Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் எம்பி. ராதிகாவின் கனடாவின் சனத்தொகை பற்றிய கணக்கு

Featured Replies

இது பற்றி ரொறன்ரோ சண் பத்திரிகையில் வந்த செய்தி

http://m.torontosun....rys-basic-facts

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜனநாயகம்..! சனத்தொகை தெரியாத வேட்பாளர் என்பதைத் தெரிந்தோ தெரியாமலோதான் தொகுதி வாக்காளர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..! :D இவரை அவமதித்து ரொராண்டோ சன் எழுதுவது இவரது தொகுதி மக்களை அவமதிப்பது போலாகும்..! :D

இப்படி நடப்பது கனடாவில் இதுதான் முதல் தடவையும் அல்ல. எமக்கு முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு முதல் தடவை. ஆனால், அவர் இவ்வாறான பிழைகளை தவிர்ப்பது நன்று. ஏனெனில் பல ஊடகங்களும் இனவாதிகளும் இப்படி சந்தர்பங்களை பார்த்து ஏங்கிய வண்ணம் உள்ளனர்.

முன்னைய கனேடிய பிரதமரின் மகன் ஜஸ்டின் ருடோ, க்யூபெக் உறுப்பினர், இந்த ஹார்ப்பர் அரசை விட க்யூபெக் பிரிந்து போவதே நல்லம் என்றார். பொதுவாக இப்படியான கூற்றுக்கள் மிகவும் பாதகமானவை,ஆனால், அதை இராதிகா கூறியிருந்தால் பலரும் அவரை பதவியில் இருந்து விலக கேட்டு இருப்பார்கள்.

கடந்த அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கட்சியின் உப சனாதிபதி வேட்பாளர், சார பேலின், இவ்வாறு எத்தனையோ பிழையான தகவல்களை வழங்கினார். இன்றும் உப சனாதிபதி ஜோ பைடன் பல நிகழ்வுகளில் தூங்குவார். அதைவிட மேலும் பல ஆதாரங்கள்:

1. http://en.wikipedia....icrophone_gaffe

2. http://www.torontosu...-gaffes-of-2011

Edited by akootha

  • தொடங்கியவர்

நான் இவரது தொகுதி இல்லையாக்கும் :lol: :lol:

அண்மையில் பரீட்சார்த்தமாக புதிய கனேடியர்களுக்காக வைக்கப்படும் கேள்விகளை இங்கே பிறந்து பல தலைமுறைகளாக இருக்கும் கனேடியர்கள் மத்தியில் வைத்தனர். அதன்படி அனேகமானோர் கனேடியர்களாக வரத்தகுதி இல்லாதவர்கள்.

இது ஜனநாயகம்..! சனத்தொகை தெரியாத வேட்பாளர் என்பதைத் தெரிந்தோ தெரியாமலோதான் தொகுதி வாக்காளர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..! :D இவரை அவமதித்து ரொராண்டோ சன் எழுதுவது இவரது தொகுதி மக்களை அவமதிப்பது போலாகும்..! :D

டொராண்டோ நகரபிதா ராப் போர்ட் தன்னை கனடாவின் மிகப்பெரிய பத்திரிகையான டொராண்டோ ஸ்டார் அவமதித்தாக கூறி அந்தப்பத்திரிகையிடம் எல்லா தொடர்புகளையும் நிறுத்திவிட்டார்.

அதே போல் இவ்வாறான வலது(இடது) சாரி அரசியல்வாதிகள் இடது(வலது) சார் ஊடகங்களை ஒதுக்குவதும் வழமை.

கனடாவில் மிகக்கீழ்த்தரமாக எழுதும் பத்திரிகை என்றால் அது சண் பத்திரிகையாகத்தான் இருக்கும்.

எனினும் ராதிகாவின் தவறு தவறுதான்.

புள்ளிவிபரமாக பேசுகையில் தவறு விடச் சாத்தியமுண்டு. பேசும் பொழுது 'if i remember the number correctly' என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும், இனி வரும் நிகழ்வுகளில் ராதிகா கவனமாக இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

Born in Sri Lanka, she grew up in Canada, attended U of T, graduated from Ottawa’s Carleton University, and has a master’s from Queens.

So she’s no dummy.

பிழைகளை பிடித்து பிழைத்துக்கொள்ளும் இனவாதி பத்திரிகைககளுக்கு தீனி போடாமல் ராதிகா பார்த்துக்கொள்ள வேண்டும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டும். நமக்குள் பேசுவது எப்படியும் இருக்கலாம் நாங்கள் புரிந்து கொள்வோம் கனடிய மட்டத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவதானத்திற்கு உரியவை. பொதுவாக மிகவும் இளையவரான இவர் கனடிய அரசியலில் தமிழினத்தின் வாயிலாக வெற்றியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் மற்றைய இனத்தவர்களின் வெறுப்பு(இந்த வெறுப்பு எவ்வகையானது என்று என்னால் தரம் பிரிக்கமுடியவில்லை பொதுவாக எல்லா விடயங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்) அவர்கள் இவர் நோக்கி மொழியும் வார்த்தைகளில் தெறிக்கிறது. இலகுவாக குறை சொல்லிவிட்டு இவர் சின்னப்பிள்ளை என்று சிரித்துக் கொண்டே சடைவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே ராதிகா மிகுந்த கவனம் எடுத்து கனதியான ஒருவராக மாற்றமடையவேண்டும்.

“That’s nine million Canadians standing together to fight for human rights.”

Someone in the audience interjected and said Canada’s population was 33 million. Sitsabaiesan seemed a bit flustered, but recovered quickly: “You know what I was thinking of … I was thinking of the people that came out and voted in the last election.”

ஒரு விதத்தில் இராதிகா கூறியது சரியாக இருக்கலாம். மொத்த சனத்தொகையில் ஒன்பது மில்லியன்கள் மட்டுமே மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றைப்பேசும்போது அவதானமாகப்பேசுவது அரசியலாளர்களின் கடமை. ராதிகாவின் பிழையாக இருந்தாலும். சண். ரொரன்ரோ ஸ்டார் இவையெல்லாம் மறைமுகமான தமிழருக்கு எதிரான இனவாதப்பத்திரிகைகள். இவர்கள் தமிழர்களுக்கிடையே நடைபெறும் சிறு குற்றங்களையும் பிழைகளையும் பெரிதாகக் கொட்டை எழுத்தில் படம்பிடித்துக்காட்டி தொடர்ந்து எழுதுவார்கள். ஆனால் தமிழருக்கிடையில் நடைபெறும் அதிகமானசெயல்களைப்பற்றி எழுதுவதே இல்லை. தவிர்க்கமுடியாதவிடத்து எங்காவது மூலையில் சின்ன எழுத்தில் போடுவார்கள். இது அவர்களின் இனவாதப்போக்கு.

இது காலம் காலமாக நடந்துவரும் செயல்தான்.

ராதிகாவை அடுத்த தேர்தலில் ஓரம் கட்டிவிடவேண்டும் என்பது சண், ரொரன்ரோ ஸ்டார், ஸ்காபரோ மிரர் கச்சிதமாச் செயற்படுகின்றன. அதற்கு இடம் கொடுத்தால் போல் ராதிகாவும் நடந்து கொள்ளக்கூடாது. பொது அறிவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். எந்த இடத்தில் எப்படிப்பேசுவது என்பது முக்கியம். தெரியாத தகவல்களைப்பேசாது விடுவதே நல்ல செயல். தனித்தமிழர் வாக்குகளை வைத்து தேர்தலில் ஜெயிக்கமுடியாது. ராதிகா சில இடங்கனில் சிறுபிள்ளைத்தனமாகப்பேசுவதையும் நான் அவதானித்து இருக்கின்றேன். அரசியல் நுழைவாயிலில் இருக்கும் ராதிகா தன்னை அங்கு நிறுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். தனியத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றிப்பேசுவதும், தனிய தமிழர்கள் நிகழ்வுகளில் பங்குபற்றுவதும் கனடாவில் அரசியலில் நிலைத்து நிற்கமுடியாது. எங்களை அவர்கள் ஓரம்கட்ட நாங்களே பாதை அமைத்துக்கொடுக்கக்கூடாது. உலக அரசியல் அறிவை கனதியாக வளர்த்து அரசியலில் நிலைக்க வாழ்த்துக்கள்! இனவாதங்கள் எங்களைக்குறிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிசியல் ஞானம் இல்லாத எத்தனையோ கனடிய அரசியலாளர்களை நான் பார்த்து இருக்கின்றேன். அவர்கள் பேசாமல் இருப்பதால் அறிவாளிகள் போலத் தோற்றமளிப்பார்கள்.

எத்தனைபேர் கனடாவின் அரசியல் தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கின்றார்கள். அந்தக்கணக்கே அனித உரிமை ஆர்வலக்ள் எண்ணிக்கைக்குப் பொருத்தமாகவிருக்கும். அவர்களின் எண்ணிக்கை சரியானதா இல்லையே. எல்லாம் ஒரு மதிப்பீட்டு எண்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணுக்கணக்குத் தெரியாவிட்டால் மிலியன்ஸ் ஒஃப் கனேடியன்ஸ் என்று சும்மா அடிச்சுவிட்டால் பிரச்சினை வராது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.