Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரன் கோவில் வாக்கு எண்ணிக்கை விபரம் -அதிமுக முன்னிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிவான 16 தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 13, மதிமுகவுக்கு 3 வாக்குகள்

முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 4,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை

அதிமுக- 6,088

திமுக - 1769

மதிமுக- 1295

தேமுதிக- 646

பாஜக - 00

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்... விஜயகாந்த் கட்சிக்கு நான்காவது இடமா? :o

வைக்கோ கட்சி மூன்றாவது இடத்தில் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

21-sankarankovil-visitor-place.jpg

தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வெற்றி நிலவரம் 11 மணி அளவில் தெரிய வரும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடை, லைட்டர்களுக்குத் தடை

வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புகைப்பட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றும் போலீசார் சோதனையிட்டனர்.

தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள், கூர்மையான பொருட்கள், பாட்டில், டின், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வயர், லைட்டர், திரவப் பொருட்கள், கெமிக்கல், உணவுப் பண்டங்கள் போன்ற எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் செல்போன் எடுத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, வேட்பாளர், அவரது ஏஜெண்டு ஆகியோர் பாதுகாப்பு வளையம் வரை செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டுமே செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

முத்துச்செல்வியா, முத்துக்குமாரா?

அதிமுக சார்பி்ல முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவகர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்திருப்பதாலும், இந்த தேர்தலில் வெல்லப் போகும் கட்சி குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை

அதிமுக- 11, 801

திமுக- 3,688

மதிமுக- 2, 417

தேமுதிக- 656

பாஜக- 00

2வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 8, 113 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்... விஜயகாந்த் கட்சிக்கு நான்காவது இடமா? :o

வைக்கோ கட்சி மூன்றாவது இடத்தில் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. :rolleyes::)

பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்வது வழக்கம். தேதிமுக கட்சியினரின் வேட்பாளர் பெரிதாக அத்தொகுதியில் செல்வாக்கு இல்லை. வை.கோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இத்தொகுதியில் இருப்பதினால் 2ம் இடத்துக்கு யார் வரப்போகிறார் என்பதே முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது. 2ம் இடத்தில் திமுகவா அல்லது மதிமுகவா?

சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை

அதிமுக- 12,292

திமுக- 3,784

மதிமுக- 2,667

தேமுதிக- 1,979

பாஜக- 00

2வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 8, 508 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திருமங்கலம் பார்முலா போய் சங்கரன்கோவில் பார்முலா வந்தாச்சு #

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 12, 860 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை

அதிமுக- 18,854

திமுக- 5,994

மதிமுக- 4,454

தேமுதிக- 2,923

18 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும். இதுவரை 3 சுற்றுக்கள் வாக்குகள் வெளிவந்துள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கரன்கோவில்௩2 அமைச்சர்களை களம் இறக்கி முதலிடத்தைப் பிடித்த ஜெயலலிதா!

சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவின் திராணியை நிரூபித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இந்த வெற்றியைப் பெற அவருக்கு 32 அமைச்சர்கள் தலைமையிலான மெகா தேர்தல் பணிக்குழு தேவைப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அரசாங்கமே சங்கரன்கோவிலில் குவிந்து கடுமையாகப் போராடி, கஷ்டப்பட்டு வேலை பார்த்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

வெற்றிதான் என்றாலும் கூட இந்த வெற்றியைப் பெற, திராணியை நிரூபிக்க அதிமுக மிகக் கடுமையான அளவில் செயல்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தனது வேட்பாளராக முத்துச்செல்வியை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அதேபோல எல்லோருக்கும் முன்பாக தேர்தல் பணிக்குழுவையும் அவர் அறிவித்தார்.

மொத்தம் 34 பேர் கொண்ட மெகா பணிக்குழுவை முதலில் அவர் அறிவித்தார். அதில் 32 பேர் தமிழக அமைச்சர்கள். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரே ஒரு தொகுதிக்கான தேர்தல் பணிக்கு இத்தனை அமைச்சர்களா என்று அனைவரும் வாய் பிளந்தனர். தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.

சங்கரன்கோவிலிலேயே முகாமிட்டிருந்த அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகள் படை சூழ, தடபுடலாக பணிகளில் குதித்தனர். அரசின் நல உதவிகள் அனைத்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து திருப்பி விடப்பட்டு சங்கரன்கோவிலுக்கு பாய்ந்து வந்தன. புயல் வேகத்தில் இவற்றை மக்களுக்கு அதிகாரிகள் விநி்யோகித்தனர்.

அரசின் இலவசப் பொருட்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. அத்தனை பணிகளையும் முடித்த பிறகுதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

32 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் என திரும்பிய பக்கமெல்லாம் அதிமுகவினர் தலைகள்தான். இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினர் பெருமளவில் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் சரமாரியாக கிளம்பின.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார். தேர்தல் ஆணையம் செத்துப் போய் விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதே போலத்தான் திமுக உள்ளிட்ட கட்சிகளும் புகார்கள் கூறின.

இருந்தாலும் அதிமுக தரப்பு எதையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பாட்டுக்கு தங்களது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தனர்.

இப்படி கடுமையாக வேலை பார்த்து, கஷ்டப்பட்டு முதலிடத்தைப் பிடித்து அம்மா காலடியில் வெற்றிக் கனியை கொ்ண்டு வந்து சேர்த்துள்ளது அதிமுக.

திராணியை நிரூபித்து விட்டனர்... ஆனால் அதற்காகப் போடப்பட்ட தீணி மிகப் பெரிது என்பதை அதிமுகவினரே ஒத்துக் கொள்வார்கள்.

- தட்ஸ் தமிழ்

-------------------------------------------------------------------

4வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 16, 683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

அதிமுக- 24,525

திமுக- 7,842

மதிமுக- 5,095

தேமுதிக- 3,425

7வது சுற்று முடிவில்...

அதிமுக- 40452

திமுக- 12881

மதிமுக- 7114

தேமுதிக- 5447

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

மதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் சந்தோசமளிக்கின்றன..

அடுத்த தேர்தலில் மதிமுக முக்கிய இடத்தைப்பிடிக்கும். அது எமக்கு நன்மை தரும்.

ம.தி.மு. க. இரண்டாவது இடத்தில் வரும் என எண்ணினேன், காரணம் இது வை. கோ. அவர்களின் தொகுதி என எண்ணுகிறேன். தி.மு.க. இரண்டாவது இடத்தில் உள்ளது கவலையே.

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு. க. இரண்டாவது இடத்தில் வரும் என எண்ணினேன், காரணம் இது வை. கோ. அவர்களின் தொகுதி என எண்ணுகிறேன். தி.மு.க. இரண்டாவது இடத்தில் உள்ளது கவலையே.

தற்போது இது பேராசை

ஆனால் அதற்கான காலம் கனிந்து வருகிறது

பெரிசு இடத்தைக்காலி செய்தால்.....??? :lol::icon_idea: :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையின் முதல் பெண் எம்.எல்.ஏ முத்துச்செல்வி!

21-muthuselvi-300.jpg

சங்கரன்கோவில்: அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ள சங்கரன்கோவில் தனி தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ, முதல் அதிமுக பெண் எம்எல்ஏ என்ற பெயரை முத்துச்செல்வி பெற்றுள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதிக்கு முதலில் 1952ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது அது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. முதல் தேர்தலில் ராமசுந்தர கருணாலய பாண்டியன் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பாண்டியன் சுயேச்சையாவார். ஊர்க்காவலன் காங்கிரஸ்காரர்.

பின்னர் 1957ல் சுப்பையா முதலியார் மற்றும் ஊர்க்காவலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் காங்கிரஸ்காரர்கள்.

பின்னர் 1962ம் ஆண்டு இத்தொகுதி ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அப்துல் மஜீத் சாஹிப் வெற்றி பெற்றார்.

1967ல் நடந்த தேர்தலில் திமுகவின் துரைராஜ் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் உறுப்பினர் என்ற பெருமை துரைராஜுக்கு உண்டு.

தொடர்ந்து 1971 மற்றும் 77 ஆகிய ஆண்டுகளிலும் திமுகவே வென்றது. அப்போது அக்கட்சியின் சார்பில் சுப்பையா வெற்றி பெற்றார்.

பின்னர் காட்சி மாறியது. 1980ல் அதிமுக முதல் முறையாக வெற்றிக்கனியைப் பறித்தது. முன்பு திமுக சார்பில் வென்றவரான துரைராஜ், இம்முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 1984ல் அதிமுகவின் சங்கரலிங்கம் வென்றார்.

1989ம் ஆண்டு நடந்த தேர்தலி்ல திமுக தொகுதியைப் பறித்தது. தங்கவேலு வெற்றி பெற்றார். இந்த தேர்தல்தான் கடைசியாக திமுக இங்கு வென்றதாகும். அதன் பிறகு இன்று வரை அதிமுகதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

1991ல் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 1996 முதல் இந்தத் தொகுதி கருப்பசாமி கைக்கு மாறியது. 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அடுத்தடுத்து கருப்பசாமியே வெற்றி பெற்று வந்தார்.

இப்போது 2012ல் நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்று இத்தொகுதி தனது கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. மேலும் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையையும் முத்துச்செல்வி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

நன்றி

மதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் சந்தோசமளிக்கின்றன..

அடுத்த தேர்தலில் மதிமுக முக்கிய இடத்தைப்பிடிக்கும். அது எமக்கு நன்மை தரும்.

முடியல விசுகு அண்ணா. இன்னுமா நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?

அடுத்த தேர்தல் வாறதுக்குள்ள நமக்கு என்னெல்லாம் நடக்குமோ?

வைக்கோ தொடர்ந்து அரசியலில் இருக்கலாம் என்பது நிருபனம் ஆகிவிட்டது அடுத்தது கப்டனும் குடும்ப அரசியலில் முழ்கி மறைய போகிறார் என்று நினைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் குறைஞ்ச பட்டசம் எதிர்கட்சிக்குத்தன்னும் ம.தி.மு. க வரவில்லையாயின் தமிழ்நாடும், தமிழீழமும் பாரதூரமான இழப்புகளை சந்த்தித்துவிடும் ம.தி.மு.க பதவிக்கு வரும் முன்.

அதாவது மத்திய தேர்தலில் கருணாநிதி வீட்டுக்குப்போகவேண்டியது மிக மிக அவசியம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தேர்தலில் குறைஞ்ச பட்டசம் எதிர்கட்சிக்குத்தன்னும் ம.தி.மு. க வரவில்லையாயின் தமிழ்நாடும், தமிழீழமும் பாரதூரமான இழப்புகளை சந்த்தித்துவிடும் ம.தி.மு.க பதவிக்கு வரும் முன்.

அதாவது மத்திய தேர்தலில் கருணாநிதி வீட்டுக்குப்போகவேண்டியது மிக மிக அவசியம்.

கருணாநிதிக்கு வீட்டுக்கு போவது என்பது சரித்திரத்தில் இல்லாதவிடயம்.....சிலநேரத்தில் மண்டையை போடுவது என்பது சரிவரலாம் :lol::D

கருணாநிதிக்கு வீட்டுக்கு போவது என்பது சரித்திரத்தில் இல்லாதவிடயம்.....சிலநேரத்தில் மண்டையை போடுவது என்பது சரிவரலாம் :lol::D

தமிழ்நாட்டுமருத்துவம் இப்போதைக்கு கைவிட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.