Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் சமரசிங்காவிற்கு எதிராக பதாகைகள் தாங்கியவாறு தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி மாநிலத்தில் (Epping Leisure Centre) எப்பிங் லேசர் சென்றரில் (Sri Lanka Reconciliation Forum)கும் போர்குற்றவாளி திசர சமரசிங்காவிற்கு சிட்னி வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் ஒன்று கூடி பதாகைகள் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அந்த இடத்தில் வாழும் வேற்றின மக்கள் இங்கு என்ன நடைபெறுகிறது. என்று கேட்டார்கள். அப்போது நாம் எமது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்பை பற்றியும் போர்குற்றவாளி யார் என்பதையும் எடுத்துக் கூறினோம். அவர் கூறினார், அப்படியான போர் குற்றவாளியை அவுஸ்ரேலியாவில் (Sri Lankan High Commissioner) எப்படி இருக்க முடியும் என்று கேட்டார். பின்பு எங்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு திசர சமர சிங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த இடத்தில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்ற படியால் நாங்கள் இப்படியான ஒரு எதிர்ப்புக்களை தெரிவிப்போம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. (Sri Lanka Reconciliation Forum) கூட்டத்தில் இருந்து முன்று நபர்கள் எம்முடன் வந்து கதைத்தார்கள். வெளியில் நின்று ஆர்பாட்டம் செய்யவேண்டாம் என்றும் உள்ளே வந்து திசர சமரசிங்காவுடன் கதைத்து கேள்வி கேட்குமாறும் கூறினார்கள்.

நாங்கள் உள்ளே வரமாட்டோம், போர்குற்ற குற்றவாளியுடன் நாங்கள் கதைக்க விரும்பவில்லை. எங்களை உள்ளே வைத்து போர்குற்றத்தை மறைப்பதுதான் இவர்களுடைய நோக்கம் நாங்கள் இந்த போர்குற்றவாளியை மறைக்க விரும்பவில்லை, வெளிஉலகத்திற்கு எடுத்துக்கூறுவோம் என்று எமது கோசங்களை வெளிப்படுத்தினோம்.

சிட்னி வாழ் தமிழ் மக்கள் திசர சமரசிங்கா போர்குற்றவாளி எந்த இடத்தில் கால்பதித்தாலும் அந்த இடங்களில் எல்லாம் எமது ஆர்பாட்டத்தை தொடர்ந்து காட்டுவோம்.

நீதிக்காகவும் விடுதலைக்காவும் தொடர்ந்து போராடும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள்

- ஈழம்பிரஸ்

யார் இந்த forumஐ நடத்துவது? அதில் எத்தனை தமிழர்கள் உள்ளனர்?

Edited by காந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய தமிழ் மக்களுக்கு, நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு விடுதலை கிடைக்கும் வரையிலும் தொடர்ந்து போராடுவோம்.

அவுஸ்திரேலிய தமிழ் மக்களுக்கு, நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் வாழும் போராட்டகுணம் மிக்க தமிழர்களுக்கு நன்றிகள்..!

அவுஸ்திரேலியாவில் வாழும் போராட்டகுணம் மிக்க தமிழர்களுக்கு நன்றிகள்..!

நீங்கள் குறிப்பிட்டு போராட்ட குணம் மிக்க தமிழர்கள் என்று சொன்னதில் ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Eezham Tamils in Sydney protest against SL ‘reconciliation’ propaganda

The High Commissioner of Sri Lanka to Australia, Admiral (retd) Tissara Samarasinghe, who was the former SL Navy commander during the times of the genocidal war, was confronted at Epping, a suburb of Sydney in Australia, by Eezham Tamil protestors on Sunday, when the commander alleged of war-crimes came to Epping Leisure Centre to attend a question-and-answer session organized by the so-called Sri Lankan Reconciliation Forum (SLRF).

The area of Epping in NSW has a large population of Sinhalese expatriates. Tissara Samarasinghe and the SLRF did not therefore expect a large protest by the Tamil disapora.

Unable to avert the embarrassment the organizers tried to con the Tamil people and requested them to come inside and ask questions.

However, the Eezham Tamil protestors refused to engage with the ‘reconciliation’ propagandists and responded to them by saying that they will not accept speaking to an alleged war criminal.

“This forum is organized to hoodwink the Australian community into believing that there is an actual reconciliation process taking place in the island of Sri Lanka,” Seran Sribalan, an Eezham Tamil artist and activist from Sydney told TamilNet.

“Until justice is served we will continue to protest every time Tisara Samarasinghe sets foot in Sydney and we will continue to fight until our people and our land is free,” Mr. Seran Sribalan further said.

“Reconciliation is not something that can take place whilst the Tamil people live without any meaningful political space. Nor can it take place after numerous lies over the last 60 years from the Sri Lankan Government, after 60 years of continuing genocide by the Sri Lankan Government and whilst war criminals such as Tisara Samarasinghe are in positions of power,” he said.

- Tamil net

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த forumஐ நடத்துவது? அதில் எத்தனை தமிழர்கள் உள்ளனர்?

இதில் சில தமிழர்களும் கலந்திருக்கிறார்கள். கலந்த தமிழர்களில் ஒருவர் அண்மையில் புகையிரத நிலையத்தில் பெண்களின் அந்தரங்கப்பகுதிகளை புகைப்படம் எடுக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறைத்தண்டனை பெற்ற கட்டட விரிவுரையாளர்.( இவருடன் சேர்ந்து திரிபவர்கள் இவர் சமுகத்தில் நன்னடத்தை உடையவர் என்று சான்றிதல் வழங்கி இவரை விரைவில் சிறையில் இருந்து மீண்டிருக்கிறார்கள்). இன்னுமொரு கட்டட நிபுணத்துறையினைச் சேர்ந்தவரும் கலந்து கொண்டிருக்கிறார். இவர்கள் ஈழத்தின் வடபகுதியில் சில கட்டட நிர்மானத்துக்கு தற்பொழுது பொறுப்பாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே குறிப்பிடத் தக்கவர்கள் சந்திரகாசன் மற்றும் இராசநாயகம் போன்றவர்கள். சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதுதான் இனித் தமிழருக்கு ஒரே வழியென்று கூறும் கூட்டத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சிங்களவர்கள் தருவதை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்யவேண்டும் என்பதுதான் இவர்களது நிலைப்பாடு. சிட்னியிலிருக்கும் இன்னும் சில தமிழ்பேசும் சிங்கள விசுவாசிகளும், மெல்பேனிலிருந்து சில விசுவாசிகளும் கலந்துகொண்டதாகத் தகவல். அவுஸ்த்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் அணுசரணையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிங்கள அரசு தனது போர்க்குற்ற முகத்தை மறைக்கவும், கொலைகளை நியாயப்படுத்தவும் முயன்றிருந்ததாக செய்திகள் வந்திருந்தன.

அதேபோல யாழ்ப்பாணத்திலிருக்கும் பிரபல தனியார் கத்தோலிக்கக் கல்லூரி ஒன்றின் அவுஸ்த்திரேலிய பழைய மாணவர் சங்கம் வருடந்தோறும் தமது ஒன்றுகூடலை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழமை. இம்முறை சிங்களக் குருவானவர் ஒருவர் தலமையில் இத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த இரு தமிழ் குருவானவர்களும், இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ்க் குருவானவர்களும் சிட்னியில் இருந்தபோதும் கூட, சிங்களப் பாதிரியாரின் சேவையை இந்த தமிழ்ப்பழைய மாணவர் ஒன்றியம் வேண்டியிருக்கிறது. வன்னியில் போர்ரக்குற்றம் நடைபெறவேயில்லை, மக்களைக் கொன்றதெல்லாம் புலிகள்தான் என்று சிங்கள மேற்றாசனத்தின் தலைவர் மல்கம் ரஞ்சித் அண்மையில் கூறியிருந்தது, சிங்களக் குருவானவர்கள் தொடர்ந்தும் தமிழினத்திற்கெதிராக துவேஷத்தைக் கக்கி வரும் நிலையிலும், இந்தப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் திமிர்த்தனமாக ஒரு சிங்களக் குருவானவரையே அழைத்திருப்பது வருத்தத்திற்குரியது.

இந்தப் பழைய மாண்வர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அடிக்கடி சிங்களத் திருப்பலிகளில் கலந்துகொண்டு வருவதுடன், சிட்னியில் உள்ள சிங்கள மக்களுக்கு தமிழர்களுக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை இவரது தலமையிலேயே இந்தச் சிங்களப் பாதிரியார் தமிழ் நிகழ்வொன்றிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் போராட்டகுணம் மிக்க தமிழர்களுக்கு நன்றிகள்..!

அதிகளவில் தமிழர்கள் இருந்தால் கனடா போன்று, எமக்குள்ளேயே அடிபட்டுக்கொள்ளுவோம். எதிரியும் அதை பயன்படுத்திக்கொள்ளுவான்.

அவுசில் பல நகரங்களில் சிங்களவர்களே அதிகம். அதனால் எமது மக்களும் கொஞ்சம் போராட்டக்குணம் கூடியவர்களாக உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல யாழ்ப்பாணத்திலிருக்கும் பிரபல தனியார் கத்தோலிக்கக் கல்லூரி ஒன்றின் அவுஸ்த்திரேலிய பழைய மாணவர் சங்கம் வருடந்தோறும் தமது ஒன்றுகூடலை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழமை. இம்முறை சிங்களக் குருவானவர் ஒருவர் தலமையில் இத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த இரு தமிழ் குருவானவர்களும், இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ்க் குருவானவர்களும் சிட்னியில் இருந்தபோதும் கூட, சிங்களப் பாதிரியாரின் சேவையை இந்த தமிழ்ப்பழைய மாணவர் ஒன்றியம் வேண்டியிருக்கிறது. வன்னியில் போர்ரக்குற்றம் நடைபெறவேயில்லை, மக்களைக் கொன்றதெல்லாம் புலிகள்தான் என்று சிங்கள மேற்றாசனத்தின் தலைவர் மல்கம் ரஞ்சித் அண்மையில் கூறியிருந்தது, சிங்களக் குருவானவர்கள் தொடர்ந்தும் தமிழினத்திற்கெதிராக துவேஷத்தைக் கக்கி வரும் நிலையிலும், இந்தப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் திமிர்த்தனமாக ஒரு சிங்களக் குருவானவரையே அழைத்திருப்பது வருத்தத்திற்குரியது.

இந்தப் பழைய மாண்வர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அடிக்கடி சிங்களத் திருப்பலிகளில் கலந்துகொண்டு வருவதுடன், சிட்னியில் உள்ள சிங்கள மக்களுக்கு தமிழர்களுக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை இவரது தலமையிலேயே இந்தச் சிங்களப் பாதிரியார் தமிழ் நிகழ்வொன்றிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

சிட்னியில் ஒவ்வொரு வருடமும் சிங்கள தேசத்தின் சுதந்திர தின விழா பெப்ரவரி முதல் சனிக்கிழமையில் நடைபெறுவதுண்டு. இதற்கு பல மதகுருமார்களை அழைப்பார்கள். முன்பு 3 தடவை சிட்னி முருகன் கோவிலில் இருந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அட்சகர் கலந்து கொள்வார்கள். அந்த அட்சகர்கள் இலங்கை பிரசாவுரிமை பெற்றதினால் எப்படியும் 5 வருட வேலை முடிய இலங்கைக்கு செல்லவேண்டும் என்ற காரணத்தினால் இந்நிகழ்வுக்கு செல்வதுண்டு. ஆனால் இவ்வருடம் கோவிலின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழ் இன உணர்வாளாரினால் கோவிலில் இருந்து ஒருவரும் போகக்கூடாது என சொல்லப்பட்டதினால் யாரோ ஒரு வட இந்தியரை தமிழ் அட்சகர் என்று சொல்லி சிங்கள அரசு சுதந்திர விழாவுக்கு அழைத்திருக்கிறது. சுதந்திரவிழாவுக்கு சில தமிழ்ப்பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் கலந்து கொள்ள சிங்களம் பல்வேறு முயற்சி செய்தும் சிங்களத்தினால் வெற்றி பெற முடியவில்லை. சென்ற கிழமை யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலைகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் அப்பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற சிறிலங்காவின் துணைப்படையைச் சேர்ந்த ஒருவர் பார்வையாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களோடு சேர்ந்து சில தமிழர்கள் அவுஸ்திரெலியா அரசிடம் வாங்கிய பண விபரம்

Organisation: Sri Lanka Reconciliation Forum Sydney

Project Name: Post-Conflict Reconciliation Among the Sri Lankan Diaspora in NSW

Location: Pendle Hill

Amount: $19 500

Project Summary:

The project seeks to achieve reconciliation and forestall identified deep divisions between the various Sri Lankan Diaspora communities in Australia (primarily Tamils and Sinhalese) which have arisen as a result of political events in Sri Lanka. The project includes focus groups and workshops among Sinhalese, Tamil and Muslim people of Sri Lankan descent to dispel anger, distrust and the desire to avenge past wrongs and thus create a society that is less divided. The resulting harmony between different Sri Lankan communities living in New South Wales is expected to increase the level of harmony within the wider community.

http://www.immi.gov.au/living-in-australia/delivering-assistance/government-programs/dscp/funded-projects/grants2011-12/2011-nsw.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமரசிங்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

imag0161k.jpg

25032012au01.jpg

25032012au02.jpg

25032012au03.jpg

நன்றி கந்தப்புவுக்கும் மற்றைய உறவுகளுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்புவுக்கும் மற்றைய உறவுகளுக்கும்.

எனக்கு நன்றி சொல்ல தேவையில்லை. எனென்றால் அச்சமயத்தில் நான் சிட்னியில் இல்லை. வேறு மானிலத்தில் இருந்தேன்.

நீங்கள் தானே செய்தியை கொண்டு வந்திருந்தீர்கள்.

கொஞ்சம் வசனத்தை திருத்திப்பார்க்கிறேன்.

பங்கு பற்றிய தமிழ் உறவுகளுக்கும், செய்தியை கொண்டுவந்த யாழ்கள உறவு கந்தப்புவுக்கும் ........

Edited by மல்லையூரான்

கந்தப்பு, இப்படியான செயற்பாடுகள் ஒழுங்கு செய்தபின் யாழிலும் அதைப் போட்டால் அருகிலிருக்கும் யாழ் உறவுகளில் சிலராவது இப்படியான போராட்டங்களில் பங்கு கொள்ள வசதியாக இருக்கும். இப்படியானவற்றுக்கு உதவி கேட்டால் யாழ் களம் ஏதாவது விதத்தில் உதவி செய்யவும் தயாராக இருக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இப்படியான செயற்பாடுகள் ஒழுங்கு செய்தபின் யாழிலும் அதைப் போட்டால் அருகிலிருக்கும் யாழ் உறவுகளில் சிலராவது இப்படியான போராட்டங்களில் பங்கு கொள்ள வசதியாக இருக்கும். இப்படியானவற்றுக்கு உதவி கேட்டால் யாழ் களம் ஏதாவது விதத்தில் உதவி செய்யவும் தயாராக இருக்கம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99548entry740324

சென்ற புதன் கிழமை நான் யாழில் பதிந்த கருத்து மேலே இருக்கிறது. வியாழன் அன்று முழுவிபரம் பற்றி அறிந்தேன். ஆனால் நான் சென்ற இடத்தில் கணனிவசதி கிடைக்கவில்லை. ஆர்ப்பாட்டம் சென்ற ஞாயிறு நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இப்படியான செயற்பாடுகள் ஒழுங்கு செய்தபின் யாழிலும் அதைப் போட்டால் அருகிலிருக்கும் யாழ் உறவுகளில் சிலராவது இப்படியான போராட்டங்களில் பங்கு கொள்ள வசதியாக இருக்கும். இப்படியானவற்றுக்கு உதவி கேட்டால் யாழ் களம் ஏதாவது விதத்தில் உதவி செய்யவும் தயாராக இருக்கம்

அது தானே, கந்தப்பு!

நாங்களும் வந்திருப்பமில்ல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கவனயீர்ப்பினால் சமரசிங்க கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த பல சிங்களவர்கள் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பிவிட்டார்கள். இதனால் 20, 25 பேர் தான் சமரசிங்க நடாத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

சமரசிங்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

imag0161k.jpg

25032012au01.jpg

25032012au02.jpg

25032012au03.jpg

நன்றிகள் பல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.