Jump to content

எந்த முகம்?


Recommended Posts

இப்ப போகலாமென

மனம் அடித்துக் கொள்கிறது.

83இன் பின்னர்

மறந்து போயிருந்தவையெல்லாம்

நினைவிற்குள் மீண்டன.

half-face.png

கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம்,

புத்தகக் கவருக்குள்

ஒளித்து வைத்த காதல் கடிதங்கள்,

திண்ணைச் சுவரில்

எண்ணெய் பிசுக்காய்

அப்பியிருக்கும்

ஆச்சியின் அடையாளம்.

பின்முற்றம்

கக்கூஸ்

கிணற்றடி

இத்தனை காலமாய்

மறந்து போயிருந்த அனைத்தையும்

கூட்டி நினைவிற்குள் மீட்க

புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது.

என் மண்

என் நாடு

என் மக்கள்

படபடக்கின்றது மனம்

தங்குவதற்கு வசதியான இடம்

சப்ப “சுவிங்கம்”

சாப்பாட்டு ஒழுங்கும்

போக முன்பே செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்குக் குடுக்க

கொஞ்ச பழைய உடுப்பு

சொக்லேட்டுப் பெட்டிகள்,

பென்சில்கள், ரப்பர்கள்

எல்லாவற்றையும்

பரப்பிவிட்டு

கையில் “பாஸ்போட”, “ரிக்கேற்ருடன்” விழிக்கின்றேன்.

எந்த முகத்தோடு போவதென்று தெரியாமல்.....!!!!

http://www.ilankathir.com/?p=2896

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தத் தாயைக் கட்டித் தழுவ,

எந்தக் கடையிலும் முகம் தேட வேண்டாம்!

காலத்தின் கோடுகள் கீறிய வடுக்கள்.

காற்றுப் பட்டதும், கரைந்து போய் விடும்!

கவிதைக்கு நன்றிகள், இளங்கதிர்!>

Link to comment
Share on other sites

என் மண்

என் நாடு

என் மக்கள்

படபடக்கின்றது மனம்

இந்த படபடப்பு என்றும் நீங்கப்போவதில்லை யாருக்குமே. ஏனென்றால் நாங்கள் தமிழர். தாயை தாய் நாட்டைத் தேடித் போகத் தயக்கம் ஏன்?

நல்லதொரு கவிதைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஒருவித அச்சம் கூச்சம் பயம்படபடப்பு இருக்கும் .

உள்ளக் கிடக்கையை வெளியிடும உண்மை வரிகள்

Link to comment
Share on other sites

தாய் மண்ணை பற்றிய கவிதை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.