Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் !

Featured Replies

பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் !

By naatham On 24 Feb, 2012 At 02:31 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments

TGTE_finance1.jpg

மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் !

சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது பணிகளை முன்னெடுக்க மக்களின் பங்களிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த இனவழிப்பு, சர்வதேச அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான அழுத்தங்களை ஏற்படுத்துவதற்குரிய கணிசமான பங்களிப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவது நீங்கள் எல்லோரும் அறிந்ததே.

தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், இவ்விவகாரம் சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.

சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்குரிய தீர்மானம் ஒன்றை, ஐ.நா மனித உரிமைச் சபையில் வருவதற்குரிய சூழல் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்தவாறு, சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை அமைக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இதiனைக் கருத்தில் கொண்டு, ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில், பல்வேறு வழிமுறைகள் ஊடாக உறுதியானதும், காத்திரமானதுமான முன்னெடுப்புகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

1 ) தமிழர்கள் வாழுகின்ற நாடுகளின் வெளிவிகார அமைச்சுக்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவற்றுடன், இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2 ) சர்வதேச சுயாதீனா விசாரணையை வலியுறுத்தும் வகையில் தபால் அட்டைகள் வெளியிடப்பட்டு, வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்க, மக்களை ஊக்கிவித்து வருகின்றது.

3 ) சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் இறுதி தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள் கருத்தறிய, பொது சன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் ஒன்று லண்டனில் இருந்து ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கி சென்று கொண்டுள்ளது.

4 ) சர்வதேச இராஜதந்திரிகள், அரசுகள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கவல்ல, ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுதந்திர போராட்டத்தை முன்னிறுத்தும், பிரச்சார கையேடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

5 ) ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற காலமுழுவதும், மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர்கள் தொடர்சியாக பங்கெடுக்கின்றனர்.

6 ) சர்வதேச சுயாதீன விசாரணையை வேண்டி, புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் சிறுசிறு மக்கள் போராட்டங்களை நடாத்த உறுதுணை வழங்குவதோடு, மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், பெப்ரவரி 27ம் நாளன்று, நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும்

மக்கள் போராட்டம் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள்சபைக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேச சுயாதீன விசாரணையை உறுதியுடன் வலியுறுத்தும் நோக்கில், பல செயற்பாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய காத்திரமான பணிகளை, இன்னும் உறுதியுடன் தீவிரமாக முன்னெடுக்க, நிதிச் சுமையும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழ் இன உணர்வுகொண்ட எம் உறவுகளான புலம் பெயர் தமிழ் மக்களாகிய உங்களின் நிதிப் பங்களிப்பை அவசரமாக வேண்டி நிற்கின்றோம்.

சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது செயற்பட எல்லோரது பங்களிப்பும் அவசியமானதாக உள்ளது.

அன்பான எம் தமிழ் உறவுகளே, காத்திரமான எமது செயற்பாடுகளை தளராது இன்னும் உறுதியுன் முன்னெடுக்க, தங்களின் நிதிப்பங்களிப்பை வேண்எ அவசர கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

காலத்தின் தேவையறிந்து உங்கள் அனைவரையும் பங்குதாரர் ஆகும் வண்ணம் அழைக்கிறோம். எம் உரிமைக்குரலுக்கு செவி சாய்ப்பீர்கள் என நம்புகின்றோம்.

தாங்கள் வழங்குகின்ற பங்களிப்பின் கண்கறிக்கை அனைவரும் அறியும் வண்ணம் மக்கள் முன்வெளிப்படுத்தப்படும் என்பதனையும் இத்தருணம் அறியத்தருகின்றோம்

வாருங்கள் தமிழ் சொந்தங்களே, தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த சனநாயக வழியிலான தமிழீழ மீட்பு போரில் பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் !

உங்கள் பங்களிப்பை நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது பின்வரும் வங்கி கணக்கில் மூலமோ வழங்கி கொள்ளலாம்.

Australia

Bank: Commonwealth Bank

Account Name: Task Group for Tamils’ Empowerment QLD Inc.,

BSB: 06 4204

account number: 10209238

swift code: CTB AAU 2S

—————————————————————————————–

UK

Bank name: Santander,

Account name: TGTE

Account no.: 02430141

Sort code.: 09-01-28

—————————————————————————————–

CANADA

Bank Name: TD CANADA TRUST

Account Name: Task Group For Tamils’ Empowerment

BRANCH NO: 01488

ACCOUNT NO: 0558-5222923

————————————————————–

USA

Bank: JPMorgan Chase Bank

Branch name: Sawmill-38

Account Name: Thavendra A Rajah

Account Number: 857238935

——————————————————————————————————-

SWITZERLAND

Bank Name: UBS AG Sparkonto CHF

Account Name: Swiss Tamils Peace and Development (STPD)

IBBAN: CH93 0025 2252 918 26M1K

Konto-Nr: 0252-00918026 M1K

Bankbeziehung: 252-918026

BIC: UBSWCHZH80A

பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் !

அது சரி - அவர்களின் உத்தியோக பூர்வ தளத்தில் நிதி சம்பந்தமான எந்தக் கோரிக்கைகளையும் காணவில்லையே!

பங்கெடுப்போம் நிதியை வென்றெடுப்போம் என்று தலைப்புப் போட்டிருக்கலாம்!

  • தொடங்கியவர்

ஐயா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி தளமான www.naathamnews.com நாதம்செய்திகள் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தாங்கள் எவ்வளவு பங்களிக்கப் போகறீர் என்று சொன்னால் பலருக்கு உற்சாகமாக இருக்கும்

நிறைய சாதிக்கும் நிறைய வேலை திட்டங்களை செய்யும் உலகத் தமிழர் பேரவைக்கே எனது ஆதரவு.

niithitheedi.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முடிவு செய்யட்டும்

தங்கள் தங்கள் செயற்பாடுகளை முன் வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள நிலையில்... நாடு கடந்த அரசை, பலப்படுத்த வேண்டியது எமது கடமை.

தற்போதுள்ள நிலையில்... நாடு கடந்த அரசை, பலப்படுத்த வேண்டியது எமது கடமை.

சிறி அண்ணா!

நாடு உறவுகள் என்று வரும்போது நாம் இருவரும் எங்கள் சொந்தப்பிரச்சனைகளை கோப தாபங்களையெல்லாம் மறந்து ஒன்றிணைகிறோம்.இதை மற்ற உறவுகளும் பின்பற்றினால் யாழ் களமே இல்லையில்லை தமிழ்தாயே! ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள்.கண்டிப்பாக இன்று என் பங்களிப்பை செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா!

நாடு உறவுகள் என்று வரும்போது நாம் இருவரும் எங்கள் சொந்தப்பிரச்சனைகளை கோப தாபங்களையெல்லாம் மறந்து ஒன்றிணைகிறோம்.இதை மற்ற உறவுகளும் பின்பற்றினால் யாழ் களமே இல்லையில்லை தமிழ்தாயே! ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள்.கண்டிப்பாக இன்று என் பங்களிப்பை செய்கிறேன்.

நன்றி நீலப்பறவை.

நடைபெற இருக்கும் ஜெனீவா மாநாட்டில், ஈழத்தமிழருக்கு நம்பிக்கை ஒளி கிடைக்கும் நிலையில்...

தனிப்பட்ட கோபதாபங்களுக்காக... ஈகோ பார்த்து, நாடு கடந்த தமிழ் தேசிய அரசை விமர்சிப்பதன் மூலம்...

எமது தலையில்.. நாமே... மீண்டும், மண்ணை அள்ளிக் கொட்ட முயற்சிக்காமல்,

ஆபிரிக்காவில் பிறந்த, தமிழ்ப் பெண்மணி நவநீதம்பிள்ளையின் முயற்சியை... வலு சேர்க்க வேண்டிய தருணம் இது.

பொங்கல் பொங்கிவரும் நேரம் பானையை... மீண்டும், உடைத்த பழியை... செய்யாமல் இருப்பதே, சாலச் சிறந்தது.

Edited by தமிழ் சிறி

சங்கீத வித்துவான் , சாத்தி, வைத்தியர் ஆகிய மூவர் ஒரு இடத்துக்கு கால் நடையாகச் சென்றார்களாம். நல்ல பசி. சாப்பிட வேண்டும். மரக்கறி வேண்டினால் பரியாரி அது பித்தம். இது கிரந்தி என்று ஒன்றையும் வே.ண்டாமல் வந்து விட்டார். சாத்திரி இராகு காலம் சகுனம் நல்லாயில்லை என்று திரும்பி விட்டார். சாதம் சமைத்த சங்கீத வித்துவான் தாளம் பிழையெனப் பானையை அடித்து உடைத்தாராம். இதுதான் இன்றைய சில தமிழ் மக்களின் நிலை ஏதாவது கூறியபடி இருப்பார்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்

ஐயா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி தளமான www.naathamnews.com நாதம்செய்திகள் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தாங்கள் எவ்வளவு பங்களிக்கப் போகறீர் என்று சொன்னால் பலருக்கு உற்சாகமாக இருக்கும்

தங்கள் தகவல்களுக்கு நன்றிகள்!

அமெரிக்க கணக்கிலக்கம் தனிப்பட்ட ஒருவர் பெயரில் இருப்பது ஏன்? அங்கு TGTE பெயரில் கணக்கு இல்லையா? ஏனைய இடங்களிலும் TGTE பெயரில் கணக்கிலக்கம் இருந்தால் நல்லதில்லையா?

எங்கள் பங்களிப்பு ஆடிக்கொருக்கா அமாவசைக்கொருக்க என்றில்லாமல் இடையறாது தாயகத்தில் தான்!

நடைபெற இருக்கும் ஜெனீவா மாநாட்டில், ஈழத்தமிழருக்கு நம்பிக்கை ஒளி கிடைக்கும் நிலையில்...

தனிப்பட்ட கோபதாபங்களுக்காக... ஈகோ பார்த்து, நாடு கடந்த தமிழ் தேசிய அரசை விமர்சிப்பதன் மூலம்...

எமது தலையில்.. நாமே... மீண்டும், மண்ணை அள்ளிக் கொட்ட முயற்சிக்காமல்,

ஆபிரிக்காவில் பிறந்த, தமிழ்ப் பெண்மணி நவநீதம்பிள்ளையின் முயற்சியை... வலு சேர்க்க வேண்டிய தருணம் இது.

பொங்கல் பொங்கிவரும் நேரம் பானையை... மீண்டும், உடைத்த பழியை... செய்யாமல் இருப்பதே, சாலச் சிறந்தது.

தமிழ் சிறி

உங்களுடன் இணைந்து நானும் எனது பங்களிப்பைச் செய்யத் தயார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை குழப்பி இரு அணியாக்குவதற்கு பணமும் நாங்களா தரவேண்டும்.

நா.க.த.அக்களே! நாலு உங்கள் அவிட்டுக்களில் சுருண்டு விழும், அள்ளி எறியுங்கள்! ... பயப்பட வேண்டாம்! ... ஆமா இப்பவும் உங்களை இயக்குவது, புலத்துக்கு புதிதாக போராட அழைத்து/அனுப்பி வைக்கப்பட்ட "தலைமைச் செயலகத்தினரா"?????????

http://youtu.be/JrOy115qTfQ

Edited by Nellaiyan

சாமி எனக்கு மறுபடியும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி :D

வேணா நான் வாயத்திறந்தா உவங்கட கழிவறைய விட உவங்கட கதையள் நாறிடும்.

SWITZERLAND

Bank Name: UBS AG Sparkonto CHF

Account Name: Swiss Tamils Peace and Development (STPD)

IBBAN: CH93 0025 2252 918 26M1K

Konto-Nr: 0252-00918026 M1K

Bankbeziehung: 252-918026

BIC: UBSWCHZH80A

போதுமய்யா போதும். இருக்கிற அமைப்புகளை ஒழுங்கா வச்சிருங்கோ. ஆமா இது எப்ப என்ன காரணத்துக்காக தொடங்கினீங்கய்யா? அப்புறம் ஏதாவது பிரச்சனை என்றவுடன் சங்கத்தை கலச்சிட்டு நீங்க மாறீடுவீங்களா (ஏற்கனவே WTCC கலச்ச மாதிரி). சேசச என்ன பண்ணினாலும் என்ற வாயை கட்டுப்படுத்த முடியேலை. இத்தோட நிறுத்திக்கொள்ளுறன். என்ன கறுமமோ கண்றாவியோ பண்ணித் தொலைங்க. இந்த முறை யார் ஏமாறப்போறாங்களோ. கடவுள் தான் காப்பாத்தனும்.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GTV இற்கி்றைக்கும் நீா் தலைமைச்செயலகம் வழியோட நாகாவுக்கும் அங்கே பொசியுமாம்.

பாடல் மிகப் பொருத்தமான பாடல்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூத்தமைப்பு === நாடு நடக்காத தமிழீழ அரசு ரெண்டும் முயலின்ட போட்டியில் ஆமையல்ல நத்தை கூட ஜெயித்து விடும் போல கிடாக்கு.. ஒரு கண்றாவியும் காணோம் .. ஜப்பானில் ஜாக்கிசானை சந்திதித்தோம் அமெரிக்காவில் மைகல் ஜாக்சனை சந்தித்தித்தம் .. அவருக்கு டீ வாங்கின செலவு என உருவுவது போல தெரியுது.... நமது ஆதரவு இமானுவேல் அடிகளாருக்கே...!!! :) :)

தமிழ்தேசிய கூத்தமைப்பு === நாடு நடக்காத தமிழீழ அரசு ரெண்டும் முயலின்ட போட்டியில் ஆமையல்ல நத்தை கூட ஜெயித்து விடும் போல கிடாக்கு..

கூத்தமைப்பினர் இந்தியக் காட்டுமிராண்டிகளை முழுமையாக கைவிட்ட பின்னர் புலிவேகத்தில் செல்வர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.