Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடைபெறக் காத்திருக்கிறேன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி!!!

இத்தனை உயிர்கள் போராட்டத்தில் மரணித்த போதும், இப்போதும் ராஜனி திரணகமவின் மரணத்தைப் பற்றி மட்டும் பேசும் கூட்டத்துக்கு இது எங்கே புரியப் போகின்றது. இவர்கள் குற்றம் காட்டுகினாம்.

  • Replies 173
  • Views 19.3k
  • Created
  • Last Reply

அதை விட தமாசு- இந்த யூட் - மற்றவங்க எல்லாம் கோப்பை கழுவுற கேஸ் - நான் அமெரிக்க அரசாங்கத்தையே தெரிவு செய்யும் - பவர் உள்ளவன் - அமெரிக்க அரசாங்கமே என்னை கூப்பிட்டுது -

அடங்க் கொய்யால- இவர் பண்ணின ரவுசு - கொஞ்சமா -நஞ்சமா?

யாராவது வாசிச்சு இருக்கிங்களா அதெல்லாம்?

அதை விட இன்னும் ஒன்னு - எதை பேச ஆரம்பிச்சாலும் - அங்க போனன் - வன்னிக்கு போனன் - அந்த மீட்டின்க் ல - அவரை - சந்திச்சன் என்னு தொடக்குவார் மாமு-

அதாவது- எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னு சொல்ல வாறாராம்!

நண்பு யூட்டு- நீங்கள் விடையம் தெரிந்தவர்தான் - மறுப்பதற்கு இல்லை- மற்றவர்களை குறைவாய் எடை போடும் பழக்கத்தை தவிருங்கள்- உங்களை போல - தலைகனம் பிடித்த அறிவாளிகள் - என்று - தம்பட்டம் அடிப்பவர்களை -

நொடி பொழுதில் அடித்து விழுத்தும் அளவிற்கு - எங்கள் போராட்டம் - எவ்ளோ பேரை உள்வாங்கி இருக்கு

இதை நீங்க நம்பினால்- நம்பலாம்! 8)

பள்ளிக்கூடம் போகாதது பண்பாடற்ற எழுத்திலேயே தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த போராட்ட வரலாற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் திறன் பள்ளிக்கூடம் போகாததனால் உங்களுக்கு இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே நீங்கள் சொல்லித்தான் தங்கள் அறிவின் தரம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

எமது தமிழ் சமுதாயத்தில் அல்லது இந்திய உபகண்ட மக்கள் கூட்டத்தில் பொதுவாக அவதானிக்ககூடிய மிக்க வேதனைக்குரிய அம்சம் யாதெனில் அவர்கள் தங்களது கல்வித்தரத்தால் தங்களை தாழ்த்திக் கொள்வதாகும். தமது கல்வியறிவின் தராதரத்தை தமதும் தம்மை சூழ்ந்தவர்களினதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை விடுத்து அதனை மற்றவர்களை மட்டம்தட்டும் கருவியாக பாவிக்கவிளைவது பொதுவாக அவதானிக்கப்பட கூடியது. இதனை எமது வளர்ச்சியின் தடைக்கல்லாக அல்லது மானிடத்தின் ஒரு மிக பின்தங்கிய பண்பாடுகளில் ஒன்றாக அவர்களினால் காண முடியாதிருப்பது அல்லது கான மறுப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

நமது ஊரில் இருப்பவர்கள்தான் (குறிப்பிடத்தக்களவில்) அப்படியான மனப்பாங்கில் இருக்கின்றார்கள் என்றால் புலத்தில் பலகாலமாக வாழ்ந்து அந்த சமுதாயத்தின் பண்பான வாழ்க்கைமுறைக்குள் தங்களை புடம்போட்டுக் கொண்டவர்கள் அல்லது அப்படி எண்ணுபவர்கள்கூட அந்த பழைய எமது உழுத்துப் போன பண்பாட்டுச் சகதிக்குள் இன்னும் சுழன்டு உழன்டு தமக்குத் தாமே சேறடித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கும்போது வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருக்கின்றது. இது உண்மையில் அவர்களின் கல்வியறிவின் ஆற்றலை கேள்விக்குறியாக்குகின்றது. எமது அரசியல்போராட்டத்தின் ஒரு அம்சமாக இந்த பண்பியல் விருத்தியையும் நாம் சேர்த்துக் கொள்வேண்டிய தேவையையும் இது வலியுறுத்திக் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் நீங்கள் கூறியது போல நான் ஆரம்பத்திலிருந்தே யுூட்டின் கருத்துகளை படித்துதான்: வருகிறேன் அவர் அய்ரோப்பிய அகதி தமிழரை கோப்பை கழுவிற கூட்டம் என்று நக்கலடித்தபோது நானும்தான் வாக்கு வாத படடிருக்கிறேன் அதைவிட ஒருமுறை இந்திய இராணுவ பெண்களின் பாலியல் வன்முறை பற்றி எழுதியபோது உங்களிற்கெல்லாம் வேறை வேலையில்லை யுத்தம் என்றால் அது எல்லாம் சாதாரணம் என்று பதில் எழுhதியவர் எனவேஇங்கு யுூட்டுடன் எனக்கு கருத்து மேதலை தொடர விருப்பம் இல்லை அண்மையில்கூட ரட்ணஜீவன் கூல் நியமன பக்கத்தில் வன்னியில்தான் புலிகள் பகுதியில் பாம்பும் பல்லியும் அதிகம் என்று புலிகளை நக்கலடித்தார் இப்போ புலிகளின் பண்பு படிப்பு எண்று கூறுவதும் நக்கலுக்கே இவர்போன்ற மெத்தபடித்தவர்களுடன் வாதிடும் அழவுக்கு எனக்கு அறிவு போதாது அதே போல அவர் கூறுகிறார் படிக்காததால்தான் போராட்டத்தை பற்றிய ஆராயும் திறன் இல்லையாம் ;சரி எமது போராட்டத்தை உலகின் தலைசிறந்த பொறியியல் வல்லுனர்களாலேயோ அல்லது மருத்துவர்களாலேயோ விஞ்ஞானிகளாலேயோ நடத்தபடவில்லை மெத்படித்தவர்கள் என்று கூறிகொண்டு போராட்டத்தை ஆரம்பித்தவர்களும் பல தலைவர்களையும் கூட காணவில்லை யுூட் போன்ற அமெரிக்க அரசையே தீர்மானிக்கும் அதி புத்திசாலிகளால் மற்றும் நீலன் கதிர்காமர் வினோதன் பேன்றவர்கள்எங்கள் போராட்டத்தின்பாதையில் எத்தனை படிகளை அமைத்தார்கள் என்று எமக்கு தெரிந்ததுதானே

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வர்ணன் நீங்கள்!!

அண்ணாச்சி தான் ஜநாவின் திட்டமிடல் அதிகாரியாக இருக்கின்றார். இவரின் சொல்லைக் கேட்டுத்தானம் எல்லாம் நடக்குது ................. என்று றோட்ரோத்தில் கனவு காணும் ஆட்களைத் திருத்தவே முடியாது. புலம்பட்டும்

மணிமாறன் மிகச் சரியானா ஒப்பு நோக்கு,

இதற்கு எனக்கு நாபகம் வரும் பழமொழி ' நாய் வாலை நிமித்த முடியுமா? என்பதுவே.

புலத்தில் பல்வேறு சமூகத்தருடன் பழகியவர்கழுகுத் தெரியும் அவர்கள் எவரையும் தாழ்த்திப் பேசுவது அல்லது மட்டம் தட்டுவது கிடயாது என்பது ,குறிப்பாக ஒருவர் செய்யும் வேலையோ அன்றி படிப்பையோ குறிப்பிட்டு, .பட்டம் பெறுவது பண்பாட்டை வளர்க்க,மனித நாகரீகத்தை மனித வளத் திறனை வளர்க்க.படிப்பென்பது இதற்கான வழி முறையே அன்றி,ஒருவர் பட்டம் பெற்று விட்டர் படித்து விட்டார் ஆதலால் அவர் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்க வேணும், என்பது நகைப்பிற்கு இடமானது.அவர் தான் கற்றவற்றைக் எவ்வாறு பயன் படுதுகிறார் என்பதிலயே அவர் படித்தற்கான சான்று உள்ளது.

இதை நடைமுறையில் பயன் படுத்தத் தெரியாதவர்கள் தான் தமது பட்டம் பற்றி தம்பட்டம் அடிப்பதுவும் , தமது படிப்பைக் காட்டி கீழ்த் தரமாக மற்றவர்களை விமர்சிக்க முற்படுபவர்களாக இருக்கிறார்கள்.

எமது போராட்டம் படிக்க வசதி வாய்ப்புக்கள் இல்லாத பல உணர்வாளர்களால், அல்லது போராட்டத்திற்காக தமது கல்விச் செயற்பாடுகளைக் கைவிட்ட ,ஏழை எளிய இழஞ்சர்களின் உயிரால்,உதிரத்தால் வளர்க்கப் பட்டது,இவர்களிடம் இருக்கும் தன்னடக்கம் இந்த படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்களிடம் இல்லை.பிசா வினியோகிப்பதை ,விடுதலைப் போரில் உயிரைக் கொடுத்து போரடுவதை விட கஸ்டமான ஒரு விடயாமக் வெக்கமில்லாமல் கூறும் நிலயிலயே இந்த பட்டதாரிகள் இருக்கிறார்கள்.

கவனிக்கபட வேண்டியது- தான் பிறந்த இனத்தையே - மட்டம் தட்டிய இந்த நபர் - இன விடுதலைக்கு உதவி செய்ய போகிறேன் என்று சொன்னது!

இப்பிடி

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8373&start=0

என்ன சொல்ல- எல்லாத்தையும் நம்பி தொலைச்சே வாழ்க்கை அழியுது!

யூட் அண்ணா - ஈபிடிபி- க்கு வேணும்னா ஆலோசகராய் போங்க - அங்க ஒண்ணு இங்க ஒண்ணு பேசி - உங்க அறிவு ஜீவிதத்தை காட்ட- அவ்ளோ ஒண்ணும் -நீங்க நினைக்கிற அளவுக்கு- ரொம்ப பலவீனம் இல்ல நாங்க !

களத்திலும் சில ஒட்டுப்படைகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்கபட வேண்டியது- தான் பிறந்த இனத்தையே - மட்டம் தட்டிய இந்த நபர் - இன விடுதலைக்கு உதவி செய்ய போகிறேன் என்று சொன்னது!

வர்ணன், எந்த நபரைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்?

நான் எந்த இனத்தையும் தாழ்த்தி எழுதியதில்லை. தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று. தாழ்வுமனப்பான்மை எனும் உளநோயால் நீங்கள் பீடிக்கப்பட்டிருந்தால், யார் எதை சொன்னாலும் உங்களை தாழ்வாக சொல்வதாக தான் தெரியும். இனவிடுதலை ஒரு அடிமைப்பட்ட இனத்துக்கு தான் தேவை. எனது இனம் அடிமை இனமும் அல்ல. ஒரு வேளை நீங்கள் வேறு இனம், நான் வேறு இனமாக இருக்க கூடும்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தமிழ் இனத்தின் போராட்டமாக பார்ப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்கள், உலகத்தமிழினத்தில் ஒரு சிறிய பிரிவே ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழீழத்தை தமது நாடாக கருதவில்லை. ஆகவே தமிழீழ விடுதலைப்போர் தமிழரின் இனவிடுதலை போர் என கூறுவது எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இலங்கையின் வடகிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராகவே நான் அதை பார்க்கிறேன். .

அதற்கு தான் நான் உதவி செய்ய விரும்பினேன்.

எனக்கும் களத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கருத்தொருமைப்பாடு இல்லாத நிலை உள்ளதனால் நான் அந்த முயற்சியை தொடரவிரும்பவில்லை.

உங்கள் இனவிடுதலைக்கு நான் உதவிசெய்ய முன்வரவும் இல்லை. என்னால் அதை செய்யவும் முடியாது. காரணம் உங்கள் இனஅடிமைநிலை உங்களது தாழ்வுமனப்பான்மையின் காரணமாக உருவான ஒரு தோற்றப்பாடு. அதற்கு உதவுமளவுக்கு எனக்கு அந்த துறைபற்றி அறிவு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட ஒருமுறை இந்திய இராணுவ பெண்களின் பாலியல் வன்முறை பற்றி எழுதியபோது உங்களிற்கெல்லாம் வேறை வேலையில்லை யுத்தம் என்றால் அது எல்லாம் சாதாரணம் என்று பதில் எழுhதியவர் எனவேஇங்கு யுூட்டுடன் எனக்கு கருத்து மேதலை தொடர விருப்பம் இல்லை

சாத்திரி, உமது எழுத்தில் நேர்மை இல்லை. நான் இவ்வாறு இந்திய இராணுவம் பற்றி எழுதவில்லை. பொய் எழுதியிருக்கிறீர்கள்.

முதலில் புஸ்பராஜா பற்றியும், பஸ்தியாம்பிள்ளை பற்றியும் உமக்கு தெரிந்த உண்மையான வரலாற்றை ஏன் இன்னமும் நீர் இங்கே எழுதவில்லை? உண்மை என்றால் எழுத ஏன் தயக்கம்? எனக்கு தெரிந்த வரலாறு தவறு என்றால் உண்மையை எழுதி தெரிய வைக்க வேண்டியது தானே? நான் இந்திய இராணுவம் பற்றி எழுதாததை எழுதியதாக சொல்லி, அதனை சாட்டாக வைத்து கருத்து மோதலை தொடரவிருப்பமில்லை என்று நழுவிக்கொள்வது, தங்களது கருத்தின் உண்மைத்தன்மையையும், தங்களது நேர்மையையும் கேள்விக்கு உரியதாக்குகிறது.

கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி

தானும் தன் பொல்லாச்சிறகை - விரித்தாடினாற்போல்

கல்லாதான் கற்ற கவி!

உண்மையும் நேர்மையும் பண்பாளருக்கும் கற்றோருக்கும் அழகு. மற்றவர்களை பற்றி பொய்யும், புனைகதையும், அவதூறும் எழுதுவது பண்பற்றவர்களுக்கும் கல்லாதோருக்கும் வழக்கு.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா றியன்ற தறம்.

- திருக்குறள்.

  • கருத்துக்கள உறவுகள்

யுூட்டிற்கு நான் எழுதிய விழக்கங்கள் எதுவுமே விழங்கவில்லை ஆனால் நான் பள்ளி கூடம் போகவில்லையெண்டது மட்டும் சரியா விழங்கியிருக்கு

நீங்கள் பள்ளிக்கூடம் போனதும் போகாததும் எந்த வகையில் இந்த தலைப்பில் சம்பந்தப்பட்டது? நீங்களாக தந்த தரவான உங்கள் "பள்ளிக்கூடம் போகாத" நிலைப்பாடு கருத்து களத்துக்கு வந்ததால் விமரிசிக்கப்பட வேண்டியது ஆகிறது.

நீங்கள் உங்களை படிக்காத மேதை என்று காட்டவா பள்ளிக்கூடம் போகாதது பற்றி எழுதியிருந்தீர்கள்? பள்ளிக்கூடம் போனவர்களுக்கும், போகாதவர்களுக்கும் ஆய்வியல் ஆற்றல் பெருமளவில் வேறுபடுகிறது. காரணம் பள்ளிக்கூடத்தில், ஒரு கருத்தை அல்லது ஒரு பிரச்சினையை ஆய்வு செய்யவே கற்றுக்கொடுக்கிறார்கள். அது சட்டமாக இருக்கலாம் அல்லது விஞ்ஞானமாகவும் இருக்கலாம். தங்களது தரவான "பள்ளிக்கூடம் போகவில்லை" என்பது கருத்துக்களத்துக்கு வந்த நிலையில், அதன் அடிப்படையில் தங்களது ஆய்வுத்திறன் மதிப்படப்படுகிறது. அது உங்களுக்கு பிரச்சினையாக இருக்குமானால் நீஙகள் பள்ளிக்கூடம் போகாத சங்கதியை கருத்துக்களத்துக்கு கொண்டுவந்திருக்க கூடாது.

நீஙகள் ஏன் இன்னமும், தங்களுக்கு நிச்சயமாக தெரிந்த புஸ்பராஜாவின் வரலாற்றை எழுதவில்லை? குறிப்பாக பஸ்தியாம்பிள்ளையை யார் சுட்டது? புஸ்பராஜா அப்போது எங்கிருந்தார் என்பது பற்றி ஏன் இன்னமும் எழுதவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வர்ணன் நீங்கள்!!

அண்ணாச்சி தான் ஜநாவின் திட்டமிடல் அதிகாரியாக இருக்கின்றார். இவரின் சொல்லைக் கேட்டுத்தானம் எல்லாம் நடக்குது ................. என்று றோட்ரோத்தில் கனவு காணும் ஆட்களைத் திருத்தவே முடியாது. புலம்பட்டும்

ஐக்கிய நாடுகள் சபையில் பல தமிழர்கள் வேலை செய்கிறார்கள்.

நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

https://jobs.un.org/Galaxy/Release3/vacancy...cy/vacancy.aspx

பின்தங்கிய நாடுகளின் பெண் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு. பதிந்து வைத்திருந்தால் வெற்றிடங்கள் வரும்போது அழைக்கப்படுவீர்கள். தமிழ் மொழியை தெரிந்த பிறமொழிகளுள் ஒன்றாக போடுவதன் மூலம் இலங்கைக்கான செயற்பாடுகளில் இடம்பெறும் சந்தர்ப்பமும் உண்டு.

பட்டதாரியாக இருந்து ஐ.நா.வின் உத்தியோகபுூர்வ மொழிகளில் மூன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் உயர்நிலை பதவிகளில் இடம்பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.

உங்களுக்கு ஐ.நா. இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும். ஐ.நா.வில் சம்பளத்துக்கு ஒரு நாட்டிலும் வரியில்லை. குடும்பமாக வாழ்வோருக்கு குடும்பத்தை அழைத்து வைத்திருக்கு மேலதிக பணம் வழங்கப்படும்.

யூட் அண்ணா

எந்த நபரை பற்றியும் எழுதவில்லை

உங்களை பத்திதான் எழுதினேன்!

தாழ்வு மனப்பான்மையா?

அப்பிட்டீன்னா?-எங்க எதால- எப்போ?

யாரை பார்த்து? - உங்களையா?

ஓகோ இதுவும் சொல்லுவீங்கோ நீங்க

இன்னமும் சொல்லுவீங்கோ!!

அது போகட்டும்!

என்ன சொன்னிங்க இன விடுதலை அடிமை பட்ட இனத்துக்கு தான் தேவை - எனது இனம் அடிமை பட்ட இனம் இல்லையா?

பலே பலே - என்னமா பின்னுறீங்க - அது சரி - அடிமை படாத அமெரிக்கால வாழுற - உங்க ஊரில - 5 நாயை கொன்றால் - உங்க நிலமை என்னாகும்?

ஒரு இலட்சம் பேருக்கு மேல என் இனத்தில அழிஞ்சு போயிருச்சே அண்ணா - எப்பிடி ஆச்சு?

வானத்தில இருந்து யாரும் வந்து ஏதும் பண்ணிட்டு போனாங்களா?

சொன்னாதானே தெரியும்!

அப்புறம் சாதி விடுதலை - பேதி விடுதலை என்று எல்லாம் போறீங்க - அதை பத்தி இங்க யார் பேசினாங்க?

குறும்பு !

ஆரம்பிக்கும் போது என் இனம் அடிமை பட்ட இனம் இல்லை என்றீங்க - அப்புறம் தமிழீழ விடுதலை போராட்டம் என்று ஏதோ எடுத்து விடுறீங்க - ஏன் அண்ணா - அடிமையே இல்லாத ஊரில விடுதலை என்ற ஒரு பேச்சு வருமா? ஆர் யு ஓ.கே அண்ணா?

அப்புறம் என்ன சொன்னிங்க அறிவாளி அண்ணா- தமிழீழ விடுதலை போராட்டத்தை - உலக தமிழர் போராட்டமா பார்க்கிறவங்க இருக்காங்களா - ?

இருக்கட்டுமே - அதுக்கு நாம் என்ன செய்ய?

அண்ணா எங்கட ஊரில நடக்கிறது - ஒரு பிரச்சார - அரசியல் நாடகம் இல்லை அண்ணோய்-- வாழுறதா- சாகிறதா என்ற பிரச்சனையுங்கோ- ஏன் தேவையிலாம - எல்லை மீறிய கருத்தாடல் ?

உலக தமிழர் தமிழீழத்தை தனிநாடாக கருதவில்லை - சரிதான் - அவர்கள் கருதவேணும் என்றதுக்காகவா - கரும்புலியாய் போய் சாகிறாங்க?

கடைசில அடிப்படை உரிமைக்கான போர் நடக்குது-என்னு - குழம்பிட்டிங்களே- சொதப்பிட்டிங்களே!

அண்ணா - ஒரு நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் - வாழும் - பல்லினங்களுக்கிடையில்- அடிப்படை உரிமைகள் - பகிர்ந்து அளிக்கப்படாதவிடத்து- அந்த இனம் தேர்வு செய்ய கூடிய மாற்று வழி என்ன?

கடைசில திருகுறள் வேறையா? டாமாசு - டமாசு-

அதே குறள்ல அறத்து பால் தொகுதியில - இன்னும் கொஞ்சம் வாசியுங்க - உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணாச்சி!!

உங்களைப் போன்ற மெத்தப்படித்த மேதாவி போலக் அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளுபவர்களுக்கு தான் அந்த இடம் போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணாச்சி!!  

உங்களைப் போன்ற மெத்தப்படித்த மேதாவி போலக் அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளுபவர்களுக்கு தான் அந்த இடம் போதுமானது.

அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே.

பயனற்றவர்களுக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

- உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8)

நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே.

பயனற்றவர்களுக்கு அல்ல.

நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று

நீங்கள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மற்றவர்களை மட்டம் தட்டுவது, அவதூறு செய்வது, போன்றவற்றை தானே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

அறிவுக்குரிய கருத்துக்களை விவாதிக்க கருத்துக்களங்கள் இருக்கின்றன. தங்களைப்போல அவற்றை பயனற்றதாக்கும் வகையில், மற்றவர்களை மட்டம் தட்டுவதும், அவதூறு செய்வதுமாக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களை உலகமாக அறிவாளியாக நினைப்பதால் மற்றவர்களும் அவ்வாறே என கருதுவது உண்மையாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பக்கத்திலேயே தெரியும். சாத்திரியார் தொடக்கம் பலரை மட்டம் தட்டியவர்கள் யார் என்று.

மற்றது நான் உலகமகா அறிவாளியாக காட்டுவதாகவா உணர்கின்றீர்கள். எதை வைத்து உணர்கின்றீர்கள். நான் என்ன அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று போட்டேனா? அல்லது அன்றோரு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாளில்............... என்று எழுதத் தொடங்கினேனா?? :wink: :P

மேற்கோள்:

நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்

அண்ணா நான் கேட்டதுக்கு ஒண்ணும் பதில் சொல்லலையே! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்

அண்ணா நான் கேட்டதுக்கு ஒண்ணும் பதில் சொல்லலையே! :lol:

எனி எந்தப்பல்கலைக்கழகத்தில் படித்ததாக மேற்கோள் காட்டுவது என்று முடிவான அப்புறம் தான் பதில் வரும் :wink: :P

யூட் என்ற ஒட்டுப்படைக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்.

யூட் நீர் ஒரு ஒட்டுப்படை

ஒட்டுப்படை என்றால் என்ன?

சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா?

ஒட்டுப்படை என்றால் என்ன?

சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா?

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரி,

அல்லது தந்தையின் செல்வாக்கில், வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.