மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் முகிலன் வெளித் தெரியா வீரியம் லெப். கேணல் முகிலன். 15.08.2006 நள்ளிரவு நேரம் எமது பகுதியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அழைப்பு ஒன்று எடுத்து கதைத்தபோது ஒரு நொடியில் அதிர்ந்து விட்டோம். சில நிமிடங்களின் முன்பே முகமாலைக் களநிலவரம் தொடர்பாக முகிலனிடம் கேட்டறிந்து கொண்டோம். முகிலன் வீரச்சாவா? நம்ப மறுக்கிறது மனம். அவனின் தோழன் லெப்.கேணல் அன்பழகன் தியாகசீலம் சென்று உறுதிப்படுத்த விரைந்தான். தாயக விடுதலைக்காகத் தனது பணிகளை நிறைவு செய்த மன நிறைவுடன் எங்களின் நண்பன் மாவீரன் லெப்.கேணல் முகிலனாகத் துயில்கின்றான். 22.04.1972 அன்று மகாதேவன்-இராசமலர் தம்பதிகளின் முதல் முத்தாக சிவக்குமார் வேலணையில் பிறந்தான். நல்ல ஒழுக்கமுள்ளவனாக கல்வியில் திற…
-
- 4 replies
- 1.4k views
-
-
விழியில் சொரியும் அருவிகள் எம்மை விட்டு பிரிந்தன குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் திருமலையில் வெடியாய வெடித்தனர் தம்பி கதிரவன் எங்கே ?…. தணிகைமாறனும் எங்கே ?… மதுசாவும் எங்கே ?… தங்கை சாந்தா நீ எங்கே ?… தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் … விழியில் சொரியும் அருவிகள் … ” உயிரிராயுதம் தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “ ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 04 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! வ…
-
- 4 replies
- 876 views
-
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர் ‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்! மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழகத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான். லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்ன…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) மற்றும் புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது….. வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் 03.08.1997 அன்று சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 4 replies
- 771 views
-
-
கப்டன் திலகா சிட்டுக்குருவி கப்டன் திலகா குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா, உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள், எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் “திலகாக்கா மாத்திரம் எப்படி …
-
- 4 replies
- 2k views
-
-
லெப். கேணல் விக்ரர் வீரத்தளபதி விக்ரர். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழினம் ம…
-
- 4 replies
- 2.1k views
-
-
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...! www.facebook.com/karumpulimaveerarkal கரும்புலிகள் உயிராயுதம்
-
-
- 4 replies
- 1.8k views
-
-
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முட…
-
- 4 replies
- 928 views
-
-
புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. லெப்.கேணல் நரேஸ் Last updated Jul 16, 2020 தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள் ஒருவன். புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. கிளாலிக் கடற்சமர் அரங்கில் மாவீரன் சாள்ஸ் களப்பலியாகிய பின்னரே, கடற்புல்களின் தாக்குதற் படைத் தளபதியாக பொறுப்பேற்ற போதிலும். கடற்புலிகளின் சரித்திரத்தில் மிகப்பெரும் பகுதியோடு, நரேஸ் பின்னிப் பிணைந்தவனாகவே உள்ளான். “கடற்புலிகளின் சிறப்புத்தளபதி போல இயங்கியவன் அவன்தான்” என்கிறார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி. கண்களில் நீர்வழிய நீர்வழிய நாங்கள் மண் அள்ளித் தூவி விதை குழியலிட்ட அந்தத் தோழன…
-
- 4 replies
- 998 views
-
-
எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமி…
-
- 3 replies
- 957 views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற…
-
- 3 replies
- 1.5k views
-
-
லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அ…
-
- 3 replies
- 816 views
-
-
"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடிக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 15.02.2009 அன்று தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான…
-
- 3 replies
- 820 views
-
-
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களை…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்தியப் படை வருகை துட்டக்குரங்கினைச் சிட்டுக்குருவிக்குக் கட்டிவைத்தே பெரும் சாதனையை எட்டிவிட்டோமுயர் நோபல் பரிசெமக்(கு) ஏற்புடைத்தாமென எண்ணினரால் வெட்டிப் பிடுங்கிய வீறாப்பில் எங்களை வீழ்த்திடலாமென்ற நோக்குடனே துட்டப் படைகளை ஏவினர் ஈழம் துயரடைந்தாள் எனில் சோர்வடையாள் பாரதச் சூதர்கள் வானரசேனை படுத்திய பாடுகள் ஒன்றிரண்டோ நேரெதிர் கொண்ட வியாக்கிர சேனை நிகழ்த்திய சாதனை ஒன்றிரண்டோ ஆதரவற்ற தமிழினம் மீது அமைதிப் படையெனும் போர்வையிலே காதகர் செய்த பழிகளை மீட்பதில் காண்பதென்ன அதை விட்டிடுவோம் பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு (வேறு) ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம் சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர் தி…
-
- 3 replies
- 891 views
-
-
லெப். கேணல் ராகவன் நவம்பர் 2, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து விடுதலையின் பாதையில் அழியாத தடம்: ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் ராகவன். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராகவனையும் தன்னுடன் அணைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று ஏடுகளிற் பெரும் சரித்திரப் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...! ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்த…
-
-
- 3 replies
- 1.8k views
-
-
சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன் இயக்கப்பெயர்: ஜெயம் முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம். உறவுகளே! இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர். ஏற்கனவே இவரது தம்பியாரான கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார். இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்…
-
- 3 replies
- 1.3k views
-
-
லெப்டினன்ட் அபிநயா துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா. அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள் 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவா…
-
- 3 replies
- 768 views
-
-
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட் கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது இளமையிலேயே கடல் அவனை அழ…
-
-
- 3 replies
- 876 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத செயற்பாடுகள் பல உள்ளன. http://www.tamilkingdom.com/2017/08/16_25.html கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அவர்கள் 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாச…
-
-
- 3 replies
- 2.5k views
-
-
லெப். கேணல் சாந்தகுமாரி எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின்.! On Mar 19, 2020 கேணல் இளங்கீரன் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் ப…
-
- 3 replies
- 897 views
-