மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
பிரிகேடியர் பால்ராஜ். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார். இந்தியப்படை வெளியேற்றத…
-
- 16 replies
- 4.2k views
-
-
தளபதி தீபன்,ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக,தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக,எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம்,தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரி…
-
-
- 23 replies
- 4.2k views
-
-
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால…
-
-
- 20 replies
- 4.1k views
-
-
-
-
- 14 replies
- 4k views
-
-
||| ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ||| விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. ஓயாத அலைகல் நினைவூடல் இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீ…
-
- 0 replies
- 3.7k views
-
-
பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படைநடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படைநடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவி…
-
- 17 replies
- 3.6k views
-
-
கேணல் ரமணன் வீரவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம்இ நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க …
-
- 14 replies
- 3.6k views
-
-
முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து…
-
- 6 replies
- 3.6k views
- 1 follower
-
-
தாயகக் கனவுகளுடன் ....... [1] " நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது." ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------------------------------------------------
-
-
- 32 replies
- 3.6k views
-
-
ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 7ம் ஆண்டு நினைவாக’ ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன …
-
- 15 replies
- 3.5k views
-
-
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடிய…
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி 27ஆண்டுகள் கடந்து போய்விட்டன. விக்டர், இவன் அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் ,பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி…. 1981ன் இறுதிப் பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயி…
-
- 18 replies
- 3.5k views
-
-
இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக பட…
-
-
- 6 replies
- 3.5k views
-
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அரு…
-
-
- 6 replies
- 3.4k views
-
-
கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள். நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள். கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும். || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்… மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க் கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் …. …
-
- 0 replies
- 3.4k views
-
-
நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர்…
-
-
- 19 replies
- 3.4k views
-
-
10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்கட்கும், அதே சம்பவத்தில் வீரச்சாவடைந்த 2ம் லெப். கஸ்தூரி, வீர வேங்கை ரஞ்சனி, வீரவேங்கை தயா ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம். [size=4]தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து கா…
-
- 19 replies
- 3.4k views
- 1 follower
-
-
09.11.1998 அன்று முல்லைக்கடற்பரப்பில் இடம்பெற்ற படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் வள்ளுவன்(பாண்டியன்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 09.11.2001 அன்று கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 09.11.2006 அன்று வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தாரணி உட்பட்ட கடற்கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 24 replies
- 3.4k views
-
-
http://www.veeravengaikal.com/index.php/adikatkal/45-lt-shankarsuresh-selvachandran-sathyanathan-kamparmalai-jaffna
-
-
- 9 replies
- 3.4k views
-
-
தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின் மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம். புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும்,எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு …
-
- 17 replies
- 3.4k views
-
-
20.02,2009 அன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான் படைத் தளம் மீதும் வான்புலிகளின் கரும்புலித் தாக்குதல் இதில் வீர காவியமான கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் இவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
-
- 13 replies
- 3.3k views
-
-
ஓவியர் வீரசந்தானம் ஐயா ! உங்கள் பெயர் ஈழ வரலாற்றில் எழுதிவைக்கப்படும். தலை வணங்கி கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்! விடுதலைப் பயணத்தில் இதுவரை இழப்புக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஆனாலும் மனம் இறுகவில்லை. பதிலாக, ஒவ்வொரு இழப்புக்களின் போதும் மனம் கலங்கி, தடுமாறித்தான் போகின்றது.
-
-
- 6 replies
- 3.3k views
-
-
மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வி…
-
-
- 15 replies
- 3.2k views
-
-
05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை: …
-
- 12 replies
- 3.2k views
-
-
கிட்டு மாமா உள்ளிட்ட 10 மாவீரர்களினதும் நினைவு நாள் கடந்த 16ம் திகதி கடந்து போனது. இந்தியச் சதியில் இந்து சமுத்திரத்தில் தற்கொடை செய்து தன்னையே தாய் மண்ணிற்காய் தந்த இந்த வீரர்களை எப்படி மறந்தீர்கள்..?! மறக்க முடியாத தியாகங்கள் இவை. நினைவு வீரவணக்கம்.
-
- 9 replies
- 3.2k views
-