Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கோரி உறுப்பு நாடுகளுக்கு இரா.சம்பந்தன் அவசர கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan.jpg

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட சிறிலங்கா அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்தும், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அவர் இந்தக் கடிதத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறலகள் தொடர்பாக நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறும் கேட்டுள்ளார்.

http://www.puthinapp...?20120301105692

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடி குத்துக்கரணமடிக்க மாட்டீர்கள்தானே!!!!

இந்தகடிதம் மாசி மாதம் 27 ஆம் திகதி இடப்பட்டுள்ளது ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=98674 ) அன்று இவர் கொழும்பில் நடந்த இராவய நிகழ்வில் மகிந்தாவிடனும் இரணில் உடனும் கூடவே இருந்துள்ளார் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=98630 )

கூட இருந்துகொண்டே கடிதத்தையும் அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளார் சம்பந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி கூட இருந்து குழிபறிச்சிட்டானே!!!!!!!!!!!!!!!

இது இப்ப மகிந்தா சொல்வது.

இதே வசனத்தை தமிழ்மக்கள் சொல்லும்படி சம்பந்தர் நடந்து கொள்ளக் கூடாது.(இனிவருங்காலங்களில்)

மக்கள் கருத்துக்களுக்கு முன்னால் மற்றவை எடுபடாது என்பது இதன் மூலம் புலனாகின்றது.

சம்பந்தர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஜெனீவா மாநாடு தொடர்பான த.தே.கூ.வின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது: யாழ். பல்கலை மாணவர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்று ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில் மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக நம்பச் செய்து இறுதி நேரத்தில் எதிர்பாராத முடிவொன்றினை எடுத்தமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். போரில் நாம் இழந்த இழப்புக்களும் எமக்குச் சாதகமானதொரு சூழலைச் சர்வதேசத்தில் உருவாக்குவதற்குப் புலம்பெயர் உறவுகள் காட்டிவரும் அக்கறையினையும் அதற்கான அவர்களின் காத்திரமான பங்களிப்பினையும் பெறுமதியற்றதாக்கும் வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனையொரு வரலாற்றுத் தவறாகவும் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம். இவ்வாறான மக்கள் விருப்புக்கு முரணான முடிவுகளை எடுப்பது இது முதற்தடவையல்ல என்பதனையும் ஞாபகம் செய்வதுடன், இத்தீர்மானத்தின் பின்னரான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநாட்டின் காலப்பகுதிக்குள் அதில் பங்குபற்றுவது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றினை விரைந்து எடுக்க வேண்டுகின்றோம்.

இன்றைய தேசிய சர்வதேசிய அரசியல் சூழ்நிலைக்குள் தமிழர் போராட்டமும் தமிழினம் முகங்கொண்ட இன அழிவுகளும் இராஜதந்திர அணுகுமுறைக்குள் முக்கியமானதொரு கருப்பொருளாகப் பார்க்கப்படும் இத்தருணத்தில் அதனைக் கருத்தின்றிச் செல்லுபடியற்றதாக்கும் வகையிலும் இழப்புக்களுக்குப் பொருளற்றதாக்கும் வகையிலும் எவரேனும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்ற வகையிலும் மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய முறையிலான விருப்பொன்றிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமேயன்றி வேறெந்த சமூகத்தவர்களின் விருப்புக்களை உள்ளடக்கிய அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்ற, வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்கின்றதான அரசியல் செயன்முறைகளைக் கொண்டிருப்பதனை நாம் நிராகரிக்கின்றோம்.

குறிப்பாக தமிழ்த் தேசியம் தொடர்பான நிலைப்பாடுகளிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளிலும் தமிழ் மக்களின் விருப்புக்களிலான தீர்மானங்களையே எப்பொழுதும் எடுக்க முயலவேண்டும். அதற்கென்றே மக்கள் ஆணையும் வழங்கியுள்ளார்கள். இவ்வாணைக்குச் சாதகமாக புலத்திலுள்ள மக்கள் ஆதரவினையும் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறான ஆணைக்கு எதிரான தீர்மானம் ஒன்றாகவே தற்போதைய முடிவினைக் கருதுகின்றோம்.

அத்துடன் ஜெனீவா மனிதவுரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் அரசாங்கமும் அதனோடு இணைந்துள்ள கட்சிகளும் காட்டிவரும் பிரதிபலிப்புக்களும் எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அதற்காக முழு அரச நிர்வாகங்களையும் பலாத்காரமாக நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் மனவுணர்வுகளுக்கு எதிரான விதத்தில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான பலாத்காரமான ஆட்சேர்ப்புக்களும் நாட்டில் இனரீதியான வேற்றுமையையும் சிங்களத் தேசியவாதத்தையுமே பிரதிபலிக்கின்றதேயன்றி வேறொன்றுமில்லை. இவ்வாறான தீவிர, தமிழர்களை அடிமைப்படுத்தும் மனநிலை கொண்டுள்ள அரசாங்கம் தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சிப்பதாகக் கூறுவதும் அதற்கான வேலைப்பாடுகளும் வெறும் ஏமாற்று வேலையே.

இதற்குத் துணைபோகும் வகையிலோ, மக்களின் உணர்வுகளைச் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள எந்த முடிவுகளுக்கும் எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதுடன், அதற்காக ஜனநாயக ரீதியில் போராடவும் நாம் தள்ளப்படுவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirr...1-08-42-15.html

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் கடிதம் எழுதினார்.

சம்பந்தனும் கடிதம் எழுதுகிறார்.

முத்திரைச் செலவோடை... அலுவல் முடிஞ்சுது.

ஜெனிவாவுக்கு, நேரில் போகும் வழியை பாருங்கப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்களின் கருத்தை விடுதலை உணர்வை சரியாக பிரதிபலிக்கக் கூடிய புதிய தலைமுறை அரசியல் தலைமைகளை மக்கள் உருவாக்க வேண்டும். சம்பந்தன் போன்ற சந்தர்ப்பவாத தலைமைகளை எனியும் மக்கள் நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தேசிய தலைவர் கொடுத்த பணியையே சம்பந்தன் நிறைவு செய்யவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது கூட.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்... சம்பந்தனால் வெளியில் தூக்கி எறியப்பட்ட உறவுகள் தான் புலம்பெயர் மக்களோடும் தொடர்புகளைக் கொண்டிருந்து மக்களின் உணர்வுகளை உள்வாங்கிச் செயற்பட்டனர்.

தாயகத்தில் சரியான அரசியல் தளம் இல்லையேல்.. மக்களின் குரல் அங்கிருந்து சரியாக ஒலிக்கவில்லையேல் அது தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியில் பின்னடைவாகவே அமையும்.

அந்த வகையில் மக்களின் குரல் சரியாக அங்கிருந்து வெளிப்பட முடியாத சூழலை திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் ஒட்டுக்குழுக்களைப் போல.. சிங்கள அரசின் ஆசி வேண்டி செய்வதாக தெரிகிறது.

இந்த நிலையை தவிர்க்க பொதுமக்களின் பால் அக்கறையுள்ள பொது அமைப்புக்களும்..மாணவ அமைப்புக்களும்.. மற்றும் கல்வியாளர்களும்.. ஒரு பகிரங்க வேண்டுகோளை சர்வதேசத்தின் முன் வைப்பதோடு.. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் தேவைகளையும் சொல்ல முன் வர வேண்டும்..! தொடர்ந்து பயந்து கொண்டிருப்பதால்.. அநியாயம் செய்பவர்களே தண்டனை இன்றி தப்பிப் பிழைக்க வழி பிறக்கும்.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து மக்களின் குரலுக்கு செவிமடுக்காது செயற்படுமானால்.. அதற்கு மாற்றீடான அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்கவும் செயற்படவும்.. அதற்கு ஏற்ப புதிய தலைமுறை மக்களை தூண்டவும் வழிநடத்தவும் வேண்டும். இதுவிடயத்தில் எவருமே.. ஒட்டுக்குழுக்களிடமோ சிங்கள அரசிடமோ சோரம் போவதை நினைத்தும் கூடப் பார்க்கக் கூடாது..!

டக்கிளஸ் போன்ற சொந்த மக்களின் அழிவில் அரசியல் நியாயம் தேடும் குள்ள நரிகளை ஓநாய்களை எல்லாம் மக்கள் முற்றாக புறக்கணிக்கும் முடிவை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் அவர்கள் எப்படி மக்களை பாவித்து அரசியல் செய்கிறார்களோ.. அதைப் போல மக்களும் அவர்களைப் பாவித்துவிட்டு நாளை தூக்கி எறிய பின் நிற்கக் கூடாது..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு கூட்டமைப்பின் பாரளுமன்றுருப்பினர் ஒருவர் கருத்துக்கூரும்போது சொன்னவர் சம்பந்தன் ஐயாவுக்கு 80 வயசாம் அவரின் அரசியல் அறிவை குறைத்து மதிப்பிடவேண்டாமாம் எனக்கென்னமோ இந்த வயது முதிர்ந்த அரசியல்வாதிகளே இப்படியோ என எண்ணத்தோன்றுகின்றது உதாரணத்துக்கு கலைஞரும் அப்படித்தான் கடிதம் போடுவது முன்னுக்கு பின் முரணான அறிக்கை விடுவது இவர்றைப்பார்க்கும் போது சம்பந்தன் ஐயாவுக்கு வாக்கு மாறிடிச்சோ என்று என்னும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கைகள் உள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தன் அவசர கடிதம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 47 உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். பெப்ரவரி 27 என திகதியிடப்பட்ட இக்கடிதம் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என தெரிவித்ததன் பின்னர் இக்கடிதத்தினை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரா.சம்பந்தனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் சாரம் வருமாறு...

• மே 2009இல் இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகம் யுத்தத்தின் இறுதிக்கட்டம் பற்றி தனக்கு அறிக்கையளிக்கவென ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. உண்மையைக் கூறுவதும் குற்றமிழைத்தவர்களை இனங்காணலும் கடந்தகால துயரங்கள் மீண்டும் ஏற்படாவண்ணம் இருப்பதற்கான சிறந்த வழி என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

• இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் குறைபாடுகளை நாம் சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினோம். இருப்பினும் கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளின் நல்ல அம்சங்கள் சிலவற்றையும் இனம் காண்போம். அவை வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து இராணுத்தை விரைந்து அகற்றுவது, துணைப் படைகளின் மனித உரிமை மீறல்களை விசாரித்தல், அதிகாரத்தை பகிர்வதற்கான நாடாளுமன்ற சட்டங்களை இயற்றுதல் என்பனவே அவை. ஆயினும் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

• கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு கூறியது. அது துணைப்படைகளின் ஆயுதங்களைக் களையவேண்டுமெனக் கூறியது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் எதுவும் செய்யவில்லை.

• மனித உரிமைகள், மனித பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமாகவே உள்ளன. வாழ்வின் சகல அம்பங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது. சிவில் நிர்வாகம் தொழிற்படுவதற்கு இராணுவம் தடையாக உள்ளது. அரச, தனியார் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி பயன்படுத்துகின்றது. மக்கள் மீள்குடியேறவேண்டிய இடங்களில் இராணுவக் குடியிருப்புகளை அமைத்துவருகின்றது.

• இராணுவ மயப்படுத்தலினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள், குழந்தைகள் உள்ளனர். முன்னார் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் அங்கத்தவர்கள், சுகம் வழங்கும் பெண்களாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பலாத்காரம் செய்தல், மனிதக் கடத்தல், விபசாரம் ஆகிய சம்பவங்களில் துணைப்படையினர் இராணுவத்துடன் சேர்ந்து செயற்படுகின்றனர்.

• ஜனநாயக ரீதியாக இலங்கை தமிழ் மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை அரசாங்கம் புறக்கணித்தே வந்துள்ளன. வடக்கு, கிழக்கின் இன கட்டமைப்பை திட்டமிட்டு மாற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது. அரசாங்கசேவையில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிப்படுகின்றனர். போரின்போது பல இந்து கோவில்கள் அழிக்கப்பட்டன. பௌத்த விகாரைகள் அமைப்பதில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது.

• மேற்படி பாதகங்களை நீக்கும் வகையில் வடக்கு, கிழக்குக்கு அரச அதிகாரம் வழங்கப்படுவது அவசியம். அரசாங்கம் ஜனவரி 2012இல் இருபக்க பேச்சுவார்த்தையிலிருந்து ஒருதலைப்பட்டசமாக விலகியுள்ளது. பிரிக்கப்படாத, ஐக்கிய இலங்கையினுள் நியாயமான நடைமுறைச் சாத்தியமான நிலைத்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை உருவாக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியோடு உள்ளோம்.

• யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்கள் தொடர்பில் உண்மையறியப்பட வேண்டும். நீதியும் பரிகாரமும் காணப்பட வேண்டும் என நாம் நம்புகின்றோம்.

• ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை நடைமுறைப்படுத்த இதுவரை ஏதும் செய்யவில்லை எனவும் அது பொறுப்புக் கூறும் விடயத்தை கருத்திலெடுத்து செயற்பட வேண்டும் எனவும் கூறும் ஒரு தீர்மானம் வரவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த தீர்மானம் கொடுக்கவல்லது. இதன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் மெய்படுமென நம்புகின்றோம்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36839-2012-03-01-12-02-57.html

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு கூட்டமைப்பின் பாரளுமன்றுருப்பினர் ஒருவர் கருத்துக்கூரும்போது சொன்னவர் சம்பந்தன் ஐயாவுக்கு 80 வயசாம் அவரின் அரசியல் அறிவை குறைத்து மதிப்பிடவேண்டாமாம் எனக்கென்னமோ இந்த வயது முதிர்ந்த அரசியல்வாதிகளே இப்படியோ என எண்ணத்தோன்றுகின்றது உதாரணத்துக்கு கலைஞரும் அப்படித்தான் கடிதம் போடுவது முன்னுக்கு பின் முரணான அறிக்கை விடுவது இவர்றைப்பார்க்கும் போது சம்பந்தன் ஐயாவுக்கு வாக்கு மாறிடிச்சோ என்று என்னும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கைகள் உள்ளது.

வயது கூடின எல்லாரும் அனுபவ சாலிகள் என்று நம்பிக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கை தான். என்னைப் பொறுத்தவரை வயது கூடும் போது சிலர் தலைமைத்துவத்திற்கு ஒவ்வாத இயல்புகளைப் பெறுகின்றனர் என நம்புகிறேன். உதாரணத்திற்கு, ஆன்மீகம் தத்துவம் என்று பரந்த பார்வை வந்து விட்டால், இனம் மொழி எனும் வட்டங்களுக்குள் நின்று சிந்திக்கத் தயங்கி இணக்க அரசியல் வழியில் போக வாய்ப்புண்டு. இது இணக்க அரசியல் செய்பவருக்கு நன்மை தரும், அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு தீமை தரும். இணக்க அரசியலைப் பலவீனமாகப் பார்க்கும் எதிரிக்கு வெற்றியும் துணிவும் தரும். இது மாதிரி ஏதாவது தான் சம்பந்தருக்கு நடக்குதோ தெரியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.