Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள்

ந்திரலேகா கிங்ஸ்லி -இலங்கை மலையகம்

h3-1.jpg

ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள் சுயங்கள் நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன.பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக பெண் ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும் சமூகத்தின் பெண்ணின் வகிபாகம் ஸ்திரப்படுவதன் தேவையும் அவற்றை தூண்டி விடக்கூடிய கூர்மையும் அழுத்தமாக பேசப்படுவதற்கும் செயற்படுத்துவற்குமே மார்ச் 8ம் திகதியில் பெண்கள் தினம் கொண்டாடப்படவேண்டுமென்பதும் நாம் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றன.

ளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் கணக்கிலெடுக்காமலிருப்பது மலிவாக எண்ணுவதும் அவற்றின் கூர்மையை மறைக்க நினைப்பதும் ஒழுக்கம் என்ற உள்ளுருவத்திலும் “கற்பு” என்கின்ற மாயைக்குள் அழுக்கி அவற்றை எழ விடாமல் செய்வதும் ஆளுமையை மனிதவர்க்கத்தின் ஒரு சாராருக்கெதிராகிப் பார்ப்பது அறிவியலின் சிறுமையாகவே காணப்படுகின்றது.; ஆண் ஆளுமைகள் எடுத்துக்காட்டுகளாகவும் எடுகோள்களாகவும் உயர்ந்த உதாரணங்களாகவும் சரித்திரங்களாகவும் பதியப்பட்டிருப்பதும் அதே விதமான பெண் ஆளுமைகள் காணாமல் போயிருப்பதும் அவற்றை தரிசிக்க நூல்களை தேடி தேடி வசனங்களில் வாழ்க்கையை தேடுவதும் வழக்கமாகிவிட்டிருக்கின்றது. அதற்கான காரணம் என்ன? பெண் ஆளுமைகள் உலக வளர்ச்சியி;லும் வரலாற்றிலும் மனித வர்க்கத்தை கூர்மைப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்யவில்லையா? சரித்திரங்களும் சமயங்களும் விஸ்தரித்துக் காட்டியது போல் பெண் பலவீனமான பாண்டம் என்பதாலா? ஆண்மீக திடம் அமைக்கப்பட்டதும் ராட்சியங்கள் கவிழ்க்கப்பட்டதும் பெண் என்கின்ற பிரமையினாலா? இது சிந்திக்கவேண்டிய அறிவியலாக காணப்படுகின்றது

h5-1.jpg

அறிவியல் சிந்தனைக்கும் உயிரியல் ஒருமைப்பாட்டிலும் இரு வேறு உயிர்களின் உள்ளார்ந்த திறன்கள் ஆளுமைகள் ஆற்றல்கள் அறிவு நுண்மதி மேலும் உயிரியல் ரீதியான கட்டமைகள் என்பன எவ்விதத்திலும் பிரித்துப் போட்டு உயர்வு தாழ்வு வலிமை பலவீனம் காண்பதற்காக கட்டமைப்பக்கப்பட்டிருக்க முடியாது சமுக தேவைப்பாட்டுக்கேற்ப உடலின் உறுப்புக்கள் இயல்பூக்கங்கள்; என்பன வித்தியாசப்பட்டிருக்கவேண்டியிருப்பது தேவை கருதியே. அத்தேவைகளும் உயிரியல் அம்சங்களும் ஆண்களைவிட அசாதாரணமான பிறப்பாக அவளை காட்டுவதை மறுதலித்தும் எதிர்த்தும் அது சார்ந்த விடயங்களை சமயம், கலாசாரம், பண்பாடு என்ற கருவிகளின் துணைகொண்டு பெண் குறைவாக மதிக்கப்படுவதினை பெண் ஆளுமைகளை உயர்வாக பேசப்பட்டதும் காணலாம் எனவே பெண் வளர்ச்சி பற்றிய வரலாறுகளை சிந்திக்கப்படுமிடத்து அதன் எதிரியாக தனித்து ஆண் என்ற எதிர்ப்பாலுக்கு குரியதாக மட்டும் மட்டுப்படுத்ததாது சமுகம் சார்ந்த பெண் ஆளுமைகளை வெகுவாக சொற்பாக குறைக்கும் எல்லா காரணிகளையும் கண்டுகொள்ளவேண்டிய தேவைப்பாடும் ஒரு மாரக்சி;ய பார்வைக்கே உண்டு

இன்று மனித குல எழுச்சி விடுதலைப் பற்றிய இந்த வகைகளில் பெண் விடுதலை பேசப்படுகின்ற ஒன்றாகும். ஏனெனில் சமுகத்தின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் இருபாலாரினதும் இணையற்ற உழைப்பும் அறிவு பரிமாணங்களும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றது. பெண் ஆளுமைகள் உயர்வாக கருதாத சமுகத்தில் உயர்வு ஆண் சார்ந்ததகவும் ஆணை மையப்படுத்தியதாகவும் தொடர்ச்சியாக இருப்பதும் அங்குள்ள நடைமுறைகள் அனைத்தும் ஆண் ஆளுமைக்குரியனவாக மேலும் மேலும் கட்டமைக்கப்படுவது இயல்பானதாகும். எனவே உயரிய சமூக விடுதலை மனித குல விடுதலை பற்றிய சார்ந்த யதார்த்தவாதத்தினை பேச வேண்டிய தேவைப்பாட்டுக்குள் ஆட்;பட்டிருக்கின்றோம். தீட்சணயமான பார்வைகளும் தூர நோக்குகளுமே சமூக அமைப்பியலை மாற்றக்கூடியனவாகவும் மறுமலர்ச்சி கொண்டதாகவும் ஜனநாயக பண்பை தன்மைகளை ஒரு முகப்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன.

எனவே தூர நோக்கை பெற்றிருப்பதும் தீட்சன்யத்தை தரிசிப்பதும் பெண் ஆளுமை விஸ்தரிப்பில் அவசியமானவைகளாகும் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக மதங்கள் கூறுவதுபோலவும் மறுமைகளை நம்பியும் கருத்து முதல் வர கருவிகளுக்கு முதன்மை கொடுப்பது அறிவுபூர்வமானதுமல்ல ஆக்கப்ப+ர்வமானதுமல்ல. அவற்றுக்கு போராட வேண்டிய தேவைப்பாடு உலகை வென்றுத்தர புறப்பட்டுள்ள பலரின் நம்பிக்கையாகவும் நடைமுறையாகவும் காணப்படுகின்றது. பெண் ஆளுமைகள் வெல்லப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் அவற்றின் எழுச்சிகள் கூர்மைப்படல் வேண்டும். ஆணுக்கு எதிரானதாக மட்டுப்படுத்தாமல் இருப்பதும் செயற்பாட்டு திறனாகும் பெண் ஆளுமைகள் எழுச்சியுற முடியாமைக்கும் வெளிப்படுத்துவதற்கும் சமுக அரசியல் பொருளாதார காரணிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றமை வெளிப்படையாக கூறமுடியும்.

photowide.png

சமுக கட்டமைப்புகளின் மாற்றம் என்பது பெண் ஆளுமைகள் எழுச்சியுறுவதிலும் தங்கியுள்ளது. சமுக கட்டமைப்பு பெண் சம்பந்தமான பதிவுகள் உயர்வாக இல்லாத ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவிப் பார்க்க வேண்டிய தேவைப்பாடு அதிகமாக காணப்படுகின்றது. கலை, கலாச்சார, பண்பாடு, உணவு முறைகள், குடும்ப அமைப்புக்கள,; திருமணம், பாலியல், பொறுப்புக்கள் உடை சார்ந்த துணிவுகள,; உளம் சார்ந்த தெளிவு, ஒழுக்கம், தான் என்கின்ற சுயம், இயலும் என்கின்ற திடம் என்பவற்றின் வெளிப்பாடுகள் பெண் ஆளுமைகளை உயர்த்துவனவாகும். அதனை பெண் வர்க்கம் கையிலெடுக்கும் போது ஆண்கள் பக்கபலமாக அதன் பலவீனம் பற்றிய உணர்வுகளை ஏற்றுக்கொள்வது யதார்த்தமாக இருக்கின்றது.

பெண் அரசியலில் தன் ஆளுமைகளை விஸ்தரிப்பதற்கு அவளின் அரசியல் ஞானமும் அனுபவமும் அறிவும் ஆழ்ந்த சிந்தனையாகின்றது. அரசியல் கொள்கை கோட்பாடுகள் யாவும் மனித குல விருத்திக்கு மேம்படுத்தக் கூடியனவாகவும் அவற்றை சரியான அறிவு சார்ந்த சமூக அமைப்புகளுக்குள் தத்துவார்த்த ரீதியான சிந்தனைக்குள் சரியான தூர நோக்கு கொண்டதாக அமைத்துக் கொள்வது அவசியமாகும். அரசியல் என்பது அனுதினம் பேசப்படும் மிக முக்கியமான பொருள் என்பதனை எளிமையோடு உணர்ந்துகொள்வதும் அவசியமாகின்றது. அது சார்ந்து பேசப்படும் பொழுது பழமைகால போக்கை வெறுப்பதும், எதிர்ப்பதும் அவசியமாகின்றது. புதுமை சிந்தனைகள் புரட்சி மாற்ற கருத்துக்கள் மாற்றம் என்பவற்றை தனக்குள்ள ஆளுமைகளால் அசைக்க செய்தல் அவசியமாகும். எதிர்த்தல் என்பதனை வெளிப்படுத்தல் என்பதனையும் துணிவோடு செயற்படுத்தும் ஆளுமைத்திறன் அவசியமாக கருதப்படுகின்றது.|

பெண் தன் ஆளுமைகளை; கூர்மைப்படுத்துவதிலும் வெளிப்படுத்துவதும் நிலைக்கச் செய்வதும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாக கருத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும் அது பெண்சார்ந்தது மட்டுமல்ல என்பதனையும் சமுகம் – ஆண்கள் சார்ந்த தேவையாக கருதுதல் தொடர் தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும்.ஒரு பெண் சமூக அரசியல் பொருளாதார அந்தஸ்த்து கடந்து தனக்கேற்பட்ட தன் சார்ந்தவர்களும் ஏற்பட்ட கொடுமைகளை அச்சமின்றி பயமின்றி கூறத்தொடங்கும் பொழுது அச்சமூகத்தின் விருத்திக்கு முதலாவது வெற்றி கேடயம் கொடுக்கப்படுகின்றது. ஒரு சமூக பார்வையில் பொறுக்க முடியாத தனிமனித சுதந்திரத்தினையும் தன்மானத்தினையும்; பாதிக்கக் கூடிய எச்செயலானாலும் அது வெகுவாக பேசப்படவேண்டிய பொருளாகின்றது. எனவே அது உலகம் விழித்துக் கொள்ளும் வரையும் உரத்துக் கூறப்படவேண்டிய இலக்குள்ள செயலாக கருதப்படவேண்டும்.

பெண் ஆளுமைகளை ஸ்திரப்படுத்துவது என்பது ஆண் சார்ந்த ஆளுமைகள் வீழ்த்துவது அல்ல அல்லது ஆணுக்கெதிரான ஆளுமைப் பரிமாணங்களை ஸ்திரப்படுத்துவதல்ல. பெண் தனக்குள்ள உச்சிமுதல் உள்ளங்கால் வரையான அனைத்து அம்சங்களும் வாழ்வியலிலும்; பெற்றிருக்கும் தடைகளை அறிவு பூர்வமாக பிய்த்து எறிந்து தனக்குள் சரியான முற்போக்கு தனமான அறிவு சார்ந்த கூர்மையான ஆளுமைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும். தனக்கிருக்கும் இயல்பான சூழலுக்கும் தான் சார்ந்த சமூக நிலைக்கேற்ப பெண் தன் ஆளுமையை நெறிப்படுத்தி கொள்வதென்பது முக்கியமாகின்றது. மிக சீக்கிரமாக ஆக்கப்படும் பெண் ஆளுமைக்காரணிகள் மிக சீக்கிரமாக காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது தனக்கு பொருத்தமில்லாத ஆளுமை உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக தனக்குள் அப்பிக்கொள்வதும் ஆபத்தானதே எனவே பெண் ஆளுமைகள் மிக சிறந்த முறையில் வடிவமைத்துக்கொள்வதற்கான அறிவுபூர்மான சிந்தனைகளும் உயிரியல் வலிமையும் கட்டமைப்புக்களை துண்டாடும் உடைப்புக்கள் தான் என்பதனை தனியாக உணரும் தற்துணிவு நிலத்தில் யாருக்கும் அஞ்சாத உறுதி நேர்மை ஒழுக்கம் முடிவெடுக்கும் திறன் போராடும் நம்பிக்கை எதிர்கால திடம் இவை எல்லாப் பெண்ணுக்கும் எப்போதும் மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டு முழுமைபெறுகின்றதோ அது பெண் ஆளுமைகளை வென்றெடுக்கும் காலமாகின்றது. பெண்கள் தினக் கொண்டாட்டம் என்பது இவற்றை அறிவு பூர்வமாய் கட்டி எழுப்பும் பணியில் காத்திரமான பங்களிப்பாகும். இதனை வென்றெடுக்க தேவ தூதர்களும் தேவதைகளும் இறை அரசர்களும் அவதாரங்களும் வரமாட்டார்கள்; பெண்கள் தம் குரல் உயர்த்தி உயிர் வலிமை உள்ளவரை போராடி வெற்றிக்கொள்வதே உலகத்தின் வர்க்க கட்டமைப்பின் வரலாற்று பதிவாக காணப்படுகின்றது. எனவே பெண் ஆளுமைகள் ஸ்திரம்பெற ஐக்கியப்பட்டு போராடுவோம்.

உடைப்புகள்

பெண்ணின் உச்சிமுதல் பாதம் வரை

கொஞ்சம் கொஞ்சமாய்

உடைத்து

செதுக்கி

வடிவமைக்கப்படல் வேண்டும்

அவள் தலை முக்காடு

இன்சா அல்லா கழட்டப்படவேண்டும்

அவளின் கூந்தல் அவள் இஸ்டப்படி

எப்படியாவது வெட்டப்படலாம்.

கழுத்து நிறைந்த சவடிகள்

கர்த்தாவே கழுத்தை பாதுகாக்க வேண்டும்

தாலியின் பாரமும்

தன்மேல் சுமக்கும் புருசனின் பாரமும்

அவளுக்கு நெஞ்சை அழுத்தாமல்

இயல்பாய் இஸ்டப்படவேண்டும்.

மார்பகம் மொய்க்கும் காய்ந்த கண்கள்

சதை துண்டமாய் பார்க்கும் பார்வையில்

காமத்தை கக்கி துப்பும் கருணை வேண்டும்

இடுப்புக்கு கீழே

அது என்ன எல்லோரும் பார்க்கிறார்கள்.

அது பற்றிய

இலயக்கியங்களும் சினிமாக்களும்

இழிவாக்கல் தர்மமாகும்

தொப்புள் சுற்றி என்ன

இத்தனை தொந்தரவு

அது ஆண்களுக்கில்லை –

அதுபற்றி பார்வை விசாலப்படல் வேண்டும்

தொடைகளை தெரிய உடுத்தினால்

கவர்ச்சி அதிகமாம்

எத்தியோப்பியாவிலும் சோமாலியாலிவிலும் பெண்களுக்கு தொடைகள் இல்லையா?

பெருந்தொல்லை

கலச்சாரப் பண்பாடு

ப+சப்பட்;ட கலப்பு மேணி

உலகமே முகர்ந்து பார்க்கும்

வாசனையுடன் தோல்கள்

இதற்கு மேல்

உணர்வுகளுக்குள் அச்சம் மடம் நானம் பயிர்ப்பு

ஓம் சிவாயநம…

இத்தனைக்கும் மேல்

அவளுக்குள் அடங்கி அடக்கி கிடக்கும்

அடைப்புகள் உடைக்கப்படல் வேண்டும்

உடைப்புகளால்

அவள்

உயிர் பெற சாத்தியம்

உலகத்தில் உண்டு

மூலம் :- http://www.oodaru.co...=4909#more-4909

நன்றி ஊடறு

"யாவும் கற்பனை" என்பதை போட மறந்து விட்டார் கட்டுரையாளர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்புக்கு, நன்றிகள் சகோதரி!

எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும்!

இரவுகளைப் பகல்களாக்கி,

பனிக்குளிரில் வெடு வெடுப்பில்,

உங்கள் வாழ்வையே சுமக்கும்,

ஏரியில்லாத, எருமை மாடுகள்!

எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும்!

தங்கத்தால் அலங்கரித்துத்,

தங்கைகளை வாழவைத்துத்,

தார வயதினைத் தூர எறிந்துவிட்டு,

நரை விழும் காலத்தில்,

நமக்கொரு வாழ்வு தேடும்,

நாதியில்லாத ஆண்கள்!

எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும்!

அந்நிய நாட்டின் நடுத்தெருவில்,

ஆருமில்லாத புது வெளியில்,

வேரூன்றி, விழுதும் விட்டு,

ஊரிலிருந்து அழைக்கையில்,

பெருமையுடன் வந்திறங்க,

அரும்பாடு பட்டிருக்கும்,

அடையாளமிழந்த கணவர்கள்!

வல்வை, கோபிக்க வேண்டாம்!

ஒரு வித்தியாசமான முறையில் சிந்தித்ததன் விளைவு! :D

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்

can-do-e1299537368109.jpg?w=468

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

“பெண்கள் இந்நாட்டின் கண்கள்” என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா?

அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் பெண் உறவுகளை இழிவுபடுத்துகிறது. பெண்களின் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு அலசுகிறது, விளம்பரப்படுத்துகிறது. இளவட்டங்களின் சிந்தனையைச் சீரழிக்கிறது. அவர்களை ஒருபுறம் வில்லிகளாகவும், மறுபுறம் அடிமைகளாகவும் வாய்பேச வக்கற்றவர்களாகவும் காட்டுகிறது. பனியனுக்கும் ஜட்டிக்கும் சாக்லேட்டுக்கும் ஐஸ்கிரீமுக்கும் சோரம் போகிறவர்களாக இழிவுபடுத்த்டுகிறது. அறைகுறை ஆடைகள் அணிந்த அழகுப் போட்டிகள், ஆபாசமான ஆடல் பாடல் போட்டிகள், இரட்டைப் பொருள் கொண்ட பட்டிமன்றங்கள் ஆகியவற்றைக் கடைவிரித்து தனியார் டிவி நிறுவனங்கள் காசுபறிக்கின்றன.

ஆனால், வரதட்சனை வரவில்லை என்று புகையும் சிகரெட்டால் பொட்டு வைப்பதைப் பற்றியோ, வாழாவெட்டியாக பெண் விரட்டியடிக்கப்படுவதைப் பற்றியோ, குடும்பம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றியோ, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றியோ, ஆணாதிக்கக் கொடுமைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் பெண்களைப் பற்றியோ, அப்பெண்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் பற்றியோ, பெண்கள் அமைப்பாக அணிதிரளவேண்டிய அவசியத்தைப் பற்றியோ மறந்தும்கூட அந்த டிவி நிகழ்ச்சிகள் சொல்வதில்லை. கதைகளாகக் கூட சித்தரிப்பதில்லை. டிவி மட்டுமல்ல குடும்பப்பத்திரிக்கைகள் என்ற போர்வையில் வலம்வரும் மஞ்சள் மசாலா பத்திரிக்கைகளும் இச்சமூகப் பிரச்சனைகளை விவாதிப்பதில்லை. காரணமென்ன? அவைகளின் நோக்கமே பெண்களை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்படையச் செய்து போராட வைப்பதல்ல, பெண்களை வைத்து காசு பறிப்பதே அவற்றின் நோக்கம். இந்த கேடு கெட்ட நோக்கத்தை உடைத்தெறியாமல் வெறும் சுமை தாங்கிகளாக, அடிமைகளாக இருந்து என்ன பயன்? இவைகளைத் தாங்கிக் கொண்டு எவ்வளவு காலம் தான் இருக்கப் போகிறோம்?

குடும்பத்தில் சுமை, வேலையில் சுமை, வயிற்றில் சுமை, இதயத்தில் சுமை என்று பல சுமைகளைத் தாங்கியது போதும். தவிர, ஈராயிரம் ஆண்டுகளாய் பார்ப்பன இந்துமதம் உருவாக்கிய சாதிக் கட்டுமானத்துக்கும், பிற்போக்குகளுக்கும், பல மதப் பிரிவுகளுக்கும் பலியாக்கப்படுவது போதும். சமூகம் நம்மீது திணித்துள்ள இத்தனை சுமைகளுக்கும் பலிகளுக்கும் நாம் பணிந்து போக முடியாது. போராட்டம் ஒன்றே தீர்வு!

புதியதொரு சமூகத்தை, புதிய ஜனநாயக சமூகத்தைப் படைக்க உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம். கள்ளிப்பாலை ஊற்றிக் கல்லறைக்கு அனுப்பும் கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.

“சமூக மாற்றம் நிகழ்வதும் பெண்ணாலே, ஆணாதிக்கம் அழிவதும் பெண்ணாலே” ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிலை நாட்டுவோம்!

பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாக திரள்வோம்.

மார்ச் 8 உலகப் பெண்கள் நாளில் உறுதியேற்போம்!

இந்த நாளை உழைக்கும் பெண்கள் நாளாக வளர்த்தெடுப்போம்!

http://senkodi.wordpress.com/2011/03/08/womens-day/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.