செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
எப்படி தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=687817611273705
-
- 1 reply
- 476 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ேபாட்டியிடும் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி லெஸ்பியன் என்று ஒரு பிரச்சாரம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ஹிலாரி மறுத்துள்ளார். ஹிலாரிக்கும் அவரது உதவியாளரான ஹூமா அபுதினுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, என்னைப் பற்றி என்னென்னவோ புரளியை பரப்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் லெஸ்பியன் என்று சொல்லப்படுவதில் உண்மையும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. எப்போதும் ஹிலாரியுடனேயே இருக்கும் ஹூமா பற்றி பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவர் லெபனானைச் சேர்ந்தவர், ஜோர்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான ஊறி யை (Oorea) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது. திருமணம வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://puttalamtoday.com/
-
- 1 reply
- 627 views
-
-
தமிழீழம் என்பது வெறும் கனவு அல்ல இலட்சத்திற்கும் மேற்பட்ட எம்தமிழ் உறவுகளின் இலட்சியம். அந்த உயர்ந்த இலட்சிய நோக்கோடு பல வழிப்போராட்டங்களை எம்தமிழ் உறவுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுத்தார்கள், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்போராட்டங்கள் அந்தந்த நாட்டு நீதியின் கதவுகளை அழுத்தி தட்டியிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்ததில்லை என்பதையே இப்போதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நீதிக்கான நடைப்பயணமும் பறைசாற்றி நிற்கின்றது. பெரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விடுதலை, இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு புறப்பட்டிருக்கும் எம்தமிழ் உறவுகளான வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா, மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய மூவரோடு…
-
- 1 reply
- 526 views
-
-
இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார். இரும்புக் காலம் என்பது கிறிஸ…
-
- 1 reply
- 809 views
-
-
மகிந்த பிரதர்ஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில்... செய்த வேலை, கையிருப்பில் இருந்த தங்கத்தின் 90% த்தை மிகக்குறைந்த விலைக்கு விற்றுத்தள்ளியதுதான். இருப்பில் இருந்த, 19 ஆயிரம் கிலோ தங்கத்தில்... 18 ஆயிரம் கிலோவினை... அவுன்ஸ்க்கு, 1600 அமெரிக்க டொலர் என்ற மிகக்குறைந்த விலையில் விற்றுத் தள்ளியிருக்கிறது. அரசாங்கத்தால்... விற்கப்பட்ட அதே தங்கம் இன்று செட்டியார் தெருவில்... இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. செட்டியார் தெருவில் இருக்கும், பிரதான மொத்த வியாபார கடைகள் யாருடையது என விசாரித்தால் இன்னும் ஆச்சர்யம் காத்திருக்கும்... இந்த அரசாங்கம் எல்லாப் பக்கத்திலும் குழிதோண்டி வைத்துவிட்டது இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. …
-
- 1 reply
- 275 views
-
-
கனடா- கல்கரியில் பெண் ஒருவரை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் நடந்துள்ளது. இவரது தனிப்பட்ட தகவல்கள் கொண்ட செல்போன் இபேயில் விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பேசியை மறுசுழற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் றொஜெர்ஸ் கடையில் விட்டுள்ளார். இவரது ஐபொன் துண்டுகளாக உடைந்து விட்ட நிலையில் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னமும் ஒரு வருடம் இருந்ததால் கடைக்கு எடுத்து சென்ற போது கடை மனேஜர் இவருக்கு புதிய பேசி ஒன்றை விற்றுள்ளார். இதனால் உடைந்த பேசியை மறுசுழற்சிக்காக கடையில் விட்டுள்ளார். மறுசுழற்சி திட்டம் அவர்களிடம் இருந்ததால் அதற்கான சிறிய வெள்ளை பெட்டி ஒன்றிற்குள் போட்டதாக கூறினார். சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இவருக்கு ஒரு இமெயில் வந்தது. இவரது உடைந்த போனை இ…
-
- 1 reply
- 679 views
-
-
துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள் போட்டு குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். Dubai Policeشرطة دبيVerified account@DubaiPoliceHQ صور: سمو الشيخ منصور بن محمد بن راشد آل مكتوم أثناء عملية السحب والإعلان عن الفا…
-
- 1 reply
- 469 views
-
-
ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
-
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இந்நிலையில் ஓராண்டிற்கு கெடாமல் இருக்க கூடிய வகையில் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகத்திற்கு காஸ்மிக் கிரிஸ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறித்தது முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று ஆராயாச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய ரக ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினம். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. ஹனிகிரிஸ்ப் ரகமானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அது…
-
- 1 reply
- 379 views
-
-
அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார். ரியாத்: சவுதி அரேபியா இளவரசர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த விமானம் அரண்மனை போன்று சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா நாட்டின் கோடிஸ்வரரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை 2770 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை வடிவில் மாற்றியமைத்து வருகின்றனர். பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்…
-
- 1 reply
- 690 views
-
-
டொரொன்டோவில் அல்கைதாவின் தளம்? நேற்று புதன் கிழமை ரோயல் மவுண்ட் பொலிஸார் வியப்புமிகு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.சவுதி அராபியாவில் உள்ள தனவந்தர்களிடம் மசூதிகளை அமைப்பதாகக் கூறி பெருந்தொகைப்பணம் நன்கொடையாகப்பெறப்பட்டுள்ளது.இந்தப்பணத்தை வைத்து அல்கைதா பெருமெடுப்பிலான தளத்தை உருவாக்கியுள்ளனர்.இதைவிட கடந்த சில மாதங்களாக மார்க்கம் மக்ளீவின் பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம் பாகிஸ்தானியர்கள் வலோற்காரமாக வீடுகளை வாங்க முற்பட்டதாகவும் கொடுக்க மறுத்தவர்களின் வீடுகளில் செய்வினை செய்யப்பட்டது போல பொருட்களையும் வீசி எறிந்து கிடந்ததாகவும் தகவலுண்டு. இது நேற்றுக்காலை தமிழ் வண் செய்தியை ஆதாரமாக வைத்து வரைந்துள்ளேன்
-
- 1 reply
- 412 views
-
-
ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நா…
-
- 1 reply
- 873 views
-
-
சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி, பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சாமியாரிடம் சாஸ்திரம் பார்ப்பதற்காக 27 வயது யுவதியொருவர் சென்றுள்ளார். அந்த யுவதி ஏதோவொரு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள சாமியார், அந்த நோய் யாதென கண்டுபிடிப்பதாகக் கூறி யுவதியை நிர்வாணப்படுத்தியுள்ளார். சாமியாரின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்கொண்ட யுவதி, அவ்விடத்திலிருந்து ஓடிச்சென்று பொலிஸில் முறைப்பாடு செய்த…
-
- 1 reply
- 487 views
-
-
பிறந்தாலும் நாயாக ராஜபக்ஸ்சாகுடும்பத்தில் பிறக்கவேண்டும் 😀
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிகரித்துள்ள பேன் தொல்லை. தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருஹணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள நானூற்று இருபத்தைந்து மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் . கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60வீத மாணவ…
-
- 1 reply
- 424 views
-
-
சென்னைக் கொடுங்கையூரைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் இரவு நேரங்களில் கொள்ளைத் தொழில் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பாண்டியன், ரமேஷ், பாலாஜி ஆகிய 3 பேரும் நண்பர்கள். மூவரும் மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் பகலில் கல்லூரிப் படிப்பில் ஈடுபட்டாலும் இரவானால் தங்கள் ஆடம்பரச் செலவுகளைச் சந்திக்க திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. கொடுங்கையூர், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் அடிக்கடி கொள்ளை பற்றிய புகார்கள் அதிகரித்து வந்ததால் கா…
-
- 1 reply
- 565 views
-
-
டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் தான் அதிக பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் செய்தித்தாளை பிரித்தால் அங்கு பாலியல் வல்லுறவு இங்கு பாலியல் வல்லுறவு என்று ஒரே பாலியல் வல்லுறவு செய்திகளாக உள்ளன. இந்த நிலை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர் கதையாகிவிட்டது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி பாலியல் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிறகு தான் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகளின் விவரத்தை மத்திய உள்துறை அ…
-
- 1 reply
- 458 views
-
-
FORD FEST You are invited to join and enjoy celebrate With Rob Ford, Doug Ford and the FORD family Join us for live Music, Dancing, Food, Drinks, Halal Food and so much. Its a great opportunity to meet out MEGA cities MAYOR and Counselor Doug Ford. DATE : July 05,2013. TIME: 6pm - 10 pm LOCATION: THOMPSON MEMORIAL PARK 1005 Brimley Road, Scarborough. ( BRIMLEY & LAWRENCE) !!!! EVERY THING IS FREE !!!! SEE YOU ALL THERE On behalf of Ford Family Balan Alagaratnam.
-
- 1 reply
- 589 views
-
-
குவைத்தில் வசிக்கும் தொழிலதிபர் வழிகாட்டல் : கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் யாழில் கைது Published By: Digital Desk 5 14 Apr, 2023 | 11:03 AM கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலம…
-
- 1 reply
- 318 views
-
-
22 Oct, 2024 | 09:32 PM கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா! | Virakesari.lk
-
- 1 reply
- 485 views
-
-
வெளிநாடுகளுக்கு மருத்துவத் தொழில்களாக அனுப்புவதற்கும் தேவையான மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது தொடர்பில், அனுர அரசும் முந்தைய அரசுகளையும் போலவே பின்வாங்கி வருகின்றது என்று குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவு தொடர்பாக பரவலான விவாதம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் நிலை உருவானால், மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கருத்து
-
- 1 reply
- 259 views
-
-
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரி…
-
-
- 1 reply
- 179 views
-
-
ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் - 'என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள…
-
- 1 reply
- 517 views
-