Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு'

Featured Replies

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு'

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னரே மிகக் கவனமான முறையில் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் கூறியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கண்டித்துள்ளனர். இந்தத் தீர்மானமானது தலையீடு செய்யும் நடவடிக்கையெனவும் நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லையெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை பிணையெடுக்கும் நடவடிக்கை எனவும் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அரசியல் அதிகாரங்களையும் வழங்கும் விடயத்தில் குறைவான தன்மையை பிரதிபலிப்பதாக தீர்மானம் இருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதேவேளை ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பான உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எய்லின் ஷேம்பர்லின் டொனாகோ, யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தேசிய நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றுக்கான உறுதியான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்க வேண்டுமென கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கான தருணம் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சகல பிராந்தியங்களினதும் தூதுக் குழுக்கள் மத்தியில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயன்தரும் பல சிபாரிசுகளை இத் தீர்மானம் உள்ளடக்கியிருக்கிறது. இந்த தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பங்காளியாக செயற்படுவதற்குரிய நீண்ட கால எமது விருப்பத்தை நாங்கள் அழுத்தி உரைத்திருக்கிறோம்.

நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு போன்ற பரந்து பட்ட விடயங்கள் குறித்து நாங்கள் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறோம் என்றும் எய்லின் ஹேம்பர்லின் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தீர்மானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் மற்றும் அதற்கான காரணங்களையும் எய்லின் விபரித்திருக்கிறார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பங்களிப்புகளை தீர்மானம் அங்கீகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கு ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக நம்பகரமான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவித்திருக்கவில்லை. அத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படும் விமர்சனத்தை எய்லின் நிராகரித்துள்ளார். நீண்ட கால மோதல் முடிவடைந்த நிலையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பேரவையின் நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. எமது கரிசனைகளை சர்வதேச அமைப்புகள் பல கவனத்தில் கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இப்போது சமாதானத்திற்கான விதைகளை களத்தில் விதைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/local/10995-------q--.html

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எதிர்க்கும் ஒரு விடயம்தொடர்பாக நாம் என்ன முடிவெடுப்பது என்பது இராசதந்திரரீதியாக அடிப்படையான கேழ்வி. ஒரு வல்லமையுமில்லாமல் படு தோல்வி அடைந்துள்ள நிலையில் இது மிக மிக முக்கியமான கேழ்வியாகும்.

எதிரி தனது எதிரியை நாமும் விமர்சிக்க வேண்டுமென்று விரும்புவான். அவனது பயமெல்லாம் தனக்கும் தனது எதிரிக்கும் இடையிலான முரண்பாட்டை போராளிகள் பயன்படுத்தி விடக்கூடாது என்பதாகவே இருக்கும். எதிரியின் ஆட்க்கள் ஊடுருவல் செய்கிற போதும் பல சமயங்களில் அதிதீவிரவாதிகலைத் தூண்டிவிடுகிறமாதிரி அதிதீவிரவாதம் பேசுவதும் அதனால்தான். எதிரியின் எதிரியையும் நமது நண்பர்கள் ஆக்க விடக்குக்கூடாது என்பது எதிரியின் கவலை. ராசதந்திரமற்று எதிரியின் எதிரிமீது பாய்கிற அதிதீவிரவாதிகள் சாதிக்கப் போவதென்ன. பூச்சியம்தான். சர்வதேசிய அரசியலில் அவர்கலது பலமென்ன? பூச்சியம்தான். தீமானம் தொடர்பான விமர்சனத்தை பின்போட்டு மேற்க்கு நாடுகளும் சிங்கள அரசும் மேலும் முரண்பட அவகாசம் அழிக்க ஏன் நீங்கள் தயரில்லை என்று கேட்டால் ஒரு உருப்படியான பதிலை புலம் பெயர்ந்த அதிதீவிரவாதிகள் சொல்ல முடியுமா?

எதிரியை விட்டுவிட்டு எதிரியின் எதிரியோடு மோதி அழிவதுதான் எங்கள் இராசதந்திரத்தின் கோளாறாக கடந்த காலத்தில் இருந்துள்ளது இனியும் அது தொடர வேண்டுமா?

மேற்க்கு நாடுகள் எதிரியுடன் முரண்படும்போது நாம் அந்த முரண்பாடுகள் முற்றுவதற்க்கு அவகாசமழித்து மேற்க்கு நாடுகளை ஆதரிக்க வேண்டும் அல்லது சம்பந்தர்போல் மவுனமாக இருக்க வேண்டும். நமக்கு ஒப்பீட்டு ரீதியாக சார்பாக இருக்கிற ஒரு சூழலைக் கெடுப்பது எந்த வகையில் இராசதந்திரம்? எதிரியின் எதிரியையும் நமது எதிரியாக்குவது எந்த வகையில் இராசதந்திரம்?

தமிழர் போராட்டத்துக்கு வழிவகுத்த மூல உபாய அடிப்படைவாதம் strategic fundamentalism என நான் உருவாக்கிய சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த சேதி. புலிகளின் தொல்விகளுக்கு வழிவகுத்த இந்த இராசதந்திரமற்ற நிலைபாட்டை இன்னும் புலம்பெயர்ந்த அமைப்புகள் சில தொடர்வது கவலை தருகிறது. இது அடிப்படையில் களத்தில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்பற்றிய கரிசனை இல்லாத அதிதீவிரவாதப் போக்கே ஆகும்.

இதனை அரசியல் கோட்பாடுகள் எதிரியும் அதிதீவிரவாதிகளும் அடிப்படையில் ஒரே நிலைபாட்டையே எடுப்பார்கள் என அடையாளப் படுத்துகிறது.

தயவு செய்து இத்தகைய பிழையான தோவிக்கு இட்டுசெல்லும் உபாயங்களைக் கைவிடுமாறு புலம் பெயர்ந்த அமைப்புகளை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

  • தொடங்கியவர்

எதிரியின் எதிரியுடன் மோதுவது நிச்சயம் எதிரிக்கு துணைபோவதாகவே அமையும்.

ஆனால் எதிரியின் நண்பர்களை எவ்வாறு நாம், கூட்டமைப்பு உட்பட, அணுகுகிறோம்? குறிப்பாக இந்தியா, இதில் கூட்டமைப்பின் அணுகுமுறையை பற்றிய உங்கள் கருத்து என்ன?

எதிரியை விட்டுவிட்டு எதிரியின் எதிரியோடு மோதி அழிவதுதான் எங்கள் இராசதந்திரத்தின் கோளாறாக கடந்த காலத்தில் இருந்துள்ளது இனியும் அது தொடர வேண்டுமா?

மேற்க்கு நாடுகள் எதிரியுடன் முரண்படும்போது நாம் அந்த முரண்பாடுகள் முற்றுவதற்க்கு அவகாசமழித்து மேற்க்கு நாடுகளை ஆதரிக்க வேண்டும் அல்லது சம்பந்தர்போல் மவுனமாக இருக்க வேண்டும். நமக்கு ஒப்பீட்டு ரீதியாக சார்பாக இருக்கிற ஒரு சூழலைக் கெடுப்பது எந்த வகையில் இராசதந்திரம்? எதிரியின் எதிரியையும் நமது எதிரியாக்குவது எந்த வகையில் இராசதந்திரம்?

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய akootha,

இந்த நிலையில் கூட்டமைப்பு வாயைத் திறந்து பிரச்சினைகளை திசை திருப்ப இலங்கைக்கு வழிவிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. கூட்டமைப்பு இருவழித் தொடர்பு மூலம் மட்டும் மேற்குலகத் தொடர்பை பேனுவது நன்று. கூட்டணி சென்றால் குற்ற வாழிக் கூண்டில் ஏற்றப் பட்டிருந்தாலும் முக்கியத்துவப் படாமல் இருக்கும் புலிகள் மைய விவாதத்துக்கு இழுக்கப் படுவார்கள். கூட்டணி புலிகலை நியாயப் படுத்தினால் அந்த நியாயப்படுகளின் benefit இலங்கை அரசுக்கே கிடைக்கும். மேலும் மேற்க்கு நாடுகளின் இராசதந்திர நிலைபாடுகலை அரைகுறை என்று சொல்லவோ அல்லது மேற்க்கு நாடுகலைப் பார்த்து இலங்கக்கு எதிராக உறுதியாக செயல்படு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் என்ரு Black mail பண்ணவோ நேரலாம். இதற்க்குத்தான் எதிக்கு காத்திருக்கிறான்.

புலிகளின் தோல்விக்குப் பின் மேற்க்கு நாடுகள் எடுத்ததுபோல புதிய நமக்குச் சாதகமாக்கக்கூடிய நிலைபாட்டை இந்தியா எடுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தோல்விக்குப் பிந்திய இந்தியாவின் நிலைபாடு பழைய நிலைபாட்டின் தொடற்ச்சி அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு நகர்வுகலை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்

akootha

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய akootha,

இந்த நிலையில் கூட்டமைப்பு வாயைத் திறந்து பிரச்சினைகளை திசை திருப்ப இலங்கைக்கு வழிவிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. கூட்டமைப்பு இருவழித் தொடர்பு மூலம் மட்டும் மேற்குலகத் தொடர்பை பேனுவது நன்று. கூட்டணி சென்றால் குற்ற வாழிக் கூண்டில் ஏற்றப் பட்டிருந்தாலும் முக்கியத்துவப் படாமல் இருக்கும் புலிகள் மைய விவாதத்துக்கு இழுக்கப் படுவார்கள். கூட்டணி புலிகலை நியாயப் படுத்தினால் அந்த நியாயப்படுகளின் benefit இலங்கை அரசுக்கே கிடைக்கும். மேலும் மேற்க்கு நாடுகளின் இராசதந்திர நிலைபாடுகலை அரைகுறை என்று சொல்லவோ அல்லது மேற்க்கு நாடுகலைப் பார்த்து இலங்கக்கு எதிராக உறுதியாக செயல்படு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் என்ரு Black mail பண்ணவோ நேரலாம். இதற்க்குத்தான் எதிக்கு காத்திருக்கிறான்.

புலிகளின் தோல்விக்குப் பின் மேற்க்கு நாடுகள் எடுத்ததுபோல புதிய நமக்குச் சாதகமாக்கக்கூடிய நிலைபாட்டை இந்தியா எடுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தோல்விக்குப் பிந்திய இந்தியாவின் நிலைபாடு பழைய நிலைபாட்டின் தொடற்ச்சி அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு நகர்வுகலை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்

akootha

அன்புற்குரிய கவிஞரே,

நீங்கள் அகோதவுக்கு எழுதியமைக்கு நடுவில் நான் வந்து புகுந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இருந்தாலும் அகோதாவின் கேள்வி போதுவானதால் நானும் இந்த விவாதத்துக்குள் வருகிறேன்.

மேலும் அமேரிக்கா வைத்த பிரேரணையில், புலிகள் பற்றி எங்குமே குறிப்பிடாததை கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது புலிகளை போல அல்லாமல், கூட்டமைப்பு மக்களால் அமெரிக்கா விரும்பும் ஜனநாயகத்தின் வழியில் தேர்ந்தெடுக்கபட்ட அமைப்பு. அவை புலிகளுக்காக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மேலும் அமெரிக்கா கடந்த கால போர் சம்பந்தமான பிரச்சனைகளை கையிலேடுகாமைக்கு இந்தியாவே காரணம். (இந்தியாவும் ஒரு குற்றவாளியாக்கபடலாம்).

அமெரிக்கா நிகழ்கால மக்களின் பிரச்னையை வைத்தே பிரேரணையை கொண்டுவருகிறது. அதற்கு கூட்டமைப்பின் பிரசன்னம் மேலதிக உந்து சக்தியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

என்னுடைய ஊகத்தின் அடிப்படையில் சொல்லுகிறேன். அமெரிக்கா சொல்லி தான் கூட்டமைப்பு ஜெனிவா வராமல் இருக்கும். அதற்கு அமெரிக்காவிடம் ஒரு மாற்று திட்டம் இருக்கும். எபப்டியும் வெல்ல போகிற தீர்மானத்துக்கு அழைத்து கூட்டமைப்பை அரசிடமோ சிங்கள மக்களிடம் இருந்தோ அன்னியபடுத்த அமேரிக்கா விரும்பவில்லை. நாளை பேச்சு வார்த்தை மேசையில் அரசாங்கம், கூட்டமைப்பை புலிகள் போல பார்ப்பதை அமெரிக்க விரும்பவில்லை. இதன் மூலமே ஒரு குறைந்த பட்ச தீர்வையாவது தமிழ் மக்களுக்கு திணிக்க முடியும் என்று அமெரிக்காவும் கூடமைப்பும் நம்புகிறது.

கூட்டமைப்பின் ஜெனிவா செல்லா தீர்மானம் நன்கு திட்டமிட்டு, ஆலோசித்து எடுக்கபட்டிருந்தால், அதை இலகுவாக மக்களுக்கு புரியவைத்திருக்கலாம். யாருடையதோ நிர்பந்தத்தில் எடுக்கபட்டமையால் தான் ஆளாளுக்கு ஒரு திசையில் பேசுகிறார்கள்.

இதை, கூர்ந்து ஆராயும் கவிஞரே நீங்கள் நன்கு அறிவீர்கள்.அது நிற்க நீங்கள் கூறுவது போல இந்திய வெளியுறவு கொள்கையில் புலிகளுக்கு பின்னும், எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. வவுனியா - யாழ் புகையிரத பாதையும், ஐநூறு கோடி வன்னிமக்கள் வீடமைப்பு திட்டம் இரண்டுமே போதும் இந்தியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ள. இந்த மூன்று வருடத்தில் தாண்டிகுலத்தை தாண்டாத புகையிரத பாதை போல தான் இந்தியா தமிழ் மக்களுக்கு வழங்க இருக்கும் தீர்வும். காலம் தான் நீளுமே தவிர தீர்வு எண்டைக்குமே கிடைக்க போறதில்லை.

இந்த நிலையில், பிறிதொரு திரியில் அர்ஜுன் குறிப்பிட்ட நிதர்சனமான உண்மைதான் பொருந்தும், எங்கள் தமிழர் பகுதி ஏதாவது சுனாமி வந்து அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு நகர்த்தபட்டால் ( தமிழகத்தில் இருந்து ஒரு ஆயிரம் மைல்) அன்றி இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஈழத்தமிழருக்கு சாதகமாக மாறப்போவதில்லை.

இதையும் நாங்கள் உணர்ந்து கொண்டுதான் எங்களது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று கூறி கொண்டு என் மடலை முடிக்கிறேன்.

மீண்டும் சந்திக்கும் வரை நன்றி.

வணக்கங்களுடன்,

முதல்வன்

Edited by முதல்வன்

  • தொடங்கியவர்

அன்புகுரிய akootha,

இந்த நிலையில் கூட்டமைப்பு வாயைத் திறந்து பிரச்சினைகளை திசை திருப்ப இலங்கைக்கு வழிவிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. கூட்டமைப்பு இருவழித் தொடர்பு மூலம் மட்டும் மேற்குலகத் தொடர்பை பேனுவது நன்று. கூட்டணி சென்றால் குற்ற வாழிக் கூண்டில் ஏற்றப் பட்டிருந்தாலும் முக்கியத்துவப் படாமல் இருக்கும் புலிகள் மைய விவாதத்துக்கு இழுக்கப் படுவார்கள். கூட்டணி புலிகலை நியாயப் படுத்தினால் அந்த நியாயப்படுகளின் benefit இலங்கை அரசுக்கே கிடைக்கும். மேலும் மேற்க்கு நாடுகளின் இராசதந்திர நிலைபாடுகலை அரைகுறை என்று சொல்லவோ அல்லது மேற்க்கு நாடுகலைப் பார்த்து இலங்கக்கு எதிராக உறுதியாக செயல்படு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் என்ரு Black mail பண்ணவோ நேரலாம். இதற்க்குத்தான் எதிக்கு காத்திருக்கிறான்.

புலிகளின் தோல்விக்குப் பின் மேற்க்கு நாடுகள் எடுத்ததுபோல புதிய நமக்குச் சாதகமாக்கக்கூடிய நிலைபாட்டை இந்தியா எடுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தோல்விக்குப் பிந்திய இந்தியாவின் நிலைபாடு பழைய நிலைபாட்டின் தொடற்ச்சி அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு நகர்வுகலை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்

பொயட்டுக்கும் முதல்வனுக்கும் நன்றிகள்.

ஆனால் பொயட் அவர்களே, உங்கள் பதில் மூலம் இந்தியா தனது கொள்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதை ஏற்கிறீர்கள் எனத்தெரிகின்றது. அதாவது புலிகளை அழிக்கவில்லை தமிழர்களையே அது அழித்தது, அழிக்கவும் துணை போய்க்கொண்டு இருக்கின்றது.

அந்தவகையில் எமது மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இந்திய அரசியல் உள்ளது. இதற்கு மாற்று வழியை தேடுவது கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தமிழ் நல விரும்பிகளினதும் கடமையாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

LLRC அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தது.பின்னர் அது பற்றி விவாதிக்க கூட்டமைப்பு ஏன் ஜெனிவா செல்ல வேண்டும் என்ற கேள்வியும் உள்ளது.

உப்புசப்பில்லாத(LLRC) அறிக்கை 24 வாக்குகளால் ஒருவேளை வெற்றியீட்டப்படாதவிடத்து அமெரிக்கா போர்குற்ற விசாரணையை அமெரிக்கா தனது கதாயுதமாக எடுக்கும்.

வெற்றி பெற்றால் மகிந்த அரசு தொடர்ந்து இந்தியா,சீனாவுடன் சேர்ந்து உலகை பேய்க்காட்டுவார்கள். ஏமாற்றுவதில் சிறிலங்காவுக்கு நிகர் அவர்களே.

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கொழும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கண்டனம் "ஆனால் காரணங்கள் வெவ்வேறு'

என்பது தான் தலைப்பு.

சம்பந்தர்போல் மவுனமாக இருக்க வேண்டும்

இதற்குள் ஆறிய கஞ்சியான சம்பந்தர் ஜெனீவா போக மறுத்த பழைய நிகழ்வொன்றை, எல்லோராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட விடையமாக, இடையில் புகுத்தி சம்பந்தர் எதிர்ப்பை கிளறிவிட்டு, பலரைப்புண்படுத்த முயலும் நடத்தையின் நோக்கமென்ன? புலம் பெயர் மக்கள் சம்பந்தரை ஒரு உதாரணமாக கொள்ள சம்பந்தர் ஒரு புலம் பெயர் மகன் அல். தாயகத்தில் உள்ள இன்னொரு அடிமைப்பட்ட தமிழன்தான் அவரும். புலிகளின் சமாதான பேச்சாளாராக இருந்த உருத்திராவின் அமைப்பு, ஒருவாரமாக ராஜாங்க அமைச்சின் முன்னால் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதின் பலனாக அமைச்சின் அதிகாரிகளுடன் பேசிவிட்டு வந்து இந்த களத்திலேயே அறிக்கை சமர்ப்பித்திருப்பதை இவர்கள் படிக்கவில்லையா? இது புலம் பெயர் தமிழ்தலைவன் ஒருவன், ராஜதந்திரம் என்ற கபட வார்த்தைகளுக்கு ஏமாற மறுத்ததின் வெற்றி.

எதிரி எதிரி தனது எதிரியை நாமும் விமர்சிக்க வேண்டுமென்று விரும்புவான். அவனது பயமெல்லாம் தனக்கும் தனது எதிரிக்கும் இடையிலான முரண்பாட்டை போராளிகள் பயன்படுத்தி விடக்கூடாது என்பதாகவே இருக்கும். எதிரியின் ஆட்க்கள் ஊடுருவல் செய்கிற போதும் பல சமயங்களில் அதிதீவிரவாதிகலைத் தூண்டிவிடுகிறமாதிரி அதிதீவிரவாதம் பேசுவதும் அதனால்தான். எதிரியின் எதிரியையும் நமது நண்பர்கள் ஆக்க விடக்குக்கூடாது என்பது எதிரியின் கவலை. ராசதந்திரமற்று எதிரியின் எதிரிமீது பாய்கிற அதிதீவிரவாதிகள் சாதிக்கப் போவதென்ன. பூச்சியம்தான். சர்வதேசிய அரசியலில் அவர்கலது பலமென்ன? பூச்சியம்தான். தீமானம் தொடர்பான விமர்சனத்தை பின்போட்டு மேற்க்கு நாடுகளும் சிங்கள அரசும் மேலும் முரண்பட அவகாசம் அழிக்க ஏன் நீங்கள் தயரில்லை என்று கேட்டால் ஒரு உருப்படியான பதிலை புலம் பெயர்ந்த அதிதீவிரவாதிகள் சொல்ல முடியுமா

மேலே காணப்படுவது தற்போது நடப்பது எதிலும் தொடர்பில்லாத ஒரு ஆராச்சி. உதாரணம் காட்டப்படும் சம்பந்தர் அமெரிக்காவை எதிரியின் எதிரியாக மட்டும் பார்க்கவில்லை என்ற உண்மையை, பந்தி பந்தியாக எழுதி, மறுக்க முயலும் ராஜதந்திர சாணக்கியத்தின் திசை என்ன? தாங்கள் அமெரிக்கா சென்று நடத்திய பிரசாரத்தின் பலன் தான் இந்த பிரேரணை என்பது கூட்டமைப்பு பகிரங்கமாக விடுத்திருக்கும் அறிக்கை. சம்பந்தரின் கடித்தத்தை 47 நாடுகளுக்கும், தமிழ் கனேடியனிலிருந்து பிரதி எடுத்து, இந்த களத்திலிருந்து அனுப்பிவைத்த எல்லோருக்கும் பிரேரணை விசையத்தில் சம்பந்தர், மௌனமாக ஒதுங்கி இருப்பதாக எழுத முயல்வது பொருந்தாது என்பது தெரியும். 2009 ஆண்டு சிங்களத்தை பாராட்டிய ஐ.நா.ம.உ.சபையின் நிலையை அன்று தமிழர்கள் அப்படியே ஏற்று மௌனமாக ஒதுங்கி இருந்திருந்தால் தமிழர்களின் ராஜதந்திரம் எங்கு போயிருக்கும்? மேலும் தானேதான் ஜெனிவாவுக்கு போக முடிவெடுத்திருந்தார் சம்பந்தர் என்பது சுரேஸ் போன்றோரின் கூற்று. பின்னர் அவரை போகவிடாமல் தடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. சம்பந்தர் போகாததை, மகிந்தா, இலங்கை பத்திரிகைகள் புகழவேண்டும் என்று ஆணையிட்டதிலிருந்து, அதை புகழத்துடிப்பவர்கள் யார் என்பதும், சம்பந்தர் போவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியவர்கள் யார் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. இதிலிருந்து இவரகள் இழுத்துவிடும் எதிரியின் எதிரிக்கதை எங்கே போய்முடிகின்றன என்பது யாரும் விளக்க வேண்டிய நுட்பமான தத்துவமொன்றில்லை. சம்பந்தரின் பகிரங்க அறிக்கை, அரசின் அடிவருடிகள், தான் ஜெனிவா போகாததை வைத்து கூட்டமைபை உடைக்க முயல்கிறார்கள் என்பது. இதிலிருந்து தெரியவில்லையா சம்பந்தரை ஜெனீவா போகவிடாமல் தடுத்ததின் நோக்கம். இவ்வளவையும் திட்டமிட்டு செய்த சதிகாரக்கூட்டம் இப்போது, சம்பந்தர், பிரேரணை விடையத்தில் மவுனமாக இருப்பதாக பட்டம் கட்டி அதை ராஜதந்திரமாக புலம்பெயர் மக்களுக்கு போதிக்கவும் முயல்கிறது.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. ங்கே நடப்பதெல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம்தான். எதிர்-எதிர் கட்சிகளான ஜனநாயக கட்சியும், குடியரசுக் கட்சியும் தினமும் எதோ ஒன்றில் முட்டித்தான் மோதிக்கொள்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில்,மூலக்கட்டுரையில் காணப்படுவது போல, புலம் பெயர் மக்கள் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை "யானைப் பசிக்கு சோளப்பொரி என்று இடித்துரைக்க முயன்றால்" எப்படி அது அமெரிக்காவை எதிரியாக்கி இலங்கையை ஆதரிப்பதாகும்? இதை எப்படி ஒரு பிழையான ராஜதந்திரமாக காட்டி, “எதிரியின் எதிரியோடு மோதி அழிவதுதான் எங்கள் இராசதந்திரத்தின் கோளாறாக கடந்த காலத்தில் இருந்துள்ளது இனியும் அது தொடர வேண்டுமா?" ஆக வியாக்கியானப்படுத்த முடியும்?

நமக்கு ஒப்பீட்டு ரீதியாக சார்பாக இருக்கிற ஒரு சூழலைக் கெடுப்பது எந்த வகையில் இராசதந்திரம்?

சம்பந்தர் அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளார் என்பது சிலருக்கு விளங்குகிறது . இதனால் சூழ்நிலை தமிழருக்கு சார்பாகிக்கொண்டும் வருகிறது என்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். சம்பந்தரின் அமெரிக்கத் தொடர்பை இனி உடைப்பது இலகுவா என்று சந்தேகப் படுகிறார்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது தமிழரின் பழமொழி. அவர்களுக்கு இது நினைவுக்கு வந்து விடுமா என்பது புதிதாக பயப்படுகிறார்கள். அதனால் தான் இந்த அவசரம். எந்த வகையான ராஜதந்திரத்தில் வருகிது சாதகமான சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் குந்தியிருந்து கொட்டவி விடுவதுதான் உணமையான சாணக்கியமென்று. அதனால்த்தான் 2009 தின் பாராட்டுப் பிரேரணையிலிருந்து, இன்றைய நிலைக்கு நிகழ்வுகளை இட்டுசென்ற புலம் பெயர் மக்களை கெடுப்பவர்களாக பட்டம் சூட்டி மட்டம் தட்ட பார்க்கிறார்கள்.

தமிழர் போராட்டத்துக்கு வழிவகுத்த மூல உபாய அடிப்படைவாதம் strategic fundamentalism என நான் உருவாக்கிய சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த சேதி

ஆக தங்களைத்தாங்கள் உணராமல் தமிழர்களின் போராடத்தின் நோக்கத்தை கொச்சை படுத்த தங்களின் தமிழ் பாண்டித்தியத்தை பயன் படுத்தி வெற்றி கண்டதாக பீற்றுகிறார்கள். ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றத்தை சிங்கள அரசுகள் பேச்சுவர்த்தைகளில் கொடுத்ததினால்த்தான் இனியும் ஏமாறத்தயாரில்லை என்ற ஒரு போராட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் இரு இனங்களும் சம அதிகாரங்களுடன் சுதந்திரம் பெற்றபோது சிங்களம் மட்டும் சட்டத்தை கண்டு பிடித்தவரையே அது காணாது என்று சுட்டுச்சாக்காட்டிய இனவேறி வாத்திற்க்கும் இவர்கள் தங்கள் பாண்டித்தியதை காட்டி சொற்கள் கண்டு பிடித்து பெருமை அடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஐந்து வீடல்ல, ஐந்து ஈ மரும் இடம் கூடத்தரமாடேன் என்று துரியோதனன் போல நடந்து கொள்ளும் மகிந்த சித்தாந்தை விவரிக்க நிச்சயம் ஆயிரம் சொற்கள் இவர்களின் புது அகராதியில் பதியப்பட்டிருக்கும். எதுவிருந்தாலும், இலங்கையின் புது வாக்குறுதிகளிலோ அல்லது புதிய நடவடிக்கைகளிலோ சராமல் தாம் எப்படியும் பிரேரனையை கொண்டு வந்துதான் முடிப்போம் என்ற அடிப்படை வாதத்தை இலங்கையில் வைத்து ஏன் அமெரிக்க அதிகாரிகள் இலங்கையிடம் சொன்னார்கள் என்பதையும் இந்த பண்டிதர்கள் கண்டு பிடித்தால் நல்லது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்குரிய கவிஞரே,

மீண்டும் எனது காலை வணக்கங்கள். நான் நேற்று எழுதியிருந்த மடலுக்கு உங்களின் பதில் மடலை காணாத போதும் இந்த மடலை எழுதுகிறேன்.

கவிஞரே, உங்களின் வாத திறமையால் தமிழ் மக்களிடையே, அவர்களால் தேர்ந்தெடுக்கபட்ட அமைப்பான கூடமைபினரிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக என்னிடம் சில தெரிவுகள் உண்டு.

உங்களை போன்ற கலைஞர்கள், எழுத்தாற்றல் மிக்கவர்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஏன் சிங்களவர்களிடையே, அவர்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆளும் கட்சியிடையே பிளவுகளை ஏற்படுத்த கூடாது.

பிளவுக்குக்கான காரணங்கள்

  1. இலங்கை வெளியுறவு அமைச்சரை கிலாரி கிளிங்டன் சந்திக்க கூப்பிட்ட போது, ஐநாவுக்கு வரமுதல் அங்கெ போய் பிரச்சனையை தீர்த்திருக்கலாம். தடுத்தது யார் என கேட்டு பிளவை உருவாக்கலாம்.
  2. வெளியுறவு அமைச்சர் இருக்க, அவருக்கு மேசையில் பரிமாறுபவராக இருந்த மனித உரிமைகள் அமைச்சரை தலைவராக நியமிச்சதை வைச்சு பிளவை உருவாக்கலாம்.
  3. அமெரிக்க பிரேரணை சமர்பிக்க போவது தெரிந்தும், அமைச்சர் தூதுக்குழுவை ஜெனிவாவில் இருந்து ஒரு ஏழு நாட்களுக்காக ஏன் திருப்பி அழைத்தார்கள் என்று கேட்டு பிளவை உருவாக்கலாம்.
  4. இந்த நல்லிணக்க ஆணைகுழு அறிக்கையை தான் நடைமுறை படுத்த கேட்பார்கள் என்று தெரிந்ததும், தாங்களே முதலே அறிக்கையை விட்டு நடைமுறை படுத்துகிறோம் என்று சொல்லி சமாளிக்காததை கேட்டு பிளவை உருவாக்கலாம்.
  5. தேவை இல்லாமல் ஆர்பாட்டம் நடத்தி விமல், சம்மிக்க ஆகியோர் , ஒபாமாவுக்கு செருப்பு மாலை அணிவித்ததால் தான் இந்த பிரச்சனை என்று பிளவை உருவாக்கலாம்.
  6. இப்படி ஒரு நிலை வரும், எந்த அறிக்கையை சமர்பித்தாலும் தமிழ் மக்களோ கூட்டமைப்போ ஏற்காது என்று தெரிந்தும், உங்களுக்கு நடைமுறைக்கு கஷ்டமான பரிந்துரைகளை ஏன் நல்லிணக்க ஆணைகுழு வைத்தது என்று கேட்டு பிளவை உருவாக்கலாம்.

இவ்வளவையும் விட்டிட்டு ஏன் கவிஞரே கூட்டமைப்பு ஜெனிவா செல்லாமை என்ற ஒரு பிரச்னையை ஊதி பெருத்து எங்களிடையே பிளவை உருவாக்கிறீங்கள்.

கவிஞரே,

நீங்களும் மற்றும் பலரும் போர்காலத்திலும் சமாதான காலத்திலும் 45 தொடக்கம் 60 வரை பக்கங்கள் கொண்ட கடிதங்களை புலிகளுக்கு அறிவுரைகளாக வழங்கியமை யாவரும் அறிந்திருப்பார்கள். அதை ஏன் நீங்கள் இப்போ இலங்கை அரசாங்கத்துக்கு செய்ய கூடாது.

நீங்கள் அவர்களுக்கு ஆக குறைந்தது 80 பக்கங்களிலாவது அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து.

அந்த கடிதங்களில் நான் குறிப்பிடும் சில அறிவுரைகளையும் உள்ளடக்குவீங்களா.?

  1. மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் கொழும்பிலே விமல் தலைமையில் நடாத்தில் ஒபாமாவுக்கு வடை மாலை அணிவித்தல்.
  2. ஐநாவில் ஒரு வருடம் அவகாசம் கொடுக்கும் பிரேரணையை எதிர்த்து நீங்கள் ஆறு மாசத்தில் நிறைவேற்றும் பிரேரணை கொண்டுவருதல். (நீங்க தான் நிச்சயம் வெல்லுவீர்கள் அமெரிக்க தோத்து போயிடும்)
  3. மீண்டும் ஒரு நல்லிணக்கத்துக்கான நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஆணைக்குழுவை அமைத்து, பரிந்துரைகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐம்பது வீடு கட்டி கொடுத்தல், டக்லஸ், கருணா ஊடாக விதவை பெண்களுக்கு 200 கோழி குஞ்சுகள், 100 தையல் இயந்திரங்கள் வழங்குதல், பசில் ராஜபக்ச தலைமையில் பழுதடைந்த A9 வீதியை புனரமைத்தல், இந்தியா உதவியுடன் தாண்டிக்குளத்தில் நிற்கும் புகையிரத பாதையை கனகராசன் குளம் வரை நீட்டித்தல் போன்ற பரிந்துரைகளை முன் மொழியலாம்.
  4. பீரிஸ் மற்றும் அவரது குழுவினரை உடனடியாக அமெரிக்கா அனுப்பி கிளிங்க்டன் வீட்டு வளவை துப்பரவு செய்விக்கலாம்.
  5. அமெரிக்கவே கலங்கும்படி நீங்கள் உங்கள் நட்பு நாடுகளை, அமெரிக்க பிரேரணையை ஆதரிக்குமாறு கேட்டு நீங்களும் அதில் வெல்லலாம்.
  6. சனல் 4 - தனது இரண்டாவது காணோளியை விட முன்னமே, அது பொய், சித்தரிக்க பட்டது என்று உங்கள் வல்லுநர் குழு மூலமும், பிடிச்சு வைச்சிருக்கும் போராளிகள் மூலமும் ஒரு எதிர்ப்பு காணோளியை 13 ம திகதியே வெளியிடலாம்.

மிகுதி உங்களுக்கு தெரியும் தானே. புலிகளுக்கு எழுதிய மாதிரி கடிதம் இருந்தால், அதில் புலிகள் என்ற பதத்தை அரசாங்கம் என்று word மூலம் மாற்றீடு செய்துவிட்டு அனுப்பவும்.

நன்றி .

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,

முதல்வன்

Edited by முதல்வன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.