மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
தமிழீழ கடற்பரப்பில் 01.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அண்ணாச்சி(சிறி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈந்த இந்ம மானமாவீரனிற்கு வீரவணக்கங்கள். படத்தைப் பெரிதாய்ப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக…
-
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-
-
சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சிறிலங்கா படையினரால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஜீவன்(அசிம்) உட்பட்ட 170 வரையான மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
Saturday, September 10, 2011, 1:30 தமிழீழம், மாவீரர்கள் 10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில்வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.1995 அன்று காங்கேச…
-
-
- 16 replies
- 2.6k views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்…
-
- 2 replies
- 2.6k views
-
-
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரண…
-
- 4 replies
- 2.6k views
-
-
மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும் சுவிஸ் பெல்ஜியம் நோர்வே ஸ்கொட்லண்ட் ஹொலண்ட் பிரான்ஸ் கனடா டென்மார்க்
-
- 2 replies
- 2.6k views
-
-
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 6ம் ஆண்டு நினைவு.
-
- 7 replies
- 2.6k views
-
-
07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர…
-
- 8 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29; அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவன…
-
- 13 replies
- 2.5k views
-
-
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது, நான் முன்னுக்கு போகப் போறன், என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா" ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி அழைப்பு, ஓரிரு நிமிடங்களே நீடித்தது. ---------------------------------------------------------------------------------------------------------------------- 1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் …
-
-
- 2 replies
- 2.5k views
-
-
02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது.…
-
-
- 15 replies
- 2.5k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத செயற்பாடுகள் பல உள்ளன. http://www.tamilkingdom.com/2017/08/16_25.html கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அவர்கள் 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாச…
-
-
- 3 replies
- 2.5k views
-
-
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 9 replies
- 2.5k views
-
-
சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமார் தியாகி சிவகுமாரன் தனது உடலையும் உயிரையும் தமிழ் மண்ணிற்குக் கொடையாக்கி 41 வருடங்களாகின்றன. அவன் தொடங்கி வைத்த ஆயுதப் போராட்டம் விருட்சமாக வளர்ந்து வந்த நிலையில் பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் உதவியுடன் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆயுதப் போராட்டம் தான் அழிக்கப்பட்டதே தவிர தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்படவில்லை. அது ஆழ வேரூன்றிய மரம். இன்று இதனையும் அழிப்பதற்கு அகரீதியாகவும் புறரீதியாகவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்நிலையில் தியாகி சிவகுமாரன் பற்றிய மீளாய்வு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சிவகுமாரனின் பங்களிப்பு பற்றிய மீளாய்வுக்கு தமிழ் மக்களின் அரசியல்…
-
- 0 replies
- 2.4k views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.! தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர…
-
- 7 replies
- 2.4k views
-
-
புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்த…
-
- 5 replies
- 2.4k views
-
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார். 3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:- கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும் ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைக…
-
- 14 replies
- 2.4k views
-
-
இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டு…
-
-
- 14 replies
- 2.4k views
-
-
18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2.4k views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமாமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க படங்கள் மீது அழுத்தவும்
-
- 14 replies
- 2.4k views
-
-
பிரிகேடியர் தீபன் வேலாயுதபிள்ளை பகீரதகுமார் தமிழீழம் (யாழ் மாவட்டம்) வீரப்பிறப்பு:08.01.1966 வீரச்சாவு :04.04.2009 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின் (வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். http://www.tamilwin.com/photos/full/2009/06/theepan1.jpg" style="margin-left: 1em; color: #000000; margin-right: 1em…
-
- 5 replies
- 2.3k views
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 12 replies
- 2.3k views
-
-
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம் https://www.fac…
-
- 5 replies
- 2.3k views
-