Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள் கிடைத்துள்ளது இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக நிலவறையில் தொல்பொருள் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு பின் பிராணவாயு உருளைகள் மூலம் உள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர் 16 அடி உயரமுள்ள தங்க மாலையில் வைரம்,ரத்தினம் பதிக்கப் பட்டு இருந்தது அது போக வெள்ளிகுடம், தங்ககுடம், ஆபரணங்கள் இருந்தது மொத்தம் ஆறு நிலவறைகள் அதில் ஒவ்வொன்றிலும் கிளை அறைகள் என கோவில் முழுவதும் சொர்ண புதையல் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அனைத்து அறைகளும் திறந்தால் மதிப்பிடமுடியாத ஆபரணங்கள் இருக்கலாம் என தெரிகின்றது கோவிலை சுற்றி 2கிலோ மீட்டருக்கு 144 தடையுத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது கோவிலின் வரலாறு …

  2. உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்! உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன. எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார்.…

  3. 9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி நியூயார்க், ஆக.2-அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.கதவை சரியாக சாத்திய வில்சன்,…

    • 2 replies
    • 320 views
  4. உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489

  5. இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார். குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார். இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணை…

  6. பிரான்சில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பதிவு: ஏப்ரல் 05, 2020 12:00 PM பாரீஸ் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக…

    • 2 replies
    • 689 views
  7. புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடை…

    • 2 replies
    • 618 views
  8. பிரதீப்சிங்காக மாறிய லொக்கா; திடுக்கிடும் உண்மைகள் – மூவர் கைது! இந்தியாவில் இறந்து விட்டதாக கூறப்படும் இலங்கை பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து உதவிபுரிந்த குற்றச்சாட்டில் இந்தியா – கோயம்புத்தூர் சிட்டி பொலிஸாரால் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லொக்காவுடன் இருந்த கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27-வயது), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36-வயது), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் (32-வயது) ஆகியோரை நேற்று (02) பீலமேடு பொலிஸார் கைது செய்தனர். லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றி இந்திய பிரஜையாக ஆதார் அ…

    • 2 replies
    • 695 views
  9. ஜேர்மனிய ரயில் நிலையத்தில் விதிகளுக்கு முரணாக சைக்கிள் செலுத்திய ஆர்னோல்ட்; எச்சரிக்கை விடுத்த பின்னர் செல்பீ படம் பிடித்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் 2016-10-05 14:49:53 ஹொலிவூட் நட்சத்திரமான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஜேர்மனியிலுள்ள ரயில் நிலையமொன்றில் விதிகளுக்கு முரணாக சைக்கிளோட்டிக்கொண்டு சென்ற வேளையில், அவரை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததுடன் பின்னர் ஆர்னோல்ட்டுடன் செல்பீ படம் பிடித்துக் கொண்டுள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் அண்மயில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 69 வயதான நடிகர் ஆர்னோல்ட் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் 2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்ம…

    • 2 replies
    • 274 views
  10. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே யுவதியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது. திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்க…

  11. கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆகாஷ் தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பியுள்ளார். கைக்குழந்தையான ஸ்வராவை, அவரது மனைவி மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார்.…

  12. (இவங்க திருந்தவே மாட்டாய்ங்களா. பள்ளி மாணவர்களின் விளையாட்டிலும் அரசியலாடா..! ஒட்டுக்குழு தலைவனுக்கு சிறீலங்கா சிங்கள அதிரடிப்படை விசேட காவல் வேற..!) இப்பவும் வேம்படி பெட்டையளும்.. சுண்டிக்குளி பெட்டையளும்.. அந்த யன்னல் கம்பிகளுக்கு பின்னால தான் நின்று மச் பாக்கினம்..! இந்தக் கூட்டம் திருந்தவே போறதில்ல.. என்றது கென்பேம்..!

  13. பங்களாதேசத்தின் புகையிரதம்

    • 2 replies
    • 748 views
  14. பாராமதி, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான் கரே. இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். அதை விட முக்கியமானது இவர் வெற்றி பெற்றதுதான். 66 வயதில் பலரும் வேகமாக நடக்கவே பயப்படுவார்கள். பொடி நடையாக வாக்கிங் மட்டுமே போவார்கள். ஆனால் இந்தப் பாட்டியோ மின்னல் வேகத்தில் புடவையுடன் ஓடியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். இவர் பிம்பிளி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட இளைஞர்களுக்குப் போட்டியைக் கொடுக்கும் வகையில்…

  15. இரண்டு அடுக்கு கல்லறை . லண்டன், நவ. 16: பிரிட்டனில் இடபற்றாக்குறை யின் பாதிப்பு கடைசி இடத்தையும் விட்டு வைக்காததால் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். . பிரிட்டனின் உள்ள பல நகரங்களில் இடுகாடுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். அடுத்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். எனவே, எதிர்கால இடபற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழைய கல்லறைகளை தோண்டி அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க தீர்மானித்துள்ளனராம். அதாவது பழைய கல்லறை மிச்சங்களின் மீது புதிய கல்லறையை அமைக்க உள்ளனராம். ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கல்லறைகளை மட்டுமே இப்படி மாற்ற உள்ளனராம். malaisudar.com

  16. 'சாண் பிசகினால் சட்னி' என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள். ரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்கு இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ர…

  17. 92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக் Published By: SETHU 21 MAR, 2023 | 11:03 AM பிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளன. அவரின் செல்வ மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. தற்போது 92 வயதான அவர், 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்தப் பத்திரிகைகளில் ஒன்றான நியூ யோர்க் போஸ்ட்டுக்கு நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார். …

  18. கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து, அவரை கைது செய்ய பின்தொடர்ந்த போதிலும், அவர்களில் எவராலும் அவரை அடைய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்பட…

  19. $338 மில்லியனை வென்ற ஏழை பெட்ரோ 19 வயதில் அமெரிக்கா வந்தார். 44 வயதாகும் அவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார். கால் நடையாக வேலைக்கு செல்லும் அவர் காலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வரிகள் கொடுத்து மீதி $221 மில்லியனை பெறும் பெட்ரோ கார் ஒன்றை வாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். $338 million Powerball winner describes his ‘pure joy’ 1 DAVE WARNER, REUTERS FIRST POSTED: MONDAY, MARCH 25, 2013 11:46 PM EDT | UPDATED: WEDNESDAY, MARCH 27, 2013 10:40 AM EDT Pedro Quezada, winner of the Powerball lottery, smiles as he attends a news conference at the New Jersey Lottery headquarters in Trenton on …

    • 2 replies
    • 735 views
  20. அணிந்திருந்த ஆடைகளை கலைந்து எலும்புக்கூடு ஆடைகளுடன் கற்பித்த ஆசிரியை நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார். இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித…

    • 2 replies
    • 568 views
  21. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத…

  22. நம்ம ஊரு பாட்டுக்கு இந்த போடும் ஆட்டத்தை பாருங்கள் பகிருங்கள் நாம இப்படி போவம்..

  23. தினத்தந்தி: 'நடிகை மீது இன்னொரு நடிகை புகார் #MeToo' 'மீ டூ'வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. தமிழில் 2015-ல் 'வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்க…

  24. நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மறுத்த கோஹ்லி மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர். அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் துவங்கியதுமே அந்த விஷயம் பாலிவுட் முழுவதும் பரவிவிட்டது. பின்னர் மீடியாவுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்து செட்டிலாக ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.