளையர் நடமாட்டம் இருந்தது இல்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதே போல் மேற்கு கடலோர காவல்படை கமாண்டர் பசாராவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடம் இந்திய கடற்பரப்புதான் என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் படுகொலை தொடர்பாக ஏற்கெனவே இத்தாலிய தூதரை நேரில் அழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதேபோல் மீனவர்களைப் படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.,கே. அந்தோணி தெரிவித்திருந்தார்.

http://www.alaikal.com/news/?p=97420

கடுப்பேத்துறான் மை லாட்..........

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பாகாரன் ஒரு ஆசியாக்காரனை சுட்டால் ஆசியாக்காரன் பொங்கி எழுவான்....ஆனால் ஆசியாக்காரன் ஆசியாக்கரனையே கொத்து கொத்தாக கொன்று குவித்தாளும் கண்டு கொள்ளமாட்டான்...வெள்ளைதான் மனித உரிமை மீறுவான் ...ஆசியாக்காரன் மீறமாட்டான்...இன்னும் இந்தியாவில் வெள்ளையனை வெளியேற்று கொள்கைதான் ....மாறுங்கோடா........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.