Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியை சேர்ந்தவர் தானியேல் இவருடைய மகள் கிருபா. பல பேருக்கு காதலை சேர்த்து வைக்க லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் மேலபத…

  2. காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்த காதலன்! இங்கிலாந்தில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்து வந்துள்ளார் காதலன். இங்கிலாந்தின் ஹார்விச் பகுதியில் குடியிருக்கும் ஜிம்மி ஹெயில்வுட் என்பவர், ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் ஹெயில்வுட் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த சைக்கிள் பயணத்தின் இடையே, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் …

  3. காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழப்பு! நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/காதலியுடன்-செல்பி-எடுக்க/

    • 2 replies
    • 538 views
  4. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …

    • 4 replies
    • 698 views
  5. காதலியை காண பெண்ணாடையில் வந்த காதலன் கைது கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை காண பெண்ணாடையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த காதலனை விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இன்று காலை 11 மணிக்கு கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த தனது காதலியை காணவே வந்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/9330

  6. காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. …

  7. தலில் தோல்வியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பற்களை பராமரிக்காத பலரது காதல் பாதியிலேயே 'பணால்' ஆகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் பிரபல 'ஓரல்-பி' நிறுவனம் சமீபத்தில் பல் பராமரிப்பு முறை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 1001 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், பற்களை முறையாக பராமரிக்காத காதலன்/ காதலியுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று 96 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் காரணமாக, முத்தம் கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பற்களை முறையாக பராமரிக்காத ஆண்களை 70 சதவீதம் பெண்கள் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஆண்களில் 54 சதவீதம் பேர், பற்களை பராமரிக்காத பெண்…

    • 1 reply
    • 1.3k views
  8. ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம். கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம். இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் …

    • 29 replies
    • 3.2k views
  9. காதல் செய்த 16 வயது பெண்ணுக்கு, 100 சவுக்கடிகள், கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின்,காஸ்னி மாகாணத்தில் உள்ளது ஜகுரி மாவட்டம். இங்குள்ள கிராமத்தில்,காதலிப்பது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்தவர் சபீரா,16 வீட்டருகே உள்ள வாலிபரை காதலித்தார். இந்த விஷயம், ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததால், பஞ்சாயத்தை கூட்டினர். இம்மாதம் 9ம்தேதி, பொது மக்கள் முன்னிலையில், சபீராவுக்கு, 100 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.சபீராவை காதலித்த வாலிபருக்கு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.தொடர் சவுக்கடியால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சபீரா,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்பினர், போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து…

  10. சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

  11. காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2009, 10:25 [iST] திண்டுக்கல்: காதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர். இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்ல…

  12. காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல By General 2012-12-24 10:24:39 உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார். பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார். அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்க…

  13. யாழில், நீண்ட கால குடும்ப பகை காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ள நிலையில், காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உறவு முறையான 19 வயது இளைஞனும் , 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப பகை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகள் காதலிப்பதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் காதலர்கள் இருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முனைந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் மீட்டு…

    • 0 replies
    • 207 views
  14. காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர். காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காதலி, அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் குஜராத் மாநிலம் மீரட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பல வருடங்களாக காத-த்து மோசம் செய்துவிட்டதாகவும், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் காதலன் மீது அப்பெண் புகார் கூறியுள்ளார். ஏமாற்றம் அடைந்ததால் கோபம் அடைந்த அந்த பெண், காதலனின் சட்டையை பிடித்து இழுத்து, நடுரோட்டில் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை சாலையில் சென்றவர்கள் பார்த்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டத…

    • 13 replies
    • 4.3k views
  15. காதலும், சிகரெட்டும் ஒன்றுதான்... கவிதை எழுதி வைத்து விட்டு ஓடிப் போன நர்ஸ்! தேனி: தேனியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், காதலும் சிகரெட்டும் ஒன்றுதான் என்று கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததால் இப்படி அவர் எழுதி வைத்துள்ளார். இதனால் அவர் காதலருடன் ஓடிப் போய் விட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையையும், தேடுதலையும் முடுக்கி விட்டுள்ளனர். உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. 23 வயதான இவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டு கரூரில் உள்ல தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேயே தங்கியுள்ளார். மாதம் ஒருமுறை தனது ஊருக்கு வருவது வழக்கம். கடந்த 23ம் தேதி சரண்யாவின் தந்தை சக்கையப்பன், தனது மகளுடன் தொல…

  16. காதலை எதிர்த்தமைக்காக தனது தந்தையை விசம் வைத்து கொலை செய்ய முயன்ற 18 வயதான யுவதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. மாத்தறை மேலதிக நீதவான் இசுறு நெத்தி குமார முன்னிலையில் யுவதி முற்படுத்தப்பட்டபோது, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 18 வயதான யுவதிக்கு காதல் தொடர்பு இருந்தது. இதை தந்தையார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அண்மை நாட்களாக தந்தை கடுமையான கண்டிப்புக்களை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவதி, தந்தையை கொல்ல முடிவு செய்திருந்தார். சில தினங்களின் முன்னர் தந்தைக்கு இரவு உணவு தயாரித்த யுவதி, மீன் பொரித்து அதில் மிளகாய் சேர்த்து, அதில் விசம் கலந்து தந்தைக்கு உண்ண கொண்டு வந்துள்ளார். தந்தை உண்ண ஆரம்பித்த…

  17. யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நபரொருவர் ஒரு தலைக் காதல் விவகாரத்தால் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழில் உள்ள அரச திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊழியரொருவர், அங்கு கடமையாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் ஊழியர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகார…

  18. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இ…

  19. காதல் செய்ய சீன கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவில் பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்து உள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்து உள்ளது. இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இதன்படி, ஒரு குழந்தை மட்ட…

  20. மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும…

  21. லக்னோ: உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதிக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர். மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயி…

  22. லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா! தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார். ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது. எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்…

  23. காதல் திருமணம் புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இன்றைக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு, தடைகளைக் கடந்து காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பழமைவாதிகளும், பிற்போக்கு சக்திகளும், ஜாதிய, மதவாத சக்திகளும் இத்தகைய திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் கெளரவக் கொலைகளும், பல்வேறு இழிவுபடு…

  24. காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார். இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்ட…

  25. காதல் மனைவியின் கல்லறை அருகே குழி தோண்டி காத்திருந்த 98 வயது கணவர் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, எம்.சி.குப்பன் 'காத்திருத்தல்' காதலில் சுகம் என்று சொல்வதுண்டு. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன மனைவியின் மீதான காதலால், அவரது கல்லறைக்கு அருகிலேயே குழி தோண்டி வைத்து காத்திருந்து உயிர் விட்டிருக்கிறார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர். 98 வயதாகும் அவரது பெயர் எம்.சி. குப்பன். ஆரணி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார். "இத்தனை ஆண்டு காலமாக தனக்காக தானே தோண்டிய குழியை பராமரித்து வரும் இவர், தான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.