செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்…
-
-
- 3 replies
- 852 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 AUG, 2023 | 12:38 PM தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனைவி கணவனை விட்டு, பிரிந்து குடத்தனையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி தங்கி இருந்த குடத்தனை வீட்டுக்கு வாளுடன் சென்ற கணவன் மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற…
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 03:31 PM யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, த…
-
- 4 replies
- 660 views
- 1 follower
-
-
யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்! வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavann…
-
- 0 replies
- 272 views
-
-
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை! விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு தப்பி சென்ற அந்நபர் மறுநாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்…
-
- 4 replies
- 713 views
-
-
யாழில்... 11 வயது மகளை, போதைப் பொருள் விற்பனையில்.. ஈடுபடுத்திய தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது…
-
- 0 replies
- 162 views
-
-
யாழில்... ஓடுகளை திருடி, விற்ற... குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்! யாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த. நிலையிலேயே குறித்த நபர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே நீதவான் விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார். https://athavannews.com/2022/1271422
-
- 0 replies
- 177 views
-
-
யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…
-
- 0 replies
- 376 views
-
-
தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்து…
-
- 32 replies
- 2.8k views
-
-
யாழில்... பேருந்து சாரதியின், மூக்கை வெட்டிய நபர்! யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்த…
-
- 0 replies
- 216 views
-
-
யாழில்... போதைப் பொருள் பயன்படுத்திய, இரண்டு பெண்கள் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 2…
-
- 0 replies
- 271 views
-
-
யாழில்... முகநூல் ஊடாக மிரட்டி, கப்பம் பெற்ற நபர் கைது! குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு …
-
- 0 replies
- 781 views
-
-
யாழில்... ரயிலில் மோதி, இராணுவ வீரர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார். https://athavannews.com/2022/1277461
-
- 1 reply
- 286 views
-
-
யாழில்... விரிவுரையாளரின் வீடு உடைத்து, ஒரு கோடி ரூபாய் பெறுமதியான... நகைகள் கொள்ளை!! யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…
-
- 0 replies
- 179 views
-
-
யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…
-
- 6 replies
- 404 views
-
-
யாழில்... உயிரிழந்த நிலையில், சடலாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன்.. குழுவொன்றால் அடித்துக் கொலை? யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்தவர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை ஆரம்பித்த மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியுமாறும் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். யாழ்ப்பாணம்- காங்…
-
- 1 reply
- 240 views
-
-
யாழில்.... தென்னை மரம் விழுந்ததில், முதியவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 208 views
-
-
யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து... வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்! யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்…
-
- 0 replies
- 312 views
-
-
சில நிமிடங்களுக்கு முன் எனது கடைககு நேர் எதிரேயுள்ள பாண்கடைக்குள் ஒரு யீப் ஒன்று புகுந்துவிட்டது... ஓட்டிவந்தவர் வயசானவர் என்ன நடந்தது என தெரியவில்லை என்கிறார்.. இன்ற திங்கட்கிழமை அந்தப்பாண்கடை பூட்டு என்பதாலும் வீதியைத்தாண்டி நடைபாதையைக்கடந்து வீதியோரத்தில் சில மீற்றர்களை கடந்து சென்ற போதும் எவருக்கும் உயிராபத்து நேராதது அதிசயம் தான்...
-
- 23 replies
- 2.2k views
-
-
நேற்றைய ...... எமக்குப் போட்டியாக .... இன்று கொழும்பில் உள்ள சில சிங்கள ஊடகங்கள் முல்லைத்தீவை சிங்கள இராணுவம் கைப்பற்றி விட்டதாக விடுகிறது!!
-
- 1 reply
- 927 views
-
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
-
- 1 reply
- 144 views
-
-
முல்லைத்தீவு அரச அதிபராகப் பதவி வகித்த திருமதி இமெல்டா சுகுமார் 2010 யூலை 13ம் நாள் யாழ் அரச அதிபராகப் பதவியேற்றார் அவருக்கு முன்பு யாழ் அதிபராக க.கணேஷ் பதவி வகித்தார் அவர் வவுனியா அரச அதிபராக இருந்த பின் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாக வந்தார். 2010ம் ஆண்டு கே.கணேஷ் 69 வயதினராக இருந்தார். கொழும்பு அரசுக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதால் இளைப்பாறும் வயதிற்க்குப் பிறகும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டுமொரு நீடிப்பு வழங்கப்படலாம் என்று இருக்கையில் இமெல்டா சுகுமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டிய தேவை எழுந்தது. இதன் காரணமாக கணேஷ் இளைப்பாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவும் யாழ் அதிபராக இமெல்டா சுகு…
-
- 0 replies
- 431 views
-
-
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 305 views
-
-
யாழ் குரும்பசிட்டி வேள்வியில் 3.5 லட்சத்துக்கு ஏலம் போன ஆட்டுக்கடா
-
- 0 replies
- 420 views
-
-
யாழ் சாவகச்சேரியில் பெண்ணின் சடலம். May 31, 20158:06 pm சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் ---- வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். http://www.jvpnews.com/srilanka/111008.html
-
- 0 replies
- 394 views
-