Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன்

நேற்று பி.பி சி சிங்கள சேவையான சந்தேசயவிற்கு செவ்வியளித்த கொழும்புமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி சுமந்திரன் அவர்கள், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும், அப்பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறுமிடத்து மட்டுமே சர்வதேசத் தலையீடு தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இவ்வாறான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சில வருடங்களில் நடத்தி முடிக்கப்படக் கூடிய காரியம் அல்லவெனவும், அவை நீண்ட வருடங்களில் செயற்படுத்தப்படவேண்டியவை என்பதை 30 வருடகாலத்தில் கம்போடியா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார். கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட வேணிடிய இவ்வாறான விடயங்களை உடனேயே செய்து முடித்துவிட வேன்டும் என்று சிறிலங்கா அரசைக் கோருவது நியாயமற்றது எனவும் வாதிட்ட அவர் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமெரிக்கா கொடுத்துவரும் அழுத்தத்தை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இவரைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள், சிறிலங்கா அரசால் நடத்தப்படும் முன்னால்ப் போராளிகளின் புணருத்தாரண நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளதோடு, அவை மிகச் சிறந்த நிலையில் இருப்பதாகவும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

நல்லிணக்கக் குழுவின் அறிக்கை வெளிவந்த காலத்தில் அதனைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகக் கூறிய கூட்டமைப்பு , ஜெனீவாவில் சிங்கள அரசிற்கெதிராக தீர்மானம் கொன்டுவரப்படப் போகிறது என்று எதிர்பார்க்கப்படும் இத்தருணத்தில் தனது முன்னால் நிலையை மாற்றிக்கொண்டு முற்றான ஆதரவை வழங்குவது ஏனென்பதுதான் தெரியவில்லை.

Sumanthiran comes forward to save Rajapaksa from international investigations

[TamilNet, Thursday, 16 February 2012, 01:47 GMT]

A few days left to the UNHRC sessions in Geneva, the Colombo-based nominated parliamentarian of the Tamil National Alliance (TNA), Mr. M.A. Sumanthiran, has come out with a statement to BBC Sinhala Service on Tuesday, bailing out the regime of Mahinda Rajapaksa. “TNA backs a domestic process to implement the LLRC recommendations. We should ask for an international probe only after a failure of that,” Sumanthiran said. “It is a step-by-step process. It will take time. They took 30 years in Cambodia,” the BBC further cited the MP, who welcomed the ‘US pressure’ on the SL government. Meanwhile, the visiting US Under Secretary General of State, Maria Otero, told reporters in Colombo on Monday that the US will support a resolution at the UNHRC providing an opportunity for Sri Lanka to implement the LLRC recommendations.

The US position publicly declared now tally with what some US officials told the civil groups in Jaffna a few days ago.

The stands of a revisionist section in the TNA leadership and that of Selvarasa Pathmathan (KP) finally come to a meeting point in facilitating escape avenues to the genocidal regime of Rajapaksa, without any answers to the political fundamentals of the struggle of

Eezham Tamils

, thanks to the manoeuvrings of India and the USA that were in complicity with the regime in the conduct of the war, political observers in the island said.

Coming out with open deception on the plight of former members and cadres of the LTTE, the TNA leader R. Sampanthan on Wednesday praised Colombo's ‘rehabilitation’ of them as excellent.

“We are glad that a large number of young men and women have been rehabilitated and reintegrated into society. The

rehabilitation programme

has gone on very well,” Mr. Sampanthan was cited as saying by the Daily Mirror.

The US Assistant Secretary of State, Robert Blake, long associated with the war and its aftermath, accompanied Maria Otero to Colombo.

The Press Trust of India (PTI) cited Blake saying that the USA will back a resolution ‘against’ Sri Lanka to implement the LLRC recommendations to advance reconciliation and to address the accountability,

human rights

and democracy concerns.

However, the proposal of the USA is not much different from the stand taken earlier by India, China and Russia in the international forums.

Media campaigns talking of Indo-US pressure and Rajapaksa government cracking down are a farce to deceive the Tamils, the political observers commented.

The proposed US move in the UNHRC in Geneva neither addresses due justice for the crimes of the genocidal war nor does justice to the post-war plight of Eezham Tamils. ‘Reconciliation’, step-by-step accountability, the deception of individual human rights and ‘democracy’ are not the issues of priority for Eezham Tamils compared to land-grab, colonisation, militarisation, denial of the right to self-determination and the denial of the right to develop themselves, faced by Eezham Tamils as a nation in the island. What international forum is going to address these issues is their question.

Pre-emption, hijack and precaution against Eezham Tamils coming out with any mass agitation to check the political hoodwink are being carried out in full swing in various ways from ministries to the activities of foundations in many countries in the West, diaspora

Tamil

circles pointed out.

Meanwhile, TNA parliamentarian Sumanthiran's statement is an open rebuttal to the unanimous resolution of the Tamil Nadu State Assembly and to the struggling spirit of the people of Tamil Nadu supporting the cause of the Eezham Tamils, the political observers in the island further said.

Coming out with a detailed analysis, the TNA had earlier rejected the LLRC report.

Mahinda Rajapaksa and the forces that were in complicity with him have again achieved their ‘victory’ even before the commencement of the UNHRC sessions in Geneva.

Such victories become repeatedly possible for the unjust, due to a failure in the identification of the adversaries, lack of strategy and lack of coordinated political action on the part of the Tamils, was the feeling in the diaspora Tamil circles, who lament at not finding political leaders but only agents.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அறிக்கையின் எந்தவிடத்திலும் சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மனிதாபிமான நடவடிக்கை என்றே மீண்டும் மீண்டும் வதிடப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் புலிகளாலேயே முற்றாகச் செய்யப்பட்டதாக அப்பட்டமான ஒரு பொய்யைத் திருப்பத் திருப்பக் கூறுகிறது. அவ்வாறெ தனது இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் இவ்வறிக்கை சகட்டுமேனிக்கு, அரசாங்கத்தையும் செல்லமாகத் தட்டிச் செல்கிரது. அதுவே சுமந்திரனுக்கு போதும் என்றாகிறது.

இதே போல, போரின் இறுதிக்கட்டத்தில் கைது செய்யப்பட்டு புணருத்தாரணம் என்கிற போர்வையில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் போராளிகளின் அவலம் சுமந்திரனின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு "மிகவும் தரமான செயற்பாடுகள்" என்று தெரிகிறது.

இவர்களின் இன்றைய குத்துக்கரனங்களின் காரணம் என்ன, இதன் பின்னலிருப்பவர்கள் யாரென்பது தமிழர்களுக்குப் புரியாதது அல்ல. இதைத்தான் சென்ற வாரத்தில் முல்லைத்தீவில் தம்மைச் சந்தித்த அமெரிக்க அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போ இதுகளும் பேசி பேசியே அழியப் போகிதுகள்.

நான் அடிக்கடி யோசிப்பேன் ஏன் சமந்தம் மீது ஒரு பக்கமும் கைவைக்கவில்லை என்று, அதன் பின்புலம் பலமனதாக இருக்க வேண்டும் என்று. அந்த பின் புலம் தற்போது அதன் விளையாட்டைக் காட்டுகிறது.

கனடாவில் சுமந்திரனின் பேச்சை பார்த்த போதே ஒன்றை உணர்ந்துகொண்டேன் ,நாங்கள் தான் தமிழர்களின் பிரதிநிதி, நாங்கள் எடுக்கும் முடிவுதான் முடிவு.சும்மா நீங்கள் ஒன்றும் அலட்டிக்கொள்ள வேண்டாம் .(ஆயுதமில்லாத பிரபா ).

இதுதான் ஓடிவந்த தமிழனின் தலைவிதி .

... கூட்டமைப்புக்குள் யுத்த நிறுத்த காலத்துக்கு பின் புகுத்தப்பட்ட ... மக்களால் தெரிவு செய்யப்படாத ... நச்சு, இன்று கொஞ்சம் கொஞ்சமாக தனது வேலையை காட்ட தொடங்கியிருக்கிறது ..

1. சிங்கள எம்பிக்களுடன் கிறிக்கெட் கூத்தாட்டம்

2. புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான செவ்விகள்

3...

தொடர்ந்து ... இறுதியாக ..

*. சிங்களத்தை இனவழிப்புகள்/யுத்தக்குற்றங்களில் இருந்து காப்பாற்ற தற்போது இவ்வறிக்கை!!!

... இந்த நச்சு தொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்!!! இனியும் ... சில நாட்களுக்கு முன் கனடா அழைத்து பொங்கியது போல் .... அழைத்து கூத்தடிப்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிறுத்த வேண்டும்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்குபட்டாலும் காலைத் தூக்குமாம். அதுபோலத்தன் இங்கே சிலதுகள், திருத்த முடியாத ஜென்மங்கள்

... சிங்களம் செய்ய முடியாததை நாம் புலத்து தமிழர் செய்தோம்! அனுபவிக்கின்றோம்! ... கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களை கூட்டமைப்பில் இருந்து ஒதுங்க செய்தவுடன் ... இந்த சுமத்திர நச்சு இலகுவாக படர ஆரம்பித்து விட்டது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதைச் செய்தோம், எதை அனுபவிக்கிறோம், புரியவில்லையே நெல்லை ???

சுமந்திரனின் அணுகுமுறையும் மகிந்தாவின் அணுகுமுறை போலுள்ளது, அதாவது இரட்டை பேச்சு.

உதாரணத்திற்கு மகிந்தா கிருச்னாவுக்கு 13 பிளஸ் என உறுதி அளித்தார், பின்னர் இல்லை என்றார். இறுதியாக இலங்கை வந்த அமெரிக்கா கூட்டமைப்பை சந்தித்தபொழுது ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்களத்திற்கு எதிராக பிரேரணை கொண்டுவர ஆதரவு தந்தது.

மகிந்தாவை பொறுத்தவரையில் இதையே அவர் வெற்றிகரமாக பல இடங்களில் செய்துள்ளார். கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் கையில் மக்கள் ஆதரவை தவிர வேறு எந்த பலமும் இல்லை, எனவே 'முள்ளை முள்ளால் எடுக்கும்' அரசியல் தந்திரமே சரியானதாக இருக்கும்.

Edited by akootha

நாம் சுமந்திரனை மட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல் கூட்டமைப்பு என்ற இயக்கம் என்ன செய்கிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும். அவரகள் பேச்சு வார்த்தைகளில் யாரையும் அடக்கி ஆளமுடியாது. வெளிநாடுகளுடன் ஒத்துப்போய்த்தான் அவர்களை வைத்து எதையாவது செய்விக்க வேண்டும். மேலும் சில வருடங்களுக்கு வெளிநாடுகளின் ஊது குழலாக மட்டும்தான் இருக்க முடியும். கூட்டமைப்பு இதுவரையில் எதையும் செய்யா முடியாமல் இருக்கும்போது எதையோ பிழையாகச் செய்துவிட்டதாகக் கூக்குரலிடுவதால் எதுவும் நடந்து விடாது.

ஒருதடவை ஒரு குரு தன் சீடனிடம் ஒரு மண்குடத்தைக் கொடுத்து ஆற்றில் தண்ணிர் பிடித்துகொண்டு வரும்படி கூறினார். "குடம் பத்திரம், உடைத்துவிடாதே" என்றார். சிறுவன் ஆம் என்று தலை அசைக்க முயல குரு அவன் தலை மீது இரண்டு மூன்று தடவைகள் குட்டி விட்டர். குடத்தை ஒருகையால் பிடித்துக் கொண்டு,தலையை மறுகையால் பொத்திக் கொண்டு சிறுவன் கேட்டான் "இது எதற்கு இந்தக் குட்டுகள் குருவே; நான் தான் இன்னமும் தண்ணி அள்ளப் போகவில்லையே, குடம் பத்திரமாக்த்தானே இருக்கு?". அது சரி; ஆனால் நீ குடத்தை உடைத்துவிட்டு வந்த பின் உன்னை குட்டுவதால் என்ன பயன், அதுதான் ஏற்கனவே குட்டி விட்டேன்" என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பின் கூத்துக்குப் பின்னால இந்தியா இருக்குதெண்டு மட்டும் தெளிவா விளங்குது. அப்ப... அமெரிக்கா இந்தியாவை எதிர்த்துச் செய்யுதா? அல்லது இந்தியாவே மேற்கை கொண்டு ஒரு வளத்தில் பிள்ளையும் கிள்ளி, இங்கால நிண்டு தொட்டிலையும் ஆட்டி விடுகுதா? ரொம்பக் குழப்பமா கிடக்கு. ஆனால் ஒண்டு மட்டும் நிச்சயம் ஜெனீவாவில மகிந்தவுக்கு எதிரா ஒண்டும் நடக்காது.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டது சுமந்திரன் குடும்பமோ.. சம்பந்தன் குடும்பமோ.. அல்லது.. மாவை குடும்பமோ அல்ல..!

பாதிக்கப்பட்டது எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள்..!

கூட்டமைப்பின் அரசியல் ரீதியான முடிவுகள் கொழும்பு சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தி அதனூடு தாம் வாழ எதையும் பெறலாம் என்ற டக்கிளஸ்.. கருணா பாணிச் செயற்பாடுகளாக இருப்பின்.. கூட்டமைப்பின் தலைவிதி அது என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான்.

கூட்டமைப்பு.. வெறுமனவே ஜெனீவாவையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. அந்த வகையில்.. கூட்டமைப்பு மகிந்தரை சர்வதேச நெருக்கடி கட்டத்தில் இருந்து விடிவிப்பதன் மூலம் அவரிடம் இருந்தும்.. அவருக்கு விசுவாசமான இந்தியாவிடம் இருந்தும்.. நற்பெயரையும்.. அதற்கு பிரதியீடாக பூனைக்குட்டிகளையும் பெறலாம் என்று நினைக்கிறதோ தெரியவில்லை. கூட்டமைப்பு எதைச் செய்தாலும் தமிழ் மக்கள் அதனை அங்கீகரிக்கச் செய்வதே சிறந்தது. சிங்களவர்களை திருப்திப்படுத்தப் போய்.. கூட்டமைப்பு.. படு குழியில் விழுந்து தொலைவது, தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றிய வடுவோடு அழியவே அதற்கும் வழிகாட்டும்..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சுமந்திரனை மட்டும் கவனித்துக்கொண்டிருக்காமல் கூட்டமைப்பு என்ற இயக்கம் என்ன செய்கிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும். அவரகள் பேச்சு வார்த்தைகளில் யாரையும் அடக்கி ஆளமுடியாது. வெளிநாடுகளுடன் ஒத்துப்போய்த்தான் அவர்களை வைத்து எதையாவது செய்விக்க வேண்டும். மேலும் சில வருடங்களுக்கு வெளிநாடுகளின் ஊது குழலாக மட்டும்தான் இருக்க முடியும். கூட்டமைப்பு இதுவரையில் எதையும் செய்யா முடியாமல் இருக்கும்போது எதையோ பிழையாகச் செய்துவிட்டதாகக் கூக்குரலிடுவதால் எதுவும் நடந்து விடாது.

ஒருதடவை ஒரு குரு தன் சீடனிடம் ஒரு மண்குடத்தைக் கொடுத்து ஆற்றில் தண்ணிர் பிடித்துகொண்டு வரும்படி கூறினார். "குடம் பத்திரம், உடைத்துவிடாதே" என்றார். சிறுவன் ஆம் என்று தலை அசைக்க முயல குரு அவன் தலை மீது இரண்டு மூன்று தடவைகள் குட்டி விட்டர். குடத்தை ஒருகையால் பிடித்துக் கொண்டு,தலையை மறுகையால் பொத்திக் கொண்டு சிறுவன் கேட்டான் "இது எதற்கு இந்தக் குட்டுகள் குருவே; நான் தான் இன்னமும் தண்ணி அள்ளப் போகவில்லையே, குடம் பத்திரமாக்த்தானே இருக்கு?". அது சரி; ஆனால் நீ குடத்தை உடைத்துவிட்டு வந்த பின் உன்னை குட்டுவதால் என்ன பயன், அதுதான் ஏற்கனவே குட்டி விட்டேன்" என்றார்.

கூட்டமைப்பு.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப காய் நகர்த்தல்களைச் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால் அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தளத்தில் இருந்து பிரயோசனம் இல்லை.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்.. முன்னர் நிராகரித்ததை பின்னர் ஏற்றுக் கொள்வது என்பது அவர்களிடம் தெளிவான கொள்கை இல்லை என்பது போல் காட்டச் செய்யும். அமெரிக்காவின் இந்தியாவின் நிலைப்பாடுகளுக்காக எல்லாம் எங்கள் நியாயத்தை மாற்ற முடியாது. அது தமிழ் மக்களை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்தி.. சிங்களத்தைப் பலப்படுத்தும்.

மேலும்.. சர்வதேச கண்காணிப்பற்ற போராளிகள் பராமரிப்பில்.. சம்பந்தன் எப்படி.. எல்லாம் நல்லா நடக்குது என்று சொல்ல முடிகிறது..???! சரணடைந்த பின் 500 க்கும் மேற்பட்ட போராளிகள் காணாமல் போயுள்ளனர்.. அல்லது மர்மமாகக் கொல்லப்பட்டுள்ளனர். கிணறுகளுக்குள் உடலங்களாகக் கிடக்கின்றனர்.. தூக்கில் தொங்குகின்றனர். மேலும் முக்கிய போராளிகளின் இருப்புப் பற்றிய விபரங்களே இல்லை..! இவை எல்லாம் சர்வதேச மனித உரிமைகள்.. தரத்திற்கு ஏற்ப நல்லாவா நடக்குது..??!

சம்பந்தனும்.. சுமந்திரனும்.. மாவையும் கொஞ்சம் அதிகமாகவே... தமிழ் மக்களின் விருப்புக்கு அப்பால் நகர்ந்து சொந்த அரசியல் உணர்வுகள் சார்ந்து.. செயற்பட ஆரம்பிப்பது போல தெரிகிறது. இதனைச் செய்யப் போய் தான் இராமநாதனில்.. பொன்னம்பலத்தில் இருந்து.. அமிர்தலிங்கமும்.. நீலனும் கவுண்டு போனார்கள்.. என்பதையும் கருத்தில் எடுப்பது நன்று..!

புலிகள் களத்தில் இல்லையே என்ற உணர்வு சிலரை இப்படி செயற்படத் தூண்டினாலும்.. புலிகளின் பெற்றோராகவும்.. அவர்களை போற்றும் மக்களாகவும்.. அவர்களின் எண்ணங்களோடு மக்கள் எங்கும் உள்ளனர் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்படாத சுமந்திரன் எல்லா வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும் சம்பந்தரால் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.சுமந்திரனின் இதுவரையான செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.மாவைக்கு வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலை.சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு சம்பந்தரும் மாவை இன்னும் கன காலத்திற்கு அரசியல் செய்ய அவர்கள் வயது இடம் கொடுக்காது ஆகவே எதிர்காலத் தலைவராகத் திட்டம்.ஆக கறையான்கள்(புலிகள்)புற்றெடுக்க(த.தே.கூ) கருநாகங்கள் புகுந்து கொண்ட கதையாகப் போய் விட்டது.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன் பத்மினி வரிசையில் சிறீதரன் எம்பியையும் சேர்த்து கைகழுவப் போகிறார்கள். தமிழ் மக்கள் அரசியல்கையறு நிலையில் கூட்டமைப்பை ஆதரிக்க கூட்டமைப்பினர் தங்கள் சொந்த புத்தியைக் காட்டுகிறார்கள்.இவர்கள் எல்லோரையும் இந்தியா இலகுவாகக் கையாளுகிறது.ஜெனிவாவில் வெண்ணை திரண்டு வரும் போது தாளியை உடைத்த கையாக செயற்படுவது நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடுகள். எங்காவது ஒரு ஆறுதல் தமிழனுக்கு கிடைக்கும் என்றால்.. முந்திரியக் கொட்டை மாதிரி, குட்டையை குழப்ப முன்னுக்கு வந்திடுவாங்கள். இந்நிலையில் கஜேந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டமைப்பில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றது. ஆனால்... அவர்களை சம்பந்தன் திட்டமிட்டு வெளியேற்றியது மகாபிழை.

மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன்

இரணில் கூட கைகொடுத்தவண்ணமே அண்மைக்காலமாக இருந்து உள்ளார், ஆனால் நேற்று மகிந்தாவுக்கு எதிராக, அவரை பாதிக்கக்கூடிய அறிக்கையை விட்டுள்ளார்.

சுமந்திரனோ இல்லை கூட்டமைப்போ மகிந்தவை இறுதிவரை காப்பாற்றியதாக உறுதியாக எந்த ஆதாரமும் அறிக்கையும் இல்லை, மாறாக அவருக்கு எதிராகவே காய்களை நகர்த்திவருகின்றது. அவர்கள் சிங்கள குகைக்குள் உள்ளாதால் சாமார்த்தியமாகவே காய்களை நகர்த்தல்வேண்டும்.

அதேவேளை எமக்கு சில கசப்பான கடந்தகால நிகழ்வுகள் உள்ளதால் சந்தேகம் இயல்பாகவே வரும். இன்று சுமந்திரன் விரும்பினாலும் மகிந்தாவை காப்பாற்ற முடியாத ஒரு சூழ்நிலையை நாமாக உருவாக்குவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடுகள். எங்காவது ஒரு ஆறுதல் தமிழனுக்கு கிடைக்கும் என்றால்.. முந்திரியக் கொட்டை மாதிரி, குட்டையை குழப்ப முன்னுக்கு வந்திடுவாங்கள். இந்நிலையில் கஜேந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டமைப்பில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றது. ஆனால்... அவர்களை சம்பந்தன் திட்டமிட்டு வெளியேற்றியது மகாபிழை.

அவர் எங்க திட்டம் போடுறது? :icon_mrgreen: திட்டம் எல்லாம் இந்தியா. பேருக்கு கையெழுத்து மட்டும் சம்பந்தர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(This came in email. Can someone translate in tamil please?)

To:

-- Sandeshaya

BBC Sinhala Service ,

My attention has been drawn to your website story titled '*Sri Lanka

divided after the war, says Cabinet Minister*' in which a few statements

- Hide quoted text -

made by me in a voice interview to BBC Sandeshaya radio has been

selectively quoted. This has resulted in a wrong message being

communicated. In the voice interview, I welcomed the US moves for a

resolution against Sri Lanka at the forthcoming UNHRC sessions in Geneva,

calling on the Government of Sri Lanka to implement the LLRC

recommendations. I was then asked whether we were happy with just a

domestic process. My answer was that the international system was

such that it is a step by step process, and that it normally requires a

country to deal with such matters domestically and only upon their failure

to do so, resort to international mechanisms. I indicated this to be the

practice of the international system and did not say it as my preferred

option.

My stand, and indeed that of the TNA, is that there must

be independent international investigations. However, we did welcome the

Report of the UN Secretary General's Panel of Experts, which called on the

Government of Sri Lanka to investigate these allegations with a supervisory

and an independent role given to an international mechanism as

well. Similarly, we would welcome the impending US resolution to implement

LLRC recommendations since that too is in the direction of what we stand

for and may provide the international community with an opportunity to

remain cognizant of the matter and make further progress later.

Sumanthiran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(This came via email)

From: M A Sumanthiran <Date: 16 February 2012 15:46

Subject: Correction to story in BBC Sandeshaya

To:

Sandeshaya

BBC Sinhala Service ,

My attention has been drawn to your website story titled 'Sri Lanka divided after the war, says Cabinet Minister' in which a few statements made by me in a voice interview to BBC Sandeshaya radio has been selectively quoted. This has resulted in a wrong message being communicated. In the voice interview, I welcomed the US moves for a resolution against Sri Lanka at the forthcoming UNHRC sessions in Geneva, calling on the Government of Sri Lanka to implement the LLRC recommendations. I was then asked whether we were happy with just a domestic process. My answer was that the international system was such that it is a step by step process, and that it normally requires a country to deal with such matters domestically and only upon their failure to do so, resort to international mechanisms. I indicated this to be the practice of the international system and did not say it as my preferred option.

My stand, and indeed that of the TNA, is that there must be independent international investigations. However, we did welcome the Report of the UN Secretary General's Panel of Experts, which called on the Government of Sri Lanka to investigate these allegations with a supervisory and an independent role given to an international mechanism as well. Similarly, we would welcome the impending US resolution to implement LLRC recommendations since that too is in the direction of what we stand for and may provide the international community with an opportunity to remain cognizant of the matter and make further progress later.

Sumanthiran

--

M A Sumanthiran BSc LLM

Member of Parliament (TNA)

Attorney at Law

My answer was that the international system was such that it is a step by step process, and that it normally requires a country to deal with such matters domestically and only upon their failure to do so, resort to international mechanisms. I indicated this to be the practice of the international system and did not say it as my preferred option.

இதில் வெளிப்படையாக இல்லை/ஆம் மறுமொழியை சுமந்திரன் தவிர்க்கிறார். தமிழ்-நெட் இப்போது வெறும் பன்னடையாகி விட்டது. ஏமாற்றம்தான்.

இந்த சுமித்திரனின் ... முள்ளிவாய்க்காலுக்கு பின்னான தில்லு முள்ளு கூத்துக்கள் ஒன்று இரண்டல்ல! ... இவன் விடயத்தில் இனி அவதானமாக இருப்பது நல்லது! இனி புலத்து பொங்கலுக்கு என்ன கக்கூசு கழுவுவதென்றாலும் இக்கழுதையை அழையாதீர்கள்!!!!!

... நாங்கள் குதிரைக்கு கட்டி ஓடுமென புலத்தில் இருந்து கழுதையை அனுப்பி விட, அதற்கு கூட்டாக இருந்த உறுதியான/உரமான ... கஜேந்திரகுமார் பொன்னம்பலம் .. போன்றோரையும் உடைத்து விட்டோம்! ... அது அங்கு எப்பவென காவல் நின்ற சம்பந்தர் அன்ட் கோவிற்கு லாட்டரி விழுந்தது போல! ..

... இனி இதை பல இங்கிலீசில் பல கடிதங்கள் எழுதுவார்கள், எம்மிலும் சிலர் கட்டிப்பிடித்து அழை தயாராவார்கள்!!!????

... சுமித்திரனின் கடந்த கால பல கூத்துக்களுக்கு, அவை அவரது தனிப்பட்ட கூத்துக்கள்/கருத்துக்கள் என கூட்டமைப்பு தொடர்ந்து கருத்து தெரிவித்தது!!! எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகிறது, இந்த மக்களால் தெரிவு செய்யப்படாத கதிரையை கண்டதற்காக??????????

இல்லை ... இதுதான் கூட்டமைப்பின் தற்போதைய கொள்கையா???????????

நன்றிகள் தமிழ்நெட்! ... இவ்விடயத்தை உரிய நேரத்தில் உரிய முறையில் வெளிப்படுத்தியதற்காக ....

கொழும்பு செய்திகளின் படி ... சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக சுமித்திரன் பதவி ஏற்கலாம்? .... என சில பத்திரிகையாளர்கள் கூறுகிறார்களாம்!!! ... ஜி.எல் பிரிஸ் எந்நேரமும் ஓய்வு பெற இருப்பதாகவும், அவ்விடத்துக்கு ஒரு தமிழரை கொணர மகிந்த விரும்புவதாகவும், அதற்கு ஏற்றவர் சுமித்திரன் தான் என மகிந்த கருதுவதாகவும் சில பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்!!!!! ... .... இதுபோல் முன் நடைபெறவில்லையா???? நாம் காணாத துரோகமா????????? ....

சுமந்திரனின் அணுகுமுறையும் மகிந்தாவின் அணுகுமுறை போலுள்ளது, அதாவது இரட்டை பேச்சு.

உதாரணத்திற்கு மகிந்தா கிருச்னாவுக்கு 13 பிளஸ் என உறுதி அளித்தார், (இதைச் சொன்னது மகிந்த இல்லை - கிருஷ்ணாவே) பின்னர் இல்லை என்றார். இறுதியாக இலங்கை வந்த அமெரிக்கா கூட்டமைப்பை சந்தித்தபொழுது ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்களத்திற்கு எதிராக பிரேரணை கொண்டுவர ஆதரவு தந்தது.

மகிந்தாவை பொறுத்தவரையில் இதையே அவர் வெற்றிகரமாக பல இடங்களில் செய்துள்ளார். கூட்டமைப்பை பொறுத்தவரையில் அவர்கள் கையில் மக்கள் ஆதரவை தவிர வேறு எந்த பலமும் இல்லை, எனவே 'முள்ளை முள்ளால் எடுக்கும்' அரசியல் தந்திரமே சரியானதாக இருக்கும்.

இல்லை அகூதா அவர்களே! ராஜதந்திரம் என்ற பெயரில் நாம் நம்மை ஏமாற்றக் கூடாது.

அதுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவரும் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள அரச பயங்கரவாதிகளின் போலி நாடகத்துக்கு துணை போக முடியாது.

அடுத்தது மகிந்தவின் இரட்டைப் பேச்சு ராஜதந்திரம் (இரட்டை அணுகு முறை) என்று நீங்கள் குறிப்பிடுவதும் தவறு. குழப்பமான பத்திரிகைத் தலைப்புக்கள் - செய்திகளை வைத்து மகிந்த இரண்டுவிதமாக பேசுவதாக கருதினால் - நீங்கள் ஏமாந்தவர் ஆகிவிடுகிறீர்கள்.

மிக உன்னிப்பாக கவனியுங்கள் - மகிந்த மிகத் தெளிவாக ஒரே கருத்தையே சொல்லிவருகிறாx (சுய தணிக்கை). அவை தமிழின விரோத - தமிழின உரிமைகள் மறுப்பாகவே எப்போதும் உள்ளன. சிங்களப் பயங்கரவாத அரச உடகங்கள், சிங்கள பேரினவாத ஆங்கில ஊடகங்கள் வெளிநாடுகளை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமில்லாத தலைப்புக்களைப் போட்டு குழப்பமான முறையில் செய்திகளைப் பதிந்து விபரங்களை பூசி மெழுகி சாதுரியமாக தமிழர்களையும், அனைவரையும் ஏமாற்றி வருகின்றன. இதில் சிங்களப் பயங்கரவாத அரச உடகங்கள், சிங்கள பேரினவாத ஆங்கில ஊடகங்கள் பாரிய பணியை முன்னெடுக்கின்றன. எம்மிடம் இந்தப் பலம் குறைவு (தமிழ்நெட் மட்டும் ஓரளவு செய்கிறது).

உதாரணமாக: அண்மையில் இந்திய அரச பயங்கரவாதிகளின் பிரதிநிதி கிருஷ்ணாவே 13+ க்கு மகிந்த உடன்பட்டாx எனக் கூறினாx (சுய தணிக்கை). சிங்களப் பயங்கரவாதி மகிந்தவோ, சிங்களப் பயங்கரவாத அரசோ ஒரு கருத்தும் சொல்லவில்லை. முன்பு மன்மோகன் சிங்கே இதை அறிவித்து - பாரிய தமிழனப் படுகொலைகளை செய்த பின்னர் - நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள், என்ன செய்வது என வைக்கோவிடம் அழுது புலம்பினாx (சுய தணிக்கை). மகிந்த அப்போதும் ஒரு கருத்தையும் பகிரங்கமாகக் கூறவில்லை!

வெளியுலகை ஏமாற்றுவதற்கு தற்போது சிங்கள அரச பயங்கரவாதிகள் தற்போதைய பிரதமர், வாசுதேவ, ராஜித செனாரத்னே, பீரிஸ், ரணில், கருணா, டக்லஸ், வித்தியாதரன், சுமந்திரன், ஸ்ரீரங்கா, கேகெலிய ரம்புக்வெல, (முன்னர் கதிர்காமர், கூல் குழுவினர், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச)

போன்றவர்களைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.

மறுபக்கத்தில் மிகக் கடுமையான தமிழின விரோத கருத்துக்களை, சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகளை தமிழினக் கொலைசெய்யும் மனோநிலையில் வைத்திருக்கும் கருத்துக்களை வெளியிட விமல் வீரவன்ச, பாட்லி சம்பிக்க ரணவாக்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, ஜே.வி.பி. இன் சில உறுப்பினர்கள், குணதாச, கேகெலிய ரம்புக்வெல போன்றவர்களைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.

சம்பந்தன், சுமந்திரன் போல இல்லாமல் மகிந்தவோ, நிமல் ஸ்ரீபாலவோ, மகிந்த சமரசிங்கவோ, மைத்திரிபாலவோ மிகப் பொறுப்பான முறையிலே நடந்து வருகின்றனர். இது ராஜதந்திரம். இது அவர்கள் (மற்றவர்களைப் பயன்படுத்தி) கைக்கொள்ளும் இரட்டை அணுகு முறை. அவர்களின் இரட்டை அணுகுமுறையில்லை (இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்).

எனவே நான் மிக மதிப்பு வைத்திருக்கும் அகூதா அவர்களே - சம்பந்தன், சுமந்திரனின் எதேச்சையான கூத்துக்களை ராஜதந்திரம் என்று சொல்லி நாமும் ஏமாந்து, தமிழரும் ஏமாந்து போக துணை செய்யக் கூடாது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனவே நான் மிக மதிப்பு வைத்திருக்கும் அகூதா அவர்களே - சம்பந்தன், சுமந்திரனின் எதேச்சையான கூத்துக்களை ராஜதந்திரம் என்று சொல்லி நாமும் ஏமாந்து, தமிழரும் ஏமாந்து போக துணை செய்யக் கூடாது என நினைக்கிறேன்.

ஆராவமுதன் கூறிய கருத்துக்கள் சரியானவையே...

சம்பந்தன் நாளைக்கு கட்டையிலை போயிடுவார்.

அதைப் போல.., சுமந்திரன் கட்டையிலை போகு மட்டும்... நாம் தாங்குவமா?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்துக்கு... பென்சன் எடுக்கிற, வயசு தாண்டியும்.. எமக்கு சேவை செய்ய வேண்டாம்.

ப்ளீஸ்.... ஓய்வெடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.