செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128914
-
- 8 replies
- 791 views
-
-
40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரை விட்ட முதியவர் நாக்பூர்:காடு வா வா என்று அழைக்கும் வயதிலும் எதையும் விட்டுக்கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு மனம் வராது. ஆனால் தான் உயிருக்கு போராடிய நிலையில் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஒருவருக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் 85 வயது முதியவர்.இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-வட மாநிலங்களில் கொரோனா கோரதாண் டவம் ஆடுகிறது. வீட்டுக்கு வீடு புகுந்து தாக்கும் கொரோனாவால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைப்பதில்லை.இந்த நிலையில், நாக்பூரை சேர்ந்த நாராயண் தபால்கர் (85). ஓய்வு பெற்ற…
-
- 4 replies
- 791 views
-
-
இலங்கை இனவிவகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கான தீர்வு ஒன்றினைக் காணும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியாக ஜெர்மனியில் இலங்கையர் ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பினால் இரு நாள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வினைக் காணமுடியாது என்றும் சமாதான முயற்சிகள் தொடர்பில் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். BBC தமிழோசை
-
- 0 replies
- 791 views
-
-
பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்! காதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?காதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு? அதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா? நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்ற…
-
- 0 replies
- 791 views
-
-
உலகின் 'ஏழ்மை'யான அதிபர்! ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும். ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன. உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராம…
-
- 1 reply
- 791 views
-
-
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை. அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம். இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்…
-
- 2 replies
- 791 views
-
-
https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…
-
- 3 replies
- 791 views
-
-
கடந்த சில நாள்களுக்கு முன்பு உழைப்பு தேடி மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு வந்த இளைஞர் மொஃபிஜுல் ரஹானா ஷேக் (22), இப்போது கேரளத்தில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராகிவிட்டார்.கேரளத்துக்கு வந்த மூன்றே நாள்களில் லட்சாதிபதியாகும் அதிர்ஷ்டம் ரஹானாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு இந்தப் பணத்தை வழங்கியது கேரள அரசின் காருண்யா லாட்டரி சீட்டு ஆகும். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், லஷ்மிபூர் பகுதியைச் சேர்ந்த ரஹானா, கடந்த 4-ஆம் தேதி கேரளத்தின் கோழிக்கோடு நகருக்கு வந்தார். மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரளத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து கொள்வதுதான் ரஹானாவின் திட்டம்.ஆனால், வந்த முதல் நாளே 50 ரூபாய்க்கு…
-
- 5 replies
- 790 views
-
-
நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, அவர் தனது நடுவிரலை நீட்டியபோது "அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக" இருந்ததாகக் கூறினார். மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார். வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர்…
-
- 4 replies
- 789 views
-
-
தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார். முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு, சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் …
-
- 3 replies
- 789 views
-
-
[size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] அப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான (co-founder) ஸ்டீவ் வொஷ்னியாக் தான் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'The Australian Financial Review' எனும் பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது இந்த விருப்பத்துக்குக் காரணமாக அவுஸ்திரேலியாவின் தேசிய broadband நெட்வேர்க் இன் சேவை கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிறுவப் பட்டுள்ள $38 பில்லியன் டாலர் பெறுமதியான தேசிய பிராட்பேண்ட் இணைய சேவை அங்கு வசிக்கும் மக்கள் அதிவேக இணையப் பாவனையை 2021 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ள உதவும். இந்நிலையில் வொஷ்னியாக் குறித்த பத்திரிகைக்கு வெளிப்படையாகவே தன…
-
- 0 replies
- 789 views
-
-
சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் தொடர்பில் தீவிர விசாரணை 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். …
-
- 9 replies
- 789 views
-
-
வால்பாறை: போலீஸ் ஸ்டேஷனுக்கு காலை நேரத்தில் அழையா விருந்தாளியாக திடீர் "விசிட்' செய்த சிங்கவால் குரங்கார், போலீசாரை 15 நிமிடம் "டிரில்' எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரிய வகை வனவிலங்கான சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அதிக அளவில் உள்ளன. பழங்கள்,கொட்டைகளை உணவாக உட்கொள்ளும் இந்த வகை குரங்குகள் கும்பலாகவே வலம் வரும். இந்நிலையில், வால்பாறை டவுன் பகுதிக்கு நேற்று காலை 6.40 க்கு மணிக்கு தனியாக வந்த சிங்கவால் குரங்கார், போலீஸ் ஸ்டேஷனுக்குள் திடீர் "விசிட்' செய்தது. வந்தவரை போலீசார் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. "அப்செட்' ஆன குரங்கார் மவுனமாக அங்குமிங்கும் "ரவுண்ட்'அடித்தார். அப்போது, பரிதாபபட்ட போலீஸ் ஒருவர் குரங்கிற்கு காலை சிற்றுண்டியாக பிஸ்கட் கொடுத்தார். அதை லாவகமாக …
-
- 5 replies
- 788 views
-
-
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் 16ம் பெனிட்டிக்ட் நேற்று அறிவித்தார்.தனது ராஜினாமா குறித்து லத்தீன் மொழியில் அறிவித்த அவர், போப்பின் கடமைகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற போதிய உடல் பலமும் மன பலமும் வேண்டும். தற்போது இவை இரண்டும் எனக்கு இல்லாததால் திருச்சபையின் நலன் கருதி இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் வாடிகன் அரண்மனையில் உள்ள புனித பீட்டர் தேவாலய கோபுரத்தின் மீது சக்தி வாய்ந்த மின்னல் தாக்கியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்றாலும், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNe…
-
- 4 replies
- 788 views
-
-
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெறும் சத திருவிழாவிற்காக ஹரியானாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரூ.7 கோடி மதிப்புள்ள எருமை மாடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கரண்வீர் சிங் என்பவருக்கு சொந்தமான இந்த எருமை மாட்டின் பெயர் யுவராஜ். 1600 கிலோ எடையும், 6.5 அடி உயரமும் கொண்ட இந்த எருமை மாட்டை சொந்த பிள்ளை போல் பராமரித்து வரும் கரண்வீர் சிங் நாள்தோறும் 100 ஆப்பிள், 20 லிட்டர் பால், 5 கிலோ பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் மற்றும் உலர் பழ வகைகளை உணவாக அளிக்கிறார். குளிர்காலத்தில் மதுபானங்களையும் அருந்தும் இந்த யுவராஜுக்கு தினசரி இருமுறை கடுகு எண்ணெய் மசாஜ், மாதத்தில் 4 முறை உடலில் உள்ள ரோமங்கள் நீக்கப்பட்டு போன்ற பராமரிப்பும் நடைபெறுகிறது. நாள்தோறும…
-
- 4 replies
- 787 views
-
-
விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புக…
-
- 2 replies
- 787 views
-
-
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளி…
-
- 0 replies
- 786 views
-
-
[size=4]இங்கிலாந்து மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.[/size] [size=4]இங்கிலாந்தில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்வே நடத்தியது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உ…
-
- 5 replies
- 786 views
-
-
மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் சிறுவனின் தாய் 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு புகார் தெரிவித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது- தம்புள்ள பொலிஸாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகவும் குடும்ப அங்கத்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தம்புள்ள பொலிஸார் இருவர் குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டைத் தேடிப்பிடித்துள்ளனர். வீடு மூடப்பட்டு அமைதியாகக் காணப்பட்டுள்ளது. பொலிஸார் அவர்களை எழ…
-
- 5 replies
- 785 views
- 1 follower
-
-
கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்! அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பீனட் என்ற அணிலை கருணை கொலை செய்ய விவகாரம் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. நியூயோர்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் பீனட் என்ற 7 வயதான அணிலை வளர்த்து வந்துள்ளார். அவர் குறித்த அணில் செய்யும் சேட்டைகள் மற்றும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவேற்றி வ…
-
- 0 replies
- 784 views
-
-
மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும…
-
- 3 replies
- 784 views
-
-
http://www.bbc.co.uk...europe-18843480 மனிதன் அறிவியலில் வளர்ந்து விண்வெளிக்கு போக ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும்.. விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுக்களுக்கு கற்பூரம் காட்டுவதும்.. புனித நீர் தெளிப்பதும் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இது எதனை காட்டுகிறது.. அறிவியலை.. தனது தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை விட.. இன்னொன்றை மனிதன் நம்புறானா என்பதையே தான்..???! காணொளியைக் காண மேலே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்..!
-
- 1 reply
- 784 views
-
-
பேஸ்புக்கில் மலர்ந்த காதல் : சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய இராணுவ வீரர். பேஸ்புக் மூலம்; காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ வீரர் பேஸ்புக் மூலம் பாடசாலைக்கு செல்லும் 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன் மூலம் , குறித்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பெற்றது மட்டுமன்றி , 13 வயது நிரம்பிய குறித்த சிறுமியின் தங்கையின் புகைப்படங்களையும் பெற்றுள்ளார். பின்னர் , அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக தனது வங்கி கணக்க…
-
- 3 replies
- 784 views
-
-
உலகின் பல நாடுகளும் தங்களது நகரங்களை அலங்கரிக்க பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றது. இதில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரில் சற்றுப் புதுமையான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சிறுநீர் கழியுங்கள், வாழ்வதற்கு உகந்த நகரை உருவாக்குங்கள் என நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெடமில் பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஹெக்டேயர் அளவில் பசுமைய ஏற்படுத்துவற்கான தாவரங்களைக்கொண்ட கூரைகளை (லிவிங் ரூப்) உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகயே இந்த சிறுநீர் கழிக்கச் செய்யும் திட்டம். இதற்காக வழிப்போக்கர்களை சிறுநீர் வழங்க ஊக்குவிக்கும் வகையில் நகரின் சனநெரிசலான பீர்ஸ்பிலீன் சதுக்கத்தில் பல யூரினல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் சிறுநீரைக்கொண்டு பொஸ்பே…
-
- 9 replies
- 784 views
-
-
பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…
-
- 0 replies
- 784 views
-