Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது பிரான்ஸ், இத்தாலி தேசியச் செயற்பாட்டாளர்கள் விடுதலை

Featured Replies

[ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 05:21.33 PM GMT ]

ltte12.jpgகடந்த 2007ம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பயங்கவாதத்திற்கும், போராட்டத்திற்கும் உதவினார்கள் என்று சிறைப்பிடிக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு 2009 இறுதிப் பகுதியில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு நவம்பர் 23ம் திகதி 7 வருடம், 5 வருடம், 4 வருடம் எனவும் சிலர் நிரபராதிகள் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் ஒரு பயங்கரவாதப் போராட்டத்திற்கு உதவவில்லை என்றும் அது மனிதநேயத்துடன் உலக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றியது என தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியதுடன் தீர்ப்பை ஏற்றுக்

கொள்ளாது மேல் முறையீடு செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு பொறுப்பாளராக இருந்த திரு.ந.மதிந்திரன் அவர்களை விடுதலை செய்திருந்தது.

தொடர்ந்தும் பூரண விசாரணையை 2011 டிசெம்பர் 6ம் திகதி எடுத்துக் கொண்டு 3 நாட்கள் விசாரணை செய்து கடந்த 22ம் திகதி மேல்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில் 7 வருடங்கள் கொடுக்கப்பட்ட தண்டணையை 5 வருடங்களாக்கியதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு அனைவரும் வெளியில் விடப்பட்டுள்ளனர்.

இனி எவரும் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையிருக்காது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று இதே காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர்கள் படிப்படியாக மூன்று மாதங்களுக்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவர்களின் வழக்கு மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெற்று வழக்கினைத் தள்ளுபடி செய்து அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

64 பக்கங்கள் கொண்ட இத் தீர்ப்பானது 23ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு.

"UNO Convention 1999 (New York) art.21 அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதம் என்று கூற முடியாது. ஏனென்றால் அதன் செயல்கள் ஒரு போராட்ட சூழ்நிலையில் ஒரு நாட்டின் இராணுவத்தினராலும், ஒரு இயக்கத்தினராலும் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளாலும் நடாத்தப்பட்டதால் அவ்வாறான விடயங்கள் பயங்கரவாதம் என்று கூற முடியாது போர்க்குற்றம் என்று கூறப்பட வேண்டும்.

‘விடுதலைப் புலிகள் வெறும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அரசியல் ரீதியாக ஓர் அரசுக்குரிய கட்டுமானங்களையும் செயற்படுத்தியவர்கள். ‘விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்வதற்கு நாடு கடந்த எந்தவிதமான தாக்குதல்களையும் நடாத்தவில்லை.

ஒரு விடயம் மட்டும் ராஜீவ்காந்தி கொலை. இதை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் இன்னும் இல்லை (சீக் இனத்தவர் செய்திருக்கலாம் என்ற குழப்பங்கள்) ‘நிதி சேர்த்ததானது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக இருக்கலாம்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு செய்வதற்கு பயன்பட்டதாகவோ அல்லது அந்த நோக்கத்திற்காகவோ பயன்பட்டதற்கான ஆதாரம் இல்லை. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, தீர்ப்பு வெளிவந்த நிலையில் தேசியச் செயற்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதுபோன்ற பல செய்திகளை, தமிழின விரோத சக்திகள் பரப்பிவந்தன. தமிழ் மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதுடன், ஜெனீவாவில் மார்ச் 5ம் திகதி நடைபெறும் பாரிய எழுச்சியைத் தடுக்கும் வகையிலும் இப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.

எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் செல் நகரத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வொன்றில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளரும், மனிதநேயச் செயற்பாட்டாளராய் செயற்பட்டு சிறைத்தண்டனை பெற்றவருமாகிய திரு.து.மேத்தா அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் உரையாற்றியுமிருந்தது இவர்களின் பொய்ப் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

http://tamilwin.com/show-RUmqyDTXPcfv4.html

நல்ல செய்தி. மேல் முறையீடு செய்தது பயனளித்துள்ளது!

‘விடுதலைப் புலிகள் வெறும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அரசியல் ரீதியாக ஓர் அரசுக்குரிய கட்டுமானங்களையும் செயற்படுத்தியவர்கள். ‘விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்வதற்கு நாடு கடந்த எந்தவிதமான தாக்குதல்களையும் நடாத்தவில்லை.

அது சரி தான். ஆனால் இலங்கையில் இருந்து சண்டைக்கு பயந்து புலம் பெயர்ந்தோம் என்று பொருளாதார அகதிகளாக வந்தவர்கள் இங்கு அங்கு போனபின் அகதி காசில் மலிந்த பியருகளை வாங்கி குடித்துவிட்டு (மரக்கறியில் வளர்ந்த உடம்புதானே) போதை தலைகேறி 2 பேர் சேர்ந்து ஒரு குறூப் காங் ஸ்டார்ஸ் என்று திரியினம். சிங்களவரின் பார்வையில் ஒட்டு மொத்த தமிழனும் அது என்றால் அப்போ இவையும் அதுவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்ததில் சிங்களவருக்கு தமிழர்கள் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்??

யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி சிங்கள காடையர் கூட்டம் செய்யும் அட்டகாசங்கள் எந்த வகையில் அடங்கும்??

இந்த நீதிமன்றத் தீர்ப்பின் முழு வடிவம் யாரிடமும் இருந்தால் உடனடியாக இணைக்க முடியுமா? (பிரெஞ்சில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது)

அது சரி தான். ஆனால் இலங்கையில் இருந்து சண்டைக்கு பயந்து புலம் பெயர்ந்தோம் என்று பொருளாதார அகதிகளாக வந்தவர்கள் இங்கு அங்கு போனபின் அகதி காசில் மலிந்த பியருகளை வாங்கி குடித்துவிட்டு (மரக்கறியில் வளர்ந்த உடம்புதானே) போதை தலைகேறி 2 பேர் சேர்ந்து ஒரு குறூப் காங் ஸ்டார்ஸ் என்று திரியினம். சிங்களவரின் பார்வையில் ஒட்டு மொத்த தமிழனும் அது என்றால் அப்போ இவையும் அதுவா?

நாங்கள் வெல்ஃபெயர் பணத்திலை பியர் அடிசுப்போட்டு காங்க் கூட்டங்கள் போட்டதாலை மகிந்தாவின்ரை குடும்பி தாமிராவின்ரை கையிலை கிடந்து திரியிது. தாயே எனக்கு தண்ணி உள்ள போது வந்த கொக்குகள் எல்லாம் என்னை விட்டு பறந்து போகுதுகள். நீதான் என்னை காப்பாற்று என்று 11 மணி 59மாவது நிமிசத்திலை தாமிராவினரை காலில் விழுந்திருக்கிறார்.

ரத்தம் ஒழுக ஒழுக எழும்பியோடேலாமல் கிடந்த சனத்திக்கு மேலை புல்டோசராலைலை மண் அள்ளிப்போட்டிட்டு தாலிகொடிகளை அறுத்துக்கொண்டு ஓடிப்போன போன காசிலை வெளிநாடுகளில் சம்பெயினும் யோனி வாக்கரும் வாங்கி குடித்தவர்களுக்கு கோத்தா பின்னுக்குப்போட பொத்திகொண்டொடிவந்து சிலநாள்களாக மோகன் அண்ணா ஒஸியிலை நடத்துகிற யாழிலை தஞசம் புகுந்திருக்கினம்.

நாங்கள் வெல்ஃபெயர் பணத்திலை பியர் அடிசுப்போட்டு காங்க் கூட்டங்கள் போட்டதாலை மகிந்தாவின்ரை குடும்பி தாமிராவின்ரை கையிலை கிடந்து திரியிது. தாயே எனக்கு தண்ணி உள்ள போது வந்த கொக்குகள் எல்லாம் என்னை விட்டு பறந்து போகுதுகள். நீதான் என்னை காப்பாற்று என்று 11 மணி 59மாவது நிமிசத்திலை தாமிராவினரை காலில் விழுந்திருக்கிறார்.

ரத்தம் ஒழுக ஒழுக எழும்பியோடேலாமல் கிடந்த சனத்திக்கு மேலை புல்டோசராலைலை மண் அள்ளிப்போட்டிட்டு தாலிகொடிகளை அறுத்துக்கொண்டு ஓடிப்போன போன காசிலை வெளிநாடுகளில் சம்பெயினும் யோனி வாக்கரும் வாங்கி குடித்தவர்களுக்கு கோத்தா பின்னுக்குப்போட பொத்திகொண்டொடிவந்து சிலநாள்களாக மோகன் அண்ணா ஒஸியிலை நடத்துகிற யாழிலை தஞசம் புகுந்திருக்கினம்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பின் முழு வடிவம் யாரிடமும் இருந்தால் உடனடியாக இணைக்க முடியுமா? (பிரெஞ்சில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது)

Jusqu'à 5 ans de prison ferme en appel pour des membres des Tigres tamouls

Des peines allant jusqu'à cinq ans de prison ferme ont été prononcées mercredi par la cour d'appel de Paris contre cinq hommes présentés comme membres des Tigres tamouls, reconnus coupables d'avoir organisé un racket de la diaspora en France pour financer des opérations au Sri Lanka.La plus forte condamnation a été prononcée à l'encontre de Nadaraja Matinthiran, un responsable présumé des Tigres de libération de l'Eelam tamoul (LTTE) en France. Cette peine est toutefois inférieure à celle de sept ans d'emprisonnement prononcée en première instance, en novembre 2009.

Le tribunal a par ailleurs confirmé la dissolution du Comité de coordination tamoul en France (CCTF), considéré comme la "vitrine légale" du LTTE, et poursuivi au titre de personne morale.

Les quatre autres prévenus ont écopé de peines allant de deux ans de prison dont six mois avec sursis (dont un qui avait été relaxé en première instance), à cinq ans de prison dont 18 mois avec sursis.

Les motivations de l'arrêt de la cour d'appel n'étaient pas immédiatement disponibles.

En première instance, plusieurs parties avaient souligné que c'était "la première fois" que des membres présumés des Tigres tamouls étaient jugés en France pour "financement du terrorisme" au Sri Lanka. 22 condamnations avaient alors été prononcés, ainsi qu'une relaxe.

Les prévenus étaient accusés d'avoir collecté ou extorqué par la violence à leur compatriotes habitant notamment à Paris et dans plusieurs départements franciliens, des fonds destinés à financer l'organisation séparatiste au Sri Lanka. Celle-ci est inscrite depuis mai 2006 sur la liste des organisations terroristes par l'Union européenne.

Faute d'exemples concrets, le jugement de première instance avait cependant relativisé les actes de violence physique attribués aux collecteurs, préférant parler de "climat de pression évident" exercé sur la communauté tamoule.Le Sri Lanka a proclamé en mai 2009 sa victoire militaire contre les Tigres tamouls, mettant fin à 37 années de guerre qui ont fait de 80.000 à 100.000 morts, selon l'ONU.

இது பிரான்சின் முக்கிய தொலைக்காட்சியான ரிஎவ் 1 தொலைக்காட்சில் சொல்லப்பட்ட செய்தி.அதன் இணையத்தளத்திலும் உள்ளது. இந்தச் செய்திக்கும் இங்கே தமிழில் வெளியிடப்பட்ட செய்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் எள்ள வேறுபாடு உள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்பளித்தள்ளது.

குற்றம் சாட்டவர்கள் நிராபராதிகள் என்று கூறி விடுதலை செய்ப்படவில்லை.

பரிதியினுடைய தண்டனை 7 வருடத்தில் இருந்து 5 வருடமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உறுதி செய்ப்பட்டிருக்கிறது.

அதே போலத்தான் மற்றவர்களது தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏந்த ஒரு இடத்திலும் இவர்கள் செய்தது சரி மனிதாபிமான நடவடிக்கை என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இவர்கள் திரும்ப திரும்ப பிழை செய்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தான் அந்த தவறை செய்கிறது என்று காண்பித்து விடதபைஇபுலிகள் மீதான தடையை தொடாந்து நீடிக்கச் செய்யும் வேலைத் திட்டத்தையே செய்து வருகிறார்கள்.

நான் இவர்களுக்காக முதலில் வாதாடிய ஒரு பிரபல வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது முதலில் நிலைமை சாதகமாக இருந்ததாகவும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு இரத்துச் செய்ப்படக் கூடிய சாத்தியம் இருந்ததாகவும் சுமார் 20 மாதங்கள் தமிழர் ஒருங்கிணைப்பக் குழவின் செயற்பாடு பிரெஞ்சு காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாகவும் இந்த 20 மாதத்தில் தமிழர் விளையாட்டு விழாவுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்ற தடுத்தது? தமிழ்சோலை பிள்ளைகளை பிற நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று தடுத்தது மாவிரர் தினத்துக்காக வணகர்களிடம் நிதி சேகரித்தது போட்டியாளர்களின் சுவரொட்டிகளை கிழித்தது.அவர்களின் சுவரொட்டிகளை வர்த்தக நிறுவனங்களில் ஒட்ட விடக் கூடாது என்று வாத்தகர்களை மிரட்டியது என்று 12 க்கும் மேற்பட்ட செயல்கள் காவல்துறையினரால் அரசாங்கத்தக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறினார்.

உண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு யாருக்கும் மகிழச்சி தரக்கூடிய ஒன்றல்ல.அதை உருவாக்கி வளத்தெடுத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

தங்களது வாழ்வின் பெரும் பகுதியை அதற்காக அர்பணித்தவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் பலராலும் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள்.

இன்று இந்த தடைக்கு காரணமாக இருந்த யாரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வளர்ச்சிக்கு தங்களை அர்பணித்தவர்கள் கிடையாது. அது வளர்ந்த பின்பு அதில் வந்து குளிர் காய்ந்தவர்களே இவர்களாகும்

தமிழர் ஒருங்கிபை;பு குழுவை ஒழிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டம் 2007ல் டக்ளசால் ஆரம்பிக்ப்பட்டது. அது எப்படி யாரை வைத்து நகர்த்தப்படது என்பது கிருபாகரன் போன்றவர்களுக்கும் ஏன் பரிதியண்ணாவுக்கும் கூடி தெரியும்.இனியாவது அவர்கள் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.

நீதி மன்ற தீர்ப்பு தற்போது தற்போது பிறிபே எனப்படும் மாவட்ட காவல்துறை ஆணையாளருக்கு சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் வந்து நடவடிக்கை எடுக்கும் இப்படி பொய் செய்தி வெளியிடுபவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் வரப் போகிறார்கள்.

தமிழர்களுடைய செயற்பாடுகள் சட்ட விரோதமானவை என்று காட்டவா இவர்கள் இன்னும் விரும்புகிறார்கள்

இந்த தீர்ப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை அறிய விரும்புபவர்கள் இதற்கு தொடர்பு கொள்ளுங்கள்

Ministère de la justice

13, place Vendôme

75042 Paris Cedex 01

tél : 01 44 77 60 60

Site Web : www.justice.gouv.fr

0000

Ministère de l'intérieur,

Place Beauvau

75800 Paris Cedex 08

Site Web : www.interieur.gouv.fr

tel

01 49 27 49 27 OR 01 40 07 60 60

Edited by athiyan

ஜெனிவா பயணத்தை இந்த தீர்ப்பு தடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் தாங்கள் விரும்பிய ஒரு ஜனநாயக புர்வமான நிகழ்வில் கலந்துகொள்வதை பிரெஞ்சு சட்டம் தடுக்காது.

இதை தடுப்பதற்காக இந்த செய்தி வெளியடப்பட்டது என்று கூறுவதெல்லாம் பொய்.

யாராவது அதிகாரிகள் கேட்டால் நான் ஜெனிவாவுக்கு என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் செல்கிறேன் என்று கூறுங்கள்

எப்படியெல்லாம் செய்திகளை போட்டு வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

எப்படியெல்லாம் செய்திகளை போட்டு வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

பரபரப்பு ரிஷியின் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் தானே?

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியை கொடூரமாகக் வல்லுறவு செய்த வல்லூறு கிருபா - http://www.yarl.com/forum3/index.php?showtopic=98868

இப்படியான செய்திகள் மருந்துக்கும் கண்ணில் படுவதும் இல்லை :o

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியை கொடூரமாகக் வல்லுறவு செய்த வல்லூறு கிருபா - http://www.yarl.com/...showtopic=98868

இப்படியான செய்திகள் மருந்துக்கும் கண்ணில் படுவதும் இல்லை :o

12 வயது சிறுமியின் படத்தை போட்டு அதை செய்தியாக்கி பார்ப்பதிலும் விட சிங்கள பொலிஸாக இருந்தாலும் ப்றவாயில்லை தண்டனைவாங்கிகொடுக்க வேண்டும். ( தப்பி ஓட முயற்சி செய்தால் எங்கவுடன் போடாலாம் என நினைக்கிறேன்.)

வியட்னாம் போராட்டம் மாறியமைக்கு ஒரு சிறுமியின் நிர்வாண படம் காரணம்.

எமது மக்கள் மீதான போர்குற்றங்கள் இந்தளவுக்கு வந்தமைக்கு சனல் நாலும் காரணம்.

வியட்னாம் போராட்டம் மாறியமைக்கு ஒரு சிறுமியின் நிர்வாண படம் காரணம்.

எமது மக்கள் மீதான போர்குற்றங்கள் இந்தளவுக்கு வந்தமைக்கு சனல் நாலும் காரணம்.

சனல் 4 தான் அதை செய்லாம் மாறாக தேசிய ஊடமான ஜீரிவி செய்ய முடியாது அதுக்கும் ருபவாஹினிக்கும் வேறுபாடுகிடையாது.........

வியட்னாம் போராட்டம் மாறியமைக்கு ஒரு சிறுமியின் நிர்வாண படம் காரணம்.

எமது மக்கள் மீதான போர்குற்றங்கள் இந்தளவுக்கு வந்தமைக்கு சனல் நாலும் காரணம்.

அந்த சிறுபின் பின்னாலில் ஒரு சிறந்த மனித உரிமை செய்ற்ப்பாட்டாளர்.

Edited by I.V.Sasi

சனல் 4 தான் அதை செய்லாம் மாறாக தேசிய ஊடமான ஜீரிவி செய்ய முடியாது அதுக்கும் ருபவாஹினிக்கும் வேறுபாடுகிடையாது.........

12 வயது சிறுமியின் படத்தை போட்டு அதை செய்தியாக்கி பார்ப்பதிலும் விட சிங்கள பொலிஸாக இருந்தாலும் ப்றவாயில்லை தண்டனைவாங்கிகொடுக்க வேண்டும். ( தப்பி ஓட முயற்சி செய்தால் எங்கவுடன் போடாலாம் என நினைக்கிறேன்.)

12 வயது சிறுமியின் படத்தை போட்டு அதை செய்தியாக்கி பார்ப்பதிலும் விட ...இதுவும் ரூபவாகினி மாதிரியே உள்ளது.

அந்த சிறுமியும் ஒரு பெற்றோரின் மகள், ஒரு அண்ணாவின் தங்கை..அவர்கள் இப்படி கருத்தை கேட்டால் வெட்கப்படுவார்கள், வேதனைப்படுவார்கள்.

லங்கசிறியில் படம் போட்டு இருந்தார்கள், அதை பார்த்த போது படம் போட்டு செய்திகாட்டுவதில்தான் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனா.

அதற்க்காகவெ நான் மேலே சொன்ன கருத்து. அதில் தவறாக ஒன்றும் இல்லை.

லங்கசிறியில் படம் போட்டு இருந்தார்கள், அதை பார்த்த போது படம் போட்டு செய்திகாட்டுவதில்தான் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனா.

அதற்க்காகவெ நான் மேலே சொன்ன கருத்து. அதில் தவறாக ஒன்றும் இல்லை.

சிலருக்கு படத்தை பார்க்காமலே ஆத்திரம் வரும் (யாழில் படம் இணைக்கப்படவில்லை)

சிலருக்கு படத்தை பார்த்தல் ஆத்திரம் வரும்.

சிலருக்கு படத்தை பார்த்தாலும் ஆத்திரம் வராது - இறந்தவள் யார் வீட்டு சிறுமிதானே!

சிலருக்கு படத்தை பார்க்காமலே ஆத்திரம் வரும் (யாழில் படம் இணைக்கப்படவில்லை)

சிலருக்கு படத்தை பார்த்தல் ஆத்திரம் வரும்.

சிலருக்கு படத்தை பார்த்தாலும் ஆத்திரம் வராது - இறந்தவள் யார் வீட்டு சிறுமிதானே!

இது சமுதாயம் சமந்தப்பட்ட பிரச்சனை இதுக்கு என்னிடம் எவித தீர்வுமில்லை ஆனால் இப்படியான பிரச்சனையின் போது மக்கள் நிலை என்ன என்பது எனக்கு தெரியும்( கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு அது செய்தியாக வெளிவந்த நேரம் யாழ்ப்பானத்தில் நின்றேன்) .

இதையும் போர்க் குற்றமாக ஜநாசபையின் விவாதிக்க வேண்டுமா?

இது எனது முகபுத்தகதில் ஒரு உறவுவால் எழுதப்பட்டது.

Sivavathani Prabaharan

போர் முடிந்துவிட்டது தானே? இனி தமிழர்களுக்கு ஈழத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று உலகை நம்பவைக்கும் பிரயர்த்தனங்களில் ஸ்ரீ லங்கா அரசு முழு முயற்சிகளை கடுமையாக முயற்சித்துக் கொண்டு வருகிறது. அனால் யுத்தம் முடிந்த பின்னும் தமிழினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் அரசின் அனுசரையோடும் அரசபடைகளாலும் நடை பெற்று வருகின்றன. யுத்த முடிவின்பின் நடைபெற்ற தமிழர்கள் மீதான அநீதிக் கட்டவிழ்ப்பு ஆதாரங்கள்:

செய...்தித் தரவு: ( நன்றி: ஈழ மகான் தமிழ்)

போரின் பின்னர் நாளொன்றுக்கு இரு கொலைகள்

போரின் பின்னர் நாளொன்றுக்கு இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர் நிறைவடைந்ததன் பின்னர் மிகவும் கொடூரமான முறையிலான 1,500 கொலைச் சம்பவங்களும், 3575 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

2010ம் ஆண்டு 760 படுகொலைச் சம்பவங்களும், 2011ம் ஆண்டு 723 படுகொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

கொலைகளுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், பெரும் எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை

இது சமுதாயம் சமந்தப்பட்ட பிரச்சனை இதுக்கு என்னிடம் எவித தீர்வுமில்லை ஆனால் இப்படியான பிரச்சனையின் போது மக்கள் நிலை என்ன என்பது எனக்கு தெரியும்( கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு அது செய்தியாக வெளிவந்த நேரம் யாழ்ப்பானத்தில் நின்றேன்) .

இதையும் போர்க் குற்றமாக ஜநாசபையின் விவாதிக்க வேண்டுமா?

கிருசாந்தி படுகொலை சிங்களத்தின் மீதான போர்குற்றச்சாட்டுக்களில் நிச்சயம் ஒரு பகுதி.

மேலே கூறப்பட்டுள்ள சிறுமியின் படுகொலை தொடரும் மனித உரிமை மீறல், நீதி மறுத்தல், ஆயுததாரிகளின் அடாவடித்தனம் என்ற குற்றச்சாட்டுக்களின் ஒரு பாகம்.

நான் சொல்லவாறது அடிதள அமைப்பில் தவறுகள் இருக்கின்றன அதை சீர் செய்யாது மேலே மேலே கட்டிடம் கட்டிக் கொண்டு போனால் மீண்டும் இடிந்து விழும் என,.

Edited by I.V.Sasi

நான் சொல்லவாறது அடிதள அமைப்பில் தவறுகள் இருக்கின்றன அதை சீர் செய்யாது மேலே மேலே கட்டிடம் கட்டிக் கொண்டு போனால் மீண்டும் இடிந்து விழும் என,.

அடித்தள பிரச்சனைகளை சீர்செய்துகொண்டே நிரந்தர தீர்வுகளையும் நோக்கி பயணிக்கவேண்டும்.

.

தமிழ்வின் செய்திகளை இணைக்க வேண்டாம் என்றொரு அறிவிப்பு முன்பு இங்கிருந்தது.

அதைத் தற்போது காண‌வில்லை !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.