Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.நிலவரம் பெரும் திருப்தி அளிக்கிறது என்கிறார் பீரிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

g.l.piris.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இன்று 24 நாடுகளுக்கும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்பதியளிக்கிறது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தமை எமக்கு பெரும் திருப்தியளிக்கிறது. அந்நாடுகளுக்கு எமது நன்றியையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

15 நாடுகள் எதிர்த்மை மற்றும் 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாத நிலையில் இறுதிமுடிவானது 47 அங்கத்தவர்களைக்கொண்ட மனித உரிமைகள் பேரவையில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. 24 நாடுகள் அதை ஆதரித்தன. இவற்றுக்கிடையிலான வித்தியாசம் இந்தளவு குறைவானதாகும்.

இந்த அனுபவத்தில் மிக கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்களிப்பானது குறித்த விவகாரத்தின் தகுதி அடிப்படையில் அல்லாமல், தீர்மானத்துடனோ அல்லது தீர்மானம் தொடர்பான நாட்டின் சிறந்த நலன்களுடன் சம்பந்தமில்லாத தந்திரோபாய கூட்டணிகள் மற்றும் ஏனைய நாடுகளின் உள்ளூர் அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் இடம்பெற்றதாகும். இது மனித உரிமைகள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்களுக்கு முரணானது.

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட முடிவதற்கான ஆபத்தான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படும் ஆபத்து குறித்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பல நாடுகள் உணர்ந்திருந்தன.

இது எந்த வகையான விதிமுறைகள் அல்லது அளவுகோல்களினால் நிர்வகிக்கப்படாமல் தேர்தெடுக்கப்பட்ட மற்றும் தன்னிச்சையான செயன்முறையாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை, எமது கொள்கையானது அனைத்து விடயங்ளும் எமது நாட்டு மக்களின் முக்கியமான நலன்களினால் ஆளப்படுவதாக தொடர்ந்துமிருக்கும். இதில் வேறு எந்த வகையான பரிசீலனைகளுக்கும் இடமில்லை.

http://www.eeladhesa...lle-nachrichten

இவர் இனி இதுவும் சொல்வார், உதுக்கு மேலும் சொல்வார்...........அப்ப ஒரே கக்கூசுக்கதானாக்கும். அல்லது அறை....................

இன்று இரவு மேலதிக பணம் செலவாகுமாக்கும். இவரது அறை துப்பரவாக்க..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீ.எல். பீரிஸை கட்டுநாயக்காவிலிருந்து நேரடியாக அங்கோடைக்கு அனுப்பவுள்ளாதாகத் தகவல்!

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையாம். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

சமாளிப்புகேசன் எல்லாம் சூப்பரப்பு.. ஒரே டமாஸ்தான்

பீரிசின் சேவை மகிந்தாவுக்கு திருப்தி இல்லாமல் போய் இந்த சிங்கள இனவாத புத்திஜீவி மீண்டும்போய் ஐ.தே.க.வில் சேரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொட்டைக்கு தலை காய்ஞ்சு ரம்புக்க மாதிரி லேக் கவுசில் இருந்து குதிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

சமாளிப்புகேசன் எல்லாம் சூப்பரப்பு.. ஒரே டமாஸ்தான்

:D:lol:

35 வருட அகிம்சை போராட்டம், 25 வருட ஆயுத போராட்டம், 3 வருட சர்வதேசமயப்படுத்தல் போராட்டம், 3 மாததிற்கு கிட்ட, இரவுபகலாக மனித உரிமைகள் பேரவையிடமான போராடம், இவற்றுக்கெல்லாம் பதிலாக பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கு. அதன் பலனாக பல கேள்விகள் பலர் மனத்திலும் எழுகின்றன.

நமது மனத்திலும் சில கேள்விகள்.

  1. இது தமிழருக்கு வெற்றியா தோல்வியா.
  2. பிரயோசனமானதா, வெறும் கண்துடைபா?
  3. பலன்கள் தமிழருக்கா இல்லை சரவதேசத்திற்கா?
  4. இதனால் சிங்களம் நொந்து போனதா இல்லையா?
  5. போராட்டம் நிறைவை அண்மிக்கிறதா, இல்லை ஆரம்பமா?
  6. இந்த வலுவை தமிழ்மக்களும் சர்வதேசமும் பலன் கிடைக்கும்வரை தொடருமா இல்லை சலித்துப்போகுமா?

பகுப்பாய்வாளர்கள் ஏற்கனவே தமது தொகுப்புக்களை வெளிவிட தொடங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் பதில்களுக்கு நாம் சிலநாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாடுகடந்த அரசின் ஜெனீவாக கிளை பிரேரணை நிறைவேறிய கையுடனேயே ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. நா.க. அரசு இதை ஆரம்பமாகவே பார்க்கிறது. அதன் பிரதான இலக்குகள், போர்க்குற்றம், இன அழிப்பு குற்றச்சாட்டு, சுயநிர்ணய அதிகாரம்……. என்று வருங்கால நோக்கங்கள்.

கூட்டமைப்பு தனது பதிலை வெளிவிட்டுவிட்டது. அதன் பதிலில், பிரதானமானது, தமிழ்மக்கள் போராட்ட வலுவை தக்க வைக்க தன்னுடன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற கோரிக்கையாகும். ஜெனீவாவின் பிரேரணை வெற்றி தனது ராஜதந்திரத்தை உறுதிப்படுத்துகிறதாகவேதான் கூட்டமைப்பு அறிக்கை வெளிவிட்டிருக்கிறது.

இந்தியா தனது விளக்கங்களை வெளிவிட்டிருக்கு. தனது கொள்கைப்படி, இன்னொருநாட்டு விடையத்தில் பேரவையை தலையை நுளைக்கவிடாது தடுத்திருப்பதாக மார் தட்டியிருக்கிறது. பேரவை என்று ஒன்றை ஆரம்பித்த பின் இந்தியாவின் அந்த கொள்கை சரியானதா இல்லையா என்பது ஒரு விவாதம். அது இலங்கை மாதிரி காட்டுமிராண்டி அரசுகள் விடயத்திலும் கூட அது சரியானதா என்பது இன்னொரு விவாதம். இந்தியா, பேரவையை இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது தடுத்து விட்டதோ இல்லையோ, இந்தியா சரித்திர பூர்வமாக தனது எல்லா அயல்நாட்டு விவகாரங்களிலும் தான் தனது மூக்கை நுளைக்கிறது. தீபெத், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, இலங்கை என்று சகல அயல்நாட்டு துளாவாரங்களிலும் தன்னை நுளைத்து கொண்டுள்ள இந்தியாவின் கூற்று எத்தனை உண்மையை என்பது தெரியாது. அதைவிட இந்தியா பிரேரணை நேரம் இலங்கையை திரும்பத் திரும்ப தனது நண்பன் என்று கூறிக்கொண்டிருந்தது. அப்படியாயின் இந்த விடையத்தில் இந்தியாவின் நடுநிலைமை நம்ப முடியாதது. இந்தியா இந்த திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதாக அறிவித்திருக்கிறது. ஆனால் இதையும் விட பல திருத்தங்களையும் தான் முயற்சிப்பதாக லோக்கசபை வரைக்கும் பகிரங்கமாக அறிவித்தது. அதிலொன்றுதான் அது இலங்கைமீது திணித்திருக்கும் 13ம் திருத்தத்தையும் பிரேரணையில் உள்ளடக்குவது. நிச்சயமாக இந்தியா அதில் வெற்றி பெறவில்லை என்பது வெளிப்படை. அதிலும் இந்தியா வெற்றிபெற்றிருந்தால் இதே விளக்கத்தையா பிரேரணக்கு இந்தியா கொடுத்திருக்கும் என்பது கேள்வியே. காங்கிரஸ் சொல்வதை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் நம்புகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்காலாம். இந்தியா பிரேரணையை ஆதரித்த காரணம் தமிழ்நாட்டை திருப்திப்படுத்த. பிரேரணையை திருத்துவித்தது இலங்கையை திருப்திப்படுத்த. சிலசமயம் இருவரும் திருப்திப்படலாம், இல்லையேல் இருவரும் இந்தியா ஏய்த்துவிட்டதாக கோபமும் படலாம்.

அமெரிக்கா இலங்கைக்கு எள்ளவும் விட்டுக்கொடுக்காமல் பிரேரணையை நிறைவேற்றிவைத்தது. ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இலங்கையை பிரேரணையை எற்கும்படிதான் கோரி வருகிறது. இதை எள்ளவும் ஐயத்திற்கிடமிலாமல் கிளிரன் அம்மையாய் பிரேரணை முடிந்தகையுடனேயே அறிவித்துவிட்டார். 2009 ம் ஆண்டு போர்குற்றங்களை நட்த்தி போரில் வெற்றி பெற்ற இலங்கை, வானம் இடிந்து விழுகிறதோ என ஐயப்படத்தக்கதாக இலங்கையெங்கும் பட்டாசு கொழுத்திக் கொண்டாடியது. ஆனால் அமெரிக்காவின் இந்த வெற்றியை அமெரிக்க ஊடகங்கள் பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை. மாறாக பீரிசு முன்னர் அழைத்ததிற்கு போக மறுத்தபின்னர், திரும்பவும் அமெரிக்கா வரும்படி அழைப்பு நீட்டியிருக்கிறா கிளின்ரன் அம்மையார்.

எல்லோரும் போலவே பீரிசும், பிரேரணை முடிந்தவுடவுடன் தனது அறிக்கையை வெளிவிட்டார். அதை தமிழ் ஊடகங்கள் சில “விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை” என்று கிண்டல் செய்திருக்கின்றன. காரணம் பேராசிரியர் பீரிசு காட்டிய கணக்கு. பேராசிரியர் பீரிசு நிறைய கணக்கு படித்திருக்கிறாரோ இல்லையோ, நிறைய கணக்குவிடவாவது படித்திருக்கிறார். பிரேரணையில் வந்த 15 புளித்தோடம்பழங்களையும், 8 அழுகிய ஆபிள்களை பினை பினை என்று பினைந்து பனம் பழமாக்கி பணியாரம் சுட்டு 23 இனிமையான பனக்காய் பணியாரமாக்கியிருக்கிறார். ஆனால் சிங்கள பத்திரிகையான டெய்லி மிறர் போட்டிருக்கும் விபரத்தின் படி கணக்கு அப்படி அல்ல.

பிரேரணையை எதிர்த்தவை 15 நாடுகள் மட்டுமே. இவற்றில் ஒரே ஒரு நாட்டைமட்டும் தான் இலங்கையுடன் இருப்பதாக காட்டுகிறது டெய்லி மிறர். மற்றயவை எல்லாம் பிரேரணையை தத்துவார்த்தமாக எதிர்த்தனவேயன்றி இலங்கை சரி என்பதற்காக பிரேரணையை எதிர்த்தன அல்ல. நாம் இலங்கை தனது குற்றங்களை விசாரிக்க கூடாது என்றுதான் கூறினோம். இலங்கை தான் அதை விசாரித்தால் தான் தப்பிவிடாமென முனைகிறது. அதேபோல் நிலைமையில்தான் இந்த பிரேரணை எதிர்ப்பு நாடுகள். இவைகளுக்கும் தங்கள் நாடுகளில் குற்றங்கள் உண்டு. ஆகையால் இந்த மாதிரியான தொடக்கங்கள் ஒருநாளில் தமது நாட்டுக்குள் வந்துவிட்டாலும் என்றுதான் பிரேரணையை எதிர்த்தன. டெய்லி மிறர் தரும் விபரப்படி பங்களாதேஷ், சீனா, மாலைதீவு, பிலிபைன்ஸ், ரூசியாவரைக்கும் பிரேரணை உள்நாட்டு விசயங்களில் தலையிடுவதாகவேதான் எதிர்ப்பு கூறியிருந்தன. ஆனால் எல்லோருக்கும் தெரியும் பிரேரணை உள்நாட்டு விடையத்தில் தலையிடவில்லை என்பது. இதை இந்தியா தெளிபடுத்தியிருக்கு என்பது மட்டுமல்ல, அதன்பின் அது பிரேரணைக்கு வாகளித்துமிருக்கு. அதாவது இந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவை பிரேரணை, இந்தியாவால் திருத்தப்படுவதற்க்கு முன்பு கொடுக்க வேண்டிய விளக்கத்தை பிரேரணை திருத்தபட்ட பிறகும் கொடுத்து தம்மை வெறுமனே செல்லாக்காசுகளாக்கியிருக்கின்றன. தாய்லாந்து ஒருநாட்டை மட்டும்தான் டெயிலி மிறர் இலங்கைக்கு ஆதரவாக, இலங்கையின் இணக்கப்பாடு முயற்சிகளை பாராட்டி பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருக்கிறது என்கிறது. அதாவது நிலைமையை வைத்துப்பார்த்தால் 2009ல் மனித உரிமைகள் பேரவையில் வந்த பிரேரணை நேற்று வந்திருந்தால் இலங்கைக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும்தான் கிடைத்திருக்க சந்தர்ப்பம். மகிந்தாவை திருப்திப்படுத்த, இதை பீரிசு 23ஆக கணக்குவிடுகிறார். அதுமட்டுமல்ல பீரிசு இந்த மாதிரியான ஒரு பிரேரணை இதுதான் முதல் தடவை என்றுதான் பிரேரணையை எதிர்க்கிறார். அதாவது இலங்கை உலகநாடுகள் ஒன்றிலும் இதுவரையும் நடவாத குற்றம் ஒன்றைத்தான் துணிந்து செய்திருக்கு. இது இரண்டாம் உலகபோரில் யேர்மனி என்ன செய்து அதுவரையில் இருக்காத ஐ.நாவை ஏற்படுத்த வேண்டிய தேவையை உண்டாக்கியதோ, அதே மாதிரி இலங்கையும் இதுவரையில் இயற்றப்படத்தேவை எழுந்திருக்காத பிரேரணையை ஒன்றை நேற்று நிறைவெற்றிவைக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. இதைதான் பேராசிரியர் பீரிசு தனது பாணியில் கூறுகிறார். பீரிசு விழுந்த போது உடமெல்லாம் சேற்றை பிரடிக்கொண்டு மீசையில் மட்டும் மண்படவில்லை என்கிறார்.

Edited by மல்லையூரான்

"ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட முடிவதற்கான ஆபத்தான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படும் ஆபத்து குறித்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பல நாடுகள் உணர்ந்திருந்தன."

சக்திவாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு சிறு இனம் அநாதரவாக நசுக்கப்பட்டபோது நிகழாத அல்லது கருத்தில் கொள்ளப்படாத முன்னுதாரணம் இங்கும் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.